Quantcast
Channel: வெங்காயம்
Viewing all 113 articles
Browse latest View live

முஸ்லிமை கொல்லும் முஸ்லிம்? ~ விஸ்வரூபம் விமர்சனம்.

$
0
0
// இந்த லிங்கில்படத்தின் தடை சம்பந்தப்பட்ட பழைய பதிவுஉள்ளது. பார்க்கத் தேவையில்லை. ஆனால் பதிவுக்கு கீழே உள்ள கொமெண்டுகள்... அப்பப்பா... அப்படியே ஆன்மீக அடக்கத்தின் ஆதாரம். //


# # # 

முதலில் ஒரு அண்டாவை எடுத்துக் கொள்ளவும். துப்பாக்கி அரை கிலோவும், போக்கிரி முக்கால் கிலோவும் நன்றாக வாணலியில் விட்டுக் கலக்கவும். அத்துடன் வேட்டையாடு விளையாடு டச்சை கொடுத்து, அண்டாவில் இட்டு சூடாக்கி இறக்கும்போது தசாவதாரம் காட்சிகள் சிலவற்றை லேசாக தூவி விடவும்.
இதோ... சுடச் சுட விஸ்வரூபம் ரெடி!

(இதற்காக எதோ விஜயின் படங்களை கமல் கொப்பி அடிக்கத் தொடங்கிவிட்டார் என எண்ணற்க. அது மகாபாவம். மேற்கூறிய படங்களை ஒத்த பல படங்கள் உலகளாவிய ரீதியில் வெளிவந்துள. உலகளாவிய மசாலா கூட்டுத்தான் அது. சாம்பாரை செய்தது கமல் என்பதால் காரம் அதிகம்.) ஆக்ஷன் கதைகளை சில வகைகளில் அடக்கலாம். வெடிகுண்டு ஒன்றை வெடிப்பிலிருந்து தடுப்பது, வில்லன்களின் கோட்டைக்குள் வில்லனாக நடித்து புகுந்து வேட்டையாடுவது, நாட்டுக்கு நாடு துரத்தல். இப்படி. இது கமல் என்கிற மகா கலைஞனின் படைப்பு என்பதால் சகலமும் கலந்து வந்திருக்கிறது. சென்னையை காப்பாற்ற விஜயும், தமிழ்நாட்டை காப்பாற்ற அர்ஜுனும், இந்தியாவை காப்பாற்ற விஜயகாந்தும் போல இனி உலகத்தை காப்பாற்ற உலக நாயகன் கமல் என்று சொல்லலாம்.

படத்தின் தொடக்கத்தில் கதக் கலைஞராக அமேரிக்காவில் வாழும் இந்தியர் விஸ்வநாத்தாக கமல் வருகிறார். அவருக்கு மனைவியாக பூஜா குமார், மாணவியாக அண்ட்ரியா. தனது நிறுவன இயக்குனருடன் காதலில் விழும் பூஜா குமார், தான் செய்யும் தவற்றை நியாயப்படுத்த, கமல் ஏதாவது காதல் துரோகம் செய்கிறாரா என ஆராய மன்மதன் அம்பு பாணியில்  ஒரு டிடெக்டிவை நியமிக்க, கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது. கமல் ஒரு முஸ்லிம்!

இதற்கடுத்து பலசில காட்சிகளில் சில தீவிரவாதிகள் பிடியில் கமல் பூஜா அகப்பட, அங்கே கமலின் சுயரூபம் வெளிப்படத் தொடங்குகிறது. இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாக, ஜிகாத் போராளியாக, ஆப்கானிஸ்தானில் பெரும் தலைகளுடன் தொடர்புள்ள தீவிரவாதியாக, பின்னர் அமெரிக்காவில் கதக் கலைஞராக மாறி மாறி ரூபம் எடுக்கும் கமலின் விஸ்வரூபம் கடைசியில் வெளிப்படுகிறது. அது விஸ்வரூபமா இல்லையா என்பதை திரையில் காணலாம்.

கமல் அடிப்படையில் நாத்திகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். எல்லா நாத்திகர்களுக்குமே பொதுவான விஷயம் இருக்கிறது. மதங்களை பின்பற்றுபவர்களை அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் அடுத்த மனிதனை விட மதத்தை முக்கியம் என்று நினைக்கும் மனிதர்களை அவர்கள் கேவலமாகப் பார்ப்பார்கள். அப்படி கமல் முஸ்லிம்களையும் பிராமணர்களையும் கருதுவது அவரது எல்லாப் படங்களிலும் தெரியும். இந்தப் படத்தில் பின்னாலே யாரை கலாய்க்கிராரோ இல்லையோ, தொடக்கத்தில் தனது சுய இனமான பிராமணர்களை – பாப்பாத்திகளை நன்றாக வாருகிறார். சராசரிக்கும் கீழான எண்ணங்கள் கொண்டவராக, ஆண்களை, அவர்களின் ஆண் தன்மைக்காக விரும்புபவராக, கணவருக்கு துரோகம் செய்பவராக காட்டுகிறார் கமல். அமெரிக்காவில் படிப்பைத் தொடர தேவை என்பதால் கமலை திருமணம் செய்கிறார் பூஜா. ஆனால் சுகத்துக்கு அவரிலும் ‘உயர்வானவேறு ஆள் தேவைப்படுகிறது.  பிராமணர்கள் அனைவருமே மட்டமான எண்ணங்கள் கொண்டவர்கள், புத்தி குறைந்தவர்கள், சுயநலவாதிகள் என்பது கமலின் எல்லாப் படங்களிலும் வருவது. அது ஆயிரம்தான் உண்மையாக இருந்தாலும் நீ எப்படி சொல்லலாம்? என்று எந்தப் பிராமணரும் இதுவரை கமல் படங்களை தடை செய்யச் சொல்லி போராட்டம் செய்யவில்லை. “இந்தா பாப்பாத்தி, சிக்கன நீ டேஸ்ட் பார்த்து சொல்லு..என்று ஒரு காட்சி வருகிறது. ஆசாரம் ஆசாரம் என்று பறக்கும் பிராமணர்கள் வெளிநாடுகளில் என்ன கிழிக்கிறார்கள் என்பதை காட்டுவது அது. முஸ்லிம்களை விட எல்லாப் படங்களிலும் கமல் இந்துக்களைத்தான் கலாய்ப்பார்.. அது பன்னிகளுக்கு புரிவதில்லை. "நாலு கை கடவுள் என்றால் எப்படி சிலுவையில் அறைவீர்கள்?" "ம்ம்... சிலுவைல அறையமாட்டோம், கடல்ல போட்டுடுவோம்."


கமல் தீவிரவாதியாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் காட்சிகளில் சில இடங்களில் அளவுக்கு அதிகமாகவும் சில இடங்களில் அளவுக்கு குறைவாகவும் இருக்கிறது. ஆனால் அந்த ஆப்கானிஸ்தான் காட்சிகள் அப்படியே அங்கேயே எடுக்கப்பட்டதுபோல இருக்கிறது. கலை இயக்கம், ஒளிப்பதிவு இவை இரண்டுக்கும் மேலாக கமல் என்கிற திறமையான ஒரு இயக்குனர் அங்கெ தெரிகிறார். (கலை : லால்குடி ந இளையராஜா. ஆனால் விஷயம் புரொடக்ஷன் டிசைனர் புண்டவீ டோர் தவீபசாஸ் என்கிற வியட்னாமியரின் கைவண்ணத்தில் இருக்கிறது.) தீவிரவாதிகள் சின்ன வயதிலிருந்து எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறார். சிறுவன் கையில் துப்பாக்கியோடு பிணமாக கிடப்பது, மருத்துவராக விரும்பும் சிறுவனே, விளையாடும்போது துப்பாக்கி சுடுவதுபோல் விளையாடுவது,இப்படி.ஓமரின் மகன் ஓமரால் தீவிரவாதியாக எப்படி வார்க்கப்படுகிறான் என்பதுவும், அது ஓமரின் தாயின் விருப்பம் இல்லாமலேயே நடப்பதுவும் காட்டப்படுகிறது. ஒருமுறை இவர்களின் இடம் அமெரிக்க வீரர்களால் தாக்கப்பட்டபின்பு ஒரு முஸ்லிம் கிழவி சொல்லுவதாக ஒரு வசனம் வருகிறது. காட்சியோடு காட்சியாக போய்விடும் அந்த வசனம் ஆணாதிக்க சமுதாயத்துக்கு கமல் செய்யும் நுனி வெட்டு. “எல்லாம் உங்களால்தானடா முன்னாள் வால் முளைத்த குரங்குகளே!”

உண்மையில் உலகத்தில் நடக்கும் பேர்கள் பெரும்பாலானவை ஆண்களுக்கிடையே நடக்கும் போர்களே. ஆனால் பாதிக்கப்படுவது எல்லோரும்தான். முக்கியமாக இந்த அல் கைதா அமேரிக்கா போரிலே ஆப்கானிஸ்தான் பெண்களின் நிலைமையை யாருமே கேட்பதில்லை. அவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள், தங்களுக்கு விருப்பமில்லாமலேயே அவர்கள் போரின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். குண்டுவீச்சில் செத்துப்போனவர்களை காட்டுவதாக ஒரு காட்சி வரும். அதிலே கை கோர்த்தபடி ஒரு ஜோடி செத்துக் கிடக்கும். அத்துடன் ஒரு வைத்தியப் பெண், அவரது குதிரை. (அந்தப் பெண்ணை பிடிக்காமல், தீவிரவாதிகளே சாட்டோடு சாட்டாக கொன்றிருப்பதாக காட்டியிருக்கிறார். கவனிக்க. ஆனால், அமெரிக்க வீரர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லவே மாட்டார்கள் என்ற ரீதியில் பல காட்சிகள் வருகின்றன. அது ஓவர்.) தீவிரவாத மனம் படைக்காத ஆண்கள், பெண்கள், தீவிரவாதம் போதிக்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட சிறுவர்கள், சேவை செய்பவர்கள், விலங்குகள் எல்லாம் இறக்க, தீவிரவாதிகள் மட்டும் எஞ்சுகிறார்கள். அவர்கள் முடிவு எடுகிறார்கள். என்னது? பழிக்குப் பழி.

குழந்தைகள் பெரியவர்களைப்போல் பக்குவத்தோடு இருக்கிறார்கள். பெரியவர்கள்தான் குழந்தைகளைப்போல நடந்துகொள்கிறார்கள் என்பதை உருவகப்படுத்தும் ஊஞ்சல் காட்சி ஒன்று உள்ளது. பழிக்குப் பழி என்கிற சிறு உலகத்துக்குள் வாழ்பவர்களால் எப்படி இறைவனை (ஒளியை) அடைய முடியும்? எப்படி பழிக்குப் பழியை இறைவனின் பெயரால் நடத்தலாம்? இதுதான் கமல் கேட்டிருப்பது.

முஸ்லிம்கள் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தளவுக்கு கமல் இந்தப் படத்திலே முஸ்லிம்களை கேவலப்படுத்தி ஒரு காட்சிகூட எடுக்கவில்லை. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் வாழும் தீவிரவாதிகளை காட்டும்போது முஸ்லிமாகக் காட்டாமல் ஜெகோவாவின் சாட்சிகளாகவா காட்ட முடியும்? முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று அவர் சொல்லவில்லை. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுகிறார். இத்தனைக்கும் தனது உயிரையும் மதிக்காமல், தீவிரவாதத்திலிருந்து உலகத்து மக்களை காப்பாற்ற அத்தனை பாடுபடும் விசம் அகமத் கஸ்மிரி என்கிற விஸ்வநாத் ஒரு மார்க்கக் கடமை தவறாத முஸ்லிம். எப்படி மக்களை அழிக்கும் தீவிரவாதிகளில் முஸ்லிம்கள் உள்ளார்களோ, அதுபோல மக்களை காக்க உயிரை விடும் வீரர்களிலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதுதான் கமல் சொல்ல வந்தது. அதை சொல்ல விடாமல் அந்தாளின் வாயை இவ்வளவு காலம் பொத்தி வைத்ததற்குப் பெயர் ,மூடத்தனம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் கதக் நடனம் அத்தனை அழகு. ஷங்கர்- இஷான்- லோய் இசையில் நடனத்தில் பண்டிட் பிஜு மகாராஜ் நடன இயக்கத்தில் கமல் என்கிற உண்மையான கதக் கலைஞனின் நடன விருந்து அது. நளினமான, ஐயங்கார் மொழிபேசும் அப்பாவியாக கமலின் நடிப்பு அபாரம்.
படத்தில் கமலை வேயார்ஹவுசில் பூஜாவோடு கட்டி வைத்து சித்திரவதை செய்வார்கள். அப்போதெல்லாம் அப்பாவியாக இருப்பவர், தன பழைய நண்பர் ராகுல் போஸ் வரப்போகிறார் என்றவுடன் விஸ்வரூபம் எடுப்பார். பக்கத்திலிருந்த பூஜா குமாருக்கும், எங்களுக்கும் ஆச்சரியம். முதலில் வில்லனிடம் அடி வாங்குவது மாதிரி வாங்கிவிட்டு பிறகு வெடிப்பது விஜய் செய்வதாச்சே.. வழக்கமாக கமல் என்றால் அடி மட்டும்தான் வாங்குவார், அதுதான் வாழ்க்கை என்று இருந்தால் இப்படியாகிவிட்டதே என்று எங்களுக்கும், இந்தாளையா ஆம்பிளை இல்லை என்றோம் என்று பூஜாவுக்கும் ஆச்சரியம். ஆனால் அந்த இடத்திலே யாரென்று தெரிகிறதா? என்ற பாடலின் இடையே எனது விருப்பத்துக்குரிய கதாநாயகனாக கமல் அதிரடியாக அத்தனை போரையும் சட்னியாக்குவது பிடிக்கத்தான் செய்கிறது. அதிர்ச்சியிலிருந்து மீண்டதும் அதுக்கு ஒரு ரீபிளே வேறு போடுவார்கள்.. அற்புதம்.! அதில் விறுவிறுப்பு எடுக்கும் படம் முடியும்வரை விறுவிறுப்புதான். இதிலே இந்தியாவில் நடப்பதாக இரண்டாம் பாகம் வேறு இருக்கிறதாம்.

இது குழந்தைகளுக்கான படம் இல்லை என்று கமல் ஏற்கெனவே சொல்லிவிட்டார். படத்தில் அத்தனை அரசியல் இருக்கிறதோ இல்லையோ, அத்தனை வன்முறை. கண்ணுக்குள் விரலை விட்டு நோண்டுவது, கழுத்தை வெட்டுவது, நெஞ்சுக்கு மேல்ப்பகுதி மட்டும் வெடிபட்டு விழுவது... அத்தனையும் நிஜமாக கண்முன்னே விரிகிறது. ஒரு இடத்திலே காட்டக் கூடாது என்று சமூகம் சொன்னதை தன கூலிங் கிளாசிலே கமல் காட்டுவார். கூருள்ளவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

இத்தனை சிறப்பானதாக இந்தப் படம் இருப்பதற்கு எல்லாக் காரணமும் கமல்தான். அத்தனை சிறப்பான ஒருங்கிணைப்பு, இயக்கம். ஆனால் சொதப்பல் எங்கே தெரியுமா? திரைக்கதை. ஓட்டை ஓட்டையாக ஒரு வலை போல இருக்கிறது திரைக்கதை.
இந்திய ரா வீரர் கமலுக்கு ஒசாமாவுடன் என்ன வேலை? இந்தியா எப்போது ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்குள் தலையை விட்டது? உண்மையாக அமெரிக்காமீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போட்ட திட்டத்தை முறியடிக்க கமல் வருகிறார். ஒசாமாவை கொல்லுவதற்கு பாகிஸ்தானுக்கே தெரியாமல் அமெரிக்க வீரர்கள் போனதுபோல. (அதற்கான உளவியல் பழிவாங்கல்தான் இதுபோல..) அப்படி கமல் வருவது FBI க்கே தெரியாது. இந்தியப் பிரதமர் சம்பந்தப்படும் இரகசியத் திட்டமாம். இந்தியாவுக்கு ஏன் இந்த வேலை, முதல் அந்தளவுக்கு இந்தியாவுக்கு சத்து ஏது? (இந்தியா ஒரு சத்துக்கேட்ட நாடு என்று நான் சொல்லவில்லை. படத்திலேயே காட்சி வருகிறது. 'இந்திய ஜனாதிபதியே வந்தாலும் குனிய வைத்து கு**** தட்டுவேன் என்பதுபோன்ற வசனம் அமெரிக்கர்களால் பேசப்படுகிறது.')

ஒரு இராணுவ அதிகாரி, அத்தனை எளிதாக அல் கொய்தா தலைமையிடம் வரையில் போய்விட முடியுமா? அதுவும் ஒசாமாவை சந்திக்கும் அளவுக்கு? இத்தனைக்கும் தீவிரவாதிகளின் அடிப்படை கருவிகள், பழக்கங்கள், இடங்கள் பற்றிக்கூட கமலுக்கு தெரியவில்லை.

அமெரிக்க வீரர்கள் ஒசாமா இருக்குமிடத்தை கண்டுபிடிக்க Tracking Device ஐ கஞ்சா பையில் ஏன் வைக்கவேண்டும்? தானே கொண்டு போயிருக்கலாமே? அவரது கஞ்சா பையில் வைத்து, பின்னர் எடுக்கவேண்டிய அவசியம் என்ன? முதல் அமெரிக்க வீரர்கள் இவரிடம் கொடுத்து கையாளச் சொல்லுமளவுக்கு இருந்தால், அமெரிக்காவில் அவர் பிடிபட்டபோது இந்திய எம்பசியிலிருந்து ஆள் வந்துதானா இவரை பிணையெடுக்க வேண்டும்? அமெரிக்காக்கு ஆளை தெரியாதா?

பூஜா குமாரை ஏன் திருமணம் செய்தார்? குத்துகிறதே? ஒரு அப்பாவி (அவள் அப்பாவி இல்லை என்பது தெரியாததால்) பெண்ணை எப்படி கடமையிலிருக்கும்போது திருமணம் செய்யலாம்? நெறிமுறை தவறாத முஸ்லிமாக உள்ள கமல், ஏன் ஒரு பிராமணப் பெண்ணை அப்படி பொத்தாம் பொதுவாக மணந்தார்?

தீவிரவாதிகள் சீசியம் குண்டை நியூ யோர்க்கில் இயக்க முன்னர் புறாக்களில் சீசியத்தை கட்டி இந்த கூத்து ஆடுவது எதற்காக? அந்தக் கூத்து ஆடும்போதே உண்மையான குண்டு தயாராகத் தானே இருக்கிறது? பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக லொஜிக் பலியாகிறதே?

கருப்பனான முஸ்லிம் அப்பாஸி குண்டுக்கு அருகிலிருக்கும்போதே குண்டு வெடிப்பதுதான் திட்டம் என்றால், பிறகு ஏன் தொலைபேசினால் வெடிக்கும் சிஸ்டம்? அவனே செயல்படுத்தலாமே?

காசு கொடுத்தால் எந்த வேலையும், யாருக்கும் செய்யக்கூடிய ஒருவனை சந்திக்கக்கூடியளவுக்கா ஒசாமா வாழ்ந்தார்?

ஒரு கதக் நடனக் கலைஞராக கமல் இருக்கவேண்டிய அவசியம் கதையில் என்ன? கமல் என்கிற நடிகருக்கு அது தெரியும் என்பதற்காகப் புகுத்தப்பட்டதுதானே அது? பொதுவாக எல்லா கமல் படங்களிலும் நடக்கும் கூத்துக்களில் இதுவும் ஒன்று. படத்தின் நாயகன் நாத்திகம் பேசுவார், நன்றாக நடனம் ஆடுவார்.. இப்படி. ஏனெனில் அது கமல்.

பெரும்பாலான காட்சிகள் ஊகித்துவிட முடிவது திரைக்கதையின் பெரிய குறை. பின் லேடனைத் தவிரே எல்லோருமே தமிழ் கதைப்பது, கெட்டவனாக நடிக்கும் நல்லவனான நாயகன், அணு விஞ்ஞானம் தெரிந்த இருபது வயது அழகி இப்படி சில கமலா இப்படி? என்கிற சொதப்பல்களும், சில இடங்களில் கமல் தனமான சொதப்பல்களும்.  ஆனாலும் இத்தனையும் தாண்டி இது திரையரங்கில் பார்க்கப்படவேண்டிய கமல் விருந்து. ஒன்றுமே தெரியாமல் கத்திய முட்டாள்களின் மூக்குடைக்கவாவது கமல் வெற்றி பெறவேண்டாமா?



* * *
பின் குறிப்பு  ...

டிவிடி கிடைத்தாலும், திரையரங்கில் பார்க்கவேண்டும் என்கிற விரதத்தொடு இருந்து பார்த்த படம். அத்தனை ஆச்சாரியம்.  ஹோலிவூட் சினிமா தரத்துக்கு படம் எடுக்கிறேன் என்று சூடுபோடும் செல்வராகவன், விஜய், அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தூள் பண்ணுகிறேன் என்று குதிக்கும் விஷால், கார்த்தி எல்லோரும் கற்றுக் கொள்வதற்கு படத்தில் நிறையவே இருக்கிறது. இதிலே படத்தை தடை செய்யச்சொல்லி ஆர்ப்பாட்டம் நடந்தபோதும், கமலின் மகளைப்பற்றி கேவலமாக பேசியபோதும், உலகத்தையே காப்பாற்றும் தமிழ் சினிமா பொத்திக்கொண்டு கிடந்தது. இந்த ஒரு படத்தை மீறிய படத்தை எடுக்க முடியாதவரை கமலுக்கு அடிமையாக இருக்கவேண்டியது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கடமை. மதரீதியாக புண்படுத்துகிறார் என்று கூறிவிட்டு அவரை எத்தனை புண்படுத்தியது ஒரு சமூகம்? அது  திருந்தும் என்று நினைக்கும் கமல் திருந்தட்டும்.

யாழ் மண்ணிலிருந்து-அடர்காட்டில் தானே

$
0
0
யாழ் மண்ணிலிருந்து மிக நேர்த்தியான காட்சியமைப்பு மற்றும் ஒலிநயத்தில் எமது நண்பர்களின் படைப்பு.. இனிமையான இசை,அழகிய வரிகள்,புதுமையான காணொளி ஒன்று. கேட்டுபாருங்கள்...பிடித்தால் பகிருங்கள்.
Music : Jesus Yuvaraaj
Audio Mixing Engineering & Mastering Engineering : Sukanyan Sunthareswaran
Lyrics : Thuwaragan Ranganaathen
Singer, Actor & Director : R. Nishaharan
Cinematography & Editing : SR. Thusikaran Sripuspanathan
Choreography : ST. Vakeesan

பகிருந்து அவர்களுக்கு ஆதரவை கொடுங்கள்...!


பாடல் வரிகள்.....
அடர்காட்டில் தானே தொலைந்தேனே 
உந்தன் கூந்தல் இருட்டிலே 
இன்னும் காணவில்லையே 
I'm lost in the deep forest,
in the darkness of your hair,
and not yet found

நேற்று நான் இருந்தேன் இன்று இறந்தேன் 
உன் வார்த்தைகள் மெல்ல என்னைத் தீண்டுதே 
I was alive yesterday, and lifeless today
Your words touches me tenderly

கண்களோரம் காதல் பேசும் (2)
உன் பெண்மை என்னைத் தூண்டுதே 
Love speaks along the side of your eyes 
Your feminity urges me

கண்கள் உள்ளே விழுந்து 
நெஞ்சின் உள்ளே நுளைந்து 
மெல்ல மெல்ல என்னைக் கொன்று 
போகும் தென்றல் நீயே 
You are a tender breeze,
that falls in my eyes
Enters through my heart, 
and kills me slowly and softly

உன்னோடு நானும் போகையில் 
நாணம் போகையில் 
நாளும் போதல வாடினேன் 
When I walk with you, shyness goes away
Days are not enough, I'm fading..

நட்சத்திரம் அள்ளித்தான் 
நிலவைத் துண்டாய் வெட்டித்தான் 
உந்தன் கூந்தல் சூட்டுவேன் 
I will adore your plaits,
by grabbing the stars from the sky
And slice the moon up in the high

தேகம் எல்லாம் பஞ்சாகும் 
நீயும் நானும் ஒன்றாகும் 
மஞ்சத்தில் தேன் சிந்தும் 
கொஞ்சல்கள்தான் மிஞ்சும் 
Bodies become soft like cotton, 
When you and I become one.
Bed disseminates with honey drops,
And Left with sweet kisses

ஏதோ உந்தன் நினைவுகள் தினம் 
ஏதோ சின்னக் கனவுகள் 
இரவாக மெல்ல இனிமை சேர 
அந்த வானில் பூப்பூக்குதே 
Everyday, I think of you and my dreams are you
When the sun sets, the sweetness emerges
And Flowers bloom in the sky

கண்கள் முன்னே நீயும் வர 
நெஞ்சம் உந்தன் பின்னால் செல்ல 
ஐயையையோ காதல் பூக்குதே 
When you appear, my heart follows you
Oh God! Love blooms

உள்ளே வைத்த காதல் இன்று 
வெளியே வந்து உன்னைத் தேட 
பூமிப்பந்து என்னை சுற்றுதே 
The untold love kept in my heart revealed this day
and searches you
The world revolves around me




விஸ்வரூபம்-யாழ்ப்பாணம் ராஜாதியேட்டரில் இருந்து

$
0
0

இலங்கையில் விஸ்வரூபத்திற்கு தற்காலிகத்தடைன்னு அரசாங்கம் அறிவித்துவிட்டது.ஏன் விஸ்வரூபத்திற்கு அதுவும் இலங்கையில் தடைவிதித்தார்கள் என்பதில் எனக்கு சந்தேகம்.காரணம் உலக முஸ்லீம்கள் அனைவரையும் கொதித்தெழவைத்த இனஸன்ஸ் ஒப் முஸ்லீம் படத்தை இந்தியாவில் இருந்து பார்க்கமுடியாது.ஆனால் இலங்கையில் இருந்துகொண்டு இப்பொழுதும் பார்க்கமுடியும்.படத்தின் தடையை நீக்குவதற்கு முன்னர்  யோசித்தேன் படம் இலங்கையில் வெளிவரவேபோவதில்லை என்று ஏனெனில் படத்தைவெளியிடு என்று போராட  யாழ்ப்பாணத்தில் யாருமில்லை.அவனவனுக்கு இங்கே ஆயிரம் பிரச்சனைகள்(50 வருடம் பின் தங்கியிருக்கின்றோம் என்று கூறிய ஜெயமோகன் மன்னிக்க) சோ தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை எமது அரசாங்கத்துக்கு யாராவது நினைவுபடுத்துங்கள் ஐயா அப்பவாவது அது நினைவுக்கு வந்து தடையை நீக்கட்டும் என்று வழக்கம்போல் பேஸ்புக்கில் புலம்பியதுதான் மிச்சம்.இலங்கை அரசுக்கு ஏலவே சில கோபங்கள் இருந்தன தமிழக சினிமாமீது அசின் இங்கேவந்தது தொடர்பில் அசின் மன்னிப்புக்கேட்கவேண்டும் அதோடு இனிவரும்காலத்தில் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்றெல்லாம் கலாட்டாசெய்துவிட்டமை போன்றனவும் ஒரு காரணம்.அதென்ன நடிகை,நடிகர்கள் வரக்கூடாது ஆனால் அவர்கள் நடித்த படங்கள்மட்டும் இங்கே ஓடவேண்டுமா என்று ஏன் யாரும் கேள்விகேட்கவில்லை என்று யாரும் கேட்கவேண்டாம் அது நடந்துமுடிந்தகதை.விஸ்வரூப பிரச்சனைகளின்போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவப்பயிற்சிக்கு(14 நாள் ஆர்மி ரெயினிங்க்)போய் இருந்ததால் வலைப்பூவையும் பேஸ்புக்கையும் தலைமுழுகவேண்டியதாக போயிற்று இதனால் பி.ஜேயின் புனித பொன்மொழிகளைப்பற்றியும் கமல் நாட்டைவிட்டு சென்றுவிடுவதாக கூறியதுபற்றியும் லேட்டாகவே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.பி.ஜே மதத்தலைவராம் அவரது ஸ்பீச்சை கேட்டேன்..நானும் அவ்வாறுபேசினால் நன்றாக இருக்காதல்லவா அவருக்கு அறிவு அப்படியென்றால் ஏன் நானும் புலம்பவேண்டும் என்று விட்டாயிற்று..ஏற்கனவே சக பதிவர் விமர்சனம் எழுதியதால் நான் விமர்சனமாக எழுதப்போவதில்லை...என் பேஸ்புக்கில் என்னால்  இடப்பட்ட ஸ்ரேட்டஸ்ஸையே இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்..


விஸ்வரூபம்...
தியேட்டரில் சனம் கால்வாசிக்கும் இல்லை...தடை நீக்கப்பட்டது தெரியவில்லையோ அல்லது ஏற்கனவே டி.வி.டிக்களில் பார்த்ததுதான் காரணமோ தெரியாது ஆனால் பெரும்பாலானவர்கள் கமல் பான் என்று நினைக்கின்றேன் கடவுள் காப்பாற்றுவார் எந்தகடவுள்? என்றதும் பெரும்பாலானவர்கள் சிரித்துவிட்டார்கள்...

டான்ஸ் முடிஞ்சா எந்த ஹீரோயினாவது கமலின் முகபாவத்தோடு ஆடிக்காட்டட்டும் பார்க்கலாம்..

முதல் பைட்சீன் மக்ஸிமம்...
எப்.பி.யை பூஜாகுமாரிடம் அல்லாவா உன் கடவுள்?
இல்லை இல்லை அது என் ஹஸ்பண்ட்ட கடவுள்

அப்ப உன் கடவுள்

(5 செக்கன் சிந்தனையின் பின் (காரணம் இந்து சமயத்தில் கோடிக்கணக்கான கடவுள் இருக்கு திடீர்ன்னு உன் கடவுள் யார்ன்னு கேட்ட யாரை சொல்ல-கமலின் கடி)என் கடவுளுக்கு 4 கை இருக்கு

அப்படின்னா உன் கடவுளை எப்படி சிலுவையில் அறைவீங்க?

நான்க அறைய மாட்டம் "கடல்ல கரைச்சிடுவம்"( நச் என்றிருந்தது)

கமல் ஓமரின் மகனிடம் யூ வோன்ற் ரு பிகம் ஏ வோரியர் நோ ஐ வோன்ற் ரு பிகம் ஏ டொக்ரர்... அந்த பதிலை சொன்ன அந்த சிறுவனை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலை ஆட்ட முயற்சிக்க அவன் ஐ ஆம் நொட் ஏ சைல்ட் என்று கத்தி விட்டு இறங்கி ஓடிவிடுகிறான் ஆனால் அவனை விட வயது கூடிய அடுத்த நாள் தற்கொலையாளியாக இறக்கவேண்டிய ஒரு ஜிகாத் போராளி ஓடி வந்து ஊஞ்சலில் ஏறி அமர்ந்துகொண்டு ஊஞ்சலை தள்ளிவிட சொல்கின்றான்( புரிந்திருக்கும்)

பில்லேடனை கொன்றதை ஒபாமா கூறிக்கொண்டிருக்கும் வீடியோவில் கீழே பெற்றோல் இங்கிறீஸ் 3% என்று போடப்பட்டிருக்கும்...

ஓமர் தன் மகன் ஏதாவது பிழைசெய்தால்(ஏது கொண்டே காலை வெட்டிடுவானோ என்று பயந்துகொண்டு பார்க்கவேண்டி இருந்தது ) சிறியவயதில் கையை துப்பாக்கிபோல் பாவித்து சுடுவதைப்போல் சுடுவார்(மகனாயிற்றே)...அப்படி ஒரு தடவை சுட அருகில் இருந்த கமல் மகனின் கையை துப்பாக்கிபோல் பிடித்து ஓமரை சுடுவார்(சூப்பரப்பு)

ஒரு கடையில் தராசில் துப்பாக்கிக்குண்டுகள் கொட்டப்பட்டிருகும் கடையினுள்ளே சிறுவன் விளையாடிக்கொண்டிருப்பான்

முதல் பைட் சீனின் போது கிருஸ்ணா என்று கத்துவார் கமல் ### கிருஸ்ணா எண்டா கத்துரா? வேணும்னா அல்லான்னு கத்துறேன் அல்லாகூ அக்பர்.

நாசர் அரபிக்கில் பேசுவது கமலுக்கு புரியல உடனே குர்ரானை இங்கிலீஸ்லயா வாசிக்கிறாய் என்று கேட்க? இல்லை...அப்படின்னா புரியும் என்னுறார் கமல்..குர்ரானில் அரபிக்கை தமிழ்வேர்ஸனில் போட்டிருப்பார்கள்..அதைத்தான் கமல் படித்திருக்கின்றார்..இருந்தும் கமலுக்கு அராபிக் புரியல(இதுக்கு நான் விளக்கம் கொடுக்க விரும்பல)

அதோட குர்ரான் வசனங்களோட கழுத்தறுக்கிற சீன் யாழ்ப்பாணத்தில் கட் எனக்கு ஏன்னு புரியல... இனஸன்ஸ் ஒப் முஸ்லீமை இந்தியாவில் இருந்து யாரும் பார்க்கமுடியாது காரணம் இந்தியா தடை செய்துவிட்டது ஆனால் இலங்கையில் இருந்து இப்பொழுதும் பார்க்கமுடியும்..அதோடு உண்மையாகவே வைபிரேட்டர் கத்தியினால் கழுத்தை அறுக்கும் காட்சிகள் யூ டியூப்பில் தாரளமாகவே உள்ளன...

ஹெலிஹொப்ரர் சவுண் துப்பாக்கிகளின் சத்தம் எல்லாம் போரின்போது ஓடியவைகளை நினைவுபடுத்துகின்றன..

ஓமரே ஒரு கட்டத்தில் மகனை நினைத்துஅழுவது...அதை நிறுத்த கமல் ஜிகாத்தைபயன்படுத்தியது..(விளக்கம் உங்களைப்பொறுத்தது)

முதல் அரைப்பாகம் படம் செமஸ்பீட் அடுத்தபாகம் முதல்பாகத்துடன் ஒப்பிடுகையில் சிலோ..
ஆனால் படம் எனக்குப்பிடித்திருந்தது...

பி.ஜே கமலைப்பற்றி தரக்குறைவாக//மனிஸபுத்திரன் சொன்னார்..ஸ்ருதிஹானஒல் மிகப்பெரிய ஆளுமை ஒன்றைப்பார்த்தேன்....என்ன ஆளுமைத்திறன் தெரியுமா என் அப்பனுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் ....ஆகா ஆளுமைன்னா இதுதான் ஆளுமை அப்பனயே படுக்கப்போடுற ஆளுமைன்னா சாதாரனவிஸயமா
சொன்னது பீஜே// இவர் ஒரு மத்தலைவராம்..

உங்கள் மீது மான நஸ்ரவழக்குப்போட்டு கம்பி எண்ணவைத்திருக்கமுடியும்..கமல் அந்தவிடயத்தில்"கடவுளாக"உங்களை மன்னித்துவிட்டார் போங்கள்
அவர் மேலும் கூறிய பொன்மொழிகள்

//தீவிரவாதத்தை எதிர்க்கிறபடத்தை நாங்க எதிர்த்தா நான்க தீவிரவாதிங்கிறா
ஒரு வேசைத்தொழ்லில் செய்கின்ற நடிகையைப்பற்றி எழுதினான் என்பதற்கான நீ அவனை எதிர்த்தாயே பாரதிராஜா அப்படியானால்
உன் பொண்டாட்டி வேசையா
உன் பொம்பிளைப்பிள்ளைகள் வேசையா
உன் சகோதரிகள்வேசையா//

மொத்தத்தில் படத்தின் வெற்றி அவர்களை செருப்பால் அடித்ததற்கு நிகர் என்பதுபோலத்தான் எனக்குப்படுகின்றது
#######################################################################
விஸ்வரூபம் படப்பிடிப்பு  ரகசியங்கள்-விறுவிறுப்பு

விஸ்வரூபம் படம் பல தடைகளையும் தாண்டி தமிழகத்திலும் ரிலீஸ் ஆகி, உத்தரவாதமான வெற்றிப்படம் என்ற பெயரையும் பெற்றுவிட்டது. சர்ச்சைகளையும் கடந்து, விஸ்வரூபம் படத்தின் ‘மேக்கிங்’ மெச்சப்படுகிறது. படத்தின் சவுன்ட் ட்ராக் தமிழ் பேசாவிட்டால், உலக தரத்தில் ஒரு ஆங்கிலப்படம் என்றே சொல்லிவிடலாம் என்ற விமர்சனங்களும் உள்ளன.

படத்தின் கதை, ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்காவிலுமாக மாறிமாறி நடக்கிறது. விமர்சனங்களில் “ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட காட்சிகள் சூப்பர், அமெரிக்க காட்சிகள் அட்டகாசம்” என்றெல்லாம் எழுதப்படுகின்றன.

எத்தனை பேருக்கு தெரியும், படத்தின் ஒரு பிரேம்கூட ஆப்கானிஸ்தானில் படமாக்கப்படவில்லை என்பது?

எத்தனை பேருக்கு தெரியும், நியூயார்க் என்று படத்தில் காட்டப்படும் அனைத்துக் காட்சிகளும் நியூயார்க்கில் எடுக்கப்படவில்லை என்பது?
அதேபோல, எத்தனை பேருக்கு தெரியும், படத்தில் வரும் அமெரிக்க ராணுவத்தினர் பலர் அமெரிக்கர்கள் அல்ல என்பது?

அதுதான் சினிமா!

ஏப்ரல் மாதம், 20-ம் தேதி, 2011-ம் ஆண்டு, விஸ்வரூபம் படத்தின் படப்பிடிப்பு, நியூயார்க்கில் தொடங்குவதாக ஏற்பாடு. துணை நடிகர்கள், ஷூட்டிங் முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்து, நியூயார்க்கில் எல்லாம் தயார் நிலையில் இருநதன. ஆனால், அன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை.

காரணம், விஸ்வரூபம் படப்பிடிப்பு டீமில் உள்ள சிலருக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது.

உடனடியாக, புத்திசாலித்தனமான காரியம் ஒன்றை செய்தார் கமல்ஹாசன்.

படத்தில் நியூயார்க்கில் நடப்பது போல காண்பிக்கப்படும் சில காட்சிகளில், நியூயார்க் லேன்ட்மார்க்குகள் வரும் காட்சிகள் மட்டுமே அங்கே எடுக்கப்பட வேண்டும். மற்றைய காட்சிகள் நியூயார்க் நகரில்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. ஏதாவது ஒரு வட அமெரிக்க நகரத்தில் எடுக்கப்படலாம்.

இதையடுத்து விஸ்வரூபம் டீம், தமது முதல் கட்ட படப்பிடிப்பை மூவ் பண்ணிய நாடு கனடா! 2011-ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நியூயார்க்கில் நடப்பதான சில காட்சிகள் கனடாவில் படம்பிடிக்கப்பட்டன. சில கனேடிய தமிழர்கள், இந்தக் காட்சிகளை சுலபமாக கண்டுபிடிப்பார்கள்.

அதேபோலத்தான் ஆப்கானிஸ்தான் காட்சிகளும். விஸ்வரூபம் டீமுக்கு ஆப்கானிஸ்தானில் படமாக்கும் யோசனையே வேண்டாம் என ஐடியா கொடுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே அது மிகவும் அபாயமான விவகாரம். ஆப்கானில் நடப்பதாக காண்பிக்கப்பட்ட காட்சிகள் எங்கே படமாக்கப்பட்டன தெரியுமா?

ஜோர்தான் நாட்டில்!

2011-ம் ஆண்டு நவம்பரில் விஸ்வரூபம் படப்பிடிப்பு டீம், அமான் நாட்டுக்கு ஷிஃப்ட் ஆகியது.

ஜோர்தான் தலைநகர் அமான் முதல் ஸ்டாப். அங்கே சில காட்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், ரியல் ஆப்கான் அட்மோஸ்ஃபியர் இங்கில்லை. அதையடுத்து அல்-பெத்ரா என்ற இடத்தில் ஆப்கான் போன்ற இடங்கள் இருப்பது தெரிய வந்தது. “A rose-red city half as old as time” என்று புகழ்பெற்ற நகரம் இது.

இங்குதான், ஆப்கானிஸ்தானில் நடைபெறுவதான பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தில் அமெரிக்க ராணுவத்தினராக காண்பிக்கப்படும் ஆட்கள், ரஷ்யா, ஈரான் மற்றும் ஆபிரிக்கர்கள்.

அதன்பின், அமெரிக்க விசா கிடைத்தது. 2011-ம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்கா சென்ற படப்பிடிப்பு குழு, நியூயார்க்கில் நடைபெறுவதான மீதிக் காட்சிகளை படமாக்கியது.

அமெரிக்காவிலும், நியூயார்க்கில் நடைபெறுவதாக காட்டப்படும் அனைத்து காட்சிகளும், நியூயார்க்கில் படமாக்கப்படவில்லை. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிரான்ட் ராப்பிட்ஸ் நகரிலும், படத்தில் நியூயார்க்கில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு, 2011-ம் ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறை காலத்தில் நடைபெற்றது.

ஆனால், படத்தில் பார்க்கும்போது, இந்த வித்தியாசங்கள் எதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். அநேக ஹாலிவூட் படங்கள்கூட, அமெரிக்காவில் நடைபெறுவதாக காண்பிக்கப்படும் காட்சிகளை இப்போதெல்லாம் கனடாவில்தான் படமாக்குகிறார்கள்!

நன்றி : விறுவிறுப்பு இணையதளம்

எதிர்கால மனைவி யாருடன் கொண்டாடுகிறார்

$
0
0

என் மரியாதைக்குரிய நண்பர்கள்.மரியாதைக்குரிய எதிரிகள் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...

சில பலருக்கு காதலால் அந்து அவலாகி வெந்து வேலாகிய அனுபவங்கள் இருக்கலாம்..ஆனா அதுக்கெல்லாம் அசருர ஆக்களா நாம...

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது(அப்ப நாம இப்ப கவலைப்பட இன்னொருதன் அங்க சந்தோசம இருக்கானா கவலப்படாத மச்சி)அது  நாள் மற்றொரு நாள் வேறொருவருடையதாகும்..(எதிர்காலத்தில அவனும் நம்ம கட்சிதான்)
காதலர்தினத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் முடிவில் இருப்போர் காதல் அழிவதில்லை படம் பாருங்கள் அதோடு தற்கொலை செய்யும் உங்கள் முடிவு காலியாகும்..(அதைப்பாத்தே  உயிரோட இருக்கீங்கன்னா..).http://www.youtube.com/watch?v=73EEncnFwLE

காதலியை ரொம்ப மிஸ்பண்ணுறவங்க ரொம்ப உருகிக்கிட்டிருக்கிறவங்க விண்ணைத்தாண்டிவருவாயா பாருங்க....காதலை நாம தேடிக்கிட்டுபோக முடியாது அதுவா நடக்கனும் போட்டுத்தாக்கனும் தலைகீழா திருப்பனும்.. நான் ஜெஸ்ஸியை சூஸ் பண்ணல அதுவா அடிச்சுது காதல்...(எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்...காதலில் ஏலவே தடக்கிவீழ்ந்தது காரணமாக படத்தின் ரெயிலரைப்பார்த்துவிட்டு இப்படத்தை பார்க்கவே அஞ்சினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எவளவு தூரம் இப்படம் என்னைப்பாதித்தது என்று..சிம்புவை ஒரு நடிகராக நான் மதித்ததே இந்தப்படத்தால்தான் (பின்னர் ஒஸ்தி பார்த்து  நொந்துகொண்டது வேறுகதை)
http://www.youtube.com/watch?v=PEzoHtoP9mY

இளையராஜ ரசிகர்கள்மட்டும் நீதானே என் பொன் வசந்தம் பாருங்க... சாரி லவ்வர மிஸ்பண்ணுற பொண்ணுங்களும் பாக்கலாம்..விமர்சனம் தாறுமாறாய்வந்தாலும் பொண்ணுங்கசைட் காதலை தவிப்பை வெளிப்படுத்தியபடம் நீதானே என் பொன் வசந்தம்

லவ்வில பைட்பண்ணனும் ரிவஞ்சு தங்கச்சி குடும்ப செண்டிமண்ட்டால கட்டுப்பட்டவங்க வீராச்சாமி பாருங்க..
(பாரும் பாத்துத்தொலையும்)


வெற்றிகரமாக காதலை சேர்த்துவைத்து இப்போது தொடர்ந்து வெற்றிகரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜோடிகளை சேர்த்துவைத்த நண்பர்களுக்காக டேடிகேட் நாடோடிகள்.... இந்த உலகத்தில இருக்கிற காதலர்கள் எல்லாம்  நிம்மதியா இருக்காங்கன்னா ஒரே ஒரு நம்பிக்கைதான் நம்ம நண்பர்கள் நம்மள சேர்த்துவைப்பாங்க என்னுற நம்பிக்கை..

லவ் பண்ணனும்னு ஆசைப்படுறவங்க,லவ்பண்ணுறவங்க(இவங்கதான் முக்கியமாக பார்க்கவேண்டும்) அனைவருக்கும் நான் டெடிக்கேட் செய்ற படம்
"காதலில் சொதப்புவது எப்படி"..சோர்ட் பிலிமாக எடுத்திருக்கவேண்டியது என்றாலும் அணு அணுவாக நான் ரசித்தபடம் இது...  நாங்கள் செய்த,செய்யும் அத்தனை சொதப்பல்களையும் வெளிக்காட்டிய படம்..

உங்கக்கிட்ட மட்டும்தாண்ட நான் இப்படியெல்லாம் பேசமுடியும்..
எப்பவும்போல சண்டதாங்க கொஞ்ச நாள்ள சரியாகிடும் அவளா திரும்பி வருவா....

2 நாள் ...

என்ன நினைச்சிக்கிட்டிருக்கிறா அவ மனசில அவ இல்லாம என்னால இருக்கமுடியாதா..போகட்டும்

3 நாள்
முடியலங்க அவ இல்லாம இருக்கேலாம இருக்கு..

........
பொண்ணுங்க பெயிண்டிங்க் மாதிரி பெயிண்டிங்ல இருக்கிற கண்ணை பாத்திருக்கிறீங்களா ரூம்ல எங்க இருந்து பாத்தாலும் எங்கள பாக்கிறமாதிரியே இருக்கும்...நமக்கு பிடிச்ச பொண்ணுங்களும் இப்படித்தான் ஏன்னாஅதுதான் எங்களுக்கு வேணும் இட்ஸ் அன் இலூஸன்...

எப்படித்தான் ஒரேவாரத்தில எதுவுமே நட்க்காத மாதிரி மாறுறாளவயோ?

பாசத்தையும் சரி வெறுப்பையும் சரி பொண்ணுங்க காட்டுற அளவுக்கு பசங்களால என்னைக்குமே காட்டமுடியாது
இந்தப்படத்தில நிறையவே மெஸேஜ் இருக்கு...

http://www.youtube.com/watch?v=wVr2VDeggQk



காதலிலதோத்தவன் அல்லது அடுத்தவன் காதலால்கடுப்பானவன் எல்லாரும்.. காதலை எதிர்த்து "உங்கள் பெற்றோரை காதலியுங்கள்" லெவலில் ஸ்ரேட்டஸைப்போடப்போகின்றார்கள்.

காதலர்களை நான் கேட்டுக்கிறது ஒன்னே ஒன்னுதான்..(முக்கியமா போய்க்கிட்ட)

நீங்க ஜோடியா கூல்பார்போங்க,பீச் போங்க,தியேட்டருக்குப்போங்கஅல்லது வேற எங்கயாவது போங்க ஆனா உன் பிரண்டின்னு ஒருதனை நீ என் நண்பந்தானே மச்சான் நீ வராம யார் வருவார்ன்னு அந்த அப்பாவி ஜீவனையும் உன் லவ்வர்கூட கூட்டிட்டுப்போய் அவனை முன்னால உக்காரவச்சிட்டு கூட வந்தபாவத்துக்கு ஒரு குச்சிஐஸைவாங்கிக்கொடுத்துட்டு..

நீங்க ரண்டுபேரும் ஒரு கப்பில ஐஸ்கிரீமை மாறிமாறிகுடிச்சு மாறி மாறிமூக்கில இருக்கிற ஐஸ்கிரீமை சொறிஞ்சு( துடைச்சு )அவனுக்கு கொடுப்பீங்களே ஒரு பிரீஸோ ரென்ஸன் அவன் யோசிப்பான் இதுக்குப்பதிலா நான் லைட் பிடிக்கப்போய் இருக்கலாம்னு..அதுவும் இடைல சும்மா பாத்துக்கிட்டிருக்கானே என்கிறதுக்காக கதையைக்கொடுத்திட்டு அவன் இன்றஸ்ரா திருப்பி பதில் சொல்லுற நேரம்பார்த்து..ரண்டுபேரும் லேசா மூக்கைக்கிள்ளிக்கிறது...வேணாண்டா உங்களுக்கு ஆம்பிளைப்பாவம்..

தயவுசெய்து யாராவது வந்து அனுபவமோன்னு மொக்கைபோடாதீங்க...எல்லாம் நீங்களும் நேரில பாக்கிறவிடயம்தான்....

ஜோடியா சுத்துறவனப்பாக்கும்போது என்னையமாதிரி மற்றபசங்களுக்கு
நம்ம வருங்கால பொண்டாட்டி நாளைக்கு யாரு கூட வேலன்டைன்ஸ் டே கொண்டாட போறாளோன்னிற பிரச்சனை...

இருக்கிறவனுக்கு ஒரு லவ்வர் இல்லாதவனுக்கு எல்லா பிகருமே லவ்வர்தான்...முக்கியமா நம்ம பேஸ்புக் பாஸ்வேர்ட் எல்லாம் எங்ககிட்டதான்யா இருக்கு...

பைனலா காதல்ஜோடிகளின் பிரன்ஸ் சார்பில் அந்த ஜோடிகளுக்கு வாழ்த்துத்தெரிவிப்பதுடன் சொல்லவர்ரது என்னான்னா...

நீங்கள் ஒருத்தந்தான் ஒரு பொண்ணைகாதலிச்சு வெற்றிகண்டதுபோலவோ நீங்கள் ஒருவந்தான் ஆம்பிளை என்கிறதுபோலவோ வெட்டிமொக்கை சீனைப்போடாமல் காதலர் தினத்தை கொண்டாடுங்க...உங்களுக்காக எவனாவது ஒரு ஆஞ்சனேயர் தன்வாலையையும் ஊரையும் எரிச்சுக்கிட்டதையும் மறந்திடாதீங்க

நல்லா இருப்பம் நல்லா இருப்பம் எல்லாரும் நல்லா இருப்பம்..

வாழ்த்துக்கள்..


பேஸ்புக்கில்  சிலாகித்தவை

அழகாய் இருக்கிறாய் என
நீ திமிர் செய்வதில்
வருத்தமில்லை எனக்கு....
என் வருத்தமெல்லாம்,
உன் அழகுக்கு
இந்த திமிர் பத்தாது
என்பதுதான்..!!

-டான் அசோக்

கல்லால் அடிப்பட்ட நாயை விட....
காதலால் அடிப்பட்ட BOY அதிகம் :D

காதலர் தின வாழ்த்துகள் :)


உனக்கும் ஒரு காலம் வரும் அப்போ ஒரு பொண்ணு உன்னை ரொம்ப லவ் பண்ணுவாள் கட்டி பிடிச்சு கிஸ் பண்ணிகிட்டே சொல்லுவா 

I LOVE U டாடி ன்னு!
நமக்கு எல்லாம் எத்தன வீட்டுல இருந்து ஓடி வர போகுதோ!!!!

நாளைக்கு எப்படியாவது பிஸியா இருக்குற மாதிரி ஸீன் போட்டு Facebookல இல்லாத மாதிரி மேய்ன்டீன் பண்ணிடனும்...-Aadhi Maanick


பிப்ரவரி 14 காதலர் தினம், 
நவம்பர் 14 குழந்தைகள் தினம்.

# எங்கேயோ Sync ஆகுதே

நமக்கு இது எல்லாம் செட் ஆகாது மச்சி ..நாம எல்லாம் தண்ணி அடிச்சோமா , வாத்திய கிண்டல் பண்ணோம , கிளாஸ் ரூம் கண்ணாடிய நொருக்குனொமா அப்படின்னு தில்லா இருக்கணும் மச்சி ..அது தான் கெத்து ...

அத விட்டுட்டு இவளுக்க பின்னாடி ஜொள்ளு விட்டுகின்னு , சிரிச்சி கின்னு ...ஆவாது மச்சி ...

இப்படி எல்லாம் காலேஜ்ல சொல்லி என்னைய உசுப்ப்பு ஏத்துன அந்த நாதாரி மட்டும் இப்ப என் கைல கிடச்சான் ..ங் கொய்யால செத்தான் ..பாவி பய-Sundaram Sethupathy


















ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து

$
0
0

10 வயதில் :
நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...”

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார்.
இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை.

வழி-பரிமேலழகர் பரி



யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகள் : பசியுடன் ஒரு ஆய்வு.

$
0
0

கொழும்பின் தெருவோர சாப்பாட்டுக்கடைகளில் சாப்பிட்டு வயிறு பழுதாகி, ‘மடைதிறந்து பாயும் நதி அலைதான்...என்கிற நிலைமையில் இருக்கும்போது இந்தப் பதிவை எழுதவேண்டிய நிலைமையில் இருக்கிறேன். காலத்தின் கோலம். ஒருவேளை இந்த மொக்கை சாப்பாடுகளால் மனமுடைந்து, அடிக்கடி சொம்போடு காணாமல்போகவேண்டிய நிலைமைதான் பழசை அசைபோடும் வகையில் யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக்கடைகளைப்ப்றி எண்ண வைத்ததோ, தெரியவில்லை.

கொழும்பின் எந்த உணவுக் கடைக்கும், அது ஐந்து நட்சத்திர ஹோட்டலானாலும் சரி, பத்துக்கு பத்து கடையில் அப்பம் சுட்டு விற்கும் கடையாகட்டும், ஒரு ஒற்றுமை உண்டு. அவரின் மலசலகூடமும், சாப்பாட்டு மேசையும் ஒரே சுத்தத்தில் இருக்கும். இதிலே முன்னையது நமது ஒருவருட பாதீட்டை ஒரே நாளிலே முடிக்குமாதலால், மிளகாய், எண்ணை, பழைய மாவில் செய்த பட்டப்பழைய பண்டங்கள், முகத்துராஞ்சிப் பெண்களின் நடமாட்டம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்த மொக்கை கடைகளிலே சாப்பிட வேண்டி வருகிறது. இது ஆப்பை தேடிப்போய் உட்காரும் வேலைதான் என்றாலும் வேறு வழி இல்லை அமைச்சரே.

சாப்பாட்டுக்கு என்று யாழ்ப்பாணத்துக்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது. அது உலகளாவிய பெருந்தமிழ் உணவுப் பழக்கங்களோடு ஒட்டாது, பெரும்பாலும் கேரளப் பழக்க வழக்கங்களோடு ஒட்டுகிறது. பிட்டு, சொதி முதலிய உணவுகள் கேரளத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் பொதுவானவை, தனித்துவமானவை. சேரர்களின் தொடர்ச்சிதான் யாழ்ப்பாணத்தவர்கள் என்பதற்கு, அவர்கள் சோழர்களின் தொடர்ச்சி என்பதைவிட ஆதாரங்கள் அதிகம். சேரன் தீவு (செரண்டிப்), மலையாளத்தோடு ஒத்துப்போகும் தமிழ்... இதெல்லாம் மானிடவியல். நாம் பார்க்கப்போவது சாப்பாடு.

யாழ்ப்பாணத்தின் அதி முக்கியமான சாப்பாடு ஏனைய உலகத் தமிழர்களுடையது போல சோறு இல்லை. பிட்டு. புட்டு என்று சொன்னால் இன்னும் இதமாக இருக்கும். புட்டு.. எந்தக் கறியுடனும், கறி இல்லாவிட்டால், வாழைப்பழத்துடனோ குறைந்த பட்சம் சீனியுடனோ உள்ளே இறங்கும் உன்னத உணவு. வெள்ளைப் பிட்டு இன்னும் விஷேசம். சுடச் சுட இறக்கப்பட்டால் அதை அப்படியே சாப்பிடலாம். தேங்காய்ப்பூ சேர்த்த பிட்டு அரச உணவு. சுடச் சுட வெள்ளைப் பிட்டுடன் ஆட்டிறைச்சிக் கறியை குழைத்து அடித்துவிட்டு செத்துப்போ என்று சொன்னால்கூட நான் தயார். ஏன், நீங்களும்தான். புட்டு உள்ளே இறங்காதளவு உபாதைகள் வந்துவிட்டால் அதே மிக்சரை உரலுக்குள் போட்டு நசித்தால் இடியப்பம்... புட்டுக்கு முதலிடம் என்றால் இது இரண்டாம் இடத்தை பெறுகிறது.பிறகு கூழ், பனங்காய்ப் பணியாரம் என்று இறங்கினால்... அட போங்கப்பா... பிஸ்ஸா ஹட்டும், கே எப் சியும்...காஞ்சுபோன ரொட்டிக்கு மேல செத்துப்போன கோழிய படுக்க வைச்சு நெருப்பக் காட்டி எடுத்துப்போட்டு ரெண்டாயிரம் ருவா வாங்கிரான்கள்...

இரவு குடும்பமாக உட்கார்ந்து அம்மா குழைத்து தரும் சோற்று உருண்டைகளை சாப்பிடுவது, காலையில் முதல்நாளின் கத்தரிக்காய்/பாகற்காய்/இறைச்சிக் கறியுடன் சாப்பிடுவது.. இப்படி யாழ்ப்பாணத்தின் சாப்பாடு என்பது வெறும் பழக்க வழக்கம் மட்டுமல்லாது ஒரு கலாசாரமாக இருக்கிறது. இது யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் யாழ்ப்பாணத்தவர்களுக்கு புரியும். ஆனால் யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக் கடைகள்.. அது தனிக்கதை.நாம் பார்க்கப்போகும் கதையும் அதுதான்.

யாழ்ப்பாணத்தின் பிரபலமான கடை ஒரு அசைவ உணவுக் கடை. யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த கடை, பெரும்பாலும் எல்லோரும் ஒருமுறையாவது சாப்பிட்ட கடை. சமீபத்தில் ஒரு ஊழியர் அந்தக் கடையின் ஒரு நாள் வருமானமான ஒரு லட்ச ரூபாயுடன் கம்பி நீட்டியதால் கதைகளில் அடிபட்ட கடை. உயர்தர, பல்கலைக்கழக மாணவர்கள், யாழ் நகரத்தில் வேலை செய்வோர், பயணித்து வேளை செய்வோர், வேலைசெய்யாமல் பயணிப்போர்.. எல்லோருக்கும் மூவேளை மூக்குநிறைக்கும் கடை. (இவ்வளவு கஷ்டப்பட்டு அதன் பெயரை சொல்லாமல் எழுதுகிறேன். தயவுசெய்து யாரும் கொமெண்டில் வந்து நீலாம்பரி..!! என்று போட்டுத் தொலைக்க வேண்டாம்.)


நீலாம்பரியோ, காதாம்பரியோ... யாழ்ப்பாணத்தின் சாப்பாட்டுக் கடைகளும் அவற்றின் பண்டங்களும் யாழ்ப்பாணத்துக்கு ஒரு தனித்த அடையாளம். விலை, தரம் என ஆயிரம்  விருப்பங்களும் வருத்தங்களும் இருக்கின்றன யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக் கடைகளில். சில குறிப்பிட்ட பண்டங்களுக்காகவே பிரபலமான கடைகளும் இருக்கின்றன. கடையின் பெயருக்காகவே பத்து கிலோமீட்டர் தாண்டிவந்து அப்பளம் வைக்காத சோற்றுக்கு அறுபது ரூபாய் அதிகம் கொடுக்கும் கடைகளும் இருக்கின்றன. ஒரு நாற்பதுநாள் காலம் யாழ்ப்பாணத்தின் எல்லா மூலைகளிலும் சாப்பாட்டுக் கடைகளிலே சாப்பிட வேண்டிய அனுபவம் அடைந்தவன் என்கிற தகுதியில், யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகளை ஆராய்கிறேன்.

கொஞ்ச காலத்துக்கு முன்னர் சைவக்கடைகள் என்று ஒரு கூட்டம் இருந்தது யாழ்ப்பாணத்திலே. மலாயன் கபே என்பது யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த காலமும் உண்டு. இன்றைய இளைஞர்கள் மத்தியிலே கடையிலே சைவச் சாப்பாடு சாப்பிடும் வழக்கம் ஒழிந்து வருகிறது. வெள்ளிக்கிழமையானாலும் கடையில் சாப்பிடும்போது அசைவம் சாப்பிடுவது இந்த நூற்றாண்டில் அப்டேற்றட் இந்துசமயத்திலே அனுமதிக்கப்படுவதால், சைவக்கடைகளின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அசைவ உணவுகள் – பெரும்பாலும் மாடு தவிர்ந்த அசைவ உணவுகளே, இன்னும் முக்கியமாக கொத்துரொட்டியே கடைகளிலே மக்கள் விரும்பும் முக்கிய சாப்பாடு. அடுத்ததுதான் சோறு.
கொத்து ரொட்டி


மெனு
யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கடைகளின் மெனு ஒன்றுதான். காலையில் இடியப்பம், பிட்டு.. மதியம் சோறு, இரவுக்கு தோசை முதலியவை.  எல்லா நேரமும் கிடைக்கும் உணவுகளும் சில உள்ளன. அவற்றில் முக்கியமானது ரொட்டி. அதுவும் காலை பதினோரு மணிமுதல் இரவு கடை மூடும்வரை கிடைக்கும் கொத்துரொட்டி பிரபலமானது. முட்டை, ஆடு, கோழி, கணவாய், மரக்கறி... இப்படி எதையாவது போட்டு கொத்தும் கொத்துரொட்டி சாப்பிடாதவர்கள் பல்லு முளைக்காக்த பாலகர்கள் மட்டுமே. கொத்துபரோட்டா என்கிற பெயரில் இது இந்தியாவிலேயும் வழக்கத்தில் இருந்தாலும், இலங்கைக்கேயுரிய கொத்தானது மட்டக்களப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதாக எண்ண இடமுண்டு.

அடுத்த பிரபலம் மிதிவெடி. ரோலின் பெரிய வேர்ஷனுக்கு மிதிவெடி என்று பெயர் வைத்த மனிதனை தேடித் திரிகிறேன். இதுபற்றி யாராவது சாப்பாட்டு ராமன்கள் ஆராய்ச்சி செய்யலாம். பகல் வேளையில் ஒரு சொடாவோடோ, டீயோடோ கடிக்க மிகப் பொருத்தமான உணவாக எதிர்ப்பின்றித் தெரிவானது மிதிவெடி. ரோல், பற்றிஸ் எல்லாம் வழக்கொழிந்து, வெறும் ஐஸ்கிரீம் கடைகளில் மட்டுமே பரிமாறப்படுகின்றன. உண்மையில் மிதிவெடி என்பது அதற்கு முதல்நாள் மிஞ்சிப்போன சகல கறிகளையும் ஒரு சட்டி அவித்த உருளைக்கிழங்கையும் குழைத்து ரொட்டியால் சுற்றப்படும் ஏமாற்றுவேலை என்று தெரிந்துகொண்டு சாப்பிட்டாலும் அது ருசிப்பதுதான் அதன் வெற்றியின் ஆதாரம். மிதிவேடியையும் தாண்டி முக்காலத்துக்கும் பிரபலம் குறையாத தமிழர் சிற்றுணவென்றால் அது வடைதான்.

யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக்கடைகளில் வெள்ளிக்கிழமைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பூரி, மசால் தோசை போன்ற ஆடம்பர உணவுகள் செய்யப்படுவது வெள்ளி இரவில்தான். அசைவம் வியாபாரமாகாமல் அன்று மட்டும் சரியும் விற்பனையை தூக்கி செங்குத்தாக நிமிர்த்த இந்த ஐடியாவை கண்டுபிடித்தவன்தான் உலகத்தில் ஐடியா மணி என காலப்போக்கில் அன்போடு அழைக்கப்பட்டான்.


இன்னும் ஆராய்வோம், அடுத்த பதிவிலே....





பின்குறிப்பு :
இந்த ஆராய்ச்சியில் எனக்கு உதவியசாப்பாட்டு விஷயத்தில் பழம் தின்று கொட்டை போட்ட.. அல்லது கொட்டையையும் சேர்த்துத் தின்ற சுபராமுக்கு எனது நன்றி. (மேலதிக தகவல் வேண்டுமா? கிளிக்கவும். )

யாழ்ப்பாண சாப்பாடு : பசி மயக்கத்திலே ஒரு அலைச்சல்..

$
0
0
(நாக்கில் எச்சில் ஒழுக..)கடல்மட்டத்துக்கு கீழே வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்தவற்றின் கறிகள்.


இந்தப் பதிவுடைய முன்னைய பதிவு இங்கே உள்ளது.அதற்கு இத்தனை ஆதரவு வரும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தமிழனின் உணவு சார்ந்த பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றி விட்டோம் நாங்கள். உண்மையில் இந்தப் பதிவுகள் எங்களது கடந்த பலகால யாழ்ப்பாண சாப்பாட்டுக்கடை அனுபவங்களைப் பற்றிய ஒரு பகிர்வு. (அதுவும் முக்கியமாக சென்ற வருட நடுப்பகுதியில் எமது வலைத்தளப் பதிவர்கள் நால்வர் யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்லும், அங்கெல்லாமுள்ள உணவுக் கடைகளில் சாப்பிடும் அனுபவத்தை பெற்றதால்.) எமக்கு தகுதியும், காலமும் வாய்த்தால், யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கங்கள் பற்றிய விரிவான பதிவை எழுதுகிறோம்.  இப்போதைக்கு – முப்பது ஊர்களில் மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டவர்கள் என்கிற தகுதியில் எழுதப்பட்ட -  முன்னைய பதிவின் தொடர்ச்சி...


யாழ் நகரத்திலே சாப்பாட்டுக் கடைகள் மூன்று பெரிய பிரிவுகளாக இருக்கின்றன. நகரின் புறப் பகுதியிலே பிரபலமாக இருக்கும் அசைவக் கடைகள், (பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்துக்கும், படிக்கும் வர்க்கத்துக்கும் மத்தியான, இரவு உணவுகளையும், பார்ட்டிகளையும் அனுசரணை செய்பவை.) நகரின் நடுப்பகுதியிலே இருக்கும் மென் உணவுக் கடைகள் (டவுனுக்கு (யாழ் நகரத்துக்கு) வரும் மத்தியதர குடும்பங்களும், பெண்களும் பசியாறும் கடைகள். படிக்கும் பெண்வர்க்கத்தின் பார்ட்டிகளும் இங்கேதான்.) அடுத்தது வணிகரீதியிலே பிரபலமாகிவிட்ட அதி நவீனக் கடைகள். (சாப்பிடப் போவோம் என்றில்லாமல்,கடையின் பெயரைச் சொல்லி, ***க்குப் போவோம் என அழைக்கப்படும் மக்கள் அபிமானம் பெற்றவை. பெரும்பாலான ஐஸ்கிரீம் கடைகளும் சிறுபாலான உணவுக் கடைகளும் இதிலே அடக்கம்.) இவைதவிர கடந்த ஒருவருட காலத்திலேயே முளைத்த நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களும் நகரத்திலே உள்ளன என்கிறபோதும், அவை மக்களின் அபிமானத்தைப் பெறாமல்,வெறுமனே குடாநாட்டுக்கு வெளியில் இருந்து வருபவர்களின் பசியையும் பேர்ஸ் பணத்தையும்  மட்டுமே போக்கிவருகின்றன. யாழ்ப்பாணத்தவர்களின் சாப்பாட்டுக்கடைகள் மேலான அன்னியோன்னியத்தை அவை சம்பாதிக்கவில்லை.
மக்களின் ஆதரவை பெற்ற கடை ஒன்று..

 மற்றபடி குடாநாட்டின் முக்கியமான குறைபாடு உரிய இடங்களில் எல்லாம் சாப்பாட்டுக் கடைகள் போதியளவு இல்லை என்பதே. முக்கிய நகரங்களில் ஒன்றான – குடாநாட்டின் மையமான - சுன்னாகத்திலே ஒரு ஆமான சாப்பாட்டுக் கடை இல்லை. (அண்மையில் முளைத்த ஓரிரு கடைகளும் எல்லா சமூகத்தையும் கவரும் தகுதி அற்றவை.) இதேபோல அளவெட்டி, குப்பிளான், ஊர்காவற்றுறை, உடுவில், பருத்தித்துறை.. என்று மிகப் பெரும்பாலான இடங்களில் ஒன்று, சாப்பாட்டுக் கடையே இல்லை, அல்லது இருக்கும் கடைகளோ,அவற்றின் வசதிகளோ போதாது. (கட்டுரைக்காக எதோ வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதுகிறேன் என கடுப்பாகாதீர். மேற்கூறிய இடங்களிலெல்லாம் மத்தியான வேளையில் அகப்பட்டு,பசியில் நாக்கு தள்ள, கண்கள் பஞ்சடைத்து ஒரு குத்து மதிப்பாக அகப்பட்ட பெட்டிக்கடை அரைறாத்தல் பானை ஆறாக்கி சாப்பிட்டது எனக்குத்தான் தெரியும்.)

இதேபோல, எனது அனுபவத்தில் வாய்க்கோ, மனதுக்கோ நிறைவைத் தந்த கடைகளும் இருக்கின்றன. முக்கியமாக வல்வெட்டித்துறையின் ஒரு கொத்து ரொட்டிக் கடை. கொஞ்சமாக சாப்பிடலாம் என்று நான், சைவம் சாப்பிடும் யோசனையுடன் இரண்டு நண்பர்கள், வெறும் மைலோ பால் குடிக்கும் முடிவுடன் ஒருவர். இப்படி நாலு பேர் போனோம். ஒரு ஆண்டி (அன்ரிதான்.) வந்தார். எதார்த்தமாக பதார்த்தங்களை ஓடர் பண்ணினோம். கோழிக் கொத்து ஓடர் பண்ணிய எனக்கு முன்னால் ஒரு அண்டாவை கொண்டுவந்து வைத்தார் அந்த அம்மணி.


நாங்கள் நாலு பெரும் தனித்தனியாத்தான் சாப்பிடப்போறம், பிரிச்சுக் கொண்டாங்கோ.
தம்பி, உம்மடை கோழிக் கொத்துத்தான் இது. அவையளிண்ட சைவக் கொத்து பின்னால வருகுது.
பார்த்தேன். ஒரு குவியல் கொத்துக்கு மேலே ஒரு ஆட்டுத் தொடை. மறுபடி கூப்பிட்டேன்.
ஆட்டுத் துடை வேணாம், கோழித் துடை இல்லையா?
இது கோழித் துடைதான் தம்பி...கோழிகளுக்கு ரம்பா படங்கள் போட்டுக் காட்டுவார்கள் போல. ஆறு தடியர்கள் சாப்பிடப் போதுமான சாப்பாடு. ருசியோ, ஏக ருசி. அதன் வாசனையிலேயே சைவ உணவு வைராக்க்யத்தை துறந்து தற்காலிக நாத்திகர்களானார்கள் அடுத்த இருவர். பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பால்பக்கட் குடிக்கவந்த கடைசி விக்கட்டும் கோழி வாசனையில் விழுந்தது. எங்கள் நான்கு பேருடைய வாழ்க்கையிலே இதுவரை சாப்பிட்டிராத அளவு, ருசி,சூட்டுடன் அதனை ஒரு கை பார்த்தோம். ஆண்டி வேறு அன்பாகக் கதைத்ததுவும்,வழக்கமான கோழிக்கொத்து விலைதான் என்பதுவும், கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்தன.


இதேபோல ஆனைக்கோட்டையில் ஒரு சின்னக் கடையும் எங்கள் நாக்கை கட்டிப்போட்டது. நாலடிக்கு நாலடி கடை, உபசரிப்பு சரியில்லை, சம்பல் தரமாட்டார்கள், தேநீரில் தேயிலைக்குப் பதிலாக காய்ந்த சருகைப் போடுவார்கள் என்பது உள்ளிட்ட ஆயிரத்தெட்டு குறைகளைத் தாண்டி எங்களை சுண்டி இழுத்தது அந்தக் கடை வடையின் சுவை. பக்கத்துக் கோயில் தேர் ஆர்ப்பாட்டத்திலும் கூலாக, சூடாக வடை சாப்பிட்டது, அந்த காதலி வீட்டை எட்டிப் பார்க்க காதலன் போவதுபோல், கோப்பாய் போகவேண்டி வந்தாலும் மானிப்பாய் வழி போனது எல்லாமே அந்த வடையின் சுவைக்காகத்தான்.

எல்லாவற்றையும் விட அதிகமாக எனது இதயத்துக்கு நெருக்கமானது ஒரு புங்குடுதீவு எளிய கடை. மதிய நேரத்தில் எதோ இந்துக்களின் விரதகாலத்தில் போனோம். வழக்கம்போல எங்களில் இரண்டு உருப்படி சைவம். முக்காலத்துக்கும் மீன்சாப்பிட்டே உடல்வளர்த்த நான் மீன் சாப்பாடு சொல்ல, அவர்கள் சைவச் சாப்பாடு சொன்னார்கள். உள்கட்டுக்குள் இருந்து வந்த ஆயா, “அந்தத் தம்பியளை உள்ளுக்கு கூப்பிட்டு குடு..என்று எங்களுக்கு பரிமாறிய அன்ரியிடம் (இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வருவது இயற்கை.. என்ன இவன்கள்.. எபோதும் அன்ரி உள்ள கடைகளுக்கே போகிறான்கள்.. என்று. என்ன செய்வது.. என்னுடன் வந்த இரண்டு மனிதர்களும் அன்ரி அன்றி வாழ அறியாதவர்கள். அன்ரிஹீரோக்கள்.) என்னத்துக்கு அப்படி?என்று கேட்டதற்கு, “அவையள் விரதச் சாப்பாடு சாப்பிடுகினம் போல, முன்னுக்கு மீன் இருக்கேக்க சாப்பிடுறது ஒருமாதிரி இருக்கும் தானே...என்று அக்கறைப்பட்டார். போதாததற்கு வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போல, இன்னும் போடுங்கோ.. என்று அள்ளி அள்ளி நிரப்பினார்கள் கோப்பையை. கருவாட்டில் உப்பும், சாப்பாட்டில் அன்பும் மிகுந்திருந்தன. மறக்க முடியாத வியாபார விருந்து அது.

ஆனால் அப்படியான மறக்க முடியாத அனுபவங்கள் எல்லாக் கடைகளிலும், எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பதில்லை. பெரும்பாலான சாப்பாட்டுக் கடைகள் வாடிக்கையாளர்களின் மனத்தையோ, வயிற்றையோ நிறைக்காதவை. கவனிப்பு, வியாபாரம் கடந்த அன்னியோன்னியம், நேர்மை, வியாபார ஒழுக்கம் இல்லாதவை. யாழ்ப்பாண சாப்பாட்டுக் கடைகளின் குறைபாடுகள் ஆயிரம். பிரபஞ்சத்தின் அனைத்து சாப்பாட்டுக் கடைகளுக்கும் பொதுவான குறைபாடுகள்தான் என்றாலும், குறைபாடு, குறைபாடுதானே.

முதலாவது, கவனிப்பு சரியில்லை. வாடிக்கையாளருக்குரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. அது என்ன நாகரிகமோ தெரியவில்லை, போய் இருந்து பத்து நிமிடம் கழித்து ஆள் வரும், ஓடர் கொடுத்தால் அரை மணிநேரம் கழித்து வரும், தண்ணீர், சோடா எல்லாம் கூப்பாடு போட்டு வாங்கவேண்டும்.. இது வியாபாரத்தை பாதிக்கும் வேளை அல்லவா?முதலாளிக்கு நட்டம் கொடுக்கும் செயற்பாடு அல்லவா? இந்த முகம் சுளிக்கும் வழக்கத்தால் யாழ்ப்பாணத்தில் டிப்ஸ் என்கிற கலாசாரமே இல்லாமல் இருக்கிறது.  ஓரிரு சராசரி சாப்பாட்டுக்கடைகள் தவிர, எந்தக் கடைகளிலுமே இந்த நாகரிகம் இல்லை. ஒரு கடையின் சாப்பாடு முன்னே பின்னே இருந்தாலும்,உபசரிப்பு நன்றாக இருந்தால் சனம் மீண்டும் மீண்டும் படையெடுக்கும் என்கிற அடிப்படை வியாபார உத்தி இல்லையா உங்களுக்கு? அதுவும் எங்காவது இருந்து வானிலோ, காரிலோ டை கட்டிய கூட்டமோ, தென்னிலங்கை கூட்டமோ, இறங்கிவிட்டால், போச்சு. அப்புறம் எங்களுக்கும் வெள்ளிக்கிழமை பிச்சைக்காரனுக்கும் வித்தியாசமில்லை. அம்மா.. தாயே.. தான். விருந்தோம்பல் என்று சமாளிக்காதீர்கள். ஒருவிருந்தை ஓம்பி, மறுவிருந்தை மதிக்காமல் விடுவதா?
காய்ந்த ரொட்டி...

சுத்தம். அது துண்டாக இல்லை. எந் ஒரு சாப்பாட்டுக் கடையினதும்  சமையல் கட்டை பார்க்கவே முடியாது என்பது வேறுகதை. பெரும்பாலான கடைகளில் சிற்றுண்டிகள் வைக்கும் அலமாரிகளே குப்பைக் கூடைதான். மாநகர சபையின் விதிமுறைகளையும் வாடிக்கையாளர் கேட்கும் பண்டங்களை மட்டுமே வழங்க வேண்டும், சுத்தமான நீர், கைகழுவும் வசதி, செய்தித்தாளை உணவு சுற்ற பாவிக்கக் கூடாது.. பின்பற்றுவதில்லை. காசை கீசை கொடுத்து ஏ, பி, சி.. என சான்றிதழ்களை மட்டும் வாங்கி மாட்டிவிடுவார்கள். (இப்போது அந்தத் தரச் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று முறைப்பாடு எழுப்பப் பட்டுள்ளது.) பரிமாறுபவர்களும் சுத்தமாக இருக்கமாட்டார்கள். அவர்களை விடுங்கள். சமைக்கும் பகுதியிலிருந்து ஒரு ஊழியர் மட்டும் வெளியே வந்தார் என்று வையுங்கள்.. அன்னிக்கு டீ குடிச்சாமாதிரிதாண்டா! அத்தனை அசிங்கம். கராச்சில் வேளை செய்பவர் போல இருப்பார்.

அடுத்தது பண விஷயம். மீதிக்காசை தருவதற்கு அத்தனை கஷ்டப்படுவார்கள் கவுண்டரில் நிற்பவர்கள். அதுவும் ஐந்து பத்து ரூபாய் என்றால் எங்களை தவிர்த்துவிட்டு அடுத்தவர்களை கவனிக்க திரும்பிவிடுவார்கள். அப்புறம் தலைகவிழ்ந்து திரும்ப வேண்டியதுதான். அப்புறம் சோடா உள்ளிட்ட பொதி செய்யப்பட்ட பொருட்களுக்கு நிறுவனம் அடித்த விலையிலும் கூடுதலாக விலை போட்டு விற்பது. கேட்டால் கூலிங் காசு என்று சொல்லுவது. சோடா 40ரூபாய் என்றால் இவர்கள் 45ரூபாய் விற்பார்கள். டிபிடிப் தொடக்கம் எதற்குமே இவர்கள் நிர்ணயம் செய்த விலைதான்.  ஒருமுறை நயினாதீவில் விழாக்காலத்திலே மினிட் மைட் குடித்துவிட்டு பழக்க தோஷத்திலே உரிய காசை கொடுத்ததற்கு அடிக்கவே வந்துவிட்டார் கடைக்காரர். படகிலே கொண்டுவந்ததற்கு மேலதிகமாக காசை அழவேண்டுமாம்.


அடுத்தது சுவையை கூட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அஜினமோட்டோ போன்ற உடல் நலத்துக்கு ஒவ்வாத பொருட்களை போடுவது, முதல் நாளையின் மீதிகளை கலப்பது உள்ளிட்ட பல கொடுமைகள்... (ஆனால் இவையெல்லாம் பெரும்பாலும் பரபரப்பான வியாபாரம் நடக்கும் கடைகளில்தான். மந்தமான கடைகள் பெரும்பாலும் சரியாகவே நடந்துகொள்கின்றன.)



 என்ன எல்லாம் நடக்கிறது என்று பார்க்க, வாருங்கள், யாழ்ப்பாணத்தின் பிரபல கடையான காதாம்பரிக்கு இரண்டு நண்பர்களுடன் போவோம். (பிரக்கட்டுக்குள் உள்ளவை மைன்ட் வாய்ஸ்கள்.)

வாசலில் நாங்கள் போனதுமே கடையின் பொன்னன் அண்ணை வரவேற்றார். அடேய், எங்கட பொடியள் வாறாங்கள், கவனி...! (அடேய்! பலியாடுகள் வந்திருக்கு, ஒரு ரெண்டாயிரத்துக்கு தலையில கட்டு!)
உள்ளே போய் இருந்தோம். காபன் என்கிற சேவர் பையன் வந்தான். எங்களது வயதின் கால்வாசி வயதுதான் இருந்தபோதும், எங்களை  மதிக்கமாட்டான்.
சொல்லுங்கோ அண்ணைமார், என்ன வேணும்? (நீங்க என்ன கேட்டாலும் உள்ளுக்கு என்ன இருக்கோ, அதத்தான் தருவம்.)
நாங்கள் சீரியஸாக கலந்தாலோசித்துவிட்டு, “முட்டை கொத்து இருக்கா?
காபன்: வெளீல மழைக்குணமா இருக்கு, சோ, முட்டை போடமாட்டம். (எங்களுக்கு தெரியுமடீ, நீ முட்டை கொத்து இல்லை எண்டு சொன்னா கோழிக் கொத்து கேப்பாய் எண்டு!)
நான் : கோழிக் கொத்து இருக்கா?
காபன் : அது ஒரு அரை மணித்தியாலம் செல்லும், அதுவரை என்ன சாப்பிடுறியள்?
என்னுடன் வந்த பஜீந்தன் : அப்போ...(அவன் சொல்லத் தொடங்குமுன்னரே மூன்று கோழிக் கொத்துகளுக்கு காபன் ஓடர் சொல்லிவிடுகிறான்.) கோழிக் கொத்து வேணாம்.
காபன் : ஓடர் சொல்லியாச்சே அண்ணா, இனி மாத்த ஏலாது...
என்னுடன் வந்த சொரித்திகன் (எங்களுக்குள்): டேய், வைகோ வை திருப்பி பொடா சட்டத்தில... (சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கடையில் வேலை செய்யும் பார்த்தி அண்ணை மூன்று பெப்சி போத்தல்களை மேசையில் வைக்கிறார்)
நான் : நாங்கள் சோடா கேக்கவே இல்லையே?
பார்த்தி (சொரித்திகனை காட்டி) : இவர்தான் சோடா கேட்டார்.
சொரித்திகன் : அடப்பாவிகளா! சோடாவுக்கும் பொடாவுக்கும் வித்தியாசம் தெரியாதா?மொட்டைத்தலைக்கும்...(காபன் : மூண்டு முட்டைப் போரியல்..!) முழங்காலுக்கும் (பார்த்தி : ஒரு கோழிக் கால் ரோஸ்ட்!) முடிச்சுப் போடுறீங்களே!
நான் : அடங் கொன்னியா!!!
பார்த்தி அண்ணை : தம்பி, பண்ணிக் கறி சனிக்கிழமைதான் போடுவம், போன சனிக்கிழமை போட்டது இருக்கு, வேணுமா?
மூன்று தட்டுக்களில் நாங்கள் கேட்காத கோழிக் கொத்து, முட்டைப் பொரியல், கோழிக் கால், எல்லாம் வருகிறது. மேசையில் எறியப்பட்ட அவற்றை பொறுக்கி அடுக்கி சாப்பிடத் தொடங்கினோம்.
சொரித்திகன் : என்ன பொன்னண்ணை, கோழி கொஞ்சம் பழசா இருக்கு?
பொன்னன் : என்னடா அப்பிடி சொல்லிட்டாய்? இப்பதாண்டா உரிச்சது.. (ஆனா செத்துத்தான் மூண்டு கிழமை ஆகுது..)
பஜிந்தன் : அடேய் மச்சான் குழம்பை கொண்டா!
நான் : அடேய் காபன், குழம்பை கொண்டா!
சொரித்திகன் : பார்த்தி அண்ணை, குழம்பு!
பஜிந்தன் : குழம்பு!! குழம்பு!! கு..ழ..ம்..பு.... (களைப்பிலே மயங்கிச் சரிகிறான்.)
இப்படி அவரவர் பாணியில் குழம்பை கேட்டுக் கேட்டு சாப்பிட்டு அவரவர் கடைசி சிறங்கை கொத்தை கையில் எடுக்கும்போது குழம்பு வருகிறது.- இல்லை, உருளைக் கிழங்கு குழம்பு இருந்த அண்டாவை கழுவிய தண்ணீர் வருகிறது.
பஜிந்தன் : தண்ணி கொண்டா!
தண்ணீர் வருகிறது.
பஜிந்தன் : பிரிஜ்சுக்குள்ள இருக்கிற போத்தில் தண்ணிய கொண்டாடா!
காபன் : அது வெளிநாட்டுக் காரரோ, சிங்களவரோ வந்தா குடுக்கிறதுக்கு அண்ணை.. (அவங்களுக்கு மினரல் வோட்டர் எண்டு குடுத்து காசு பார்ப்பம்.)
இதற்குள் கடைக்குள் இருந்து சற்று முகத்துராஞ்சிபோலத் தோற்றம் அளிக்கும் கண்ணராவி வேலைகள் செய்யும் ஒரு வலது வந்து தானாகவே மூன்று மிதிவெடிகளை எங்கள் முன் வைக்கிறது.
வலது: வளருற பிள்ளைகள், சாப்பிடுங்கோ..
சொரித்திகன்: இது நாங்கள் வளருறதுக்கா, இல்லை, நீங்கள் வளருறதுக்கா?
விதியை நொந்தபடி மிதிவெடிகளை சாப்பிடத் தொடங்கினோம். திடீரென்று பஜிந்தன் கத்தினான் மச்சான், அண்டைக்கு நாங்கள் இங்க ரொட்டியும் ஆட்டுக் கறியும் சாப்பிடும் பொது கறிக்குள்ள பழைய பேப்பர் ஒண்டு விழுந்துட்டு எண்டு சொல்லி கொஞ்சக் கறிய குப்பைக் கூடைக்குள்ள போட்டியே...
நான் : ஓமடா, அதுக்கு என்ன?
பஜிந்தன் :  அந்தப் பேப்பர் என்ட மிதிவெடிக்குள்ள கிடக்கடா!


விதியை நொந்து எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு பொன்னன் அண்ணை வீற்றிருக்கும் கவுண்டருக்கு வருகிறோம்.
நான் : எவ்வளவு அண்ணை?

பொன்னன் : ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது தம்பி.

சொரித்திகன் : கூட்டிப் பார்த்தா ஆயிரத்து எண்ணூற்று நாப்பதுதானே வருகுது?
பொன்னன் : அப்போ உங்களுக்கு ஆளுக்கு ஒரு கடலை உருண்டை எடுங்கோ...

சொரித்திகன் : சரி, பிடியுங்கோ, (இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கிறான்.)
பொன்னன் : சரி. தம்பி, போய்ட்டு வாங்கோ.
சொறி : மீதி காசு?
பொன் : எங்களுக்குள்ள என்னப்பா? சரி, ஒழிஞ்சு போ, அதுக்குப் பதிலா இந்த குச்சி மிட்டாய பிடி...



இப்படித்தான் போகிறது காதாம்பரி வாழ்க்கை எங்களுக்கு. இது உள்ளிட்ட ஏராளமான யாழ்ப்பாணக் கடைகளினதும், வீடுகளினதும் சாப்பாட்டைப் பற்றியும், பண்டிகைக்கால விசேட உணவு வகைகளைப் பற்றியும், பாரம்பரியமான எங்களது விசேட உணவுகளைப் பற்றியும், பனையை ஆதாரமாகக் கொண்ட யாழ்ப்பாண மண்ணின் தனித்துவ உணவுகளைப் பற்றியும்... விரைவிலே ஆராய்வோம்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-எதிர்ப்பு-சிலம் டோக் மில்லியனர்

$
0
0
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி அடுத்த சீசனுக்கு பிரகாஸ்ராஜ் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான விளம்பரம் இடையிடையில் விஜய் டி.வியில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

படிச்ச படிப்பு என்னைக்குமே காப்பாத்தும்...





முதல் சீசனில் சூர்யா  கலக்கிசென்றிருந்தார். நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் சூரியா கண்கலங்கி  சிலபல வார்த்தைகள் பேசி அனைவருக்கும் நன்றிகூறி விடைபெற்றுசென்றது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அந்த இறுதி எபிசோட்...



ஆரம்பத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி அதிகவரவேற்பைப்பெற்றாலும்.பின்னர் போக போக ஒரே பாணியிலான கேள்விகளால் பலர் சலிப்படைந்தார்கள் சோ..சாதாரணமான மக்கள் நிகழ்ச்சியில் பங்குபற்றுவது இடையில் நின்று கோபினாத்,சிவகார்த்தி,போன்ற விஜய் ஸ்ரார்களும்,ஸ்ருதி கார்த்தி,சிவகுமார்,சுஹாசினி,ஜெயம் ரவி,சத்தியராஜ் போன்றவர்களும் நிகழ்ச்சியில் பங்குபற்றி டி.ஆர்.பியை ஓரளவு தாக்குப்பிடித்தார்கள்.

கோபினாத்,சிவார்த்தி இருவரும்வந்ததுடன் மட்டுமல்லாது தமது சோகவரலாறுகளைச்சொல்லி கண்ணீர்சிந்திச்சென்றார்கள்..

சிவகார்த்தி  கண்ணீர் சிந்தியது...


கோபிநாத்...



நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொடர்பில் மாற்றுப்பார்வைகள் பலவும் பதிவர்களால் முன்வைக்கப்பட்டன.மிமிக்ரி ஆர்டிஸ்டான சீனிப்பிரபு நீங்களும் வெல்லாம் ஒரு கோடி எவ்வாறு மக்களிடம் கொள்ளையடிக்கின்றது என்று தனது ஸ்ரைலில் ஒரு வீடியோவைவெளியிட்டிருந்தார்



இன் நிகழ்ச்சிமீது வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு கோல் வெயிட்டிங்க்,எஸ்.எம்.எஸ் மூலமாக விஜய் டி.வி மக்களிடம் கொள்ளை அடிக்கின்றது என்பதுதான்.திறமைக்கு பரிசுதர விரும்பினால் பிரீகோல் வசதியை செய்திருக்கலாமே என்று பலர் கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள்.

இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அந்த எஸ்.எம்.எஸ் மேட்டர்

//நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் “கொள்ளை லாபம்.’
இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.
இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.
இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.(kalapam)//

திடீர் என்று இன்று விஜய்  டி.வியில் சிலம் டோக் மில்லியனர் பார்க்கமுடிந்தது. இசைக்கு ரகுமானுக்கு ஒஸ்காரை வாங்கிக்கொடுத்த படம்  ஆகையால் பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று எத்தனையோ தடவை யோசித்தும் ஒரு தடவைகூட பார்க்கமுடியாமல் போனது சோகமே விஜயில் வேரு 2,3 தடவைகளுக்குமேல் போட்டுவிட்டார்கள் இன்றுதான் பார்க்கமுடிந்தது.

படம் என்னை வெகுவாகக்கவர்ந்துவிட்டது.

இப்படம் இந்திய எழுத்தாளரான Vikas Swarup இன் கியூ அண்ட் ஏ நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது.
Vikas Swarup

சேரிப்புறத்து சிறுவர்களில் ஆரம்பிக்கின்றது கதை...

அமிதாப்பச்சனைப்பார்ப்பதற்காக மலக்குழிக்குள் விழுந்து எழுந்து சென்று அவரின் ஓட்டோக்கிராப் வாங்க முயலும் சிறுவன் ஆனால் அவர் ஓட்டோக்கிராபை வைத்து அனுப்புகின்றார்.
கலவரத்தில் இறக்கும் தாய்..
நெக்கட்டிவ் காரக்ரரான அண்ணன் சலீம்..
சிறியவயதில் ஒட்டி அவர்களுடனேயே வளர்ந்த காதல்..
பம்பாய் கலவரத்தில் இறக்கும் ஜமாலின் தாய்..
அதிலும் முக்கியமாக ஒரு சீன் வரும் ஜமாலும் அவனின் அண்ணனும் தப்பி ஓடிக்கொண்டிருக்கும்போது இடையே ஒரு சிறுவன் ராமன் வேடத்தில்  வந்து நிற்பான்(அவனும் ஓடிக்கொண்டிருந்தவன்தான்)5 செக்கண்ட் உறைந்துபோய்ப்பார்த்துவிட்டு ஜமாலும் அண்ணனும் மீண்டும் ஓடுவார்கள்  கருத்துள்ள அசத்தலான சீன் அது அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஸ்.



இதற்கும்  வழக்கம்போல் எதிர்ப்புக்களை கிளப்பிவிட்டார்கள் மதவாதிகள் இதில் ராமர் இடதுகையை தூக்கிக்காட்டுகிறார் உண்மையில் ராமர் வழமையாக வலதுகையைத்தான் காட்டுவார்.சோ பிரச்சனையை ஆரம்பித்தார்கள்.பாவம் இயக்குனர் கூறவந்தவிடயம் முழுமையாக விளிங்கியிருந்தால் கலவரம்தான்.

(mpact of denigration and the need to combat denigration
A. Denigration can shatter faith of individuals and set unwanted examples for future generations.
B. Create a doubt about the credibility of the Divine and / or its symbol. Finally, it can even cause exclusion of religious practices, and facilitate destruction of religion.
One can understand denigration of individuals; it can show an individual in a light, which tarnishes his reputation. Commenting on a Politician’s / public figure’s misdeeds or sketching their cartoons, are two such examples.
At the level of individuals, such caricatures, cartoons, creations or lampooning are the lightest forms of denigration – and subject to differences in personal opinions.
Whereas denigrating the Divine, questions the very relationship humans have with the Divine. It questions the faith of a human in Divinity and Its powers. It erodes values – moral, social and spiritual.
Thus, the urgent need to strongly oppose and stop denigration through any medium, of Deities and Divine symbols.)
இதுவரை பல படங்களில் தாஜ்மஹால் என்பது காதலின் சின்னமாக மிக அழகான வியூவில் மட்டுமே காட்டப்பட்டது.ஆனால் இந்தப்படத்தில் தாஜ்மகாலை காட்டும்போது அதற்குமுன்னே கூவம்போன்ற ஒரு கழிவுச்சாக்கடையைத்தாண்டித்தான் தாஜ்மஹாலைப்பார்க்கமுடிந்தது. வருடம் முழுவதும் அங்கே வெளி நாட்டுப்பயணிகள் வந்து குவிவார்கள் இந்தியாவின்  பெருமைகூறும் முக்கியமான அடையாளங்களில்  ஒன்று ஆனால் அதன் அருகிலேயே அந்த சேரிவாழ்க்கை.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சேரிச்சிறுவனான ஜமால் மாலிக் கலந்துகொள்கின்றான்.நிகழ்ச்சி நடத்துபவரான அனில்கபூர் ஜமால் டீ ஊற்றிக்கொடுக்கும் அஸிஸ்ரென்ற்,சேரி சிறுவன் என்பதற்காக பல இடங்களில்  வெளிப்படையாக ஜமாலை வாரிவிடுகின்றார்.அதிலும் ஒரு கேள்விக்கான பதிலை அனில்கபூர்  ரொய்லெட்டுக்குள்வைத்து  ஜமாலிடம் கூறிவிடுகின்றார்.திக் திக் என்று ஆகிவிட்டது அந்தக்காட்சி.

பல இடங்களில் சலீமின் வில்லத்தனம் கோபத்தை ஏற்படுத்தியது.இறுதியில் சலீம் நம்மைவிட்டு விலகும் காட்சியிலும் தனது காரக்ரரை செம்மையாக பதித்துவிட்டே செல்கின்றார்.

நிகழ்ச்சியின் இறுதிப்பகுதிக்குமுன்னர் வெளியில் வந்த ஜமாலை பொலீஸ் பிடித்துசென்று போடு போடென்று போடுகின்றது.சேரிப்புறத்து சிறுவன் நீ எப்படி இவளவு பணத்தை ஜெயித்தாய்?ஏதாவது மைக்குரோ சிப் வைத்திருக்கின்றாயா? என்று பல கேள்விகளுடன் வெளுத்துவாங்குகின்றார்கள். அப்படியே அங்கிருந்து இடையிடையே பிளாஸ்பக் சொல்லும் விதம் அருமை.

பல கேள்விகளுக்கு ஜமாலுக்கு பதில் தெரிந்திருந்தது என்பதை விட..ஜமாலுக்கு சந்தர்ப்பவசத்தால் தெரிந்த பதில்களையே துரதிஸ்ரவசமாக அனில்கபூர் கேட்டார் என்றும் கூறலாம்...அதை அதிஸ்ரம் என்று சந்தோஸப்பட்டுக்கொண்டாலும் ஓகேதான்.

படத்தில் பல இடங்களில் இரசிக்கக்கூடிய பல கட்டங்கள் திருப்பங்கள் நிறையவே இருக்கின்றன.இப்படியான ஒரு படத்தை இவளவுகாலம் தாழ்த்திப்பார்த்தது கவலைதான்.ஒருவேளை இதுவரை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்காத என்னைப்போன்ற துரதிஸ்ரசாலிகள் இருந்தால் பார்த்துவிடுங்கள்..

ஒரு சேரியில் வாழும் சிறுவன் கோடீஸ்வரன் ஆகினால் என்ற கற்பனைக்கதை இது ஆனால் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

//மிகவும் ஏழ்மையான நிலையில் சேரி வாழ்க்கை வாழ்ந்து வந்த சுஷில் குமாருக்கு அவரது வீட்டில் சொந்தமாகத் தொலைக்காட்சிப் பெட்டி கூட இல்லையாம். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஒளிபரப்பாளர் அமிதாப் பச்சன், சுஷில் குமாரை வெற்றியாளராக அறிவித்தார்., அவரையும், அவரது மனைவியையும் அழைத்து, ரூ 50 மில்லியன் (ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்) பரிசுத்தொகையை நேரடியாக வழங்கி அவர்களைப் பரவசப்படுத்தினார். நீங்கள் புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களது அர்ப்பணிப்பும், ஆர்வமும், இதுவரை உங்களை இந்நிகழ்ச்சியில் கொண்டு வந்துள்ளது என அமிதாப் பச்சன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் குமார் பங்குபெற்ற முன்னர், அவரது மாதச் சம்பளம் டாலர் மதிப்பில் 120 அமெரிக்க டாலர்களே! பீஹார் மாநிலத்தின் மொதிஹாரியில் சின்னதாக ஒரு தனியார் வகுப்பு நடத்தி வருவதால் கொஞ்சம் மேலதிக வருமானம் வந்துள்ளது. மற்றும் படி அரசு உத்தியோகம் தான்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கு பற்றுவதைக்கூட அவரது குடும்பத்தினர் பக்கத்துவீட்டு டீவியில் தான் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்களில் அவர் சரியான பதில்களை டிக் செய்யச் செய்ய அவரைக் கிடைத்த பணத்துடன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேரிவிடுமாறு நெருங்கியவர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்தப் பணத்தை வைத்து என்னென்ன செய்வதற்கு அவர் திட்டமிட்டிருக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்ட போது, இந்திய சிவில் சேர்விஸ் பரீட்சை எழுத வேண்டும். அதற்கான பயிற்சிகளுக்காக சில பணம் செலவிடுவேன். இப்பரீட்சை மூலம், மிக பாதுகாப்பானதும், பெறுமதியானதுமான நிரந்தர தொழிலொன்று எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.

மனைவிக்காகப் புதிய வீடு ஒன்று வாங்குவேன். பெற்றோருக்குத் தேவையான பணம் வழங்குவேன். சகோதரர் சிறிய வர்த்தகமொன்றை தொடங்கிட மூலதனமாகக் கொஞ்சம் பணம் வழங்குவேன் என தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக பேசத்தொடங்கிய குமார், தனது சொந்த ஊரான மோதிஹாரியில், ஒரு நூலகம் கட்டப்போவதாகவும் இதன் மூலம் அந்த ஊரில் உள்ள சிறார்கள் தங்கள் கல்வி அறிவைப் பெருக்கி கொள்ளலாம் எனவும் இறுதியாக தெரிவித்தார்//

குவித்த விருதுகள்...


அகாதமி விருது - 2009
சிறந்த படம்
சிறந்த இயக்குனர் – டானி பொயில்
சிறந்த இசையமைப்பு – ஏ. ஆர். ரகுமான்
சிறந்த மூலப் பாடல் – "ஜெய் ஹோ", (ஏ. ஆர். ரகுமான் (இசை) & குல்சார் (பாடல்)
சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை– சைமன் பியூஃபோய்
சிறந்த ஒளிப்பதிவு – ஆந்தனி டொட் மாண்டில்
சிறந்த படத்தொகுப்பு – கிறிஸ் டிக்கன்ஸ்
சிறந்த ஒலிக்கலப்பு – ரெசுல் பூக்குட்டி, ரிச்சார்ட் பிரைக், இயன் டாப்
பரிந்துரைப்பு: சிறந்த ஒலித்தொகுப்பு – டொம் சயேர்ஸ்
பரிந்துரைப்பு: சிறந்த மூலப் பாடல் – "ஓ..சாயா", ஏ. ஆர். ரகுமான், எம். ஐ. ஏ (பாடல்)
[தொகு]கோல்டன் குளோப் விருது - 2009
சிறந்த திரைப்படம்
சிறந்த தயாரிப்பாளர் (டானி பொயில்)
சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்)
சிறந்த இசையமைப்பாளர் (ஏ. ஆர். ரகுமான்)

ரகுமானின் ஒஸ்கார் புயலில் நான் கவனிக்காதுவிட்ட ஒரு விடயமும் இருக்கின்றது..இப்படத்திற்கு மும்பாய் சேரிகளில் வாழும் மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள்...இப்படம் எங்களை அவமானப்படுத்திவிட்டதாக எதிர்ப்பிக்கோஸங்களை எழுப்பியிருக்கின்றார்கள்.

("They have made a mockery of us, they have hurt our sentiments," said N.R. Paul, a protest leader and resident in Dharavi, Asia's largest slum.

The protesters, who were forced by policemen to assemble a few hundred meters from Dharavi, shouted "Down, down Danny Boyle" and "Down, down Censor Board."

"Slum dwellers are human beings, not dogs," said one poster.

Protesters also slapped pictures of Boyle and the film's actors with slippers, saying their depiction of poverty was demeaning to millions.

"They should change at least the title. Why did our Censor Board allow such a title in India? It is very sad," said Kallubhai Qureshi, a resident in Dharavi.

Nicholas Almeida, a social activist and slum dweller who has filed a complaint in a local court against the title, said the filmmakers also had a responsibility toward the slums in which they shot the movie.

"It is making so many millions of dollars, why can't they spend some money here to improve our lives?" said Almeida.)
இந்தியாவின் இந்த அவலத்தை விற்றா ஒஸ்கார் வாங்கவேண்டுமென்ற கேள்விகள்  ஒரு வகையில் நியாயமானதுதான்..சிலம் டோக்... நாங்கள் நாய்களல்ல இந்தியாவின் எதிர்காலம்.




இது கூட ஒரு பேசும் புகைப்படம்தான்..


சில கார்ட்டூன்கள்..




நீங்களும் வெல்லாம் ஒரு கோடியின் அடுத்த சீசனுக்கு விஜய் டி.வியின் புத்திசாலித்தனமான விளம்பரம்தான் இன்றைய சிலம் டோக் மில்லியனர்...




ஆர்மி ரெயினிங்க் அனுபவம்

$
0
0
காம்ப் வாசல்

உள்ளே இருந்து வெளியே
உண்மையில் அதன் பெயர் தலைமைத்துவப்பயிற்சி பல்கலைக்கழகத்திற்குள் உள்ளீர்க்கப்படும்மாணவர்களுக்கு தலைமைத்துவத்தையும் நேரிய சிந்தனையையும் மேம்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டபயிற்சி.இதற்கு  நம்மவர்மத்தியில் பலத்தஎதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதை நிறுத்தாமாறு 2011 இல் கோரியது பயிற்சிக்கு சென்றமாணாவி இறந்தமையே முக்கியகாரணம்.அது தொடர்பான செய்தி(குறித்த இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாணவி மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மாணவி உயிர் இழந்து உள்ளார். உயிரிழந்தவர் நிசாந்தி மதுஷானி ( வயது – 24 ) என்பவராவார். ஒவ்வாத பயிற்சியும், மாசு நிறைந்த சூழலில் தங்கி இருந்து அசுத்தக்காற்றினை சுவாசித்ததன் காரணமாக சுவாசப் பையினுள் கிருமிகள் புகுந்ததனாலேயே இவ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. )

எதிர்ப்புக்கள் அரசாங்கத்தின் மீதுகேஸ்கள் என எதுபோடப்பட்டாலும் அசராமல் பயிற்சி நடந்துவருகின்றது.எனக்கும் எனது நண்பர்களுக்கும் தலைமைத்துவப்பயிற்சிக்காக லெட்டர் வீடுதேடிவந்தது.ஊரிலோ வீட்டிலோ அல்லது வேறு எங்கும் தலைமைத்துவப்பயிற்சிக்காக லெட்டர் வந்திட்டுதா என்று யாருமே வாய்தவறிக்கூட கேட்டுவிடமாட்டார்கள்.சகலரும் கேட்பது"ஆர்மி ரெயிங்கிற்கு வந்திட்டுதா?" என்றுதான்.ஆரம்பத்தில் ரெயினிங்கைப்பற்றி எதுவுமே தெரியாதாகையால் ஆர்மி ரெயினிங்க் என்றதும் ஏ.கே 47 ஐ கையில் தருவார்கள்.டாங்கியில் ஏறியிருந்துகொண்டு அமெரிக்காவில் ஆர்மி ரெயினிங்கைப்பெறும் பாடசாலைமாணவர்கள் போல் டாங்கியில் ஏறியிருந்து பேஸ்புக்கில் ஒரு போட்டோவை போடலாம் என்று சின்னப்பிள்ளைத்தனமான கற்பனை செய்தால் ஏமாற்றம்தான்.ஆகவே சென்றவருடம் சென்றமாணவர்கள் ரெயினிங்கைப்பற்றிகூறியவற்றைகேட்டு நடக்கப்போவதை ஓரளவு புரிந்துகொள்ளவேண்டியதுதான்.ரெயினிங்கிற்கு மாணவன் தெரிவானதும் லெட்டர் வரும்.அதில் என்னென்ன பொருட்கள் கொண்டுவரவேண்டும் என்று ஒரு லிஸ்ட் போடப்பட்டிருக்கும்.
அந்த லிஸ்ட் இதுதான்....

கன்வஸ் ஷூ,2 ஜீன்ஸ்,புல்சிலீப் 2 ,பழைய யட்டியைக்கொண்டு செல்லமுடியாதாகையால் புதிதாக 4,5 வேண்டி செல்லவேண்டும்.எல்லாமாக சேர்த்து செலவு குறைந்தது 15 000 ரூபாவேண்டும்.இவளவும் செலவழித்து சகலவற்றையும் பக்செய்தபின்னர் நண்பர்களுடன் பயணம் ஆரம்பமானது.வேறு வேறு இடங்களில் தலைமைத்துவப்பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.எனக்கும் எனது நண்பர்களுக்கும் ரந்தெனிகலவில்தான் பயிற்சி.வா ஒண்ணாசேர்ந்து நாசமாய் போவம்னு பயணத்தை ஆரம்பிச்சாச்சு.பஸ் யாழ்ப்பாணத்தில இருந்து 6.30 க்கு புறப்பட்டது போய் 10.30 க்கு மதவாச்சிக்கு அருகில் உள்ள இக்கிரிக்கெலாவை என்ற இடத்தில் சாப்பிடுவதற்காகவும் இன்னபிறகருமங்களுக்காகவும் பஸ் நிறுத்தப்பட்டது.பஸ்பிரயாணம் எதிர்பார்ப்பு ஏப்படி இருந்தது ரியாலிட்டி எப்படி இருந்தது என்று அருகில் உள்ளமீம்ஸைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.ஆனால் அங்கிருந்துவரும்போது கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தான் இருந்தது. நேரே ரந்தெனிகலவில்தான் நான் போஸ்ட்டை நிறுத்தியிருக்கவேண்டும் ஆனால் இக்கிரியில் நிறுத்தியதற்குக்காரணம் இருக்கின்றது.பஸ் ஒரு கடையின் முன்னால் நின்றது சாப்பிடலாம் என்று ஒரு ரொட்டியின் விலையைக்கேட்டால் ஒரு ரொட்டி 50 ரூபா.கொய்ய்யாலே யாழ்ப்பாணத்திலே அதுவும் பாதம்பரியிலேயே 25 ரூபாதான்.என்ன செய்வதென்று யோசித்துவிட்டு வெறும் ரீயைமட்டும் குடித்துவிட்டேன்.உண்மையில் வடக்கில் இருந்து தெற்கிற்கு பஸ்ஸில் செல்லும் அனைத்துப்பயணிகளும் இதே பிரச்சனையை எதிர் நோக்குகின்றார்கள். நாம் பதிவு செய்து செல்லும் பஸ் நிறுவனத்துடன் இவ்வாறான கடை உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துவைத்துள்ளார்கள்.அதாவது இடையில் எங்கேயாவது சாப்பாட்டுக்கு,வேறு அவசரத்திற்கு பஸ்ஸை நிறுத்தவேண்டும். எனது கடையில் பஸ்ஸை நிறுத்தினால் இவளவுபணம் தருவேன் என்பதுதான் ஒப்பந்தம்.பஸ்ஸில் செல்லும் பிரயாணிகளுக்கு வேறு சொயிஸ்கிடையாது அதே கடையில் சாப்பிடவேண்டியதுதான்.

கடைக்காரனிற்கும் பிரயாணிகள் அனைவரும் ஒரு நாள் வாடிக்கையாளர் மட்டுமே எனவே உணவின் தரத்தைப்பற்றியோ விலையைப்பற்றியோ அவன் கவலைப்படத்தேவையில்லை.ஒரு சோடாவின் விலை 90 ரூபா.ஆனால் விற்கும் விலை 100 ரூபா ஏன் என்று கேட்டதற்கு கூல்செய்வதற்கு 10 ரூபாவாம்.ஒருவேளை அந்த ஏரியாவிற்கே அவன்தான்  பில் கட்டுகின்றானோ என்று கடுப்பாகின்றது.போத்தலிலே விற்கக்கூடிய அதிகபட்சவிலை 90 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.கூல் பண்ண அவளவு செலவா என்று கேட்க (நக்கலாக) முடிந்தால் கேஸ்போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினான்.ஒரு வேளை சிராணியே போய்ட்டாவாம் இவன்யாரு புடுங்க என்று யோசித்தானோ என்னவோ?பேசாமல் வந்துவிட்டேன்.


பஸ்அண்ணளவாக  காலை 5.30 க்கு ரந்தெனிகல பயிற்சிப்பாசறையை சென்றடைந்தது.போனதும் ஒருவர் வந்து பக்கத்தில் இருக்கும் ரூம்களில் தங்குமாறு கூறினார் காலையில்  அனைவருக்கும் ரீ வரும் என்றும் கூறினார். மதியம்ஆனதும் அனைவரையும் காம்பின் கிரவுண்டிற்கு வரும்படி அழைத்தார்கள் பதிவு செய்வதற்காக.அது ஒரு வழக்கமான போமாக இருக்கவில்லை.ஆக வீட்டில் இருக்கும் நாயைப்பற்றி மட்டும்தான் கேட்கவில்லை ஏனைய அனைத்தையுமே கேட்டிருந்தார்கள்.பெற்றோரின் வேலை,தொலைபேசி,வீட்டின் அருகில் இருக்கும் பொலீஸ்ரேசன்,வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவில் தெரிந்த 2 அரச உத்தியோகத்தர்களின் பெயர்கள் போன் நம்பர்கள் என்று 4 பக்கத்திற்கு கேள்விகள் அடுக்கப்பட்டிருந்தன.ஆண்கள் பெண்கள்(சிங்கள,தமிழ்,முஸ்லீம்) என அண்ணளவாக 800 பேர் வந்திருந்தோம் அனைவருக்கும் இந்த பதிதல் நடந்தது.பதிவு முடிந்ததும் ரக் சூட் 2,2 ரீசேர்ட்களும் தந்தார்கள் இலவசமாகத்தான்.காம்பில் எல்லாமே இலவசம்தான்.அந்த ரீசேர்ட்டில் பியூச்சர் லீடேர்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது.எல்லாம் முடிய.குரூப் குரூப்பாக பிரித்தார்கள்.ஒரு குறூப்பில் கட்டாயம் சிங்கள,தமிழ் மாணவர்கள் இருக்கவேண்டும்,சிங்களம் தனியவோ தமிழ் தனியாகவோ ஒரு குரூப் இருக்கமுடியாது.அப்படியானால் முஸ்லீம்? ஒட்டு மொத்தமாக அனைத்துமுஸ்லீமக்ளையும் தனியான ஒரு பவிலியனில் தங்கவைத்துவிட்டார்கள் இது காம்பில் இருப்போர் அவர்களாக எடுத்த முடிவல்ல.முஸ்லீம் மாணவர்களே தமக்கு தனியாக இடம் வேண்டும் என்று எழுதிக்கொடுத்திருக்கின்றார்கள்.தொழுகை செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக ஒதுக்கப்பட்டதாம்.

எமது குறூப்பில் 4 தமிழ் 5 சிங்களம்,அவர்களை சந்தித்ததும் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் கதைக்க ஆரம்பித்தோம்.ஆங்கிலத்தில் பேசுவதற்கு வாய்ப்புக்கள் கிடைக்காமையால் மிகவும் கஸ்ரப்படவேண்டியாகிவிட்டது அவர்களுக்கும் அதே நிலைதான்.எமக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒரு சிறிய வீடு ஹோலில் 5 டபிள் பெட்கள் ஹோல் சிறிய கோல்தான். நாம்தான் இறுதியாக சென்றவர்கள் என்பதால் இடம் கிடைக்காது போனது.அதோடு அந்த ஹோலில் தங்கினால் மூச்சுவாங்கக்கடினமோ என்றும் தோன்றியது.அந்த வீட்டிற்கு அருகாமையில் அதேபோன்றதொரு சிறிய வீடு(pavillion) பிறீயாகத்தான் இருந்தது.உடனே அங்கே போய் எமது உடமைகளைவைத்துவிட்டோம்.அங்கு யாரும் இல்லை.பின்புதான் சொன்னார்கள் அது அடுத்த குரூப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம் என்று.ஓடிச்சென்று எமது குறூப்பிற்குப்பொறுப்பான கொமாண்டரிடம் நிலமையை சிங்கள மாணவர்களைக்கொண்டு விளக்கி இறுதியில் ரூம் கிடைத்தது.உண்மையில் அந்த வீட்டில் இருக்கவேண்டாம் என வேறுலெப்டினல்கள் கூற மாறி மாறி 2பவிலியனுக்கும் அலையவேண்டியதாக இருந்தது.ஒரு வழியாக ரூம் கிடைத்தது.

அந்த நாள் இரவில் சிங்கள  நண்பர்களுடன் எம்மை அறிமுகப்படுத்துக்கொண்டோம்.முதல் முதலில் பெயரைக்கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளல் கடினமாக இருந்தது.அதைவிட ஒரே பெயரில் எமது pavillionனிலேயே 3 நண்பர்கள் இருந்தார்கள்.அடுத்த நாள் காலையில் பொதுக்கூட்டமொன்றில் இனிதொடர்ந்துவரும் நாட்களில் நாம் நேரகிரமத்தின்படி என்னென்ன செய்யவேண்டும் என்றுகூறினார்கள்.பெயரைப்பதிவு செய்யும்போது ஒரு புத்தகம்தந்தார்கள் அதில் நேர அட்டவணை தரப்பட்டிருந்தது.

அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கவேண்டும்(எதுக்கு நாம மூச்சா போகவா?) இதுவரை அதிகாலை 4 மணியை கடிகாரத்தில்காணாத என்னைப்போன்ற ஜீவன்களுக்கு விழுந்த முதலாவது பேரிடி அதுதான்.அடுத்து 5 மணிக்குள் முகச்சவரம் எல்லாம் செய்து காலை 6 மணிக்கு மைதானத்தில் அனைவரும் சமூகம்தரவேண்டும்"சிறீலங்கா மாதா அபி சிறீலங்கா நமோ நமோ நமோ மாதா" தேசியகீதம் பாடுவதற்கு.சரின்னு அடுத்த நாள் காலை 4 மணிக்கு எழுந்தோம்.குளிர்வேற ஜில்லின்னு இருந்திச்சு அதோட குளிக்கவேண்டியதாயிற்று.நாம் குளித்தோம் ஆனால் சிங்கள நண்பர்கள் குளிக்கவே இல்லை.என்னடா கொடுமைன்னு பார்த்தா அவர்கள் இரவில்தான் குளிப்பார்களாம் ஓகோ..காலில் ஸூ அவர்கள் தந்த ரக்சூட்,பியூச்சர் லீடேர்ஸ் பொறித்த வெள்ளை ரீசேர்ட்டுடன்
காலை 6 மணிக்கு சிறீலங்காதாயே பாடிவிட்டு எம்மை அப்படியே வீதிக்கு அழைத்துசென்றார்கள்.சுற்றிவர மலைதான்.வீதி ஏறி இறங்கி அதுபாட்டுக்குசென்றுகொண்டிருந்தது.அனைவரும் லைனில் சென்றோம்.சிறிது தூரம் நடத்தி சென்றார்கள் பின்னர்.ஓடுமாறு கூறினார்கள் மலையில் உள்ள வீதியாயிற்றே மூச்சிரைக்க ஓடினோம்.பயிற்சிகள் ஆரம்பம் கையைத்தூக்கிக்கொண்டு ஓடினோம் இடையில் நடந்தோம் துள்ளினோம்.காலையில் பயிற்சிசெய்தல் ஆனந்தம்தான்.ஆனால் ஸூவேறு காலைக்கடித்துக்கொண்டிருந்தது.சகல் குறூப்களிலும் பெண்களும் கூடவே இருப்பார்கள் சோ பெண்களும் சேர்ந்துதன் பயிற்சிகளை செய்துகொண்டிருப்பார்கள்.ஆகவே உற்சாகமாக அனைத்து ஆண்களும் பயிற்சிகளை செய்தோம்(எவளவு நேரம்தான்  நானும் களைக்காதமாதிரியே நடிக்கிறது?).பயிற்சி முடிந்ததும் மெஸ்ஸிற்கு உணவிற்காக செல்லுமாறு கூறினார்கள்.வரும்போது பிளேட் கொண்டுவர சொன்னார்கள் இல்லையா.ஆகவே மெஸ்ஸில் போய் லைனாக ஒரு கையில் கோப்பை மறுகையில் கப்புடன் நின்றோம் சாப்பாட்டிற்காக.எல்லாம் செல்ப்சேர்விஸில்தான் .அதுசரி காலைசாப்பாடு என்னவென்று நினைக்கின்றீர்கள் சோறு.வழக்கமாக மதியம் சோறுசாப்பிடுவதே எனக்கு சற்றுகடினமானவிடயம் அங்கே பலவேளைகளில் 3 வேளையும் சோறுதான் போடுவார்கள்.கறி ஒரு அண்டாவில் கோழிக்குழம்பு அல்லது மீன் குழம்பு வெஜிரேரியனுக்காக தக்காளிசம்பல் செய்துவைத்திருந்தார்கள்.எனக்கு மச்சம் அவளவு பழக்கமில்லை "சைவமும் தமிழும் ஓங்கும்" அதெல்லாம் ஓங்கட்டும் என்று கோழிக்குழம்பை போட்டு சாப்பிட்டுப்பார்த்தேன்...ம்ம்ம்ம் நன்றாகத்தான் இருந்தது.கோழிக்குழம்புடன் உருளைக்கிழங்குபோல் ஒரு கிழங்கில் கறிவைத்திருந்தார்கள்.உணவில் சிங்கள வாடைதான் அடித்தது என்றாலும் அதுவும் ஒரு புதிய அனுபவம்தானே.அதோடு மீன்சம்பல் போன்றதொரு சம்பல் மிகரேஸ்ராக இருந்தது.ஆனால் வெறுப்பேத்திய ஒரு கறியும் இருந்தது.அன்னாசியை வெட்டி உறைப்புக்கறிசெய்திருந்தார்கள் உருளைக்கிழங்கு என்று நம்பி அதைவாய்க்குள்போட்டபோது.வாயினுள் சென்றதும் உறைத்தது கடித்ததும் இனித்தது சத்தியே வந்துவிடும்போல் இருந்தது.சிங்கள நண்பர்களைக்கேட்டதில் அவர்களது சைட்டில் அது பிரபலமான உணவாம்.சாப்பாட்டைப்பொறுத்தவரை 3 வகை கறிகள்.கோழி/மீன் குழம்பு,பயற்றங்காய் கறி,மீன்சம்பல் பலவேளைகளில் சோறு.ஒருசில நாட்களில் காலை உணவாக பாண் தந்தார்கள் அரைறாத்தல்பாண் பாணும் இல்லையானால் கடலை/சுண்டல்.இவ்வாறு தரப்படும் உணவுடன் அப்பிள் அல்லது ஒரு யோகட்டும் தருவார்கள்.ஆரம்பத்தில் வழமையான உணவை விட அவர்களது உணவு வித்தியாசமான ஸ்ரைலாக இருந்ததால் பிடித்துக்கொண்டது போகபோக வெறுத்துவிட்டது மொத்தமாக 14 நாட்கள் அங்கே இருந்தோம்5,6 நாட்களில் வீட்டுச்சாப்பாடு நினைவுக்கு வந்தது.அம்மா சுடும் ஓட்டை இல்லாத உழுந்துவடையை ஆராய்ச்சிசெய்து அம்மாவை அடிக்கடி நகைச்சுவையாக இமிட்டேட் பண்ணும்போது அம்மா சொல்லுவார் வர்ரவளின்ர சமயலை சாப்பிடும்போது தெரியுமென்று ஆனால் அவளவு காலம் இடம்கொடுக்காமல் வெறும் 14 நாட்களில் வீட்டுச்சாப்பாட்டின் அருமை புரிந்துவிட்டது வேறுகதை.4,5 நாட்களின்  பின்னர் காம்பிற்கு வெளியில் 3 கடைகள் இருந்ததை அறிந்துகொண்டோம்.அத்தனையும் சாப்பாட்டுக்கடைதான்.அதில் ஒருகடையை ஒரு இராணுவவீரர் வைத்திருந்தார்.அங்கு ரொட்டி நன்றாக இருந்தது.மில்ரி ரொட்டி இல்லையா காய்ந்துபோய் இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.ஒரே ஒரு நாள் அங்கே சாப்பிடும்போது நாவில் வேலைசெய்யமறந்த அனைத்து நரம்புகளும் வேலைசெய்ய ஆரம்பித்ததை உணரமுடிந்தது.எமது ரூமிற்கு வந்து ரொட்டி என்றால் அதுதான்யா என்று ஓகோ  என்று வாய்தவறிப்புகழ்ந்துகதைத்துவிட்டோம்.இதே போல் வேறு சில நண்பர்களும் அவர்களது ரூம்களில் கதைத்துவிட.மெஸ் சாப்பாட்டின் மீதிருந்த கடுப்பின் காரணமாக அத்தனை பேரும் படைஎடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.வழக்கமாக நாம் செல்லும் ரைமில் சென்று ரொட்டியை கேட்டால் ரொட்டி நா என்று பதில்வந்தது.ரொட்டி நாய் என்றால் சம்பல் பூனையா? இல்லைடா ரொட்டி இல்லையாம்.சோ  ரொட்டிக்கான ஓட்டம் தொடங்கியது.வழக்கமாக லெக்ஸர் 4.30 போல் முடியும் அப்போது விழுந்தடித்து ரொட்டிக்காக ஓடினோம்.முந்திக்கொண்ட குழுவுக்கு ரொட்டிகிடைத்தது.

பெரியஹோல்தான் மெஸ் அங்குபோடப்பட்டிருக்கும் கதிரைகளில் அமர்ந்து எமக்குத்தரப்பட்ட உணவை உண்டுமுடித்தோம்.பின்னர் ஒவ்வொரு குழுவையும் தனித்தனியாக அழைத்துசென்று லெக்ஸர் செய்தார்கள்.ஒவ்வொரு குழுவுக்கும் வேறுவேறு பயிற்சிகள்.ஒரு குழு யோகாசனத்திற்கு சென்றுவிட்டது.ஒரு குழுவுக்கு லெக்ஸர்.முதலில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தினார்கள்.எமது பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் இராணுவ சீருடையிலேயே இருந்தார்கள் ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தாலும் போக போக இராணுவ சீருடை பழகிவிட்டது.மேஜர்.லெப்டினல்,கோப்ரல்கள் எல்லோரும் எம்முடன் பிறண்ட்லியாகவே பழகினார்கள்.அங்கே லெப்டினல்,கோப்ரலாக இருந்த பலருக்கு சிங்களம்மட்டுமே தெரிந்திருந்தது ஆங்கிலமோ தமிழோ தெரியவில்லை ஆகையால் 2 ரான்சிலேட்டர்கள் இருந்தார்கள். சிங்களத்தில் கதைப்பதை தமிழில் ரான்சிலேட்செய்வதற்கு.

இதுவரை ஹோஸ்ரல் லைபை அனுபவித்தது கிடையாது.எனவே ஒரே அறையில் 3 நண்பர்களுடனும் அந்த சிறிய வீட்டில் வேறு சிங்கள நண்பர்களுடன் ஒன்றாக இருந்தமை புதிய அனுபவம்தான்.பயிற்சியின் இறுதியில் மேஜேர்.ஜென்றல் கூறினார் இதுவரை எந்த ஒரு சிறியவிடயத்திற்கும் உங்கள் பெற்றோரை மட்டும் நம்பியிருந்த அவர்களில் மட்டுமே தங்கியிருந்த நீங்கள் இங்குவந்த 14 நாட்களில் உங்களை நீங்களே சகல விடயங்களிலும் பராமரிப்பதற்கு பயிற்றுவித்திருக்கின்றோம்...என்றார்,முற்றிலும் உண்மையான ஒரு விடயம். எம்மோடு வந்த சில அல்லது பல மாணவர்களின் வீட்டில் இந்த பயிற்சிக்கு பங்குபற்றாதவரை அவர்கள் சாப்பிட்டுவிட்டு கோப்பைகளை  கழுவாமல் சிங்கிலே போட்டுவிட்டு வருபவர்களாகவோ...தமது உடைகளை துவைக்கும் பொறுப்பை தாயிடமே விட்டுவிடுபவர்களாகவோ தமது சூக்களை தாமே துடைக்க,சுத்தம் செய்யாதவர்களாகவோ இருந்திருக்ககூடும்.ஆனால் பயிற்சி நிலையத்துக்குள் அந்தக்கதை எல்லாம் எடுபடாது.நீங்கள்தான் பல் விளக்கவேண்டும்.டி.வி பார்த்துக்கொண்டு சாப்பிடமுடியாது சாப்பிட்ட அரைவாசியில் வரும் காதலியின் மிஸ்கோலைக்கண்டு பதறியடித்துக்கொண்டு  சாப்பிட்டகுறையில் விரலைச்சூப்பிக்கொண்டு கோப்பையை போட்டுவிட்டு ஓடமுடியாது காரணம் கவரேஜும் இல்லை.
சோ ஒரு தனி நபராக நீங்கள் செய்யவேண்டிய அனைத்தையுமே நீங்கள்தான் செய்யவேண்டும் எந்த உதவியும் உங்களுக்குக்கிடைக்காது.

எமக்கு சிங்களம் அவளவாகத்தெரியாது.ஆகவே தட்டுத்தடுமாறி தமிழில் கதைக்கும் சிங்கள நண்பன் ஒருவன் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.அவன் பெயர் பிறின்ஸ்.போன 2 ஆவது நாளே சிங்களம் சிறிது சிறிதாக படிக்க ஆரம்பித்தோம் எல்லாம் வாய் வழியாகத்தான்.கூட வந்த வேறொரு நண்பன் நோட்புக்கில் வார்த்தைகளை எழுதிவைத்துகொண்டான்.அதிலும் பிறின்ஸ் என்ற சிங்கள நண்பன் தமிழ்கற்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தமிழ்ப்படம் பார்க்கின்றான்.. நான் மிகைப்படுத்தவில்லை உண்மை.அவர்களை வெற்றிகரமாக சென்றடைந்த ஹீரோ விஜய்தான்.விஜயின் பாடல்கள்தான் அவர்களிடம் மிகவும் பிரபலம்.எதை முதல் முதலில் சிங்களத்தில் அங்கே படித்தோமென்று நினைக்கின்றீர்கள்?தமிழ் கெட்டவார்த்தைகள்.உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளுக்குமான சிங்களம் அங்கே எமக்குக்கற்பிக்கப்பட்டது. நல்ல ஆரம்பம் ஹி ஹி.சிங்களத்தில் எது தெரியாமலும் இருக்கலாம் ஆனால் எவனாவது பப்பிளிக்காக போட்டுத்தாக்கினால் எம்மைபேசுகின்றானா அல்லது ஏதாவது கேட்கின்றானா என்று புரியவேண்டாம்?அதனால்தான் அந்த மூச்சுப்பயிற்சி.ஏதோ அதைத்தாண்டியும் சில பல வார்த்தைகளைக்கற்றுக்கொண்டோம்.சிங்களம் அறவே தெரியாத தமிழ் மாணவர்கள்,தமிழ் அறவே தெரியாத சிங்கள நண்பர்கள் அங்கு தாராளமாகவே இருந்தோம் இதனால் குரூப் அக்டிவிட்டியின் இடையிலான இடைவேளை மிக மகிழ்ச்சியாக சென்றது.காரணம் இதுதான் சிங்கள மாணவர்கள் ஒரு கெட்டவார்த்தையை கூறி மற்ற சிங்கள நண்பர்களுக்கு கூறுமாறு கூறினான்.எனக்குத்தான் எதுவுமே தெரியாதே நானும் கேட்டேன் அவனது முகம் வெளிறிவிட்டது உடனே சிங்கள நண்பர்கள் எக்காளமிட்டு சிரித்தார்கள்.அவனுக்கு புரிந்துவிட்டது அவனும் சிரித்தான் பின்னர் அதன் அர்த்தத்தைக்கேட்டு நானும் சிரித்தேன்.விடுவோமா அதேவேலையை அவர்களுக்கு நாங்களும் செய்தோம் பன்னாக கழிந்தது  அப்படியான நாட்கள்.

ஆர்மி ரெயினிங்க் 3 கட்டங்களாக நடைபெறுகின்றது. நாம் 2 ஆவது பச் சோ முதலில் சென்று அனுபவப்பட்ட நண்பர்கள் சில பல டிப்ஸ்தந்தார்கள். பெண்களிடம் போன் நம்பர் வாங்குவது எப்படி? இறுதி நாளில் சிங்கள,தமிழ்(எல்லாரும் தரமாட்டங்க) பெண்களிடமிருந்து ஓட்டோக்கிராப் வாங்கமுடியும் இலையாக இருந்தாயே சருகாக உதிர்ந்தாயே பாணியில் எதையாவது கிறுக்கிவிட்டு இறுதியில் இப்படிக்கு என்பதுடன் பேஸ்புக் ஐடி,நம்பரும் கிடைக்கும் என்ற செய்தி ஆரம்பத்தில் கேட்டதும் இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே.ஆனால் ஒன்று அதற்கு  பெண்களுடன் நன்றாக பழகவேண்டும்.எது பழகுறதா போய்தைரியமாக கதைத்தாலே பெரியவிஸயம் என்றபயம் ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருந்தது.

காம்பிற்குள்ளேயே ஒரு கண்டீன் இருந்தது.பொருட்களுக்கு அவற்றின் கம்பனி அரச சட்டங்களின் அடிப்படையில் பொறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச உயர்ந்தவிலையாகிய மிகக்குறைந்தவிலைக்கு பொருட்களை அங்குவாங்க முடியும் ஏனெனில் விற்பதும் இராணுவம் ஏதாவது கோக்குமாக்குவிட்டால் கணக்குக்காட்டவேண்டுமாம்.அந்தக்கண்டீனுக்கு முன்னால்தான் அனைத்துமாணவர்களும் நேரம்கிடைக்கும்போதெல்லாம் அமர்ந்திருந்தோம்.வழக்கமாக நல்லூர் கந்தனிடம்  என்னைப்போன்ற பலர்/சிலர் செல்வது அங்கு கிடைக்கும் தாவணி பஞ்சாவி தரிசனத்திற்காக.முருகன் 2 வச்சிருக்கார் எனக்கு ஒன்னுகூட வாய்க்கல சரி கண்குளிர காட்சியாவது கிடைக்குமேன்னு பிரன்ஸிகூட சுத்தவேண்டியதுதான்.பக்தன்கூட 3 தடவை வலம்சுழியாகத்தான் சுத்துவான்.ஆனா நாம சிக்ஸாக்கா சுத்துவம்.சந்து பொந்து மூலை முடக்கு என அனைத்துஇடங்களிலும் இருந்து வரும் பெண்களையும் பார்க்கும்வாய்ப்பு வருடத்திற்கு 7 நாட்கள்.அந்த 7 நாட்கள் ஊகும்...சொர்க்கமேதான்.அண்ணளவாக அதே பீலிங்கை அந்த கண்டீனும் எமக்குத்தந்தது என்றுதான் கூறவேண்டும் தமிழ் என்பதுடன் நின்றுவிடாது சிங்களப்பெண்களும் வந்திருந்தார்கள். அந்தக்கூர்மையான அறிவிருக்கே சப்பா என்னபோட்டுவளத்தாங்களோ(மிக புத்திசாலிகள் என்று சொல்லவந்தேன்).அக்கரைக்கு இக்கரை பச்சைஎன்ற அர்த்தத்தில் சிங்களமாணவர்கள் ஏதோ காதில் ஓதினார்கள்.

ஒரு நாள் மாலைபொழுதில் 2,3 பட் 2 புட்போல்களைத்தந்து போய் விளையாடுங்கள் என்று எமது குரூப்பை கட்டவிழ்த்துவிட்டுவிட்டார்கள்,வழக்கமாக நடப்பதுபோல் பெண்களுக்கு வொலிபோல்.அப்போது ஒரு சிங்கள மாணவன் வந்து கேட்டான்..ஐ வோண்ற் ரு ரோல்க் வித் தமிழ் கேர்ஸ் பற் தே டோண்ற் ரிப்பிளே அஸ் மோஸ்ட் ஒப் த ரைம் வை? ஏது வையா அடபோய்யா அவனவன் பின்னால 4,5 வரிசமா திரிஞ்சே யாழ்ப்பாணப்பெட்டையள் கதைக்கிறாளவ இல்ல நீவேற(இல்லை நாயே நீ சொல்லுறது போனமாசம்னு நீங்க சொன்னா சாரி) பேசினாலேகற்புப்போடும் எண்டு நினைக்கிறாளவயோ என்னவோ? உணர்ச்சிவசப்பட்டு நான் தமிழில் அவனைப்பேச அவனுக்கு நான் பேசுவது விளங்கவில்லை ஆனால் சுற்றி நின்ற தமிழ் நண்பர்கள் கொல் என்று சிரித்துவிட்டார்கள்.பிறகு ஓரளவு ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தினேன் உங்களுக்கு மாத்திரமில்லைசாமி எங்களோடயும் அவையள் கதைக்கிறதுக்கு கஸ்ரப்படுவினம் சமூகம் அப்படி ஆக்கிடிச்சு என்று.ஆனால் வேறு மொழி கதைப்போரிடம் நம்பிபேசுவார்கள் என்றேன்.சரி என்று போய் விட்டான்.ஆனால் சிங்கள கேர்ல்ஸ் அப்படியல்ல போய் கதைத்தால் கதைப்பார்கள் என்று கூறிசென்றான்.ஓகோ மர்ச்சுவேர்ட்டான ஆக்கள் போல.சோ கதைப்பதற்கு ஒரு தைரியம்வந்ததுபோல்தான் இருந்தது.

சரி என்று ஒரு சிங்கள கேர்லிடம் கண்டீனில் வைத்து பேச்சுக்கொடுத்தேன்.அவளும் கதைத்தாள்..முதலில் போய்க்கதைத்ததும் முஸ்லீமா என்று கேட்டுவிட்டாள்..பின்னர்தான் தமிழ் என்றேன்.வற் இஸ் யுவர் நேம்?வட் ஸ் யுவர் ஸ்ரீம்? என்பதைத்தவிர வேறுஎன்ன கதைப்பது என்றுபுரியவில்லை.எப்படித்தான் பசங்க கடலைபோடுறாங்களென்றே தெரியலப்பா.( நான் அப்பவிங்கோ)பிறகு அவளாக கதையைத்தொடக்க எனக்குப்பின்னால ரண்டு சனிவந்து நின்னிச்சு.சனி என்று செல்லமாகத்தான் கூறுவதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆர்மி ரெயினிங்கில் மேல் கூறியது போல் லொள்ளாக கிளுகிளுப்பாக நடந்ததைத்தவிர சீரியஸ்ஸான வாழ்க்கைக்குத்தேவையான பல விடயங்களை,தகவல்களைப்பெறமுடிந்தது.அதில் ஒன்றுதான் புதிய நட்பு,பழகிய 10 நாட்களிலேயே பலருடன் நெருங்கிப்பழகமுடிந்தது. கீத்தன்,வாகீசன் என்ற இருவரும் எனக்குக்கிடைத்த புதிய குளோஸ் நண்பர்கள்.அந்த ரண்டும்தான்  நான் கூறிய அந்த இரண்டு சனி.அவளுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது எனக்குப்பின்னால் வந்து.மாமா ஐஸ்கிரீம் ஓனத என்றார்கள்.பின்பு மல்கடுனவா எப்பா என்றார்கள்  என்றார்கள்.பாவிகள் அரைகுறைசிங்களத்தில் சொன்னால் அவளுக்குவிளங்காதோ என்று நான் நினைக்க தெளிவாக ஆங்கிலத்தில் அங்கிள் வீவோன்ற் ஐஸ்கிரீம் என்று பெரிய ஆப்பொன்றை தூக்கிவைத்தார்கள்.ம்ம் அவள் சிரித்துவிட்டாள்..புரிந்துவிட்டது என்ன செய்வது பல்ப்பு வாங்கியது வாங்கியதுதான்.அன்றைய நாள் அதைவிட இனிமையான நாளாக அமையாது என்பதை புரிந்துகொண்டு பாய் சொல்லிவிட்டு எஸ்ஸாகிவிட்டேன்.அட நாம பல்புவாங்கிறதெல்லாம் சாதாரணமப்பா..ஹரிபொற்றர் ஓல்ஸோ டீல் த சேம் புரோப்பளம் ஒன் திஸ் சப்ரர்...



என்னென்ன பயிற்சிகள் வழங்கப்பட்டது எப்படியெல்லாம் வதைத்தார்கள் நொந்துகொண்டதும் நோகாததும் அடுத்த பதிவில்..

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)

$
0
0
அந்த ரெயினிங்கில் தந்த பயிற்சிகளை ஓரளவிற்குக்கூறினேன் காலையில் தேசிய கீதம் பாடிவிட்டு.மலை வீதிகளில் ஓடினோம் வழக்கமாக பாடசாலைகளில் கொடுக்கப்படும் பயிற்சிகளே கொடுக்கப்பட்டன.என்றாலும் மலைவீதிகளில் ஓடுவது ஒன்றும் அவளவு இலகுவாக இருக்கவில்லை.ஓடி முடித்ததும் காலை சாப்பாடு பெரும்பாலும் சோறுகிடைத்தது அல்லது அரை றாத்தல் பாண் சகல்தும் முடிந்ததும்.ஒவ்வொரு குரூப்பிற்கும் வேறு வேறு இடங்களில் லெக்ஸர் நடந்தது.எமது குழுவிற்குப்பொறுப்பான அதிகாரியிம் முதல் நாள் லெக்ஸர்...அவர் சிங்களத்தில் கூற எங்களுக்கு ரான்சிலேட் செய்யப்பட்டது..இங்கே வரும்போது  நீங்கள் பெற்றோர் எல்லோருமே சற்று பயந்துகொண்டுதான் வந்திருப்பீர்கள்.பலருக்கு இதுதான் பெற்றோரைப்பிரிந்து வெளியே 10,14 நாட்களைக்கழிக்கும் முதலாவது அனுபவமாகக்கூட இருந்திருக்கும்.ஆனால் எதற்கும் பயப்படவேண்டாம் நாம் உங்களை எமது பிள்ளைகள் மாதிரித்தான் பார்த்துக்கொள்வோம். என்று கூறினார்.பின்னர் ஜென்ரல் கோப்ரல்,லெப்டினல் என்று பதவிகளின் ஓடர்களை கூறினார்கள்.அவர்களுக்கிடையிலான வேறுபாடு இராணுவ உடைகளில் உள்ள அரச இலச்சனைகள் என்பவை தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது.அங்கு 3 மொழிகளையும் கதைக்கக்கூடிய பெண் ஒருவர் இருந்ததால் ரான்சிலேட்டர்கள் இல்லாத  நேரத்தில் அவர்தான் ரான்சிலேட்டராக உதவி செய்தார்.


எமக்கு மொத்தமாக 6 விரிவுரைகள் நடாத்தப்பட்டன.

1.முரண்பாட்டுமுகாமைத்துவம் 
2.உளரீதியான சிக்கல்களும் உளச்சிகிச்சையும்
3.சட்டம் மற்றும் மனித உரிமை
4.சமூகத்தின் பின்னோக்கியபயணமும் கட்டுப்பாடும்
5.சமூகவிழுமியங்கள்
6.விடுதிகள் பாவனை மற்றும் தனிப்பட்ட சுத்திகரிப்பு

சமூகவிழுமியங்கள் ஒரு வெள்ளிக்கிழமைதான்அந்த சம்பவம் நடந்தது.சமூக விழுமியங்கள் என்ற அந்தவிரிவுரையைப்பற்றித்தான் கூறுகின்றேன்.காலை சாப்பாடு முடிந்ததும் ஆன்மீகம் சம்பந்தமான விரிவுரை என்றார்கள் அனைவரது முகத்திலும் பீதி ஏது ஆன்மீகமா வேண்டாம் வேண்டாம்  எனக்கத்தியும் கதறக்கதற அழைத்துச்சென்று இருத்திவிட்டார்கள். ஆன்மீகப்பேச்சுக்கள் என்றால் பொதுவாகவே எம் வயதினருக்கு ஒரு மரணபீதி அடிமனதில் இருக்கவே செய்யும்.தரம் 6 இல் இருந்து ஓ.எல் வரை 16 வயதுவரை சம்பந்தர் அப்பர் என்று சகலவற்றையும் பாடமாக்கி எழுதி முடித்தாயிற்று என்றால் வருடா வருடம் கோவில் திருவிழாக்களில் ஒவ்வொரு பிரசங்கியும் தன்பாணியில் அக்கதையைப்போட்டுத்தாளித்து கதை பழையசாதம் ஆகியிருக்கும்.ஏதோ சு.கி சிவம் கடைசி தென்கச்சிக்கோ.சுவாமிநாதன் ,கிருபானந்தவாரியார் போல் பேசினால் கூடக்கேட்கலாம்  ஆனால்  நம்மவர்கள் ஒரே பாணிதான் பழைய ரேப் ரக்கோர்டர்..எக்ஸாம் எழுதும்போதும் அவர்களது ஸ்பீச்சைக்கேட்ட அனுபவம் உள்ளதாகையால் பயந்தோம்.பயந்ததுபோலவே நடந்தது.விழுமியங்கள் என்று பேச ஆரம்பித்தார் அந்த விரிவுரையாளர்.காலையில் அவளவு பயிற்சிகளை செய்து வியர்வை ஆறுவதற்குள் சாப்பிட்டுவிட்டு அப்படியே போய் பானிற்குக்கீழே அமர்ந்து விரிவுரையைக்கேட்டால் சொர்க்கம் தானாகவே தெரியும் நித்திரை அதிகமாகி ஒருவன் முன்னால் விழ நித்திரை வருகின்றதா என அவர் கேட்க அவனும் ஆம் என்றான்(வெளியே செல் என கூறுவார் என எதிர்பார்த்தான் போலும்) அவர் கூறினார் இப்படி வெளிப்படையாகக்கூறுவதும் ஒருவிழுமியம் என்று அத்துடன் அவன் தலையுடன் எங்கள்தலையும் சேர்ந்து தொங்கிவிட்டது.45 நிமிடத்திற்கு மேல் தாளித்தனுப்பினார் அவர்.இப்படித்தான் முடிந்தது அந்த விரிவுரை.


சட்டம் மற்றும் மனித உரிமை...என்னது மனித உரிமைபற்றி விரிவுரையான்னு கேட்டிடப்படாது.மனித உரைமைகள் தனி ஒரு மனிதனுக்கு இலங்கையில் என்னென்ன உரிமைகள் இருக்கின்றன.உரிமைகள்  எந்த ஆண்டுகளில் சட்டமாக்கப்பட்டன.உரிமை மீறப்பட்டால் யாரிடம் சென்று முறையிடவேண்டும் என்றெல்லாம் சிங்களத்தில் விரிவுரை செய்யப்பட்டது.அருகிலே ரான்சிலேட்டர் தமிழில் மொழிபெயர்த்தார். நான் மனிதஉரிமையை பாடப்புத்தகத்தில்தான் அதிகமாக படித்திருக்கின்றேன்.அதோடு கருத்துசுதந்திரம் 16 ஆம் சரத்து என்று அடிக்கடி சூரியன் எப்.எம்மில் போடுவார்கள் அவளவுதான்.


சமூகத்தின் பின்னோக்கியபயணமும் கட்டுப்பாடும்..இதுதான் என்ன இளவு என்றே புரியாமல் இருந்தது  வந்த  விரிவுரையாளர் சிங்களத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நடத்திக்கொண்டிருந்தார்.அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றியெல்லாம் அந்த விரிவுரையாளர் சிங்களத்தில் பேசினார்.இடையில் எழும்பிச்சென்றால் வெளியில் நின்றவர்கள் பேசினார்கள் என்னசெய்வதென்று சிலர் மீண்டும் உள்ளே வந்தார்கள்.45 நிமிடம் முடிய மறுபடியும் முதலில் இருந்து தமிழ் ரான்சிலேட்டர் பேச ஆரம்பித்தார்.சீ என்று ஆகிவிட்டது. ஏதோ இடையில் நான் எழும்பி வந்துவிட்டேன் தலையிடிதான் முக்கியமான காரணம். ஒவ்வொரு லெக்ஸரும் ஒவ்வொரு நாட்கள்  நடைபெறும்.


விடுதிகள் பாவனை மற்றும் தனிப்பட்ட சுத்திகரிப்பு

இதில் எப்படி எமது ரூமை சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று கூறினார்கள்.இராணுவம் அல்லவா எனவே அவர்களது முறை சற்றுவித்தியாசமாகத்தான் இருக்கும்.எமக்கு .ஒன்றுக்குமேல் ஒன்றாக உள்ள பெட் ஒன்றை எடுத்து அதைவைத்து பரிசோதனை போல் நேரடியாக விளக்கப்பட்டது தலையணை எப்படிவைக்கவேண்டும்  நித்திரையால் எழும்பியதும் பெட் சீட்டை அனைவரும் ஒரே பாணியில் மடித்துவைக்கவேண்டும்.பெட்டின் கீழே எமது பாதணிகள் பாக்குகளை வைக்கலாம் ஆனால் ஒவ்வொருவர் ஒவ்வொரு மூலையில் வைத்தால் எடுப்பதற்கு இலகுவாக இருக்கும் எனக்கூறினார்கள்.உடைகளைக்காயப்போடுவதற்கு கொடியில் இடம்போதாமையால். நான்களாகவே ஒரு கொடியை அமைத்தோம்.பின்னர் ஒரு பிரச்சனைவந்தது அனைவருக்கும் ஒரே பாணியில் உடைகள் தந்ததால் உடைகள் மாறுபட ஆரம்பித்தது அதனால் ரூமிற்குள் கயிறுகளைக்கட்டி உடைகளைப்போட்டோம்.முக்கியமாக அதைசெய்யவேண்டாம் என்று கூறினார்கள்,திடீர் என்று ஒரு நாள் ரூம் பார்க்கவருவோம்  ரூம் கிளீனாக வைத்திருப்பதற்கும்புள்ளிகள் உண்டு எனக்கூறிவிட்டார்கள்..
இதைவிட 5 ஸ்ரார் ஹோட்டல்களில் எப்படி உணவை உண்பது என்று ஒரு ஒத்திகை செய்துகாட்டினார் எமது குழுவுக்குப்பொறுப்பானவர்.
முள்கரண்டி மற்றும் உண்பதற்குத்தரப்படும் ஏனைய கரண்டிகளை எமக்கு இருபக்கமும் வைத்தால் சாப்பிட்டு முடிந்துவிட்டது என்று அர்த்தமாம்.வெயிட்டர் சொல்லாமல் கொள்ளாமல் பிளேட்டை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்.அதே போல் மேலும் கீழுமாக வைத்தால் சாப்பிட்டு முடியவில்லைஎன்று அர்த்தமாம்.ஒவ்வொரு வைன் குடிக்கும் கிளாஸ்கள்.செறிவுக்கேற்ப கிளாஸ்கள் வேறுபடும்விதம் என்பவைபற்றியும் கற்பிக்கப்பட்டது.

5 ஸ்ரார்  ஆவது பரவாயில்லை ஒரு இராணுவ இரவு போசன விருந்தில் எப்படி உண்ணவேண்டும் என்று கூறினார்கள்.ஹெஸ்ட் சாப்பிட இருக்கும்போது அனைவரும் இருக்கவேண்டும்.அவர் உண்ண ஆரம்பிக்கும்போது உண்ண ஆரம்பிக்கவேண்டும்.அவர் வைன் குடித்தால் குடிக்கவேண்டும்.அவர் குடித்து முடித்தால் எம்மிடம் மேலதிகமாக வைன் இருந்தாலும் குடிக்கக்கூடாது.சாப்பிட்டு எழுந்துசென்றால் சாப்பாட்டை நிறுத்தவேண்டியதுதான்.(என்ன கொடுமை சரவணா)

(எமக்கு நடக்கும் இச்செயற்பாடுதான் ஏனைய அனைத்துமாணவர்களுக்கும் நடக்கும்.எமக்கு விடயங்களைக்கற்பிப்பவர்கள் எமக்கு பொறுப்பானவர்கள் அனைவருமே இராணுவ சீருடையில்தான் இருந்தார்கள்.ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் வேறுவேறு பிரதேசங்களில் இருந்துவந்த ஆசிரியர்கள்.ஆசிரியர்களுக்கு பயிற்சிகொடுத்து  எம்மைப்போன்ற மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றார்கள்.என்னடா ஆர்மி இப்படி தமிழில் கதைக்கிறாரே என்ற ஆச்சரியத்தை இந்தடீட்டியல்தான் நீக்கியது.)

முரண்பாட்டுமுகாமைத்துவம்-மிகவும் பயனுள்ளதாக அமைந்தவிரிவுரை இதுதான்.கண்டீனுக்கு முன்னால் சகலதமிழ் மாணவர்களையும் ஒன்றுகூட சொன்னார்கள்.அனைவரும் வந்து அமர்ந்தோம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் நீங்கள் கூறலாம் என்று  எமக்கு பொறுப்பாக இருந்த ஒரு லெப்டினல் கூறினார்.எமது கூட்டத்தில் இருந்து ஒருவன் எழும்பிக்கூறினான்.. "நாங்கள் கதைத்தால் கேர்ல்ஸ் திருப்பி கதைக்கினம் இல்லை" என்று.அனைவரும் சிரித்துவிட்டோம்.அதோடு அவன் ஒரு பெண்ணைக்காட்டிவிட்டான்.அவளவுதான் அந்தப்பெண் அழ ஆரம்பித்துவிட்டார். உடனே லெப்டினல் அவனுக்கு பேசினார் இப்படியா  பப்பிளிக்காக நடந்துகொள்வது? அந்தப்பெண்ணை ஏன் அடையாளம் காட்டினீர்கள்...பேசவில்லை என்பதுடன் நிறுத்தியிருக்கலாமே என்று பேசினார்.உடனே இன்னொருவன் எழும்பிக்கூறினான் லெப்டினலுக்கு சேர் நீங்கள் என் நண்பனிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும்...என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி பப்பிளிக்காய் என்ர பிறண்டை பேசியிருக்கக்கூடாது..அதால மன்னுப்புக்கேளுங்கள்...லெப்டினல்-அதாவது உங்கள் நண்பன் ஒரு பெண்ணை பப்பிளிக்காக கதைக்கவில்லை என்று அடையாளம்காட்டியது சரி அதற்கு அப்பெண் அழுவதும் சரி...  அதற்காக நான் பேசியது பிழையா? ஓம் சேர் என்னதான் இருந்தாலும் பப்பிளிக்கா என் பிறண்டை பேசியிருக்ககூடாது..எங்களுக்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை சிறிது நேரம் அதிர்ச்சியாகிவிட்டது இங்கே என்னதான்யா நடக்குது?.. நாம் கூறினோம் நீ இருடா சேர் பேசினதில பிழையில்லை என கூற... நீங்கள் என்ன அவருக்கு வாழியாடா பொத்துங்கடா என்று கத்திவிட்டான் அவன்.. பின்னர் ஒருசிலர் எதிர்ப்புத்தெரிவிக்க..அப்படியே சலசலப்புத்தொடர்ந்தது..உடனே லெப்டினல் ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார் இவளவு நேரம் நடந்தது ஒரு  நாடகம். முன்னரே ஏற்பாடு செய்துதான் அந்த மாணவன் எழும்பிக்கேட்டிருக்கின்றான் அவள் என்னிடம் கதைக்கவில்லை என அதே போல் என் நண்பனிடம் மன்னிப்புக்கேட்கவேண்டும் என ஒருவன் எழும்பிக்கத்தியதும் ஏற்பாடாம்.ஆனால் அவற்றை அப்பெண்ணிடம் யாரும் முன்பேகூறவில்லை அதனால்தான் அழுதுவிட்டார்.ஏதோ பிரச்சனையாகியது சுமூகமாக முடிந்தது.

அதன்பின்னர் நமக்குள் முரண்பாடு ஏன் ஏற்படுகின்றது?எவ்வாறு அதைத்தவிர்த்துக்கொள்வது என்று கூறினார்.அதோடு பாலியல்கல்வியும் நடாத்தப்பட்டது.உண்மையில் பயனுள்ளபகுதி அதுதான்.இன்னமும் இந்தக்கல்விமுறை தொடர்பில் சமூகத்தில் மாற்றுக்கருத்துக்கள் இருந்துவருகின்றன.வெறும் சுகாதாரப்புத்தகத்தில் இருகும் உடலைப்பற்றிய அடிப்படைவிடயங்கள்பற்றிய தோலுரித்தல்மட்டும் இக்கல்வியில் போதுமானதல்ல என்பது பலருக்குபுரிந்தவிடயம்தான்.
அவர் கூறினார் இப்போதைய சமூகத்தில் மன நிலைபாதிப்படைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.அவர்கள் மன நிலைபாதிப்படைந்தவர்களாக இருப்பதற்கு அவர்கள் காரணமல்ல.ஆனால் அவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.முக்கியமாக பெண்கள்பாலியல் கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.சுற்றியிருக்கும் உறவுகளால்,ஆசிரியர்களால் ஏன் சொந்த தந்தையினால் கூட  பாலியல் தொந்தரவுக்குள்ளாகின்றார்கள் என்று கூறி அவருக்குத்தெரிந்த உதாரணங்கள் பல கூறினார்.ஒரு தடவை பாடசாலையில் இருக்கும் ஒரு மாணவிக்கு நடந்தவிடயம் இது.அவர் மிகவும் சுறுசுறுப்பானவர்,மிகத்திறமையான மாணவி ஆனால் போக போக அவர் மிகவும் சோகமடைந்துகாணப்பட்டார்,எடுக்கும் புள்ளிகள் மிக மோசமாகக்குறைந்தன முகம் மிக வித்தியாசமாக மாறத்தொடங்கியது.மாற்றத்தை அவதானித்த ஆசிரியர்கள் ஒன்றைக்கவனித்தார்கள்  அந்தப்பெண் வழக்கமாக காதுகளில் தோடு அணிபவர் இப்பொழுது அணிவதில்லை அதோடுகாதில் சிறு காயங்களும் காணப்பட்டன.விசாரித்ததில் தெரிந்தது குடித்துவிட்டு சொந்தத்தந்தையே அந்தப்பெண்ணை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியிருக்கின்றார்.அந்தப்பெண்ணுடன் உடலுறவுவைத்துக்கொள்ளும்போது காதைக்கடிப்பாராம் அதற்குத்தோடு தடையாக இருப்பதனால் தோடு அணியவேண்டாம் என்று கட்டளையிட்டிருக்கின்றார் அந்தத்தந்தை. பின்னர் அப்பெண் மீட்கப்பட்டார்.  சொந்தத்தந்தையால் நடத்தப்பட்ட கொடுமை.பாலியல் விருப்பம் என்பது அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் அதற்கான எல்லைகளை நாம் புரிந்துவைத்திருக்கவேண்டும். இதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்கள் ஒரு சட்டம் இயற்றினார்.வீட்டில் 18 வயதுக்குக்குறைந்த பெண்பிள்ளைகள் இருந்து தாய் வெளி நாடு சென்றால் அதற்கு சேர்ட்டிபிக்கட்வாங்கியபின்னரே வெளி நாடுசெல்லமுடியும் என்பதுதான் அது.

அவர் மேலும் கூறினார் தனக்குத்தெரிந்த ஒரு ஆசிரியர் வெளித்தோற்றத்திற்கு மிகவும் பண்பாகவும் நல்ல நடத்தையுடையவராகவும் காணப்பட்டார்.அவரது வீட்டைச்சுற்றி ஒரு சம்பவம் நடந்துகொண்டிருந்தது அவரது வீட்டின் அருகில் உள்ள பெண்களின் கொடியில் காயப்போடும் உள்ளாடைகள் அடிக்கடி காணமல்போயின.இறிதியில் அந்த ஆசிரியரின் வீட்டில் 163 உள்ளாடைகள் கைப்பற்றப்பட்டன.அவர் அவ் ஆடைகளை எடுத்து அவற்றை முகர்ந்து சுயஇன்பம் அனுபவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்.ஆரம்பத்தில் இது தவறு என்று அவர் உணர்ந்திருந்தாலும் அவரால் அதைக்கட்டுப்படுத்தமுடியாமல்போனது.பின்னர் அவர் மன நலமருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இவையெல்லாம் நீங்கள் அடிக்கடி கேள்விப்படும் செய்திகள்தான்.இன்று நீங்கள் மாணவர்கள்  நாளை நீங்கள்தான் சமூகம் எனவே விழிப்பாக இருக்கவேண்டும்.

ஓரினச்செயர்க்கை பற்றி அறிந்திருப்பீர்கள் இப்பொழுது அதுவும் சமூகத்தில் முக்கிய பிரச்சனைதான்.சிறியவயதில் பெற்றோரிடம் இருந்து சரியான அன்பைப்பெறாத பிள்ளைகள் தம் பாலினத்திலேயே அத்தகைய தேவையைப்பூர்த்துசெய்யமுயலுவதன் விளைவே இதன் ஆரம்பம்.பெண்கள் ஓரினச்செயற்கையில் ஈடுபட்டால் லெஸ்பியன் என்றுகூறுவார்கள் ஆண்கள் என்றால் கேய் என்று கூறுவார்கள்.இத்தகையக அனுபவத்தைப்பெற்ற ஆண்,பெண்ணுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாது போகும்.பெற்றோருக்குவிடயம் எதுவும் தெரியாமல் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள் ஆனால் திருமணத்தின் பின்னரான எதிர்ப்பாலருடனான உடலுறவில் சிறிதும் நாட்டமில்லாது போவதால் அவர்களது திருமணவாழ்க்கையே கேள்விக்குறியாகின்றது எனக்கூறினார்.
அவர்கூறியவை எல்லாம் சரிதான் ஆனால் இங்கே ஆசியாவில் உள்ள நாடுகளில் ஓரினச்செயற்கையாளர்கள் தொடர்பிலான விடயங்கள் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை.சில நாடுகளில் ஓரினச்செயற்கையாளர்களின் திருமணமே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான்.ஆனால் இங்கு சமூக ரீதியாக அது குற்றமாகவே கருதப்படுகின்றது.

பெண்கள் வயதானவர்களால் அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்றால்  வாலிப ஆண்களை குறிவைப்பவர்கள் ஆண்டிகள்.அவர்களிடமிருந்தும் நீங்கள் உங்களைப்பாதுக்காக்கவேண்டிய  கடற்பாட்டில் இருக்கின்றீர்கள் என்றார் அவர்.இப்படி பல சம்பவங்களை நாம் அன்றாடம் செய்திகளில் அவதானித்துவருகின்றோம்.சரி இப்படியான சந்தர்ப்பங்களில் இருந்து எவ்வாறு தப்புவது என்று கேட்டார் கேட்டுவிட்டு கூறினார் பிரபல ரஸ்யப்பழமொழி இருக்கின்றது சந்தர்ப்பத்தைக்கண்டால் ஓடிவிடு அதாவது தவறு செய்வதற்கான சந்தர்ப்பத்தைக்கண்டால் ஓடிவிடு என்பதுதான் அது. சந்தர்ப்பம் கிடைக்காதவரையில் நாம் எல்லோருமே நல்லவர்கள்தான் எனவே சந்தர்ப்பத்தைத்தவிர்த்துக்கொண்டாலே போதுமானது என்றார்.அண்ணளவாக 1.30 மணித்தியாலங்கள் விரிவுரை செய்திருப்பார் போரடிக்காமல் இருந்து கேட்கமுடிந்தது.எந்த ஒரு மேடைப்பேச்சையும் குறைந்தபட்சம் 20 நிமிடத்திற்கு மேல் அக்ரிவாக அவதானிக்கமுடியாது.ஆனால் அந்த லாஜிக்கே அவரது ஸ்பீச்சில் உடைந்தது என்றுதான் கூறவேண்டும்.கண்களை மூட சொன்னார். நீங்கள் உங்கள் வீட்டிற்கு திரும்பி செல்கின்றீர்கள் வாசலில் உங்கள் தாய் தந்தை உங்களை வரவேற்கின்றனர்.உங்கள் தாய் தந்தையின் கண்களில் கண்ணீர் உங்களை முதல் முதலில் பிரிந்திருக்கின்றார்கள்.உங்கள் தாய் அழுதுகொண்டு ஓடிவந்து உங்களை அணைத்துக்கொள்கின்றார்.உங்களை உச்சிமுகருகின்றார்.தந்தை உங்களை அரவணைத்துக்கொள்கின்றார்.இப்போது உங்கள் பெற்றோருடன் வீட்டுக்குள் நுழைகின்றீர்கள்.உங்களை சாப்பாட்டு மேசைக்கு அழைத்துச்செல்கின்றார் உங்களது தாயார் அங்கே உங்களுக்கு பிடித்த உணவு சமைத்துவைக்கப்பட்டிருக்கின்றது,தந்தையும் தாயும் உங்களுக்கு உணவுபரிமாறுகின்றனர் என்று கூறிமுடித்துவிட்டு கண்களைத்திறவுங்கள் என்று கூறினார்.வீட்டின் சிந்தனை இல்லாமல் 8 நாட்கள் வீட்டைப்பிரிந்திருந்தோம் திடீரென்று இப்படி  சகலவற்றையும் நினைவுபடுத்திவிட ஒரு மாதிரித்தான் ஆகிவிட்டது.விரிவுரையைக்கேட்டுக்கொண்டிருந்த அனேக பெண்கள் அழுதுவிட்டார்கள்.

தொடரும்...

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-03(ராக்கிங்க்)

$
0
0

இதன் முன்னைய பதிவில் விரிவுரைகள் முக்கியமாக அதிக பயனுள்ளதாக இருந்த பாலியல்கல்வி தொடர்பான விரிவுரைகள் தொடர்பாக பார்த்தோம் இவை முரண்பாட்டுமுகாமைத்துவம் என்ற தலைப்பினூடு நடத்தப்பட்ட விரிவுரைகள். இதே தலைபின் கீழ் அடுத்து ஒரு விரிவுரை நடத்தப்போகின்றோம் அதற்கு சாப்பாடு வழங்குமிடமான மெஸ்ஸிற்கு செல்லுமாறு கூறினார்கள்.சென்றோம் அங்கே சென்று அனைவரும் அமர்ந்தோம்  ஒவ்வொரு குழுவும் இப்போது முரண்பாட்டு முகாமைத்துவம் தொடர்பில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை செய்துகாட்டவேண்டும் என்று கூறினார்கள்.ஏ யில் இருந்து ஏஜ் வரைக்குழுக்கள் இருந்தன.ஒரு குழு முன்னே சென்று  நாடக பாணியில் ஒன்றை செய்தார்கள்  தரப்பட்ட தலைப்பு தொடர்பில் நாடகம் ஒன்றைசெய்வோம் என்று அக்குழுவைச்சேர்ந்த போய்ஸ் கூற ஆரம்பிக்க கேர்ல்ஸ் இல்லை இல்லை வேறு கொன்செப்டைசெய்வோம் என்று கருத்துமோதலில் ஈடுபட்டார்கள் முடிவில் இப்படி  கருத்துமோதலில் ஈடுபடுவதைவிடுத்து புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளவேண்டுமென தமது நாடகத்தை முடித்தார்கள்.இவ்வாறு ஒவ்வொரு குழுவும் ஒவ்வொன்றை செய்துகாட்டினார்கள்.இவை முடிந்ததும் புரொஜக்ரரில் சிலைடர் சிலைடராக அடுத்த விரிவுரை ஆரம்பமானது.விரிவுரையின் தலைப்பு "ராக்கிங்க்"

 ஒரு ரான்சிலேட்டர்தான் அந்தவிரிவுரையை நடத்தினார்.அவருக்கு தமிழ் நன்றாகவே தெரியும்.தமிழ்மாணவர்களுக்கு,சிங்கள மாணவர்களுக்கு என தனித்தனியாகத்தான் இந்த விரிவுரை நடத்தப்பட்டது.

ராக்கிங்க் என்றால் என்ன? இது இன்றைக்கு ஒரு முக்கியபிரச்சனை.அனைவரும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் இந்தப்பயிற்சிமுடிந்ததும் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துக்கு போகப்போகின்றீர்கள் அங்கே உங்களை வரவேற்க உங்கள் சீனியர் காத்துக்கொண்டிருப்பார் ஆனால் அவர்கள் காத்துக்கொண்டிருப்பது உங்களை வரவேற்பதற்காக அல்ல உங்களை பகிடிவதை செய்வதற்கு. என் நண்பர் ஒருவர் கூறினார் நான் சீனியராக பல்கலைக்கழகத்தில் ராக்கிங்கிற்கு காத்துக்கொண்டிருந்தேன் அப்போது ஜூனியர் பெண்களை பல்கலைக்கழகத்துக்கு கொண்டுவந்துவிடும் பேரன்ஸைக்கண்டால் சிரிப்பாக இருந்தது.ஆனால் நான் என்னுடைய மகளுடன் பல்கலைக்கழக வாசலைமிதிக்கும்போது அப்போது அந்த தந்தைபட்ட துன்பம் என்னவென்று எனக்குப்புரிந்தது.சரி  ராக்கிங்க் என்றால் என்ன.சிலைடரில் ஓடியது

Ragging is a verbal, physical or psychological abuse on newcomers to educational institutions. It is similar to the American phenomenon known as hazing. Sri Lanka is said to be its worst affected country in the world.It involves insults (simple or suggestive sexual, sarcastic and even physical), running errands for seniors, and many other complex activities

முன்னைய பதிவு- ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-02(பாலியல் கல்வி)
உடல் ரீதியான அல்லது மன ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக்கழகங்கள் போன்ற கற்பித்தல் நிலையங்களில்  இவை சீனியர் மாணவர்களினால் நடத்தப்படுகின்றன.இது தனிப்பட்ட ஒரு மனிதனை அவமானப்படுத்தும் செயற்பாடாக கருதப்படுகின்றது.இது ஒருவகை மனித உரிமை மீறல்தான்.இது உடல் ரீதியான தாக்குதல்களைக்கடந்து  பாலியல் ரீதியான தாக்குதலாக பகிடிவதை மாறும்போதுதான் அது மிக மோசமடைகின்றது.
(எமது ரான்சிலேட்டர் தொடர்ந்து பேசுகின்றார்)

எனக்குத்தெரிந்த ஒரு பாதிரியார் இருக்கின்றார்.அவர் பாதிரியார்களுக்கு கற்புக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஜூனியராக சேர்ந்தார்.அவருக்கும் ராக்கிங்க் கொடுக்கப்பட்டது பேனாவால் 6 கிலோமீட்டர்கள் அளக்கவேண்டும் என்பதுதான் அவருக்குக்கொடுக்கப்பட்ட தண்டனை.அவர் அதை ஒழுங்காக செய்யவேண்டும் கொஞ்சம் பிழைத்தாலும் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் அளக்கசெல்லிவிடுவார்கள் சீனியர்கள்.அந்த சீனியருக்குத்தான் 6 கிலோமீட்டர் முடிவு எங்கிருக்கின்றது என்பது தெரியும்.இவருக்கு பின்னேரம் 6 மணிக்கு ஆரம்பிக்குமாறு கூறினார்கள்.அவரும் செய்ய ஆரம்பித்தார். அடித்த நாள் காலை 7 மணிவரை அதை தொடர்ந்து செய்தார்.அப்போது வீதியில் காரில் சென்றவர்கள் காரை நிறுத்திவிட்டு கூறினார்களாம் யார் இந்தப்பைத்தியக்காரன்உடையேதும் இல்லாமல் ரோட்டில் என்ன செய்கிறான் என்று.
ஆம் அவருக்கு மேலதிகமாக கூறியிருந்தார்கள் அந்த 6 கிலோமீட்டர் தூரத்தை உடைஏதுமில்லாமல் அளக்கவேண்டும்.இதை அந்தப்பாதிரியார் ஒரு  நிகழ்ச்சியில் மேடையில் வைத்துக்கூறிக்கொண்டிருக்கின்றார். அவர் ஒரு பாதிரியார் நாம் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றோம் அவருக்கு அப்படி ஒன்று நடந்திருக்கும் என்று நாம் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.
அவர் மேலும் கூறினார்.எனது நண்பன் ஒருவனுக்கும் இதே  ராக்கிங்தான் வழங்கப்பட்டது அதனால் அவன்  மனதளவில் மிகவும் குழம்பி பைத்தியமாகிவிட்டான் இப்போது அவன் எனக்குத்தெரிந்த ஒரு ரெயில்வே ஸ்ரேஸனில் பிச்சைஎடுத்துக்கொண்டிருக்கின்றான்.இது போன்ற பல சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று கூறிமுடித்தார்.கேட்டுக்கொண்டிருந்தோம் வயித்தில் லேசாக புளியைக்கரைத்ததுபோல்தான் இருந்தது.

2 ஆம் உலகயுத்தத்தில் பல்கலைக்கழகமாணவர்கள் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டார்கள்.இராணுவ வீரர்களாக இருக்கும்போது இப்பகிடிவதை ஒரு  நிகழ்ச்சியாக இடம்பெற்றது.அடித்த நாள் இருப்போமா இல்லையா என்று தெரியாது எனவே ஒருவருக்கொருவர் பகிடிவதை செய்து மகிழ்ச்சியடைந்தார்கள்.போர் முடிந்ததும் மீண்டும் பல்கலைக்கழகங்களுக்குத்திரும்பிய மாணவர்கள் அவற்றை தமது பல்கலைக்கழகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.அது  அப்படியே தொடர்ந்து மாற்றமடைந்து வன்முறையும் அதனோடு இணைக்கப்பட்டுவிட்டது.


அவர்  பவர் பொயிண்ட் சிலைடரில் காண்பித்த அனைத்தும் விக்கிபீடியாவின் துணைகொண்டு எடுக்கப்பட்டது அவை கீழே..


Introduction
Inception of ragging can be pleasant at first, hence the name Mal Samaya. During this week or so, all newcomers are ordered to memorize the name and hometown of their peers. The objective of this exercise is said to be increasing the friendship among batch mates (locally termed as batch fit).

Dress code ragging

The freshmen are asked to dress in a specific dress code for a particular period of time. For the dress code prescribed is generally weird, e.g. dressing totally in white or black with the hair oiled and combed in a particular style, dressing shirts that do not contain stripes, dressing long skirts for girls. The dress code ragging may make the freshmen feel awkward and uncomfortable as it often brings them unnecessary attention from everybody else.

Playing the fool
The freshmen may be asked to do silly things like climbing a tree, kissing a tree, proposing to someone from the opposite sex, holding a hand of someone from opposite sex and walking etc.


Verbal torture
Verbal torture involves indulging in loose talks. The freshmen may be asked to sing the lyrics of any vulgar song or use abusive language in the presence of a large number of peers. During this time, seniors assign an abusive and demeaning nickname, known as card to the juniors and they have to be called by that name throughout their entire university life. In some universities, this nickname is changed to a less vulgar name after the ragging period. These aliases are used primarily as a means of preventing the university authorities identifying the students who are involved in ragging and other unlawful activities. The form of verbal ragging differs from one institution to another. In some universities, students have to memorize poems made up of filth and recite them in front of others.

Physical torture

This is the severest form of ragging that could take place in a university. Some seniors are mainly interested in details such as the anatomical description of one’s body parts, his or her sexual interests etc. In many cases, the freshmen have been asked to strip before the seniors. However, sexual abuse of female students remains rare. Outstation students who stay in hostels are most vulnerable to ragging. They may be asked to do odd acts such as having showers several times per day, and having showers around midnight with cold water. Some extreme cases like inserting candles in vaginae (as in the case of Rupa Rathnaseeli), putting testicles in a drawer and having it closed, pushing straightened out coat-hangers into ears, striking the penis over a long period of time (termed bonchi kadeema) are also reported.[5] This period of time is termed Bheeshana Samaya in university jargon.
சில சீனியர் மாணவர்கள் ஒருவரது உடலின் பாகங்களை பாலியல் ரீதியாக விபரிக்குமாறு கூறுவார்கள்.சீனியர் மாணவர்களின் முன் ஆடைகளைக்களையுமாறு கூறப்படுவார்கள்,ஆனால் பெண்களை பாலியல் துன்புறுத்தும் ஆண்கள்தொடர்பிலான பகிடிவதைகள் மிகக்குறைவாகத்தான் நடைபெறுகின்றது.வெளியில் தங்கும் மாணவர்களைவிட பல்கலைகழகவிடுதிகளில் தங்கும்மாணவர்களே மிகவும் பாரதூரமாக பாதிக்கப்படுகின்றார்கள்.ஒரு நாளுக்கு அதிக தடவைகள் குளிக்குமாறு வற்புறுத்தப்படுவார்கள்,சீனியர் மாணவர்களுக்கு முன்னால் குழுவாக நின்று சுய இன்பம் அனுபவிக்குமாறும் கட்டளையிடப்படலாம்,இரவில் குளிரான நீரினால் குளிக்குமாறு கட்டளையிடப்படலாம்,பெண்களின் பெண்ணுறுப்பிற்குள் மெழுகுவர்த்திகள் செருகப்பட்டிருக்கின்றது,விதையை அலுமாரிக்குள் இட்டு அலுமாரியின் கதவுகள் சாத்தப்படலாம், நீண்ட நேரம் ஆண்குறியை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கவேண்டியேற்படலாம் மாணவர்களால் இவை  தொடர்பான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதையால் நடந்த முக்கிய சம்பவங்கள்,இடங்கள்(இலங்கையில்)


In 1974, ragging of some trainee mathematics teachers at the then Vidyalankara University (now University of Kelaniya) prompted Prime Minister Sirimavo Bandaranaike's Government to appoint V. W. Kularatne Commission to probe the incident. As a result, twelve undergraduates were expelled and four officials were penalised for their failure to take appropriate action. This is the first major step taken against university ragging by a Sri Lankan government.

In 1975, University of Peradeniya reported the first ragging related death when a 22 year old female student of the Faculty of Agriculture, Rupa Rathnaseeli became paralyzed as a result of jumping from the second floor of the hostel "Ramanathan Hall" to escape the physical ragging carried out by her seniors. It was reported that she was about to have a candle inserted in her vagina just before she had jumped out of the hostel building.[5] She committed suicide in 1997
இலங்கையில் ராக்கிங்க் மூலம் மரணத்தை ஏற்படுத்திய முதல் முதல் யூனிவேர்சிட்டி என்ற பெருமை பெரதேனியாப்பல்கலைக்கழகத்தைசாரும்.22 வயதையுடைய Rupa Rathnaseeli  என்ற மாணவி ராமனாதன் ஹோல் என்ற ஹொஸ்ரலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார் ராக்கிங்கில் இருந்து தப்புவதற்காக. அவரது பெண் உறுப்பிற்குள் மெழுகு திரியை நுழைத்து பகிடிவதை செய்யப்பட்டதே இதற்கு முக்கியகாரணம்.

In 1993, Chaminda Punchihewa, a student of University of Ruhuna, died as a result of ragging.[a]
Prasanga Niroshana, a student from Hakmana, died as a result of ragging he underwent at Schools of Agriculture, Angunakolapallassa.[a]

In 1997, 21 year old S. Varapragash, an Engineering student of University of Peradeniya, died from a kidney failure following severe ragging by senior students(கிட்னி பெயிலியரால் இறந்தமாணவன்)

A a first year female student of University of Ruhuna committed suicide in 1997 as a result of ragging.(ருகுன பல்கலைக்கழகத்தின் முதலாவது தற்கொலை)

In 1997, Kelum Thushara Wijetunge, a first year student at the Hardy Technical institute in Ampara, died from a kidney failure after he was forced to do tough exercises and drink excessive quantities of liquor.(அம்பாறையில் மானவன் கிட்னி பெயிலியராகி இறந்தான் அதிகமாக மதுபானத்தை  அவனுக்கு வழங்கியதுதான் முக்கியகாரணம்)

In 2002, Samantha Vithanage, a third year Management student at the University of Sri Jayewardenepura, who pioneered an anti-ragging campaign was killed at a meeting, while in a discussion on ragging.(சிறீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் 3 ஆம் வருட முகாமைத்துவ பீட மாணவன் ஒரு அன்ரிராக்கராக 3 ஆம் வருடத்தை தொடர்ந்தார் ராக்கிங்க் பற்றிய ஒரு கலந்துரையாடலில் Samantha Vithanage என்ற அம்மாணவன் கொலைசெய்யப்பட்டான்)

In 2006, Prof. Chandima Wijebandara, the Vice Chancellor of University of Sri Jayewardenepura resigned from his post as a result of students failing to comply with his orders to eliminate ragging from the university.

In 2011, a female student attached to the Faculty of Humanities and Social Sciences, University of Ruhuna, was semi-paralysed in one limb as a result of ragging she underwent at the faculty canteen.

World wide-


அவர் இவற்றை புரொஜெக்டரில் போட்டுக்காட்டிக்கொண்டு கேட்டார்.உங்களில் ராக்கிங்க் என்பது தேவைதான் என்று நினைபவர்கள் கைகளை உயர்த்துங்கள்.கேர்ஸில் ஒருவரும் உயர்த்தவில்லை போய்ஸில் சிலர் உயர்த்தினார்கள் நானும் உயர்த்தினேன்.

எங்களை ராக்கிங்க் செய்தால் பரவாயில்லை நாம் ராக்செய்வதை அனுமதிக்கின்றோம் என்று நினைப்பவர்கள் கைகளைத்தூக்குங்கள்.அதற்கும் சிலர் உயர்த்தினார்கள்.ஏன் ராக்கிங்தேவை என்று நினைக்கின்றீர்கள் என்று கூறமுடியுமா?கையை உயர்த்தியவர்கள் கூறுங்கள்.(நீலத்தால் காட்டப்படுவது எமக்கு விரிவுரை செய்தவரின் கூற்றுக்கள்)

மாணவர்கள் எழுந்து காரணங்களைக்கூறுகின்றார்கள்-

ஜூனியராக செல்லும் மாணவர்களிடத்தே ஒரு ஒற்றுமையை(batch fit) வளர்க்கின்றது...

எப்படி? நீயும் ராக்பண்ணப்பட்டாய் நானும் ராக்கிங்க்பண்ணப்பட்டேன் அப்படித்தானே..ம்ம் ஓகே அடுத்தது

நான் எழும்பிக்கூறினேன்...மேடைக்கூச்சம் போன்றவற்றை இல்லாது செய்யமுடியும் என்று..(நான் ராக் செய்வதாக இருந்தால் சகலருக்கும் முன்னால்வந்து எதைப்பற்றியாவது பேசு அல்லது 2 வரி பாடுமாறு கேட்பதாக  முடிவு செய்திருந்தேன்..இதனால் இந்த மேடைக்கூச்சம் இல்லாது போகும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது)

அதாவது முன்னுக்கு வருவதற்கு வேறுயாருடனும் பேசுவதற்குபயப்படுபவர்களின் பயத்தை ஒளிக்கமுடியும்..ம்ம் அடுத்து

ஜூனியேர்சிடம் பாரபட்சங்கள் குறையும்...

அதாவது ஜூனியராக வருபவர்களில் பணக்காரன் ஏழை இருப்பார்கள் சகலரையும் ராக் பண்ணுவதால் அந்த சம நிலை பேணப்படுகின்றது என்கிறீகள்

ராக் செய்தால்தான் ஜூனியேர்ஸ் மதிப்பாங்கள்

அதாவது ஒருவரின் திறமையினாலோ நல்ல செயலினாலோ மரியாதை வராது எனவே ராக் செய்வதன் மூலம் அதைப்பெற்றுக்கொள்ளல் ஓகே 


இப்போது இவர்கள் கூறிய  அதே காரணங்களைத்தான் சீனியேர்ஸும் கூறுகின்றார்கள்.அதோடு superiority complex  என்ற விடயமும் இருக்கின்றது.அத்துடன் வேறு காரணங்கள் யாராவது?

இப்போது இருக்கும் சீனியர்ஸ் முன்னர் ஜூனியேர்ஸாக இருக்கும்போது தமது சீனியர்களிடம் வாங்கிய அடிகளை திருப்பி அவர்களுக்கு வழங்கமுடியாது  அதை ஜூனியேர்ஸிடம் தீர்த்துக்கொள்கின்றார்கள்.

Everybody wants to become heroes,and the cowards are not an exception. And ragging is the only way by which they could do some "heroisms".These nonsense idiots somehow develops a feeling that they are on the top of the world , when they are harassing somebody in the name of ragging.
And definitely the guys who shows such ""heroisms" are the biggest zeros in their real life.They might be the biggest bafoons among their friends,useless in the home,and a garbage in the society. This "useless,baffooonish, waste" feeling will be creeping high on them,and they will find pleasure and satisfaction while doing ragging by becoming 'a hero in their own mind'.

ராக்கிங்க் பற்றிய கட்டுரை ஒன்று by-Nishika Fonseka

Ragging in our universities: A symptom or a disease?

ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் இன்பம் காணல் என்பது ஒருவித மனோவியாதியாக இருக்குமெனில் அதை ராக்கிங்க் செய்பவர் உணரப்போவதில்லை..ஒரு மன நிலைபாதிக்கப்பட்டவரால் தான் மன நிலைபாதிக்கப்பட்டவன் என்பதை முழுமையாக உணரமுடியாது.உணரவும் விரும்பமாட்டான்/டாள்.முயற்சி செய்து எந்தபயனும் இல்லை.ஆனால் மன நிலைக்காப்பகத்தில் கவுன்சிலிங்க்வேண்டுமானால் செய்யலாம்.

ஆனால் நீங்கள் பல காரணங்களைக்கூறினாலும் உலக அளவில் செய்யப்பட்ட ஆய்வு என்ன கூறுகின்றது தெரியுமா.ராக்கிங்க் என்பது ஒரு மாணவனின் தலைமைத்துவப்பண்பையோ ஆளுமையையோ வளர்க்கவில்லை.மாறாக அது அவனை இல்லாமல் செய்கின்றது அழிக்கின்றது.ம்ம்ம் அப்போதுதான் எனக்கு உறைத்தது சரிதான் கட்டாயத்தின்பேரில் முன்னால் வந்து பேசுபவன் அதன்பிறகு தானாக வருவானா என்றால் இல்லை.அதோடு இன்னொன்றும் இருக்கின்றது.எம்மை விட பின்னர் வந்த  ஜூனியேர்ஸ் தம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக ராக்கிங் செய்வது சரியென்றால்  இலங்கையில் பெரும்பான்மை இனம் எங்களை அடக்கமுயல்வதில் என்ன தவறு இருக்கின்றது இரண்டும் ஒன்றுதானே?

அதோடு கூறினார் ராக்கிங்செய்பவர்கள் ஒருவகையில் மன நோயாளிகள்.இன்னொருவரின் துன்பத்தை ரசிப்பதன்மூலம் தாம் இன்பங்காண்பவர்கள். அவர்கள் வளர்ந்த விதம் சமூகக்காரணிகளால் இப்படியானவர்கள் தோற்றுவிக்கப்படுகின்றார்கள்.ராக்கிங்கால் பலர் தற்கொலை செய்துள்ளார்கள்.இலங்கைப்பல்கலைக்கழகங்களில் பல தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன.பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்  எல்லைமீறும்போது இவை ஏற்படுகின்றன.

தனக்கு நடந்த சம்பவம் ஒன்றைப்பற்றிக்கூறினார் அவர்.

எனது தங்கையை ஆசிரியர்கலாசாலைப்பயிற்சிக்காக  ஒரு பல்கலைக்கழகத்துக்குசெல்லவேண்டியிருந்தது. நான் என் தங்கையை அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன் பல பெண்களின் சகோதரர்கள்,பெற்றோர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.யுத்தகாலம் ஆகையால் ஆண்களின் பெற்றோரும் வந்திருந்தார்கள்.அப்போது  17 இடங்களில் 17செக்பொயிண்ட்களில்(இராணுவப்பரிசோதனைச்சாவடிகள்) ஆண்கள் பெண்கள் என எங்கள் அனைவரையும் முழுமையாக பரிசோதனை செய்து பரிசோதனை செய்து அனுப்பினார்கள் அண்ணளவாக 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தோம் வந்ததும் எமக்காக காத்து நின்ற சீனியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.அனைவரையும் உடனே ஒரு அறைக்கு வருமாறு அழைத்தார்கள்.அங்கு அனைத்து ஜூனியருக்கும் ராக்கிங்க் கொடுக்கப்பட்டது.ஒருவர் பின்னால் ஒருவர் ரெயில் வண்டியைப்போல் பிடித்துக்கொண்டு ஓடவேண்டுமாம் அந்த அறைக்குள்.பெரும்பாலான பெண்கள் அழஆரம்பித்துவிட்டார்கள்.என்னால் பொறுக்கமுடியவில்லை.அண்ணளவாக 8 மணித்தியாலங்கள் வீதியில் நடந்து அங்கு சென்றிருந்தோம் தண்ணியில்லை சாப்பாடில்லை ஒண்டுக்கு ரண்டுக்குக்கூட போக வழியில்லை.சோதனைச்சாவடிகளில் முழு உடமையையும் பரிசோதனை செய்துகளைத்துப்போய் 8 கிலோமீட்டர் தூரம் நடந்துவரும் எங்களை இப்படியா நடத்துவது? பெற்றோர் வேறு பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் இதே நிலைதான். நான் போய் ஒரு சீனியரை அழைத்துக்கேட்டேன்.என்ன நியாயம் இப்படியா செய்வது இங்கே இருக்கும் எத்தனை பெண்கள் இன்னும் ரொய்லெட்டுக்குபோனார்கள் என்று தெரியாது.சாப்பிட்டார்களா என்று தெரியாது.கொண்டுவந்த சுமைகளுடன் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தே அனைவரும் வந்திருக்கின்றோம்.யாரும் வரும் வழியில் ஓய்வெடுக்க வில்லை.இங்கே பலரின் பெற்றோரும்வந்திருக்கின்றார்கள் இதுதான் நீங்கள்  உங்கள் சீனியேர்ஸை வரவேற்கும் முறையா?
அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

 இப்பதான் இப்படி ராக்கிங்க் பீரியட் முடியட்டும் பாருங்க நான்க ஒன்னுக்குள்ள ஒன்னா அவளவு பிற்றா இருப்பம்...




மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா?

$
0
0



இன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. தான் உச்சத்தில் இருந்த முப்பது வருட காலத்தின் அத்தனை இளம் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் வியந்து பார்க்கவைத்த எழுத்தாளர் சுஜாதா. அவர் இறந்து இத்தனை நாட்களின் பின்னரும் அவருக்கான வீச்சு குறையாதிருப்பது தமிழ் எழுத்துலகில் அதிசயமே. ஏனெனில், பல எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவதுதான் தமிழர்களின் ஸ்டைல். உதாரணமாக, ஜெயகாந்தன் என்கிற தமிழ் இலக்கிய உலகின்... இலக்கிய உலகின் உச்சங்களில் ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பது பலருக்கு தெரியாது, அவர்களுக்கு தேவைப்படவும் இல்லை. ஆனால் சுஜாதா? இறந்த பிறகும் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார்.

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை வாசிக்கலாம் என்று வந்தால் இது என்னப்பா ஆவணப்படம் மாதிரி போகிறது என்று முணுமுணுப்பது கேட்கிறது. சுஜாதா என்கிற பௌதீக மனிதரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், அல்லது எங்கே தெரிந்துகொள்ளலாம் என்பதாவது தெரிந்திருக்கும். இந்தப் பதிவு அவர் சம்பந்தப்பட்ட இருவேறு பார்வைகள் பற்றியது. என்னதான் இருந்தாலும் அந்த ஜோக்கை சொல்லாமல் சமாளிக்க முடியாது என்பதால், அது கடைசியில்.
உண்மையில் சுஜாதா என்கிற மனிதரின்- எழுத்தாளரின் பிரபலம், அவரைப்பற்றிய அடுத்த பக்கத்தை புரட்டிப் பார்க்க விடுவதில்லை. இளைய தலைமுறையின் வாசிப்புப் பழக்கமுள்ள அனைவருமே – நான் உட்பட – சுஜாதா ரசிகனாக இருந்த, அல்லது இருக்கும் காலம் ஒன்று இருக்கிறது. திரைத்துறையில் ரஜினிகாந்தை எப்படி மறை விமர்சனம் செய்யக் கூடாது என்கிற சட்டம் உள்ளதோ, அதுபோல சுஜாதாவை விமர்சிக்கக் கூடாது என்கிற எழுதப்படாத சட்டமும் உள்ளது. அது ஓரளவுக்கு உண்மைதான். சுஜாதா அளவுக்கு தமிழ் எழுத்துலகில் பிரபலமோ, சுஜாதாவை ஒத்த வாசிப்பு வீச்சோ இல்லாத நமக்கு அவரை விமர்சிக்க என்ன தகுதி இருந்துவிடப் போகிறது? (இறந்துபோனவரை விமர்சனம் செய்யக் கூடாது என்று யாரும் பாட்டுப் பாட வேண்டாம். ஒரு படைப்பாளியின் படைப்புக்கள் உள்ளவரை விமர்சனங்களும் இருக்கும். அல்லது விஸ்வரூப பாணியில் சொல்லப்போனால், “செத்துட்டா? எல்லா பாவங்களையும் மன்னிச்சுடலாமா? )

சுஜாதாவை நான் வாசித்த காலத்தில் அந்த எழுத்தின் வசீகரத்துக்கு அடிமையாக இருந்தேன். எளிமையான, நகைச்சுவையான, அதேவேளை அடர்த்தியான நடை அவருடையது. சாதாராண நாவல்களில் உலக இலக்கியங்களை, மாற்றுக் கொள்கைகளை உறுத்தாமல், அதேவேளை அலுக்காமல் சொல்லிச் செல்லும் அவரது திறமை லாவகமானது. அவரது சிந்தனை வீச்சும் அதி அற்புதமானது. சொளிப்சிசம், ஹோலோகிராம் போன்ற சிந்தனாவாத எண்ணக்கருக்களை புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாது தனது படைப்புக்களிலும் பயன்படுத்தியவர்.

இன்னும் எத்தனையோ உயர்ந்த மதிப்பீடுகளை எல்லாம் நான் வைத்திருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது சுஜாதாவுக்கும், ரமணி சந்திரனுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

நீ யாரடா சுஜாதாவை பற்றி கதைக்க? ப்ளொக்கரில் நாலு போஸ்ட் எழுதிய நீ சுஜாதாவை விமர்சிப்பதா? என்ன ***? என்று கொந்தளிக்கும் ரசிகர்கள் சுஜாதாவுக்கு இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் எல்லாம் ஆரம்ப கட்ட ரசிகர்கள். கணேஷ், வசந்த் சுவாரசியத்துக்காக நாவல் வாசிப்பவர்கள். மணிரத்னத்தை பிடிக்கும் என்று சொன்னால் உயர்ந்த சினிமா ரசிகன் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்கிற மாயை போல, சுஜாதா ரசிகன் என்பது இங்கே ஒரு அடையாள அட்டை மாதிரி இருக்கிறது. அத்துடன் சுஜாதா தங்களுக்கு பெண் தந்தவர் மாதிரி அவரைப்பற்றி தப்பாக பேசினால் அதற்கு கொந்தளிப்பு வேறு. ஒரு படைப்பாளன் என்பவன் விமர்சகர்கள் பந்தாடவே ஒரு படைப்பை படைக்கிறான். ஒவ்வொரு வாசகனும் விமர்சகனே. இது சுஜாதாவே ஒத்துக்கொண்ட உண்மை. (ஏற்றுக்கொண்ட உண்மை அல்ல.) ஒரு படைப்பாளியை விமர்சிக்க அவரை விட உயர்ந்த படைப்பாளியாக இருக்கவேண்டும் என்பதில்லை. அவரது வாசகனாக இருந்தால் போதும். எனவே, சுஜாதாவை விமர்சிப்பதற்கு ஒரு தேர்ந்த வாசகன் என்கிற எனது தகுதி போதுமானது. உலகத்தர இலக்கியக்காரனாகவோ, உச்சப்புகழ் பிரபலமாகவோ இருக்கத் தேவையில்லை. இவ்வளவு ஏன், அந்த சுஜாதாவே லா.ச.ர, டோல்ஸ்டோய் என்று தனது தகுதிக்கு உயர்ந்தவர்களை எல்லாம் அர்ச்சித்தவர்தான்.

எதற்கும் முதலில் சுஜாதாவின்  இனியவை நாற்பதை பார்ப்போம். வாசகர்கள் கடுப்பாகி விடக்கூடாதல்லவா?

சுஜாதாவின் மகத்தான சாதனை தமிழ் எழுத்து நடையையும், பொருளையும் உலகத்தின் போக்குக்கு வார்த்தது. சுஜாதாவை பின்தொடர்ந்த தலைமுறை வணிக நோக்கு எழுத்தாளர்கள் அனைவரதும் நடையும் பாடுபொருளும் உலகத்தின் பேரிலக்கியப் பண்பாட்டோடு ஒட்ட முயற்சிப்பதற்கான வித்தை இட்டதுதான் சுஜாதாவின் முக்கியமான இலக்கியப் பணி. சுஜாதாவுக்கு முந்திய பெரும் எழுத்தாளர்களின் நடையும் உள்ளடக்கமும் ஒருவிதமான மணிப்பிரவாள நடையாக, பிராமண அசையுடன், சிலபல சங்கடமான சொற்கள் தூவப்பட்டதாக மோடித்தனமாக இருந்துவந்தது. கதைப்பொருட்களும் நடுத்தர பிராமண பாணி சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தது. அடுத்த நாளுக்கு உத்தரவாதமில்லாத மனிதர்களின் ஒரு நாள் கழிவதே பெரும்பாலான கதைகளின் உட்பொருள்.

சுஜாதாதான் எழுத்துலகின் பல சாத்தியங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். அதற்கு அவரது உலகளாவிய வணிக இலக்கிய வாசிப்புப் பரிச்சயமே காரணம். அவர் படித்த ஏராளமான புத்தகங்களிலிருந்து பெற்றுக்கொண்ட பல நடைகளையும், உத்திகளையும், பொருள்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். தனக்கேயுரித்தான ஒரு நடையை உருவாக்கி, அதற்கு தனது வாசகர் வட்டத்தை பழக்கியது மட்டுமல்லாது, அடுத்துவரும் அனைத்து முயர்சியாளர்களுக்கும் அதை விதியாக மாற்றியவர். தமிழின் நெகிழ்ச்சித் தன்மையை சாதகமாகக் கொண்டு, புதிய வார்த்தை அமைப்புக்களை உருவாக்கினார். இலக்கணத்தை விட, ஒரு சிறுகதைக்கு எளிமையே முக்கியமானது. கச்சிதமாக இருப்பதே உரைநடை இலக்கியத்தின் அடிப்படைத் தேவை என்கிற கவித்துவ அனுமதியை சாதகமாக்கி தமிழையே புதிதாக மாற்றியவர்.

அடுத்தது, உலக இலக்கியத்தின் புதிய புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தியதும், முயன்றதும் இவர்தான். விஞ்ஞானச் சிறுகதைகள் என்கிற பெயரிலும், அது அல்லாமலும் இவர் எழுதிய (அல்லது எழுதியதாக சொன்ன) சிறுகதைகள் தமிழுக்கு ஒரு புதிய இலக்கிய வடிவத்தை கொண்டுவந்தது. இப்போது அறிவியல் புனைகதை என்பதன் சுருக்கமாக அறிபுனை என்கிற பெயரில் நாடோறும் ஆயிரக்கணக்கான கதைகள் எழுதப்படுவதற்கு ஆரம்பம் சுஜாதாதான்.

அறிபுனை மட்டுமல்லாது, ஒரு வார்த்தை கதை, கவிதை கதை, சிறுகவிதை என்று பல வடிவங்களை தமிழில் முயன்றார். உலக இலக்கிய வடிவங்கள் மட்டுமல்லாது, தமிழின் பழைய இலக்கிய வடிவங்களையும் மீள உயிர்ப்பிக்க முயன்றார். ஆனால் உரைநடை இலக்கியத்தில் புரட்சிகள் செய்த அளவுக்கு இவரால் செய்யுள் உலகில் பிரகாசிக்க முடியவில்லை.

அடுத்தது சாதனை அல்ல, சாதிப்பு. தமிழ் இலக்கிய உலகத்தில்  சுஜாதாவுக்கு மட்டுமே உள்ள இடம். இவரைப்போல இன்னொருவர் இல்லாத இடம். தமிழ் எழுத்துலகின் பிரபலம். ஒரு திரைப்பட நட்சத்திரத்துக்கு இணையான புகழும், பிரபலமும், செல்வாக்கும் உள்ள ஒரே எழுத்தாளர் இவர்தான். முன்னமே சொன்னதுபோல, ஜெயகாந்தன் வாசகன் என்றோ, சுந்தர ராமசாமி வாசகன் என்றோ, ஏன், பிரான்ஸ் காஃப்க வாசகன் என்றோ சொல்லுவதிலும் சுஜாதா வாசகன் என்று சொல்லுவது ஒரு தேர்ச்சி பெற்ற வாசகனாக காட்டிக்கொள்ளுவதற்கான அடையாளமாக இன்றளவும் இருந்துவருகிறது.

சுஜாதாவின் சில்லறை இனியவை நிறைய. தமிழ் எழுத்தாளர்களில் கணணி, விமான தொழில்நுட்பம் பற்றி கற்றவர் என்பதால் இவரது எழுத்துக்களில் அதன் தேர்ச்சி தெரியும். பல விடயங்களை தமிழில் எளிமையாக அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். உலகத்தின் ஓட்டத்தோடு தமிழர்கள் ஓடுவதற்கான அறிவை அறிமுகப்படுத்திய, பழைய பாட்டுக்களை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த தமிழர்களை அடுத்த கலாசாரத்துக்கு நெறிப்படுத்திய முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.

இன்னா நாற்பது? சுஜாதாவின் இன்னா தான் நாற்பது என்ன, நானூறே சொல்லலாம். அவரே சொல்லுவதுபோல் சொன்னால், பிரபலமாக இருப்பதன் பக்க விளைவு இதுதான். இனியவை நாற்பது கிடைத்தால் ஒரு விமர்சிப்பவருக்கு இன்னாதவை நானூறு கிடைக்கும்.

சுஜாதாவின் இன்னாதவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்த முதல் அவரது முக்கியமான இன்னாதது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அவரது நிலைப்பாடு. காலத்துக்குக் காலம் மாறுபட்ட பல நிலைப்பாடுகளை எடுத்தாலும், அவரது பொதுவான கருத்து, இலங்கை மக்களின் போராட்டம், ஒரு முட்டாள்தனமான தீவிரவாதம். அவரது கொலை அரங்கம் நாவல் அந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான்.

சுஜாதா மீதான என் மட்டத்தில்  முக்கியமான பிரச்சனை அவரது கொள்கை அளவிலான வக்கிரம்தான். அவரது அனைத்து படைப்புக்களிலும் சில அம்சங்களை மாறாமல் காணலாம். அவற்றில் முதன்மையானது பெண்கள் மேல் அவர் கொண்டுள்ள மட்டமான பார்வை. பெண்களை காமத்துக்கான வடிகாலாக மட்டுமே அவர் பார்த்திருப்பது எல்லா புனைகதைகளிலும் தெரியும். பெரும்பாலான கதைகளில் அறிமுகம் இல்லாத ஆண் மார்பில் கை வைத்தாலும் விபரீதம் புரியாத அப்பாவியாக, காசுக்காக என்னவும் செய்யும் சுயநலமியாக, காதலுடன் திருமணத்துக்கு முன் கூடும் காமியாக ஒரு பெண் இருப்பாள். மேலும், எந்தப் பெண்ணினதும் பெற்றோரோ, மாமனோ, ஏன், வீதியில் போபவனோ அவளது அந்தரங்கத்தை பற்றி அப்பட்டமாக பேச, அவளும் அதற்கு சாதரணமாக பதில் சொல்லுவதான காட்சிகள் இருந்தே தீரும். சிறுமிகளின் மார்பு, குளிக்கும் இளம்பெண்கள் இப்படி தனது சுய காம ஆசைகளை தனது கதை மாந்தர்களூடாக அவர் ரசித்தார் என்பதே உண்மை. அதேபோல, பெண்கள் சூழ்நிலை விபரீதம் புரிந்துகொள்ளக்கூடியளவு பக்குவம் இல்லாதவர்களாகவும், சுயமாக முடிவு எடுக்கும் அளவுக்கு சுயம் இல்லாதவர்களாகவும், ஆண்களது இழுப்புக்கெல்லாம் போவதாகவும் அவரது புனைகதைகளில் வரும். இதெல்லாம் அவரது பெரும்பாலான கதைகளில் வருவதல்ல, எல்லாக் கதைகளிலும்வருவது. இதிலும் கொடுமை என்ன என்றால், சஞ்சிகைகளில் சினிமா தொப்புள் பக்கங்களை வாசிப்பவர்கள் முட்டாள்கள் என்றும், தனது பக்கங்களை வாசிப்பவர்கள் புத்திசாலிகள் என்றும் பொருள்பட பல இடங்களில் எழுதியுள்ளார். உண்மையில் இவரே ஒரு மஜா சுஜாதாதான். தேங்காய், கொடியேற்றுவது போன்று பல மறைமுக வார்த்தைகளையும், சில வார்த்தைகளை நேரடியாகவும் இவர் பயன்படுத்தத் தயங்குவதில்லை. மெக்சிக்கோ சலவைகாரி ஜோக்போன்ற அப்பட்ட அசிங்கங்களை வைத்து கதைகளை நகர்த்தியது மட்டுமல்லாது, அந்த ஜோக்கை ரசிக்கும் அளவுக்கு தமிழ் வாசகர்களுக்கு ரசனை வளரவில்லை என்று சரடு விட்டவர். அந்த ஜோக்கை படித்த பிறகு சொல்லுங்கள், அது கேவலமா, ரசனையா என்று.  ஒட்டுமொத்தமாக பார்த்தால், எந்தக் கதையிலுமே இவர் பெண்ணை மரியாதையாக காட்டி இருக்கமாட்டார்.

அடுத்தது இவரது குழப்பம். இவரே வெறுப்பதாக சொல்லும் விஷயத்தை இவரே செய்வார். முக்கியமாக, இவரது படைப்புக்களை யாராவது குறை சொன்னால் இவருக்கு பிடிக்காது. அவர்களை கழுவி கழுவி ஊற்றுவார். குத்தல் கதைகள் கதைப்பார். ஆனால், இவர் அறிமுகம் செய்யும், சர்வதேசப் பிரபலமோ, உள்ளூர் அரிவரியோ, ஏதாவது குறையை அவர்களது படைப்பிலே காட்டாமல் விடமாட்டார். இவர் எந்த விடயத்திலாவது குறை சொல்லாமால் விட்டவர்கள் யாருமில்லை. (இப்போது நீ சுஜாதாவை குறை சொல்லுகிறாயே, அதுபோலத்தானே? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அதுபோலவேதான்.) இதிலே லோதக்காசி என்னவென்றால், இவர் ஆரம்ப காலத்தில் குறை கூறிய ஆனந்த விகடன், கமல், மணி ரத்னம், ஷங்கர் போன்றவர்களே, பிற்காலத்தில் இவர் உலகப் பிரபலம் ஆகக் காரணம். சிறிய பதிப்பாளர்களை மதிப்பதில்லை, (பாக்கெட் நாவல் அசோகனை, சென்னையிலிருந்து பெங்களூர் வரை அலைக்கழித்து, பின்னர் மறுதலித்தவர். இதை அசோகனே சொல்லி அழுதிருக்கிறார்.) அன்பளிப்பவர்களை நக்கல் அடிப்பார் அப்படி இப்படி என்று சுஜாதா என்கிற தனி மனிதன்மேல் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், எமக்குத் தேவை சுஜாதா என்கிற எழுத்தாளரின் குறைகள்.

இவரது ஏறத்தாழ எல்லா நாவல்களும் சராசரி மாதநாவல் வகை என்பதை உணர்ந்திருக்கலாம். (ஆனால் இவரே மாத நாவல்களை நக்கல் அடிப்பார்.) அதுவும் கணேஷ் வசந்த் வரும் நாவல்கள்.. அவை தமிழின் ஏனைய எந்த நாவல்களை விடவும் அதி சுவாரசியமானவை என்கிறபோதும், ஒரேமாதிரியானவை. ஒரு நடுத்தர வயது ஓய்வூதியர், அவருக்கு ஒரு அழகிய மகள், அவள் வசந்துடன் கட்டிப்பிடிக்குமளவு பரோபகாரமாயிருப்பாள், ஆனால் அப்பாவி. எந்தப் பெண்ணுக்கும் சித்தப்பாவோ, வளர்ப்புத் தந்தையோ இருந்தால், அவர் அவளுடன் மார்பை தடவும் அளவுக்கு பழகுவார். கதை எவ்வளவு எதார்த்தமாக நடந்தாலும், கிளைமாக்சில் அது சர்வதேச ஆயுத ஊழலுடன் சம்பந்தப்படும். கதையில் நடுப்பாகத்தின் இறுதியில் யாராவது ஒருவர் இதெல்லாம் மாயையா என்கிற ரீதியில் சொளிப்சிச தத்துவார்த்த ரீதியில் குழம்புவார். எல்லாவற்றிலும் கெட்டவர்களுக்கு நன்மை, அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காது என்கிற சுஜாதா என்கிற தனிமனிதரின் நிஜ வாழ்க்கை இயலாமை தென்படும். இப்படி ஆயிரம் ஒற்றுமைகளை நீங்கள் காணலாம். சுஜாதா வெளிநாட்டு கதைகளை திருடினார் என்பது பொதுவானகுற்றச்சாட்டு. கமல், சுஜாதா என்ற அந்தக்கால நவீன படைப்பாளிகள் அனைவரதும் தோல்வி இதுதான். வாசகர்களுக்கு உலகப் படைப்பின் பரிச்சயம் இல்லாத காலத்திலே தங்கள் படைப்புக்களாக சுட்டு சுட்டு பரிமாறினார்கள். இப்போது குட்டு வெளிப்படுகிறது.

சுஜாதாவின் கதை, கட்டுரைகளில் அவரது ஜாதிய வக்கிரம் தென்பட்டிருக்கலாம். ஐயங்கார்கள் எல்லோரும் புத்திசாலிகள், வன்முறை அறியாத அப்பாவிகள், தர்மவான்கள் என்பதாக அள்ளி விடுவார். அத்துடன் அந்தக் காலத்தில் பரபரப்பாக இருந்த திராவிடக் கட்சிகளின் போராட்டங்களை நையாண்டுவதையும் தனது கடமையாக கருதினார். //ஐயங்கார்களில் வலங்கலை, இடங்கலை என்று இரண்டு பிரிவு உள்ளது. திராவிடக் கட்சிகளில் சேர்ந்த எச்சக்கலை என்பது மூன்றாவது பிரிவாக....//


கேள்வி பதிலில் தனது மேதாவித்தனத்தை காட்டுவதற்கு வலிந்து திணிப்பார், தமிழை கொச்சைத்தனமாக பயன்படுத்துவார், ஹைக்கு கவிதை வடிவத்தை தானே சரியாகப் புரிந்து கொள்ளாமல், எழுதும் அனைவரையுமே விமர்சிப்பார்... இப்படி சுஜாதாவில் சொல்லுவதற்கு ஆயிரம் குற்றச்சாட்டுக்கள். ஆனால் எத்தனை சொன்னாலும் அழியாத புகழ் அவருடையது. இது கட்டுரையை யாருக்கும் பாதகமில்லாமல் முடிக்கும் உத்தி என்று புன்னகைக்க வேண்டாம். நான் எப்போதுமே சுஜாதா ஒரு ஜனரஞ்சக போலி எழுத்தாளர் என்கிற எனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கில்லை. ஆனால் எழுத்து உத்தி என்கிற அரிய திறமை அற்புதமாக வாய்த்த ஒரு தமிழ் எழுத்தாளர் அவர்தான். அவரது ரசிகன் என்கிற நிலை கடந்த பின்னரும், ஒரு கதையை தொடங்கினால் முடிக்காமல் வைக்க முடியாதளவுக்கு என்போன்றோரை இன்றளவும் கட்டி வைத்திருப்பதுதான் சுஜாதா. இன்று அவரது நினைவு நாள். என்று அவரை நினையாத நாள்?

(ஜோக் எங்கே என்றா கேட்கிறீர்கள்? உஷார் இல்லாத ஆளையா நீங்கள்...)


neethujan bala

எதிர்கால இராணுவவீரர்கள் எப்படி இருப்பார்கள்?

$
0
0
கி.பி 3456  செய்தி  எதிரி நாட்டின் விமானப்படை 5 சூப்பர் சோல்டியர்களால் ஒரே நாளில் முற்றாக அழிக்கப்பட்டது..ஏதோ சயன்ஸ்பிக்ஸன் கதையைப்போல் இருக்கின்றதா? இப்போதைக்கு சாத்தியமில்லை ஆனால் சாத்தியமே இல்லையென்று யார் சொன்னார்கள்? இராணுவ ஆய்வுமையங்கள் ஆயுதங்கள் பற்றிய ஆய்வு மையங்களில்  நீங்கள் இதைப்படித்துக்கொண்டிருக்கும் கணத்திலேயே ஏதாவது ஒரு அபிவிருத்தி ந்டந்துகொண்டுதான் இருக்கும்.

எதிர்கால இராணுவ வீரர்களின் அபிவிருத்தி என்பது அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள்,யுத்த தளபாடங்கள் போன்றஅனைத்தின் அபிவிருத்தியையும் உள்ளடக்கியது.பல ஹொலிவூட் திரைப்படங்கள் இந்த வகையறாக்களில் வந்துள்ளன.பொதுவாக எதிர்கால இராணுவ வீரர்கள் வித்தியாசமான துப்பாக்கிகளைவைத்திருப்பார்கள்.லேஸர் கண் போன்றவை இருக்கும்,இப்போதுள்ளவற்றைவிட மிகவும் சக்திவாய்ந்த பொடி ஆர்மர்களை அணிந்திருப்பார்கள்,இன்விஸிபிள் பவர்களைக்கொண்டிருப்பார்கள்,உச்சக்கட்டமாக சூட்களை அணிந்திருப்பார்கள்.இந்த சூட்கள் அதிகபலமான தாக்குதலை தாங்குவதற்கு ஏற்றவாறுவடிவமைக்கப்பட்டிருக்கும்.

 தொலைபேசி மனிதனின் அங்கங்களுள் ஒன்றாக  பெரும்பாலும் மாறிவிட்டது.வீட்டில் இருந்து வெளியேறியபின் தொலைபேசியை வீட்டில் விட்டதை அறிந்ததும் லிட்டில் ஹார்ட் அட்டாக்வருவதே இதற்குச்சாட்சி.இது சாதாரணவிடயம்.எலக்ரோனிக்ஸ் எப்படி எம்முடன் ஒட்டிக்கொள்கின்றது என்பதற்கு சிறிய உதாரணம்.ஆனால் எதிர்வரும்காலங்களில் இவ்வாறான உபகரணங்களை நேரடியாக மூளையின்கட்டுப்பாட்டிற்குள் இயங்கக்கூடியதான அங்கமாக எம்முடலில் பொருத்துவோம்.இதுவெறும்கதை அல்ல சாத்தியமானதுதான்.கண்தெரியாத ஒருவரிற்கு சத்திரசிகிச்சை செய்து மூளையின் பார்வைப்புலன் பகுதியில் தகடுகளைப்பொருத்தி மின்சாரம் கொடுப்பதன் மூலம் ஒளியை பொட்டுக்களாக உருவாக்கி பார்வையை ஓரளவிற்கு கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.அந்த பெண்ணிற்கு தலையில் சத்திரசிகிச்சை செய்து ஒரு பிளக்பொயிண்டை இணைத்துள்ளார்கள்.யு.எஸ்.பி போன்ற ஒன்று.அந்தப்பெண்ணிற்கு ஒரு பிரத்தியேகமான கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.அந்தக்கண்ணாடியில் இருந்து அவரது தலையில் இருக்கும் பிளக்பொயிண்டிற்கு வயர் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவைதான் நம் உடலில் எலக்ரோனிக் உபகரணங்களை பொருத்திக்கொள்வதற்கான ஆரம்பத்தின் ஸ்திரமான முதல்படிஎன எனக்குத்தோன்றுகின்றது.இதயத்திற்கு பற்றியை(Artificial cardiac pacemaker) இணைப்பதெல்லாம் ஆதி ஆரம்பம்தான்.செயற்கை கைகளையும் மனித உடலில் பொருத்தியதை செய்திகள் மூலம் அறிந்திருப்பீர்கள்.ஆனால் மனித மூளையிலேயே கைவைத்தல் என்பது பெரியவிடயம்தான்.




எதிர்கால வீரர்கள் சூட்கள் அணிந்திருக்கலாம்.அவர்கள் யுத்தத்திற்கு மட்டும் பயன்படுபவர்களாக மாற்றப்படுவார்கள்.இவ்வாறான கருத்துக்களுடன் வெளிவந்தி சில ஹொலிவூட்படங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

ரோபோ கொப்

இப்படத்தில் ஒரு பொலீஸ் போதைப்பொருள் கும்பலால் சுடப்பட்டுவிடுவார்.உயிர்பிழைப்பது அரிது என்று முடிவுவர அவரை ரோபோ ஆக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடுகின்றார்க்ள்.இறுதியில் ரோபோவாகவே ஆக்கிவிடுகின்றார்கள்.ஹீரோவின் மூளையைக்கொண்டு அந்த ரோபோ உருவாக்கப்படுகின்றது..



எதிர்காலத்தில் யுத்தத்தில் உயிருக்குப்போராடும்வீரர்கள் இதேபாணியில் ரோபோக்களாக்கப்பட்டு யுத்தத்திற்கு அனுப்பப்படலாம்.

இராணுவவீரர்களின் மூளைக்குள் சிப்பைப்பொருத்தி அவர்களை முழுமையாக கட்டுப்படுத்தி யுத்தத்திற்கு பயன்படுத்துவதைப்போல் ஒரு படம் வந்தது யூனிவேர்ஸல சோல்டியேர்ஸ்.இப்படி உருவான வீரர்களுக்கு களைப்பு,வலி என்பவை இருக்காது.காயங்களையும் உடனே மறைந்துபோகவைக்கமுடியும்.

டேர்மினேட்டரும் இதேவகைதான் என்ன மெலேகூறியவை எமக்குள் நடக்கும் யுத்தத்திற்கு பயன்பட்டவை ரேமினேட்டரில் ரோபோ மனிதனுக்கு எதிரான யுத்தத்தில்  தன்னைப்பயன்படுத்திக்கொண்டது.
உண்மையில் ரேமினேட்டரில் வரும் இயந்திரமனிதனை ரோபோ என்று அழைப்பதே தவறு சைபர்னெட்டிக் ஓர்கானிஸம் cybernetic organism.தன் சார்பான கட்டுப்பாடுகளைக்கொண்டுள்ள மனித உருவை ஒத்தது.இந்த லிஸ்டிற்குள் ரான்ஸ்போமேர்ஸை சேர்க்கமுடியாது ஏனெனில் அது ஏலியன் ரெக்னோலஜி.

அயர்ன் மான்தான் மிகச்சிறந்த உதாரணம்.அது ஒரு வெப்பன் என்று அப்படத்திலேயே கூறப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள்.ஒரு நாடு அயர்ன்மான் சூட் வைத்திருந்தாலே போதாதா?

உண்மையில் இப்படங்கள் மூலம் காட்டப்பட்டவை எல்லாமே எதிர்கால யுத்தங்களில் நாம் பயன்படுத்தவேண்டும் என நாம் எதிர்பார்த்தவைதான்.

ஹொலிவூட் படங்களைவிட கம்பியூட்டர் கேம்களில் இவ்வாறான பியூச்சர் ரெக்னோலஜிகள் நிறையவே பயன்படுத்தப்பட்டிருக்கும்.அவற்றாய் நாமே பயன்படுத்துவது போன்ற அனுபவத்தையும் பெறமுடியும்.கேம்கள் என்றால் அவற்றில் சிலவற்றை (நான் விளையாடியவற்றை)கூறமுடியும்.இந்த ரைப்பில் நூற்றுக்கணக்கான கேம்கள் வந்துள்ளன.இவ்வாறான பியூச்சர் கேம்களுக்கென்றே தனி ரசிகர்படையே இருக்கின்றது.

கிறைஸிஸ்

இந்த சூட்டை அணிந்தால் நீங்கள் வன்மான் ஆர்மிதான்.இந்த சூட்டிற்கு சில பவர்கள் இருக்கின்றன.இன்விஸிபிள்-கண்ணுக்குத்தெரியாமல் மறைதல்,சூப்பர் ஸ்ரெந்த்-ஒரு டாங்கியில் பொருத்தப்பட்ட மிஸின்கண்ணை அப்படியே புடுங்கிக்கூட எடுக்கமுடியும். பாஸ்ட்-மனிதர்களைவிட விரைவாக ஓடமுடியும்,மக்ஸிமம் ஆர்மர்-இந்த மூட்டை செலக்ட் செய்தால் சூட்டில் இருக்கும் செல்கள் இறுகிவிடும் குண்டுதுளைக்காது.
இவற்றைவிட கொஞ்சம் ஸ்பெஸலானவிடயம் காயம்ஏற்பட்டால் தானாகவே குணமடைந்துவிடும்.

இந்த சூட்டைப்பற்றி பேசுவதற்கு முன்னர்  தயவு செய்து பின்வரும் வீடியோவைப்பார்த்துவிடுங்கள்.




கிறைஸிஸ் என்ற கேமின் நனோ சூட்(Nanosuit)கொண்டிருக்கும் ரெக்னோலஜிகளைப்பார்த்தோம்.ஆனால் அவ்வாறு நடைமுறையில் ஒரு நனோ சூற்றை உருவாக்கமுடியுமா?
ஆம் .சாத்தியம் உள்ளது என்கிறது விஞ்ஞானம்.
நனோ ரெக்னோலஜிகளைக்கொண்டுதான் இந்த சூட் உருவாக்கப்பட்டது.நனோ ரெக்னோலஜி இன்று self cleaning glass,Genetic engineeringNanomedicines,Robotic surgery போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

( நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10−9) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களே அமர முடியும். பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications.)


மேலேவீடியோவில் துப்பாக்கிக்குண்டு தாக்குதலை சமாளிக்கக்கூடியவிதத்தில் நனோசூட்டின் செல்கள் சடுதியாக மாற்றமடைவது காட்டப்பட்டுள்ளது.இவ்வாறு மாறியபின்னர் துப்பாக்கிக்குண்டுகள் உடலை துளைக்காது.சூட் இப்போது armor ஆக தொழிற்படும்.
இது எவ்வாறு சாத்தியப்படலாம்.கார்பன்,வைரங்களைக்கொண்டு அணு அறுகோண அணு அமைப்பை உருவாக்கமுடியும்.காபன் அணுவும்,வைரத்தின் அணுவும் மாறி மாறி அருகருகே அடுக்கப்பட்டு இது உருவாக்க்ப்படும்.அப்போது தோன்றும் சேர்க்கை ஸ்டீலைவிட பன்மடங்கு வலிமையுள்ளதாக இருக்கும்.இதை கிரபீன் என்று அழைப்பார்கள்.சோ சூட் armor ஆக தொழிற்படும்.ஆனால் இதில் உள்ள பிரச்சனை சூட் உடனே அதிகஎடையாகிவிடும்.

graphene strongest material on earth



இன்விஸிபிள் பவர்-கிரபீன் மூலம் இது சாத்தியப்படலாம்.ஒரு பொருள் தன் மீது படும் ஒளியை முற்றாக தெறிப்படைய செய்தால் அந்தப்பொருளை பார்க்கமுடியாது.உதாரணத்திற்கு ஒரு கண்ணாடிக்கோளத்தை சற்று தொலைவில் வெளிச்சத்தில் வைத்தால் அங்கு கண்ணாடிக்கோளம் இருப்பதை அவதானித்தல் கடினம்.தெறிப்பைக்கட்டுப்படுத்தி தெறிக்கும் அளவைக்குறைப்பதன்மூலம்.ஓளித்தெறிப்பின் மூலம் அந்த கோளம் உணரப்படுவதையும் தடுக்கமுடியும்.

grapheneனின் வலிமையை விளக்கும் வீடியோ



அடுத்துவேண்டியது

பிஸிக்கல் ஸ்ரெந்தைக்கூட்டுதல் இதன்மூலம் ஒரு காரை உதைத்துவீழ்த்தமுடியும்.இதை சூற்றின் உதவியுடன் செய்யமுடியும்.இயந்திரக்கையைக்கொண்டு பாரங்கள் தூக்குதல்போன்ற தொழில் நுட்பத்தின் மாற்றுவடிவங்கள் மூலம் சாத்தியப்படலாம்.சூற்றில் உள்ள நார்கள் ஸ்டீல் கம்பிகள் போல்  நார்களில் இருந்து சடுதியாக மாறிமாயின் இது சாத்தியம்.ஆனால் இரத்த ஓட்டத்தை அதிகமாக்கியோ ஊக்க மருந்துகளை சூட்டின் உதவியுடன் வழங்கியும் பலத்தை அதிகரிக்கமுடியும்.இதே தொழில் நுட்பத்தின் உதவியுடன் சாதாரண மனிதனின் வேகத்தைவிட அதிகவேகத்தைபெறமுடியும்.

ஆனால் இவ்வளவு வேலையையும் செய்வதற்குNanosuit ற்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கவேண்டி இருக்குமே அதற்கு என்ன செய்வது?Nanosuitஇன் வெளிப்புற உடலில் சோலர் செல்களை பொருத்திவிடலாம்.அதோடு இரு பொருட்களிற்கிடையிலான வெப்பனிலை வேறுபாட்டைக்கொண்டு மின்சாரத்தை உருவாக்கமுடியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் Nanosuitஇன் உட்பாகத்தை வெளிவெப்பனிலையை விட குறைவாக வைத்திருப்பதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.ஆனால் இவ்வாறு பெறப்படும் மின்சாரம் மிககுறைவு ஆகையால் சோலரே சிறந்த தெரிவாக இருக்கும்.

தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கு Nanosuitஇற்கு இவளவு ரெக்னோலஜி தேவைப்படுகின்றது.ஆனால் அயேர்ன் மான் சூட்டிற்கு இது எதுவுமே தேவைப்படவில்லை வெறும் வெளிப்புறக்கவசமே போதுமானதாக காட்டப்படுகின்றது.அயேர்ன் மான் சூற்றில் உள்ள மிகப்பெரிய குறைபாடு இதுதான்.அயர்ன் மான் சூட் அயர்ன்மான் படத்தில் வருவதுபோன்ற செயல்களை செய்ய உதவப்போவதில்லை.உள்ளே இருக்கும் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படும்.கவசம் மிக கனமாக இருக்கும்.கையாளல் கடினம்.ஆனால் Nanosuit  நார்களால் ஆனது தேவைக்கேற்ப அது கடினமான பொருளாக மாறக்கூடியது.இதனால்தான் Nanosuit அயேர்ன் மான் suit ஐவெற்றிபெறுகின்றது.

இவற்றை விளக்கும் வீடியோ



கிரைஸிஸ் கேமில் வரும்  நனோசூற்றை இப்போதைக்கு நாம் நினைத்துப்பார்க்க மட்டும்தான் முடியும் ஆனாலும் அயர்ன்மான் கவசம் நம் கைகளுக்கு எட்டும் தொலைவில்தான் உள்ளது.கீழே உள்ள வீடியோவைப்பாருங்கள்



தொடரும்...

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-04

$
0
0
எப்போதுமே ஒரே சுழற்சியில் பயிற்சிகள்,விரிவுரைகள்,சாப்பாடு, நித்திரை என்று இருக்கவேண்டாம் என்பதற்காக எம்மை சுற்றுலாவுக்கு அழைத்துச்சென்றார்கள்.ஒட்டுமொத்தமாக அனைத்துமாணவர்களையும் அழைத்துச்செல்லவில்லை குரூப் குரூப்பாக பிரித்திருந்தார்கள் எமது குரூப் எப் குரூப் 78 மாணவர்கள் இருந்தார்கள்.ஆண்கள் பெண்கள் என அனைவரும் பஸ்ஸில் ஏறுவதற்காகக்காத்திருந்தோம் அடடே கேர்ல்ஸையும் போய்ஸையும் ஒரே பஸ்ஸிலா கொண்டுசெல்லப்போகின்றார்கள் ஜாலி என்று  நாம் சந்தோஸப்பட ஜோலியை முடித்துவிட்டார்கள் அங்கேயும் தனித்தனிபஸ்தான்...அட  ராவணா....சரி என்று அனைவரும் சுற்றுலாவுக்குக்கிளம்பினோம்.3 பஸ்கள் வந்திருந்தன ஏறி புறப்பட்டோம்.


ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-03(ராக்கிங்க்)




பொதுவாகவே சிங்களவர்களிடம் ஒரு விடயத்தை அவதானித்திருக்கின்றேன்.யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடிவரும்போதும்  நைனை தீவுக்கு வரும்போதும் அவதானித்தவிடயம் இது.சுற்றுலா என கிளம்பிவிட்டால் அவர்கள் பயணிக்கும் வான் அல்லது பஸ்ஸிற்குள் அனைவரும் ஆடிப்பாடி மிகவும் மகிழ்ச்சியாகவே செல்வார்கள் அதே போலத்தான் பஸ் புறப்பட்டதுமே சிங்களமாணவர்கள் அனைவரும் சேர்ந்து பாட ஆரம்பித்துவிட்டார்கள் பஸ்ஸிற்குள் இருந்த தண்ணிப்போத்தல்களைக்கொண்டு பாட்டிற்கேற்றவாறு தாளம்வேறு போட்டார்கள்.இதை அவர்கள் பைலா என்று அழைக்கின்றார்கள்.எவ்வாறு இது சாத்தியமாகின்றது திடீர் என்று ஒருவன் பாட ஆரம்பிக்க அனைவரும் சேர்ந்து பாடுகின்றார்கள் தாளம்போடுகின்றார்கள் என்று கேட்டதற்கு.சிறியவயதில் இருந்து தங்கள் பாடசாலைகளில் இது ஒரு அக்ரிவிட்டியாம் எனவே இந்த பைலா மேட்டர் அவர்களுக்கு சாதாரணவிடயம்.சரி அவர்கள் பாட ஆரம்பித்துவிட்டார்கள் நாமும் பாடுவோம் என்றுவிட்டு பாட ஆரம்பித்தோம் என்ன கறுமமோ அன்றைக்குப்பார்த்து 4 வரிக்குமேல் பாடல்வரிகள் யாருக்குமே நினைவுக்கு வராமல் போயிற்று சென்ற தமிழ்மாணவர்களில் நான் வந்த பஸ்ஸில் நடந்த சம்பவம்தான் இது.அதோடு இன்னொன்றையும் அவதானிக்கமுடிந்தது பெரும்பாலான சிங்களப்பாடலகளுக்கு ஒரே மெட்டில்தான் பிளாஸ்டிக்போத்தல்களால் தாளம்போட்டுக்கொண்டிருந்தார்கள்.ஆனால் தமிழ்ப்பாடல்களுக்கு அப்படி செய்யமுயற்சித்தால் சற்றுக்கடினம் இருந்தாலும் நாமும் பாடினோம் ஆடினோம்.சுற்றிவர மலைகள்,தோட்டங்கள்,அருவிகள்,வயல்கள் இவற்றிற்கூடாக நமது பஸ் பிரயாணம் செய்துகொண்டிருந்தது.இதுவரை காம்பில் அடக்க ஒடுக்கமாக இருந்து இப்பொழுதுதான் விடுதலை கிடைத்ததைப்போன்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கவேண்டும் கத்திவிசிலடித்து பாடி ஆடிக்கொண்டிருந்தோம். எமக்கு பொறுப்பாக இருந்தவர்கள் 2 தடவைகள் கத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள் ஆனால் பின்புவிட்டுவிட்டார்கள்.

முதலில் நாம் சென்றடைந்த இடம் சொரபொரவாவி


இவை எல்லாவற்றையும் தனி ஒருவனே உருவாக்கினான்





இதுதான் மனைவியின் கட்டைவிரல்




அங்கே சென்றதும் ஒரு குழுவாக அனைவரையும் இருத்திவிட்டு சொரபொரவாவி உருவான வரலாற்றைக்கூறஆரம்பித்தார்கள்.
bulatha giant என்ற ஒருவன் இருந்தான் அவன் துட்டகைமுனு மன்னனின் விசுவாசமான சேவகன்.மன்னனுக்கு வெற்றிலைகளைக்கொடுப்பதுதான் அவனது சேவை.அவனது குடியிருப்பிற்கருகில் ஒரு குளம் இருந்தது எனவே வெற்றிலைகளுக்கு நீர் பாச்சுவதற்காக அணைகட்டி வாய்க்கால் ஒன்றை அமைக்கலாம் என்று முடிவெடுத்தான்.தனி ஆளாக ஒரே ஒரு மண்வெட்டியின் உதவியுடன் சொரபொரவை செதுக்க ஆரம்பித்தான்.படிகள்,அணை போன்றவற்றை உருவாக்கினான் அதுவும் தனிமனிதனாக.அவனது மனைவியும் ஒரு ஜயன்ற் அவள் கணவனுக்கு உணவுகொண்டுவருவாள்.கணவன் ஒரு வேளைக்கு 10 கிலோ அரிசி உண்பானாம்.அவள் வரும் வழியில் பெரிய பெரிய பாறைகள் குறுக்கிட்டன.அவள் தனியாக அந்தப்பாறைகளை அகற்றி பாதைகளை உருவாக்கினாள்.அதுதான் நாம் அந்த இடத்துக்கு வந்த வீதி என்று கூறினார்கள்.அந்தக்கணவன் தன் மனைவியைகௌரவிக்கும் முகமாக மனைவியின் கட்டைவிரல் ஸைசில் கால்வாயை அமைத்தான்.தவறுதலாக அவ்விடத்திற்கு வந்த துட்டகைமுனுமன்னன் சொரபொரவைப்பார்த்து அசந்துவிட்டான்.உடனேbulatha giantற்கு அவூரை பரிசாகக்கொடுத்து கௌரவித்தான்.ஏது ஒரே ஒருதன் இந்த வாவியைக்கட்டினானா?ஒரு வேளைக்கு 10 கிலோ அரிசியா இதெல்லாவற்றையும் நம்ப சொல்கின்றார்களா என்றால்...அட செங்கட்டியை பொன்கட்டியாக்கியதை நம்பியவர்கள் நான்கள் இத நம்ப மாட்டமா(பிரேம்ஜி ஸ்ரைல்)


கதைமுடிந்ததும்  சில மாணவர்கள் பாடினார்கள் பின்னர் எமது லெப்டினல்களும் பாடினார்கள் பாட்டுக்கள் முடிந்ததும் அனைவரும் கலைந்துசென்று இடங்களைபார்வையிட்டோம்.அப்பொழுதுதான் அவதானித்தேன் அனைத்து பெண்களும்  போனில் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.காரணம் நமது காம்பில் கவரேஜ் இல்லை ஆக டயலக்கிற்கு மட்டும்தான் கவரேஜ் இருந்தது அதுவும் சில நேரங்களில்தான்.சோ அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்திருக்கின்றார்கள்.குழுக்கள் குழுக்களாக போட்டோக்களை சுட்டுத்தள்ளினோம்.




இந்தப்போத்தில எங்கேயோ பாத்திருக்கன்







சொரபொரவில் அன்றைய மாலைப்பொழுது மகிழ்ச்சியாகக்கழிந்தது.அப்படியே வாவியின் அருகில் உள்ள கடையில் ஒரு பிளேன் டீ(சாயா) அதோடு ஒரு கருப்பட்டி குடித்தோம்.சீனி எல்லாம் இல்லை.கருப்பட்டியுடன்தான் டீயைகுடிக்கத்தந்தார்கள் அதுவும் நன்றாகத்தான் இருந்தது.
எமக்காக காத்திருந்த பஸ்வண்டிகளில் ஏறிப்புறப்பட்டோம்.மீண்டும் பாட்டுக்கள் ஆரம்பமாயின.பாடுவதுடன் சேர்ந்து ஆடியதால் குளித்ததுபோன்று வேர்த்துவிட்டது சரி அப்படியே போய்க்குளித்துவிட்டு படுத்துக்கொண்டால் அதுதான் சொர்க்கம் என்ற நினைப்பில் இருக்க பஸ் மகியங்கணைவிகாரைக்கு சென்றது.

பசங்க போஸ்கொடுக்க சொன்னாங்க( நோ நோ அழக்கூடாது)

மகியங்கணை விகாரை...
அனைவரும் பஸ்ஸிற்குள் பாதணிகளை கழற்றிவிட்டு விகாரைக்குள் சென்றார்கள்.சரி நாமும் போய் பார்ப்போம் என்று புறப்பட்டோம் இந்துவும் ஒன்றுதான் பௌத்தமும் ஒன்றுதான் நண்பர்களுடன் புறப்பட்டாயிற்று.அப்போதுதான் பஸ்ஸிற்கு வெளியில் அவதானித்தேன் வீதியின் அருகில் உள்ள புற்தரையில் வரிசையாக நின்று தொழுகைசெய்ய ஆரம்பித்திருந்தார்கள் முஸ்லீம் சகோக்கள்.அவர்களுடைய  தொழுகை நேரம் அது. நாங்கள் உள்ளே சென்றோம்.விகாரைக்குள்ளே புத்தரின் பாதம் என்று பெரிய ஒரு பாதவடிவிலான உலோகப்பாதம் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் கல்வெட்டுக்கள்  இருந்தன.விகாரையினுள்ளேயே காளிக்கும் கோவில் இருந்தது உள்ளே விஸ்னு முருகன் படங்கள் இருந்தன.விகாரையின் உட்புற அலங்காரங்களிற்கும் எமது இந்துக்கோவில் உட்புற அலங்காரங்களிற்குமிடையில் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள்தான் இருக்கமுடியும் என்பதை அவதானிக்கமுடிந்தது.பூசாரி கதிர்காமத்தில் பூசை செய்வதுபோல் வாயை வெள்ளைத்துணியால் கட்டி சமஸ்கிருத மந்திரம் சொல்லாமல் மௌனமாக பூசை நடந்த்தினார்.புத்தரின் வேறுவேறு நிலையிலான இருக்கைகளை சிலையாக வடித்திருந்தார்கள். வரும்போது பஸ்ஸிற்குள் ஆடிப்பாடிக்கொண்டுவந்தோம் சிங்கள தமிழ்ப்பாட்டுப்போட்டியே நடந்தது ஆனால் எமது காம்பிற்குத்திரும்பும்போது குரலே வரவில்லை தொண்டை அடைத்தேவிட்டது கத்திய கத்தல் அப்படி  நன்றாக களைத்துவிட்டிருந்தோம். இரவு 8.30 க்குத்தான் வந்து சேர முடிந்தது.வழக்கமாக அந்த நேரத்தில் இரவு உணவை உண்டுவிட்டு எமது ரூமிற்குத்திரும்பியிருந்திருப்போம் ஆனால் சுற்றுலா காரணமாக நேரம் சென்றுவிட்டிருந்தது.மிகுதியாக இருந்த களைப்பு யாரோ கட்டையால் அடித்துப்போட்டதுபோன்றுதான் இருந்தது எமது ரூமிற்குவந்து குளித்துவிட்டு  கட்டிலில் படுத்து கண்ணை மூடியதுமே  ஆழ்ந்த நித்திரை


தொடரும்....
அடுத்த பதிவில் மலை ஏற்றம்...  பாட்டுப்பாடுவதற்கு  எமக்குதடைவிதிக்கப்பட்டது... கல்சரலில் நடந்த சில கசப்பான அனுபவங்கள்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இஸ்லாமியராக மாறியதால் பதவி விலகினாரா?

$
0
0



எனது அருமை கிறிஸ்த்துவ சகோதரர்களே.

உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர். உலகிலுள்ள 120 கோடி ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தக் கூடிய போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் சில நாட்களுக்கு முன்னாள் தனது வயதை காரணம் காட்டி போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்தார். 

இவரது பதவி விலகலின் உண்மை காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

இவர் சில வருடங்களாக இஸ்லாமிய புத்தகங்களை படித்தும் குரானை ஆராய்ந்தும் வந்தார் அதன் தாக்கம் தான் தற்பொழுது அவர் போப் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

அவர் தற்பொழுது இஸ்லாமியராக உள்ளதாகவும். அதை பற்றி பகிரங்கமாக அறிவிக்க முடியாமலும் அறிவித்தால் ஆபத்து வரும் என்று கருதுவதாக வும். அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கிறார்களாம். அல்ஹம்துலில்லாஹ்.

இதை பற்றி மக்களுக்கு தெரிந்தால் சாரை சாரையாக இஸ்லாத்திற்கு மக்கள் வருவதை தடுக்கு இயலாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

கிறிஸ்த்துவ மக்களே சிந்தியுங்கள். நீங்கள் எந்த அளவிற்கு உண்மையான கிறிஸ்துவராக இருபிர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த போப் ஆண்டவர் பதவி வகித்தவர் எப்படி என்று நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும் அவரே தற்பொழுது குரானை ஆராய்ந்து பார்த்து இஸ்லாத்தின் பால் தனது பார்வையை திருப்பி உள்ளார். 

உங்கள் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைக்கிறோம் வாருங்கள் இணைவோம் ஓரிறை கொள்கையில். 

இஸ்லாத்திற்கு வரவும். இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளவும். இலவச குரான் தேவை படுபவர்களும் தயவு செய்து எனக்கு மெசேஜ் செய்யுங்கள். உங்களுடன் பேச ஆவலாக உள்ளேன்.

பைபிள் இறைவேதமா? என்ற பேஸ்புக் பான் பேஜ் ஒன்றிருக்கின்றது பைபிளைக்கழிவிக் கழுவி ஊற்றுவது இந்தப்பேஜின் தலையாய பணிகளுள் ஒன்று

இந்தப்பேஜின் கொடுமையான விடயம் என்னவெனில் பைபிளில்  இருக்கும் விஞ்ஞான விளக்கம் என்று ஒரு விளக்கத்தை கிறீஸ்தவர்கள் வெளியிட அது அறிவியல் ரீதியில் முற்றிலும் பொருத்தமற்ற முட்டாள்தனம் என்று வாதிடுகின்றது இந்தப்பேஜ்....

ஆனால் குர்ரானில் கூறியவை மட்டும் விஞ்ஞான ஆரய்ச்சிக்குட்படுத்தமுடியாது,உட்படுத்தக்கூடாது காரணம் அது புனித நூல் கூறியது கூறியதுதான்... என்ன கொடுமை சரவணா?
குர்ரானில் கூறியதை நான்கள் பிழைகூறவில்லை அதில் கூறியதென்று நீங்களாக ஒரு கதைகட்டிவிடுவதைத்தான் பிழை என்கிறார்கள்...ஏதோ கொஞ்சமாவது சயன்ஸ் படித்தோர்....

பைபிளைப்பற்றிய இந்தப்பெஜின் கேள்விகள்..(பல கேள்விகள் கருத்து யுத்தங்கள் நடைபெறுகின்றன... மாற்ருக்கருத்தை நீங்கள் முன்வைப்பீர்களாக இருந்தால் நீங்கள் தடை செய்யப்படுவீரகள்(கருத்து சுதந்திரமாம்)

//12 , 13 ஆகிய வசனங்களில் தேவன் எதற்காக வானவில்லை உண்டாக்கினார் என்ற ஒரு மாபெரும் அறிவியல் தத்துவத்தை பைபிள் சொல்கிறது. வானவில்லை நான் எதற்கு வைத்தேன் தெரியுமா ? இனி உங்களை ஜலப்பிரளயத்தில் கொல்ல மாட்டேன் என்று நான் உங்களிடம் உடன்படிக்கை செய்துள்ளேனே ? அதற்கு அடையாளமாக வானவில் இருக்கும். இந்த உடன்படிக்கை எனக்கு மறந்து போக கூடாதுன்னு இந்த வானவில்லை வைத்து நான் நினைவு கூர்ந்து கொள்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்.வானவில்லை வைத்துதான் கர்த்தர் நினைவு கூற வேண்டுமா ? கர்த்தருக்கு நினைவாற்றல் அவ்வளவு மந்தமா ? வானவில் இல்லை என்றால் கர்த்தர் ஜலப்பிரளயத்தை மறந்து விடுவாரா? என்பன போன்ற கேள்விகளை கூட ஒதுக்கி வைத்து விடலாம்.இங்கே நாம் சொல்ல வருவது என்னவென்றால் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலபிரளயதிர்க்கு பின்புதான் வானவில்லை கர்த்தர் வானத்தில் வைத்தாராம் !!!!வானவில் எதனால் உண்டாகிறது ? "Principle Of Dispersion Of Light " என்று பள்ளிகளில் நாம் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்புக்களில் படித்திருப்போம். அந்த அளவிற்கு கூட கர்த்தரின் அறிவு வளரவில்லை என்பதற்கு [ஆதியாகமம் 9 :13] சாட்சி.

இந்த "Principle Of Dispersion Of Light " என்றால் என்ன ? வெள்ளை ஒளி ஒரு முப்பட்டகம் (Prism ) வழியாகவோ அல்லது ஒரு அலைவளைவுக் கீற்றணி (Differential Grating) வழியாகவோ சென்றால் தன்னுள் ஐக்கியமாகி இருக்கும் பல நிறங்களாக (அலைநீளங்களாக Wavelenghths) பிரியும். வானவில் எதனால் வானத்தில் உண்டாகிறது என்றால் மழை துளிகளோ, அல்லது மிக சிறிய பனி துளிகளோ பூமியில் விழும் போது சூரியனின் வெள்ளை ஒளி அதில் படும். அப்போது ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு முப்பட்டகம் போல் செயல்படும். எல்லா முப்பட்டகங்களிலும் உள்ளுக்குள் ஏற்படுகின்ற Refraction - Reflection -Refraction இந்த நீர்துளிகளிலும் ஏற்படும். அதனால் பல அலைநீலங்களாக வெள்ளை ஒளி பிரிந்து வானவில்லாக நமக்கு காட்சியளிக்கும். வானவில்லின் உள்ளுள்ள பகுதியில் Scattering Of Light (ஒளி சிதைவு) அதிக அளவில் இருக்கும். 

இது நோவாவின் காலத்தில்தான் முதன்முதலில் நடந்ததா ? நோவாவின் காலத்திற்கு முன்னரே சூரியன் இருந்தது. மழையும் பொழிந்தது. அப்போவெல்லாம் வெள்ளை ஒளி பிரியவில்லையா ? அப்படி பிரியவில்லை என்றால் நோவாவின் காலத்தில் கடல் ஊதா நிறத்தில் இருந்திருக்காது, வானம் ஊதா நிறத்தில் நோவாவிற்கு தெரிந்திருக்காது, இலைகள் பச்சை நிறத்தில் தெரிந்திருக்காது, நோவாவும் மனிதன் இருக்கும் நிறத்தில் இருந்திருக்க மாட்டார். பூமியில் எல்லாமுமே வெள்ளை வெள்ளையாகத்தான் இருந்திருக்கும் !!!!!ஆக [ஆதியாகமம் 9 :13] த்தில் பைபிள் சொல்வது அறிவுக்கு பொருந்தாத ஒரு விஷயம் என்று தெளிவாகிறது. கர்த்தர் கொடுத்த வார்த்தையாக இருந்திருந்தால் இந்த முரண்பாடு வந்திருக்காது. //

குர்ரான்

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்……….. குரான் 13:2; 31:10.
“சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது” குரான் 36:38 

ஆகவே பிரபஞ்சம் விரிவடைகின்றது என்பதை குர்ரான் அப்போதே தெரிவித்துள்ளது( எது சார்பாக விரிவடைகின்றது அதுசரி பிரபஞ்சம் விரிவடையுது என்றால் அதை எப்படி நம்புவது என்று மதவாதிகள் கேட்பார்கள் டொப்லர் இபக்டைவைத்து விளக்கியதும் உடனே கூறுவார்கள் இதைத்தான் குர்ரானும் அப்போதே கூறிவிட்டது ஆனால் அப்படி ஒரு விடயம் இருக்கின்றது என்பதையே இவர்களுக்கு அறிவித்தது விஞ்ஞானமாகத்தான் இருக்கும்,விஞ்ஞான விளக்கங்களை தமது சமயத்திற்குள் புகுத்திக்கொள்ளல்தான் இப்போதைய புதிய ரெண்ட்...இந்து சமயத்தில் ஆரம்பகால மக்களை கவருவதற்கு நாயன்மார்கள் அதிசயம் செய்வார்கள்,செங்கட்டியைப்பொன்கட்டியாக்குவார்கள் கல் எல்லாம்மிதக்கும் இந்து சமய உண்மைகளை ஆற்றில் இட்டால் எதிர் நீச்சலடித்து கரைக்குவந்து சேரும்(சம்பந்தர் சமணர்களுடனான அனல்வாதம் புனல் வாதத்தில் இவைகளை செய்தார் என்கிறது புராணங்கள் அப்போதைய மக்களின் அறியாமையைப்பயன்படுத்தி சமயத்தை வளர்க்கும்விதத்தில் அமைக்கப்பட்ட இவ்வாறான அதிசயங்கள் ஆச்சரியங்கள் அக்கால மக்களுக்கு ஓகே ஆனால் இப்போது யாராவது நம்புவார்களா என்றால் பதில் இல்லை என்பதுதான் ஆகவே இப்போதைய முட்டாள்தனத்தைப்பயன்படுத்தவேண்டும்.இப்போதைய முட்டாள்தனம் என்ன...சயன்ஸ்பற்றிய மிகக்குறைந்த அறிவுதான் இப்போதையமுட்டாள்தனம் ஒருவிடயத்தைப்பற்றிய குறைந்தபட்ச அறிவைப்பெற்றிருத்தல் என்பது அவ்விடயத்தைப்பற்றி தெரியாமல் இருப்பதை விட ஆபத்தானது இதே போர்முலாவை சமயத்தில் பயன்படுத்துகின்றார்கள்,,பிக் பாங்க்,அணுகுண்டு,அணு,பிக் போஸன் போன்ற வசனங்களை விடயங்களை மக்கள் கேட்டிருக்கிறார்களே அன்றி அவற்றைப்பற்றிய போதுமான அறிவு பலருக்கு இல்லை அணு என்ற வார்த்தையைமட்டும்கொண்டு அணுவை ஓளவையார் கண்டுபிடித்தார் என்பதுமுதல் பல பீலாக்களை அள்ளிவிடுகின்றார்கள் அணு தன் முழுவடிவைப்பெறவே நூற்றாண்டுகாலமாகியது மில்லியன்கணக்கான பணம் நேரம் பல விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சி ஏற்கனவே இந்த அணு விடயத்தில் இது தொடர்பான பதிவை இட்டிருந்தேன்...அணு என்ற விடயத்தை நாம்  விஞ்ஞானத்திடமிருந்துதான் புரிந்துகொண்டோம் தவிர ஓளவையாரிடமிருந்தல்ல...சப்போஸ் எமது சமயத்தில் இது இருப்பதாக கொண்டால் எவளவு செலவு மிச்சம்... விஞ்ஞானிகள் தமது வாழ்க்கையை வேறுகண்டுபிடிப்புக்களிற்கு செலவிட்டிருப்பார்கள்.சயன்ஸ் ஒரு விடயத்தை எழுத்து ஆதாரத்துடன் கூறினால் மட்டும் ஏற்றுக்கொள்ளாது பரிசோதனைகள் தேவை வெறும் வார்த்தைகள் வார்த்தை ஜாலங்கள் ரசிப்பதற்குவேண்டுமானால் நன்றாக இருக்கும்) இப்படி குர்ரான் விளக்கங்கள் பல இணையத்தில் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன... 




கார்பன் கூட்டாளி என்ற பதிவர் இதைப்பற்றி அதிகம் எழுதுபவர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் ஜெகோவாவின் சாட்சியங்கள் என்ற பெயரில் மதம் பரப்ப வருவார்கள் வாசலில் வைத்து அடித்து துரத்துவதில்லை அவர்களது கதையைக்கேட்டால் ஒரு புத்தகம் தருவார்கள் அதில் அறிவியல் விடயங்கள் நிறையவே இருக்கும்...இடையிடையில் பைபிளன் வசனங்க்ளைப்போட்டு பைபிளில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறுவார்கள்...அந்தப்பகுதியை மட்டும் சகித்துக்கொண்டால் தெரியாத அறிவியல் விடயங்களை தெரிந்துகொள்ளலாம் இதேபோல்தான்  நான் கார்பன் கூட்டாளி பதிவுகளை நான் வாசிக்கின்றேன் எனக்கு தெரியாத சில பல விடயங்கள் பதிவில் இருக்கும் அவற்றை மட்டும் எடுத்துக்கொள்வதுடன் சரி...மதப்பிரசாரத்திற்கான ஏற்படுத்தப்பட்ட நூதன வழிதான் இது...சும்மா பாண் துண்டைக்கொடுப்பதை விட ஜாம் பூசிவிட்டு பாண்துண்டைக்கொடுப்பது போன்றதுதான் இது....

அவரது பதிவில் நான் இட்ட கொமண்ட் ஒன்று..இது எந்த மத பிரசார பீரங்கி ஐ மீன் சயண்டிபிக் விளக்கம் கொடுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பொருந்தக்கூடிய கொமண்ட்டாகத்தான் நான் கருதுகின்ரேன்

//சமயங்களில் உள்ள புனித நூல்களில்,புராணங்களில் கடவுளின் புகழ் பரப்புவதற்கு பல அதிசயங்கள் கூறப்பட்டிருக்கும் இந்து சமயத்தில் பல இருக்கின்றது செங்கட்டியை பொன் கட்டியாக்கினார் அது இதுவென்று..இவற்றைக்கூறி மக்களை ஆச்சரியத்திற்குட்படுத்தி மக்களால் முடியாதவற்றை சமயம் செய்கின்றது என காட்டி சமயத்தை பரப்பும் முயற்சிகள் அவை ஆனால் தற்போது இவற்றை சொன்னால் கேள்விகேட்பார்கள் சோ அவை தோற்றுப்போயின எனவே இருக்கவே இருக்கு ஒரு வழி பைபிளில் விஞ்ஞானம் பிரபஞ்ச ரகசியம்,குர்ரானில் ரகசியம் என்று இப்போது புதிதாக் கிளம்புகிறார்கள்.உங்களது போஸ்டில் விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன ஆனால் குர்ரான் தொடர்பான கருத்துக்களை அவற்றோடு இணைத்ஹ்டுவிடுகின்றீர்கள்...என்னைப்பொறுத்தவரை விஞ்ஞான வளர்ச்சியின் முன் சமயங்கள் ஈடுகொடுக்கமுடியாது என்ற உங்களது பயம்தான் குர்ரானுக்கு விஞ்ஞான விளக்கம் தேடவைத்துள்ளது..ஏனெனில் நீங்கள் குர்ரானை மாற்றமுடியாது இதே நிலைதான் பைபிளிற்கும்..
கொடுமை என்னவெனில் இவை எல்லாம் குர்ரான் ,பைபிள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது என கூறுகின்றீர்கள் உலகத்தில் எங்கேயாவது குர்ரான் விஞ்ஞானம் என ஒரு பாடத்தை கற்பிப்பார்களா? ஒருவேளை அரேபிய நாட்டில் செய்வார்கள் அவர்கள் இன்னும் அதைத்தான் செய்யவில்லை..

நாஸாவோ,அல்லது ரஷ்யாவோ அல்லது சீனாவோ வேறு நாடிகளில் உள்ள எந்த சயின்ஸ்டிஸ்ட் ஆவது குர்ரானையோ பைபிளையோ ஆராய்ச்சிக்குட்படுத்துங்கள் என கூறி அவற்றை ஆராய்கின்றானா?சயின்டிஸ்ட் சமய நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம் அது அவர்களது தனிப்பட்ட விடயம் ஆனால் சயன்ஸுக்கு பரிசோதனை ஆதாரங்கள்தான் தேவை குர்ரானை வைத்து என்ன பரிசோதனை செய்யமுடியும் என்கிறீர்கள்?எந்த சமய நூலையும் வைத்து எந்த பரிசோதனையும் செய்யமுடியாது புளொக்கரில் நாம் இவற்றை பற்றிவிவாதிக்க முடியும் நிஜ உலகில் குர்ரான் சமய புத்தகம் என்பதைத்தவிர சயன்ஸுகு அது உதவப்போவதில்லை...பரிணாமம் பிழையாகவே இருக்கட்டும் இன்னொரு விதி கண்டுபிடிக்கப்படும்..கடவுள்தான் உருவாக்கினார் என்றால் எமக்கு ஆதாரம் வேண்டும் எழுத்துக்களைக்கொண்ட புத்தகம் ஒரு ஆதாரமாக கொள்ளமுடியாது..பரிணாமத்தில் சடுதியாக உயிர் தோன்றியதாக எச்சங்கள் ஆதாரங்களை தெரிவிக்கின்றன என ஒரு சமய்வாதி கூறினார் விண் கற்களில் இருந்து உயிர்வந்தது என்றும் ஒரு கொள்கை இருக்கு இது பரிணாமத்தை பிழையாக்கினால் அந்த் கொள்கை வெற்றிபெற்றுவிடும்..அது பிழைத்தால் இன்னொன்று எமக்கு தேவையெல்லாம் 5 புல அறிவால் உணரக்கூடிய ஆதாரங்கள்.அவ்வளாவுதான்...

சமயம் அழிந்துவிடும் அல்லது மறுக்கப்பட்டுவிடும் என்ற உங்கள் ஆழ்மனப்பயம்தான் இவ்வாறான விஞ்ஞானக்கோட்பாடுகளுடன் இணைந்த போஸ்ட்களினூடாக வெளிப்படுகின்றது என் நான் நினைக்கின்றேன்..இவற்றை நீங்கள் கூறுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கலாம் ஆனால் இவற்றைத்தவிர இவற்றால் வேருபயன் நான் அறியேன்...நான் உங்களது போஸ்ட்களை படிக்க இருக்கின்றேன் ரீஸன் எனக்கு சில விஞ்ஞான விளக்கங்கள் தேவை அவ்வளவுதான்...சமயம் மனித உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம்..ஒருவனுக்கு அது ஊக்கியாக தொழிற்படும் என்றால் சமயம் நிலைத்திருக்கட்டும் அறிவியல் என்பது ஒருவனது(சாதாரண/பாமரமனிதன்) அக ஊக்கியாக தொழிற்படாது நீங்கள் அறிவியலின் துணை கொண்டு சமயத்தை பரப்புவதைத்தவிர்த்து...குர்ரானில் உள்ள நல்ல விடயங்களை தெளிவாக எடுத்துக்கூறுங்கள் நான் ஒரு இந்து ஆனால் குர்ரானில் என்ன இருக்கின்றது என அறிய ஆசைதான் ஆனால் சொல்லாடல்களில் உள்ள கஸ்ரம் படிப்பதை தள்ள்ப்போடுகின்றது இலகு தமிழ்/அழகு தமிழில் அவற்றை வெளியிடுங்கள் இப்படியானவற்றை செய்யுங்கள் தவிர சமயத்துடன் இணைத்து விஞ்ஞானக்கருத்துக்களை போடுவது உங்களை சார்ந்த சமயத்தவர்கள்,உங்களுக்கு மட்டுமெ மகிழ்ச்சியை ஏற்படுத்தும்//

பரிணாமம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது  பதிவுலகத்திற்கு வந்த பின்னர்தான் தெரிந்தது குரு படத்தில் அபிஸேக் சொல்லுவார் தாசில்தார் என்கிற வார்த்தை கெட்டவார்த்தையாகனும் என்று அண்ணளவாக அதே வேலைதான் பரிணாமம் என்ற வார்த்தை இணையத்தில் கெட்டவார்த்தையாக மாறிக்கொண்டிருக்கின்றது..

பரிணாமத்திற்கு ஆதாரம் கேட்பவர்கள் பலரிடம் கடவுள் தொடர்பான படைப்பிற்கு ஆதாரம் கேட்டால் அவர்களிடம் எதுவுமில்லை பிறிண்ட் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தைத்தவிர...ஆனால் விஞ்ஞான விளக்கம்கூறும்போதுமட்டும் அகழ்வாரச்சி சான்றுகள் எச்சங்கள் கார்பன் டேட்டிங்க் முதல்கொண்டு அனைத்தும் தேவையாம் சுருக்கமான மதவாதிகளின் நிலையை கீழே உள்ள கார்ட்டூன் மூலம் விளங்கிக்கொள்ளமுடியும்.
இதுதாய்யா இங்க பலரது நிலமை
குர்ரான் விளக்கங்கள் தொடர்பில் ஏற்கனவே செங்கொடி பதிவுகளை அள்ளியிறைத்திருந்தார் எல்லாம் உங்களுக்குத்தெரிந்ததுதான் நான்தான் பீல்டுக்கு புதுசு

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்


சரி விடுங்கள் பிரச்சனைக்கு வருகின்றேன் "பைபிள் இறைவேதமா" என்ற பேஜில் 16 ஆம் பெனடிக்ட் இஸ்லாமியராக மாறியிருப்பதுதான் பதவி விலகக்காரணம் என்ற கூற்று மிக நகைப்பிற்குரியது...அதைவிட அதற்காக அவர்கள் ஒரு போட்டோவை இணைத்திருந்தார்கள் 16 ஆம் போப்பாண்டவர்  குர்ரானை கிஸ்செய்வதைப்போன்ற போட்டோ அது அதில் இருப்பவர் உண்மையில் 16 ஆம் போப் அல்ல...2005இல் மரணமடைந்த Pope John Paul II என்பவரது போட்டோதான் அது அவர் குர்ரானை கிஸ்செய்தார் என்பது உண்மைதான்.அதோடு 16 ஆம் பெனடிக்ட் குளோனிங்க் போன்றவற்றிற்கும் தனது எதிர்ப்பை பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

May 14, 1999 - John Paul II kisses the Koran (Qu'ran) at the Vatican.

To the objectors who claim that this book was not the Koran, we present an excerpt from an interview with FIDES News Service (June 1, 1999). In it, Chaldean Catholic Patriarch Raphael I affirmed that he was present when John Paul II kissed the Muslim "holy" book:

 "On May 14th I was received by the Pope, together with a delegation composed of the Shi'ite imam of Khadum mosque and the Sunni president of the council of administration of the Iraqi Islamic Bank. There was also a representative of the Iraqi ministry of religion. ....

"At the end of the audience the Pope bowed to the Muslim holy book, the Qu'ran, presented to him by the delegation, and he kissed it as a sign of respect. The photo of that gesture has been shown repeatedly on Iraqi television and it demonstrates that the Pope is not only aware of the suffering of the Iraqi people, he has also great respect for Islam."

இது நடைபெற்ற காலத்தில் இது தொடர்பான பல எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன என்பதும் உண்மைதான்...

மத நல்லிணக்கம் என்பதை மதவாதிகள் மதித்தால் கூட இப்படித்தான் பிரச்சனையில் போய்முடிகின்றது.பொழுது போகவில்லையெனில் அந்தப்பேஜை லைக்செய்யுங்கள் நன்றாக பொழுது போகும்


இணையத்தில் நியூயோர்க் ரைம்ஸ்,சி.என்.என்,டெய்லி மெயில்,பி.பி.சி என்று எதில் தேடியும் போப் இஸ்லாமுக்கு மாறியதுதான் பதவியை ராஜினாமா செய்யக்காரணம் என்பதுதொடர்பான எந்த செய்தியையும் என்னால் அறியமுடியவில்லை ஆனால் முஸ்லீம் சைட்கள் மட்டும் இப்படியான செய்திகளைவெளியிட்டிருப்பதுடன்...போப் உண்மையான இறைவன் அல்லாதான் என பேட்டிகொடுத்திருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன...


Dead Seriousness News: Pope Benedict XVI Resigns Papacy, Converts To Islam



HOLY SEE – In a shocking press conference Sunday, Pope Benedict XVI revealed to the world that he will be stepping down from the Catholic Church’s highest office. “Through prayer and reflection over the past years,” the world’s holiest man began, “I’ve realized that Allah is the one true God.”
Amid clattering camera shutters and roaring reporters, Pope Benedict patiently answered questions, citing traditional Muslim folklore as well as passages from the Qur’an to explain his decision. His session was interrupted only once, when he swiveled South-East to face Mecca, stooped to the ground, and recited the Asr, one of the five daily prayers central to Muslim belief.
The startling reversal comes as a shock to many familiar with the Pope’s policies on Islam. “Show me just what Muhammad brought that was new and there you will find things only evil and inhuman, such as his command to spread by the sword the faith he preached,” the Bishop of the Vatican famously said of Islam in his 2006 lecture Faith, Reason and the University—Memories and Reflections.
When asked about the quote, Pope Benedict sighed with good-humored remorse and chuckled quietly to himself: “Yeah I’ve regretted that for some time. But I was young and naïve… I see things much clearer now. Besides, I’ve always kinda liked the thought of having a sword. The Cardinals were a real pain on that one.”
When asked whether he would be reverting to his born name, Pope Benedict enthusiastically interjected. “I’ve decided to change my name to Sajjad Sayyid Ratzinger,” His Ex-Holiness explained. “I’m keeping my surname purely for logistical reasons, so my Facebook friends and Twitter followers won’t be confused.”
His transition hasn’t been without opposition. Hours after the press conference, a special Fox and Friendssegment aired on FOXNEWS, featuring a picture of the Pope photoshopped to include stereotypical Islāmic features, including: a turban in place of his mitre, darkened complexion, black hair, and Arabic letters spelling out an endorsement of Barack Hussein Obama tattooed across his chest. Beneath the picture, the panel discussed the possible involvement of Pope Benedict XVI, 85, in 9/11. The segment’s title, “The Holy Heathen,” emblazoned the lower left corner of the screen.
This morning, newspapers nationwide featured an editorial by Bill O’Reilly detailing the parallels between the Pope’s “betrayal of God-loving Christians everywhere” with the “betrayal of the American people and the Constitution by Benedict Arnold, his liberal agenda, and his radical left-wing entourage.”
போதாததற்கு தமிழ் இணையத்தளங்களும் தங்களால் ஆன பணிகளை செய்திருக்கின்றன..
பாப்பரசருக்கு பணிவிடை செய்தவர் ஊடகங்களுக்கு வழங்கிய அதிர்ச்சி தகவல்..
16வது பாப்பரசர், ஆசிர்வதிப்பர் எனும் போப்-பெனடிக் இஸ்லாத்தைத் தழுவினாரா? அல்லது இது ஓர் பொய்யான செய்தியா என்பதில் இன்று உலகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியைத் துறந்த போப் பெனடிக் அவர்களின் பின்னால் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன.
பாப்பரசரருக்கு பணிவிடை செய்பவர்களுள் ஒருவர் ஆச்சர்யம் மிக்க தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி இருக்கின்றார்.
அவற்றுள், கடந்த ஞாயிறு தினத்தன்று போப் அவர்கள் முஸ்லிம்கள் வணங்குவதற்கு தகுதியான திசையாக எடுக்கும் மக்கா திசையை நோக்கி எழுந்து நின்று வணக்கமொன்றை மேற்கொண்டதாகவும், அது ‘அஸ்ர்’ எனப்படும் முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகைகளில் ஒன்றாக இருந்தது’ எனவும் கூறியிருந்தார்.
மேலும் 2006ல் இருந்து இஸ்லாமிய மறையான அல்குர்ஆனைப் படிப்பதில் போப் பெனடிக் அவர்கள் ஆர்வம் காட்டி வந்ததாகவும் கூறியிருந்தார்.
இச்செய்தியைக் கேட்டதும் மீடியாக்கள் அதிர்ச்சியடைந்தன. தங்களது ஒளி-ஒலிபரப்பு சாதனங்களை கீழேவைத்துவிட்டு, வத்திக்கான் வணக்கஸ்தலத்தின் ஊடகப் பிரிவில் போப் அவர்களைக் காண இருந்தவர்கள் வாயடைத்துப் போயினர். நம்ப முடியாமல் தங்களது அலுவலகங்களை நோக்கித் திரும்பினர்.
இதைவிட, ஆம்! போப் அவர்கள் சென் பீட்டர்ஸ் பஸிலிகா தேவாலயத்தின் பல்கனியில் 5 வேளையும் மக்காவை நோக்கி தொழுது வந்திருக்கின்றார் எனவும், அல் குர்ஆனை அவர் படித்து வந்தார் என்பதும் தற்பொழுது வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தின் போப் அவர்களின் அதி நம்பிக்கைக்குரியவர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் மேற்கத்தேய ஆங்கில ஊடகங்கள் இச் செய்தியை மிக இரகசியமாக பேணி கையாண்டு வருவதாகவும், இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
சில கிறிஸ்துவ ஆங்கில ஊடகங்கள் ‘பாப்பரசர் இஸ்லாத்தை தழுவியது எனும் செய்து வெறும் கட்டுக் கதையே’ என்பதாக ஊர்ஜிதப்படுத்தி வருகின்றன
எப்படி இருந்த பொதிலும் ‘ முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பங்களின் போது முஹம்மது நபி அவர்களை மேற்கோள் காட்டி அமைதிப்படுத்தி வந்ததும், கடவுள் ஒருவர் இருந்தால் நிச்சயமாக அவர் ஒருவரே என்றும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது’ எனவும் ஊடகத்திற்கு பகிரங்கமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்ததும் உலகறிந்த விடயமே!


போப்பான்டவர் ராஜினாமாவுக்குக் காரணம் என்ன..?
[ குளோபல் இஸ்லாம் - GI ]

வாடிகனின் போப் 16ஆம் பெனடிக்ட் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகினார். முதுமையும் நோயும்தான் காரணம் என்று அறிவித்தார். கடந்த 600 ஆண்டுகளில் பதவியிலிருந்து தாமாக விலகிய முதலாவது போப் இவர்தான். இது கத்தோலிக்க வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

உண்மையில் வயோதிகம்தான் காரணமா...? 

இவரைவிடக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது யோவான் பவுல் பதவியிலிருந்து விலகவில்லையே! சஊதி ஆய்வாளர் ஒருவர் இது குறித்து ஆய்வு செய்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் மதங்கள் ஒப்பீட்டியல் மற்றும் வாடிகன் விவகாரங்களின் சிறப்பு ஆய்வாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸாம் முதீர் எனும் அந்த ஆய்வாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்களாவன:

புராதன பைபிள் ஒன்று கிடைத்திருக்கும் இரகசியம் வெளியுலகிற்குக் கசிந்ததே உண்மையான காரணம். அதில் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த மூவர் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமன்றி, அதை வெளிப்படுத்தாமல் வாடிகனிலேயே தற்போது இருந்துவருகின்றனர். போப் அம்மூவரைப் பற்றி அறிய விரும்புகிறார். அவர்களில் ஒருவர்தான் தகவல் கசியக் காரணமாக இருக்க முடியும் என்று கருதுகிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய மற்றொருவர் தென்னாப்பிரிகா சென்றுவிட்டார். அங்கு அஹ்மத் தீதாத் அவர்களின் ஊரில் வைத்து, தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்தார். இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு தீதாத் அவர்களே காரணமாம்!

வாடிகன் பொறுப்பாளர்களுடன் இந்த விஷயம் தொடர்பாக நேருக்குநேர் விவாதிக்கத் தாம் தயார் என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார். அவ்வாறே, வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர் என்பதையும் பிறகு வாடிகன் பொறுப்பிலிருந்து விலகினர் அல்லது விலக்கப்பட்டனர் என்பதையும் வாடிகனால் மறுக்க முடியுமா? என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போப்பும் ஆயர்களும் இந்த விஷயத்தில் மௌனம் சாதித்துவந்தனர். இச்செய்தியை மறுக்க வாடிகனால் இன்றுவரை இயலவில்லை. இறுதியாக போப் பெனடிக்ட் ராஜினாமா செய்தார். 2006ஆம் ஆண்டில் போப் வெளியிட்ட அறிக்கைகளில் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் கொச்சைப்படுத்திப் பேசிப்பார்த்தார். இதன்மூலம் விஷயத்தை மறைத்துவிடலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், சூனியம் சூனியக்காரனுக்கெதிராகவே திரும்பிவிட்டது; பதவி விலகிவிட்டார்.

வாடிகனின் உளவுத் துறையினர், அந்த பைபிள் பிரதி யார் கையில் உள்ளது என்பதை வலைபோட்டுத் தேடிவருகின்றனர். உண்மை என்னவென்றால், அதைப் பாதுகாக்கத் தவறியவர் போப்தான்; அதைத் தொலைத்த குற்றத்திற்காகவே இப்போது பதவியைத் தொலைத்திருக்கிறார். பிரிட்டன் போன்ற பல நாடுகள், போப் தங்கள் நாட்டுக்கு வந்தால் உடனே கைது செய்யத் தயாராயிருந்தன; கைதுக்கான குறிப்புகள் வெளிவந்தது உண்மை என உறுதிப்படுத்தினார் இஸாம். போப்புடைய ஆயர்கள் பலர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதை போப் பிரயாசப்பட்டு மறைத்தார் என்பதே அந்நாடுகளின் குற்றச்சாட்டுகளாகும்.

இஸ்லாமியப் பிரசாரத்திற்கு முன்னால் இவர்களின் தோல்விகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாவதும் வரவிருக்கும் போப்பிற்குப் பெரிய சவால்களாக இருக்கும். 

(அல்முஜ்தமா)//

இதே போன்று போப் முஸ்லீமாக மதம்மாறினார் என்றசெய்தியை 2006இலும் பரவவிட்டிருக்கின்றார்கள்.

Tuesday, 19 September 2006
R.I.P photoshop

VATICAN CITY -- Pope Benedict's speech last week, which the Muslim world took to condemn Islam for violence, set off a whole series of riots, church burnings and the murder of a nun. The Pope, following multiple failed apologies for his words,announced today, that "to bring peace to himself," he has converted to Islam.
The Pope, wearing the simple garb of a pilgrim on his way to Mecca, read his statement from his balcony that faces St. Peter's Square. The statement was profound in its simplicity and obvious sincerity.
"As of today, I am follower of the Allah's Greatest Prophet and the Final Messenger, Muhammad, blessed be his holy name," said Pope Benedict, formerly Joseph Ratzinger, who has asked to be now called Himar Abdur-Rasool al-Ahad.
"I have come to this decision through much prayer and meditation," the former Pope continued. "It is clear that I offended many of the Muslim faith by my ill-chosen words, but even more so by my long-held beliefs. Finally, after observing the passion of the Muslim believers, I realized Islam is the true way to peace."
As church theologians and religious scholars continue to debate the matter, it is not clear if all observant Catholics are now Muslims or still infidels. "The Pope's ex cathedra statements on doctrinal matters are infallible. Thus, it would seem all committed Catholic believers would be required to become Muslim as well," said Father Geary O'Caughlin, a distinguished teacher of moral theology at the Papal University in Rome.
Other religious authorities are not convinced. "However, it is not clear whether the Pope at the moment of conversion to Islam was still a Catholic and thus still Pope, or already a Muslim and thus just another Muslim imam, whose pronouncements may only be authoritative in matters of spiritual guidance, daily living and suicide bombing," said Dr James C. MacIntyre, a Catholic theologian and professor of theological ethics at Marquette University.
Despite the confusion the Pope's conversion has caused, it has created at least a bit of clarity. What we do know now, the scholars agree, is the answer to the question "Is the Pope Catholic?" The answer is now clearly no
http://www.thespoof.com/news/world/11387/pope-benedict-converts-to-islam

கூகிளை எவளவு கிண்டியும் நம்பும்படியான செய்தியை அவதானிக்கமுடியவில்லை குட்டையைக்குழப்பும் முயற்சியாகத்தான் இது தோன்றுகின்றது ஆதாரம் இருந்தால் கொமண்ட் செய்யவும்


கற்பழிக்கப்பட்டால் பெண்கள் தற்கொலைசெய்யவேண்டுமா

$
0
0
ஆணாதிக்கம் பேஸ்புக் அதிகமாக கேட்ட வார்த்தைகள்.
பெண்ணாதிக்கம் கட்டில்கள் அதிகமாக கேட்டவார்த்தைகள்.

இவ்விரண்டைப்பற்றியுமான  நேர்மறைவிவாதங்கள் சகலஇடங்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.பெண் என்பவள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் இந்த ஆணாதிக்கம் ஆரம்பிக்கின்றது. ஒரு வேளை எனக்குவரும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் இது ஆரம்பிக்கலாம்.அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு... இப்படி அடங்கினால் அல்லது அடக்கிவளர்த்தால்தான் அவள் பெண் என்பது சமூகம் காலாகாலமாக விதைக்கும் அடிமைத்தனங்களில் ஒன்றுதான். அப்படியானால் பெண்ணிற்கு அடிமையாக இருக்கவேண்டுமா என மீசையை முறுக்குகின்றார்கள். உங்கள்  பால்ய நண்பனுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை சுதந்திரத்தை உங்களைச்சார்ந்த ஒரு பெண்ணுக்கு நீங்கள் கொடுத்தாலே போதும் அது அவளுக்கு மிகப்பெரிய சுதந்திரமாக இருக்கும்.மீசை இதுவும் ஆணாதிக்கத்தின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது முக்கியமாக சினிமாக்களால்  பெட்டை உனக்கே இவளவு திமிரிருந்தால் ஆம்பிளை எனக்கு எவளவு இருக்கும்? நீ உண்மையிலேயே மீசைவைச்ச ஆம்பிளைன்னா என்று மீசையை முறுக்குவது விவேக் சொல்வதுபோல் 50 பைசா பெறாத அந்த முடிகளால் ஆன அடர்ந்த பகுதிக்கும் வீரத்திற்கும் எப்படித்தான் தொடர்பைக்கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை ஹோக்கிங்கிடம்தான் இதற்குவிளக்கம்கேட்கவேண்டும்.
 நம்மை  சுற்றியிருக்கும் பெண்களைச்சார்ந்த வசையாடல்கள் குறிப்பாக பெண்களைமட்டுமே குறிப்பிட்டு அமைக்கப்படுவதன் காரணம்கூட இதே ஆணாதிக்கம்தான்.பு###,வேசி போன்ற வார்த்தைகள்,ஒவ்வொரு பிரதேசத்திலும் பெண்களை குறிவைத்துபல உள் அர்த்தம் கொண்டவார்த்தைகள் வழக்கில் இருக்கின்றது. ஐட்டம்,சரக்கு, மாஞ்சான் இன்னபல...சரி இவ்வாறு பெண்களுக்கு ஏன்  பெயர்கள் வைக்கப்படுகின்றது என்று கேட்டால் நிச்சயம் அதற்கான காரணம் கூறுவார்கள் கேள்வி என்னவெனில் அவர்கள் கூறும் அதேசெயல்களை செய்யும் ஆண்களுக்கு இவர்களைப்போலவே ஸ்பெஸலான பெயர் என்ன என்று கேட்டால் பதில் "அவன் ஆம்பிளை".சோ இதுதான் நமது சமூகம் இப்பொழுதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு மாற்றமில்லாமல் இருந்துகொண்டிருக்கின்றது.

சிலவருடங்கள் முன்னர்வரை  ஒரு பெண்கற்பழிக்கப்பட்டால் அவள் செய்யவேண்டிய கௌரவமான,சமூகம் ஏற்றுக்கொள்ள்க்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கை தற்கொலை என்று நமது தமிழ்சினிமா போதித்துவந்தது.இப்போது இன்னிலை சினிமாவிலாவது மாறியிருப்பதுவரவேற்கத்தக்கவிடயம் டெல்லியில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண் இறக்கும் தறுவாயில் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனைவாங்கிக்கொடுக்கவேண்டுமெனக்கூறினாரே தவர அவர்களின் தலையைவெட்டவேண்டும் எனக்கூறவில்லை.அந்தப்பெண்தொடக்கம்  பெயர் தெரியாத ஊர்களில் தினம் தினம் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் அனைவரிடமும்  இன் நாளில் மன்னிப்புக்கேட்டுக்கொள்வோம். ஒரு பிரபல செக்ஸ் நடிகை கூறினாராம் ரேப் என்பதை எதிர்பாராத பாலியல் அனுபவமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அவருக்கு என்னமாதிரியோ தெரியாது.ஆனால் வன்புணர்வு என்பது அதை அனுபவித்த பெண்ணுக்கு பாலியல் தொடர்பான வாழ் நாளில் அவளின் எதிர்பார்ப்புக்கள் ஏக்கங்கள்,இன்பங்கள் அனைத்தையுமே குழிதோண்டிப்புதைத்து வேண்டத்தகாத அருவருக்கத்தக்க ஒன்றாக பாலியல்மீது ஒரு மரணபயத்தை ஏற்படுத்திவிடக்கூடிய ஒன்றாக ஆக்கிவிடும் என்பதுதான் உண்மை அது அனுபவமல்ல ஒரு வகையில் கொலை.

கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைதான் செய்யவேண்டுமா?

இவரது பெயர் சுனிதா கிருஸ்ணன் பாங்களூரை சேர்ந்தவர் இவர் தனது 15 ஆவது வயதில் 8 ஆண்களினால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார் காங்க்ரேப்.இவர் தற்கொலை செய்துகொண்டாரா??? இல்லை
அவர் படித்து வாங்கிய பட்டங்கள் B.Sc. (Environmental Science, MSW (Psychiatric Social Work) Ph.D. (Social Work) அதோடு Mr. Rajesh Touchriver என்பவரை திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

இவர் பெற்ற வன்புணர்வு என்ற கசப்பான அனுபவம் இவரை சமூகசேவகியாக்கியிருக்கின்றது.பாலியல்வன்முறை,பாலியல் அடிமைத்தனத்திற்கும் உள்ளாகும் சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்கும் பிராஜ்வாலா என்ற அமைப்பை உருவாக்கி செயற்பட்டுவருகின்றார்.இதுவரை 5000ற்கு மேற்பட்ட எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வி உதவி செய்துவருகின்றார்.பாலியல் தொழிலுக்குவலுகட்டயாமாக ஈடுபடுத்தப்பட்ட 3200க்கு மேற்பட்ட சிறுமிகள் சிறுவர்களை காப்பாற்றியுள்ளார்.


சுனிதா கிருஸ்ணன் அவர்கள் ted conferenceஇல் பேசிய பேச்சு....

பிரணீத்தாவின் தாயார் ஒரு விபச்சாரி.அவர் எஹ்.ஹி.வி ஆல் பாதிக்கப்பட்டவர்.அந்தத்தாயார் எயிட்ஸினால் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தபோது அவரால் விபச்சாரம் செய்யமுடியவில்லை எனவே தனது மகளை 4 வயது மகளை தரகருக்கு விற்றுவிட்டார்.இந்த விடயத்தை அறிந்து நாம் பிரனீத்தாவைக்காப்பாற்ற அங்கு சென்றபோது ஏற்கனவே பிரணீதா 3 ஆண்களினால் கற்பழிக்கப்பட்டிருந்தார்.

சாஹீனின் குடும்பப்பின்னணி எமக்குத்தெரியாது. நான்கள் அவரை ரெயில்வே தண்டவாளத்தில் கண்டெடுத்தோம்.நாம் சாஹீனின் இடத்தை அடைந்தபோது அவர் பல ஆண்களால் கற்பழிக்கப்பட்டிருந்தார் எத்தனை பேரால் என்றுதெரியவில்லை.அந்த சிறுமியின் குடல் உடலுக்கு வெளியே வந்திருந்தது உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டுசென்று காப்பாற்றினோம்.
ஆக இச்சிறுமியைப்பற்றி எம்க்குத்தெரிந்த ஒரே ஒரு விடயம் 100க்கணக்கான ஆண்களால் கற்பழிக்கப்பட்டவர் என்பது மட்டும்தான்.

அடுத்த சிறுமி அஞ்சலியின் தந்தை ஒரு குடிகாரர். அந்த சிறுமியை பாலியல் படங்களை எடுப்பதற்காக விற்றுவிட்டார்.
இப்படியான பாலியல்வன்முறைக்குள்ளாகும் துஸ்பிரயோகத்திற்குள்ளாகும் பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள  பொருளாதாரவசதி இல்லாத பெண்கள் மாத்திரமல்ல...செல்வந்தர்கள் ஹை ஒப்பீஸேர்ஸ் களின் மகள்களும் இவற்றில் அடங்கும் இணையத்தில் ஒரு தெரியாத நபருடன் சட்டிங்க் செய்ய அவர் உன்னை நடிக்கவைக்கின்றேன் என ஏமாற்றினால் வீட்டைவிட்டு ஓடினார்...இவ்வாறு நாம் காப்பாற்றிய ஒவ்வொரு சிறுவர் சிறுமிக்கும்  சோகமான பின்னணிகள் உள்ளன.

இவ்வாறு விற்கப்படும்  சிறுமிகளைவாங்க வருபவர்கள் அன்பாக நடந்துகொள்வார்கள் என்று நிச்சயம் எதிர்பார்கவேண்டாம்.அவர்களில் பலர் துன்புறுத்தப்படுகின்றார்கள்,அனுமதி இன்றி கற்பழிக்கப்படுகின்றார்கள்,கொல்லப்படுகின்றார்கள்  இவ்வாறான பலரது குரலகள் வெளியே கேட்பதில்லை.



அவர்கள் உங்களை அவர்களது கேர்ல் பிரண்டாக பாவிக்கமாட்டார்கள்,உங்களுடன் பமிலியை ஏற்படுத்தமாட்டார்கள் 1 மணித்தியாலத்திற்கு 1 நாளுக்கு என நேரக்கணக்கிற்கு வாங்கி  உங்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள் இவ்வாறான 3200க்கு மேற்பட்ட சிறுமிகளை நான் காப்பாற்றியிருக்கின்றேன் ஒவ்வொருவருக்கும் இவ்வாறு ஒவ்வொருகதைகள் உள்ளன.


நாங்கள் நினைக்கின்றோம் பாலியல் தொழில் என்பது இலகுவான ஒன்று பணத்தை உழைப்பதற்கு அது ஒரு குறுக்குவழி இதை செய்பவர் இதை மிகவும் விரும்பி செய்கின்றார் என்று ...இல்லை அவர் பணத்தைவிடவும் மேலதிகமாக பலவற்றைப்பெற்றுகொள்கின்றார்.


பாலியல் நோய்கள்,காயங்கள் போன்றவற்றையும் பெற்றுக்கொள்கின்றார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு இயல்பு நிலைக்கு மீட்பது என்பதுதான் என்முன்னால் வைக்கப்பட்ட பெரிய சவால். நாம் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பயிற்சிகள் கொடுத்தோம், கார்பென்ரராக,கார் ரைவராக,செக்கியூரிட்டி கார்ட்டாக,ஐடி பீல்ட்களில் புரொபஸனல்களாக மாறுவதற்கு பயிற்சிகள் கொடுத்தோம் அவர்கள் பயின்றார்கள் சுயமாக தொழில் செய்கின்றார்கள். ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்துப்போராடுகின்றார்கள்.

பாலியல்  நோயால் பாதிக்கப்பட்டவர்.

எனது மிகப்பெரிய சவாலாக இருப்பது என்னைத்தாக்குபவர்களை எதிர்ப்பதல்ல நான் 14 தடவைகள் பலமாக தாக்கப்பட்டிருக்கின்றேன் எனது வலதுகாது முழுமையாக கேட்கும்தன்மையை இழந்துவிட்டது.எனது பெரிய சவால் சமூகத்திற்கு முகம் கொடுப்பது என்னை நானாக சமூகம் ஏற்றுக்கொளவதுதான் எனது பெரிய சவால்.எனது நண்பர் எனது நெருக்கமான வெல்விஸ்ஸர் அவரது அம்மாவிற்கு உடல் நிலைசரியில்லாதபோது தொடர்புகொண்டுகூறினார் அம்மாவைப்பார்த்துக்கொள்ள பெண்கள் இருக்கிறார்களா நான் செல்லமுயற்சிக்கும்போது "உங்கள் தரப்பில் இருக்கும் பெண்கள் வேண்டாம்" இதுதான் பிரச்சனை.

நாம் ஒரு ஏசி ஹோலுக்குள் இருந்து கொண்டு பெண்கள் பாதிப்புக்கள் தொடர்பாக பேசமுடியும் விவாதிக்கமுடியும்  சினிமாப்படங்களை எடுக்கமுடியும் ஆனால் இவ்வாறு பாதிக்கபப்ட்ட பெண்களை  வீட்டிற்குள் நாம் அனுமதிப்பதில்லை அலுவலகங்களில் வேலைக்கு அமர்த்துவதற்கு நாம் விரும்புவதில்லை.எமது பிள்ளைகள் அவ்வாறு பாதிக்கப்பட்ட  பிள்ளைகளுடன் சேர்ந்து படிப்பதை நாம் விரும்புவதில்லை. இதுதான் எனக்கு முன்னால் வைக்கப்பட்ட மிகப்பெரிய சவால்.
அவர்களுக்கு உங்கள் அன்பு தேவை இங்கள் பரிவு தேவை சகலவற்றையும் விட உங்கள் அக்செப்டிங்க் தேவை... நான் அடிக்கடி கூறுவேன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான 100 வழிகளைக்கூறாதீர்கள் ஒன்றையாவது செய்யுங்கள்.

உங்களுக்கு முன்னால் நின்றுகொண்டு நான் கேட்பது  இவர்களுக்காக உங்கள் ஆதரவை... எதற்கும் அமைதியாக இருக்கும் உங்கள் கலாச்சாரத்தை உடைக்கமுடியுமா? குறைந்தது இருவரிடமாவது இந்தக்கதைகளைக்கூறுவீர்களா? கூறுங்கள் அவர்கள் மனதைமாற்றுங்கள் நீங்கள் கூறியவற்றை மேலும் இருவரிடம் கூறுமாறுகேட்டுக்கொள்ளுங்கள்

உங்களை மகாத்மா காந்தியாகவோ மார்டின் லூதர்கிங்காகவோ மாறுமாறு நான் கேட்கவில்லை...சிறியவட்டத்தின் உள்ளே இருக்கும் உங்கள் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் ..இவர்களும் உங்களுள் ஒருவர்தான். உங்களிடம் கேட்பது அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.


இவர் சி.என்.என் னின் ரியல் லைப் ஹீரோக்களில் ஒருவராக பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றார்.

இவரது பேஸ்புக்  இங்கே கிளிக்
இவரது வலைப்பூ இங்கே கிளிக்

என்னைப்பொறுத்தவரை இவ்வாறான உதவியாளர்கள்தான் கடவுள்கள் எதார்த்தங்களைக்கடந்தமையால்.இவர்கள்தான் ஹீரோக்கள் இவர்களுக்கும் நீங்கள் பால் ஊற்றி அவமானப்படுத்த தேவையில்லை தேவையெல்லாம் மனித நேயத்துடன் உங்கள் உதவி  இவர்களையும் சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளல் அவளவுதான்.


அனைத்துலக பெண்கள் நாள் தொடர்பில் விக்கியில் உள்ள கட்டுரை...

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விக்கியின் கட்டுரையைப்படிக்க இங்கே கிளிக்

கீழே இருப்பது மீள்பதிவு...

20 ஆம் நூற்றாண்டின்   முடிவில் 10 % ஆன பெண் கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமே  பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக் பெண்களின் பெயர்கள் இருக்கும் பொதுவாக ஒருபெண் தனது கண்டுபிடிப்புக்களை வெளி கொண்டுவருவதற்கு அதிக அளவு தடைகளை தண்டவேண்டி இருக்கிறது 
1700 களில் அமெரிக்காவிலும் பெண்கள் விஞ்ஞான கற்கைகளை கற்பது விரும்பத்தகாததாக இருந்தது 1700 களில் அமெரிக்காவில் ஒரு சட்டம் இருந்தது 

பெண்களுக்கு எந்த ஒரு சொத்தும் உரிமையாக இருத்தல் கூடாது என்பதுதான் அது  இவர்கள் இக்காலத்தில் தமது கண்டுபிடிப்புக்களையோ அல்லது ஒரு உள்ளநாட்டு தயாரிப்பையோ வெளியிட நேர்ந்தால் தமது தந்தையின் பெயரிலோ அல்லது கணவரின் பெயரிலோதான் உரிமம் பெற்று வெளியிடப்படவேண்டியிருந்தது.


இவற்றை தாண்டி தனது தயாரிப்பிற்கு தனது பெயரிலேயே உரிமம் பெற்ற  முதல் அமெரிக்க பெண்  Mary  kies  1809 இல் பெற்றார் .1 ஆம் உலகப் போரினால் பெண்களுக்கு ஒரு எதிர்பாராத நன்மை ஏற்பட்டது.உலகப் போருக்கு முன்பாக பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்பும்,வோட்டுரிமையும் கேட்டு வன்முறையை பரிசாகவாங்கிக்கொண்டார்கள்.உலகப் போரின் போது ஆண்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவப்பையிற்சி என்றசட்டம் இருந்தது.இதனால் ஆண்கள் பணிபுரிந்த தொழிற்சாலைகள்,சுரங்கங்கள்,ஆயுதக்கிடங்குகள்,இரசாயன நிலையங்கள் என அனைத்து இடங்களுக்கும் ஆடகள் தேவை..வேறுவழி இல்லை பெண்களைத்தான் இவற்றிற்கு அமர்த்தினார்கள். 
நடைமுறையில் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பலவிடயங்களை பெண்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் 

இங்கு சில பெண் கண்டுபிடிப்பாளர்களையும்   அவர்களது கண்டுபிடிப்புக்களையும் நோக்குவோம் 

Circular saw
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த "Tabiththa babbitt " என்றபெண்தான் இதை கண்டுபிடித்தார்இவர் நெசவாளர் இது ஒரு வட்ட தட்டு உருவான வாள்
இவர் ஒரு நெசவாளர் 1810 இல் இவர் 2  மனிதர்கள் வாள் ஒன்றை பயன்படுத்தி மரம் அரிவதை அவதானித்தார் இருவரும் இருதிசையிலும் வாளை   இழுத்து அரிந்தார்கள் வாளின் முனை ஒருபக்கமாக சரிவாக இருந்ததால் ஒரு பக்கமாக  அரியும்போது மாத்திரமே  வாள்  வெட்டியது மற்றைய பக்கம் இழுக்கும் போது சக்திச்ச்செலவு மாத்திரமே மிஞ்சியது இதை அவதானித்து 

கண்டு பிடிக்கப்பட்டதுதன் circular  saw  


Liquid  paper 

டிபேஸ் என நாம் பயன்படுத்தும் உபகரணத்தை போன்றதுதான்   இந்த liquid paper இதைக்கண்டு பிடித்தவர்  "Bette Nesmith Graham  "  என்ற பெண் இவர் ஒரு டைபிஸ்ட்  தனது வேலையில் பல தவறுகளை செய்துவிடுவார் 1950 இல் மின்சாரத்தில் இயங்கும்  typewritter அறிமுகப்படுத்தப் பட்டது இதன்  கார்பன் ரிபனால் பதியப்பட்ட எழுத்துக்கள் திருத்துவதற்கு கடினமாக இருந்தது ஒரு நாள் grahm ஒரு பேங்க் யன்னலில் சிலர் ஓவியம் வரைவதை அவதானித்தார் அவர்கள் வரையும்போது 

தாம் செய்த தவறை சரி செய்ய அதன்மேல் வேரொரு வர்ணத்தை  தீட்டி தவறை சரி செய்தார்கள் இதுதான் grahm  ஐ இக்கண்டு பிடிப்பிற்கு தூண்டியது 
தனது சமையல் அறையில் கிரைண்டேரில் tempera பெயிண்ட் ,டை ,நீர் என்பவற்றை சேர்த்து அரைத்துத்தான்   இதை கண்டுபிடித்தார் 
தனது அலுவலகத்தில் இதை விநியோகித்தார் அலுவலகப்பணிகளை விட அதிகநேரம் தனது கண்டுபிடிப்பை விநியோகிக்க செலவிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார் 1958 இல் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை பெற்றார் 
   

Chocolate chip cookies


இது ஒரு சாப்பாட்டு ஐட்டம் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமானது இதைக்கண்டுபிடித்தவர் Ruth wake field 1930 இல் கண்டுபிடித்தார்.இவர் ஒரு டயரிசன் அத்துடன் பூட் lecturer ஒருநாள் இவர் விருந்தினருக்கு கூகீஸ் தயாரித்துக்கொண்டிருந்தார் இதற்கு வழக்கமாக உருக்கிய சாக்லேட் தான் சேர்ப்பார்கள்   விரைவாக கூகிஸ் செய்ய வேண்டியதன்  காரணமாக சாக்லேட் துண்டை  உருக வைப்பதற்கு பதிலாக சிறு துருவல்களாக்கி கூகியில் தூவி bake பண்ணினார் இதனால் சாக்லேட் உருகிவிடும் என நம்பினார் ஆனால் சாக்லேட் உருகவில்லை அதற்கு மாறாக பெறப்பட்டதுதான் இந்த சாக்லேட் சிப் கூகீஸ்





The Compiler and COBOL computer language 

இதைக்கண்டுபிடித்தவர் கடற்படை அதிகாரியான ஹொப்பர்.இவர் 1943 இல் இராணுவத்தில் இணைந்துகொண்டார்.ஹவேர்ட் பல்கலைக்கழகத்தில் IBM இன் முதலாவது லார்ஜ் ஸ்கேல் கணணியான  Harvard Mark I ஐ இயக்குவதில் ஈடுபட்டிருந்தார்.இக்கணணியை ப்றோக்கிராம் செய்த மூன்றாவது நபர் இவர்தான்.1950 இல் இவர் ஒரு கணணையைக்கண்டுபிடித்தார்.இதில் ஆங்கில மொழியில் கட்டளைகளை கோட்டாக வழங்கமுடியும்.
 அமெரிக்காவின் முதல் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட கணணியான Universal Automatic Computer 1,2 களில் இவரது கொம்பைலர்கள்தான் பயன்படுத்தப்பட்டன.ஆரம்பகாலங்களில் இருந்த கணணி மொழிகளில் முக்கீயமானவற்ருள் ஒன்றாக இருந்த Common Business-Oriented Language (COBOL)  ஐ டெவலப் செய்தவர்களுள் முக்கியமானவர் இவர்தான்.இவரது இக்கண்டுபிடிப்புகளால் தான் ப்ரோகிராமெர்ஸ் பிழையின்றி தமது ப்ரோக்கிராம்களை எழுதமுடிந்தது.இவற்றிற்காக ஹொப்பர் பல விருதுகளைப்பெற்றுள்ளார்.அத்துடன் இவரைக்கௌரவிக்கும் முகமாக அமெரிக்க யுத்தக்கப்பலுக்கு இவரது பெயரைவைத்துள்ளார்கள்.






Colored Flare System

பல ஆங்கிலபடங்களில் குகைகள் இருளான பிரதேசங்களில் அல்லது கடலுக்கடியில் கையில் ஒன்றை வைத்து அழுத்தும் போது பீறிட்டு எரியும் பாருங்கள் அதன் பெயர்தான் Colored Flare System  இதைக்கண்டுபிடித்தவர் Martha Coston 1847 இல் தனது 21 ஆவது வயதில் விதவையாக்கப்பட்டார்.இவரது கணவனின் குறிப்புப்புத்தகத்தில் இதை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி இடப்பட்டிருந்தது ஆனால் அக்குறிப்புப்புத்தகத்தில் இருப்பது நடைமுறையில் சாத்தியப்படவில்லை தன் கணவனின் கனவை நன்வாக்க எண்ணி அடுத்த 10 வருடங்கள் தொடர்ந்து இதற்காக கடுமையாக முயற்சி செய்தார்..இறுதியில் இதைக்கண்டுபிடித்து விஞ்ஞானிகள் இராணுவ அதிகாரிகளுக்கு முன்பாக பரிசோதனை செய்து காட்டினார்.ஆனால் அது நீண்ட நீரம் எரியாததால் பரிசோதனை தோல்வியில் முடிந்தது.பின்பொருநாள் தனது மகங்களுடன் வானவேடிக்கையை பார்க்க சென்றபொழுது இவருக்கு இதற்கான திட்டம் பளிச்சிட்டது.பின்னர் அமெரிக்க நேவி இவருக்கு உரிமத்தை வழங்கியது..பின்னர் நடைபெற்ற சிவில் யுத்தங்கள் முதல் அனைத்து யுத்தங்களிலும் இவரது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


The Square-bottomed Paper Bag

கண்டுபிடித்தவர் Margaret Knight.இவர் பேப்பர் பாக்கை கண்டு பிடிக்கவில்லை சாதாரணமாக பயன்படுத்தப்படும் பேப்பர்பாக்கில் பொருட்களைக்கொண்டு செல்லல் கடினமாக இருந்தது. இதற்குத்தீர்வாக சதுர முகத்தைக்கொண்ட பேப்பர்பாக்கை உருவாக்கினால் இலகுவாக இருக்கும் என எண்ணி சதுரமுகம் கொண்ட பேப்பர் பாக்கை உருவாக்கினார்.இதை உருவக்குவதற்காக சிக்கலான இயந்திரமொன்றையும் உருவாக்கினார்.Charles Annan என்பவர் இவரது இயந்திரத்தை திருடி அது தன்னுடைய தயாரிப்பு என்றும் இதே போல ஒரு சிக்கலான இயந்திரத்தை ஒரு பெண்ணால் எப்படி உருவாக்கமுடியும் எனவும் அறிவித்தார்.ஆனால் Margaret Knight  இயந்திரத்தின் சரியான அளவீடுகள்,விபரங்களை தன்வசம் வைத்திருந்ததால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.




Dishwasher

இதைகண்டுபிடித்தவர் Josephine Cochrane 1883 இல் இவர் கணவனை இழந்தார்.தனது வேலையாட்கள் மீது அதிருப்தியடைந்ததால் இவர் இதைக்கண்டுபிடிக்க நேர்ந்தது.இவரது டிஸ்வோஸர் உயர் அமுக்கத்தில் இயங்குமாறு வடிவமைத்திருந்தார்.இதை விளம்பரப்படுத்தல் மிக கடினமாக இருந்தது இதை பயன்படுத்துவதற்கு ஹீட்டர் தேவையாக இருந்தது ஹீட்டர் பலரது வீட்டில் அக்காலத்தில் இருக்கவில்லை இதனால் இவர் ஹீட்டர்ளை பயன்படுத்துவதற்கு இலவசமாக வழங்கினார்.ஆரம்பத்தில் இல்லத்தரசிகளிடம் இது பிரபலமடைந்தது.பின்னர் பெரிய கம்பனிகள்வரை இது சென்றது.


Windshield Wiper

இதைக்கண்டுபிடித்தவர் Mary Anderson .இவர் பனி பெய்துகொண்டிருக்கும் சமயம் பேருந்தில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார்.அப்பொழுது ஓட்டுனர் ஒவ்வொரு தடவையும் பேருந்தை நிறுத்தி நிறுத்தி கண்ணாடியை துடைத்தார்.இதனை அவதானித்த மேரி இதற்காக ஒரு உபகரணத்தை வடிவமைத்து ஓட்டுனரிடம் வழங்கினார்.அவ்வுபகரணத்தை பேருந்தின் உள்ளே இருந்தே இயக்க முடியும்.கண்ணாடியை சுத்தம் செய்ய வேண்டியிருப்பின் ஒரு கைபிடி செய்யப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி உள்ளே இருந்தே சுத்தம் செய்ய முடியும்.
இதை மேரி முதலில் கண்ணாடி சுத்தம் செய்யும் தொழிலார்களுக்கு பரிந்துரைசெய்தார்.பின்னர் மக்கள் இதை வாகனங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் அடுத்த 10 வருடத்தில் அனைத்து வாகனங்களிலும் இவரது தயாரிப்புத்தான் இருந்தது.


Nystatin

இது ஒரு பங்கஸ் கொல்லியாகும்.கண்டுபிடித்தவர்கள் Rachel Fuller Brown, Elizabeth Lee Hazen இவர்களது கூட்டுத்தயாரிப்புத்தான் இது.1940 இல் New York State Department of Health இல் 1940 ஆம் ஆண்டு இது தொடர்பான பரிசோதனையில் ஈடுபட்டார்கள் 1950 இல் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்கள்.இது பின்னர் பல பிராண்ட் பெயர்களில் இப்பொழுது பயன்படுத்தப்பட்டுவருகின்றது.



Kevlar

Stephanie Kwolek என்ற பெண் அமெரிக்காவில் 1964 இல் du Pont என்ற இரசாயன நிறுவனத்தில் மொலிக்கியூல்களை உறுதியான நார்களாக மாற்றுதல் தொடர்பான ஆராச்சியில் ஈடுபட்டிருந்தார்.இதன்விழைவாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் kevlar இது வலுவான நாரால் ஆக்கப்பட்ட மெற்றீரியலாகும்.உலக அளவில் 1970 களில் இருந்து அதிக கேள்வி உடையதாக இருந்து வருகின்றது.இதை பயன்படுத்தித்தான்.கூடாரங்கள்,புள்ளட் புரூஃப் உடைகள் தயாரிக்கப்படுகின்றன.


இப்படி நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல விடயங்களைக்கண்டுபிடித்தவர்கள் நம்ம தாய்க்குலங்கள் தான்...


எனது கவிதையுடன் முடித்துக்கொள்கின்றேன்.

அடுப்படியில் வேகாத அரிசியை 
வேகவைக்கப்போராடி
அவள் மட்டும் வெந்துபோய்
படுக்கையறை சென்றாள்-அம்மா

மகளிர் தினம்










யாழ்மாணவரின் தலைவிதி-முடிந்தது

$
0
0
உதயனில் ஒருவருடத்திற்கு முன்பு ஒரு கட்டுரைவெளிவந்தது பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோற்றுவிட்டார்களா? மாணவர்களால் ஏளனமாக நோக்கப்படுகின்றார்களா? என்பதுதான் தலைப்பு  உள்ளே டீப்பாக அவளவாக எழுதவில்லை சபை நாகரீகம் என்றுவிட்டார்களோ தெரியாது ஆனால் ஒரு ஸ்ருடன்ற்றாக நிலமைகளை அனுபவித்தமையால் அப்பட்டமான உண்மைகள் என்னவென்று எனக்குத்தெரியும்.அதாவது ஆசிரியர்களுக்குமாணவர்கள் வைக்கும் பட்டப்பெயர்கள் அவர்களை அவர்கள் இல்லாத நேரத்தில் இமிட்டேட் செய்வது போன்றவை இந்தத்தலைப்பிற்குள் அடங்காது அது தொடர்ந்துவரும் ஸ்ருடன்ற் கல்சர்.அந்த விவாதம் இப்போதுவேண்டாம் உண்மையில் ஆசியர் என்பவர் வேறு குரு என்பவர் வேறு ஆனால் இப்போது இரண்டையும் ஒன்றாக்கிவிட்டார்கள். 

பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களால் ஏன் ஏளனமாக நோக்க வேண்டும். காரணம்  மாணவர்கள் முற்றுமுழுதாக தமது படிப்பில் நம்பியிருப்பது  தனியார்கல்வி நிறுவன ஆசிரியர்களை அவர்களின் படிப்பித்தல்களை அவர்களது முறைகளை அதோடு தனியார் கல்வி நிலையம் நடத்தும் ஆசிரியர்களின் கௌரவம் மரியாதை மாணவர்களிடத்தில் எதைவைத்துக்கொண்டு  தீர்மானிக்கப்படுகின்றது?அதற்குப்பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணங்களுள் ஒன்று அந்த தனியார் கல்வி நிலையத்திற்கு வரும் மாணவர்கூட்டங்களின் எண்ணிக்கை.இதை வைத்துக்கொண்டுதான் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் மாணவர்க்ளுக்கிடையிலாக மோதிக்கொள்வார்கள்.

அங்கு பேச்சுக்கள் நடக்கும் அங்க ஒருதராம் நோட்ஸ்மட்டும் குடுப்பாராம் பாத்து வாசிச்சிட்டுப்போவாராம் கெமிஸ்ரி எண்டால் என்னான்னு தெரியுமா?  தம்பி வெளில பிஸிக்ஸில அங்கினேக்க படிப்பிக்கிறவ எல்லாரும் இங்க என்னட்ட படிச்சவையள்தான்  தம்பி பைனல்பேப்பரில என்னவரும் எண்டு எங்களுக்கு நல்லாத்தெரியும் பயப்பிடாத ஒழுங்கா வா எல்லாம் நல்லா நடக்கும் அங்க பேப்பர் செற்பண்ணுறவன் ஏதோ பெரிய புத்திசாலியெண்டு நினைக்காத அவங்களும் நோர்மலாக்கள்தான் சோ புரொபஸேர் ரோஸாவுக்கேஒன்றும்தெரியாது என்றார் பிரபல பிஸிக்ஸ்வாத்தியார் எக்ஸாமுக்கு முதல் நடந்த இறுதி வகுப்பில் தம்பி அவன் என்ன கேள்வி போடுவான் என்று யாருக்குமே தெரியாது தலைக்கு மேல வெள்ளம் போட்டுது இனி என்ன செய்ய என்று அழுவது மாதிரி முகத்தைவைத்துக்கொண்டு கூறிய கமரன் சேர் இன்னும் கண்ணிற்குள் நிற்கின்றார்.

தனியார் கல்வி நிலையங்களில் பாடங்கள் போதித்தலுடன் பாடசாலை ஆசிரியர்களை கேவலப்படுத்தியும் அவர்களது கற்பித்தல் முறைகளை கேவலப்படுத்தியும் விரிவுரை ஆற்றுவதை தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் செய்யத்தவறுவதே இல்லை.உங்கட ஸ்கூல்ல நடக்கிற படிப்பித்தல் என்ணண்டு எங்களுக்குத்தெரியாதாக்கும்?தொடர்ந்து 2,3 வருடமாக நடக்கும் கற்பித்தலில் இந்த விரிவுரையும் சேர்ந்தே நடக்கும் எனவே எப்படி ஒரு பாடசாலை மாணவன் தனது பாடசாலை ஆசிரியரை மதிப்பான்.எமது பாடசாலையுடன் சம்பந்தப்படாத 3 ஆம் நபர் ஒருவர் எமது பாடசாலையைப்பற்றியும் அங்குள்ள ஆசிரியர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசும்போது அதைக்கேட்டு எக்காளமிட்டு சிரித்து கைதட்டும் துர்ப்பாக்கிய நிலையில்தான் யாழ்மாணவர்கள் இப்பொழுது இருக்கின்றார்கள்.

மாணவர்களிடம் பாடசாலை ஆசிரியர்கள் தோற்றதற்கு யார் காரணம்?காரணம் ஆசிரியர்களேதான் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் அவர்கள் வேறு யாருமல்ல அவர்களும் பாடசாலையில் கல்விகற்பிப்பவர்களேதான்.இவ்வாறான ஆசிரியர்கள் அதுவும் பிரபலமான ஆசிரியர்கள் என்றால்(ஓரளவு பிரபலம் என்றால்கூட) பாடசாலை அதிபர் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்.அவர்கள் எப்போதும் பாடசாலைக்குவரலாம் செல்லலாம் கற்பிக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது.ஆனால் மாதாமாதம் சம்பளத்திற்கு வக்கனையாக சென்று ஒப்பீஸ் வாசலில் நிற்பார்கள்.ஆனால் அதைவிட 30,40 மடங்கு பணத்தை தனியார் கல்வி நிலையத்தில் உழைப்பார்கள்.அப்படியானால் ஏன் இந்த அற்பத்தொகைபணத்தை வாங்குகின்றார்கள் ஓய்வு பெற்றபின் பெஞ்சன் வரும் இல்லையா அதற்குத்தான்.சரி பாடசாலையில் கற்பிக்காமல் தனியார் கல்வி நிலையத்திற்கு மட்டும் தங்கள்விசுவாசத்தைக்காட்டுவது மட்டும் இல்லாமல்  தாம் கற்பிக்கும்,சம்பளம் வாங்கும் பாடசாலைகள் உட்பட அனைத்துப்பாடசாலைகளையும் மட்டம்தட்டுவதுதான் இவர்களது அன்றாட கற்பித்தல் நடவடிக்கைகளின் இடையே உள்ள நேர இடைவெளிகளை நிரப்பும் செயல். மாணவர்கள் இவர்களுக்கு அடிமையாகவே ஆகிவிடுவதுண்டு எப்போதும் கற்பிப்பதுடன் இவ்வாறான் பிரச்சாரங்களை செய்வதால் பாடசாலையையோ அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களையோ உயர்வாக நினைகக்வேண்டும் என்ற எண்ணமோ அவர்கள் கற்பிக்கும்போது நோட்ஸ் எடுக்கவேண்டும் என்ற எண்ணமோ மாணவர்களுக்கு துளியும் வராது. இதை பரிசோதிக்க வேண்டுமெனில் உயர்தர மாணவர்கள் பாடசாலை செல்லும்போது அவர்களை அவதானித்தாலே புரிந்துவிடும் 2 ஏ கொப்பிகள் 20 அல்லது 30 ஒற்றைக்கொப்பி அப்படியே சுருட்டி தமது பொக்கட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதோடு ஒரு பேனை இதுதான் பாடசாலைக்கற்பித்தலின் வெற்றியின் குறிகாட்டிகள்.

பாடசாலையில் கற்பிக்கும் பாடங்கள் அனைத்தையும் அந்தக்கொப்பியிலேயே முதல்பக்கத்தில் இருந்து இறுதிப்பக்கம்வரை அல்லது இறுதிப்பக்கத்தில் இருந்து முதல் பக்கம் வரை  சாம்பாராக எழுதுவதுவார்கள்.உயர்தர மாண்வர்களின் மேசையின் கீழ் உள்ள இடைவெளியை பாடசாலை முடிந்ததும் அவதானித்தால் பலரது கொப்பிகள் அங்கே கிடைக்கும்.பலர் கொப்பிகளை பாடசாலையிலேயே விட்டு செல்வார்கள்.அப்படியெ கொண்டு சென்றாலும் பாக்கிற்குள்ளேயே தேங்கிக்கிடக்கும்.காரணம் பாடசாலை நோட்ஸ் என்பதுகூட ஒரு சுமையாகத்தான் தெரிகின்றது. ஒரு மாணவனுக்கு  ஒரு நோட்ஸ்கொப்பி தொலைந்துவிட்டது என்றதும் இதயமே வெடித்துவிடும் என்ற நிலை தோன்றுகின்றது என்றால் அது தனியார் கல்வி நிலையத்தின் கொப்பியாகத்தான் இருக்கும்.அந்தக்கொப்பியில் மட்டும் சிவப்புபேனாவால் தலையங்கமிட்டு அருகில் வேறொரு மாஜினை இட்டு ஆசிரியர்  மேலதிகமாக சொல்லும் குறிப்புக்களை எழுதி உதயன் பேப்பரில் விற்கும் கழிவுப்பேப்பரை கிலோ 50 ரூபாய்க்குவாங்கி அந்த ஒற்றைகளை இடையிடையில் செருகி அதில் குறிப்புகளை எழுதி,தரும் கணக்குகளை அதில் செய்துபார்த்துவிட்டு அதைக்கூட அந்த கேள்வி எழுதிய நோட்ஸ்கொப்பியில் கேள்வி எழுதிய பக்கத்துடன் இணைத்துவிடுவார்கள்.ஒரு  நோட்ஸ் கொப்பிக்கு இந்த அளவு மரியாதை. யாழ்ப்பாணப்பெண்கள்தான் இதில் பி.ஏஜ்.டி முடித்தவர்கள் சப்பா எப்படி வைத்திருப்பார்கள் தெரியுமா ஏதோ குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்ப்பதுமாதிரித்தான் அவர்களது கொப்பிகளும் இருக்கும்.ஆக பவுடர் போடாத குறைமட்டும்தான்.   நாமெல்லாம் சிவப்பு,நீலம்,கறுப்பு பேனைகளைத்தவிர வேறு பேனைகளின் பயனை நாம் அறிந்ததில்லை.ஆனால் ஒரு பொக்ஸ் ஒன்று கொண்டுவருவார்கள் ஓரளவு துருப்பிடித்த பொக்ஸ்ஸாக இருக்கும் ஆனால் அது தனது கொள்ளவைத்தாண்டி ரொம்ப வீங்கி புடைத்துப்போய் தனது வாயை மூடிக்கொண்டிருக்கும் திறந்தவுடன்தன் தெரியும் ரோஸ்,பச்சை,சிவப்பு,மஞ்சள் என பல பேனைகள் எல்லா நிறத்திலும் 2,2பேனைகள் ,நீல நிற பேனைமட்டும் 4,5 வைத்திருப்பார்கள் கேட்டால் தவறுதலாக மை தீர்ந்துவிட்டால் என்ன செய்ய?சரி ஏ.எல் முடிந்ததும் என்ன செய்வார்கள் அடுத்த பச்சில் இருக்கும்  தெரிந்த ஒருவருக்கு மிகுந்த சோகத்துடன் ஒப்படைப்பார்கள் "என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கின்றேன் இதில ஆனந்தக்கண்ணீர்மட்டும்தான் வரணும்" எங்கள் கண்களில் தாரை தாரையாக இரத்தம்.

இவ்வாறான ஒரு கொப்பி தொலைந்தால் நிச்சயமாக அந்த மாணவனுக்கு ஹார்ட் அட்டாக் வரும்.இவ்வாறு வைத்திருக்கும் கொப்பிகள் ஏனைய சில மாணவர்களால் களவாடப்படுவதும் உண்டு.இது தனியார் கல்வி நிலையத்தின் கொப்பி. ஒரு தவணை லீவு முடிந்ததும் பாடசாலைக்கு சென்று அங்கு டெஸ்குக்குள் வைத்துவிட்டு சென்ற கொப்பியை எடுத்தால் அது கிழிந்துபோய்க்கையில்வரும்  கூர்ந்து அவதானித்ததில் கறையான் அரித்திருப்பதை அவதானிக்கமுடியும் இது பாடசாலைக்கொப்பி. சோ இதற்கு மாணவர்களை  எப்படி குற்றம் செல்வது என்று தெரியவில்லை.தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக வந்தால் கூட அங்கே ஒழுங்காக கற்பிக்கமாட்டார்க்ள்.ஏனென்றால் வகுப்பிற்குள் வேறு தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவன் இருக்கின்றான் அவன் தன்னிடம் இலவசமாக கற்றுவிடுவானே!ஐயா சாமி சாரே நீங்கள் பாடசாலையில் இலவசமாக கற்பிக்கவில்லை அதற்குத்தான் மாசாமாசம் சம்பளம்வாங்குகின்றீர்கள் என்று நாம் அவர்களுக்கு நினைவுபடுத்தினால்தான் உண்டு.

ஒருமுறை நடந்த சம்பவம் ஒரு வளர்ந்துவரும் தனியார் கல்வி நிலையம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் ஒரு தவணை(செமி)க்குரிய பேப்பரை செற் செய்தார் செமி முடிந்ததும் மாணவர்களுக்கு ரிசல்ட் வந்தது அதில் ஒரு வகுப்பில் அனேக மாணவர்களுக்கு நல்ல புள்ளி கிடைத்தது.செற்செய்த ஆசிரியர் வேறுபாடசாலை ஆசிரியர்.அந்த அதிக புள்ளி எடுத்த மாணவர்கள் வேறு ஒரு யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையின்மாணவர்கள் அங்கு அவர்களுக்கு கற்பித்தவர் பிரபல ஆசிரியர் ஒருவர் அவர் பார்த்தார் தனது வகுப்பில் அந்த ஆசிரியரிடம் செல்லும் மாண்வர்கள் அதிகபுள்ளிகளைப்பெற்றிருக்கின்றார்கள் எனவே அவர் தனது பேப்பரை எக்ஸ்ஸாம் நடைபெறமுன்பே தனது மாணவர்களுக்கு இரகசியமாக வழங்கியிருக்கின்றார் என்று அவராக ஒருமுடிவெடுத்துவிட்டு ஏனைய ஆசிரியர்களிடம் ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்.பிரச்சனை பரீட்சைத்திணைக்களம் வரை சென்றது.அவரை விசாரணைக்குவருமாறு அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்கள் அதுவும் ஒப்பீஸலாக லெட்டர் கொடுத்து அழைக்கவில்லை  மீன் வாங்கிவரும்படி மனைவி கோல் செய்து கூப்பிடுவது போல் அழைத்துஅவரை அவமதித்திருக்கின்றார்கள்.அவர் நொந்துகொண்டு வீடு வந்து சென்றபின் உண்மை புலப்பட்டது மாணவர்கள் தொலைபேசியின் உதவியுடன் எம்.சி.கியூ விடைகளை பகிர்ந்துள்ளார்கள்.அவர் திருப்பி திணைக்களத்திடம் சென்று நியாயம் கேட்டார் அவர்கள் என்தப்பதிலும் கூறவில்லை.சரி பிரச்சனை முடிந்துவிட்டது என்று இருக்க,அந்த வகுப்பின்  ஆசிரியர் என்ன செய்தார் தெரியுமா பேப்பர் செற் செய்த ஆசிரியரிடம் கற்கும் தனது வகுப்பு மாணவனை அழைத்து யாராவது அந்த ஆசிரியர் உங்களுக்கு எக்ஸாமுக்கு முதலே பேப்பர் தந்தாரா என்று கேட்டால் ஓம் என்று சொல்லு என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கின்றேன் என்றிருக்கின்றார்.அம்மாணவன் செய்த முதலாவது வேலை பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியரிடம் சென்று நடந்ததை கூறிவிட்டான்.இப்படியான கதைகளும் நடைபெறுகின்றன.


இப்படியும் ஒரு சம்பவம் நடந்தது ஒரு ஆசிரியரின் மாணவன் ஒரு பாடசாலையில் கற்கின்றான் அந்த ஆசிரியரும் கற்பிக்கின்றார் ஒரு நாள் அவர் வகுப்புக்கு வந்தார் படிப்பித்துக்கொண்டிருந்துவிட்டு வகுப்பை அவதானித்தார் தனது மகன் அன்று பாடசாலைக்குவரவில்லை உடனே கண்டீனுக்கு சென்றுவருகின்றேன் என்று சென்றவர்தான் அன்று மீண்டும் வகுப்பிற்குத்திரும்பவே இல்லை.இதுதான் இவ்வாறான ஆசிரியர்கள் தமது பாடசாலைகளுக்கு செலுத்தும்மரியாதை. ஒன்றை வெளிப்படையாக பச்சையாக சொல்லிக்கொள்கிறேன்.உண்மைகள் கசப்பானவைதான் ஆனால் என்ன செய்வது?உயர்தர மாணவர்கள் பாடசாலைக்குவருவதே 78% ஆன வரவு இருந்தால்தான் பைனல் எக்ஸாம் எழுதமுடியும் என்ற சட்டம் இருப்பதனால்தான்.அது மட்டும் இல்லையெனில் பாடசாலை கோவிந்தாதான்.அதுவும் இறுதிவருடத்தில் தனியார் கல்வி நிலையத்துக்கு பாடசாலை நேரத்தில் செல்வதற்குப்பாடசாலைகளும் ஒத்துளைக்கும்.மாணவர்களுக்கு இதைபப்ற்றி சிந்திக்க  அவகாசம் கிடையாது சிந்திக்கவும் முடியாது  அவர்களுக்கு முன்னால் ஏ.எல் என்ற பூதம் பெரிதாக வாயைத்திறந்துகொண்டிருக்கின்றது.சிலபஸ்முடிக்கவேண்டும் ,ரியூட்கள் செய்யவேண்டும்,75 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வந்த முழு பாஸ்பேப்பர்களும் செய்துமுடித்திருக்கவேண்டும் என்று ஆயிரம் பிரச்சனைகள்.அவர்கள் பாவப்பட்ட ஜீவன்கள் அனுபவித்தால்தான் அந்த வேதனை எனன்வென்றுபுரியும். பாடசாலை ஆசிரியர்களுக்கிடையிலும் ஏற்ற தாழ்வுப்பிரச்சனைகள் இருக்கின்றன.உயர்தரத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்காது விட்டால் ஏதோ பாவப்பட்ட ஜீவனாகத்தான் ஏனைய ஆசிரியர்களால் நோக்கப்படுவார் குறைந்தபட்சம்  தனியார்கல்வி நிலையத்திற்கு செல்லாமல் வீட்டில் 30 ற்குக்குறையாத மாணவர்களுக்கு பேர்சனல்கிளாஸ்கொடுத்தால் மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் ஓகோ அப்ப நீயும் ஹோமோசேபியன்தான் என்று.
சோ வெளிப்படையாக சொன்னால் பாடசாலை ஆசிரியர்களை தோற்கடித்தது அதே பாடசாலை ஆசிரியர்கள்தான்.

கல்விச்சுமை அதுவும் ஏ.எல்லில் மற்ஸ்,பயோ எடுத்தாலே ஓட்டம்தான் இதற்குள் இந்த அரசியலை ஆராய அம்மாணவர்களால் முடியாது இது அவர்களின் தவறு அல்ல ஒட்டுமொத்த கல்விசமுதாயமும் தனியார் கல்வி நிலையங்களில் சார்ந்துவிட்டது என்று எண்ணத்தோன்றுகின்றது. மாணவர்களுக்கும் வேறுவழியில்லை. தரம் 5 இற்குக்கூட ஒரு கல்வி நிலையத்தில் 600 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாக ஒரே ஹோலில்  இருந்து கற்கின்றார்கள் இறுதி மேசை மிக உயரமாம் முன்னால்  கற்பிக்கும் ஆசிரியரைத்தெரியவேண்டுமல்லவா அதுதான் வகுப்பு முடிந்ததும் ஆசிரியரின் உதவியாளர்கள் வந்து அம்மாணவர்களை வாங்கில் இருந்து இறக்கிவிடுவார்களாம் ஏனெனில் 5 ஆம் தர மாணவனால் குதிக்கமுடியாத உயரத்தில் மேசை உள்ளது???? யாழ்ப்பாணத்தில் எதற்கு மரியாதை இருக்கிறதோ இல்லையோ கல்விக்கு நிச்சயம் மரியாதை உண்டு தமது தாலிக்கொடிகளை அடகுவைதுதுக்கூட கல்விகற்பித்துவிடுவார்கள் தாய்க்குலங்கள்.மாணவர்களுக்கிடையிலான போட்டி தனியார் கல்வி நிலையங்களை நோக்கியபடையெடுப்பை வெற்றியாக்கியிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் சகல பாடசாலைகளிலும் குறைந்தது 10-20 மாணவர்கள் ஏ.எல்லில் அனைத்துப்பாடங்களிலும் சித்தியெய்த தவறிவிடுவார்கள் ஓல் எஃப் என்று கூறுவார்கள்.அந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் முன்ண்னியில் நிற்கும் மாணவர்களை பாராட்டுவதுடன் நின்றுவிடாது சித்தியெய்யாதா மாணவர்களின் தோல்விக்கு  இருக்கும் பல காரணங்களுள் நானும் ஒரு காரணம் என்பது போல் பாடசாலை அத்தோல்வியை ஏற்றுக்கொள்ளும்.ஆனால் தனியார் கல்வி நிலையம் அதைப்பற்றி மூச்சே காட்டாது.

ஒரு பாடசாலையில் 250 ஏ.எல் மாணவர்கள் கற்பார்கள் 50 பேருக்கு ஓல் எப்.ஏனையோரை சமூகம் பாராட்டினாலும் பாஸாக மாணவர்களுக்காக சமூகம் பாடசாலையை குறைகூறாமல் விடாது.அதிபரும் மேடையில் எமது மாணவர்களில் 50 பேர் ஓல் எப் எடுத்திருக்கின்றார்கள் என்று கூறுவார்.

ஆனால் ஒரு கல்வி நிலையத்தில் ஓர் ஆண்டு கல்விகற்கும் மாணவர்கள் குறைந்தது 1500 பேர் இருப்பார்கள் இவர்களுள் 70 பேர் எஞ்சினியரிங்க் 50 பேர் மெடிசின் சென்றுவிடுவார்கள். மீதம் இருப்பவர்களுள் பாசாகாதவர்கள் ஒரு எஸ்,2 எஸ் களுடன் இருப்பவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள் நிச்சயம் அது மிக அதிகமான ஒன்றுதான்.ஆனால் தனியார் கல்வி நிலையம் அதைப்பற்றி என்னகூறும் தெரியுமா ஒரு இடத்தில் ரியூஸனுக்கு வந்தால் ஒரு இடத்திற்குத்தான் வரவேண்டும் 4,5 இடத்திற்கு போறது அதுதான் ரிசல்ட் இப்படி.வர்ர எண்டால் இஞ்ச ஒழுங்கா வா இல்லைண்டா வராதை.
தம்பி ஐலண்ல பெர்ஸ்ட் எடுத்தானே ஒருதன் அவன் எங்களிட்டத்தான் படிச்சவன் என்று ஆரம்பிப்பார்கள்.ஏ.எல் படிக்க ஆரம்பத்ததில் இருந்து எஞ்சினியரிங்க் மெடிசின் என்றே காதில் கேட்பதாலோ என்னவோ பெரும்பாலான மாணவர்களுக்கு வேறு என்னென்ன கோர்ஸ் மற்ஸ்,பயோ ஸ்ரீமில் இருக்கின்றது என்பதே பெர்ஸ்போம் நிரப்பும்போதுதான் தெரியும்.அட இப்படிக்கூட கோர்ஸ் இருக்கின்றதா?

ஆக ஒரு சில ஆசிரியர்கள் கூறுவார்கள் தம்பி ஐலண்டில ஒருதன் பெர்ஸ்ரா வர்ரான் எண்டால் அது அவண்ட தனிப்பட்ட திறமை இந்த தனியார் கல்வி  நிலையம் அவனுக்கு 10% கூட அதற்கு உதவியிருக்கிம் என்று என்னால் உறுதிகூறமுடியாது.இப்படியானவர்களும் இருக்கின்றார்கள்.பாடசாலையில் ஆசிரியராக இருந்துவிட்டு அதை துறந்து தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கவந்த ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்.அவர்களைப்பற்றிக்கதைக்கமுடியாது ஏனெனில் அவருக்கும் பாடசாலைக்கும்சம்பந்தம் இல்லை.

சோ வெற்றிபெற்றமாணவர்களின் வெற்றியை தாம் பகிர்ந்துகொள்வோம் ஆனால் தோல்வியைப்பகிர்ந்துகொள்ளமாட்டோம் அதுதான் இங்கே நடக்கின்றது.

இத்தொடரை எழுத காரணமானது ஒரு சம்பவம் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஏ.எல் பரீட்சைக்காக ஒரு முன்னோடிப்பரீட்சை ஒன்றை வைத்தார்கள்.அதற்கு மாணவர்க்ளை அழைத்திருந்தார்கள் வழமையாக மாணவர்கள் அதற்கு சென்றவருடங்களில் வந்திருந்தார்கள்.திருத்தப்பட்டு ராங்க் மார்க்ஸ் எல்லாம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டும் வந்தது.ஆனால் சென்ற தடவை என்ன நடந்தது?  வழமையாக சுயன்ஸ்கோல்  மொரட்டுவ எக்ஸாமிற்காக  அந்த நேரம் கிளாஸைவைப்பதில்லை  எஞ்சினியரிங்க் மாணவர்களும் அவர்களிடம் கற்றவர்கள்தானே கேட்டதால் அனுமதித்திருந்தார்கள். ஆனால் சென்றமுறை ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அதே நேரத்தில் வகுப்புவைக்கப்பட்டது அங்கே சொல்லப்பட்டது  அந்த எக்ஸாம் முக்கியமென்றால் அங்கு செல் இல்லையெனில் இங்கு இருந்துபடி...

சுயன்ஸ்கோலில் இவ்வாறான தருணங்களில் ஒரு ஆயுதன் வைத்திருக்கின்றார்கள் சில ஆசிரியர்கள்.. நான் இண்டைக்கு முக்கியமான ஒரு விஸயம் படிப்பிக்கப்போறன்  இருக்கிறவன் இரு போறவன்திருப்பி இதே பாடத்துக்கு வராத வந்து பிரியோசனம் இல்லை உனக்குப்பிறகுவிளங்காது பலன் என்னண்டு பைனல்லதான் தெரியும். இந்த பேச்சுக்குப்பின் எவனாது வெளியே செல்வானா(எந்த ஒரு ஏல் மாணவனையும் கல்வியைக்கொண்டு பயப்படுத்தமுடியும் -விதி)

சோ நடந்தது அதுதான் மாணவகள் வரவில்லை 1000க்கணக்கான பேப்பர்களுடன் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டு தோல்வியில்தான் முடிந்தது.
போக்கத்தவன் யாரும் பொழுதுபோகாமல் அங்கு பேப்பரை செற்பண்ணவில்லை பரீட்சையை ஒழுங்குபடுத்தியது மொரட்டு எஞ்சினியரிங்க் மாணவர்கள்.இலங்கையில் சுப்பர் மரீட்டில் சென்ற மாணவர்கள்தான் அவர்கள் பரீட்சையில் அவர்கள் பெற்ற அனுபவம் நிச்சயம் அடுத்தவருடம் பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கு நிச்சய்ம் தேவை.ஆனால் ஒரே ஒரு தனியார் கல்வி நிலையத்தால் அனைவரும் இங்கே கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
மொரட்டுவவா தம்பி எங்க என்ரர் பண்ணினவனக்ள் எல்லாம் எங்களிட்டத்தான் படிச்சிட்டுப்போனவை...அவையள் என்ன கிளிப்பினம் எண்டும் எங்களுக்குத்தெரியும்...எல்லாம் உங்களை மாதிரி இப்படிமுன்னால வாங்கில இருந்தவைதான்.இதைக்கேட்டு சிரித்துவிட்டு மாணவர்கள் படிப்பார்கள் ஆசிரியருக்கு நாம் விசுவாசமாக இருகக்வேண்டும் என நினைப்பார்கள் ஆனால் நாளை அவர்களும்  பொறியியல் பீடத்திற்குள்  நுழைவார்கள் நாளை அவர்களும் இதே போல் முன்னோடிப்பரீட்சை வைப்பார்கள்  ஆனால் அன்றும் இதே காரணத்திற்காக அது தடுக்கப்படலாம் அப்போது அங்கே கற்கும் மாணவர்களின் நிலையும் இவர்களது  நிலையாகவே இருக்கும். ஒரு தனி மனிதனின் பிரச்சனை சுய நலம் எத்தனை பேரைப்பாதித்திருக்கின்றது.
அவர்கள் வைக்கும் பரீட்சையை எடுத்தல் எந்த வகையில் மாணவர்களின் எதிர்காலத்தைப்பாதிக்கும் என்பது எனக்குப்புரியவில்லை.

மாணவர்களுக்கு கற்பிக்கும்போதே மருத்துவ பொறியியல் பீட மாணாவர்களைப்பற்றி மாணாவர்கள் மதிக்காதவகையில் சொற்பொழிவை ஆற்றிவிடுவார்கள்.தம்பி என்ரர் பண்ணிட்ட்டு நிக்கிறவங்கள் கனக்க சொல்லுவாங்கள் நீ அதை ஒண்டும் கேக்கதேவையில்லை நீ இங்க வா அதுவே காணும் இஞ்ச இருக்கிறபலர் அவை  சொல்லித்தான் இங்க வந்திருப்பியள் எண்டும் தெரியும்.அவ என்ரர் பண்ணிட்டு கிளாஸ் எடுத்துக்கொண்டு திரிவினம் எங்களிட்ட செலவளிச்ச காசை எடுக்கிறதுக்கு(அதை திருப்பி எடுக்கிறது என்றால் மாபியாவிலதான் சேரணும்). அவங்களை நம்பி படிக்க ஆரம்பிச்சா அவளவுதான்... இவற்றைக்கேட்டு சிரித்து தலையாட்டும்போது நாளைய நாம்தான் அவர்கள் என்பது  மாணவர்களுக்குப்புரிந்திருக்காது.


யாழ்மாணவர்களின் கல்வி நிலை குறைதல்பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன  காரணம் என நான் கருதுபவை

இது எத்தனை  மாணவர்கள் எஞ்சினியரிங்க்,மெடிசினிற்கு செல்கின்றார்கள் என்பதைப்பற்றியல்ல ஒட்டுமொத்தமாக பேர்சன்ரேஜ்ஜில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான காரணங்கள்.

1)வாய்ப்புக்கள் அதிகரித்தமை
2)சரியான வழிகாட்டல் இல்லாமை
3)புலம் பெயர் உதவிகள் துஸ்பிரயோகப்படுத்தப்படல்

வாய்ப்புக்கள் அதிகரித்தமை-ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டு 5 பதில்களைக்கொடுத்தால் அதற்கு பதில் சொல்வது ஓரளவு இலகு ஆனால் ஒரு கேள்விக்கு 15 பதில்கள் இருந்தால்? அதுதான் இன்றைய யாழின் நிலை.  நான் 3 தடவைகள் ஏ.எல் எக்ஸாம் எடுத்தேன் என்ற அனுபவத்தில் நான் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக உள்ள 15பிஸிக்ஸ் ஆசிரியர்கள் 5 கெமிஸ்ரி ஆசிரியர்கள் 3 பயோ ஆசிரியர்களிடம் கல்வி கற்ற அனுபவம் இருக்கின்றது.கேட்க எப்படி இருக்கின்றது. இதுதான் நிலை எஞ்சினியரிங்க்,மெடிசின் சென்றவர்களிடம் அட்வைஸ் கேட்டால் ஒரு சிலர்/பலர் தமது குருவிற்கான விஸ்வாஸத்தை இப்படித்தான் காட்டுகின்றார்கள் நீ இவரிடம் செல் பிஸிக்கல் கெமிஸ்ரீ நல்லா செய்வார் நீ அவரின் நோட்ஸ் வைத்திரு இன்னோகானிக் நல்லா செய்வார் நீ இவரின் ரியூட்டை செய் அதில் ஓகானிக் கேள்விகள் மிக நன்றாக இருக்கும்.இது கெமிஸ்டிக்கு பிஸிக்ஸிற்கு ஒவ்வொரு ஆசிரியரிடம் ஒவ்வொரு சிலபஸ். இப்படி 3 பாடங்களுக்கும் நண்பர்கள்,மருத்துவ பொறியியல் பீட மாணவர்கள் கூறிய ஆசிரியர்களின் நோட்ஸ்களின் போட்டோக்கொப்பி அவர்கள் கூறிய ஆசிரியர்களின் ரியூட்கள் மொடல்பேப்பர்கள்,அதோடு வழக்கமாக கற்கும் ஆசிரியரின் நோட்ஸ் கொப்பிகள் இப்படி அனைத்தும் அதோடு 1975 ஆம் ஆண்டிலிருந்தான 3 பாடத்திற்குமான பாஸ்பேப்பர் அப்பாஸ்பேப்பர்களுக்கு வேறு வேறு ஆசிரிகள் எழுதிய விளக்க உரைகள்,புரொப் ரோஸாவின் விளக்கப்புத்தகம் எக்ஸ்ஸாம் ரைம் அண்மிக்கும்போதுதான் இந்தக்கேள்வி இந்தமுறைவருமாம் என்று கூவி விற்கப்படும் பேப்பர்கள் என அனைத்தையும் ஒரு மேசையில் வைத்துவிட்டு ஒரு டீக்கப்புடன் அதன் முன்னால் இருந்தால் அம்மாணவன்தான் வன் மான் ஆர்மி.

சராசரி மாணவனான எனக்கே அதிகாலை 4 மணிவரை கல்விகற்ற அனுபவங்கள் உண்டு.எக்ஸ்ஸாம் நெருங்கும் நேரங்களில்தான் சில பிரபல ஆசிரியர்கள் அறிக்கைவிடுவார்கள் எக்ஸாமிற்கு வரலாம் என எதிர்பார்கக்ப்படும் கேள்விகள்பற்றிய விரிவுரை ஒரு கிளாஸிற்கு 1000 ரூபா கட்டணம் வராமல் விட்டுட்டு பிறகு நான் சொன்னதில ஒருகேள்வி வந்தா பிறகு கவலைப்படுறதில பிரியோசனம் இல்லை பிள்ளையள் என்று வெற்றிலையைப்போட்டுகுதப்பிக்கொண்டு சொன்னால் பைனல் நெருங்கும் நேரத்தில் எந்த  மாணவன்தான் பயப்படமாட்டான். மாணவர்கள் ஏ.எல்லிற்குப்புதுசு சோ எக்ஸாம் பயத்தை அவர்கள் காசாக்குகின்றார்கள் ஆனால் உண்மை என்னவெனில் வருசா வருசம் ஒவ்வொரு பச்சிற்கும் பைனல் எக்ஸாம் நடக்கும்போது இந்தப்பாடத்தில கேள்விவருதாம் அந்தப்பாடத்தில கேள்விவருதாம் எனக்கூறப்படும் எதுவுமே வருவதில்லை என்று 7,8 வருடமாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிச்சயம் தெரியும் ஆனால் கூறமாட்டார்கள் ஏனெனில் ஒரு நாளைக்கு ஒரு மாணவனிடமிருந்து 1000 ரூபா வருதே எதுக்கெடா இந்த மானம் கெட்டபிழைப்பென்று  விடயம் தெரிந்தபின்னர்தான் கேட்கத்தோன்றும்.

சமூகத்தவரைக்கேட்டால் கூறுவார்கள் வசதி கூடிவிட்டது எல்லாரும் போன் பைக் என்று திரிகிறார்கள் என்று.ஓரளவிற்கு அவர்கள் கூறுவதும் உண்மைதான் புலம்பெயர் தமிழர்கள் பலரை இங்கிருக்கும் பலர் ஏதோ பணம் காய்க்கும் மரங்களாகத்தான் பார்க்கின்றார்கள்.அவர்களுக்கு அங்கு ஓசியில் பணம் கிடைப்பதில்லை பனியில் புரண்டு வேலைசெய்துதான் இங்கே பணம் அனுப்புகின்றார்கள்.அதுவும் இங்கே இலங்கையில் இருப்பவன் படிக்கவேண்டும் என்பதற்காக அனுப்புகின்றார்கள் போரால் பாதிக்கப்பட்டவனுக்கு  கொஞ்சமாவது சந்தோஸம் தேவை என்பதற்காக ஐ போன் தொடக்கம் அனைத்துமே வருகின்றது ஆனால் பிள்ளை இங்கே என்ன செய்கின்றது ஐ போனுடன் மட்டுமே படுத்தெழும்பி தக்கூரியாக  பைக்கில் திரிகிறது அட அந்த மோட்டச்சைக்கிள்ள திரியிறத விட்டுட்டு படியெணை... ஏன் நீயே வேண்டித்தந்தனி மாமிதான் எனக்குவேண்டித்தந்தவ...
பெற்றோர்கள் என்ன செய்யமுடியும்.பணம் அனுப்புபவர்களும் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் அங்கே பணம்,அனுப்பப்பட்ட பொருளால் என்ன நடக்கின்றது என்பதை.

அதைவிட இன்னொன்றும் நடக்கின்றது  எனக்குத்தெரிந்த ஒருவருக்கு நடந்த சம்பவம் இது.அவன் ஒரு சராசரி மாணவன் அவன் சுமாராக ஏ.எல் படித்துக்கொண்டிருந்தான் திடீர் என்று சகல கிளாஸ்களையும் கட் செய்துவிட்டான்.காரணம் கேட்டபோது கூறினான் வெளி நாட்டில் இருக்கும் என் அத்தை தன்னை ஸ்பொன்ஸரில் எடுப்பதாக கூறியுள்ளார் சோ நான் ஏ.எல் படிக்கத்தேவையில்லை.என்ன இழவு சரி என்று விட்டுவிட்டால் அடுத்த வருடம் மீண்டும் வந்தான் காரணம் கேட்க இப்போது ஸ்பொன்ஸர் செய்வதில் கஸ்ரமாம் என்றான் மீண்டும் அதே அழைப்பு மீண்டும் கட் ஆனால் 3 ஆவது தடவை அவன் யாருடைய பேச்சையும் மதிக்காது அவனாக படித்து 3 எஸ்களைப்பெற்று சித்தியடைந்தான்.2 வருடங்களை வெளி நாட்டுக்கு உன்னை அழைப்பேன் என்ற தொலைபேசிப்பேச்சு மட்டும் நாசமாக்கியிருக்கின்றது.இது உண்மைக்கதை இதே கதைகள் நடந்த பல நண்பர்களை உங்களுக்கு தெரிந்திருக்கலாம் இதுவும்தான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அடுத்தபிரச்சனை சரியான வழிகாட்டல் இல்லாமை.பல மாணவர்கள் ஏ.எல்லிற்கு வரும்போது எதுவுமே தெரியாமல் 0வில்தான்வருகின்றார்கள்.பாடங்களுக்கு தனியார்கல்வி நிலையத்தில் யாரை தெரிவு செய்வது எத்தனை பேரிடம் கல்விகற்கவேண்டும் யார் சிலபஸ்ஸை முடிப்பார்கள், எந்தப்பயிற்சிப்புத்தகத்தைவாங்கவேண்டும் தேவையில்லாமல் தில்லை நாதன் என்பவரது கெமிஸ்ரியை எல்லாம் நான் படித்திருக்கின்றேன்..யாருடைய ரியூட்களை செய்யவேண்டும் எதுவுமே தெரியாமல்தான் வருகின்றார்கள் இதனால் என்ன நடக்கின்றது புதிதாக வரும் மாணாவர்களுக்கு தங்கள்வீர வரலாறுகளை எடுத்துரைத்து பிரைன்வோஸ் பண்ணப்பட்ட மாணவர்கள் அவர் அந்தப்பாடம் நல்லாய் செய்வார் இவர் இதைச்செய்வார் என்றதும் மனது அலைபாயும் உடனே அந்த வாத்தியாரிடம் கல்வி ஆரம்பமாகும்.இப்படியே அதிகரித்து அதிகரித்து இறுதியில் பைத்தியம்தான் பிடிக்கும். ஓ.எல் வரை கொடிகட்டிப்பறந்த மாணவர்கள் சிறியவயதில் இருந்து வகுப்பில் முன்ணனி வகித்த மாண்வர்கள் 10 ஏ எடுத்த மாணவர்கள் ஏ.எல்லி தடக்கி விழுகின்றார்கள் என்றால் அது நிச்சயம் ஆராயப்படவேண்டிய பிரச்சனைதான்.

இதற்கு தீர்வாக நான் நினைப்பது இதைத்தான் இவ்வாறான யாழ்மாணவர்களின் எதிர்காலம் ஏ.எல் படிப்பை முடித்தமாணவர்களிடம்தான் இருக்கின்றது. நீங்கள் பொறியியல் பீட மாணவராகவோ மருத்துவ பீட மாணவராகவோ இருக்கலாம் எப்படிப்படிப்பது யாரிடம் செலவது என்றெல்லாம் கேட்பார்கள் ஒழுங்காக வழி நடத்துங்கள். நீங்கள் அடிபட்ட வரலாறுகளை சொல்லி அந்த மாணவனை மிரளவைத்துவிடாதீர்கள் ஏதோ கொஞ்சம் கஸ்ரம்தான் என்று சொன்னால் போதும். இந்த ஆசிரியர் அரசியல் எல்லாம் வேண்டாம் அதை ஆராய அவனுக்கு நேரம் இருக்காது அவனுக்கு அது எந்த விதத்திலும்உபயோகப்படாது வெட்டி பஞ்சாயத்திற்கு வேண்டுமானால் உதவலாம்.1975 இல் இருந்து பாஸ் பேப்பர் செய்யவேண்டுமா என்பது தொடக்கம் பைனல் இறுதியில் எப்படி படிக்கவேண்டும் என்பது வரை அந்தந்த நேரங்களில் எடுத்துக்கூறினாலே போதும் என்றுதான் நான் நினைக்கின்றேன்.

(குருபக்தி ராஜவிசுவாசம் என்று தனியார் கல்வி நிலையத்திற்கு அதைவிட்டு வெளியேறியபின்னும் கொடிபிடிக்கும் மன நிலையில் இருந்தால் அது துர்பாக்கியம் நீங்கள் ஏ.எல் மாணவனின் மன நிலையில் இருந்து இன்னும் முன்னோக்கி நகராமல் மன நிலைவளராதவர்களாக இருக்கின்றீர்கள் என்பதுதான் அர்த்தப்பட முடியும்.இங்கே குருவிசுவாசம் குருபக்தி என்ற உப்புச்சப்பில்லாத விசுவாசத்தினால் எதிர்கால மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது.தனியார் கல்வி நிலையத்தில்  நாம் படிக்கும்போதே அடுத்த தலைமுறைமாணவர்களுக்கு நாம் தனியார் கல்வி நிலையங்களை இலவச விளம்பரப்படுத்துமளவிற்கு எமக்குத்தெரியாமலே நாம் பயிற்றுவிக்கப்பட்டோம் என்பதை உணர்ந்தால் சரி.)

 பொறியியல் மாணவர்கள் அல்லது மருத்துவ பீட மாணவர்கள் கருத்தரங்கு நடத்தினால் அதுவரவேற்கத்தக்க விடயம்.ஏ.எல் ஆரம்பித்ததும் ஸ்கூல்களில் இதை செய்தால் மாணவர்களுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும் அதுவும் பொறியியல்,மருத்துவ பீட மாணவர்களே இதைசெய்தால் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும்  நம்பிக்கையளிக்கக்கூடியவகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். ஏனென்றால்  நாம் அவர்களுக்கு முன்பே ஏ.எல்லை முடித்த அனுபவத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை  இங்கே இருக்கும் பல ஆசிரியர்கள் அவர்களின் அரசியல்களையும் ஓரளவுக்காவது படித்த அனுபவத்தையும் கொண்டிருக்கின்ரோம்.இதை ஏ.எல் முடித்தமாணவர்களின் பொறுப்பில் விடுவதற்கு மேலதிகமான காரணங்கள் இருக்கின்றது. சமூகத்தைப்பொறுத்தவரை பாடசாலை என்பது பாடசாலை தனியார் கல்வி நிலையம் என்பது தனியார் கல்வி நிலையம் அவளவுதான்.மாணாவர்களைப்பொறுத்தவரை எப்படா பைனல் ஆனால் சகலதும் முடித்துவிட்ட உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் அதோடு நாம் மாணாவர்களாக இருந்திருக்கின்றோம் என்பதாலும் உள்ளே என்ன நடக்கின்றது என்று தெரியும்.

சமூகத்தைப்பொறுத்தவரை ஏ.எல் என்பது வெறும் கல்வி ஆனால் உள்ளே இவ்வாறு சொன்ன கதைகள் சொல்லாதகதைகள் பல இருக்கின்றன.

யாழ்மாணவர்களின் தலைவிதி உங்கள் கைகளில் இருக்கின்றது பல்கலைக்கழக மாணவர்களே!



கலிலியோ vs மதவாதிகள்-02

$
0
0
ஒரு பொருளின் திணிவை அதன் கனவளவால் வகுத்தால் பொருளின் அடர்த்தி பெறப்பட்டுவிடும்.இதைப்பயன்படுத்தி கிரீடத்தின் அடர்த்தியைக்கண்டு அதை தங்கத்தின் அடர்த்தியுடன் ஒப்பிட்டால் தூய தங்கத்தால் கிரீடம் செய்யப்பட்டுள்ளதா அல்லது ஏதாவது மாசுக்கள் கலக்கப்பட்டுள்ளதா என்று கண்டுபிடித்துவிடமுடியும்.ஆனால் கிரீடத்தின் கனவளவை அளப்பதற்கு எந்தஉபகரணமும் இருக்கவில்லை.அவ்வாறு அளக்கவேண்டுமாயின் கிரீடத்தை அடித்து நொருக்கி ஒரு கோளப்பாத்திரத்தினுள் நிரப்பவேண்டும் அதற்கு மன்னர் சம்மதிக்கமாட்டார்.இன் நிலையில்தான் ஆக்கிடமிஸ் குளிப்பதற்காக தொட்டியினுள் இறங்கியபோது தொட்டியில் இருந்து  நீர் வெளியேறியது.உடனே ஆக்கிடமிஸ்ஸிற்குப்பொறிதட்டியது.வெளியேறிய நீரின் கனவளவும் அமிழ்த்தப்பட்ட பொருளின் கனவளவும் ஒன்று என அறிந்துகொண்டார் இதன் மூலம் கிரீடத்தின் கனவளவைக்கண்டு அடர்த்தியைக்காணமுடியும்.தங்கத்தின் அடர்த்தி ஏற்கனவே தெரியுமாகையால் கிரீடம் தூய தங்கத்தால் ஆனதா இல்லையா என்பதை இலகுவில் கண்டுபிடித்துவிடமுடியும்.இந்த விடயம் அரிஸ்டோட்டலுக்கு பளிச்சிட்டவுடன் நிர்வாணமாகவே குளியலறையில் இருந்து அரசசபைக்கு ஓடினார் யூரேக்கா யூரேக்கா என்று கத்திக்கொண்டு ஓடினார்(ஆக்கிமிடிஸ்ஸின் முறையின்படி கனவளவை அளக்கும் குடுவைகு யூரேக்கா கிண்ணம் என்று பெயர்வைத்துவிட்டார்கள்).இந்த சுவாரஸ்யமான கதையை கலிலியோ தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்,

அத்துடன் அரிஸ்ரோட்டலின் விதிகளில் உள்ள திருத்தங்களையும் வெளியிட்டார்.இவர் தந்து கொள்கைகள்,விளக்கங்களை கதைவடிவில் வெளியிட்டமை இவரது புத்தகங்கள் அதிகபிரபலமடையக்காரணமாக அமைந்தது.ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றவிடயங்களைபிழை என்று குறிப்பிடாமல் அவற்றுடன் தனது கருத்துக்கள் கொள்கைகளையும் மேலதிகமாக சேர்த்துவெளியிட்டமையால் கலிலியோவின் சமகால விஞ்ஞானிகளிடமும் புத்தகம் அதிகவரவேற்பைப்பெற்றது.

கலிலியோ vs மதவாதிகள்-01


இக்காலத்தில் செல்வந்தரான மார்க்விஸ் கலிலியோவிற்கு நண்பரானார்.இவரின் உதவியால் கலிலியோவிற்கு பட்டம் வழங்காது துரத்திய பல்கலைக்கழகத்திலேயே கணிதப்பேராசிரியராக கலிலியோவால் பதவி வகிக்கமுடிந்தது.இதன்பின்னர் கலிலியோ பைசா நகரிற்கு திரும்பி அரிஸ்ரோட்டலின் கொள்கைகளுக்கு எதிரான கருத்தை வெளியிடத்தொடங்கினார்.வெளிப்படையாக அரிஸ்ரோட்டலுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமை கலிலியோவிற்கு அதிக எதிரிகளை சம்பாதித்துத்தந்தது.

பொருள்களின் விழுகைதொடர்பாக அரிஸ்ரோட்டில் கொள்கையை பிழைஎன்று கூறியது கலிலியோவின் எதிரிகளை வெகுவாகசீண்டிவிட்டது.கலிலியோ 1590 இல் அசைவுகள்,இயக்கம் பற்றிய demoto on motion என்ற தனது நூலை வெளியிட்டார்.அதில்தான் இது தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
அரிஸ்ரோட்டலின் கருத்துக்களில் ஒன்று வெவ்வேறு நிறையுடைய பொருட்கள் கீழே விழும்போது வெவ்வேறுவேகத்தில் விழும்.ஆனால் கலிலியோ பொருட்கள் எவளவு எடையைக்கொண்டிருப்பினும் ஒரே வேகத்துடனேயே விழும் என கண்டறிந்தார்.இதை கலிலியோ மட்டும் கண்டறிந்துவிடவில்லை ஏக காலத்தில் வேறுசில விஞ்ஞானிகளும் இதை அறிந்திருந்தார்கள்.பொருட்கள்கீழேவிழுதல் தொடர்பிலான கலிலியோவின் கொள்கைகளைக்கேட்ட பல்கலைக்கழத்தவர்கள் அரிஸ்ரோட்டலின் கொள்கைகள்தான் உண்மை என கலிலியோவுடன் விவாதத்திற்குவந்தார்கள்.இதற்கு முக்கியகாரணம் அரிஸ்ரோட்டலின் கொள்கைகள்பலவற்றைக்கொண்டு பைபிள் உருவாக்கப்பட்டிருந்தது.இதனால் கலிலியோ பரிசோதனை மூலம் நான் கூறியவற்றை நிரூபிக்கின்றேன் என்று கிளம்பினார்.கலிலியோவின் அம்முயற்சி வரலாற்றுச்சிறப்புமிக்க சம்பவமாக மாறியது.பரிசோதனைக்கு கலிலியோ தெரிவு செய்த இடம் பைசா சாய்ந்தகோபுரம்.பைசா சாய்ந்த கோபுரம் 1174ல் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டிலிருந்தே சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துவந்துள்ளது.

தமது மதத்தின் மீதிருந்த நம்பிக்கை,வெறிகாரணமாக கலிலியோவின் கூற்றுக்களை சிந்திக்ககூட மறுத்திருந்தார்கள்.
அரிஸ்டோட்டல் பொருட்களின் விழுகைபற்றி என்ன கூறினார்?(உண்மையில் புவியீர்ப்பின் கீழ் பொருட்களின் சுயாதீன  விழுகை என்றவசனத்தைத்தான் பாவித்திருக்கவேண்டும்.ஆனால் புவி ஈர்ப்பு என்றவிடயம் கலிலியோவிற்குப்பின்னர் வாழ்ந்த விஞ்ஞானியான  நியூட்டனால் அறியப்பட்டது.எனவே புவிஈர்ப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தமுடியாது.)

அரிஸ்ரோட்டல்கூறினார் எடைகூடிய,குறைந்த பொருட்களை ஒரே உயரத்தில் இருந்து கீழே சுயாதீனமாக  நழுவவிடும்போது.எடை கூடியது முதலில் கீழே விழும்.எடைகுறைந்தது சற்று நேரத்தின் பின்னரே தரையை அடையும்.இதை பிழை எனகூறிய கலிலியோவின் கருத்தை கண்மூடித்தனமாக எதிர்த்தமையால் கலிலியோ எரிச்சலின் உச்சிக்கே சென்றுவிட்டார்.மிகவும் கடுப்படைந்த கலிலியோ வெவ்வேறு நிறையுடைய 2 பீரங்கிக்குண்டுகளுடன் 176 அடியுடைய கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்.பழையபடிகள்,வழுக்கல்கள்,களைப்பு,வியர்வை எவற்றையுமே அவர் பொருட்படுத்தவில்லை.கோபம்,பதட்டம் உச்சத்தில் இருந்தமையே இதற்குக்காரணம்.தான் மட்டும் மேலே செல்லவில்லை எதிர்பபளர்கள் சிலரை வற்புறுத்தி வலுகட்டாயமாக அழைத்துக்கொண்டு 176 அடிகோபுரத்தின் உச்சிக்கு சென்றார்.

பைசாக்கோபுர உச்சிக்கு சென்றதும் 2 சக ஊழியர்களிடம் பீரங்கிக்குண்டுகளைக்கொடுத்து தான் சைகைசெய்ததும் கீழே விடும்படி கூறினார்.கலிலியோ சைகைசெய்ததும் அவர்கள் குண்டுகளை கீழே விட்டனர்.அவை ஒரே நேரத்தில் தரையை அடைந்தன.இதன் மூலம் கலிலியோவின் கருத்து சரியானது என அனைவருக்கும் தெளிவானது.காற்றுத்தடை இப்பரிசோதனையில் தாக்கம் செலுத்துவதை கலிலியோ அறிந்திருந்தார்.அதனால் பரிசோதனையின்போது காற்றுவீசும் வேகத்தில் கவனத்தைசெலுத்தியே பரிசோதனையை மேற்கொண்டார்.
ஆனால் முறையான பரிசோதனை செய்யப்பட்டது 50 ஆண்டுகளின் பின் 1642 இல் ரொபேட் பொயில்ஸ் என்ற விஞ்ஞானியினால்தான்.விஞ்ஞானி பொயில் இது தொடர்பான பரிசோதனைகளைபின்வருமாறு செய்தார்.ஒரு கண்ணாடிக்கூடிற்குள் இருக்கும் வளியை அகற்றியபின்னர் அதனுள் ஒரு ஈயக்குண்டையும்,இறக்கையையும் ஒரே கணப்பொழுதில் விடுவித்தபோது அவை கண்ணாடிக்கூடின் அடியை அடைவதற்கு ஒரே அளவான நேரத்தை எடுத்துக்கொண்டன.

ஆனால் இவற்றை வாசிக்கும்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்(வரவேண்டும்).ஒரு கிலோ நிறையை உடைய பஞ்சு,ஒரு இரும்புத்துண்டை ஒரே உயரத்திற்குப்பிடித்துவைத்திருந்துவிட்டு கீழே விட்டால் ஒரே நேரத்திலா கீழே விழும்.இரும்புத்துண்டு கையைவிட்ட மாத்திரத்திலேயே தரையை அடைந்துவிடுமே?


இது ஒரு குழப்பமான விடயம்தான் ஸ்கொலர்ஸிப்பிற்குப்(தரம் 5)படிக்கும்போது கேள்விகேட்டார்கள்.ஒருகிலோ இரும்பா ஒரு கிலோ பஞ்சா நிறை அதியகம் என்று? ஒரு கிலோ இரும்பு என்றுகூறி தலையில் குட்டுவாங்கியது நினைவிருக்கின்றது.ஒரு கிலோ இரும்பு என்பது கைக்கு அடக்கமாகக்கூடியது.ஆனால் ஒருகிலோ பஞ்சையும் கைக்கு அடைக்கமாக நினைப்பதால்தான் இந்தகுழப்பம் அப்போது தோன்றியது ஒருகிலோ பஞ்சு கைக்குள் அடங்காது ஒரு பையேவேண்டும்.
உண்மையில் இப்பிரச்சனைக்குவருவோம்.10 மீட்டர் உயரத்தில் இருந்து.ஒருகிலோ பஞ்சு,ஒரு கிலோ இரும்பை கீழே விட்டால் எது முதலில் தரையை அடையும்.
பொருள் கீழே விழுதலில் காற்றுமுக்கியதடையை ஏற்படுத்துகின்றது.காற்று ஏற்படுத்தும் தடையில் முக்கியபங்கு செலுத்துவது கீழே விழும் பொருளின் பரப்பளவு.
எந்தப்பொருளும் கீழே விழும்போது அப்பொருளின்பரப்பளவுகாரணமாக காற்று தடையை ஏற்படுத்தும்.இதை பரிசோதிக்க(பொருளின் பரப்பளவு) இலகுவான பரிசோதனை ஒன்று இருக்கின்றது.ஒரளவு பெரிய நோட்புக்கை சுருட்டி வைத்துக்கொண்டு வேகமாக அசையுங்கள்(பட்டிங்க் செய்வதுபோல்)..பின்னர் அதே நோட் புக்கை சுருட்டாமல் வைத்துக்கொண்டு அதேபோல் அசையுங்கள்பார்க்கலாம்.அது கடினமாக இருக்கும்.இங்கு என்ன நடந்தது? காற்றுடன் தொடுகையுறும் பரப்பளவு அதிகரித்தது சோ தடை அதிகரித்தது.எனவே பொருள் செல்லும் வேகத்தை காற்று( பொருளின் பரப்பளவின் காரணமாக )தடையை ஏற்படுத்தி(அதை உராய்வு என்று அழைப்பார்கள்) குறைத்துவிடும்.

ஆக காற்று பொருளின்  வேகத்தில் தடையை ஏற்படுத்துகின்றது.

சரி சப்போஸ் சந்திரனில் இதே போல் வேறு வேறு நிறையுடைய பொருட்களை விழவிடுவோம்...ஒரு யானையையும் ஒரு எறும்பையும் 40 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழவிட்டால் எது முதலில் தரையை அடையும்? என்று கேட்டால் இரண்டுமே ஒரே நேரத்தில் தரையை அடையும் காரணம் சந்திரனில் காற்றுமண்டலம் இல்லை எனவே காற்று தடையை ஏற்படுத்தாது....ஆனால் யானை விழுவதற்கும் எறும்புவிழுவதற்கும் ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்...எங்கேயோ உதைக்கின்றதே என்று கேட்டால்... உந்தம் என்ற விடயம் இருக்கின்றது ... ஒரு பொருளின் ,வேகம்* பொருளின் திணிவு=உந்தம்( momentum ) P=mv, யானை கீழே விழும்போது அதிக உந்தத்துடன் தரையை அடையும் எறும்பு குறைந்த உந்தத்துடன் தரையை அடையும்.இதுதான் அந்தவித்தியாசம்.

இப்பரிசோதனை கலிலியோவுக்குவெற்றியைக்கொடுத்தாலும் துன்பமே வந்துசேர்ந்தது.இவர் அரிஸ்ரோட்டலின் கருத்துக்களைப்பிழையாக்கினார் பைபிள் அரிஸ்ரோட்டலின் கருத்துக்களையும் உள்வாங்கி இருந்ததால் பலத்த எதிர்ப்புக்கிளம்பியது.(எதைவிடவும் மதம் முக்கியம் சாரே)இதன் காரணமாக பல்கலைக்கழகம் இவரது வேலைக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்தது இதனால் கலிலியோவேலை இழந்தார்.
 இன் நிலையில் அடுத்தஇடிவிழுந்தது கலிலியோவின் தந்தைவின்சங்கியோ மரணமடைந்தார்.இவர் இசைமூலம் சம்பாதித்தபணத்தை மற்றவர்த்தக நடவடிக்கைகளில் போட்டு பணத்தைசெலவழித்திருந்தார் கலிலியோவின் சகோதரிக்கு அதிக சீதணம் அளிப்பதாக கணவருக்கு வாக்குறுதிகொடுத்திருந்தார் ஆனால் அதற்குள் இறந்துவிட்டார். இன் நிலையில்தான் பல்கலைக்கழகமும் கலிலியோவைக்கைவிட்டிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில்தான் கலிலியோவின்  நண்பர் மார்குவிஸ் மீண்டும் உதவிசெய்தார் முந்தயதைவிட 3 மடங்குஅதிக சம்பளத்துடன் பாடுவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைக்கப்பட உதவி செய்தார் நண்பர். அந்த நண்பருக்கு 16 000 புத்தகங்களைக்கொண்ட நூலகம் ஒன்று சொந்தமாக இருந்தது அதை கலிலியோ நன்றாகப்பயன்படுத்திக்கொண்டார். நண்பர் பிலோனி பாடுபாவின் மிகப்பெரும் செல்வந்தர் இதனால் பாடுபாவின் செல்வாக்குமிக்க பிலோனி சமூகத்தில் இணைவதற்கான வாய்ப்பு கலிலியோவிற்குக்கிடைத்தது.விரைவில் அச்சங்கத்தின் முக்கிய உறுப்பினரானார்.இதனால் வேறு பல செல்வந்தர்களையும் நண்பர்களாக சம்பாதித்துக்கொள்ளமுடிந்தது.இப்படிக்கிடைத்த செல்வந்த நட்புக்களுக்கிடையிலான ஒற்றுமைஎன்னவென்றால் அனைவரும் அறிவியல் வேட்கைகொண்டவர்கள். இந்த நண்பர்கள்தான் பின்னாளில் மரண தண்டனையில் இருந்து கலிலியோவைக்காப்பாற்றினார்கள்.
கலிலியோவின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்தது சொந்தமாக சிறியவீடு ஒன்றைக்கட்டினார்.கலிலியோவின் வாழ்க்கையிலும் காதல் மலர்ந்தது மரினா என்ற பெண்ணுடன் கலிலியோபழகத்தொடங்கினார். இருவருக்கும் 2 பெண் 1 ஆண்குழந்தைகள் பிறந்தார்கள் ஆனால் இருவருமே இறுதிவரைதிருமணம் செய்துகொள்ளவில்லை.காரணம் கலிலியோ அதிகம் காதலித்தது அறிவியலைத்தான் இதனால் கலிலியோவை நல்ல கணவராகவோ தந்தையாகவோ கொள்வதுகடினமான ஒன்று.

ஒரே நேரத்தில் பொருட்கள் விழுதல் பற்றியபரிசோதனைகளில் காற்றுத்தடை,சரியான கடிகாரம் இன்மைபோன்றன பரிசோதனைக்குறைபாடுகள்தான்.  நாடித்துடிப்பை கடிகாரமாகப்பயன்படுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
பொருட்களை உயரத்தில் இருந்து கீழே நழுவவிட்டதுபோல் சாய்தளங்களிலும் கலிலியோபொருட்களை  நழுவவிட்டுப்பார்த்தார்.ஆனால் சாய்தளங்களில் நழுவவிடப்பட்ட பொருள் அடித்தளத்தை அடைய அதிக  நேரம் எடுத்தது.இதற்குக்காரணம் உராய்வு.உராய்வு இல்லையாயின் இரண்டுமே ஒரே நேரத்தில் தரையைஅடைந்திருக்கும்.பொருட்களை ஒரே  நேரத்தில் கீழே  நழுவவிடலில் உள்ள சிக்கல் நேரத்தைக்கணிப்பது.176அடி உயரத்தில் இருந்து பொருளைக்கீழே நழுவவிட்டாலும் குறைவான நேரத்தில் பொருள் தரையை அடைந்துவிடும்.எனவே இவர் இதற்காகக குறைபாடுள்ள ஆனால் ஓரளவு திருத்தமான வழி ஒன்றப்யன்படுத்தினார்.அடியில் துளைகொண்ட ஒரு தண்ணீர்பீப்பாவைப்பயன்படுத்தினார்.அத்துளையினூடாக வெளியேறும் நீர் ஒரு முகவையினுள் சேகரிக்கப்படும்.வெவேறு பொருட்கள் போடப்படும்போது சேகரிக்கப்படும் நீரின் அளவுகள் ஒப்பிடப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கலிலியோவின் பைசாக்கோபுரப்பரிசோதனையின்போது பொருட்கள் மாறாவேகத்தில் தரையை அடைந்தன என  நம்பினார்கள் மக்கள்.ஆனால் அது தவறு படிப்படியாக வேகமடைகின்றன என நம்பினார் கலிலியோ.இவரது எண்ணம் ஆர்முடுகல் என்ற கணியம் தோன்றஅடிப்படையாக  அமைந்தது.(உண்மையில் ஆர்முடுகல் பற்றிய முழுமையான கருத்துக்கள் கோட்பாடுகள் கலிலியோவின் பின்னர் வந்த நியூட்டனால் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது ஆனால் கலிலியோ உணர்ந்திருந்தார்)
இதைப்பரிசோதனைமூலம் செய்துபார்க்கவிரும்பினார் கலிலியோ.பந்து ஒன்றை சாய்தளத்தில் 8,18,32 அடிகள் தூரத்தில் இருந்து கீழே உருளவிட்டார்.

0-8,8-18,18-32 அடிகளைக்கடக்க எடுக்கும்  நேரங்களை அளவிட்டார் 18-32 அடிகளை கடக்க எடுக்கும் நேரம் மிக குறுகிய நேரமாக இருந்தது.எனவே வேகம் கீழே வர வர அதிகரிக்கின்றது என  நிரூபனமானது.
கலிலியோவின் இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன அப்போது கலிலியோ இராணுவ அதிகாரிகளுக்கு கணக்கிடும் இயந்திரங்களை உருவாக்கி பணம் ஈட்டிக்கொண்டிருந்தார் இதன் பெறுபேறாக எறி குண்டுகள்,உந்தம் பற்றிய எண்ணக்கருக்கள் கலிலியோவிற்குத்தோன்றியது.

ஆனால் இவ் எண்ணக்கருக்கள் மீண்டும் பழமைவாதத்துடன்/அரிஸ்ரோட்டலுடன் மோதும் கட்டாயத்தை ஏற்படுத்தியது.மரபுவழியாக நம்பப்பட்டுவந்த இயல்பியல் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு பொருளில் ஒரு விசைமட்டுமே தாக்கும் எனக்கூறியது.ஆனால் ஒரு சந்தர்ப்பத்தை உதாரணமாகக்கொண்டு அது தவறானது எனக்கலிலியோ எடுத்துரைத்தார்.ஒரு கப்பலில் பிரயாணம் செய்யும்போது ஒரு பாய்மரத்தின் உச்சியில் இருந்து ஒரு பந்தைக்கீழே போட்டால் அது பாய்மரத்தின் அடியை அடையும் எனவே கப்பல் எந்த அசைவை உணர்கின்றதோ அதைத்தான் பந்தும் உணர்கின்றது எனக்கூறினார்.


தொடரும்...

பாலாவா இப்படி?

$
0
0

விகடன் பரதேசி ரீசர் ஒன்றைவெளியிட்டிருந்தது...பார்த்தீர்களென்றால் நடுங்கிப்போய்விடுவீர்கள்... பரதேசியில் நடிக்கும் அதர்வா முதற்கொண்டு ஹீரோயின் அவன் இவன் என்று சகலருக்கும் நல்ல அடிவிழுகின்றது முதலில் ரீசரைப்பார்த்துவிடுங்கள்.
ஒன்று பாலா வைத்திருந்த தடி சினிமாவிற்கே உரிய ஆர்ரிபிஸலான குச்சி...விகடன் எடிட் செய்து உசுப்பேற்றுகின்றது.ஆனால் அது உண்மையாக இருந்தால்...இதைவிட கொடுமை எதுவென்று புரியவில்லை. உதைஎல்லாம் ரியலாகத்தான் விழுகின்றது.பெண்கள்கூட அடிவாங்குகின்றார்கள்..இவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் பாலாவின் விசிறிஎன்றே வெளியில் கூறமுடியாதே... நாளை பாலாவின் படத்தில் அஜித்,விஜய்,ரஜனி நடித்தால் என்ன ஆகும்?

அது சரி நான்கடவுள் படத்தில் எல்லாம்  அங்கவீனர்கள் எல்லாம் அடிவாங்கினார்களே நந்தா சேது பிதாமகன் இவற்றிலெல்லாம் சகலரும் இப்படியா வாங்கிக்கட்டினார்கள்?
அடிவாங்கியதற்கே நஸனல் அவார்ட்கொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறாரா?

தமிழ்சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் இயக்குனர் என்ற மகுடம் இதற்குத்தானா? ...

கொம்பியூட்டர் கேம்ஸ் ரசிகர்களே

$
0
0
1990,89,91 ஆண்டுகளில் பிறந்த கேம் ரசிகர்கள் இப்பொழுது மிஸ்பண்ணும் கேம்களைப்பற்றிய பதிவுதான் இது.முதன்முதலில் 2002 இல்தான் கொம்பியூட்டரை தந்தையார் வாங்கித்தந்தார்.அப்போது எக்ஸ்பி விண்டோஸ் போடப்பட்டிருந்தது.கொம்பியூட்டருக்கு தனிரூம் அதுவும் பெரிய ரூம் அந்த ரூமின் சுவரில் உள்ள காற்றுப்புகும் துளைகள்,ஜன்னல்கள் போன்றவற்றை உதயன்பேப்பரில் பசைபூசி ஒட்டி ரூம்ஸ்ஸ்பிரே எல்லாம் வாங்கி அந்த ரூமே சற்றுவித்தியாசமாக ஆகிவிட்டிருந்தது.கொம்பியூட்டருக்கு அவளவுபாதுகாப்பு,2 வருடங்களில்  அந்த அறையின் நிலை மீண்டும் பழையமாதிரியே ஆகியதுவேறு விடயம்,தனியார் கணணிக்கல்வி நிறுவனத்தில் எம்.எஸ் ஒப்பீஸ் படிப்பதற்காக அனுமதிக்கப்பட்டேன் சோ அதற்கு உதவியாக இருக்குமென்றுதான் கொம்பியூட்டர் வீடுதேடிவந்தது பெண்டியம் 3 என்று நினைக்கின்றேன் 65 000(2002இல்) ரூபாவிற்கு வாங்கியதாக நினைவிருக்கின்றது.அந்த தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று ஆரம்பத்தில் சீரியஸ்ஸாகப்படித்துக்கொண்டிருந்தபோதுதான் கொம்பியூட்டர் கேம்ஸ் எனக்கு அறிமுகமானது அப்போது முதன் முதலில் நான் விளையாடிய கேம் "டேவ்" என்ற கேம்தான் அது ஒரு 1டி கேம்.தனியார் கல்வி நிலையத்தில் லெக்ஸர் ரைம் போக மீதி நேரத்திற்கு படிப்பித்ததைபயிற்சி செய்வதற்கும் அசைமன்ற் செய்வதற்கும் பயன்படுத்துமாறுகூறினார்கள்.ஆனால் முழு நேரமும் டேவிலேயே சென்றுகொண்டிருந்தது.

டேவ் கேமை எனது கொம்பியூட்டரில் விளையாடவேண்டும் என ஆசைப்பட்டேன்.அப்போது பிளாஸ்,பென்ரைவ் என்பவை இல்லை சி.டிக்கள் எல்லாம் 120 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தன.அப்போது தரவுகளைசேமிக்கவும் இடம்மாற்றவும் அனைவரும் பயன்படுத்திய ஒரு பொருள் இருக்கின்றது.கண் முன்னாலேயே காலவதியான பொருள் புளொப்பி(floppy) 1.44mb கொள்ளளவைக்கொண்டது.அதை அதன் ரைவில் இட்டதும் சத்தத்துடன் வேலைசெய்ய ஆரம்பிக்கும் அதனுதவியுடன்தான் எனது கொம்பியூட்டருக்கு கொண்டுவரமுடிந்தது.

டேவ் கேமை மிஸ்பண்ணுவோருக்கு அந்த நாட்களைமீண்டும் அனுபவிக்க விரும்புகின்றீர்களா..

முதலில் இந்த லிங்கிற்கு சென்று ஜாவாவை டவுன்லோட் செய்து நிறுவுங்கள் லிங்க்

பின்னர் இந்த லிங்கிற்குசெல்லுங்க்ள் வேலைசெய்யாவிடின் ரீபிரஸ் செய்யுங்கள் கேம் ரெடி
டேவ் கேமிற்கு இங்கே கிளிக்
டேவ் பற்றிய சில தகவல்கள் 1988 இல் வெளிவந்ததாம்..Dangerous Dave is a 1988 computer game by John Romero. It was developed for the Apple II and DOS as an example game to accompany his article about his GraBASIC, an Applesoft BASIC add-on, for the UpTime disk magazine. The object of the game was to collect gold cups to move on to the next level. Since the original 1988 publishing of Dangerous Dave on UpTime, there have been three sequels and three ports of the original to other platforms...

அடுத்து அறிமுகமான கேம் சூப்பர் மரியோ
மரியோவில் பலவேர்ஸன்கள் வந்திருந்தன உங்களுக்கு விரும்பியதை நீங்கள் ஒன்லைனில் விளையாடுவதற்கு  இங்கே கிளிக்

அடுத்து அறிமுகமான கேம் அதுவும் மிகப்பிரபலமாக பேசப்பட்ட ஒன்று கொமாண்டோஸ்...அப்போது சந்தித்த கேம்களில் விளையாடுவதற்குக்கடினமாக இருந்த கேம் இதுதான்(1டி,2டிக்கேம்களில்)

 1,2,3 என பல பாகங்களாக கொமாண்டோஸ் வெளிவந்தது.இதன் முதல்பகுதி 1998 ஜூலை 1 இல்வெளியிடப்பட்டது.1 ஆம் உலகப்போரை அடிப்படையாக வைத்தே இக்கேம் உருவாக்கப்பட்டிருந்தது.Pyro Studios என்ற டெவலப்பேர்ஸ்தான் இக்கேமை உருவாக்கியிருக்கின்றார்கள் இவர்களின் அதாவது கொமாண்டோஸின் இறுதிவடிவம் 2 டியில் இருந்து 3 டிக்கு தாவியிருக்கின்றது  இந்த கொமாண்டோஸ் சீரிஸில் இறுதியாக வெளிவந்த 3 டி சூட்டிங்க் கேம்Commandos: Strike Force இது பெர்ஸ்பேஸன் சூட்டிங்க் கேம்.யூடியூப்பில் கேம்பிளேயைப்பார்த்துவிடுங்கள்




கொமாண்டோஸ் 1 ஐ தரவிறக்கஇங்கே கிளிக்

கொமாண்டோஸ் 1 இல் பல சீட்டிங்க் கோட்கள் இருக்கின்றன.இவற்றைப்பிரயோகிப்பதன் மூலம் கேமில் ஹெல்த் குறையாது அதாவது எமது கேம் காரக்டர் சுட்டாலும் இறக்கமாட்டார்.அவ்வாறான சில சீட்டிங்க் கோர்ட்கள்

1982gonzon ctrl+i இதன்பின்னர் உங்களிற்கு ஹெல்த் குறையாடு நெக்ஸ் மிஸினிற்கு செல்வதாயின் கொன்ரோல்+ n ஐக்கொடுத்தால் நெக்ஸ்ட் மிஸின்.அதோடு ஒவ்வொரு மிஸினிற்கும் பாஸ்வேர்ட்கள் இருக்கின்றன
சில மிஸின்களில் டாம்களை வெடிக்கவைக்கவேண்டி இருக்கும் அதையெல்லாம் வெடிக்கவைப்பதர்கு ரைம்பொம்ப் வைக்கதேவையில்லை கோர்ட்வேர்ட்களே போதுமானவை அவ்வாறான கோர்ட் வேர்ட்கள்..


Easy Promotions


To get easy promotions, while playing type "1982gonzo" to enable cheat mode. Then press and hold the Ctrl and Shift keys and push N. The mission complete screen will appear. press "P" to replay the mission and repeat the code as often as you like to get lots of merit.


Level Password

Norway: LEVEL PASSWORD MISSION OBJECTIVE 2 NS2B7 Destroy river base. 3 BFQBF Destroy dam. 4 YGF1J Destroy headquarters. 5 JJTCG Destroy radar site. 6 NT1WN Destroy rail cannon. 7 Y3YWX Destroy U-Boats.

Enemy Perspective


While playing, type "1982gonzo" (or "gonzo1982") to enable Cheat mode, then press Shift-V to see from the enemy's perspective.


Teleport


While playing, click on a member of your team, then move the pointer to the location where you wish to teleport and press Shift-X.

மேலதிகமாக சீட்டிங்க் கோர்ட்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக்
அடுத்து அறிமுகமான கேம் megaman x5....

இது ஜெப்பானில் 2000 ஆம் ஆண்டில்வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டு ஒரு வாராத்தில் 43 000 கொப்பிகள் விற்றன. கேம் பிரியர்களின் ஆதரவை உடனேயே பெற்றுக்கொண்டது. IGN இதற்கு 10ற்கு 8.5 கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு 2டிக்கேம்  எமது உலகத்தில் எல்லாமே மிஸினரியாக மாறிவிட்டிருக்கும் காலத்தில் கதை நடைபெறுகின்றது.மிக சுவாரஸ்யமாக இருந்தது.இதை விளையாடியகாலங்களில் இது விளையாடி முடிப்பதற்கு கடினமாகத்தான் இருந்தது.

இந்தக்கேமின் இன்ரடக்ஸன் சோங்க் அசத்தலாக இருக்கும்


இந்தக்கேமை டவுன்லோட் செய்யவிரும்பினால் இங்கே கிளிக்

அடுத்து  எனக்கு அறிமுகமான கேம் celtic kings

இந்தக்கேம் ஏன்சன்ற் ரோமின் காலத்தில் நடைபெறுகின்றது... எமக்கு ஒரு கோட்டைதரப்படும்  எமக்கென்று ஒரு நிறத்தையும் தெரிவுசெய்யமுடியும்.எதிரியின் கோட்டைகளைக்கைப்பற்றவேண்டும்.விற்படைகள்,வாட்படை,குதிரைப்படைகள் எல்லாம் இருக்கின்றன.எத்தனை அரசர்கள் வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம் படைவீரர்கள் எத்தனைபேரைவேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம் ஆனால் அதற்கேற்றவாறு எம்மிடம் தங்கமும் உணவும் இருக்கவேண்டும் உணவை,தங்கத்தை கோட்டைக்குவெளியே உள்ள கிராமங்களைக்கைப்பற்றுவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.கடல்களில் பிரயாணம் செய்து கப்பல்கள் மூலமும் மோதிக்கொள்ளமுடியும்.2டிக்கேம்தான் இருந்தாலும் சுவாரிஸ்யமாக இருக்கும்.


அக்காலத்தில் இவைதான் பீரங்கிகள் ஒரு மண்பானையில் நெருப்பை நிரப்பி காட்டப்பட்ட கருவியைப்பயன்படுத்தி கோட்டைகள் மீது எறிவார்கள் 

மக்ஸிமம் பிளேயர்ஸ் 8. எனவே 7  எதிரிக்கோட்டைகள்.  நாம் எப்படியும் முயன்று 6 கோட்டையைக்கைப்பற்றும்  நேர அவகாசத்தைப்பயன்படுத்தி  எஞ்சிய ஒரு கோட்டை விஸ்வரூபமாக வளர்ந்துவிடும் அதை முடிப்பதற்குத்தான் படாதபாடு படவேண்டும். இதில் மாஜிக் வேலைகள் செய்யும் priestகளும் இருக்கின்றார்கள்.ஒரு படையை எதிரிக்கோட்டைக்குள் இன்விஸிபிளாக கொண்டுசெல்லமுடியும்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே கிளிக்
அது வேலைசெய்யவில்லையாயின் இங்கே கிளிக்

அடுத்த கேம் beach head 2000 முதன் முதலில் 360 டிகிரி சுற்றிப்பாக்குமளவிற்கு 3டியில்  விளையாடிய கேம் இதுதான்.



ஆனால்60 ஆவது லெவலுக்கப்பால் செல்லவே முடியவில்லை 1 நிமிடத்தில் கேம் ஓவர்.
ஒரு கடற்கரையின் அருகே ஒரு பங்கரிற்குள் இருந்துகொண்டு கடல்,வான் வழியாக வரும் எதிரிகளை சமாளிக்கவேண்டும்.எமக்கு தரப்படும் துப்பாக்கிக்குண்டுகள்,ஹெல்த் தீர்ந்துவிடலாம் இதற்கு உதவியாக இடையிடையே எமது உதவிவிமானம் பரசூட்டில் ஆயுதங்கள்,மெடிக்கல் பாக்குகளைப்போட்டுவிடும்.அதை இலக்குவைத்துசுட்டால் ஹெல்த்தையோ,அமோவையோ பெற்றுக்கொள்ளமுடியும்.முன்பக்கமாக சுட்டுக்கொண்டிருக்க  ஹலியில் வீரர்களைக்கொண்டுவந்து பின்னால் இறக்கிவிடுவார்கள் கேம் ஓவர்.

இந்த கேமை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்

முதன் முதலில் அன்றைய நாட்களில் அறிமுகமான அதிரடி அக்ஸன் கேம் பாட்மான்

கேமினூடு ஒரு கதையும் கூடவே செல்லும்.3டிக்கேம் ஜோக்கர் பிரீஸ் என்று ஒரு வில்லன்கூட்டமே கேமில் இருக்கின்றது.இந்தக்கேமில் 2 இடங்களில் பிரச்சனை இருக்கின்றது.முதலாவது ஒரு லெவலில் வில்லனை காரில் துரத்தவேண்டி ஏற்படும் அதன் இறுதியில்  கார் சரியான இடத்தில் நிற்காமல் கேம் ஓவராகிவிடும் எப்படியும் தொடர்ந்து 10,15 தடவைகள் முயற்சி செய்தால்தான் வெற்றிகிடைக்கும்.வேறு ஒரு லெவலில் சுடப்பட்டு கீழே விழும் ஹெலியில் இருந்து தப்பி காரில் ஏறி பாட்மான் தப்பிக்கவேண்டும் அப்போது காரில் ஏறி அது ஓட ஆரம்பித்ததும் கேம் ஸ்ரக்காகிவிடும்.இதன் காரணமாக அடித்த லெவலை நினைத்தும்பார்ககமுடியாது.சரி எப்படியாவது அதைத்தாண்டிவிட்டால் அடித்த ஆப்பு வரும்.இதன் பின்னர் வரும் ஒரு லெவலில் பாட் மான் சிவில் ரெஸ்ஸுடன் செல்வார்.ஒரு கதவு ஒன்றை திறக்கவேண்டியேற்படும் அதற்கு நம்பர்களை கொடுத்தால்தான் கதவு திறக்கும் ஒரு ரோவில் 0 தொடக்கம்9 வரையாக 3 ரோக்களில் நம்பர்கள் நிச்சயம் நம்பர் தெரியாமல் திறக்கவே முடியாது.அந்த நம்பர்களை எங்கு எடுப்பது. அருகில் உள்ள அறைக்குள் ஒரு ஜோக்கரின் சிலை வைக்கப்பட்டிருக்கும் அதில் நம்பர் எழுதப்பட்டிருக்கும்.இப்படி பில்டிங்கை சுற்றிப்பார்த்தால் 3 சிலைகள் இருக்கும். நீங்கள் கதவருகில் கொடுக்கவேண்டிய நம்பர்களின் மேலே கண் காது வாய் போன்றவற்றின் படம் போடப்பட்டிருக்கும்.இதற்கேற்றாற் போல் ஜோக்கரின் சிலைகளும் ஒன்று கண்களைப்பொத்தியபடி காதுகளைப்பொத்தியபடி வாயைப்பொத்தியபடி இருக்கும்.அவ்வாறான சிலைகளின் கீழே உள்ள நம்பரை பார்த்து நம்பரை தெரிவு செய்தால் கதவு திறக்கும்.இதைக்கண்டுபிடிக்க எனக்கு 1 வருடம் ஆனது ...கொடுமை சரவணா...




டவுன்லோட் செய்வதற்கான லிங்கள்
லிங்க் 1
லிங்க் 2
லிங்க் 3


அடுத்து பிரபலமான கேமாக வலம்வந்தகேம் spiderman இதில் தற்போது பலவேர்ஸன்கள் வெளிவந்துவிட்டன ஆனால் ஆரம்பத்தில் அறிமுகமான கேம்  2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது.இப்போதும் இது விளையாடப்பட்டுவருகின்றது கிராபிஸ்லெவல் எல்லாம் வெளிவந்த ஆண்டிற்கு ஏற்றவாறுதான் இருக்கும்.




இதிலும் ஒரு லெவலில் கேம் ஸ்ரக்காகும்...மேலே காட்டப்பட்ட லெவலில்ன் இறுதியில் ஒரு பில்டிங்கிற்குள்பாயவேண்டியேற்படும் பாய்ந்தபின் ஸ்பைடி உள்ளேயே நின்றுவிடும் முடிவில் அடுத்தபில்டிங்கின்மீது பாயும்போது தவறிவிழுந்து கேம் ஓவராகிவிடும்.

டவுன்லோட் செய்வதற்கான லிங்க்ஸ்

இங்கே கிளிக்
இங்கே கிளிக்

spiderman 2 

ஸ்பைடர்மான் 1 ற்குப்பின்னர் வெளிவந்தது...


எந்தப்பிசகும் இல்லாமல் வேர்க்செய்யும்.இறுதிலெவல்கள் எல்லாம் கடினமானவை 1 ஐவிட வித்தியாசமானது இது.என்ன ஒன்று கீழே விழுந்தால் கேம் ஓவராகாது.இதுதான் இன்த கேமின் ஹைலைட்.




டவுன்லோட் லிங்க் கிளிக்
 கிளிக்


Serious Sam 1 The First Encounter


அசத்திய கேம்களில் இதுவும் ஒன்று சீரியஸ் சாம் இதில் 2,3 என அடுத்தடுத்த வெளியீடுகள்வந்துவிட்டன இருந்தாலும் முதலாவதின் பாதிப்பில் இருந்து மீள்வது கடினமாகத்தான் இருக்கின்றது.
இதில் வரும் காரக்டர்கள் எல்லாமே வித்தியாசம் முண்டங்கள்,6 கைகளைக்கொண்ட விலங்குகள் ,எருமைமாடு அது இதென்று  பல ஜந்துக்கள் கொல்வதற்குவரும்.ஆனால் இந்தக்கேமின் ஸ்பெஸாலிட்டி ஹைலைட் என்னவெனில் அந்தக்கால எகிப்துக்கு உங்களை அழைத்துச்சென்றுவிடும் இந்தக்கேம் மிகப்பிரமாண்டமான கற்பனை செய்யமுடியாத கட்டிடங்கள்.இண்டியானா ஜோன்ஸில் காட்டப்படுவதுபோல் சில கற்களை உள்ளே தள்ளி இரகசியவாயில்களைத்திறக்கவேண்டியிருக்கும் இப்படி பலவிடயங்கள் உள்ளே உள்ளன.கேம் என்பதுடன் அக்கால எகிப்திற்கு ஒரு ரூர் சென்றஉணர்வும் ஏற்படும்.








  நல்லவரவேற்பைப்பெற்றிருந்தது சீரியஸ்ஸாம்

Game of the Year (PC) (2001) – GameSpot
Outstanding Achievement in Technology (2001) – IGN Action Vault
Surprise of the Year (2001) – IGN Action Vault


டவின்லோட் லிங்க்ஸ்

2011 இல் Serious Sam 3 வெளிவந்துவிட்டது
Viewing all 113 articles
Browse latest View live