Quantcast
Channel: வெங்காயம்
Viewing all 113 articles
Browse latest View live

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-05

$
0
0
சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்ததும் அடுத்தடுத்த நாட்களில் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின பெண்களுக்கிடையில் குரூப்வைஸாக நெட்போல்,ஆண்களுக்கிடையில் குரூப்வைஸாக வொலிபோல்  மச்கள் நடந்தன இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வழமையாக ஒரு ஸ்கூலில் ஒரு இவன்ற் நடைபெறுகிறது என்றால் முதலே ரியசல்செய்வார்கள் மச் ஏதாவது நடைபெறுகின்றது என்றால் குறைந்தது 10 நாள் பயிற்சி இருக்கும் சிலரை வலிந்து அழைத்துவரவேண்டியிருக்கும் சிலர் போட்டி நாளன்றுவரமாட்டார்கள் போட்டியில் பங்குபற்றுவதையோ நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதையோ ஊக்குவிக்கும்முகமாக 1 மணித்தியாக சொற்பொழிவெல்லாம் ஆற்றவேண்டியிருக்கும் ஆனால் காம்பில் நான் வித்தியாசமான் ஒரு வைபிரேசனை அவதானித்தேன் செய்யவேண்டிய ஒரு நிகழ்ச்சியை காலையில் சொல்வார்கள் மாலையில் அந்த நிகழ்ச்சி தயாராகிவிடும் மாணவர்கள் தயாராகிவிடுகின்றார்கள்...கூட்டத்தில் இருந்து நான் வருகின்றேன் நான் வருகின்றேன் என்று மாணவர்கள் எழுந்துசென்று நிகழ்ச்சியில் பங்குபற்றினார்கள்,விளையாட்டுக்களிலும் பங்குபற்றினார்கள் இது ஒரு ஆரோக்கியமான விடயம்தான் குரூப் அக்டிவிட்டியின் வெற்றி இது தலைமைத்துவப்பயிற்சியின் வெற்றிகளில் இதுவும் ஒன்று..இவற்றைவளர்ப்பதும் பயிற்சியின் ஒரு நோக்கம்.ஒரே கிரவுண்டிலேயே நெட்போல்,வொலிபோல் மச்கள் நடந்துமுடிந்தன.

முன் அரைக்கிரவுண்டில் போய்ஸ் வொலிபோல்,பிற்பகுதியில் கேர்ல்ஸ் நெட்போல்

அதோடு வித்தியாசமான சில குழுவிளையாட்டுக்களையும் அறிமுகப்படுத்தினார்கள் சற்று சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் நன்றாக இருந்தது.ஒரு குழு லைனில் நிற்கவேண்டும் முன்னால் இருப்பவரிடம் ஒரு வொலிபோலைக்கொடுப்பார்கள் அவர் தன்கால்களுக்கூடாக அவருக்குப்பின்னால் இருப்பவரிடம் கொடுப்பார் அவர் தன் தலைக்குமேலாக தனக்குப்பின்னால் இருப்பவரிடம் கொடுப்பார் இப்படி மாறிமாறி 30 பேர் இருந்தால் 30 பேருக்கூடாகவும் இறுதி மாணவருக்கு செல்லும் இறுதிமானவரிடம் போல்வந்ததும் அவர் போலுடன் ஓடிவந்து முன்னால் நிற்பார் மீண்டும் முதலில் நின்ற மாணவன் வரிசையின் முன்னால்வரும்வரை இது தொடரும் முதன் முதலாக இந்த ஒழுங்கை முடித்த அணி நிலத்தில் இருந்துவிடவேண்டும் அந்த அணியேவெற்றியாளர். ஒவ்வொருகுரூப்பிற்கும் அதில் பங்குபற்றாத ஏனையோர் உற்சாகம் கொடுப்பதற்காக கத்திக்கொண்டிருக்க விறுவிறுப்பாக அந்த விளையாட்டு முடிந்தது.


காலை நேரத்தில் வழக்கமாக மலைவீதிகளில் ஓடுதல் பயிற்சிகளை செய்தல் போன்றவை முடிந்ததும் வேறுசில விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தினார்கள்.2 குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்படுவார்கள் ஒரு குழுவை வட்டமாக நிற்கவேண்டும்.ஏனைய குழு மாணவர்கள் அவ்வட்டத்திற்குள் இருக்கவேண்டும் வெளியே இருக்கும் மாணவர்களிடம் வொலிபோலைக்கொடுக்கப்படும் அதை உள்ளே இருக்கும் மாணவர்களுக்கு எறியவேண்டும் போல் உள்ளே இருப்பவர்கள் யாரின்மீதாவது பட்டால் ஆள் அவுட்.எறியப்பட்ட போல் வட்டமாக  நிற்கும் மாணவர்களிடையே பாஸ் செய்யப்பட்டு எதிர்பாராதவகையில் எறிவதிலேயே அக்குழுவின் வெற்றிஅடங்கியிருக்கின்றது.
எமக்கு லெக்ஸர் செய்யும்போது ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்த்த 2 மாணவர்களை அழைத்து முதுகோடு முதுகு ஒன்றாக இருக்குமாறுகூறுவார்கள் அவ்விருவரும் அப்படி நின்றவாறே ஒருவரை ஒருவர் இறுகப்பற்றியிருக்கசெய்வார்கள் அவர்களின் இருபுறமும் 2 தொப்பிகளை போட்டுவிட்டு சொல்வார்கள். நீங்கள் இருவரும் 2 கழுதைகள் உங்களுக்கு புல் தேவை எடுங்கள் பார்கக்லாம்.
நிகழ்வு இப்படித்தான் நடந்தது.


இத்தகைய விளையாட்டுக்களுடன் ஒரு நாள் சென்றுவிட அடுத்த நாள் ஹைக்கிங்க் என்று அழைத்துச்சென்றார்கள் அதை மலை என்று சொல்வதா குன்று என்று சொல்வதா என்று குழப்பம்தான் மேலே உள்ள போட்டோவின் பின்னணியில் தெரியும் அதில்தான் ஏறினோல் இதுவரை மலையேறியதில்லை பார்க்க சிறிய குன்றுமாதிரிவேறு இருந்து தொலைக்க ஜாலியாக ஏறலாம் என்று சென்றது தப்பாகிவிட்டது ஏறிமுடிப்பதற்குள் நாக்குத்தள்ளிவிட்டது.













மலையில் மானின் தலைச்சின்னத்தைவரைந்திருந்தார்கள் அது இதுதான் அந்தகாம்பின்படைப்பிரிவின் சின்னம் இது

எமது காம்பில் பல நாய்கள் இருந்தன அதில் ஒரு நாய் நாம் எங்குசென்றாலும் கூடவே அதுவும் வந்தது மலையேற்றத்திலும் கூடவே வந்தது.பாசக்கார பயபுள்ள



அந்த உச்சிவெயிலிற்குள்ளும் மலையேறி மேலே சென்றதும் அங்கும் எம்மை வட்டமாக இருத்திவிட்டு லெக்ஸர் செய்தார்கள் நல்லவேளை பின்னர் பாட்டுப்பாடினார்கள்,மாணவர்கள் சிலர் பாடினார்கள் கதைகள் சொல்லப்பட்டன.அங்கே இருந்து ரந்தெனிகல டாமை அவதானிக்கமுடிந்தது அப்போதுதான் எமது ஜென்ரல் ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார்  உங்களை இங்கே அழைத்துவந்தது உங்கள் தாங்கும்திறனை விருத்திசெய்வதற்காக வேறு ஒரு காரணமும் இருக்கின்றது அதோ தெரிகிறதே அந்த டாம் ஒருவேளை அது உடைந்தால் நாம் அனைவரும் காம்பில் இருந்து இங்கேதான் ஒடிவரவேண்டும் இல்லையெனின் நீருடன் அடித்துசெல்லப்படுவம்..அடங்க்கொங்காங்கோ..
அந்த நீர் நிலையில் இருந்துதான்  நாம் இருக்கும் காம்பிற்கு நீர் கொண்டுவரப்பட்டது அது குடிப்பதற்கு உகந்த நீர் அல்ல எனவே குடிப்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட நீர் சிறு சிறு டாங்கிகளில் எமது ரூமிற்கருகில் வைக்கப்பட்டிருந்தது.அடிக்கடி அது நிரப்பப்படும்.













ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-06

$
0
0

(பதிவின் நீளத்திற்கு மன்னிக்க இப்பதிவுடன் இதை நிறுத்துவதற்காகத்தான் இந்த முடிவை எடுக்கவேண்டியதாகிவிட்டது)ரந்தெனிகல காம்புக்குவந்து 10 நாட்கள் ஆகியிருக்கும்  அணி நடைப்பயிற்சிகள் ஆரம்பமாயின கொமாண்ட்கள் சிங்களத்தில்தான் வழங்கப்பட்டன.இதனால் விளங்கிக்கொள்ளல் எங்களுக்கு கடினமாக இருந்தது.2,3 மணித்தியாலங்கள் வேகாத வெயிலுக்குள் வைத்து வாட்டி எடுத்தார்கள்.அணி நடைப்பயிற்சிக்கும் கொமாண்டர்கள் கோப்பிரல்களைவிட்டிருந்தார்கள்.அதில் ஒருவர் இருந்தார் உடம்பு செம்மையாக இறுகிப்போய் இரும்புபோல்தான் ஆளிந்தோற்றம் விசாரித்ததில் இறுதி யுத்தத்தில் பங்குபற்றியவராம்.அந்தக்கோப்பிரல்மட்டும்தான் ஏனையவர்களிடமிருந்து வித்தியாசமாகத்தெரிந்தார்.வெயிலுக்குள் நின்றுகொண்டு எவளவு பயிற்சிகொடுத்தும் அவர் களைக்கவே இல்லை அதோடு அவரிடம் பயிற்சிக்கு அகப்பட்டால்  நிச்சயம் நாக்கு வெளியேதள்ளிவிடும்.லா வீ லா வீ என்று கத்தும்போது எல்லோரும் ஒரே நேரத்தில் கால்களை எடுத்துவைக்கவேண்டும் அரேன்ஸன் என்று கத்தும்போது காலால் தரைக்கு உதைக்கும்  உதையில் ஒட்டியிருந்த அவரின் முகத்தில் இருந்த தசைகள் மேலே ஏறி கீழே விழுந்தன இதேபோல் அனைவருக்கும் தசைகள் ஏறியிறங்கவேண்டும் எனக்கூறினார்.கூறியதுடன் மட்டுமில்லாது பயிற்சிகள் வழங்கப்பட்டன ஒருவருக்குப்பிழைத்தால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பயிற்சி வடிவேல் பாணியில்"என்னா மறுபடியும் முதல்ல இருந்தா????" என்ன செய்ய.பெண்கள் சிலர் முடியவில்லை என்று சொல்லிவிட்டு போய் பவிலியனில் இருந்து பார்வையாளர்களாக மாறிவிட்டார்கள்.மணித்தியாலக்கணக்கான தொடர்பயிற்சிகளினால் சில பெண்கள் மயங்கிவிழுந்தார்கள் பின்னர் நண்பிகளினால் அழைத்துசெல்லப்பட்டார்கள்/தூக்கி செல்லப்பட்டார்கள்.கால் ஷூ பிய்ந்துபோகுமளவிற்குப்பயிற்சி ஏதோ போர்ன்ஸ்,ஜேம்ஸ் போன்ட் ,நேவி சீல் படங்களைப்பார்த்துவிட்டு ஆர்மியில்,சீல் படையில் சேரவேண்டும் என்று ஆசைப்படும்போது நன்றாகத்தான் இருந்தது ஆனால் சாதாரண பயிற்சி செய்யும்போதுதான்  நேவி சீலா வேணாம் சாமி அவிங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.அதுவும் அவர்களுக்கான பயிற்சிகள் சாதாரணமனிதர்களினால் கனவிலும் நினைத்துப்பார்க்கமுடியாத அளவிற்குக்கடினமானவை.கை கால்களைக்கட்டிவிட்டு காலில் கல்லைக்கட்டி  நீச்சல் தடாகத்தில் போட்டுவிடுவார்கள் அந்தக்கல்லைத்தூக்கிக்கொண்டு நீந்தி வெளியேறவேண்டும்.முடியாது போனால் நிரந்தரமாக வெளியே செல்லவேண்டியதுதான். சாப்பாடில்லாமல் குறிப்பிட்ட காலம் வரை தாக்குப்பிடித்தல்,இயற்கை கால நிலை மாற்றங்களை சகித்துக்கொள்ளல்,  நகங்கள்,உடலை ஆயுதமாகப்பயன்படுத்தல்,குளிர்ப்பிரதேசங்களில் ஒருவரது உடல் வெப்பத்தை இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டு உயிர்தப்புதல் என பல பயிற்சிகள்.இவற்றையெல்லாம் அறியும்போது,சாதாரண பயிற்சியில் பட்ட துன்பத்தையும் நினைக்கும்போது மனம் எடுத்த முடிவு விடு கழுதை பேசாமல்  நேவிசீல் பேஸ்புக் பான் பேஜை லைக்செய்துவிடுவோம் என்பதுதான்.
படுக்கைகள்

எமது தங்குமிடம்





மெஸ் சாப்பாடு

உள்ளே எம்பிரான் புத்தர்

இந்தப்பயிற்சிகள் ஒருபுறம் இருக்க கல்சரல் புரோக்கிராம்கள் ஆரம்பமாயின.திடீர் என்றுகூறினார்கள் ஒவ்வொருகுழுவும் ஒவ்வொரு புரோக்கிராம் செய்யவேண்டும் என்று.ஆச்சரியம் என்னவெனில் காலை இதைச்சொன்னதும் மாலையில் மாணவர்கள் தயாராகிவிட்டார்கள்.கல்சரல் புரோக்கிராம்கள் இரவு 8 மணிபோல்தான் நடைபெறும்.ஷூ பொலீஸ்,பெண்களது உடைகள்,காட்போட்கள் போன்ற அங்கே வரும் போது கொண்டுவந்த பொருட்களைவைத்தே புரோக்கிராம்களை செய்து அசத்தினார்கள்.சிலர் இங்கே இப்படி கல்சரல்கள் நடக்குமென்று தெரிந்து வீட்டில் இருந்து வரும்போதே உடைகள் பெயிண்ட்கள் மேக்கப் சாதனங்களையும் கொண்டுவந்திருந்தார்கள்.கல்சரல்கள் எல்லாம் தரமாகத்தான் நடந்தன் நாடகங்கள்,தனி,குழுப்பாடல்கள் போன்றவை நடைபெற்றன.கல்சரலுக்கு வரும்போது ஆண்கள் சிமார்ட் கஸுவல் உடையில் பெண்கள் சாறியில் வரவேண்டும் எனக்கூறியிருந்தார்கள்.இவளவு காலமும் வெள்ளை ரீசேர்ட்,ரக் சூட்டுடன் பார்த்த எங்களுக்கு அன்றைக்குத்தான் கண்கள்குளிர்ந்தன.வாவ் வாவ் வாவ் நன்றாகத்தான் இருந்தது...புரோக்கிராம்கள்.ஏதோ பஸன்சோவுக்கு சென்றபீலிங்கு.
முதலுதவி பற்றிய விரிவுரையின்போது

மொத்தமாக 4,5 கல்சரல்கள் நடைபெற்றிருக்கும்,ரூல்ஸ் இதுதான் மேடையில் பெர்போர்ம் பண்ணுவதற்கு ஒவ்வொரு குழுவிற்கும் 10  நிமிடங்கள் தரப்பட்டிருக்கும்.ஏ,பி என்று எஹ் வரை குழுக்கள் பிரிக்கப்பட்டிருந்தன எமது குழுவில் 78 மாணவர்கள் சிங்களம்,தமிழ் என்று சகலமாணவர்களையும் சேர்த்துத்தான் 78 மாணவர்கள் இருந்தார்கள்.ஆனால் எமது குழுவில் தொடர்ந்து புரோக்கிராம்களை செய்தவர்கள் சிங்களமாணவர்கள் மட்டும்தான் அதுவும் ஒரு 15 மாணவர்கள்தான் திரும்பத்திரும்ப செய்தார்கள்.உண்மையில் அவர்கள் 78 மாணவர்களையும் அழைத்து கலந்துரையாடி முடிவுகளை எடுத்திருக்கவேண்டும் ஆனால் தான்தோன்றித்தனமாக அவர்களே முடிவு செய்து அவர்களே நாடகத்தை நடத்தினார்கள்.ஏதோ தமிழ் என்பதால் எம்மைப்புறக்கணித்தார்கள் என்று அர்த்தமில்லை ஏனைய சிங்களமாணவர்களையும்தான் அவர்கள் புறக்கணித்தார்கள் எனவே இறுதிவரை எமது குழுவைச்சேர்ந்த 78 மாணவர்களும் ஒன்றுகூடவே இல்லை.ஆனால் ஒரு குழு தனது குழுவைச்சேர்ந்த சகல மாணவர்களையும் அழைத்து  அசத்தலாக நாடகங்களை நடத்திக்காட்டியது.அது தமிழ்மாணவர்கள்தான்.வேறு சில சிங்களக்குழுமாணவர்களும் அசத்தலாக செய்திருந்தார்கள். மாணவர்கள் ஒரு நாடகம் போட்டார்கள்  இப்போதைய காதல்பிரச்சனை போனில் ஒருபெண்ணை காதலிக்கின்றான் ஒருவன். நண்பர்கள் எவளவு கூறியும்  நண்பர்கள் சொல்லைக்கேட்கவும் இல்லை மதிக்கவுமில்லை பின்னர் அவளிடம் காதலை சொல்ல செல்ல அவள் அவன் கண்முன்னாலேயே இன்னொருவனுடன் சென்றுவிடுவாள் அழுதுபுரண்ட அவனை நட்பு வீடு சேர்க்கின்றது.மிகக்குறைந்த நேரத்தில் அசத்தலாக செய்துமுடித்திருந்தார்கள் அவர்கள்.அதோடு முஸ்லீம் மானவர்கள் நகைச்சுவையாக ஒரு நாடகம் செய்தார்கள்...குழுவாக நின்றுகொண்டு மந்தபோக்கில் பாட்டைப்பாடிக்கொண்டிருக்கு திடீர் என்று மேடையில் தோன்றிய இன்னொருமானவன் ஹிப் ஹொப் ஸ்ரைலில் யோ யோ யோ என்று கத்தி குமார் குமார் லைட் அடி என்ற பாட்டை ஹிஃபொப் பாணியில் பாடிவிட்டு சடுதியாக சென்றுவிட்டான் அரங்கம் அதிர்ந்தது.பின்னர்சிங்கள பெண்கள்  கண்டிக்கே உரித்தான டான்ஸ் ஆடினார்கள்,அதோடு ஆண்களும் சேர்ந்து ஆடினார்கள்.ஒருகுழுவில் தமிழ் சிங்களமாணவர்கள் ஒன்றாக சேர்ந்து குழுப்பாட்டொன்றைப்பாடினார்கள்.சிங்கள மாணவர்கள் முன்னே வந்து தமது பாட்டைக்குழுவாக பாடி செல்ல தமிழ்மாணவர்கள் முன்னே வந்து தமிழ்ப்பாட்டைபாடி சென்றார்கள் ஒரே மேடையில்.

ஆர்மி ரெயினிங்க் அனுபவம்-04

சிங்களமாணவர்கள் ஒரு  நாடகமொன்றைப்போட்டார்கள்...என்னை யாழ்ப்பாணத்தந்தையாக நடிக்குமாறு கூறினார்கள் சரி கதையைக்கூறுங்கள் என்று கேட்டால் கூறினார்கள்...ஒரு ஆர்மி வீரன் ஒருவன் தீவிரவாதிகளால் போரில் கொல்லப்படுகின்றான்.அவனைத்தேடி அவனது அண்ணன் யுத்தகளத்திற்கு சென்று அவன் பிணத்தை எடுத்துவருகின்றான்.அவன் பிணத்தின் முன்னால் ஒரு தமிழ்க்குடும்பமும் அவனது சிங்களக்குடும்பமும் அழுகின்றது...அதில் யாழ்ப்பாணத்தந்தையாக நடிக்கப்போகும் எனது டயலக்"இதெல்லாம் ஏன் நடக்குதெண்டு எனக்கு விளங்கேல்ல"
நடித்திருந்தேன் என்றால் விளங்கியிருக்கும்...மறுத்துவிட்டபின்னர் எப்படியோ அவர்கள் அன் நாடகத்தை நிறுத்தியேவிட்டார்கள்.தமிழ் மாணவன் ஒருவன் பரத நாட்டியம் ஒன்றை ஆடினான் அரங்கம் அதிர்ந்தது.அவனிடம் நான் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டியது தனிக்கதை.சிங்கள மாணவிகள் கண்டி டான்ஸ் ஆடுவதற்குப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாரக்ள் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அந்த மாணவன்வந்தான் நான் கூறினேன் நன்றாக ஆடுகிறார்கள் என்று அவன் கூறினான் கையையும் காலையும் ஆட்டினால் சரியா என்று?அட டான்ஸடாப்பா அது அவளவு சுலபம் இல்லையென்று கூறினேன்.ஓகோ என்றான்.பின்னர் கூறினேன்  நான் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கெல்லாம் சென்று பார்த்ததில்லை ஆனால் டான்ஸ் பிடிக்கும்.கமல் சலங்கை ஒலியில் வித்தியாசமாக  5 விதமாக ஆடுவாரே அத மாதி..... அவர் ஆடினதே முதலில் பிழை...என்ன?? ம்ம் அவர் புரொபஸனல் டான்ஸர் இல்லையெ அது பரதம் இல்லை...என்னடா ஏதோ  2 வருசம் படிச்சு அரங்கேற்றம் பண்ணினவன் மாதிரி சொல்லுறாய்...ம்ம் 4 வருசம் பரதம் படிச்சேன் அரங்கேற்றம் செய்ய 17 லட்சம் தேவை அதால அரங்கேற்றம் பண்ணேல்ல என் காதுக்குள் ங்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....ஒத்துக்கிறன் நீ அப்பாட்டக்கர் என்கிறத ஒத்துக்கிறன் என்று அவனிடம் சரண்டரானதுதான் வேறு என்ன செய்ய.அவன்தான் மேடையில் ஆடினான் டான்ஸ் அப்படி இருந்தது பக்கிரவுண்ட் மியூஸிக் போடுவதற்கு எந்த வசதியும் இல்லை எனவே போனில் பாட்டப்ப்போட்டுவிட்ட்டு மைக்கிற்கருகில் வைத்துவிட்டுத்தான் டான்ஸ் ஆடினான்.அவனுக்கு உடைகள் பார்சல் மூலம் காம்பிற்குவந்திருந்தன.காலில் கட்டிய சலங்கை அவன் டான்ஸிற்கு அவனுக்கே தாளம்போட்டது.அதுவரை மேடையில் பல புரோக்கிராம்கள் ந்டந்தன ஆனால் இதைப்போன்று எந்தப்புரோக்கிராமும் வரவேற்பைப்பெற்றதில்லை ஒட்டுமொத்த தமிழ்,சிங்கள,முஸ்லீம் மாணவர்களின் ஒட்டுமொத்த வரவேற்பு ஒரே நாளில் அவன் பிரபலமாகிவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும்.






இவந்தான் நான் சொன்ன அந்த டான்ஸர்




இதில் உள்ள சகலருமே கேர்ல்ஸ்தான்


இதில் நடிக்கும் ஆணுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது காம்பின் இறுதியில்






வேறு ஒரு கல்சரல் புரோக்கிராமிற்கு ஏதாவது செய்வோம் என்று சிந்தித்ததும் வைதிஸ் கொலவெறி பாட்டை காம்பிற்கேற்றவாறு ரீமிக்ஸ் செய்து பாடுவோம் என்று முடிவெடுத்து வரிகளை மாற்றினோம்...

மெஸ்சாப்பாடு உதவாது
கவரேஜ் இல்லை...
சேர்ந்த புதிய பிரன்ஸ்
பிகேர்ஸ்...
வீட்டை மிஸ்பண்ணியது...
போன்றவற்றையெல்லாம் குழைத்து ஒரு பாட்டாக உருவாக்கி ரியசல் பார்த்தோம் அந்த ரியசலுக்கு தபேலா வாசித்தவர் ஒரு சிங்களக்கோப்பிரல். சிங்களவர்களிடையே வை திஸ் கொலவெறி பாட்டு பிரபலமாகியதால் இந்த ஐடியாவை எடுத்துக்கொண்டோம்...

பாட்டின் வரிகள்....

Yo boys i am singing song
soup song
flop song
வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
rhythm correct?
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
maintain this
வய் திஸ் கொலைவெறி ….அடி (why this kolaveri..di)
distance la moon-u moon-u
moon-u color-u white-u
white background night-u nigth-u
night-u color-u black-u
வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
வய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி

இதன் இடையில் எமது வரிகளை சேர்த்தோம் ஏதோ அந்த நேரத்தில் தோன்றியது... கீழே பாடல் வரிகள் தொடர்ச்சி ஒழுங்கில் தரப்படவில்லை...எழுதிய பாடல் மறந்துவிட்டது நினைவில் இருப்பதைத்தான் நான் பதிவிடுகின்றேன்.நாங்கள் வைரமுத்துவின் சீடர்கள் இல்லை ஏதோ ஓரளவிற்குத்தெரிந்ததை...என்ன இந்தப்பாடலின் இடையே செருக வைரமுத்து எதற்கு என்கிறீர்களா  ஹி ஹி அப்படின்னா ஓகே...

லெட்டர் கம்மு 
திங்க்ஸு பையு
பாங்கு பலன்ஸு அவுட்டு

(தலைமைத்துவப்பயிற்சிக்காக லெட்டர் வந்தது..அதில் ஷூ,சேர்ட் ஹாப் சிலீப்,புல்சிலீப்,சொஸ் அதுஇதென்று குறிப்பிட்ட அனைத்தையும் வாங்கினால் மொத்த செலவு 10 000 ற்குக்குறையாது)

வென் வீ கம்மு 
கேர்ல்ஸு ஹியரு 
பேரன்ஸ் ஓல்ஸோ நியரு

(வந்ததும் காம்பை சுற்றிப்பார்த்தால் பெண்கள் கூட்டம்..பற் சோ சாட் பேரன்ஸும் கூடவே இருந்தார்கள்)

மெஸ்ஸு மெஸ்ஸு 
ஓ மை மெஸ்ஸு
ஐ மிஸ்ஸு மை ஹவுஸு

(மெஸ் சாப்பாட்டினால் நாக்கு செத்துவிட்டது.மெஸ் சாப்பாட்டை சாப்பிட்டதும்தான் வீட்டில் அம்மாவின் சாப்பாட்டிற்கு விமர்சனம் செய்ததன் பலன் தெரிந்தது)

மம்மி ஐ ஆம் டையிங்க் னவ்வு
யு ஆர் ஹப்பி ஹவ்வு?


ஏதோ ஒரு புரோக்கிராம் செய்யவேண்டும் என்பதற்காக குரூப் சோங்க்காக அந்த நிமிடமே குழுவாக சுற்றியிருந்து வரிகளை எழுதி பாடலைப்படித்தோம் பைலாபோட்டது ஒரு லெப்டினல் என்பது எனக்குத்தெரியாது.அவர் சிரித்தபடியே வாசித்தார்.அருகாமையில் இருந்த சிங்கள மாணவர்கள் கொலைவெறிபாடலைக்கேட்டதும் உற்சாகமாக கவனித்தார்கள் நான்கள் மாற்றியவரிகளின் அர்த்தம் எள்ளல் எகத்தாளம் விளங்கியிருக்கவேண்டும் சிரித்தார்கள்.அடுத்த நாள் கல்சரல் இந்தப்பாட்டுமிகப்பிரபலமாகப்போகின்றது ஒரு வேளை ரந்தெனிகல காம்பின் தீமாக மாறக்கூடுமோ என்ற மிகைப்படுத்தப்பட்ட எண்ணம் தோன்றியது.ஏனென்றால் நாம் எழுதிய வரிகள் அனைத்துமே உண்மை சோ அனைவருக்கும் பிடிக்கும்.பாட்டுக்கு ரியர்சல் செய்தது 2.30 ற்கு..இரவு 8 மணிக்கு கல்சரல் புரோக்கிராம்கள் ஆரம்பிக்கும் ரைம்...வழியில் கண்டவன் போனவனெல்லாம் சொன்னான் வை திஸ் கொலவெறி ரீமை வரட்டாம் விசாரிக்கணுமாம் அந்தப்பாட்டை பாடவேண்டாமாம்..... நான் ஏதோ நக்கலா விளையாடுகின்றார்கள் என்று நினைக்க ஒரு சிங்கள மாணவன் வந்து அரைகுறை இங்கிலீஸில் சொன்னான்..உங்கள் பாட்டில் பிரச்சனை(உன் பாட்டில் குற்றம்)...

கூட இருந்த ஒண்டு பயந்துட்டுது டே என்ன பண்ணப்போறாங்களோ? அட ஒன்னுமில்லை என்ன தமிழீழம்னா எழுதினோம் பாட்டுத்தானேய்யா எழுதினோம் என்றுவிட்டு எமது சில மாணவர்களுடன் கோப்ரல்,ஜெனரல்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றோம் அங்கு எமது ரான்சிலேட்டர்கள் இருந்தார்கள்.. நீங்கள் ஏதோ பாட்டுப்பாடியிருக்கிறீர்கள்...அதில் ஏதோ பிரச்சனை மேலிடத்தில் இருந்து அதை விசாரிக்குமாறு கூறியிருக்கின்றார்கள்( அட ப்பாவிகளா சாதாரண பாட்டு ஹெட் வரைக்குமா போய்ட்டுது ஏண்டா இப்படி?)

சரி என்று வரிகளை வாசித்துக்காட்டி சடைந்தோம் உண்மையில் அங்கு நடக்கும் பிரச்சனைகளை  பாடலாக குறிப்பிட்டிருந்தோம் ஆனால் இவையெல்லாம் சாதாரண பிரச்சனைகள் எல்லாம் கேட்டுவிட்டு கூறினார்கள் வேண்டாம் இந்தப்பாட்டைப்பாடவேண்டாம்...எமக்கு கடுப்பாகிவிட்டது என்ன காரணம்...போன பச்சில  சில தமிழ்ப்பொடியள் இப்படித்தான் நக்கலா புரோக்கிராம் பண்ணி  எங்களுக்கு மேலிடத்தில இருந்து பிரஸர் வந்தது சோ பாடவேண்டாம்...ஆங்கிலத்தில் விளக்கினோம் பாடவேண்டாம்...
என்ன சேர் பாடக்கூடாவா சுதந்திரம் இல்லை....எந்த அளவு சுதந்திரம் எண்டு உங்களுக்கு விளங்கவேணும்(ம்ம்ம் இப்பதான் அர்த்தம் விளங்கியது)
பாடுவதற்கு உற்சாகமாக அனைவருக்கும் ஏமாற்றம் கோபம் எல்லாம் சேர்ந்துவந்தது... நான் எனி இஞ்ச எந்தப்புரோக்கிராமும் செய்யிறதா இல்லை என்று கூறிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் நண்பர்கள். எனக்கும்தான் கோபம் வந்தது...அப்படியே அங்கிருந்து கல்சரல் நடைபெறும் இடத்திற்கு வந்து பார்வையாளர்களாக உட்கார்ந்தோம் வரும் வழியில் நண்பனுக்கு கூறினேன் ... நல்லவேளை ரேக்கு கண்ணு என்று எழுதவில்லை எனக்கு முன்னால் ஒரு கோப்பிரல் சென்றுகொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை திரும்பி சொன்னார் பாடவேண்டாம்....
கடுப்பாக அன்றைய நாள் சென்றுவிட்டது.அடுத்த கல்சரல் வந்தபோது எமது குரூப்பின் சிங்கள மாணவர்கள் தமது நாடகமுடிவில்  தாம் தரும் வரிகளை  தமிழில் கூறவேண்டும் எனக்கேட்டார்கள் ஆங்கிலத்தில் இருந்ததை தமிழுக்கு மாற்றினால் இதுதான் அர்த்தம்"எமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. எமது நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான சரியான வாய்ப்புக்களை எமது தலைமைத்துவப்பயிற்சி வழங்குகின்றது வழங்கிவருகின்றது இதை சரியாகப்பயன்படுத்தினால் எமது நாட்டை எதிர்காலத்தில் உலக அளவில் செல்வாக்குமிக்க இடத்திற்கு கொண்டு செல்லமுடியும்." இவளவுதானே சரி என்று கூறிவிட்டு அவர்களது நாடகத்தின் இறுதியில்மேடையில் அவ் வரிகளை சொல்லிவிட்டுவந்துவிட்டேன்.ஆனால் அவர்களது நாடகம் எதைப்பற்றி தெரியுமா? தலைமைத்துவப்பயிற்சிக்கு வந்த 2 மாணவர்களைப்பற்றியது...ஒரு மாணவன் பயிற்சிக்கு ஒத்துளைக்காமால் வெட்டியாககாம்பில் திரிகின்றான் மற்றோருவன் சகலவற்றையும் கேட்டு நடக்கின்றான்..ஒரு இன்ரர்வியூவில் கேட்டு  நடந்தவனின் நல்ல பிகேவியர் பொடி லாங்குவிஜ்ஜின் காரணமாக அவன் தெரிவு செய்யப்படுகின்றான் மற்றவன் நிராகரிக்கப்படுகின்றான்...நாடகத்தில் உள்ள ஸ்பெஸல் என்ன தெரியுமா மார்ச்சிங்க் பழக்கியதை முடியுமான அளவிற்கு இமிட்டேட்பண்ணியிருந்தார்கள் சிங்கள மாணவர்கள் எல்லோரும் நன்றாக வாய்விட்டு சிரித்தார்கள்.... ஆனால்  நான்கள் அவர்கள் செய்ததுபோல் நேரடியாக எமது ஆர்மி பயிற்சியாளர்களை இமிட்டேட் செய்யவில்லை.... கேக்கும்போது யாரும் வாய்விட்டு சிரிக்குமளவிற்கு அது அவர்களுக்கு அவமானம் அல்ல ஆனால் அவர்கள் செய்யும்போது சிரிப்பு நாம் செய்யமுற்பட்டபோது தடை.

அடுத்து முஸ்லீம் மாணவிகள் வந்து ஈராக்கின் ஓலம் கேட்கின்றதா என்று பாட்டுப்பாடினார்கள்.

இப்படி நாட்கள் செல்ல வந்தார் திஸ நாயக்க... மேதகு கல்வி அமைச்சர் திஸ நாயக்க அவர்கள்...

9 மணிக்குவருவதாக கூறியிருந்தாராம்.ஏதோ இந்தியப்படங்களில் வரும் அரசியல்வாதி மாதிரி இல்லாமல்  நேரத்துக்கு வருவார் என்றால் இல்லை..அவரும் 9.30க்குத்தான் வந்தார் அரைமணித்தியாலம் காத்திருந்தோம் அனைவரும் அப்போது முன்னால் ஓடிச்சென்ற சிங்களமாணவன் ஒருவன் (அவன்தான்புரோக்கிராம்களில் பெரும்பாலும் பேசுபவன்) பேசினான்...அவன் ஆங்கிலத்தில் பேசினான் பாருங்கள் மாணவர்களே நேரம் பன்சுவாலிட்டி என்பது  ஒரு மனிதனுக்குமிகவும் முக்கியம்...இப்போது பார்த்தீர்களென்றால் ஒரு  தனி மனிதன் நேரம் தவறியதால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்...பலத்த சிரிப்பிற்கு மத்தியில் அவன் நகர்ந்து தன் இடத்திற்கு சென்றுவிட்டான்...பின்னர் வந்த மேதகு திஸ நாயக்கா அவர்கள் பேசினார்கள்...அருகில் இருப்பவர் ரான்சிலேட் செய்தார்....உங்கள் சற்ஸ்கோர்களை கணித்ததில் பிழை என்று சிலர் கேஸ்போட்டார்கள்...ஆனால் உங்கள் சற்ஸ்கோரில் எந்தப்பிழையும் இல்லை(ஓகோ  பிழையில்லை)...இலங்கையில்தான் ராக்கிங்க் இருக்கின்றது ஆனால் வேறு எந்த நாட்டிலும் இல்லை இந்தியாவில் கூட ராக்கிங்கை எப்போதோ ஒழித்துவிட்டார்கள்...வடக்கே தமிழர்களின் பிரதி நிதிகள் என்று கூறிக்கொண்ட அமைப்பு ராக்கிங் செய்தார்கள் தெற்கில் ஜேவிபி ராக்கிங்க் செய்தது...அதனால்தான் அவர்களை நாம் அடக்கினோம்(சப்பா என்ன ஒரு அரசியல் அறிவு ஞானம்...)பின்னர் வந்து மாணவர்களுக்கு கைகொடுத்து விஸ்பண்ணினார் மேதகு கல்வி அமைச்சர் திஸனாயக்க



இந்த நாள் இப்படியே முடிய அடுத்த நாள் ரந்தெனிகல டாமுக்கு அழைத்துச்சென்றார்கள்...போவதற்கு 5 கிலோமீட்டர் மீண்டும் திரும்புவதர்கு 5 கிலோ மீட்டர்...10 கிலோமீட்டர் நாக்கைதொங்கப்போட்டுக்கொண்டு நடந்தோம்....

















டாமிற்கு சென்றதும் சிறிது நேரம் தங்கிபோட்டோக்களை சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளிவிட்டு மீண்டும் காம்பிற்கு திரும்பினோம்...














அதிக தூரம் நடக்கவேண்டுமென்பதால் பாடிக்கொண்டும்,சிலவார்த்தைகளைக்கத்திக்கொண்டும் வந்தோம்


டாமிற்கு செல்லும் வழியில் பிள்ளையாரின் பிராஞ் ஒன்றிருந்தது ஐ மீன் சிறிய பிள்ளையார் கோவில் ஆனால் சூலம் வரையப்பட்டிருந்தது பிள்ளையாட் சிலையும் ஒரு மாதிரி வித்தியாசமாக இருந்தது பரிணாமத்தின் இடையில் தவறிப்போய் தப்பிய ஜீவன்போல்(அப்படியான உயிரிகள் தப்பாது அதாவது 2 தலைகொண்டது போன்றவிலங்குகள் தப்பாது கருவிலேயே அழிக்கப்பட்டுவிடும் அது இதுன்னு கிளம்பிடாதீங்க ) அச்சிலைக்கு அருகில் இருந்த வேப்பமிலைகளை சார்த்திவிட்டு தொடர்த்தார்கள் நமது கோப்பிரல்கள்
இறுதி நாளுக்கு முதல் நாள் இரவில் fire camp  நடைபெற்றது. நடுவில் தீயைக்கொழுத்திவிட்டு சுற்றிவர நின்று பாடுதல் ஆடுதல்  போன்றவற்றை செய்தல்தான் இதன் முக்கிய நோக்கம்.
இரவு  சற்று தொலைவில் இருக்கும் எல்லையைசுற்றிவர தீவட்டிகள் அதன் நடுவே பெரிதாக  நெருப்பு எரியவிடப்பட்டிருக்கும். நடுவில் நாம்.சகலரும் ஒருதடையாவது அதை அனுபவிக்கவேண்டும் என்ற உணர்வுதான் அப்போதுதோன்றியது அப்படி இருந்தது அந்த இரவு,,
அதுலும் புரோக்கிராம்கள் செய்யவேண்டும்...புரோக்கிராம் செய்வதற்கு முதல் நாள் எமக்கு சில ரூல்ஸ்களை சொன்னார்கள் நீங்கள் நடத்தப்போகின்ற புரோக்கிராம் எந்த தனி நபரையோ சமூகத்தையோ  சமயத்தையோ பிரதினிதித்துவப்படுத்தவோ அடையாளப்படுத்தவோ அவமானப்படுத்தவோ கூடாது.என்பதுதான் அது.

இரவு பயர்காம்ப் ஆரம்பமானது குரூப் சோங்க்ஸ் ஆடல்கள் பாடல்கள் அமர்க்களமாக நடந்தது...இரவு ஆகையால் எப்படிஉரத்துக்கத்தினாலும் யாரும் கண்டுபிடிக்கமுடியாதே?சோ கத்து கத்தென்று சகலவற்றிற்கும் இயலுமான அளவு கத்தி ஆதரவு கொடுத்தோம்...பெரும்பாலான குரூப் பாட்டுக்கள் பாடியதால் கூடவே நான்களும் ஆடினோம்....

ஆனால் முஸ்லீம் சகோதரர்கள் மட்டும் ஒரு தவற்றை செய்துவிட்டார்கள்.வந்து அவர்கள் முதலில் பாடிய பாட்டு இறைவனிடம் கையேந்துங்கள் அடுத்து ஏதோ அராபிக்கில் பாடினார்கள். fire camp வெறும் கேளிக்கைக்குமட்டும்.அதோடு ஏற்கனவே சட்டதிட்டங்கள் தெளிவாககூறப்பட்டிருந்தன.எந்த சமயத்தையோ,மதத்தையோ....என்று..பாட்டுப்பாடி கூடவே ஆடியிருக்கலாம் அதைவிட்டுவிட்டு இப்படி சமயம்சம்பந்தமாக பாட என்ன நடந்தது தெரியுமா...சிங்கள மாணவர்கள் அனைவரும் சினிமாப்பாடல்களுக்கு ஆடுவதுபோலவே ஆடினார்கள் கத்துக்கொண்டு பாடினார்கள். சகோக்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்று புரியவில்லை.

 fire camp இல் நடைபெற்ற புரோக்கிராம்களில் அசத்தலான புரோக்கிராம் ஒன்று...வேடுவர்போல் இலை குழைகளை அணிந்து ஒரு நாடகம்,பாட்டு,
ஒரு வெள்ளைக்காரன் காட்டிற்குள்  நுழைய கூடவந்த நம் நாட்டவன் விளங்கப்படுத்திகொண்டு செல்ல இடையில் வேட்டுவக்கூட்டத்திற்குள் அகப்பட்டுவிட்டான் .வேடுவர்கள் சுற்றி நின்று ஆட அந்தப்பெண்ணும் அவனும் பயப்பட அசத்தலாக நடித்திருந்தார்கள் இடையின் க்ங்க்ணம் ஸ்ரைல் டான்ஸ் மூவ்மென்ற் எல்லாம் வந்திருந்தது.மிகத்தரமான புரோக்கிராம் என்னைப்பொறுத்தவரை அதுதான்.











இறுதி நாளில் கிரவுண்டில் மார்ச்சிங்  நடைபெற்றது அதன் பின்னர் விருதுவழங்கல் நடைபெற்றது.அது முடிவடைந்ததும் மைதானத்தில் மாணவர்கள் சில புரோக்கிராம்களை செய்தார்கள்...டான்ஸ் சிங்கள தமிழ் மாணவர்கள் தத்தம்  நடனங்களை ஒன்றாக ஆடினார்கள்...


 சகலதும் முடிந்ததும் அன்றே சான்றிதழைத்தந்து வீடு செல்ல அனுமதித்தார்கள்..


அம்மா நா வயசுக்கு வந்திட்டேஏஏஏஏஏஏஏஏன்...

இறுதி நாள் சகலரையும் கட்டிப்பிடித்து அழவேண்டியதாகிவிட்டது 14 நாளில் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள் ஒரு நோட்புக் ஒன்று வாங்கி அதைகொடுக்க அதில் பல இலையாக இருந்தாயே சருகாக உதிர்ந்தாயே பாணியிலான வாசகங்களுடன் போன் நம்பர் பேஸ்புக் ஐடியையும் எழுதித்தந்தார்கள் நண்பர்கள்.

காம்ப் வாழ்க்கையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினோம் 14 நாள் காம் வாசத்தின் பின்னரான "வீடு திரும்பல்" அது.
ஆனால் நாம் பெற்றுக்கொண்டவை பல முன்னணியில் உள்ள 5 விரிவுரையாளர்களின் வாழ்க்கைக்கு அவசியமான விரிவுரைகள் சைக்கோலொஜி,செக்ஸ் ஏன் ஆன்மீகத்தைப்பற்றிக்கூட விரிவுரைகளை செய்திருந்தார்கள்.கொடுக்கப்பட்ட பயிற்சி சகிப்புத்தன்மையை நன்றாகவே வளர்த்தது.10 கிலோமீட்டர் நடந்தோம்.கயிறுகளில் ஏறினோம்.எமது உடைகளை நாமே தோய்த்தோம் எமக்கு வழங்கப்பட்ட வேலைகளை நான்களாகவே செய்தோம் குரூப் அக்டிவிட்டி மிகவும் பயனுடையதாக இருந்தது..குழுவாக ஒரே நாளில் கிரியேட்டிவ்வான புரோக்கிராம்களை செய்யமுடிந்தது.மொழி தெரியாத நபர்களை நண்பர்களாக்கினோம் சமாளித்தோம்.முடிவுகளை நான்களாக எடுத்தோம் சிலபல பிரச்சனைகளை பேஸ்பண்ணினோம் சமாளித்தோம்.
முக்கியமாக சென்ற அனைவரும் மெலிந்துவிட்டோம். புதிய நண்பர்கள் நண்பிகளை உருவாக்கிக்கொண்டோம்...என்னைப்பொறுத்தவரி இத்தலைமைத்துவப்பயிற்சி தேவையான ஒன்றுதான் ஆனால் நமது ஊடகங்கள் இவற்றை தவறாகவே சித்திகரிக்கின்றன.சிலர் கேஸ்போட்டிருந்தார்கள். பெற்றோர்களால் பொத்திப்பொத்திவளர்கக்ப்பட்டவர்கள் கூட இங்கேவந்து  கொஞ்சமாவது ஆளுமையுள்ளவர்களாக மாறினார்கள்...
ஏதோ முதல் 4,5 நாட்கள் கடினமாக இருக்கும் பின்னர்(50 வருசமா கஸ்ரப்பட்டு கவலைப்பட்டு நஸ்ரப்பட்டு அவமானப்பட்டு அசிங்கப்பட்டு செருப்படி வாங்கியுருப்பீங்க...ஆமா அப்புறமா என்னாகும்?) அதுவே பழகிடும்.அதைவிட முக்கியமான ஒன்று இராணுவத்தினரைப்பார்த்து பழக்கப்பட்டவர்கள் என்றாலும் அவர்களிடத்தில் ஒரு பயம் இருந்தது ஆனால் இராணுவ சீருடை அணிந்தவர்களுடன் 14 நாட்கள் நன்றாக மகிழ்ச்சியாக பழகியபின்னர் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவந்ததும்  சென்றியில் இருக்கும் ஆர்மிக்காரனைப்பார்த்து சுப உதாசனை துமணி என்று கூறவேண்டும்போல் இருந்தது ஒருவேளை இதுதான் அவர்களின் வெற்றியோ?

சைக்கோ பரதேசி சாரு பாலா

$
0
0

சேதுபடத்தில் விக்ரமின் மூளைபிரிவதைப்பார்த்தபின்னர் மீண்டும் அந்த சீனைப்பார்ப்பதில்லை என்று முடிவுசெய்யுமளவிற்கு என்னை மாற்றியிருந்தார் பாலா...
 நந்தாவில் தாய்தனக்கிடும்சோற்றில் விஸமென்றறிந்தபின்னரும் அதை கண்ணீருடன் விழுந்து விழுந்து உண்ணும் மகன் என் மனதை கசக்கிப்பிழிந்தான்

 பிதாமகன் படத்தில் சுடலையில் நின்றுகொண்டு எரிந்த சூரியாவைப்பார்த்து சித்தன்

பெத்தவ புகை ஓடிப்போச்சே
வளத்தவ புகைகூட சொல்லாமப்போச்சே...
உன் புகைமட்டும்தாண்டா கண்ணில தண்ணிய ..... என் கண்ணில தண்ணிய காட்டிட்டுப்போச்சேஏஏஏஏஏஏஏ...என்று அழத்தெரியாத சித்தன் முதல் முதலில் அழுது மனதைப்பிழிந்தான்.



பரதேசி

இந்தப்படமும் அதேபாதிப்பைத்தான் ஏற்படுத்தியிருந்தது...திருப்பி மீண்டும் ஒருதடவை பார்க்கவேண்டுமா... அந்த நரகம் கண்முன்னால்  வந்து செல்கின்றது அதுவும் இறுதிக்கட்டம் இருக்கின்றதே...பாருங்கள் புரியும்
பாலாவிடம் கேட்டுக்கொள்வது இதுதான்... எப்படி வலியைமற்றவர்களுக்கு கொடுப்பது என்று மிகத்தெளிவாகதெரிந்துவைத்திருக்கின்றீர்கள்....அட போதும்யா ஒரு கட்டத்துக்குமேல் எங்களால் வலியைதாங்கமுடியும் என்ற நம்பிக்கைபோய்விடுகின்றது.

ஆனால் வரலாறு இதுதான் என்று அறியும்போது நல்லவேளை  நான் இப்படி அகப்படவில்லை என்ற எண்ணம்தான் தோன்றியது.

உணர்வுகளால் உருவாக்கப்பட்டபடம் ஆகவே வார்த்தைகளால் விபரிப்பதில் பயனில்லை என்று நம்புகின்றேன் நிச்சயம் பாலாவிற்குத்தேசியவிருது கிடைக்கும்.அதர்வாவிற்கு இது மிகவும் நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும்....

இடையில் மதம் பரப்பும் சீன் ஒன்றுவரும் தரமாக இருந்தது....அவன் கங்காணியைவிட கொடுமையானவன்...

நான் கடவுளில் பாலா வெளிப்படுத்திய அவரது நாத்திகதோற் இங்கேயும் சில இடங்களில் ஒலித்திருக்கின்றது....சாமிக்கு முன் கங்காணி இருப்பார் சாமியை அதர்வா நிமிர்ந்து நின்றுவணங்குவார் கங்காணியை காலில்தொட்டு முதுகைவளைத்து கூனி வணங்குவார். இப்படி ஒரு சில சீன் இருக்கின்றது.


கொடுமையான விடயங்களில் ஒன்று எதுவெனில் முடிவை எமது கைகளில் ஒப்படைப்பது அதையேதான் பாலா இறுதியில் செய்திருக்கின்றார்....
யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில்தான் படத்தைப்பார்த்தேன்...இடைவேளையின்போது இருக்கையின் முன்னால் இருந்தவர்கள் திரும்பி பின்னே இருந்தவர்களின் முகங்களைப்பார்த்தார்கள்...சகலருக்கும் சுய நினைவுக்குவர 40 செக்கண்ட்கள் பிடித்திருந்தது...இடைவேளைகூட அப்படித்தான் இருந்தது.

இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு பாலா சைக்கோவாக இருக்கவேண்டுமென்றால் அவர் சைக்கோவாகவே இருக்கட்டும்.


நான் கடவுள் திரைப்படத்திற்கு சாரு... என்னைப்பொறுத்தவரை சரியாக நேர்மையான விமர்சனத்தைத்தான் எழுதியிருந்தார்.ஆனால் பரதேசி  அவருக்கு தலைகீழ் ஆகிவிட்டது...





என் சக எழுத்தாளர்களைப் போல் சினிமா விமர்சனம் எழுதாமல் இயக்குனர்களின் செல்லப் பிராணிகளாக இருந்தால் நானும் உருப்பட்டு ஊர் சேர்ந்து விடலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் பாரதியை ஆசானாக வரித்தவன் என்பதால் உண்மையை மட்டுமே பேசும் கெட்ட பழக்கத்தைக் கொண்டவனாக இருக்கிறேன். அதனால் பரதேசி படத்துக்கு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.
தமிழகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப் போகும் பரதேசி என்ற இந்தக் ‘காவிய’த்தைப் பற்றி குறைந்த பட்சம் எதுவுமே எழுதாமல் இருந்தாலாவது கொஞ்சம் உருப்பட்டு விடலாம். ஆனால் என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஏனென்றால், இந்தத் தட்டையான படத்தைப் பற்றி இதன் இயக்குனரே பெரியதொரு காவியத்தைப் போல் எண்ணிக் கொண்டிருக்கிறார். ஊடகங்களும் இதைக் காவியம் என்று கொண்டாட ஆரம்பித்து விட்டன. இந்தி சினிமாவில் தேவ்.டி, கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர் என்ற அற்புதமான படங்களை எடுத்த அனுராக் காஷ்யப்பே ஆரம்பித்து வைத்திருக்கிறார். பரதேசி ஒரு காவியம் என்கிறார் அனுராக். இந்தியிலும் ஆங்கிலத்திலும் சப்டைட்டில் போட்டு இதை இந்தியா பூராவும் திரையிடப் போகிறேன் என்கிறார். இது போன்ற ஒரு படம் இந்தியாவிலேயே வந்ததில்லை என்கிறார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. எப்படி ஒரு sensible-ஆன இயக்குனரால் இப்படி ஒரு மொக்கைப் படத்தை பாராட்ட முடிகிறது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிகிறது. தமிழனால் மிகவும் கொண்டாடப்படும் சினிமாத் துறையில் கூட சராசரித் தன்மை (mediocrity) தான் சிலாகிக்கப்படுகிறது. அதன் அடையாளம்தான் தமிழர்களால் கலைஞனாகக் கொண்டாடப்படும் பாலா. ஏற்கனவே இது பற்றி என் ஆதங்கத்தையும் கவலையையும் எழுதியிருக்கிறேன். மலையாளத்தில் அரை டஜன், கன்னடத்தில் அரை டஜன், இந்தியில் அரை டஜன் பேர் பாரதீய ஞானபீடப் பரிசு வாங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் அத்தனை பேரும் அந்தப் பரிசுக்குத் தகுதியான எழுத்துக் கலைஞர்கள். ஆனால் தமிழில் கிடைத்த இரண்டே பரிசு இரண்டு வணிக எழுத்தாளர்களுக்குக் கிடைத்தது. இலக்கியவாதிகளுக்கு அல்ல. கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஞானக் கூத்தன், தேவ தேவன், இந்திரா பார்த்தசாரதி, லா. ச. ராமாமிர்தம், ஆதவன், சுஜாதா, எம்.வி. வெங்கட்ராம், ந. முத்துசாமி என்று நூறு இலக்கியவாதிகள் இருந்தும் இங்கே ஞானபீடம் வாங்கியது இரண்டு வணிக எழுத்தாளர்கள். இதேதான் பாலாவைக் கொண்டாடுவதிலும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆச்சரியம் இல்லை. இன்னும் ஓரிரு நாளில் பாருங்கள், ”தமிழ் சினிமாவின் காவியம் பரதேசி” என்று பத்திரிகைகள் எழுதப் போகின்றனவா இல்லையா என்று. இப்போதே சினிமாத் துறையில் பரதேசியை க்ளாஸிக் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். ஒரு இயக்குனர் அப்படித்தான் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். குறுஞ்செய்தி கிடைக்காத மாதிரி கமுக்கமாக இருந்து விட்டேன்.
ஏன் இந்தப் படத்தை ஒரு தட்டையான படம் என்று சொல்கிறேன்?
கதை என்ன என்று பெரிதாக விளக்கி எழுதப் போவதில்லை. 1939-ஆம் ஆண்டு சூலூர் என்ற கிராமத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வரும் கிராமத்து மக்களை பணத்தாசை காட்டி, வெகு தொலைவில் இருக்கும் தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்து வருகிறான் ஒரு கங்காணி. அந்த இடத்துக்கு நடந்தே வருவதற்கு நாற்பது நாட்களுக்கு மேல் ஆகிறது. வரும் வழியிலேயே ஒருத்தன் செத்து விழுகிறான். வந்த பிறகுதான் தெரிகிறது, அந்தத் தோட்டம் தப்பிக்கவே இயலாத ஒரு நரகக் குழி என்று. சாகும் வரை அங்கேயே தான் கிடந்து உழைக்க வேண்டும். இதுதான் கதை. இந்தக் கூட்டத்தில் ஒருவன் தான் ராசா (அதர்வா). கிராமத்தில் அங்கம்மாவைக் காதலிக்கிறான். அங்கம்மாவைப் பிரிந்து தேயிலைத் தோட்டத்தில் வந்து அடிமையாய் உழைக்கிறான். இதற்கிடையில் கிராமத்தில் அங்கம்மாவுக்குக் குழந்தை பிறக்கிறது. சீக்கிரம் ஊருக்குத் திரும்பி அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டி, தன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறான் ராசா. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் விடுதலை கிடைக்கவில்லை. கடைசியில் அங்கம்மாவும் அங்கேயே வந்து சேர்கிறாள். “இந்த நரகக் குழியில் வந்து விழுந்து விட்டாயே!” என்று ராசா கதறி அழுவதோடு படம் முடிகிறது.
இவ்வளவுதான் கதை. இப்படிப்பட்ட கொத்தடிமைகள் இந்திய சுதந்திரத்துக்கு முன்பு மட்டும் அல்ல; இப்போதும் இருக்கிறார்கள். குறிப்பாக வட இந்தியாவில். சென்னையிலும் கட்டிடத் தொழிலாளிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்கள். சமீபத்தில் கூட ஒரு பொறியியல் கல்லூரியில் கட்டிடம் கட்டும் போது சில தொழிலாளிகள் செத்துப் போனார்கள். இதெல்லாம் விபத்து அல்ல. கல்லூரி முதலாளிகளின் பணத்தாசையினால் நடைபெறும் கொலைகள்.
சரி, சாகும் வரை கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளிகளின் கதையை பாலா எப்படிப் படமாக்கியிருக்கிறார் என்பதுதான் நம்முடைய அக்கறை. இதில் இன்னொரு முக்கியமான விஷயம். படத்தின் இடைவேளை வரை அந்தக் கிராமத்து வாழ்க்கைதான் படமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தேயிலைத் தோட்டத்துக்குக் கிளம்பி வரும் போதுதான் இடைவேளை டைட்டிலே வருகிறது. ஆக, படமே இடைவேளையின் போதுதான் ஆரம்பிக்கிறது. அதுவரை படத்தில் எதுவுமே இல்லை. ஓரிரு காட்சிகளைத் தவிர எல்லாமே செயற்கையாக இருக்கிறது. அந்த சூலூர் கிராமம் அப்பட்டமான ஒரு செட் மாதிரி இருக்கிறது. அசல் கிராமமே தெரியவில்லை. எவ்வளவு செயற்கையாக இருக்க முடியுமோ அவ்வளவு செயற்கையாக இருக்கிறது சூலூர் கிராமம். செவன் ஸ்டார் ஓட்டல்தானே கேள்விப் பட்டிருக்கிறோம்? இதில் வருவது செவன் ஸ்டார் கிராமம். அப்படித் துடைத்து விட்டாற்போல் கண்ணாடி போல் ஜொலிக்கிறது சூலூர்.
இன்னொரு செயற்கை அந்த ஹீரோயின் நடிகை வேதிகா. அவருடைய உடல் மொழியில் அத்தனை செயற்கைத்தனம் தெரிகிறது. சமீபத்திய தமிழ் சினிமாவில் இவ்வளவு செயற்கையான ஒரு நடிப்பை நான் பார்த்ததில்லை. மேலும் அவருடைய ஒப்பனை படு மோசமானது. சில பழைய தமிழ்ப் படங்களில் ஆதிவாசிகளைக் காண்பிக்கும் போது மூஞ்சியில் கரியை அப்புவார்கள் அல்லவா? அதே போல் ஏதோ ஒரு களிம்பை வேதிகாவின் முகத்திலும் உடம்பிலும் அப்பியிருக்கிறார்கள். கொடூரமாக இருந்தது.
ஒட்டு மொத்த படமே மிக பலவீனமாக எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கமர்ஷியல் மசாலா படங்களின் மீது எந்தப் புகாரும் இல்லை. எனக்குப் பிடித்த கமர்ஷியல் படங்களில் முதன்மையானவை என சில படங்களைச் சொல்லுவேன். பாட்ஷா, அருணாச்சலம் போன்ற ரஜினி படங்கள். மன்மத லீலை போன்ற கமல் படித்த நகைச்சுவை படங்கள். வரலாறு, தரணியின் மூன்று தொடர்ச்சியான ஹிட்ஸ் தில், தூள், கில்லி (அவருடைய ஒஸ்தி ஒரு குப்பை) என்று பெரிய பட்டியலே போடலாம். அபத்தமான படமாக இருந்தாலும் துப்பாக்கி கூட என்னை இரண்டு மணி நேரம் உட்கார வைத்தது. இந்த வகையில் கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம் தவிர்த்த மற்ற எல்லா படங்களுமே உயர்தரமான பொழுது போக்குப் படங்கள். வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச் சரம், விண்ணைத் தாண்டி வருவாயா (சிம்புவையே நடிக்க வைத்திருப்பவர் பெரிய வித்தைக்காரராகத்தான் இருக்க வேண்டும்). இவருடைய பொழுதுபோக்குப் படங்களில் உச்சம் வாரணம் ஆயிரம். இந்தப் பட்டியலில் என்னை ஆகக் கவர்ந்த பொழுதுபோக்குப் படம் கஜினி. அது மெமெண்டோவின் காப்பி என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. ரெண்டு மணி நேரம் செமயாகப் போகிறதா? அது ஒன்றுதான் பொழுதுபோக்குப் படங்களைப் பொறுத்தவரை என்னுடைய எதிர்பார்ப்பு.
ஆனால் நான் இதே அளவுகோலை மாற்று சினிமாவுக்கு வைக்க முடியாது. உதாரணமாக, பொன்னியின் செல்வன் நாவலில் ஏன் ஷேக்ஸ்பியர் அளவுக்கு nuances இல்லை என்று நான் கேட்க முடியாது. ஏனென்றால், பொன்னியின் செல்வன் ஒரு பொழுதுபோக்கு நாவல். காவியம் அல்ல. இந்தப் பின்னணியில்தான் தமிழின் மாற்று சினிமா எனக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன.



ஒரு தீவிர சினிமா ரசிகனை ரெண்டு மணி நேரம் உட்கார வைக்கக் கூட முடியாவிட்டால் அப்புறம் அது என்ன மாற்று சினிமா? அங்காடித் தெருவும், வழக்கு எண்ணும் சமீபத்திய உதாரணங்கள். வறுமையைப் பற்றிப் படம் எடுத்தாலே அது மாற்று சினிமா ஆகி விடுமா என்ன? அப்படியானால் தமிழில் எழுதப் பட்ட ஆயிரம் லாரி முற்போக்கு நாவல்கள் இலக்கியமாக நிலைத்திருக்க வேண்டுமே? எந்த ஒரு சினிமாவும் அதனுள்ளே கலைத்துவத்தைக் கொண்டிருக்காவிட்டால் அது சராசரியாகத்தான் போகும்.
ஒரு மக்கள் கூட்டம் தங்கள் வாழ்நாள் முழுவதும் கொத்தடிமைகளாக மாட்டிக் கொள்வது ஒரு மாபெரும் சோகம், துயரம். ஆனால் இந்த உலக வரலாற்றிலேயே ஒப்பிட்டே சொல்ல முடியாத துயரம் என்று ஒன்று உண்டானால் அது ஹிட்லரின் நாஜிப் படையினரின் சித்ரவதை முகாம்கள்தான். 90 லட்சம் யூதர்கள் ஏழு ஆண்டுக் கால அளவில் சிறுகச் சிறுகக் கொன்றார்கள் நாஜிகள். முகாமில் கூட்டம் அதிகமானால் கேஸ் சேம்பர்களில் அடைக்கப்பட்டு நிமிடங்களில் கொல்லப்பட்டார்கள். யூதக் கைதிகளின் தங்கப் பற்கள் (யூதர்கள் பணக்காரர்கள்) கிடுக்கிகளால் பிடுங்கப்பட்டன. மைனஸ் பத்து மைனஸ் இருபது குளிரில் நிர்வாணமான நிலையில் ஒரு நாளில் 18 மணி நேரம் கடும் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். கேஸ் சேம்பரில் தலைமுடியோடு போட்டால் ஏதோ பிரச்சினை போல் இருக்கிறது. அதனால் கேஸ் சேம்பரில் போடப் படும் ஆயிரக் கணக்கான யூதர்கள் மொட்டையடிக்கப்பட்டார்கள். அந்த ஆயிரக் கணக்கான யூதர்களின் தலைமுடி மலை மலையாக அந்த முகாம்களில் குவிந்திருக்கும்.
இதை விடக் கொடுமை மனித வாழ்வில் இருக்க முடியுமா? இதை விடத் துயரமும் துக்கமும் இருண்மையும் (gloominess and darkness) இருக்க முடியுமா? ஒரு இனத்தை குண்டு போட்டு அழிப்பதை விட இது கொடூரமானது. ஏழு ஆண்டுகள் அணு அணுவாகச் சித்ரவதை செய்து சாகடித்தார்கள் நாஜிகள். சித்ரவதை முகாம்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்துமே மரண வாகனங்களாகப் பார்க்கப் பட்டன. இதன் பாதிப்பு எப்படி இருந்ததென்றால், நான் 2006-இல் ஃப்ரான்ஸிலுள்ள துலுஸ் நகரில் சில தினங்கள் தங்கியிருந்த போது ஒரு வயதான ஃப்ரெஞ்சுக்காரர் சொன்னார். இப்போது கூட ரயில்களைப் பார்த்தால் அவருக்கு நாஜிகளின் ரயில்கள் ஞாபகம் வருவதால் அவர் ரயிலிலேயே ஏறியதில்லை என்று. அது மட்டும் அல்ல; அவரைப் போல் பல முதியவர்கள் இருப்பதாகவும் சொன்னார்.
இப்பேர்ப்பட்ட வதைமுகாம்களைப் பற்றி நூற்றுக் கணக்கான படங்கள் வந்துள்ளன. அவைகளில் அநேகம் படங்களை நான் பார்த்து விட்டேன். அவற்றில் அடிக்கடி பார்த்த படங்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த Schindler's List மற்றும் ரோமன் பொலான்ஸ்கியின் பியானிஸ்ட். இந்த இரண்டு படங்களையுமே க்ளாஸிக் தரத்தில்தான் சேர்ப்பேன்; பியானிஸ்ட் ஸ்பீல்பெர்க் படத்தை விட பல மடங்கு உயர்வானதாக இருந்தாலும். ஷிண்ட்லர்ஸ் லிஸ்டில் சித்ரவதை முகாம்களில் உள்ள யூதர்களில் ஆயிரம் பேரைக் காப்பாற்றுவது நாஜிக் கட்சியைச் சேர்ந்த ஷிண்ட்லர். அந்த ஆயிரம் யூதர்களின் சந்ததிகள் இப்போது ஷிண்ட்லரின் யூதர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். ஆண்டு தோறும் ஷிண்ட்லரின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்கள் அந்த யூதர்கள்.
பியானிஸ்ட் படத்தில் வரும் நாயகன் சித்ரவதை முகாமுக்குச் செல்லாமல் தப்பி விடுகிறான். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஒரு ஆளில்லா நகரத்தில் ஒளிந்திருக்கிறான். அந்த நகரில் உள்ள அத்தனை பேரும் சித்ரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டு விடுகிறார்கள். யூதர் அல்லாத ஒருசிலரே அந்த நகரில் தங்கி இருக்கின்றனர். வதை முகாம்களுக்கு அனுப்பப்படும் போது அந்த யூதர்களை ஏற்றிக் கொல்லும் ரயில்களைப் பார்த்த போது துலுஸ் நகரில் நான் சந்தித்த முதிய ஃப்ரெஞ்சுக்காரர் சொன்னது ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. ரயில் என்பது Holocaust படங்களில் தவிர்க்க முடியாத ஒரு குறியீடாகவே இருக்கிறது. ரயிலில் புளி மூட்டையைப் போல் அடைக்கப்படுவார்கள் யூதர்கள். முகாமுக்குச் செல்லும் வரை தண்ணீர் கூட கிடையாது. வழியிலேயே பலர் செத்து விடுவார்கள். நாஜிகளின் வருகை வரை அவர்கள் அந்த ஊரின் செல்வாக்கான மனிதர்களாக வாழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆளில்லாத நகரில் ஒளிந்து வாழ்கிறான் பியானிஸ்ட். முதலில் சில மாதங்கள் அங்கே இருந்த வீடுகளில் புகுந்து கிடைப்பதைத் தின்று வாழ்கிறான். பிறகு அதுவும் முடியாமல் போகிறது. அந்த ஊரில்தான் நாஜி ராணுவ அதிகாரிகள் தங்கி இருக்கிறார்கள். வெளியில் வர முடியாமல் பல மாதங்கள் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி மறைந்து கிடக்கிறான். அவன் பதுங்கியிருந்த வீட்டில் ஒரு பியானோ இருக்கிறது. பியானோ தான் அவனுக்கு சுவாசமே என்றாலும் அந்தப் பியானோவை அவனால் வாசிக்க முடியாது. வாசித்தால் சப்தம் வெளியே கேட்டு நாஜிகள் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அதன் பெயர் தான் காவிய சோகம். அதைத்தான் nuance என்கிறேன். அப்படியே அந்தப் பியானோவின் அருகில் அமர்ந்து பியானோவைத் தொடாமலேயே கண்களை மூடியபடி விரல்களால் காற்றிலேயே வாசிப்பான் அந்தப் பியானோ கலைஞன். அப்படியே அவனது செவிகளில் இசை அருவியாய் ஓடும். என் உயிர் போகும் வரை மறக்க முடியாத காட்சிகள் அவை. இப்படிப்பட்ட nuances பரதேசியில் ஒன்று கூட இல்லை என்பதால்தான் தட்டையான படம் என்கிறேன்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கழிந்து, எலும்பும் தோலுமாக, செத்துப் போகும் நிலையில், சாவதற்கு முன் ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போமே என அந்த வீட்டின் பரணைத் துழாவும் போது டப்பாக்கள் கீழே விழுந்து பெரும் சப்தத்தை எழுப்புகின்றன. சத்தத்தைக் கேட்டு வீட்டின் உள்ளே வருகிறான் ராணுவ அதிகாரி.
பியானிஸ்டைப் பார்த்த உடனேயே அதிகாரிக்கு இவன் பல மாதங்களாக இங்கே ஒளிந்து இருக்கிறான் என்று தெரிந்து விடுகிறது. நீ யார் என்கிறான். இவன் விஷயத்தைச் சொல்லி, தான் அந்த ஊரில் ஒரு பிரபலமான பியானிஸ்டாக இருந்ததையும் சொல்கிறான். உடனே அதிகாரி எதிரே இருக்கும் பியானோவைப் பார்த்து “எங்கே வாசி…” என்கிறான்

கவுண்டமணி அரிய தகவல்கள்,பேட்டி,-பிறந்த நாள்

$
0
0
இன்று  தலைவர் கவுண்டமணி(கவுண்டன்-ஆமா என்னடா ஆனா ஊனான்னா தலைவர் எங்கிறாய்  உன் தலைவன் என்ன சுதந்திரப்போராட்டத்தில பங்குபற்றின தியாகியா? இல்லை மக்களுக்காக செக்கிழுத்தானா.. சும்மா திரியுறபயலுகளையெல்லாம் தலைவான்னா அப்ப  பெரியாரு சேகுவாரா எல்லாம் யாருடா பறங்கிக்காய் தலையா.....போடா டேய் போடா...) சாரின்னே.... கவுண்டமணியின் பிறந்த நாள் எனவே கவுண்டமணிபற்றிய ஒரு மீள்பதிவு....

(நீதுஜன் பாலா)

பேரிக்காய் தலையா’, ‘டிராக்டர் தலையா’ என்று தமிழ் சினிமாவிற்கு புதுப்புது
வார்த்தைகளை உதிர்த்து நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியவர் கவுண்டமணி.
இவரது வாழைப்பழ காமெடியை நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு தானாக
வரும்.தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி
கொடிகட்டிப் பறந்தவர் கவுண்டமணி. அவரின் சொந்த ஊர்தான் வல்லக்குண்டாபுரம்.



இங்குதான்
சமீபத்தில் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படம் படமாக்கப்பட்டது. பால்காரராக
நடிக்கும் விஜய், கவுண்டமணியின் வீட்டில், பக்கத்து வீடுகளில் மாட்டில்
பால் கறப்பது போலவும், படமாக்கினார்கள்.

விஜய்க்கு கவுண்டமணியின்
சொந்த ஊர் இதுதான் என்று ஆரம்பத்தில் தெரியாது! ஒரு காட்சியில்
கவுண்டமணியின் வீட்டில் படமாக்கப்பட்ட போதுதான் தெரிய வந்தது! உடனே
கவுண்டமணியின் அக்கா, அம்மா குடும்பத்தினருடன் நீண்ட நேரம்
பேசிவிட்டுத்தான் சென்றார்.

நாமும் கவுண்டமணியின் அம்மா,அக்காவைச் சந்திக்க வல்லக்குண்டாபுரம் போனோம்.

திருமூர்த்தி
மலைச்சாரலின் குளிர்ந்த காற்று எப்போதும் வீசிக்கொண்டே இருக்கும் கிராமம்
அது. சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகள். அதில் வேலை செய்யும்
கள்ளங்கபடமில்லாத கிராமத்து மனிதர்கள். இவர்களுக்கு மத்தியில்தான்
கவுண்டமணியும் அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். அங்குள்ள அவரது அக்கா
மயிலாத் தாள் வீட்டில்தான் சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்திருக்கிறார்.
அவர் ஓடியாடி விளையாடிய கிராமம் அது. அங்கு நாம் சென்ற சமயம், அம்மாவால்
பேச முடியவில் லை. அதனால் அக்கா மயிலாத்தாளே பேசினார்.

‘‘எங்கள்
பெற்றோருக்கு நானும், சுப்பிரமணியும், இரண்டுபேர்தான். (அட! கவுண்டமணியின்
சொந்தப் பெயர் சுப்பிரமணியா!) வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம்.
எங்கப்பா அவனை அடிக்காமல் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே அவனுக்கு
நாடகத்தில் நடிப்பதென்றால் கொள்ளை ப்ரியம். அதனால் எப்பப் பார்த்தாலும்
பள்ளிக்கூடம் கூட போகாமல் நாடகம் பார்க்கவே சுத்திகிட்டு
இருப்பான்.எங்கப்பாவும் ‘சுப்பிரமணிக்கு நாடகம் பார்க்கிறது இஷ்டம்ன்னா,
அதிலியே விட்டு விடுங்கள்’ என்றதால் நாங்களும் கண்டிக்கவில்லை.

இப்பதான்
சினிமாவில் இத்தனை வாய் பேசறான். சின்ன வயதில் பேசவே மாட்டான். பேசினாலும்
மெதுவாகத்தான் பேசுவான். 15 வயதிலேயே ‘நானும் நாடகத்தில் நடிக்கப்
போகிறேன்’ என்று விடாமல் நச்சரித்ததால் நான்தான் சென்னைக்குக் கொண்டு போய்
விட்டு வந்தேன். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து, பின்னர் எம்.ஆர்.ஆர்.வாசு,
ஓ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடித்த பிறகுதான் சினிமாவில் நடிக்கத்
தொடங்கினான். பாரதிராசா படத்துல நடிச்ச பிறகுதான் வெளியில் முகம் தெரியத்
தொடங்கியது.




ஒருமுறை
ஒரு அக்ரஹாரத்தில் நடந்த நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் நடிச்சான். நாடகம்
முடிந்ததும் அதை வாழ்த்திப் பேச வந்தவர், ‘‘சுப்பிரமணி அருமையாக
நடித்துள்ளார். கவுண்டர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல் ஏற்ற
இறக்கத்தில் அற்புதமாக பேசி நடித்தார். அதனால் இன்று முதல் சுப்பிரமணியை
கவுண்டமணி என்றே அழைப்போம்’’ என்றார். அன்றிலிருந்துதான் அவன்
‘கவுண்டமணி’யானான்.
வீட்டில் இருந்த புகைப்படங்களில்
மாலையும்,கழுத்துமாக மணக்கோலத்திலிருந்த தம்பதிகளைப் பார்த்து யார் என்று
கேட்டதும், ‘‘அது எங்க தம்பிதாங்க, அவன் அப்பவே காதல் கல்யாணம் தான்
பண்ணிக்கிட்டான். அந்தக் கல்யாணத்தை நானும், என்ற வீட்டுக்காரரும் நடத்தி
வைச்சோம்ங்க. (கணவர் பெயரைச் சொல்லவில்லை)
அவனுக்கு எம் மேலே பாசம்
அதிகமுங்க. எங்கம்மான்னா அவனுக்கு உசிரு! எங்கம்மாவை ஆஸ்பத்திரிக்கு
இப்பதான் கூட்டிட்டுப் போயிட்டு வந்தோம். அவங்களுக்கு உடம்பு
சரியில்லாததனால்தான் அவங்களால பேச முடியல’’ என்றவர் அவரே தொடர்ந்து,

‘‘அவனுக்கு
டவுன் வாழ்க்கையை விட கிராமத்து வாழ்க்கைதான் ரொம்ப பிடிக்குமுங்க.இங்க
வந்தான்னா ஊரையே ஒரு ரவுண்ட் அடிச்சு விட்டுதான் வருவான்’’ என் றார்.

மயிலாத்தாளைப்
போலவே வல்லக்குண்டாபுரத்தின் பெரிசுகள் பலருக்கும் கவுண்டமணியின்
நினைவுகள் இன்னமும் இருக்கின்றது. ஊருக்குள் எப்போது வந்தாலும் பழைய
நண்பர்களைப் பார்த்து பேசிவிட்டு வருவாராம்.அமைதியாக வயல்களில் சென்று சில
நிமிடங்கள் அமர்ந்துவிட்டு தான் சென்னைக்குத் திரும்புவாராம்!

நம்மை
வாய்விட்டு சிரிக்க வைத்த மனிதருக்குள் ஊர்ப்பாசம் ஆழமாய் வேரூன்றி
இருப்பது இந்த கிராமத்துக்குள் சென்றபோது நன்றாகவே தெரிந்தது!

நன்றி :
நகைச்சுவையின் தன்னிகரில்லா கலைஞரான கவுண்டமணி பற்றி விகடன் வெளியிட்டுள்ள சில சுவாரஸ்யமான குறிப்புகள்:

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ்
சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…

* ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால்
காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

* பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!

* அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!

* மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.

* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

* ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!

* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

* ‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

* சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

* ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!






Goundamani – TheKing of Comedy
கவுண்டமணி. தமிழ் சினிமாவின் லொள்ளுக்கு மொத்த குத்தகைக்காரர். எமது எழுச்சி நாயகர்கள் உட்பட்ட தமிழின் மொத்த அபத்தங்களை வாயாலும், செந்திலை காலாலும் போட்டு மிதி மிதி என்று மிதித்த நாயகன். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் கூறும் நல்லுலகத்திலேயே ஏறத்தாழ 30 வருடங்கள் தனியாட்சி செய்த ஒரு மனிதர். தமிழ் சினிமாவின் லொள்ளுலக மன்னர்களாகிய சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோருக்கு லொள்ளை கற்பித்தவர், இன்றுவரை முளைக்கும் எந்த நகைச்சுவை நடிகருக்கும் மூலதனமாக உள்ளவர். ஆனால், ஒரு கலைஞன் வெளியே தெரிந்தால், அவனது கலைக்கு உள்ள பெறுமதி குறைந்துவிடும் என்கிற தனது கொள்கை காரணமாக, தன்னைப்பற்றிய சொந்த செய்திகள் எதுவும் வெளியே தெரியாது பார்த்துக்கொண்டவர். இவரது தனிப்பட்ட புகைப்படம் கூட கிடைக்க அரியதாகத்தான் இருந்துவருகிறது.  ஒரே ஒரு முறை ஆனந்த விகடனுக்கு பேட்டி ஒன்று வழங்கினார், தமிழ் சினிமா லைட்டிங் தொழிலாளிகளுக்காக நிதி திரட்டும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மற்றபடி இவர் கடவுள்போலத்தான். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.
 
இவரது இயற்பெயர் சுப்பிரமணி. கோயம்புத்தூர் வல்லகொண்டபுரத்தில் (கண்ணாம்பாளயம் கிராமம்) 1950இல் பிறந்தார். சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய இவர், ஒரு நாடகத்தில் ஊர் கவுண்டர் பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததிலிருந்து கவுண்டர் என அழைக்கப்பட்டார். 1977 இல் வெளியான பதினாறு வயதினிலே படத்தின்மூலம் இவர் தமிழ் சினிமாவுக்கு பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். அவ்ரே இவருக்கு கவுண்டமணி என்கிற பெயரையும் வைத்தார். தனது முதல் படத்திலேயே பிரபலமானார். எண்பதுகளில் தவிர்க்கமுடியாத அங்கமாக அனைத்து திரைப்படங்களிலும் இவது நகைச்சுவைப்பகுதி ஆகிப்போனது. தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகருக்கு வழங்கப்பட சம்பளங்களிலேயே அதிகமான தொகையான ரூபாய் 30 லட்சம் (இந்திய ரூபாய், 1985 – 90 காலத்தில்.) இவருக்கு கொடுக்கப்பட்டது. விகித அளவில் இன்று ஒப்பிட்டால், அந்தத் தொகை இனிமேல் எவருக்குமே வழங்கப்பட முடியாது. கமல், ரஜினி, மோகன் என்று அக்காலத்தின் கனவு நாயகர்கள் சிலரைத்தவிர வேறு எந்த கதாநாயகருக்குமே அந்த தொகை வழங்கப்படுவதில்லை.

கவுண்டமணி திருமணம்.


இதுவரை சுமார் 750 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். அதில் ராஜா எங்க ராஜா, பிறந்தேன், வளர்ந்தேன் உள்ளிட்ட 12 படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். நகைச்சுவை மட்டுமல்லாது, குணச்சித்திர வேடங்களிலும்,  பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். கரகாட்டக்காரன், சூரியன், நடிகன், நாட்டாமை, சின்னக் கவுண்டர் போன்ற சில படங்கள் இவரது முக்கியமான சில படங்கள். செந்திலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களுமே நகைச்சுவைக்கு பஞ்சமில்லாதவை. ஹொலிவூட்டின் லாரல், ஹார்டி ஜோடிக்கு இணையானவர்கள் என இவர்கள் நோக்கப்பட்டார்கள். இவர்கள் இணைந்து 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்கள். இது ஒரு உலக சாதனை. நாயகர்களில் சத்யராஜூடன் இவர் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே எவருக்குமே ஏமாற்றமிலாது ஓடின. லொள்ளுக்கு பஞ்சமில்லாத இவர்களுடன் மணிவண்ணனும் இணைந்த படங்கள் அக்காலத்தின் அரசியல்வாதிகள், போலிச் சாமியார்கள், நல்ல சாமிகள், தொழிலதிபர்கள் அனைவரையும் பிரித்து மேய்ந்தன. கவுண்டமணியின் நகைச்சுவைப்பகுதியை பலகாலம் எழுதியவர் நாகேஷுக்கு எழுதிய ஏவீரப்பன். அவரது காலத்திலேயே (1998 - 2005) லொள்ளுடன் வசனரீதியான நகைச்சுவையும் கலந்து, கவுண்டமணியின் காமெடி புதிய தரத்தை அடைந்தது.

இவரது நகைச்சுவைகளிலேயே மிகவும் பிரபலமானது கரகாட்டக்காரன் படத்தில் வந்த வாழைப்பழக் காமெடி. அத்துடன் “அரசியல்லஇதெல்லாம் சாதாரணமப்பா... போன்ற வசனங்கள் சாகாவரம் பெற்றவை. இவர் ஏற்று நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா, விஷமுருக்கி வேலுசாமி, ஐடியா மணி, அஞ்சா சிங்கம் மருதுபாண்டி போன்ற பாத்திரங்களும் பிரபலமானவை. அத்துடன் லக்கிமேன் படத்தில் எமதர்மராஜனாக வேறு வந்திருப்பார்.அந்தப் படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் இவர் அடித்த லூட்டி இருக்கிறதே... அதையெல்லாம் பார்த்துவிட்டு நிஜ எமதர்மராஜன் உணர்ச்சி வசப்பட்டு, சிலுக்கை உடனடியாக தனது கஸ்டடிக்கு கொண்டுபோனதுதான் நமக்கு தெரிந்ததே!

கவுண்டமணி தனது குடும்பம் பற்றி வெளியே தெரியாது பார்த்துக்கொண்டார். தனது அம்மாவை ஆத்தா என்று அழைப்பார். வெளியே செல்லும்போது ஆத்தாவின் காலை தொட்டு வணங்கிவிட்டுத்தான் செல்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள், செல்வி, சுமித்ரா. மூத்த மகளின்  திருமணம் அண்மையில் நடைபெற்றது.

அந்தத் திருமணத்திலிருந்து சில காட்சிகள்...
செந்திலுடன்

கமலுடன்
சத்யராஜூடன்

இவரை நண்பர்கள் மிஸ்டர் பெல் என்றுதான் அழைப்பார்கள். பத்துக்கு மேற்பட்ட கார்கள், விதவிதமான கடிகாரங்கள் எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார்.

இறைபக்தி நிரம்ப உள்ளவர். சைவ உணவுகளே உண்பார். திருப்பதிக்கு அடிக்கடி சென்று வழிபடுவார். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருப்பார். ஆனால், சாமியார்களை மதிப்பதில்லை. `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்றுவேலை என்பார்.
புகைப் பழக்கமோ, குடிப் பழக்கமோ, கிடையாது. பார்ட்டிகளுக்கு சும்மாகூடப் போவதில்லை. தனது பெயருக்கு முன்னால் எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்வதில்லை. இவர் பெரிதாகப் படித்தவரில்லை என்றாலும், நிறைய புத்தகங்களை வாசித்தவர். ஒஷோவின் அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவர். ஆங்கிலப்படங்கள் எதுவானாலும் வெளிவந்தவுடன் பார்த்துவிடுவார். பார்த்துவிட்டு நண்பர்களுடன் அதைப்பற்றி பேசுவார். முக்கியமாக சத்யராஜூடன் தினமும் ஒரு முறையாவது தொலைபேசியில் தமிழ், ஆங்கில படங்களைப்பற்றி பகிர்ந்துகொள்வார். 'மொக்கை நடிகர்களை எல்லாம் போட்டு காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சுவார்' என்று சத்யராஜ் பெட்டி ஒன்றில் சொன்னார்.

2000களுடன் திரைத்துறையில் இவரது புயற்காற்று சற்றே ஓய்ந்தது. தான் உச்சத்தில் இருந்தபோது வாங்கிய அதே சம்பளத்தையே இப்போதும் கேட்பதால்தான் இவரை இப்போதெல்லாம் பெரிதாக திரைப்படங்களில் காணமுடியவில்லை என்கிறார்கள். ஆனாலும், இன்றளவும் அவரது நகைச்சுவையின் வீச்சு குறையவில்லை. அவரை அப்படியே கொப்பியடிக்கும் இளம் நகைச்சுவை நடிகர்களுக்கு கிடைக்கும் மரியாதையின் மூலாதாரமாக இவர்தான் உள்ளார். இவரது நகைச்சுவை காட்சிகளை போட்டே நாள் முழுவதையும் ஓட்டும் இரண்டு நகைச்சுவை சனல்கள் உள்ளன. இவருக்கு 2010 மார்ச்சில் இதய அறுவை சிகிச்சை நடந்தது.  அதன்பிறகு இவரை பேட்டி காண முன்னணி தொலைக்காட்சி ஒன்று அணுகிகியது. ஆனால் அவர் “அதுதான் நாள்முழுக்க எனது நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்புகிறீர்கள்தானே? பிறகென்ன?  என்று மறுத்துவிட்டார். நான் இருக்கும்வரை வேண்டுமானால் எனது தயவு அவர்களுக்கு தேவைப்படும், ஆனால் என்றுமே அவர்களின் தயவு எனக்கு தேவையில்லை என்று கூறினார்.



இவர் ஒருமுறைகூட தனது சொந்த வாழ்க்கையைப்பற்றி பகிர்ந்துகொள்ளாவிடினும், ஒருமுறை அனந்த விகடனுக்கு பெட்டி ஒன்றை வழங்கி இருக்கிறார். அது இதோ:

 இந்தியாவில் இன்று அதிகம் சம்பாதிக்கிற நடிகர் இவர்தான் என்று பேச்சு. இவருடைய கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்கு பூஜை. இவர் வந்து இறங்கும்போது ஹீரோக்களுக்கு இணையாக ஷூட்டிங் ஸ்பாட் சலசலத்து அடங்குகிறது. இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்து கிசுகிசுக்கிறார்கள்.  கடந்த வாரத்தில் இவர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு தான் கோடம்பாக்கத்தின் பரபரப்பு பேச்சு!

ஜகஜவென நைலக்ஸ் லுங்கிஒரு பட்டன் கூடப்போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார் கவுண்டமணி. லேசான தொந்தியை தாண்டி மூன்று முழ நீளத்திற்கு ஒரு தங்கச்சங்கிலிதங்க பிஸ்கட் கோத்து போட்டிருக்கிறார். வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம் முன் தலையின் வழுக்கை மட்டுமே. 

விகடன்தியேட்டர்ல படம் ஆரம்பிச்சி 20 நிமிஷம் ஆனதும் சடார்னு ப்ரேமுக்குள்ள நுழையறீங்க. நீங்க பேசுறதுக்கு முன்னாடியே உங்க முகத்தை பார்த்து தியேட்டர் சிரிப்புல அதிருது. விசில் பறக்குது. எப்படி சாதிச்சீங்க?கவுண்டர்இன்னிக்கி நாட்ல உள்ள ஏகப்பட்ட பிரச்னைகளை மீறி மக்களை சிரிக்க வைக்கிறது என்கிற விஷயத்தை ஒரு பார்முலா மாதிரி போட்டு கண்டு புடிச்சிற முடியாது. சிரிக்க வைக்கக்கூடிய சங்கதி தானாகத்தான் ஒருத்தனுக்குள்ள அமையனும். அது 'ப்ளட்'னு வச்சுக்கோங்களேன்.

15 
வருஷத்துக்கும் மேல காமடி பண்றேன். எனக்கு முன்னால எவ்வளவோ பேர் சாதிச்சி இருக்காங்க. எனக்கு பிறகு வந்தவங்களும் நிறைய இருக்காங்க. எப்படியோ கடவுள் அருளால ஜனங்களுக்கு நம்மள புடிச்சி போச்சி. கவுண்டமணின்னா என்னவோ ஒரு கிரேசி".


விகடன்: நடிக்க வந்தது எப்படி?

கவுண்டர்: நமக்கு சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. வீட்ல விவசாயம் பாத்தாங்க. சினிமாவுக்கும்நமக்கும் ரொம்ப லாங்கு. லாங்குன்னா இப்படி அப்படி லாங் இல்லை. அமேரிக்கா அளவுக்கு தூரம். அவங்க யாரும் டாக்கீஸ் பக்கம் கூட போனதில்ல. சின்ன வயசுல நடிக்கனும்னு வெறி எனக்கு. காமடியாவில்லனாஹீரோவா..அதெல்லாம் முடிவு பண்ணல. நடிகன் ஆயிடணும். அதான் லட்சியம். 12 வயசுல நாடக கம்பனில செந்தேன். பாய் கம்பனில இருந்து ஜோதி நாடக சபா வரை எல்லாத்துலயும் இருந்தேன். எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம்பயமெல்லாம் போயி நம்மால முடியும்னு தைரியம் வந்துச்சி. அப்பதான் சினிமா சான்சும் வந்துச்சி.விகடன்: 16 வயதினிலே உங்க முதல் படம். அதில் கண்ணெல்லாம் சுருங்கி போயி கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு. அதாவது வறுமை?

கவுண்டர்: (சட்டென்று இடைமறித்து) அதெல்லாம் சும்மா சார். வறுமையாவது ஒண்ணாவது. சினிமாவுக்கு முன்னாடி நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே. வேளா வேளைக்கு சோறு. அதிகம் இல்லாட்டியும் பொழுதை தள்றதுக்கு காசு கிடைச்சிட்டு தான் இருந்துச்சி. வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு '
ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்..துண்டு பீடிதான் புடிச்சேன்ன்னு சொல்றது இப்ப ஒரு பேஷன் ஆகிப்போச்சி. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.

விகடன்: அந்த பெட்ரோமாக்ஸ் காமடி?

கவுண்டர்ஆமாமா. 'இதுல எப்பிடிண்ணே லைட் எரியுது?' ன்னு செந்தில் கேப்பான். 'அடேய்..இதுதான் மேண்டில். இதுலதான் பளீர்னு லைட் எரியுது'ன்னு நான் சொல்லிட்டு இருக்கும்போதே செந்தில் மேண்டிலை எடுத்து நசுக்கிப்புட்டு, 'என்னண்ணே..ஒடச்சி புட்டீங்க?'ன்னு கேப்பான்(கவுண்டர் முகத்தில் சிரிப்பு பரவுகிறது). அப்ப நான் உடனே பதில் சொல்லாம கேமரா பக்கம் திரும்பி டென்ஷனா ஒரு லுக் விடுவேன். ஆடியன்ஸ் விழுந்து பொறண்டு சிரிக்கும். (அந்த காட்சியை செய்து காட்டுகிறார்). அந்த இடத்துல அப்படி ஒரு லுக் விட்டாலே போதும்னு யார் சொல்லி குடுத்தாநமக்கா தோணுது. அதைத்தான் ப்ளட்னு சொல்ல வர்றேன்.

விகடன்: கோயம்புத்தூர் மண்ணுக்கும் சினிமாவில் காமெடிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலிருக்குதே! நிறைய பேர் அங்கிருந்து வர்றாங்க..
கவுண்டர்: ஏங்க... மண்ணுக்கும் காமடிக்கும் என்னங்க சம்மந்தம்அது என்ன கிழங்காமண்ணுல விளையறதுக்குஅப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன..அந்தப்பக்கம் கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி! வீட்ல சொன்னபடி கேக்காம ஏடாகூடமா தப்பு பண்ணிப்புட்டு அப்படி இப்படின்னு கிடந்து வர்றாங்க. இங்கே பெரியாளா ஆறாங்க.
விகடன்: உங்களோட வளர்ச்சியில யாருக்கு பங்கு உண்டுஉங்க காட்பாதர்னு யாரை சொல்லுவீங்க

கவுண்டர்: (கலகலவென சிரிக்கிறார்..) இது என்ன மாபியா கேங்காகாட்பாதர் இருக்கறதுக்கு! 'ஒருத்தன் வளர்றது இன்னொருத்தனுக்கு பிடிக்காது'ன்னு நான்தான் சொல்றேனே. ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா அவரை சுத்தி இருக்குறவங்களுக்கு சந்தோஷம்னா நினைக்கறீங்க?.. சூப்பர் ஸ்டார்னு புகழராங்களே தவிரசொந்தக்காரங்க கூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம். இதுதான் எனக்கும்.

விகடன்: ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும்?

கவுண்டர்: தன்னைப்பத்தின நிஜ ரூபத்தை பொத்தி பொத்தி மூடணும். பெட்டிக்கடையில பீடியைக்கூட கட்டுக்கட்டா உள்ளேதான் வெச்சிருப்பான். அப்போதான் அதுக்கு மரியாதை. அள்ளி வெளியே கொட்டிப்பரத்தி வியாபாரம் பண்ணிப்பாருங்க..பீடி விக்காது. நான் விழாக்கள்பேட்டிகள்னு எதுக்கும் ஒப்புக்கறதில்லை. 'கலை நிகழ்ச்சிஎன்ற பேரில் துபாய்சிங்கப்பூர் போறதில்லே. ரசிகர் மன்றம் இருந்தது. இப்ப மன்றத்தை எல்லாம் கலச்சிட்டேன். என் பிறந்த நாள் என்னன்னே மறந்து போச்சி. முக்கியமா டி.வி.க்கு பேட்டி குடுக்கறதில்ல. கவுண்டமணியை சினிமாவுல மட்டும் பாரு..அப்பதான் கிக்!

....சில நிமிட மௌனத்திற்கு பின் கேள்வி கேட்காமலே சொன்னார்... 

இது ஒரு ட்ரெண்டுங்க. நம்ம காமடியை ஒப்புக்கறாங்க. அதை அழகான மேக்கப் போட்டுட்டு வந்து பண்ணக்கூடாதாமுகத்தை அசிங்கம் பண்ணிட்டுமண்ணாங்கட்டி அது இதுன்னு பேர் வச்சிக்கிட்டு வந்தாதான் காமடியா?! காமடிக்காகவே கோண மூஞ்சிக்காரங்களை தேடிப்பிடிக்கறது அக்கிரமம். அட ஜனங்க ரெண்டு மணிநேரம் நம்ம முகத்தை பாக்க வேண்டாமாங்கஎன்னைக்கேட்டா நகைச்சுவை நடிகன்தான் அழகாநீட்டா ப்ரெஷ்ஷா இருக்கணும்.

..பேட்டியின் போது போட்டோ  எடுக்க அனுமதிக்கவில்லை....

அதற்கு அவர் சொன்ன பதில் "மேக்கப் இல்லாம போட்டோ எடுக்க போஸ் குடுக்குறது இல்லைங்க" என்கிறார் தலையை தடவியபடி. குடும்பத்தை படம் எடுப்பதற்கும் மிகப்பெரிய தடை போடுகிறார். 

"முடியாதுங்க. இதுவரைக்கும் என் பேமிலி படம் எதுலயாச்சும் பாத்து இருக்கீங்களாதர்றதே இல்லை. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. நல்ல சந்தோஷமான குடும்பம். அவங்களை பொறுத்தவரை நான் காமடி கவுண்டமணி கிடையாது. ஏதோ ஒரு வேலைக்கு போறேன். கூலி வாங்கிட்டு வர்றேன். அதை வச்சி குடும்பம் நடத்துறது அவங்க வேலை. என் குடும்பத்து ஆளுங்க இன்னிவரைக்கும் ஷூட்டிங் பாத்தது கிடையாது. என்னை ஒரு நடிகனா வீட்ல யாரும் பாக்கக்கூடாது. அது வேற..இது வேற.

உம்முன்னு உட்காந்துட்டு இருக்குறவங்க எல்லாம் தனியா எதுனா அள்ளிட்டா போகப்போறாங்கஅப்புறம் எதுக்கு பொறக்கணும்என்னைப்பொறுத்தவரை நாலு பேரைப்பாக்கணும்நாலு விதமா பேசணும்சந்தோஷமா சிரிக்கணும். அவ்வளவுதான் வாழ்க்கை. இருக்கிற வரைக்கும் சிரிப்போம்...ரைட்டா?" 

முதலும், கடைசியுமான இந்த பேட்டி ஆனந்தவிகடனில் 2-6-1996 இல் வெளிவந்தது.

இவரைப்பற்றிய எதிர்மறைக்கருத்துக்களையும் இல்லாமல் இல்லை. சிறிய நகைச்சுவை நடீகர்களை மதிப்பதில்லை, மற்றவர்களை அவமதிக்கும் வகையில் எள்ளல் செய்வதையே காமெடியாக செய்கிறார் என்று பல குற்றசாட்டுக்கள் உள்ளன.
சிங்காரவேலன் படத்தில் நடித்தபோது தன்னை இவர் தேவையே இல்லாமல் அடித்துக்கொண்டிருந்ததாக வடிவேலு பிற்காலத்தில் வெளிப்படையாகவே சொன்னார். நீங்கள் இவரது காட்சிகளை பார்த்தாலே தெரியும், காட்சிகளில் யாருக்காவது அடிப்பதாக, அல்லது முடியை பிடித்து இழுப்பதாக வரும்போது இவர் உண்மையாகவே அதை செய்வார். மேலும், என்னதான் பெரிய கொமெடியானாக இருந்தாலும், மற்றவர்களின் பகுதியிலும் தலையிடுவார். சிங்காரவேலன் படத்தில் மிகப்பெரிய timing நகைச்சுவை நடிகரான கமலின் காட்சிகளை இவர் குழப்பியிருப்பார். அத்துடன் சலிப்பூட்டும் வகையில் சட்டித் தலையா, கோண வாயா.. என்பதாக உடற்குறைபாடுகளை குறிப்பிடும் வகையில் மற்றவர்களை எள்ளுவார்.

எது எவ்வாறாக இருப்பினும், கவுண்டமணி என்கிற நகைச்சுவை நடிகன் தமிழின் மறக்க முடியாத ஒரு கலைஞன். புதிதாக உருவாகும் நகைச்சுவை நடிகர்கள் எவருமே இவரது சாயல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியாது. அல்லது இவரை அப்படியே பிரதியெடுத்தால், உச்சத்துக்கு போகலாம். (சந்தானம் ரசிகர்கள் மன்னிக்க.) அத்துடன் இன்றுவரை இளைஞர்களின் மனதில் இவரது இடம் அப்படியேதான் உள்ளது என்பது உங்களை பார்த்தாலே தெரியவில்லையா? இத்தனை ஆர்வமாக ஒரு இடைக்கால நடிக்கரைப்பற்றி வாசிக்கிறீர்களே?


கவுண்டமணியின் சில நகைச்சுவை காட்சிகள்
















இதெல்லாம் என் வரலாற்றுல வரும் எனக்கு சிலைவைப்பாங்க ஸ்டுடென் எல்லாம் ரோட்டில நிப்பாங்க...




கவுண்டமணி அஜித்,விஜய்,சூரியா என்று பிரபல நடிகர்களை காய்ச்சும் வீடியோக்கள் தொடர்பான பதிவு....இவை இன் நடிகர்களின் தீவிர விசிறிகளால் உருவாக்கப்பட்டவை...

இன்றும் மீம்களில் கவுண்டமணியை பிரபலமாகப்பயன்படுத்துவதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது அப்பதிவுக்கு

கவுண்டமணியால் கலாய்க்கப்படும் பிரபல நடிகர்கள்



இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இந்தியா?

$
0
0
Repeat what you saw ....ஒரு சிங்களஎக்கவுண்டால் செயார் செய்யப்பட்ட போட்டோ இது ஓ இந்தியாவே இதுக்குத்தானே நீங்கள் எல்லாம் ஆசைப்படுகின்றீர்கள்? இன்று ஒருவன் செயார் செய்தான் நாளை பல சேனா என்ன செய்யப்போகிறதோ... ஏண்டா வேற ஒருதனில இருக்கிற கடுப்பில ஒரு புத்த துறவியை அடிக்கேக்க இஞ்ச அவன் என்ன செய்வான் எண்டு உங்களுக்கு யோசனை வரவில்லையா?
இன்னுமா உங்கள் அரசியல் ஆதாய வெறி தீரவில்லை


// இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 19 பேர் டெல்லியில் தங்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலையில் சென்னை திரும்பினார்கள். அவர்கள் வந்த ரெயில் காலை 7.30 மணி அளவில் சென்டிரல் ரெயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்துக்கு வந்தது.
 
ரெயிலில் இருந்து இறங்கி அனைவரும் நடந்து வந்தனர். அப்போது காவி உடையுடன் புத்த துறவிகளான என்.கே. பண்டாரா (70), வங்கிசா (40) ஆகியோரும் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் திடீரென்று 3 பேர் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்தனர். கால்களாலும் எட்டி உதைத்தனர்.
 
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத புத்த துறவிகள் இருவரும் தப்பித்து ஓடினார்கள். ஆனாலும் விடாமல் அவர்களை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். இந்த சம்பவம் நடந்த போது ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் 3 வாலிபர்கள் தைரியத்துடன் நடத்திய திடீர் தாக்குதலை வேடிக்கை பார்த்தனர். புத்த துறவிகளுடன் வந்த மற்ற 17 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் தான்.//

இதுவரை இலங்கை இதற்கு எந்த ரெஸ்போண்டையும் செய்யவில்லை.முக்கியமாக பொதுபல்சேனாவை நினைத்தால்தான் பயமாக இருக்கின்றது.இங்க இருக்கிறவனில இருக்கிற கடுப்பில் அங்க அடிச்சா அங்க நீங்கள் செய்தவேலைக்கு இங்கே சுட்டால்....
ஏற்கனவே அரசியல் ரீதியான அழுத்தங்களில் ஆட்டம்கண்டுகொண்டிருக்கின்றது.இதற்குள் இந்தவேலையை வேறு செய்து தொலைத்திருக்கின்றீர்கள்.

ஓளவையார் ஒருவர்தானா?-02

$
0
0
இலக்கியங்களில் ஓளவை என்னும் சொல் அன்னை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

தமிழ்க்கலைக்களஞ்சியத்தில்

"அம்மை என்பதன் திரிபாகிய அவ்வை என்ற சொல்லுடன் சிறப்புணர்த்தும் விகுதியாகிய ஆர் சேர்ந்து ஓளவையார் என்னும் சொல் பெண்களில் உயர்ந்தவரைக்குறிக்கின்றது."
என குறிப்பிடப்பட்டுள்ளது.

"அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலா
வையேயிற்று ஐயைக்கண்டாயோ தோழி" இது சிலப்பதிகாரத்தில் கூறபப்ட்டது.இதில் தாய் என்னும் பொருளில் அவ்வை என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.



மணிமேகலைக்காப்பியத்தில்
"தவ்வைய ராகிய தாரையும் வீரையும அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன வாய்வ தாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் "

இதில் தமக்கை என்னும் பொருளில் தவ்வை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒளவையின் வரலாறுபற்றி துணைக்கதைகளுடன் பல கதைகள் உள்ளன.திருவள்ளுவர் கதையில் ஓளவையார் பற்றிய வரலாற்றைப்பார்ப்போம்.

பாண்டி நாட்டில் தமிழ்ச்சங்கப்புலவர்கள் தம் புலமைச்செருக்கால் கர்வமுற்றிருந்தார்கள்.சிவன் அவர்களின் அகந்தையை அடக்க நான் முகனை திருவள்ளுவராகவும்,திருமாலை இடைக்காடராகவும்,கலைமகளை ஓளவையாராகவும் உலகில் அவதரிக்கப்பணித்தார்.

முதல் பதிவு இங்கே கிளிக்

அகத்தியர் கடற்கன்னியை மணந்து பெருஞ்சாகரன் என்ற மகனைப்பெற்றார்.அவன் திருவாரூர் புலைச்சி என்பவளை மணந்து பகவன் என்னும் மகனைப்பெற்றெடுத்தார்கள்.

பிரம்ம குல தவமுனி அருண்மங்கை என்ற பெண்ணை திருமணம் செய்து பெண்மகவைப்பெற்றெடுத்தார்கள்.பின் அப்பிள்ளையை விட்டு தவஞ்செய்யச்சென்றுவிட்டார்.பின்னர் அப்பிள்ளையை உறையூர் சேரியில் வாழும் பெரும்பறையன் என்பவன் எடுத்துவளர்த்தான்.ஒரு நாள் திடீரென உறையூரில் மண்மாரி பொழிந்து ஊரே அழிய அப்பெண்பிள்ளை மட்டும் தப்பிக்கொண்டது.பின்னர் அப்பிள்ளையை  நிதியையன் என்பவன் எடுத்துவளர்த்தான்.
இன் நிலையில் அந்தணனாகிய பகவன் சத்திரத்தில் தங்கியிருக்க நிதியையனின் வளர்ப்புமகள் பகவனை நெருங்கினாள். நீ புலைச்சியா என கூறி சட்டுவத்தால் தலையில் இரத்தம் வரும்படி அடித்துத்துரத்தினான் பகவன்.
சில வருடங்களின் பின் மீண்டும் பகவன் அச்சத்திரத்திற்கு வரும்போது அச்சிறுமி பருவ வயதில் அழகான சிறுமியாக மாறியிருந்தாள்.உடனே பகவன் காதல்வயப்பட்டு அவளைத்திருமணம் செய்துகொண்டான்.திருமணமாகி 5 ஆம் நாள் மனைவி நீராடியபோது தலையில் உள்ள வடுவுக்கு காரணம் கேட்டான் பகவன்.அவள் நடந்ததைக்கூற அதிர்ச்சியடைந்த பகவன் ஆதியாள் (பழைய பெண்)என கூறி அவளை வெறுத்து ஒதுக்கினான்.இதனால் அவள் ஆதி என அழைக்கப்படலானாள்.ஆனால் அவள் விட்டு செல்லாது வலிந்து பின் தொடர்ந்தாள்.

இதனால் சேர்ந்துவாழ சில நிபந்தனைகளை வைத்தான் பகவன்.பிறக்கும் குழந்தைகள் அத்தனையையும் பிறக்கும் இடத்திலேயே விட்டுவிடவேண்டும் என்பதுதான் அன் நிபந்தனை.அதற்கு ஆதி சம்மதித்தாள்.தம்பதியருக்கு முதலாவது குழந்தையாக பிறந்தவர்தான் ஓளவையார்.ஆதி தன் குழந்தையை பிரிய மிகவும் வருந்தும்போது தன் தாய் தன்னை பிரிய வருந்துகிறாளே என்று தாயை சமாதானப்படுத்த குழந்தை ஒரு பாடல் பாடியது.

"இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்டசிவ னும்செத்துவிட்டானோ?முட்ட முட்ட 
பஞ்சமே ஆனாலும்,பாரம் அவனுக்கு அன்னாய்
நெஞ்சமே அஞ்சாதே நீ"

இவ்வாறு ஆதியும் பகவனும் யாத்திரை செல்லும் வழியில் ஒவ்வொரு பிள்ளைகளாக 6 பிள்ளைகளைப்பெற்றெடுத்தார்கள்.உப்பை,அதியமான்,உறுவை ,கபிலர்,வள்ளி,வள்ளுவர் இவர்கள்தான் அந்த 6 குழந்தைகள்.இவர்கள் ஒவ்வொருவரையும் தாய் ஆதி பிரிய வருந்தியபோது ஒவ்வொரு குழந்தையும் ஓளவையைப்போல் பிறந்தவுடன் தாய்க்கு ஆறுதல்கூறிப்பாடல் பாடின.என்று கூறுகின்றது திருவள்ளுவர்கதை.


ஆனால்  வாகீச முனிவரின் ஞானாமிர்தம் என்னும் பிற்கால நூலில் ஓளவையின் தந்தை யாளிதத்தன் என்னும் மறையோன் என்றும்,தாய் ஆதப்புலைச்சி என்றும் கூறப்பட்டுள்ளது.

"யாளி-கூவற் றூண்டு மாதப் புலைச்சி
காதற் காசனி யாகி மேதினி
யின்னிசை எழுவர்ப் பயந்தோ ளீண்டே"
யாளிதத்த முனிவன் தன்னால் வெட்டுண்ட கிணற்றிலே வீழ்த்தப்பட்ட அறிவில்லாப்பெண்ணை ஒரு பிராமணன் எடுத்து கொண்டுசென்று உத்தரபூமியிலே வளர்த்து இவனுக்கே பின்னர்கொடுக்க இவனுக்கு அவள் காதலித்த பார்ப்பனியாய் இன் நிலவுலகின் கண்ணே இனிய கீர்த்தி பெற்ற கபிலர் முதலிய பிள்ளைகளை ஈங்கு பெற்றாள்.

கபிலர் கபிலர் அகவலில் ஆதி என்னும் புலைச்சிக்கும் பகவன் என்னும் அந்தணனுக்குமிடையில் பிள்ளைகளாகத்தானும் ஏனைய அறுவரும் பிறந்ததாகக்குறிப்பிட்டுள்ளார்.


அருந்தவ மாமுனி யாம்பக வற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கட்பெரும் புலைச்சி
ஆதி வயிற்றினி லன்றவ தரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே
என்னுடன் பிறந்தவ ரெத்தனை பேரெனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்
------------------------------------
ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே
வண்ணா ரகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்திற் கள்விலைஞர் சேரியில்
சான்றா ரகந்தனில் உறவை வளர்ந்தனள்
நரப்புக் கருவியோர் நண்ணிடு சேரியில்
பாணரகத்தில் ஒளவை வளர்ந்தனள்

அபிதான சிந்தாமணியில் தரப்பட்டுள்ள ஒரு பாடலிலும் இதே கருத்தைக்காண முடிகின்றது.

கபிலர் அதிகமான் கார்க்குறவர் பாவை
முகிலனைய கூந்தல் முறுவை-நிகரிலா
வள்ளுவர் அவ்வை வயலூற்றுக் காட்டிலுப்பை
யெண்ணில் எழுவர் இவர்


உடன் பிறந்தவர்கள் என கூறபப்டுபவர்களுள் வள்ளுவர்,அதியமான்,கபிலர் போன்றவர்களே சங்க நூல்களில் வருவோர்.எனினும் இவர்கள் பிறந்த ஊர்,குடிகள் வேறுவேறானவை.
கபிலர் அந்தணர்,வள்ளுவர் வள்ளுவ குடி,அதியமான் சேரர் குடியில் பிறந்தவன்.இவற்றின் காரணமாக வள்ளுவர்,கபிலர் ஓளவையார்,அதியமான் என்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்பது புனைகதைஎன நம்பப்படுகின்றது.

ஒளவையைப்பற்றி மற்றொருவரலாறு
வேதமொழி என்ற பெரியவர் ஒருவர் முன்னாளில் வாழ்ந்தார் அவருக்கு போராளி என்றபெயருடைய புதல்வன் ஒருவன் இருந்தான்.அவன் 12 வயதை அடையும்போது அதே ஊரில் இழிகுலத்தில் ஒருவனுக்கு பெண்குழந்தை ஒன்றுபிறந்தது.அக்குழந்தையை தன் மகனுக்கு பின்னாளில் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று அப்பெரியவர் சிந்தித்தார்.தன் மகனிடம் அக்குழந்தையில் ஏதாவது அடையாளம் இருக்கின்றதா எனப்பார்த்துவா எனக்கூற அவன் பார்த்துவந்து தொடையில் கறுப்பி நிற மச்சம் இருப்பதாக வந்துகூறினான்.குழந்தை பிறந்த மாலை நேரத்தில் சிறிய விண்மீன் ஒன்று எரிந்தவண்ணம் வந்து விழுந்தது இதை ஊரார் தீய சகுனமாகக்கருதினர்.குழந்தை பிறந்திருப்பது ஊருக்கு நல்லதல்ல குழந்தையை கொன்றுவிடுமாறு தந்தைக்கு கட்டளையிட்டனர்.ஆனால் அவன் கொல்லாமல் ஒரு தெப்பத்தில் குழந்தையை காவேரி ஆற்றில் விட்டுவிட்டான்.குழந்தை ஆற்றில் வழிபட்டுக்கொண்டிருந்த பார்ப்பனன் கையில் சிக்கியது அவன் குழந்தைவரம் கிடைக்கப்பெறாத அவன் அக்குழந்தையை எடுத்து வளர்த்துவந்தான் சிலவருடங்களில் போராளி பார்ப்பனன் இல்லத்தில் சென்று தங்கினான் அப்போது போராளியின் நல்ல குணத்தைக்கண்ட பார்ப்பனன் தன் மகளை(வளர்ப்புமகளை) அவனுக்கே திருமணம் செய்துவைத்தார்.பின்னர் ஒரு நாள் குளிக்கும்போது மச்ச அடையாளத்தைப்பார்த்து இவள் ஆதியாள் என்று அறிந்து வீட்டை விட்டு ஓட அப்பெண்ணும் பின்னாலேயே ஓடினாள் பின்னர் அழுதுகொண்டு கணவன் சென்ற பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது அவ்வழியால் வந்த பார்ப்பனன் ஒருவன் அவளது நிலைகண்டு இரங்கி அவளை தன் மகள்களுடன் சேர்த்துவளர்த்துவந்தான் தான் மரணிக்கும் தறுவாயில் தன் சொத்துக்களில் ஒருபங்கை தன் வளர்ப்பு மகளுக்கு எழுதிவைத்துவிட்டு சென்றான்.அவள் அச்சொத்துக்களைக்கொண்டு காசியில் அன்னதான சத்திரம் ஒன்றை அமைத்து அதை நடத்திவந்தாள் அப்போது போராளி அங்குவந்து உணவு உண்டான் இருவருக்கும் தாம் யார் எனத்தெரிந்திருக்கவில்லை.ஆனால் அப்பெண் தன் வரலாற்றை அவனிடம் கூற அவள் தன் மனைவி என்பதை தெரிந்துகொண்டு அடுத்த நாள் சொல்லாமல் வெளியே செல்லமுற்படுகின்றான்..அய்யா என் கணவர் சொல்லாமல் விட்டுசென்றது போலவே நீங்களும் செல்கின்றீர்களே என்று கேட்க  நான்தான் உன் கணவன் என ஒத்துக்கொள்கின்றான் ஆனால்  நான் உன்னை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் பிறந்த குழந்தைகளை பிறக்கும் இடங்களிலேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்று கட்டளையிடுகின்றான். அப்பெண்ணுக்குப்பிறந்த முதல் குழந்தை ஓளவையார்.

தமிழ்க்கலைக்களஞ்சியத்தில் ஓளவையார் இருவர் என கூறப்பட்டுள்ளது.ஒருவர் சங்ககாலத்தவர் மற்றயவர் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர்.ஆனால் பொதுவாக ஓளவையார் மூவர் என்றும் கூறப்படுகின்றது.மூன்று காலங்களில் ஓளவையார் வாழ்ந்தார் என்று கூறப்படுகின்றது.ஒருவர் சங்ககால ஓளவையார்,மற்றயவர் இடைக்கால ஓளவை,மற்றயவர் பிற்காலத்து ஓளவையார்.எது எப்படியோ ஒவ்வொன்றாக சங்ககாலத்தில் இருந்து பார்த்துவிடுவோம்.

சங்ககால ஓளவையார்...

இவர் கி.பி 2 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்தவர்நற்றிணையில் 7 பாடல்களும், குறுந்தொகையில் 15 பாடல்களும், அகநாநூற்றில் 4 பாடல்களும், புறநாநூற்றில் 33 பாடல்களுமாக ஓளவையாரின் 59 பாடல்கள் சங்க இலக்கியங்களுள் அடங்குகின்றன, .சங்க கால ஓளவையார் ஓர் விறலி எனக்கூறப்படுகின்றது.விறலி என்றால் பொருள்விளங்கும் வகையில் அபிநயத்துடன் ஆடிக்காட்டுபவள் என்று பொருள்.மை தீட்டிய கண்களுடன் அழகான அணிகலன்களையும் ஓளவை அணிந்திருந்தார் எனவும் கூறப்படுகின்றது.இந்த ஓளவையினால் பாடல்பெற்ற அரசர்கள் பாரி,வள்ளல்,வேந்தர், நாஞ்சில் வள்ளுவர் போன்றவர்கள்.இந்த ஓளவைதான் அதியமானிடம் அதாவது அதியமான் நெடுமான் அஞ்சியிடம் நீண்ட நாள் உயிர்வாழும் நெல்லிக்கனியைப்பெற்றவர்.
வேட்டைக்கு சென்ற அதியமான்  நீண்டகாலம் வாழவைக்கும் ஆற்றலைக்கொண்ட கரு நெல்லியை அதன் பயன் என்னவென்று கூறாது ஓளவையிடம் உண்ணக்கொடுத்தான்.உண்டபின்னர் இதைப்பற்றி அறிந்த ஓளவை அதியமானைப்புகழ்ந்து பாடும் பாடல் புறனானூறில் இருந்து...

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கலந்த கழல்தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியல் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

சங்ககால ஓளவையார் என்ன சமயம் என்பதிலும் குழப்பம் உள்ளது.காரணம் சங்க காலத்தில் சைவ,வைணவ,சமண சமயங்கள் இருந்தன.ஆனாலும் ஓளவையார் சைவ சமயம் என்பதற்கு மேலே ஓளவைபாடிய பாடலே ஒரு ஆதாரமாகக்கொள்ளப்படுகின்றது.

"நீல மணிமிடற்று ஒருவன்போல"

இதில்  நீல மணிமிடற்று  என்ற சொல் சிவனைக்குறிக்கின்றது.ஓளவை சைவராக இருப்பதற்கு இப்பாடல் ஆதாரம் அப்படி இல்லையானால் ஓளவையார் பிற சமயக்காழ்ப்புணர்ச்சி அற்றவர் என்பதற்கு இப்பாடல் ஆதாரம்.

அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றதும் இதே ஓளவைதான்.அங்கு தொண்டைமானை புகழ்வதுபோல் இகழ்ந்தார் என்பது வேறுகதை.

 இங்கே உள்ள ஆயுதங்கள் எல்லாம் மயில் பீலி அணிந்து, மாலை சூட்டி, நெய்பூசப்பட்டு காவல் நிறைந்த உன்னுடைய அரண்மனையிலே அழகாக இருக்கின்றன. ஆனால், இருந்தால் உணவுகொடுத்தும், இல்லையென்றால் இருப்பதைப் பகிர்ந்தும் உண்ணுகின்ற இயல்புடையவனும், ஏழைகளின் தலைவனுமாகிய எங்கள் மன்னன் நெடுமான் அஞ்சியின் வேல்களோ பகைவர்களைக் குத்தியதனால் நுனி மழுங்கிச் சிதைந்து கொல்லனின் உலைக்களத்திலேயல்லவா கிடக்கின்றன

இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகர் அவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே.

சங்ககால ஓளவையார் பாணர் மரபைச்சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.

பாணர் குடியில் பிறந்தவர் என கூறப்படுவதற்கான காரணங்கள்..

பகை நாட்டு அரசன் ஒருவன் ஓளவையிடம் என்னோடு பொருந்தக்கூடிய அரசன் எவனாவது உன் நாட்டில் உளனோ?என்று கேட்டிருக்கின்றான்.அவன் ஓளவையை விறலி என்றுதான் விழித்திருக்கின்றான்.ஓளவை அதைப்பாடியுள்ளார்.

"இழையணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாணுதல் விறலி
பொருநரும் உளரேநும் அகன்  தலை நாட்டென
வினவலானாப் பொருபடை வேந்தே"

அறவை நெஞ்சத் தாயர் வளரும் என்ற புற நானூறுப்பாடலில்

ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என்
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பல் நாள் அன்றியும்

என்னும் பாடலில் தனது தொழிலைக்குறிப்பிட்டுள்ளார்.

ஓளவை அதியமானிடம் பாடல்பாடி பரிசுபெறச்சென்றபோது அதியமான் பரிசில்கொடுக்காமல் காலம் தாழ்த்தினான்.பாடல் முடிந்ததும் ஓளவை சென்றுவிடுவாரே என்ற கலக்கம்தான் இதற்குகாரணம்.கால தாமதத்தால் கோபமடைந்த ஓளவை கீழ் வரும் பாடலை பாடினார்.

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“

இப்பாடலில் "காவினெம் கலனே  சுருக்கினெம் கலப்பை" என்ற வரியைக்கவனிக்கவேண்டும்

ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.
எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.

அத்துடன் ஓளவையை ஓளவைப்பாட்டி என்று அழைப்பது பொதுவான வழக்கம்.பாட்டி  என்பது பாணன் என்பதன் பெண்பாற் பெயர்,பாடினி,பாட்டி,விறலி என்பவை ஒரே பொருளை உடையவை.

ஓளவையார் பாணர் குலத்தவரல்ல என்ற கருத்தும் நிலவுகின்றது.அவ்வாறு வாதிடுவோர் சில விடயங்களை முன்வைக்கின்றார்கள்

அக்காலத்தில் புலவர்கள் தாம் எக்குலத்தில் பிறந்தவர்களானாலும் பாணர் குலத்தில் பிறந்தவர்களாக பாவனை செய்து யாழ் இசைத்து பாடல் பாடி பரிசு பெறும் வழக்கத்தையுடையவர்கள்.எனவே பாணர் என்ற கருத்துடைய ஓளவையின் பாடல்களைக்கொண்டு ஓளவையார் ஒர் பாணர் என்ற முடிவுக்கு வரமுடியாது.

வேளாளர் எனக்கருதப்படும் அரிசில்கிழார் போகனைப்பாடிய பாடல் ஒன்றில் சீறியாழ் செவ்வழி பண்ணி நின்வன்புல நன்னாடு பாட என பாடியுள்ளார்.

உண்மையில் ஓளவையின் குலம் என்னவென்பது ஒரு முக்கிய பிரச்சனை இல்லை.பாண் குடி இனத்தவராக இருந்தாலும் ஓளவை மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தமையால்தான் பெண்ணாக இருந்தும் அதியமானுக்காக  தொண்டைமானிடம் தூது சென்றுள்ளார்.அத்துடன் அதியமானின் மகன் பொகுட்டெழினியின் அவைக்களப்புல்வராக இருந்து அதியமானின் மரணத்தின் பின் அரசியல் நுணுக்கங்களை அருகில் இருந்தே சொல்லிக்கொடுத்தவர் ஓளவையார்தான்.


புற நானூறில் மாங்குடிக்கிழார் என்பவர் அக்காலத்தில் சிறந்துவிளங்கிய மதிக்கப்பட்ட குடிகளாக சில குடிகளைக்குறிப்பிட்டுள்ளார்.துடியன்,பாணன்,பறையன்,கடம்பன்.இவற்றுள் பாணன் என்பதும் மதிக்கப்பட்ட குடியாகத்தான் இருந்துவந்தது.

இதில் ஒரு விடயத்தைக்கவனிக்கலாம் பறையன் என்ற குடியும் மதிக்கப்பட்ட குடியாகத்தான் இருந்துவந்தது.அன்றைய காலத்தில் குடி என்ற சொல்லே இருந்தது சாதி என்ற பெயர் இல்லை அத்துடன் செய்யும் தொழிலை வேறுபடுத்தவே குடிகள் பயன்படுத்தப்பட்டனவே அன்றி இன்றையகாலங்களில் பின்பற்றப்படும் மிருகத்தனமான வேற்றுமைகள் தீட்டுக்கள் போன்றவை அன்று இல்லை.பறை என்பது தமிழர் ஆதி வாத்தியங்களுள் முதன்மையானதாகும். அதை தயாரிப்போரும் வாசிப்போரும் ஆதிக்குடிகளாக மதிப்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள். பிராமண ஆதிக்கம் வந்து, மாட்டை உண்பது, கொல்லுவது எல்லாம் விலக்கப்பட்டதாக ஆக, அதோடு சம்பந்தப்பட்ட அந்த  குடியும் தாழ்குடியானதானது.

கபிலரின் வருணாசிரம எதிர்ப்புப்பாடல்களைக்கொண்டு சங்க கால சமூகம் வருணப்பாகுபாட்டைக்கொண்டிருந்தது என கூறமுடியாது என கூறப்பட்டாலும் புற நானூறில் ஒரு பாடல் உள்ளது

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்,
கீழ்ப்பா லொருவன் கற்பின்,
மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான் என்ற குறள் பிறப்புவழிப்பாகுபாட்டை ஏற்கமறுத்து சோசலிஸத்தைப்போதிக்கின்றது.இவற்றைக்கொண்டு சங்ககாலத்திலும் ஏற்ற தாழ்வுகள் சிறிதளவு இருந்தது என அறியலாம்.

முருகதாசர் தான் இயற்றிய புலவர் புராணத்தில் காரைக்கால் அம்மையார் சிவனிடத்தில் பேயுருவை வேண்டிப்பெற்றதுபோல் ஓளவை தன் இளமைக்காலத்திலேயே முதுமையை வேண்டிப்பெற்றுக்கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்காலத்தில் திருக்கோவலூர் அரசனாக இருந்த மலையமான் திருமுடிக்காரி என்பவன் மீது போர் தொடுத்து வெற்றிகொண்டான் அதியமான் போரில் தோற்ற திருமுடிக்காரி பெருஞ்சேரலிரும்பறையை நாடி உதவி கேட்க அவனும் இணங்கினான் இருவரும் அதியமான் மீது போர்தொடுத்தார்கள்.அப்போரில் பெருஞ்சேரலிரும்பறையின் கூரியவேல் அதியமான் நெஞ்சை துளையிட்டு அப்பால் சென்றது அதியமான் வீரமரணமடைந்தான்.அதியமான் போரில் மாணடதும் உயிர் நீத்த அதியமானின் சடங்குகள் நடந்தபோது ஓளவை உருகிப்பாடியபாடல்
இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?

பாடல் இறுதியில் இனி காலை மாலை இல்லையாகுக இனி என் வாழ் நாளும் இல்லாது மறைந்து ஒழிவதாக என மிகவும் மனம் வருந்திப்பாடினார்.தான் இறக்கவேண்டும் என்று பாடிய ஓளவை ஏன் இறக்கவில்லை.பாரி இறந்ததும் அவன் மீது கொண்ட அன்பினால் கபிலர் உயிர் நீத்தார் ஆனால் ஓளவை ஏன் இவ்வாறு செய்யவில்லை.காரணம் அதியமானின் மகன் பொகுட்டெழினிக்கு அரசவைப்புலவராகவும் அரசியல் சகடங்களை கற்பிப்பவாராகவும் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தது ஓளவைக்கு அத்துடன் கணவன் இறந்தால் ஒரு பெண் உடன்கட்டையேறும் வழக்கம் இருந்ததே தவிர வேறோர் ஆடவன் இறந்ததும் தன்னை மாய்க்கும் வழக்கம் புறம்பானதாக கருதப்பட்டது.

வள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கு சங்ககாலப்புலவர் இடைக்காடர் 

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத்தறித்த குறள்"

என்று புகழுரைவழங்கக்கேட்ட ஓளவை அதனினும் சிறப்பாக புகழுரை வழங்குவதற்காக பாடியதுதான்

"அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக்
குறுகத்தறித்த குறள்"

கம்பருக்கும் ஓளவையாருக்குமிடையில் பல விவாதங்கள் நடந்துள்ளன.

ஒரு முறை ஓளவை வீதியால் நடந்துசெல்லும்போது களைப்படைந்து ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தார்.அது சிலம்பி என்ற தாசியின் வீடு அவள் ஒரு பாட்டி தனது வீட்டின் திண்ணையில் களைத்து அமர்ந்திருப்பதைக்கண்டு தான் குடிக்க வைத்திருந்த கூழை ஓளவைக்குக்கொடுத்தாள்.அப்போது ஓளவை சுவரில் ஒரு பாடலின் ஒருவரி எழுதியிருப்பதை அவதானித்தார்.

“தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே மண்ணாவதுஞ் சோழ மண்டலமே” இது என்னவென்று கேட்க சோழ மன்னனின் அவைக்கழப்புலவர் கம்பரின் வாயால் புகழப்பட்டவர்கள் சீரோடும் சிறப்போடும் வாழுகின்றார்கள் என்பதைக்கேட்டு.கம்பரிடம் ஒரு பாட்டைக்கேட்டிருந்தேன் அதற்காக என்னிடமிருந்த நான் கஸ்ரப்பட்டு சேர்த்துவைத்திருந்த 500 பொற்காசுகளையும் கொடுத்துவிட்டேன்.ஆனால் அவர் ஒருவரியை மட்டும் எழுதிவிட்டு ஒரு பாடலுக்கு 1000 பொற்காசுகள் என்று கூறிசென்றுவிட்டார் சேர்த்துவைத்திருந்த பணம் முழுவதையும் இழந்ததால் நான் வறுமையில் வாடுகின்றேன் என்றும் கூறி அழுதாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார்  வரிகளின் கீழே
“பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு” என எழுதினார்.ஓளவை அவளைப்பாடியதால் அவள் புகழ்பரவி விரைவிலேயே செல்வச்சீமாட்டியானாள் சிலம்பி.

இந்த விடயம் கம்பரின் காதுக்கு எட்டியது தான் 500 பொற்காசுகளுக்காக ஏழையாக்கியவளை ஓளவை செல்வசீமாட்டியாக்கிவிட்டாரே என்று கோபப்பட்டார்.இதன் காரணமாக ஓளவை அவைக்கு வரும்போது டீ என்ற சொல் வருமாறு சிலேடையாக ஒரு வசனத்தைக்கூறினார்.

ஒரு கால், நாலிலைப் பந்தலடீ(ஆரைக்கீரையைக்குறித்துத்தான் கம்பர் இவ்வாறுகேட்டார் கீரை ஒரு காலில் நிற்கும் 4 இலைகளும் அதற்கு உண்டு ஆனால் "அடி" என்னும் இழி சொல்லால் அல்லவா ஓளவையைக்கேட்டார்)

உடனே ஓளவை ஒரு பாடல் பாடினார்....(இப்பாடலை எனது தமிழ் ஆசான் படித்துக்காட்ட நான் கெக்கே பிக்கே என்று சிரித்துவாங்கிக்கட்டிக்கொண்டேன்)

“எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க் கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாயது”
தமிழில் “அ” அன்பது எண் 8ஐக் குறிக்கும் “வ” 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் “அவ” என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் “அவ லட்சணமே” எனப் பொருள்படும். எமனேறும் பரி எருமை எமனேறும் பரியே என்றால் “எருமையே” எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் “மூதேவியின் வாகனமே” என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் “குட்டிச் சுவரே” என்று பொருள் படப்பாடியுள்ளார்.

ஒருமுறை கம்பரை நோக்கி சோழன் உலக இன்பங்களில் சிறந்தது எதுஎனக்கேட்டான். அதற்குக்கம்பர்
"கங்கைநீர் அதனின் மிக்க கடவுள் நீர் எங்குமில்லை
வெங்கதிர் ஒளியே யன்றி வேறோர் ஒளியுமில்லை
எங்கணும் தாயைப்போல இனியதோர் உறவுமில்லை
மங்கையர் சுகமே யன்றி மறுசுகம் இல்லை மன்னா! என்று பாடினார். இதனைக்கேட்ட ஓளவையார் பாட்டுமுழுவதும் குற்றமுடையது எனக்கூறினார். எவ்வாறு என வினவினான் சோழன்.

விண்ணின் மழையே அல்லால் வேறொரு நதியுமில்லை
கண்ணினின் ஓளியே யல்லால் காணுமோர் ஓளியுமில்லை
எண்ணிடிற் பொருளைப்போலே இனியதோர் உறவுமில்லை
உண்டிற் சுவையேயல்லால் ஒரு சுகம் இல்லை மன்னா எனப்பாடினார் ஓளவை.

பிறிதொரு முறை சோழன் ஓளவையின் வாய்மொழியை கிளறிமகிழவிரும்பியவனாய் கம்பரைப்போல் பெரிய நூலகளைப்பாடத்தக்க புலவர்கள் இருக்கின்றார்களா எனக்கேட்டான்.
அதற்கு ஓளவை

வான்குருவியின் கூடு வல்லாக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரித்தால்-யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமைசொல வெண்டாங்காண்
எல்லார்க்கு மொவ்வொன் றெளிது.

சித்திரமுங்க் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்- நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்புந் தயையும்
கொடையும் பிறவிக்குணம்.

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல் நிறைய மோதிரம் வேண்டும்-அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
 நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே- நாணாமற்
பேச்சுப்பேச சொன்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

என்ற வெண்பாக்கள் மூலம் பதிலளித்தார்.

ஒரு நாள் சோழன் அவையிலே கம்பர் முதலியோர் கூடியிருக்கும்போது ஓளவையார் அனைவரையும் பார்த்து..
"கல்வி யுடையீர் கருங்கா நகத்திடையே
 நெல்லி யிலையுதிர்ந்து நிற்பதெவன்? என்று கேட்டார்.
உடனே கம்பர் 
வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும்
வல்லாளன் சுற்றம்போல் மாண்டு
என்று பதில் அளித்தார். உடனே ஓளவை நான் அவையாரைப்பார்த்துத்தானே கேள்வியைக்கேட்டேன் நீவீர் ஏன் விடையளித்து என் பாட்டை முடித்தீர்? இதுபோன்றுதான் நான் நீவிர் சிலம்பியின் வீட்டு சுவரில் எழுதிவைத்த பாட்டையும் முடித்தேன்.இத்தகைய செயல்கள் அறிவு நிரம்பிய அனைவருக்கும் இயல்பேயாகும் நீவீர் என்னிடத்தில் பகைமை பாராட்டியது நும் அறிவுடமைக்கு அழகாகுமோ? என்று கேட்டார்.இச்சம்பவத்திற்குப்பின்னர் இருவரும் நண்பர்களாயினர்.

தொடரும்....

ஓளவையார் ஒருவர்தானா?-03

$
0
0
உறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்செருக்குடையவர் யாரையும் மதிக்கமாட்டார் ஓளவையையும் அவர் மதிக்கவில்லை.அவரது செருக்கை அடக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்தார் ஓளவையார்.ஒருசமயம் மன்னனது அவைக்குச்சென்றிருந்தபோது அங்கிருந்த புகழேந்திப்புலவருக்கு மதிப்புக்கொடுத்துவிட்டு ஒட்டக்கூத்தரை மதியாது அமர்ந்துவிட்டார். உடனே கூத்தர் "கிழவி நீ என்னை  அவமதிக்கக்காரணம் என்ன? என்றார்.உடனே நும்மை விட அறிவிற் சிறந்தவராதலின் அவ்வாறு செய்தேன்" என்றார் உடனே கூத்தர் எம்மிருவரது அறிவின் ஏற்றதாழ்ச்சிகளை உன்னால் அளவிடமுடியுமா?என்று கேட்க.ஓளவை இப்போதே அளவிட்டுக்காட்டுகின்றேன் நற்றாய் இரங்கற்றுரையில் சோழனை முன்னிலைப்படுத்தி ஈற்றடியில் திங்களின் பெயரை மூன்று முறை அமைத்து நீ ஒரு செய்யுள் பாடுபார்க்கலாம் என்றார் ஓளவை.
உடனே கூத்தர் செய்யுளை விரைவாக எழுதிப்பாட ஆரம்பித்தார் அதில் தன்னைக்குழந்தையாகவும் ஓளவையை பேதையெனவும் வருமாறு...

வெள்ளத் தடங்காச் சினவாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்துமழைத்
துளியோ டிறங்குஞ் சோணடா

கள்ளக் குறும்பர் குலமறுத்த
கண்டா அண்டர் கோபாலா
பிள்ளை மதிகண் டப்பேதை
பெரிய மதியு மிழந்தாளே

என்று பாடினார்.கூத்தர் நினைத்தார் தான் பாடி ஓளவையை அவமானப்படுத்திவிட்டதாக ஆனால் ஓளவையை இகழவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்ததால் தான் இழைத்ததவற்றை கூத்தர் அறிந்திருக்கவில்லை. 3 மதிகள் வரவேண்டும் அதில் ஒருமதி தவறிவிட்டது.
ஒட்டா ஒருமதி கெட்டாய் என்று தாமும் இருபொருள் அமைய புகழேந்தியைப்பாடுமாறு கேட்டார் ஓளவை.

பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின்  கனியைப் பறித்தொன்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக்கொண் டறியும் தமிழ்நாடா
கொங்கார்க் கமரர் பதியளித்த
கோவே ராச குலதிலகா
வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும்
மெலிந்த பிறைக்கும் விழிவேலே
என்று புகழேந்திபாட ஒட்டக்கூத்தர் தலைகவிழ்ந்தது செருக்கு அகன்றது.


ஓளவையார் ஒருவர்தானா?-02




சங்ககாலத்தில் இருந்த ஓளவையார் ஒருவர்.அதன் பின்னர் அடுத்த ஓளவையார் 10 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்று கருதப்படுகின்றது.இந்த ஓளவையார்தான் அங்கவை,சங்கவைக்கு மணம் முடித்துவைத்தவர்.

சங்க கால ஓளவையாரும் அடுத்துவரும் ஓளவையார்களும் வேறானவர்கள் என்பதற்கு பாடல் நடைகள்வேறானவையாகக்காணப்படுகின்றன என காரணம் கூறப்படுகின்றது.ஓளவையின் தனிப்பாடல் தொகுப்பிற்கு இவ்வாறு காரணம் கூறப்படுகின்றது.ஓளவையாரின் பெயரில் காணப்படும் தனிப்பாடல்கள் 2 வகை ஒரு வகை வரலாற்றுச்சிறப்புக்களைக்கூறுபவை,மற்றயது உபதேசமொழிகளைக்கூறுபவை.வரலாற்று நிகழ்ச்சிகளைக்கூறும் பாடல்கள் யாவும் ஒரே காலத்திற்கு உரியவை அல்ல.சில பாடல்கள் சங்க கால நிகழ்ச்சிகள் பற்றிக்கூறுவன சில பாடல்கள் கம்பர் கால வரலாறுபற்றிக்கூறுவன இரண்டிற்குமிடையில் 1000 ஆண்டுகால வேறுபாடு உண்டு.

கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்கள்தான் அங்கவை,சங்கவை,பாரியின் பால்ய காலத்தில் இருந்தே நண்பராக இருந்தவர் புலவர் கபிலர்.பாரி நகர்வலம் சென்றபோது பற்ற எதுவுமில்லாது முல்லைக்கொடி வீதியில் கிடப்பது கண்டு தன் தேரையே அதற்காக கொடுத்தகதை மிகவும் பிரபலமானது.
மூவேந்தரான சேர,சோழ பாண்டியர் பாரியின் புகழினால் கோபம் கொண்டு பாரி ஆண்ட பறம்புமலையை படையெடுத்து முற்றுகையிட்டனர்(மூவேந்தர் பாரியின் புகழின் மீது கொண்ட பொறாமையால் படை எடுத்தனர் என்பதிலும் கருதுவேறுபாடுகள் உண்டு)
அப்போது உணவுத்தேவைக்காக கபிலர் பல கிளிகளை  நெற்கதிர்களை பறித்துக்கொண்டுவருவதற்குப் பயிற்றுவித்து மக்களுக்கு உணவளித்ததாகவும் கதைகள் உள்ளது.இவற்றினால் பல காலமாக முற்றுகையிட்டும் ஏதும் பலனளிக்காகதன் காரணமாக மூவேந்தர்கள் கூத்தர்கள் போல் வேடமணிந்து சென்று பாரியை கொன்றனர்.பாரி இறந்ததற்கு கபிலரும் ஒரு வகையில் காரணம் என்றும் கூறப்படுகின்றது.பாரி தொடர்பாக வவ்வால்  ஒரு பதிவை இட்டுள்ளார்.இங்கே கிளிக்

பாரி இறந்ததும் கபிலரும் இறக்கத்துணிந்தார் ஆனால் பாரி தம் மகள்களை கபிலரிடம் ஒப்படைந்து இறந்தமையாம் தமக்கு கடமை இருப்பதன் காரணமாக கபிலர் இறக்கவில்லை.கபிலர் தம் வளர்ப்பு மகள்களான அங்கவை சங்கவை இருவருக்கும் மணம் முடிக்க பலரிடம் கேட்க மூவேந்தர் மீது கொண்ட பயத்தின் காரணமாகவோ அல்லது வேறுகாரணங்களுக்காகவோ மறுத்துவிட்டனர்.

பாரிமகளிர் தாம் தந்தையுடன் இருந்த காலத்தில் நன்றாக இருந்ததாகவும்.இறந்தபின்னர் துன்பப்படுவதாகவும் பாடலொன்றைப்பாடியுள்ளனர்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.


    “மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் 
வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் 
பெற்றிருந்தோம்.     எங்களுடைய மலையையும் பிறர் 
கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக் 
காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் 
முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் 
கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”,
    மூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக் 
கொன்றதை    உணர்த்த வென்றெறி முரசின் வேந்தர் என 
இகழ்ச்சியாற் குறித்தனர்.

பாரிக்கு மகள்கள் ஒருவர்தான் இருவரல்ல என்பது தொடர்பாகவும் வாதங்கள் இருக்கின்றன.
நெடுந்தேர் கொள்க எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் (புறநானூறு 200)
என்ற பாடலிலும் மகளிர் என்பது காட்டப் பெற்றுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் எல்லாம் பாரிமகளிர் என்ற பன்மை இடம் பெறவில்லை

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் இப்பாடலில் இடம் பெற்றுள்ள யாம், எந்தை, எம், ஏம் ஆகிய சொற்கள் பன்மை நிலைப்பட்டனவாகத் தோன்றுகின்றன.பாரி மகளிர் ஒருவரா இருவரா தொடர்பாக திண்ணையில் வெளியிடப்பட்ட பதிவுஇங்கே கிளிக்.


பின்னர் கபிலர் பாரிமகளிரை திருக்கோவிலூர் பார்ப்பானிடத்தே அடைக்கலமாகக்கொடுத்துவிட்டு வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து இறந்தார்.


சங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்..


புதுப்பித்தலுக்குப் பிறகு எடுக்கப்பெற்ற படம்(11.02.2006)

புதுப்பித்தலுக்கு முன் எடுக்கப்பெற்ற படம்
 (படங்கள்முனைவர் மு.இளங்கோவன்)


மழையில் நனைந்து வந்த ஔவைக்கு அங்கவை சங்கவையர் நீலச் சிற்றாடை தந்து பேணினர்.அப்போது ஓளவைபாடியபாடல்






பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் – சேரமான்
வாராயோ என்றழைத்த வாய்மேயும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர். 22
பாரி ஔவையை வழிப்பறி செய்து தன் நாட்டுக்கே மீட்டுக்கொண்ட அன்பும், பழையனூர் அரசன் காரி ஔவையிடம் களைக்கட்டு தந்து தன் நாட்டிலேயே இருக்கச் செய்த அன்பும், சேரமான் ஔவையை வாராயோ என்று பணிமொழியால் அழைத்து வைத்துக்கொண்ட அன்பும், ஔவை மழையில் நனைந்து வந்தபோது மாற்றுடையாக ஏற்கும்படி பாரிமகளிர் அளித்த நீலச் சிற்றாடைக்கு நேர்.

ஔவையார் அவர்களின் கைகளுக்குக் கடகம் செறியும்படி பாடினார்.
மலையமான் மகன் தேவகன் பாரிமகளிரை விரும்பி மணம் செய்துகொண்டான்.
அவர்களின் திருமணத்துக்கு விநாயகன் ஓலை எழுதி அனுப்பினான்.
சேரன் வருக
சோழன் இன்றைக்கு18ஆம் நாள் வருக
பாண்டியன் சீர் கொண்டுவருக
திருமணத்துக்கு வந்திருந்த சேர சோழ பாண்டியர் பனம்பழம் கேட்டனர். ஔவையார் பனந்துண்டம் பழம் வரும்படிப் பாடிப் பெற்றார்.
பெண்ணை ஆற்றில் பாலும் நெய்யும் பெருகி வரப் பாடிப் பெற்று விருந்தளித்தார்.
ஔவை பாட, ஊரில் பொன்மாரி பொழிந்தது. ஔவை மணமக்களை வாழ்த்திப் பாடினார்.
இந்தச் செய்திகளைக் கூறும் தனித்தனிப் பாடல்கள் ஔவையார் பாடல் என்னும் குறிப்புடன் உள்ளன.
பிற்காலத்தில் அங்கவை சங்கவை திருமணம் பற்றிக் கூறுகின்ற அண்ணாமலையார் சதகம் திருமண ஓலை எழுதிய கணபதியின் தந்தை ‘பாரிசாலன்’ எனக் குறிப்பிடுகிறது.

3 ஆவது ஓளவையார் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவரால்தான் ஆத்திசூடிகொன்றை வேந்தன்நல்வழி,மூதுரைஅசதிக்கோவை போன்றவை பாடப்பட்டன.
 இளம்பூரனார்,   நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் தத்தம் உரைகளில் கொன்றைவேந்தன் மூதுரை ஆகிய நூற்களில் உள்ள செய்யுள்களை கையாண்டுள்ளார்கள்.
(ஆனால் நல்வழியை சங்ககாலத்தில் வாழ்ந்த ஓளவையார்தான் இயற்றினார் என்ற கருத்துக்களும் உள்ளன அவற்றை மறுதலிக்கும் கருத்துக்கள்..

பாலும் தெளிதேனும் என தொடங்கும் பாடலில் சங்ககாலத்தமிழர்களிடையே இல்லாத விநாயக வழிபாட்டு முறைபற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேவர் குறளும் எனத் தொடங்கும் காப்புச்செய்யுளில் 8 ஆம் நூற்றாண்டுக்குப்பிற்பட்ட சம்பந்தர்,அப்பர்,மாணிக்கவாசகர்,சுந்தரர் ஆகியோரின் திருவாசகம்,திருமந்திர நூல்களைக்குறிப்பிடுகின்றார்)

தொல்காப்பிய காப்புச்செய்யுள் உரையில் கொன்றைவேந்தன் காப்புச்செய்யுளை எடுத்துக்காட்டக காட்டியுள்ளார் இளம்பூரனார். நல்வழியை ஓளவையார் இயற்றவில்லை வேறு ஒரு பெண்புலவர் ஓளவை என்ற புனை பெயரில் எழுதினார் என்றும் கருத்துக்கள் உண்டு.


4 ஆவது ஓளவையார் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப்படுகின்றார்.இவரால்தான் ஓளவைக்குறள்பாடப்பட்டது.

திருவள்ளுவர் அறம்,பொருள்,இன்பம் ஆகிய முப்பால்களைப்பற்றி திருக்குறளில் குறிபிட்டிள்ளார்.ஆனால்  வீட்டு நெறிபற்றிக்குறிப்பிடவில்லை அதை ஓளவையார் ஓளவைக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் வீட்டு நெறிப்பால்,திருவருட்பால்,தன்பால் என3 அதிகாரங்களும் 310 குறட்பாக்களும் உள்ளன.

விநாயகர் அகவலும் இவராலேயே பாடப்பட்டது.இதில் விநாயகப்பெருமானின் தோற்றம்பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.


அஞ்சு, லயம், முதலான கொச்சைச் சொற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மூஷிக வாகனம் என்பதை இவர் மூடிக வாகனம் எனக் குறிப்பிடுகிறார்



அத்துடன் முருகப்பெருமானிடம் சுட்டபழம் வாங்கியவரும் இவர்தான்.

சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும்  கரியிலும் பரியிலுமெறி  கைலைக்கு செல்லப்புறப்படுவதை அறிந்த ஓளவை தாமும் அவர்களுடன் கைலை செல்வதற்கு பிள்ளையாருக்கான பூசையை அவசரமாகச்செய்ய அவசரம் வேண்டாம் நான் உன்னை கைலைக்கு அழைத்துச்செல்கின்றேன் என்று பிள்ளையார் கூறினார்.அதன் படி தனது துதிக்கையால் ஓளவையை கைலைக்கு சேர்த்தார் என்றும் ஒரு கதை உள்ளது.
அங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ பிள்ளையார் அருளால் வந்தேன் என்று ஓளவைபாடிய  பாடல்


மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை 

முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும் 
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே! 

5 ஆவது ஓளவையார் தமிழறியும் பெருமான் என்ற பெண்ணின்  கதையுடன் தொடர் புடையவர்.

அரசகுமரனும் அரசகுமரியும் காதலர்கள். ஒருவனால் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பேய் வடிவம் கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி அங்கு வந்து தங்குவோரையெல்லாம் அச்சுறுத்தினர். ஒருநாள் ஔவையார் அந்தச் சத்திரத்தில் தங்கினார். பேய்கள் வழக்கம்போல் அச்சுறுத்தத் தொடங்கின. பெண்பேய் கல்வியில் வல்ல பேய். இந்தப் பேய் “எற்றெற்று”என்று சொல்லிக்கொண்டு, காலால் எற்றி ஔவையாரை அறைய வந்தது. ஓளவையார் இவர்களின் கதைகளை முன்பே நன்கு அறிந்தவர்.பேய் ஔவையை எற்ற வர, ஔவை பேயை எற்றப் போவதாகப் பாடினார்






வெண்பா இருகாலில் கல்லாளை, வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதாளை – பெண்பாவி
பெற்றாளே பெற்றாள், பிறர்நகைக்கப் பெற்றாள்,என்(று)
எற்றோ,மற்(று) :எற்றோ,மற்(று) எற்று.

பேய் பயந்து ஓளவையாரை வணங்க ஓளவை அவர்களின் எதிர்காலம்பற்றிக்கூறினார்.அவர் வாக்குப்படி பெண்பேய் தமிழறியும் பெருமான் எனப் போற்றப்படும் பெருமாட்டியாகப் பிறந்தது. அவளது முற்பிறவிக் காதலன் விறகுவெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக்கொண்டிருந்தவனைக் கண்டு காதல் கொண்டு திருமணம் நடந்தேறியது.

இறுதியாக வாழ்ந்த ஓளவையாரால் பாடப்பட்டதுதான் பந்தன் அந்தாதி.பந்தன் அந்தாதி ஓளவையால் பாடப்படவில்லை என்பதற்கு காரணங்கள் கூறப்படுகின்றது.
இந்த நூலில் உள்ள ஒரு பாடல் ஔவையாரையே குறிப்பிடுகிறது.

பந்தன் அந்தாதி உருவான விதம்

நாகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன்.  இவன் நாகன் பந்தன் எனவும் போற்றப்படுகிறான். இவனது தந்தை நாகந்தை  பந்தன் நாகலோகம் சென்று வாணிகம் செய்தான். அப்போது அவனுக்கு நாகராசன் பெருஞ் செல்வத்தோடு இரண்டு அரிய பொருள்களையும் அளித்தான். போர்த்திக்கொண்டால் இளமை மாறாதிருக்கும் பொன்னாடை ஒன்று. உண்டவர் நீடூழி காலம் வாழச்செய்யும் நெல்லிக்கனி மற்றொன்று. பொன்னாடையை ஔவைக்குக் கொடுத்ததுடன் நெல்லிக்கனியில் பாதியைத் தான் தின்றுவிட்டு, மீதிப் பாதியையும் ஔவைக்குக் கொடுத்தான்.
பெற்று மகிழ்ந்த ஔவை பந்தன் அந்தாதியைப்பாடினார்.

எனவே ஓளவையார் என்பவர் ஒருவர்தானா என்பது தொடர்பில் இவ்வாறு பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக வாழ்ந்த அனைத்து ஓளவையார்களுமே தமிழுக்கு மிகப்பயனுள்ளவற்றையே எம்வசம் விட்டுசென்றுள்ளார்கள் என்பது மட்டும்  உண்மை.ஓளவை தமிழுடன் சேர்ந்துவாழ்வாள்......



x men கதாப்பாத்திரங்கள் உண்மையில் இருக்கின்றார்களா?

$
0
0
xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில்  இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை  மனிதப் பரிணாமத்தின் அடுத்த   நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம்  மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம்.
இப்படத்தில் காட்டப்பட்டதுபோன்ற சூப்பர் சக்திகளைக்கொண்ட சூப்பர் ஹியூமன்ஸ் உண்மையில் இருக்கின்றார்களா? இருக்கின்றார்கள்.ஆனால் படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல் முழுமையாக சக்திகளைக்கட்டுப்படுத்துபவர்களாக அல்லாமல் சாதாரண எம்மைப்போன்றவர்களால்  நினைத்துக்கூடப்பார்க்கமுடியாதவற்றை சர்வசாதாரணமாக செய்யும்  மனிதர்கள் அவர்கள்.இவ்வாறான சக்திகளைக்கொண்ட மனிதர்களை தேடி அவர்களால் சாதாரண மனிதர்களை விட அசாத்தியமாக எவற்றை செய்யமுடியும் என வெளியுலகிற்கு கொண்டுவரும் வேலையை செய்கிறார் Stan Lee’.ஸ்ரான்லி பிரபல  கொமிக்ஸ்ஸான மார்வெல் கொமிக்ஸின் முன்னாள்  chairman.எக்ஸ்மான்.ஸ்பைடர்மான்,பென்ராஸ்ரிக் 4 போன்ற பிரபல கதாப்பாத்திரங்களை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.
ஸ்ரான்லீஸ் சூப்பர் ஹியூமன்ஸ் என்னும் பெயரில் தொடராக இது இப்பொழுதும் ஓளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
Stan Lee

சாதாரணமனிதர்களில் இருந்து வேறுபட்ட அசாதாரணமான மனிதர்களைத்தேடும் பணியை Daniel Browning Smith என்ற ஒரு சூப்பர் ஹியூமனிடம்தான் ஒப்படைத்திருக்கிறார் ஸ்ரான்லீ. இவர் உலகின் the most flexible man in the world என்ற பெயர்வாங்கியவர். தன்னைப்போன்ற சூப்பர் ஹியூமன்ஸ்களை தேடும்பணியில் ஈடுபடுகின்றார் டானியல்  தேடும்படலத்தையும் கண்டுபிடிக்கப்படும் அசாதாரமனிதர்களையும் உள்ளடக்கியதுதான் இந்த சீரிஸ்.ஒரு மனிதன் தனக்கு அசாதாரண சக்தி இருக்கின்றது என்று அறிவித்துக்கொண்டாலெல்லான் உடனே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மருத்துவர்கள்,சயின்ரிஸ்ட்போன்றவர்களிடம் அழைத்து சென்று அந்த மனிதனை பரிசோதித்த பின்னர்தான் அவர் சூப்பர் ஹியூமனா இல்லையா என அறிவிக்கப்படுவார்.இல்லைன்னா நித்தியானந்தா போன்றவர்களும் கிளம்பிவிடுவார்கள் குண்டலினி சக்தி இருக்கு காட்டுகிறேன்வா என்று.சீரிஸ்சில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் ஹியூமன்ஸை ஒவ்வொருவராக பார்ப்போம்.முதல் சூப்பர் ஹியூமனை இந்தியாவில் இருந்து தொடங்குவோம்.

எலக்ரோ மனிதன்

இந்தியா கொல்லமைசேர்ந்தவர் ராஜ்மோகன்.இவர் கொண்டிருக்கும் அசாத்தியமான சக்தி தன் உடலினூடாக மின்னோட்டை சர்வசாதாரணமாக ஒரு உலோகம்போல் கடத்துகின்றார்.மின்னை தன் உடலுக்கூடாக கடத்தும்போது இவருக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படாது.சாதாரண ஒரு மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவைவிட 30 மடங்கு அதிகமின்னோட்டத்தை தனக்கூடாக சர்வசாதாரணமாக ராஜ்மோகனால் கடத்தமுடிகின்றது.உச்சக்கட்டமாக தனக்கூடாக பாயும் மின்னோட்டத்தின் உதவியுடன் முட்டையொன்றை பொரித்துக்காட்டினார்.மேலே படத்தில் அதுதான் காட்டப்பட்டுள்ளது.


மோகனைபரிசோதனை செய்ததில் அவரது அதிக தடைத்திறன்கொண்ட தோல் மின்னைக்கடத்துவதில் உதவியிருப்பதாக கண்டுபிடித்தார்கள்.சாதாரண மனித உடல் 180 கிலோ ஓம் தடையைக்கொண்டது.ஆனால் மோகனின் தோலின்தடை எவ்வளவு தெரியுமா?1.3 மில்லியன் ஓம்ஸ்.தனது  தாயார் இறந்ததும் தற்கொலைசெய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் தற்கொலைக்கு இவர் மின்சாரத்தை தெரிவுசெய்தார்(இப்போது யாரும் தற்கொலைக்கு  மின்சாரத்தை தெரிவுசெய்யமுடியாது) மின்சாரத்தில் கைவைத்தபின்னும் அவருக்கு எதுவுமே நடைபெறவில்லை அப்போதுதான் தனக்கு இப்படி ஒருவித்தியாசமான பவர் இருக்கின்றது என்பது ராஜ்மோகனுக்கு தெரியவந்திருக்கின்றது.






இவரைப்போல் வேறொரு சூப்பர்  ஹியூமன் இருக்கின்றார்.ராஜ்மோகன் தன் உடலினூடாக(தோலினூடாக)மின்னைக்கடத்தக்கூடியவர்.ஆனால் அடுத்துவருபவர்.தன்னை மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்துகொள்வார்.பின்னர் அந்த சார்ஜ்ஜின் உதவியுடன் பல்ப்களை எரியச்செய்வார்.
இதைசெய்யும் சூப்பர் ஹியூமனின் பெயர் Zhang Deke.சீனாவைச்சேர்ந்தவர்.71 வயதானவர்.


ஒவ்வொரு நாளும் 220 வோல்டேஜ் மின்சாரத்தின் மூலம் தன்னை சார்ஜ் ஏற்றிக்கொள்கின்றார் இவர்.உயிரோடு இருக்கும் மீனை 2 நிமிடத்தில் தன் உடலினூடு பாயும் மின்சாரத்தின்மூலம் அவித்துவிட்டார்.

அடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் சூப்பர் ஹியூமன் இவ்விருவரைவிடவும் அதிக சக்திகொண்டவர்.

பெயர் Slavisa Pajkic  சேர்பியாவைச்சேர்ந்தவர்.இவர் தனது உடலினூடாக 20 000 வோல்டேஜ் மின்சாரத்தை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் ஊடுகடத்தக்கூடியவர்.


இவர் 17 வயதில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாயும் ஒரு உலோகத்தின் மீது தவறிவிழுந்துவிட்டார்.மழைவேறு நன்றாக பெய்துகொண்டிருந்தபடியால் இவரால் எழக்கூடமுடியவில்லை.ஆனால் இவருக்கு மின்சாரம் தாக்கவில்லை.சற்று தூரத்தே இருந்த நண்பர்கள் தமக்கு சாக் அடிப்பதாக கத்தியுள்ளார்கள்.அன்றுதான் தனது பவரைப்பற்றி இவர் தெரிந்துகொண்டார்.

இவர் 2 தடவைகள் கின்னஸ்சாதனை படைத்துள்ளார்.1983இல் தன் உடலினூடாக 20 000 வோல்டேஜ்ஜை கடத்தி தனது முதலாவது சாதனையைப்படைத்தார்.அடுத்த சாதனைதான் எக்ஸ்மான் ரேஞ்சிற்கு இவரை அசாத்தியமாக உயர்த்தியது.
2003 இல் அடுத்த சாதனை என்ன செய்தார் தெரியுமா? ஒரு கப் நீரை 97 டிகிரி வெப்ப நிலைக்கு 1நிமிடம் 37 விநாடிகளில் கொதிக்கவைத்துவிட்டார்.இது இரண்டாவது சாதனை.

இவரால் மின்சாரத்தை சேமித்துவைக்கவும்முடிகின்றது.ஏனையவீடுகளில் மின்சாரம் தடைப்படும்போது எனது சார்ஜ்ஜைவைத்துக்கொண்டு என்வீட்டிற்கு ஒளியூட்டமுடியும் என்று கூறுகின்றார் Slavisa Pajkic.

"When there is a sudden power failure, my folks do not have to worry. My house is always shining. I can be an insulator, conductor, accumulator and heater."

மக்கள்  தொலைக்காட்சியில் என்னைப்பார்த்துவிட்டு என்னைத்தேடிவருகின்றார்கள் ஆனால் கைகுலுக்குவதற்குமட்டும் பயப்படுகின்றார்கள்..

தன்னுடலிற்குள் 20 000 வோல்டேஜை பாயவிட்டு முள்கரண்டியால் சிக்கன்  sausage ஐ குற்றிவைத்திருக்கின்றார்.சிறிது நேரத்தில்(வெறும் 20 செக்கண்ட்ஸ்)  sausage  பற்றி எரிகின்றது.ஒரு கையில் டியூப் லைட்டை வைத்திருந்தார் அதற்கு வயர் எதுவும் கொடுக்கவில்லை அது தானாகவே எரிந்தது.

Bright spark: Slavisa Pajkic from Serbia sets light to a fuel-soaked cotton wool ball with an electric discharge from his scalp








இவர்களைப்போன்று அசாதாரணசக்திகளைக்கொண்ட எக்ஸ் மான்களை தொடரும் பதிவுகளில் பார்ப்போம்..

ஒருவிடயத்தை கூறமறந்துவிட்டேன்Slavisa Pajkic  ற்கு ஒரு இலட்சியம் இருக்கின்றதாம் தன் உடலினூடாக 1 மில்லியன் வோல்டேஜை செலுத்தி சாதனைபடைக்கவேண்டுமாம்.சந்தித்தால் கைகுலுக்கி விஸ்பண்ணுங்கள்.

தொடரும்....


ஒருவேளை இதுதான் பின்னவீனத்துவமா?

$
0
0
Sławek Gruca என்பவரது ஓவியங்கள்.இவரைப்பற்றி இணையத்தில் தேடியதில் பெரிதாக ஒன்றும் அகப்படவில்லை சாதாரண கம்பியூட்டரில் படம் வரைபவர் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை(ஒரு ஓவியத்தின் எபிக் என்பதே அதை ரசிப்பவருக்கு விளங்கப்படுத்தாமல் அதை அவரது சிந்தனைக்குள் விட்டுவிடுவதுதான்...ஆனால் அந்த வரையறையை சற்று மீறுகின்றேன்...இதை பார்த்தால் தாய் குழந்தையை அரவணைப்பது போன்றும் தெரியும்...அதோடு கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளியேறுவது போன்றும் இருக்கும்...ஒரு வேளை இதுதான் பின்னவீனத்துவமா?

அதற்குமுதல் பின்னவீனத்துவத்தைப்பற்றி...புரொம் விக்கி...அண்ட் ஜெயமோகன்...

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் [மாடர்னிசம்] என்று சொல்லப்படுகிறது. அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.
நவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை [பைனரி] பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம்.
பின் நவீனத்துவம் அதை மறுக்கிறது. பின்நவீனத்துவம் நான்கு விஷயங்களை மறுக்கிறது. 1. அது எதையும் உலகளாவியதாக பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்கிறது. வட்டாரப்படுத்துகிறது 2. அது வரலாற்றை ஒரு அர்த்தபூர்வமான ஓட்டமாக பார்ப்பதில்லை. ஆகவே வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசும் வரலாற்றுவாதத்தை நிராகரிக்கிறது. 3. அது இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண்இருமைகளை அது மறுக்கிறது மையநோக்கை ஏற்பதில்லை. மையம் அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது என நினைக்கிறது 4. எல்லாவற்றையும் முழுமையாக தர்க்கப்படுத்தமுடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே இலக்கியம்போன்ற கலைகளை உருவாக்குகின்றன. இதை உன்னதமாக்கல் [சப்ளிமேஷன்] என்று சொல்கிறார்கள்.
தமிழில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்தவர்கள் தமிழவன், நாகார்ஜுனன், பிரேம் ரமேஷ், க பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாராசாமி போன்றவர்கள். அதை எதிர்த்து எழுதியவர்கள் எஸ்.வி.ராஜதுரை போன்ற மார்க்ஸியர்கள் ,சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி போன்ற அழகியல்வாதிகள். ஞானி அதை மார்க்ஸியத்துடன் இணைத்து சிந்தனைசெய்தார்.
கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர்.
பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோலக்கான்தெரிதா போன்றோர், அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட்,பௌதலியார்ட்டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது. ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.
இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. பின்நவீனத்துவம் இலக்கியத்தில் ஒருங்கிணைவுள்ள பிரதிக்கு எதிராக பேசியது. ஆகவே சிதறுண்ட வடிவம் கொண்ட நூல்கள் பல உருவாயின. பிரேம் ரமேஷின் எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு சொல் சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி போன்றவை இவ்வகை நாவல்கள்
பின்நவீனத்துவம் மீபுனைவு [மெடபிக்‌ஷன்] களை உருவாக்கியது. கதைசொல்லுவதையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதுவதைப்பற்றியே எழுதக்கூடிய புனைவுகள் இவை. உள்ளுக்குள்ளேயே சுழலக்கூடியவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம்,சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஸியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், பின்தொடரும் நிழலின் குரல் யுவன் சந்திரசேகரின் மணற்கேணி, வெளியேற்றம் முதலியவை இவ்வகைப்பட்டவை.
பின்நவீனத்துவம் பழைய ஆக்கங்களை மீண்டும் எழுதும் வகையையும் உருவாக்கியது. ஜெயமோகனின் கொற்றவை அவ்வகைப்பட்டது. அது சிலப்பதிகாரத்தை மீண்டும் எழுதுகிறது. பின்நவீனத்துவம் வரலாற்றை திரித்து சுதந்திரமாக எழுதும் வகையை அறிமுகம் செய்தது. பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை உதாரணம்
பின்நவீனத்துவம் மொழியை சிதைப்பதும், கதைகளை சிதைப்பதும், மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவதும் ஆன புதிர்தன்மைகொண்டதாக புனைவுகளை படைத்தது. கோணங்கியின் பாழி, பிதிரா நாவல்களும், உப்புகத்தியில் மறையும் சிறுத்தைகள், பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைகளும் இவ்வகைப்பட்டது. வாசக்களை தீவிரமாக சிந்திக்கத்தூண்டும் புதிர்நடை எழுத்துவகையைச் செர்ந்தவை.
ஆனால் பின்நவீனத்துவ இலக்கியம் என ஒன்று இல்லை. பின்நவீனத்துவ சாயல் கொண்டவை என்று மட்டுமே படைப்புகளை அடையாளம் செய்ய முடியும்.

பிரபல ரைட்டர் ஜெயமோகனின் விளக்கம்....இங்கே கிளிக்.(ஆமா விஸ்னுபுரம் வாசிச்சீங்களா? எப்படி இருந்தது எனக்கு மண்டை காய்ந்துவிட்டது)
Sławek Gruca இன் படைப்புக்கள் கீழே....

இவரைப்பற்றி இணைய செய்திகள் ...
Sławek Gruca was born in 1971 in Lubliniec, Poland;   He graduated with honours from Pedagogical University in Czestochowa, with graphics specialization, under the supervision of Prof. Richard Osadczy. After studies he moved to Holland where he worked for a couple of years as a computer graphic designer, constantly drawing for commission of private collectors.After coming back to Poland he proceeded with his work as a graphic designer,  and while experimenting with combining traditional drawing with computer graphics Gruca continued drawing with his favourite media: pencil, pens, ink.  In May, 2004 his first exhibition  took place in Warsaw.”My Paranoias” – is a seried of works from  1995-2004 which were presented there as a summary of this period in artist’s career.
மேலதிகமாகத்தெரிந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்...










































book marks களை சேமித்துவைப்பது எப்படி?

$
0
0
 நீங்கள் உங்கள் புரோசரை அன் இன்ஸ்ரோல் செய்யவேண்டியேற்பட்டாலோ அல்லது உங்கள் பி.சியை போர்மற் செய்யவேண்டியேற்பட்டாலோ உங்களுக்கு தேவையான விடயங்களை எக்ஸ்ரேர்னல் ஹாட்டிஸ்க் போன்றவற்றில் பாக்கப் செய்துவைத்திருக்கமுடியும்.ஆனால் புக்மார்க்களை எப்படி தரவிறக்கம் செய்வது/சேமிப்பது.வழி இதோ.

குரோம் பாவனையாளர்கள்....

customize and control google chrome  என்பதை கிளிக் செய்து bookmarks ஐ கிளிக் செய்யவும் பின்னர் book mark manager  என்பதைகிளிக் செய்தால் கீழே காட்டப்பட்டுள்ளதைப்போன்றவிண்டோ தோன்றும்.

நீங்கள் புக் மார்க் பாரில்/வேறுவேறு நேமை உடைய போல்டர்களில் உங்கள் புக் மார்க்கை  குறியிட்டுவைத்திருப்பீர்கள்(நான் உருவாக்கியவை மேலேNew folder,new,i robot,kiru ).உங்களுக்குத்தேவையான புக்மார்க் போல்டரில் கிளிக் செய்தபின்(எந்த போல்டரையும் உருவாக்கவில்லையெனில் எந்தபோல்டரையும் கிளிக் செய்யத்தேவையில்லை.பின்னர் ஓர்கனைஸ் என்பதை கிளிக் செய்யவும்.(படத்தில் வட்டமிடப்பட்டபகுதி)

import bookmarks from HTML file என்பதைக்கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய பெயரைக்கொடுத்து,விரும்பிய இடத்தில் எஜ்.ரி.எம் எல் பைலாக வெப்பேஜாக தரவிறக்கிக்கொள்ளலாம்.

பயர்பொக்ஸ்...

புக் மார்க்ஸ் என்பதைக்கிளிக் செய்து சோ ஆல் புக் மார்க்ஸ் என்பதைக்கிளிக் செய்க.அப்போது தோன்றும் பொக்ஸில் புக் மார்க்ஸ் மெனு என்பதைக்கிளிக் செய்யும்போது வேறு ஒரு பொக்ஸ் தோன்றும்.மிச்சவேலை குரோமில் செய்தவேலையை ஒத்ததுimport bookmarks from HTML file என்பதைக்கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய பெயரைக்கொடுத்து,விரும்பிய இடத்தில் எஜ்.ரி.எம் எல் பைலாக வெப்பேஜாக தரவிறக்கிக்கொள்ளலாம்.விரும்பினால் பயர்பொக்ஸில் இருந்து வேறு ஒரு புரௌசருக்கு உங்கள் புக் மார்க்ஸ்களைமாற்றிக்கொள்ளலாம்.








உலக /சமூக அரசியலை வெளிப்படுத்தும் ஓவியங்கள்

$
0
0
Polish illustrator Pawel Kuczynski உலக சமூக கலாச்சார அரசியல்களை வெளிப்படுத்தும் ஓவியங்கள். நிச்சயமாக ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒவ்வொருபதிவை எழுதுமளவிற்கு கருத்துக்களை விட்டு சென்றிருக்கின்றார்.
































































நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?

$
0
0

நாமக்கல்லில் இருந்து மாணவர் அரவிந்தன் அனுப்பியது
--------------------------------------------------------------------------

விஜய் டிவி கோபிநாத் நீயா? நானா? வில் தமிழக மாணவர்களுக்கு சமூக விசயங்களில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது? என்று சென்ற மாதத்தில் (Feb 10, 2013) ஒரு நிகழ்ச்சி  நடத்தினார்.

எங்கிருந்து மாணவர்களை தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை... மாணவர்களுக்கு தமிழக சமூக விசயங்களின் ஜீரோ அளவுக்கு அறிவு இருப்பதாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ணினர்.

அதை பார்த்த பலரும் இது போன்ற மாணவர்களை வைத்து கொண்டு தமிழ் சமுதாயம் என்ன செய்ய போகிறது. மாணவர்கள் சினிமா பார்க்கவும், பெண்கள் பின் சுற்றவும்தான் லாயக்கு. அந்தோ பரிதாபம்!! என்ற அளவுக்கு பேஸ்புக்கிலும், சமூக தளங்களிலும் விமர்சனங்களை எழுதித் தள்ளினர்.

என்னை போன்ற மாணவர்களுக்கு அந்த நிகழ்ச்சி பெருத்த அவமானமாகவே பட்டது. ஒரு தொலைகாட்சி ஐம்பது பேரை மாணவர்கள் பிரதிநிதியாக பிரதிபலித்து மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் போன்ற தோற்றத்தை எவ்வளவு மலிவாக தோற்றுவித்தது.

இதோ இன்று மாணவர்கள் ஈழத்திற்காக போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். அரசியல் அமைப்புகளும், ஆட்சியாளர்களும் சற்றே அதிர்ச்சியில் தான் உள்ளனர்.

இப்போதும் மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றே விஜய் டிவி, நீயா நானா நிகழ்ச்சி, கோபிநாத் போன்றவர்கள் நினைக்கிறார்களா?

மாணவன் இன்று தைரியமாக சாலையில் இறங்கி போராடுகிறான். விஜய் டிவிக்கு ஈழம் தொடர்பாக மாணவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்த தைரியம் இருக்கிறதா?

விஜய் டிவியை வலியுறுத்த நீயா? நானா? கோபிநாத்துக்கு அக்கறை இருக்கிறதா?

ஈழம் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்பி மக்களிடையே ஈழப்பிரச்சனையை கொண்டு செல்ல விஜய் டிவி எதுவும் முயற்சி எடுத்ததா?

சமூக விசயங்களில் மிக அக்கறை கொண்ட கோபிநாத் ஈழ பிரச்சனை தொடர்பாக வாய் திறக்கலாமே?

பவர் ஸ்டாரை புரட்டி எடுத்த சமூக சிந்தனையாளர் கோபிநாத், ராஜபக்சேவை ஒரு நிகழ்ச்சியில் புரட்டி எடுக்கலாமே?

கல்லூரிகள்தோறும் சென்று மாணவர்கள் சமூக விசயங்களில் அக்கறை கொள்ளுங்கள் என்று பேருரை நடத்தும் கோபிநாத், விஜய் டிவி ஈழம் பற்றி நிகழ்ச்சி நடத்த மறுத்தால் அதிலிருந்து வெளியேறி மாணவர்களுடன் போராட முன் வருவாரா?

மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற எங்காவது கோபிநாத் சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா?

தெரிந்தவர்கள், மாணவர்களை விமர்சித்தவர்கள் சொல்லுங்கள்.......

Ballpoint Pens எப்படி இயங்குகின்றது?

$
0
0
பேனைகளில்/பேனாக்களில் பலவகைகள் இருக்கின்றட்ன.fountain pen ,ballpoint pen ,rollerball pen ஆனால் பெருமளவானவர்களால் இப்போது Ballpoint Pensதான் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.உலக அளவில் மாணவர்கள் இதை அதிகமாகப்பயன்படுத்துகின்றார்கள். Ballpoint Pens  எவ்வாறு இயங்குகின்றது?
90 களில் பிறந்தவர்களுக்கு இந்தப்பேனாவை நினைவிருக்கும்.
Ballpoint Pen குமிழ்முனைப்பேனா...reed pen, quill pen, metal nib pen,  fountain pen போன்றவற்றைவிட இது வித்தியாசமான முறையில் உருவாக்கப்படுகின்றது,இதன் குமிழ் செப்பு,ஸ் ரீல்,தங்குதன் கார்பைட் போன்றவற்றினால் உருவாக்கப்படுகின்றது.இப்பேனைக்குப்பயன்படுத்தும் மை பின்வரும் இயல்புகளைக்கொண்டிருக்கவேண்டும்.
1)ஒரே சீராகப்பரவும் இயல்பைக்கொண்டிருக்கவேண்டும்.
2)மை பேனாவைவிட்டுவெளியே காற்றில் தொடுகையுறும்போது மெதுவாக உறையக்கூடியதாக இருக்கவேண்டும்.ஏனெனில் தவறுதலாக பேனாவின் உள்ளேயே மை உறைந்துவிட்டால் பேனாவை எறிவதைத்தவிரவேறு எதுவும் செய்யமுடியாது.அத்துடன் குமிழ்முனையும் இறுகிவிடும்.

ஆனால் இவ்விரு இயல்புகளையும் கொண்ட மை இருத்தல் ஒரு  பேனாவை உருவாக்கப்போதுமானதா? 
பேனாக்களில் fountain pen என்ற ஒரு பேனா இருக்கின்றது.இதற்குள் குமிழ்முனைப்பேனாபோன்றல்லாது தனியாக நாமே மையை உட்செலுத்தமுடியும்.சிறிய பிளாஸ்டிக் குப்பிகளிலும் மை கிடைக்கும் அல்லது மைப்போத்தல்களிலும் மைகிடைக்கும்.


இப்பேனை தனது நிப்பில் இருக்கும் சிறு பிளவினூடாக மையை கசியவிடுவதனூடாக இயங்குகின்றது.முனையில் மிகவும் சிறிய இடைவெளி உருவாக்கப்பட்டிருக்கும்.இப்பேனையால் எழுதும்போது எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கக்கூடாது.பிரயோகித்தால் முனை முறிந்துவிடும்.தவிர இப்பேனையால் எழுதுவது சற்றுக்கடினம்.எடுத்தவிடன் யாரும் எழுதமுடியாது.
இப்பேனாதான் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இப்பேனாவில் இருக்கும் பல பிரச்சனைகளுள் ஒன்று விமானங்களில் செல்லும்போது இதை எடுத்துச்சென்றாலோ அல்லது மலை போன்ற உயரமான இடங்களுக்கு எடுத்துச்சென்றாலோ மைவெளியே வந்துவிடும். உங்கள் உடை நாசமாகிவிடும்.இரண்டாம் உலகப்போர்வரை இதற்கு ஒரு மாற்றுத்தீர்வை சகலருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஹங்கேரியைச்சேர்ந்த Laszlo Biro என்ற ஊடகவியலாளருக்கு திடீர் என்று இதற்கான மாற்றுயோசனை தோன்றியது.பத்திரிகைகள் அச்சிடப்படும் இடத்திற்குசெல்லும்போது பத்திரிக்கைகள் அச்சிடப்படுவதை அவதானித்தார்.அச்சிடப்பட்ட உடனேயே மை காய்ந்துபோவதை அவதானித்தார்.இதையே பயன்படுத்தினால் என்னவென்று சிந்தித்தார்.இவருக்கு இவ் யோசனை தோன்றியது June 15, 1938 இல். ஆனால் மை பேனையினுள்ளேயே காய்ந்துவிடக்கூடாது அதுவும் மிகமுக்கியமானது.இதற்காக அவர் கண்டுபிடித்தவிடயம்தான் குமிழ்முனை.....அதாவது குமிழ்முனைப்பேனா...இதன்போது பயன்படுத்தப்படும் குமிழ் 2 வேலைகளை செய்யும்.

1)உள்ளே இருக்கும் மை வெளியேறாமல் அடைப்பானாக தொழிற்படும்.
2)உள்ளே இருக்கும் மையை கட்டுப்படுத்திய அளவில் வெளியேசெல்ல அனுமதித்தல்.

1943 ஜூனில்Biroவும் அவரது சகோதரரும் இரசாயனவியளாளருமானGeorg ம் இணைந்து இப்பேனைக்கான உரிமத்தைப்பெற்றுக்கொண்டார்கள்.பின்னர் இவர்களிடமிருந்து உரிமத்தை பிரித்தனிய அரசாங்கம்வாங்கிக்கொண்டது.சிறிய கால அளவிலேயே வான்படையில்  இவர்களது பேனா பயன்படுத்தப்பட்டது.உயரமான இடங்களிலும் அதிக காற்றழுத்தமுள்ள இடங்களிலும் இப்பேனாவால் எழுதமுடிவதால் அதிகவரவேற்பைப்பெற்றது.இதற்கு முன்வரை பயன்படுத்தப்பட்ட fountain pen அதிக உயரமான இடங்களில்,விமானங்களில் செல்லும்போது அதனுள் இருக்கும் மைகசிந்துவிடும்.குமிழ்முனைப்பேனாவில் இது தவிர்க்கப்பட்டது.

ஆனால் இவர்களுக்கு முன்னரே குமிழ்முனைப்பேனாவை ஒருவர் பயன்படுத்தியிருந்தார் ஆனால் அவர் அதை கரடுமுரடான மேற்பரப்புக்களுக்காக மட்டுமே உருவாக்கியிருந்தார்.John J. Loud என்பவர் 1888 இல் குமிழ்முனைப்பேனாவை உருவாக்கியிருந்தார்.இவர் ஒரு தோல் வியாபாரி.இவரது காலத்தில் பவுண்டேஸன் பென்கள் போன்ற பேனைகளே காணப்பட்டன அவற்றின் உதவியுடன் தோற்களின் மேல் எழுத்துக்களை பொறித்தல் நடைமுறையில் சாத்தியமற்றதாகிவிட.குமிழ் முனைப்பேனா அவரது எண்ணத்தில் உதயமானது.ஆனால் இவர்கள் அனைவருக்கும் முன்னர் கலிலியோ இவ்வாறான குமிழ்முனைப்பேனையை உருவாக்கி பயன்படுத்தியிருக்கின்றார் என்றும் கருத்துக்கள் உள்ளன.
 Milton Reynolds என்பவர் அமெரிக்காவில் முதன்முதலில் வணிகரீதியாக வெற்றிகரமாக விற்கப்பட்ட குமிழ்முனைப்பேனாக்களை விற்றார்.ரெனோல்டை அறிமுகப்படுத்தும்போதே 10 000 பேனைகளைவிற்கப்பட்டது.பேனையின் அன்றையவிலை 10 டொலர்கள்.முதன் முதலில் நீரிற்குள்வைத்து பேனாவால் எழுதி பேனாவிற்குவிளம்பரம்கொடுக்கப்பட்டிருந்தது.அப்போதைய நாளில் இந்தவிலை அதிகம்தான் ஆனால் முதல் முதலில் விலைகுறைந்த பேனையை உருவாக்கும்பணியை BIC கம்பனி செய்துவெற்றியும்கண்டது.
"Writes First Time, Every Time!," என்று அசராமல் செய்த டி.வி விளம்பரங்கள் மற்றும் இதர விளம்பரங்கள் காரணமாக பேனா உலகில் முதல் இடத்தை அடுத்த 10 வருடங்களில் எட்டிப்பிடித்தது BIC.இப்பொழுது 10 சென்ற்ஸுக்கும் குறைவாகவும் BIC பேனைகள் கிடைக்கின்றன.


பேனாவின் முனையில் உள்ள குமிழ் இயங்கும் முறை


பேனாவின் குமிழ் முனையின் மாதிரி உரு
This ball acts as a buffer between the material you're writing on and the quick-drying ink inside the pen. The ball rotates freely and rolls out the ink as it is continuously fed from the ink reservoir
பேனாவின் குமிழ்  socketற்குள் பொருத்தப்பட்டுள்ளது.பேனாவை எவளவுக்கு நாம் அழுத்தி எழுதும்போதும் அந்த குமிழ் சுழல்வதற்கு ஏற்றவகையில் அவ் socketற்குள் இடம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.இல்லையாயின் குமிழ் இறுகிவிடும்.
பேனாவால் எழுதும்போது என்ன நடைபெறுகின்றது?
பேனாவால் நாம்  எழுத ஆரம்பிக்கும்போது முதலில் பேனாவை தாளின் மீது அழுத்துகின்றோம்.பின்னர் அப்படியே அழுத்தியபடி பேனாவை நகர்த்துகின்றோம்.சோ அழுத்தியதும் புவியீர்ப்புக்காரணமாக உள்ளே இருக்கும் மை வெளியே வர ஆரம்பிக்கும் அப்போது நாம் பேனாவை நகர்த்த ஆரம்பித்திருப்போம்.குமிழ் உருளஆரம்பிக்கும் அப்போது குமிழின் மேற்பரப்பினால் மை வெளியே கொண்டுவரப்படுவதுடன் புவியீர்ப்புக்காரணமாகவும் மை தாளின்மீது பரப்பப்படுகின்றது.வெளியேறிய மை உடனே உலர ஆரம்பிக்கும் (வெளியே சூழலில் உள்ள வாயிவின் காரணமாக)ஆனால் பேனாவின் உள்ளே உள்ள மை உலராது.காரணம் பேனாவின் முனையினூடாக் மை வந்துகொண்டிருப்பதால் காற்று உள்ளே செல்வது குறைக்கப்பட்டுவிடும்.





பேனாக்களில் 0.5 mm,0.7 mm என எழுதப்பட்டிருக்கும் இது குமிழின் விட்டத்தைக்குறிக்கின்றது.0.7 mm என குறிப்பிடப்பட்டுள்ள பேனாவால் வரையப்படும் கோடின் அளவு 0.7 mm என்பதாகும்.

மை தொடர்பான சிறியவரலாறு...
According to Encyclopedia Britannica, writing inks date from about 2500 BC and were used in hieroglyphics found in ancient Egypt and China. They consisted of lampblack ground with a solution of glue or gums. The resulting mixture was molded into sticks and allowed to dry. Before use, the sticks were mixed with water.
Various colored juices, extracts, and suspensions of substances from plants, animals, and minerals also have been used as inks, including alizarin, indigo, pokeberries, cochineal, and sepia. For many centuries, a mixture of a soluble iron salt with an extract of tannin was used as a writing ink and is the basis of modern blue-black inks.

Close up of an extra fine roller ball pen next to something written with it

list of pen types, brands and companies



ஹொலிவூட்டில் உங்களுக்குத்தெரியாதவை-02

$
0
0
இதன் முதலாவது பகுதியை வெளியிட்டு சில மாதங்கள் கடந்துவிட்டது என்பது உண்மைதான்..அதற்காக மன்னிப்புடன் தொடர்கின்றேன்.தொடர்களை இலகுவாக ஆரம்பித்துவிட்டு தொடரும் என்று போட்டுவிட முடிகின்றது.ஆனால் பின்னர் ஆரம்பத்தில் இருந்து தேடுதலை தொடரவேண்டியிருக்கின்றது.

ஹொலிவூட் படங்களில் மிக பிரபலமாக காட்டப்படும் ஒருவிடயம் மறை குறியீடுகள்.ஏதாவது ஒரு விடயத்தை நோக்கி ஹீரோவை சரியான திசையில் கொண்டுசெல்வதற்கு இவை உதவும்.நிக்கொலஸ்கேஜ் நடித்த நஸனல் ரெஷர்,ரொம் ஹான்ஸ் நடித்த டாவின்சி கோட்,ஏஞ்சல்ஸ் அன்ட் டெமோன்ஸ்,ஹரிசன் போர்ட்டின் சிலபடங்கள் போன்றவற்றில் இவற்றைக்காணமுடியும்.ஏதாவது ஒரு உருவத்தில் ஹீரோவுக்கு ஒரு துருப்புச்சீட்டுக்கிடைக்கும்.அதில் வார்த்தைகள் சங்கேதமான கோர்வைகளாகவோ அல்லது வேறு விடயங்களை செய்வதன் மூலம்(தேசிச்சாற்றை தடவி சிறிது வெப்பமாக்கல்,பின் புறம் மெழுகை ஒட்டி சூடாக்கல்..அல்றா வைலட் ஒளியில் பார்த்தல்,வேறு வேறு நிறங்களைக்கொண்ட கண்ணாடியால் பார்த்தல்) பெறக்கூடியவாறு இருகும் ஹீரோயினுடன் லூட்டி அடித்துக்கொண்டே இந்த குளூக்களின் பின்னால் ஹீரோ சென்றுகொண்டிருப்பார் வில்லனும் சென்றுகொண்டிருப்பார்.அவ்வாறான மறைகுறியீடுகளைப்பற்றிய பதிவுதான் இது.

முதலாவது பதிவை வாசிக்காதவர்கள் வாசித்துவிட்டு தொடருங்கள் சற்று குழப்பமில்லாமல் இருக்கும்.

இவற்றைப்பற்றிய கற்கைகளை Cryptography என்று அழைப்பார்கள்.இது கிரேக்கவார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது.மறைந்துள்ள/மறைக்கப்பட்ட எழுத்துக்கள் என்பதுதான் பொருள்.

முதல் பதிவில் ROT1 என்ற முறையை பார்த்திருந்தோம்...ஹொலிவூட்டில் உங்களுக்குத்தெரியாதவை

(ஒரு எழுத்து எழுதப்பட்டிருக்குமாயின் அந்த எழுத்தின் அடுத்த எழுத்தை ஆங்கில நெடுங்கணக்கு முறைப்படி இடுதல்.இப்படி ஒரு ஒழுங்கான சொல்லை நேரே எழுதாமல் அடுத்துவரும் ஆங்கில எழுத்துக்களால் எழுதுதல்.BQQMF என்றொருவார்த்தை இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.இதை நீங்கள் குறி நீக்கவேண்டுமாயின்  B இற்கு முன்னைய எழுத்து  A ,Qஇற்கு முன்னைய எழுத்து P,M இற்கு முன்னைய எழுத்துL, Fற்கு முன்னைய எழுத்து E.
அப்படியெனில் அதை ஒன்றாக எழுதினால் "APPLE". கண்டுபிடித்துவிட்டீர்கள்.)
ROT1 ஐப்போல் பல முறைகள் இருக்கின்றன ROT2 ,ROT3 ,ROT3 ......என்றவாறு செல்லும்.இப்படி ROT25 வரை செல்கின்றது.இவற்றின் அர்த்தம் இதுதான் ROT1 என்றால் ஒரு எழுத்திற்கு அடுத்த எழுத்தை எழுதுவதுபோல் (உதாரணத்திற்கு APPLE என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களை ஒவ்வொரு எழுத்துக்கும் அடுத்த ஆங்கில எழுத்தை எழுதினால் BQQMF என்று வரும்)ROT25 என்றால் 25 எழுத்துக்களின் பின் வரும் எழுத்தை எழுதவேண்டும்.

இந்த 25 இற்குள் ROT5, ROT18 , ROT47  என்ற 3ம் வித்தியாசமானவை.

ROT13 ஐ எடுத்துக்கொண்டால்

சாதாரண ஆங்கில நெடுங்கணக்கு ஒழுங்கு-abcdefghijklmnopqrstuvwxyz
ROT13 என்பதால் ஒவ்வொரு எழுத்துக்களையும் 13 எழுத்துக்களால் இடம்பெயர்க்கவேண்டும்.(Each letter is shifted 13 places)

அப்படி 13 எழுத்துக்களால் இடம்மாற்றியபின் நெடுங்கணக்கு-nopqrstuvwxyzabcdefghijklm

மேலே வித்தியாசமானவை என கூறிய ROT5, ROT18 , ROT47  களைத்தவிர்ந்த ஏனைய அனைத்து ROT முறைகளுக்கும் பொதுவாக பின்வரும் விதியைக்கூறலாம்.
ROT N என்றால் எழுதவேண்டிய எழுத்தை நாம்  N தடவையான எழுத்துக்களால் நகர்த்தவேண்டும்,(Each letter is shifted N places..ஆங்கிலத்தின் உதவி இல்லாவிடில் எனக்கு விளக்குதல் கடினமாக இருக்கின்றது)

அந்த 3 ROT களில் அப்படி வித்தியாசமாக என்னதான் இருக்கின்றது?..

ROT5-இம்முறையில் எண்கள் மாத்திரமே பயன்படுத்தப்படும்.
எண்களின் ஓடர் இப்படி மாற்றப்படும்

0123456789 இது 5678901234 ஆக எழுதப்படும் (Each number is shifted 5 places)

ROT18  இல் எழுத்துக்களும் எண்களும்

abcdefghijklmnopqrstuvwxyzABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ0123456789 என்பது nopqrstuvwxyzabcdefghijklmNOPQRSTUVWXYZABCDEFGHIJKLM5678901234  ஆக மாற்றப்படும்.

ROT47 என்பது 25 இற்குள்ளும் இல்லாத ஒரு வகை.இந்தவகையில் ஆங்கில நெடுங்கணக்கிற்குப்பதிலாக அஸ்கி எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும்.47 என்ற வகையாதலால் Each character is shifted 47 places:


Early Cryptography

மறைசெய்தியியல் இதைSteganography என்று அழைப்பார்கள் இதில் பலமுறைகள் உள்ளன இவற்றை ஆரம்பத்தில் இருந்து பார்த்திருக்கின்றோம்.இந்த வார்த்தை கிரேக்கத்தில் இருந்து தோன்றியது.Greek origin and means "concealed writing",இந்த பதத்தைப்பயன்படுத்திSteganography இதைப்பற்றியபதிவை முதன் முதலில் எழுதியவர்Johannes Trithemius  என்பவர்தான்.இவர் எழுதிய  Steganographia என்ற புத்தகத்தில் இவற்றைப்பற்றிய குறிப்புக்களை கூறியிருக்கின்றார்.
மறைசெய்தியியலின் முதல் பதிவு பெற்ற பயன்பாடுகள் கிமு 440 காலத்திலேயே துவங்கி விட்டன. ஹெரோடோடஸ் தனது தி ஹிஸ்டரிஸ் ஆஃப் ஹெரோடோடஸ் படைப்பில் மறைசெய்தியியலின் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுகிறார். கிரீஸ் தாக்குதலைச் சந்திக்க இருப்பதைக் குறித்து டெமாராடஸ் ஒரு எச்சரிக்கை அனுப்பினார். ஒரு மெழுகுப் பலகையில் அதன் பரப்பில் மெழுகு பூசப்படும் முன்னதாக அந்த பலகையில் நேரடியாய் செய்தியை எழுதியிருந்தார். மெழுகுப் பலகைகள் அக்காலத்தில் அழித்து மீண்டும் பயன்படுத்தும் எழுது பரப்புகளாக பொதுவான பயன்பாட்டில் இருந்தன; சிலசமயங்களில் சுருக்கெழுத்துக்கும் பயன்பட்டன. இன்னொரு பழங்கால உதாரணம் ஹிஸ்டியேயஸ், தனது மிகவும் நம்பகமான அடிமையின் தலையை மொட்டையடித்து அதில் செய்தியை பச்சை குத்தி விடுவார். அந்த அடிமைக்கு முடி வளர்ந்ததும், அந்த செய்தி மறைந்திருப்பதாய் ஆகி விடும். பெர்சியர்களுக்கு எதிரான ஒரு கலகத்தைத் தூண்டும் நோக்கத்தோடு அவர் இதனைச் செய்தார்.
மெஸேஜ்ஜை கொண்டுசெல்பவரிடம் அதை பெறுபவரிடமும் படத்தில் காட்டப்பட்டுள்ள மரத்தால் ஆனா உருளை இருக்கவேண்டும்.அதாவது மெஸேஜை உருவாக்கும்போது எந்த விட்டத்தைகொண்ட உருளையில் துணியைச்சுற்றி மெஸேஜை உருவாக்கினார்களோ அதேவிட்டத்தைக்கொண்ட உருளை இருந்தால் படத்தில் காட்டியவாறு உருளையைச்சுற்றிமெஸேஜை அறியமுடியும்.




செய்தியைப் படிக்க முடிந்ததை குறித்து ஹெரோடோடஸ் குறிப்பிடுகிறார். இந்த செய்தி பெர்சியாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் குறித்து கிரீஸ் நாட்டுக்கான எச்சரிக்கை செய்தியை சுமந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழிமுறைகளில் குறைபாடுகள் இருப்பது வெளிப்படை. ஏனெனில் அடிமையின் முடி வளரும் வரை காத்திருப்பதால் நேரம் தாமதமாகும், மற்றும் ஒரு தடவை பயன்படுத்தி விட்ட பின் அடுத்தடுத்த செய்திகளுக்கு கூடுதலான அடிமைகள் தேவைப்படுவது ஆகியவை குறைபாடுகளாகும். இரண்டாம் உலகப் போரில், பிரெஞ்சு எதிர்ப்புப்படையினர் தகவல் சுமப்பவர்களின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத மை கொண்டு சில செய்திகளை எழுதி அனுப்பினர்.

மற்ற செய்திகளின் கீழ் அல்லது மற்ற செய்திகளின் காலிப் பகுதிகளில்(எஞ்சிய பகுதிகளில்), ரகசிய மை கொண்டு காகிதங்களில் எழுதப்பட்ட மறை செய்திகள்.

தையல் நூலில் மோர்ஸ் குறியீடு கொண்டு செய்திகளை எழுதி பின் அதனை செய்தி கொண்டு செல்பவரின் ஆடையின் ஒரு பகுதியில் தைத்து விடுவது.

(wanted என்ற ஹொலிவூட் படம் ஒன்று வந்திருந்தது மேர்கன் பிரீமன் இதேமுறையில் யார் யாரைக்கொல்வது என்று  ஆடை நூற்கும் இயந்திரத்தில் இருந்து உற்பத்தியாகும் துணியில் இருந்து பெயர்களை டீகோட் செய்வார்)

அஞ்சல் தலைகளின் பின்னால் எழுதப்பட்ட செய்திகள்.

இரண்டாம் உலகப் போர் சமயத்திலும் அதற்குப் பிந்தைய சமயத்திலும், ரகசிய ஒற்று முகவர்கள் தகவலை அனுப்பவும் பெறவும் புகைப்படம் மூலம் உருவாக்கப்படும் மைக்ரோபுள்ளிகளைப் பயன்படுத்தினர். மைக்ரோபுள்ளிகள் பொதுவாக ரொம்பவும் நுண்ணியதாய் இருக்கும், ஒரு தட்டச்சு எந்திரத்தில்உருவாக்கப்படும் ஒரு புள்ளியின் அளவுக்கு அல்லது அதனையும் விடச் சிறிதாய் இருக்கும். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மைக்ரோபுள்ளிகள் ஒரு காகிதத்தில் பொதிக்கப்பட்டு ஒரு பசையால் ஒட்டப்பட்டிருந்தது. இது பிரதிபலிக்கத்தக்கதாய் இருக்கும், எனவே ஒளிரும் வெளிச்சத்திற்கு எதிராய் இதனைக் கண்டறிய முடியும். அஞ்சல் அட்டைகளின் விளிம்பில் வெட்டப்பட்ட பிளவுகளுக்குள் இந்த மைக்ரோபுள்ளிகளைச் செருகுவது உள்ளிட்ட மற்ற மாற்று உத்திகளும் இருந்தன.


Velvalee Dickinson
இரண்டாம் உலகப் போர் சமயத்தில், நியூயார்க் நகரத்தில் இருந்த ஒரு ஜப்பான் உளவாளியான வெல்வாலீ டிக்கின்சன், நடுநிலை தென் அமெரிக்காவில் இடவசதி முகவரிகளுக்கு தகவல் அனுப்பினார். பொம்மைவிற்பனை விநியோகஸ்தராக இருந்தார் அப்பெண்மணி. அவரது கடிதங்கள் எல்லாம் எந்த பொம்மைகளை எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பது குறித்து விவாதிக்கும். மறைசெய்திகொண்ட உரை பொம்மைக்கான ஆர்டர்களாய்த் தான் தோற்றமளிக்கும். ஆனால் மறைந்திருக்கும் ‘சாதாரண உரை’யோ கப்பல் நடமாட்டம் குறித்து தகவல் அளித்தது. இந்த பெண்மணியின் வழக்கு மிகவும் பிரபலமுற்று அப்பெண்மணி பொம்மை பெண் என்று அழைக்கப்பட்டார்.

பனிப் போர் எதிர்-பரப்புரை. 1968 ஆம் ஆண்டில், USS ப்யூப்ளோ (AGER-2) உளவுக் கப்பலில் சென்றவர்கள் வடகொரியாவினால் சிறைப் பிடிக்கப்பட்ட போது, தாங்கள் தேசதுரோகம் செய்யவில்லை மாறாக வடகொரியாவால் பிணைக் கைதிகளாய் இருக்கிறோம் என்பதை அமெரிக்காவிற்கு உணர்த்துவதற்கு, அந்த கப்பல் பணியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த புகைப்பட வாய்ப்புகளின் சமயத்தில் ஜாடை மொழியில் தகவல் தெரிவித்தனர். அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட பிற புகைப்படங்களில், யாரும் காணாத வண்ணம் அந்த பணியாளர்கள் வடகொரியர்களை நோக்கி ‘விரல்’ நீட்டிக் கொண்டிருந்தனர், இதன்மூலம் அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பது போலவும் வசதியாக இருப்பது போலவும் காட்டப்பட்ட புகைப்படங்கள் தவறான தகவலை அளிப்பதை உணர்த்தினர்


மறைசெய்திக்கலை உதாரணம். இந்த படத்துக்குள், ஒரு மறைந்த செய்தியின் எழுத்துகளின் இடநிலை அதிகரிக்கும் எண்களால் (1 முதல் 20 வரை) குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு எழுத்து மதிப்பை வலையில் அதன் குறுக்குவெட்டு இடநிலையில் காணலாம். உதாரணமாக, மறை செய்தியின் முதல் எழுத்து 1 மற்றும் 4 இன் குறுக்குவெட்டில் உள்ளது. எனவே, சில முயற்சிகளின் பின்னர், செய்தியின் முதல் எழுத்து ஆங்கில எழுத்துகளில் 14வது எழுத்து என்பதைக் காணலாம்; கடைசி (எண் 20) 5வது எழுத்து.

ஒரு மரத்தின் படம். ஒவ்வொரு நிறக் கூறிலும் கடைசி இரண்டு பிட்டுகளைத் தவிர்த்து அனைத்தையும் நீக்கினால் ஏறக்குறைய முற்றுமுதலாய் கறுப்பான ஒரு படத்தை காணலாம். அந்த படத்திற்கு 85 மடங்கு ஒளிர்ப்பூட்டினால் கீழ்க்காணும் படத்தை உண்டாக்கும்.
மேற்கண்ட படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சித்திரம்.சாதாரணபார்வைக்கு மரமாக தெரிந்தது மேற்கூறப்பட்டசெயன்முறையின் மூலம் அதனுள் ஒரு பூனையின் உரு மறைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் சர்ச்சை...
மறைசெய்தியியல் செய்திகள் மின்னஞ்சல் செய்திகளில், அதிலும் குறிப்பாக e-mail spam  மின்னஞ்சல்களில் மறைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதும் போது, spam அஞ்சல் என்னும் கருத்தே ஒரு புதிய வெளிச்சத்தைப் பெறுகிறது. ”சாஃபிங் மற்றும் வினோயிங்” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அனுப்புநர் அஞ்சல் செய்திகளை அகற்றி விட்டு தங்களது தடங்களை உடனடியாக நிரப்பி வைக்க முடியும்.

பயங்கரவாதிகள் மறைசெய்தியியல் நுட்பத்தைப் பயன்படுத்துவது
குறித்த வதந்திகள் முதல்முதலாய் யுஎஸ்ஏ டுடே நாளிதழில் வெளிவந்தது. பிப்ரவரி 5, 2001 அன்று ”பயங்கரவாத கட்டளைகள் இணையவெளியில் மறைவாய் உலாவருகின்றன” மற்றும் “இணைய குறியீடாக்க தொழில்நுட்பத்தின் பின்னால் பயங்கரவாதக் குழுக்கள் ஒளிந்து கொள்கின்றன’’ ஆகிய தலைப்புகளில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்தன. அதே வருடம் ஜூலையில், ஒரு கட்டுரை இன்னும் துல்லியமாய் எழுதியது: "தீவிரவாதிகள் ஜிகாத்துக்கு இணையத்தில் வலை பின்னுகின்றனர்”. அந்த கட்டுரையில் இவ்வாறு மேற்கோளிடப்பட்டது: “சமீப காலத்தில், அல் காயிதாவைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான ரகசியக் குறியீட்டு செய்திகளை ஏல விற்பனை இணையத்தளமான eBay.com தளத்தில் வெளியாகும் எண்மருவிப் புகைப்படங்களில் மறைத்து அனுப்புகின்றனர் ”. உலகெங்கும் உள்ள மற்ற ஊடகங்களும் இந்த ஊகங்களை குறிப்பாக 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பலமுறை வெளியிட்டன. ஆனால் ஆதாரங்களை அவை ஒருபோதும் காட்டவில்லை. இத்தாலிய செய்தித்தாளான கோரியெரெ டெல்லா செரா வெளியிட்ட செய்தியில், மிலனில் உள்ள வியா குவாரன்டா மசூதியில் பிடிபட்ட அல் கெய்தா பிரிவினர் தங்களது கணினிகளில் ஆபாசப்படங்களைக் கொண்டிருந்தனர். இந்த படங்கள் எல்லாம் ரகசிய செய்திகளை ஒளித்து வைக்க பயன்பட்டவையாகும் என்று கூறியது. (ஆயினும் வேறு எந்த இத்தாலிய செய்தித்தாளும் இது பற்றி எப்போதும் செய்தி வெளியிடவில்லை). யுஎஸ்ஏ டுடே கட்டுரைகள் பழம்பெரும் அயலுறவு செய்தியாளரான ஜேக் கெல்லியால் எழுதப்பட்டவையாகும். செய்திகளையும் ஆதாரங்களையும் திரித்ததாகக் கூறி இவர் 2004 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.
அக்டோபர் 2001 இல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரையில், அல்கெய்தா படங்களில் செய்திகளை மறைக்க மறைசெய்தியியல் நுட்பங்களைப் பயன்படுத்தியது என்றும், அந்த படங்கள் மின்னஞ்சல் வழியாக (யூஸ்நெட் வழி அனுப்பப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகம்) அனுப்பப்பட்டன என்றும், செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தயாரிப்பு செய்யவும் அதனைச் செயல்படுத்தவும் இவ்வாறு அவர்கள் செய்தனர் என்றும் தெரிவித்தது. 2006 ஏப்ரலில் வெளியான தி பெடரல் பிளான் ஃபார் சைபர் செக்யூரிட்டி அன்ட் இன்பர்மேஷன் அஸூரன்ஸ் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் பின்வரும் கூற்றுகளை அடக்கியிருந்தது:

”மறைசெய்தியியல் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையில் சர்வதேச ஆர்வமும் அவற்றின் வர்த்தகமயமாக்கம் மற்றும் பயன்பாடுகளும் சமீப வருடங்களில் வெடிப்பாய் விரிவடைந்திருக்கின்றன. இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் தேசிய பாதுகாப்புக்கான ஒரு அச்சுறுத்தலை முன்நிறுத்துகின்றன. மறைசெய்தியியல் தொழில்நுட்பம் கூடுதலான, ஏறக்குறைய கண்டறிய முடியாத, தகவல்களை எண்மருவித் தயாரிப்புகளில் ரகசியமாய் பொதிக்கத்தக்கதாய் இருப்பதால், வேவு மென்பொருள், கைபேசி நிரல் வழியே தகவல்களின் ரகசிய பரவலுக்கான சாத்தியம் பெரிதாய் உள்ளது.” 
“மறைசெய்தியியலால் முன்நிறுத்தப்படும் அச்சுறுத்தல் ஏராளமான உளவுத்துறை அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.” 
இதுதவிர, ஜிகாதிக்களுக்கான பயிற்சி கையேடான ”தி டெக்னிக்கல் முஜாஹித்” என்னும் இணையத்தின் ”பயங்கரவாதப் பயிற்சி நிரல்கூறு” ஒன்று, “ரகசிய தகவல்தொடர்பு மற்றும் படங்களில் ரகசியங்களை மறைப்பது” என்னும் தலைப்பில் ஒரு பிரிவைக் கொண்டிருந்தது
இவையெல்லாம் இருந்தாலும், பயங்கரவாதிகள் கணினி மறைசெய்தியியலைப் பயன்படுத்திய நிகழ்வு என்று ஒன்றும் வெளிவரவில்லை . அல் கெய்தாவின் மறைசெய்தியியல் பயன்பாடு என்பது சற்று எளிமையானது: 2008 ஆம் ஆண்டில், ரங்சீப் அக்மது என்னும் ஒரு பிரிட்டிஷ் முஸ்லீம் அல் காயிதா தொலைபேசி எண்கள் கொண்ட ஒரு முகவரி புத்தகத்தை கண்ணுக்குப் புலப்படாத மை கொண்டு எழுதி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது பயங்கரவாதக்குற்றம் உறுதி செய்யப்பட்டது.




The History of Encryption

நாத்திகன் முட்டாள்? புத்திசாலி?

$
0
0


 என் வயதினர் தரம் 8,9 இல் சமய பாடங்களைக்கற்கும்போது சித்தர்களைப்பற்றிய அறிமுகம் சமயபாடத்தின் வழியாகக்கிடைத்தது. அந்த வயதுவரை எமது வயதினரின் உலகத்திற்கு அதிசயங்கள் ஆச்சரியங்கள்  விஞ்ஞான பாடரீதியாக கிடைக்கவில்லை விஞ்ஞானம் என்பது தாவர விலங்குக்கலங்கள் தொடர்பான விடயங்களை மனப்பாடம் செய்தல்,எலக்ரிசிற்றி தொடர்பான கடினமான கணக்குகள்(அப்போது மிக கடினமாக இருந்தது) ரான்ஸிஸ்ரர்கள் இதயம் கிட்னி போன்றவைதான் சயன்ஸ் பரிமானம் தொடர்பாக சிலவிடயங்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டன.மனிதன் குரங்கின் கூர்ப்பின் இறுதிவடிவம் எமது மூதாதையர் குரங்கு அப்படின்னா என்ர தாத்தா பூட்டன் என்று பின்னே சிந்தித்தால் 123455 ஆவது நபர் ஒரு குரங்கா? ஆம் என்கின்றது பரிணாமம் சிறியவயதிலும் ஏன் இப்போதுமே குரங்கு என்ற  ஏசுவது வழக்கில் உள்ளதாலோ என்னவோ மூதாதையர்கள் குரங்கு என்பதை ஏற்றுக்கொள்வதில் அவளவு கடினம் இருந்தது ஆனால் சயன்ஸ் ஆயிற்றே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 8,9 தரங்களில் சமயத்திற்கும் சயன்ஸிற்கும் அவளவு வேறுபாடுகள் இல்லை இரண்டுமே தகவல்களைத்திணித்தன சம்பந்தர் பாடியதேவாரம் நினைவிருக்கவேண்டும் எக்ஸாமிற்கு வரும் அதே நேரம்  காற்றுசுவாசத்திக் குளுக்கோள் ஏ.ரி.பியாக மாறுவது தொடர்பான சக்கரங்களும் நினைவிருக்கவேண்டும் ஆனால் இவை ஏன் எமக்கு நினைவிருக்கவேண்டும்  என்ன காரணம்? காரணம் சிம்பிள் நல்ல மார்க்ஸ் எடுக்கவேண்டும் அவளவே.என்வே நோர்மலான எந்த சைல்டிற்கும் சமயமோ,விஞ்ஞானமோ மதமாகவே போதிக்கப்பட்டன அது தொடர்பான ஆராய்ச்சிகள் அவர்களது வயதுக்கு அப்பாற்பட்டவையாகவே இருந்தன அதோடு ஆராய்ச்சிகளூடான கற்பித்தல் தொடர்பில் எமது எடியுகேஸன் சிஸ்ரம் இல்லை.

எனவே இரண்டையும்  மனப்பாடம் செய்தோம் எம்மால் முடியுமான புள்ளிகளைமட்டுமே பெற்றுக்கொண்டோம்.படிக்கும் பாடங்கள் தொடர்பிலான எந்த ஆச்சரியங்களையும் அப்போது சந்தித்தது கிடையாது ஆனால் முதல் முதலில் ஆச்சரியங்களை எமக்கு அறிமுகப்படுத்தியது சமயபாடம்.சைவ நெறி அதுவேதான் எம்மை ஆச்சரியப்படுத்துவதில் சயன்ஸைவிட சமயம் அப்போது முந்திக்கொண்டது சயன்ஸ் பிந்திக்கொண்டமைக்கும் காரணம் இருக்கின்றது 8,9 ஆம் தரங்களில் ஏன் தரம் 1, தரம் 2 இலேயே சமயம் தன்வேலையை காட்ட ஆரம்பித்துவிடும் சமயத்தை விளங்குவதற்கு எந்த அடிப்படை அறிவும் தேவையே இல்லை ஏனென்றால் அங்கே நாயன்மார்களின் வரலாறுகள் கடவுள்கள் அவர்களில் முதலாவது இரண்டாவது மனைவிகள் கடவுள்களின் கள்ளத்தொடர்புகள் பக்தர்கள் போன்றவர்களின் வரலாறுகள் மட்டுமே சமயபாடங்களாக இருந்தன.

தரம் ஒன்றில்  கையைப்பிடித்து ஒரு அழகான ரீச்சர் "அ" "ஆ" என்று கத்தி கத்தி சொல்லி நாம்  அ,ஆ எழுத ஆரம்பித்த காலத்திலேயே கடவுள் எங்கும் இருக்கின்றார் கடவுள் எல்லாம் வல்லவர் என்பதில் ஆரம்பித்து இறைவனின் எண்குணங்கள் வரை படித்தவர்கள் நாம்.12 வயதுவரை ஒரு குழந்தையின் வாழ்க்கையில் அது பார்க்கும்,கேட்கும்,அனுபவிக்கும் அனைத்துவிடயங்களும்தான் அவனை எதிர்காலத்தில் அவன் குண இயல்பைத்தீர்மானிக்கின்றது அதாவது 12 வயதுக்குக்குறைவான சிறுவனின் மனது ஒரு பிளாங்க் பேப்பர்.ஆனால் அதில் வரையப்பட்டவைகள் தமிழ்,கணிதம்,சமயம் இவற்றுள் முக்கியமான மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துவது சமயம்தான்.சாமி கண்ணைக்குத்தும் என்பதில் இருந்து இவை ஆரம்பிக்கின்றன.வளர்ந்துவரும் குழந்தைகளை அவதானித்திருப்பீர்கள் ஒரு கட்டத்தில் அவர்களுடன்  நேரத்தை செலவிடுதல் என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாகிவிடும்...அப்பா ஏன் காகம் கறுப்பு? ஏன் பறக்குது? ஏன் நிலா இரவில ஓடுது? நான்கள் போகும்போதும் ஏன் சூரியன் கூடவே வருது? இதற்கெல்லாம் உண்மையான பதில்களை அந்தவயதில் கூறமுடியாதுதான் ஆனால் குழந்தை தன் சூழலை தெளிவாக அவதானிக்க ஆரம்பித்ததன் அடையாளங்கள் இவை.இந்தக்கேள்விகள் அப்படியே இப்படி மாறும்....கோவிலுக்கு சென்றதும் கடவுள் இருக்கிறாரா? நீ பாத்திருக்கிறியா அம்மா? ஏன் பால் ஊத்தினம்? ஏன் தேங்காய் வேண்டுறாய்? ஏன் தேர் இழுக்கினம்? என்று குழந்தை ஆரம்பித்துவிடும். வழமையான மேற்கூறிய சாதாரண கேள்விகளுக்கு ஏதாவது பதில் கூறும் நாம் கடவுள் தொடர்பான கேள்விகளைக்கேட்க ஆரம்பித்ததும் நமது ரியாக்ஸன் அறவே மாறிவிடுகின்றது.ஒன்று வாயில் தட்டிவிட்டு சாமி கண்ணைக்குத்திடும் என்று பயமூட்டுவது கடவுள் தொடர்பான பயமூட்டல்கள் இந்தவகையில் ஆரம்பிக்கின்றன.பெற்றோர்கள் இதைசெய்யாமல் விட்டாலும் வேறு பெரியவர்கள் நிச்சயம் இதைசெய்வார்கள்.கடவுள் என்ற திங்கின்மீதான பயம் என்பது இந்தவயதில்  நன்றாகவே வெற்றிகரமாக விதைக்கப்பட்டுவிடப்படுகின்றது.

ஆரம்பத்திலேயே எமக்கு சமயங்கள் ஆச்சரிங்களை அறிமுகப்படுத்துகின்றன.சம்பந்தர் செங்கட்டியை பொன்கட்டியாக்குதல்,கல் மிதத்தல்,பாம்புகடித்தவரை தேவாரம் பாடி எழுப்புதல் இவைபோக சிறுவர்கள் இவ்வயதில் நன்றாக கதைகள் கேட்பதில்,சொல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவர் சோ அதற்கு ஏற்றவகையில் ராவணன்,ராமன்,குரங்கு உருவில் அனுமன் மலையை தூக்கி சென்றது பறக்கும் புஸ்பகவிமானங்கள் ,போர்கள் சபதங்கள் என மிக சுவையான கதைகளால் சிறுவர்களின் மனது நிறைக்கப்படுகின்றன.இப்படியான அப்னோர்மல்களை நம்புவதற்குத்தான் அந்தவயது விரும்பும்.நம்பவும் செய்யும்.சமயம் தொடர்பான இவ்வாறான ஆச்சரிங்களுக்கும் அதிசயங்களுக்கும் ஏன் எதற்கு என்ற கேள்விகளோ மாற்றுக்கருத்துக்கள் தொடர்பான சிந்தனைகளோ அப்போது யாருக்கும் கிடையாது என்பது உண்மை.சோஇவற்றினூடாக சமயம் ஒரு மனிதனின் மனதில் மிக ஆழமாகப்பதியவைக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை.எனவே கடவுள் இருக்கோ இல்லையோ தவறு செய்யும்போது கடவுளால் தண்டிக்கப்பட்டுவிடுவோம் என்றபயம்,கடவுளைப்பற்றிய மாற்றுக்கருத்துக்கள்,ஆராய்தல்கள் தெய்வகுற்றங்களாக தண்டனைக்குரியகுற்றங்களாக  நிச்சயம் இவற்றால் விதைக்கப்பட்டுவிடப்படுகின்றது.இதுதான் அந்த கடவுள்பயத்தின் மீதான வேர்.

உயர்தரக்கல்வியில்கூட பரிமானம் தொடர்பான நோட்ஸ்கள்தான் வழங்கப்படுகின்றன.எனவே மனனம்செய்தல் என்பது எப்போதுமே தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. நாம் பெற்றுக்கொண்ட அறிவை பரிசோதிக்கும் தர்க்கத்துக்கு உட்படுத்தும் சந்தர்ப்பங்களை நாம் பெற்றுக்கொள்ளல் என்பதற்கான நிகழ்தகவு மிகமிகக்குறைவாகவேகாணப்படுகின்றது.ஒருவகையில் பார்த்தால் சமயத்திற்கும் சயன்ஸிற்கும் பெரியவேறுபாடு கிடையாது இரண்டுமே அண்ணளவாக மதங்களே...

மீட்டர் என்றால் என்ன என்றுகேட்டால் உங்களிடம் பதில் இருக்கின்றதா?அனைவரும் ஏற்றுக்கொண்ட நியம அளவுகள் மீட்டர் கிலோகிராம்(இவற்றை அமெரிக்கா பயன்படுத்துவதில்லை என்பதுவேறுகதை)..இது நியமமாம பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு முழம்,சாண் என்பவை வழக்கில் இருந்தன.ஆனால் அவை நியமம் அல்ல எனது கையின் அளவும் இன்னொருவரின் கையின் அளவும் ஒரே பரிமாண அளாவுகளில் இருக்காது என்பதால் இதில் சிக்கல்கள் இருந்தன.அளவுள் தொடர்பாக கூறுவதால் இதையும் கூறவேண்டும்.

தமிழனின் பெருமைகள் தொடர்பில் பின்வரும் எண்ணிக்கைதொடர்பான ஒருவிவரம் பேஸ்புக்கில் பெருமளவாக பகிர்ந்துகொள்ளப்படுகின்றது.

௱௫௰௬ = 156
௲ =1000
௲௧= 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (பத்து லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (பத்து கோடி)
௱௱௱௲= 1,000,000,000 (நூறு கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲= 100,000,000,000,000 (கோடி கோடி)

இதில் எனக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தினால் ஓகே பில்லியன்,ரில்லியன் எல்லாம் வழக்கில் இருக்கின்றது காரணம் இவற்றின் பயன்கள்,பூமியின் ஆயுள் ,சூரியனின் ஆயுள் நட்சத்திரங்களின் சராசரி எண்ணிக்கை என்பவற்றிற்கு இவை பயன்படும் ஆனால் மேல் கோடி கோடி,லட்சம் கோடி என்றெல்லாம் கூறுகிறார்களே.இவை உருவாக்கப்பட்டகாலத்திலோ அல்லது இப்போதோ இவற்றின் பயன் என்ன? எதற்காக உருவாக்கினார்கள்? இப்போதைய சயன்ஸ் ரெக்னோலஜியுலேயே ஒரு அளவிற்கு அப்பால் எண்ணிக்கையை பரிசோதனை ரீதியாக அறிதல் இயலாதது என்று ஆகிவிட்டது.முதலில் இவ்வாறானவற்றைக் கணிப்பதற்கு அப்படியான பொருட்கள்வேண்டுமே 

மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்றேன்.பிஸிக்ஸ் என்றால் என்ன என்றுகேட்டால் அளவீடுகள் என்றபதிலில் இருந்து உருவாக்கப்படுகின்றது பிஸிக்ஸ்,பயோலொஜி அவதானிப்புக்கள்,பரிசோதனைகள்,மற்ஸ் எண்கள் என்றால் என்ன ஏன் என்றால் விளக்கம் கூறமுடியுமா? எல்லாம் நாம் எமக்காக உருவாக்கியவைதான்.சிந்தித்தால் எம்மைவிட்டு வெளியே எம்முடன் தொடர்பில் உள்ள அத்தனை பொருட்களையும் எமக்குப்பழக்கப்படுத்திய பொருட்களாக மாற்றிவிடுகின்றோம்/எமக்கு பழக்கப்படுத்திக்கொள்கின்றோம்.இது நடைபெறவில்லையாயின் அப்பொருள் மீதான பயம் மிரட்சி ஏற்பட்டுவிடும்.இதுவரை வாழ்க்கையில் நீங்கள் அவதானித்திராத ஒரு பொருளை அவதானிக்கும்போது குழப்பம் ஏற்படும் மீண்டும் அதேபொருளை சந்திக்கும்போது அது எம்முடன் இணைந்துவிடும்.சயன்ஸ் என்ற தோற் உருவானவிதம் இப்படியாகத்தான் இருக்கின்றது.சமயத்தைப்பற்றி எதுவும் கூறவே தேவையில்லை.

அப்படியானால் ஒன்றுமட்டும் உண்மை  நாம் தனிமையாக்கப்பட்டிருக்கின்றோம் பிரபஞ்ச தனிமை. நாம் எமக்காக உருவாக்கிய சமயம் சயன்ஸ் இரண்டையும் கொண்டு அந்த தனிமையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டுவிட்டதாக திருப்திப்பட்டுக்கொள்கின்றோம் அவளவுதான்.ஆனால் இரண்டிலும் ஒப்பீட்டு ரீதியில் பில்லியன் மடங்கால் சயன்ஸ் உயர்ந்துதான் நிற்கின்றது.வாழ்க்கைத்தொடர்ச்சிக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றது.

எனது  தந்தை ஆத்திகர் அவரது வயது 54 அவரை என்னால் எளிதில் கடவுள் தொடர்பான வாதத்தில் தோற்கடிக்கமுடியும்.அவருக்கு பரிணாமமோ,பிக் பாங்கோ தெரியாது ஏன் அவர் நம்பும் சமயம் தொடர்பான இதிகாசபுராணங்கள் வேதங்களையும் அவர் படித்தது கிடையாது அனேக மக்களைப்போலவே அவருக்கும் அதைப்படிக்கவேண்டிய  தெரிந்திருக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை..
பல தடவைகள் வாழ்க்கையில்பல கஸ்ரங்களை அனுபவித்திருக்கின்றார்.அவற்றைகூறியிருக்கின்றார் ஆனால் கூடவே கூறுவார் கடவுள்தான் காப்பாற்றினார் என்று.
 நான் விரும்பினால் அவரது கடவுள் தொடர்பான அவரது நம்பிக்கையை சிதறடித்திருக்கு முடியும் ஆனால் செய்யவில்லை.(சில பல தடவைகள் நக்கலாக விவாதித்திருக்கின்றேன் கோபமடைந்திருக்கிறார் அப்படியே மேட்டரைவிட்டுவிடுவேன் இப்படியும் நடந்திருக்கின்றது வாய் சும்மா இருக்குதில்லையே) காரணம் அவரது  40,50 வருட நம்பிக்கையை நான் நிர்மூலமாக்க விரும்பவில்லை,அவர் கரையேற உதவுவதற்கு ஊக்கத்தையும் தாங்கும் தன்மையையும் மன வலிமையையும் கொடுத்த அந்த நம்பிக்கையே தொடர்ந்து அவர் பயணத்தை முடிக்கும்வரை உதவியாக இருக்கட்டும் என்று ஒதுங்கிவிட்டேன்.

நாத்திகம் தொடர்பான தோற்கள் மனதில் தோன்றஆரம்பித்ததும் கேள்விகள் எழ ஆரம்பித்ததும் திரு நீறு அணிவதில்லை பொட்டு அணிவதில்லை கைகால்களில் நூல் அணிவதில்லை வெள்ளிக்கிழமை மச்சம் சாப்பிடுவது என்று  ஒரு லிஸ்ரே போட்டாகிவிட்டது.இப்போதும் தொடர்வதுவேறுகதை ஆனால் ஆரம்பத்தில் ஒன்று செய்தேன் எனக்கு யாராவது திரு நீறு அணிவித்தால் அழித்துவிடுவேன்.

ஆனால் கமல் ஒருதடவை கூறினார்(நாத்திக தோற்றினால் கமலையும் பிடித்துவிட்டது) நான் நாத்திகன் ஆனால் எனது மகள் ஆத்திகம் பழகினால் அது அவரது சுதந்திரம் அவர் எனக்கு பொட்டுவைத்தால் நான் அதை அழிக்கமாட்டேன் அது அன்பால் வைத்தபொட்டு.அன்புதான் கவனிக்கப்படவேண்டியது.இந்த வசனங்கள் பளார் என்று அறைந்தது.
அன்பேசிவத்தில்...யார் என்றே தெரியாத ஒரு பையனுக்காக அழுற மனசிருக்கே அதுதான்சேர் கடவுள்.....அப்படியான கடவுள்களாக நாம் இருந்துவிட்டுசெல்வோம்.


நாத்தீகர்களிடம் சரி பகுத்தறிவாளிகளிடம் 2 வகை ஒன்று வலு கட்டயமாக கடவுள் இல்லை ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கக்கூடாது இல்லையென்றால் இல்லைத்தான்.சரியாக ஆத்திகர்களின் வழி இதேதான்,மற்றையது ஏதோ இருக்கும் அறிவைவைத்துக்கொண்டு தம்மைத்தாமே கேட்கும் சில கேள்விகளால் தூண்டப்பட்டவர்கள்.கடவுள் என்பவர் அனைத்தையுமே ஆட்சி செய்பவரானால் அவர் ஒரு அரசன்.ஆனால் உலகில் நடக்கும்  சம்பவங்களைப்பார்த்தால் நாம் ஒரு ஒழுங்கான அரசனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படவில்லையே.
கண்ணுக்குக்கண் தலைக்கு தலை என்பது காட்டுமிராண்டித்தனம் என மனிதர்களாகிய நாம்தான் சொல்கின்றோம். ஆனால் ஒரு குழந்தை ரயிலில் அடிபட்டு இறந்தால் போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணிச்சோ யாராவது விபத்தில் இறந்தாலும் அதையேதான் சொல்கின்றார்கள்.மனிதர்களாகிய நாமே தலைக்குத்தலை என்பதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறினால்   ஆத்திகர்கள் கூறிய இயல்புகளைக்கொண்ட கடவுளுக்கு இது முற்றிலும் முரணாக இருக்கின்றதே....இப்படி பல கேள்விககளால் மாறியவர்கள்.பொதுவாக பகுத்தறிவாளர்களை புத்திசாலிகள் என பொதுவான அபிப்பிராயம் இருப்பதற்கு காரணம் அவர்களது பரிசோதிக்கும்,ஆராயும் இயல்புகள் பரிமாணம்,பிக் பாங்க்,போஸன் என்று பல விடயங்கள் அவர்களது துறைக்கு சம்பந்தமில்லாத பல துறைகளில் அவர்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கும் ஆனால் ஆத்திகர்களால் கீதையையோ பைபிளையோ,குர்ரானையோ தாண்டமுடிதல்கடினம்(இது பொதுவான போக்கு சகல சமயங்களிலும் பிரபல விஞ்ஞானிகள் ஆத்திகர்களாக இருந்திருக்கின்றார்கள். நான் கூறுவது சாமானியர்களின் பொதுவான போக்கு)

 ஒரு நம்பிக்கையை அழித்தால் அதைவிட மேலான ஒரு நம்பிக்கையை அல்லது அதற்கு சமனான ஒரு நம்பிக்கையை அவருக்கு கொடுக்கவேண்டும்.மத  நம்பிக்கையை அழித்துவிட்டால் அதற்கு சமனான அல்லது அதற்கு மேலான ஒரு நம்பிக்கையை வேறு எதனாலாவது கொடுக்கமுடியும் என்று நம்புகின்றீர்களா? எனது பதில் இல்லை என்பதுதான் சிறியவயதில் இருந்து விதைக்கப்பட்ட பயத்தாலான அந்த  நம்பிக்கையின் காரணமான பிரதிபலிப்புக்கள் ஊக்குவிப்புக்களை வேறு எதனாலும்  ஆத்திகனுக்கு வழங்கமுடியாது பல இடங்களில் ஆத்திகன் சம்பந்தமில்லாமல் கதைத்து தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமைக்கு இதுதான் காரணம் தான் இதுவரை நம்பிவந்த துடுப்பு உண்மையில் பயனற்ற எதுவே இல்லாதது என்பதை ஏற்றுக்கொள்வது தொடர்பான பயம் அது.
எனவே நாத்திகர்களுக்கு இருக்கும் கடமை இதுதான் என நான் நம்புகின்றேன்.உங்களால் ஆத்திகனின் நம்பிக்கைக்கு மேலான நம்பிக்கையை வழங்கமுடியுமானால் அவனது நம்பிக்கையை சுக்கு நூறாக்குங்கள்...இல்லையெனில் அவனது பார்வையில் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போவோமே?

ஒருவனது பலவீனத்தை மதிக்கவேண்டுமல்லவா?




ஆஞ்சனேயர் -மருதனாமடம்

$
0
0

ஆஞ்சனேயர்...

கை உடைந்துவிழுந்தபின்னர் இப்பொழுதுதான் சிலையைப்பார்த்தேன்.... ஒன்றரைக்கோடி(அதவிட அதிகமோ தெரியாது) கட்டப்பட்டதாம்...கை உடைய தெய்வக்குத்தமானது தனிக்கதை...

நவீல்ட் பாடசாலைக்கு சென்றபோது கூறினார்கள்... காது கேட்காத மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஒரு உபகரணம் இருக்கின்றது Assistive listening systems இதன் விலை 1,183 டொலர்கள், இந்த உபகரணத்திற்குப்பற்றாக்குறைநிலவுகின்றது..இதனால் இந்த உபகரணத்தை பயன்படுத்துவதற்கே ரைம்ரேபிள் போட்டுத்தான் பயன்படுத்துகின்றோம் என்று...

கோவிலுக்கு லட்சக்கணக்கில் செலவழித்தாலும் பறுவாயில்லை கோடிக்கணக்கில் புலம் பெயர்ந்து செலவழிக்கின்றார்கள்... நடிகனுக்கு பால் ஊத்துவதைவிட இது அதிக செலவுதான்...2ம் அண்ணளவாக ஒன்றுதான்...

காசு மெத்திப்போய் இருந்தால் இலங்கையின் வடபுறத்தில் இப்படியான விசேட உதவி தேவையானோருக்கான தேவைகள் நிறையவே இருக்கின்றன அதற்கு செலவழியுங்கள்..எதற்கையா கோவிலில் கொட்டுகின்றீர்கள் அதுதான் ஊருக்கு 400 கோவில்கள் இருக்கின்றதே அது போதாதா? அதுவும் ஆஞ்ச நேயர் சிக்ஸ்பாக்கோடு நிற்கின்றார்..ஏனென்றால் ஒலிம்பியாட் அவார்ட் வாங்கியவர் பாருங்கள் சிக்ஸ்பாக் யாருடைய கலாச்சாரம்?அது சரி ஒரு சிலை பார்த்தேன் பிள்ளையாரே சிக்ஸ்பாக்கோட நின்றார்..பிள்ளையாரின் சாமுந்திரிகா லட்சணத்தின்படி பிள்ளையாரின் பானைவயிறு பிரபஞ்ச உள்ளடக்கத்தின் குறியீடு...என்ன நாசமோ...கோடிக்கணக்கில் சிலைகளுக்கும்,கோவில்களுக்கும்,கல்யாணமண்டபங்களுக்கும்செலவளிப்பதுதான் மிகுந்த எரிச்சலாக இருக்கின்றது..

உண்மையில் உதவி செய்யவேண்டியவர்கள் பலர் இங்கே இருக்கின்றார்கள் ஐயா போய்ப்பாருங்கள்

ஒரு ஊருக்கு இத்தனைகோவில்கள் என்று சட்டம்போட்டால்தான் சரி அடிக்கடிகோவில்களைக்கட்டி பூசை செய்து நாம் கடவுள்களை காப்பாற்றுகின்றோம்...அவர்கள் இந்தப்பக்கம் எட்டிப்பார்த்ததாய் எனக்குத்தெரியவில்லை



ஆளுனர் ஒரு கண் தெரியாத பிள்ளையைக்கான ஒப்பிரேசன் செலவை முழுமையாக தானே ஏற்றிருக்கின்றாராம்...உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம்(என்ன இழவு அரசியலோதேவையான நேரத்தில் உதவி முக்கியம்)

ஏண்டா இலங்கையை எரிச்ச அனுமாருக்கு இலங்கையில சிலைன்னா வன்னிலையும் ஒரு சிலைவைக்க சொல்லனும்டா அதையும் சிக்ஸ்பாக்கோட வச்சிடுவம்டா விளங்கும்டா விளங்கும்...


"இறைவரில்லா ஆலயத்தில் ஏற்றிவைத்த தீபம்

இரவுபகல் எரிவதனால் யாருக்கென்ன லாபம்?



WWE WrestleMania 29 என்னாச்சு-புல் மச்

$
0
0

WWE WrestleMania 29 ரசிகர்களிடையே  சில பல எதிர்பார்ப்புக்கள்

மச் தொடர்பில் இருந்திருக்கலாம்.அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மச் சீனா வேர்ஸ் ரொக் மச்தான் சென்ற ரெஸ்ரீல்மேனியாவில் சீனா தோற்றுவிட்டார்.ஆரம்பகாலத்தில் austin vs rock மச்கள் WWF மச்களை பார்த்த நம்பிக்கையில் ரொக் சீனாவின் முதுகெலும்பை முறித்துவிடுவார்(மிகைப்படுத்தல்) என்று நம்பியிருன்தேன் ஆனால் முறிந்தது என்னமோ என் முதுகெலும்புதான்.பழைய ரொக்கை காணவே முடியவில்லை.ஸ்ரோயிட் ஏற்றி தனது உடலைப்பெருப்பித்தார் என்றரொக்மீதான குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில் சென்ற ரெஸ்ரீல் மேனியா மச் சிலோ என்ற சிலோ.இதற்கு சீனாவே வெற்றிபெற்றிருக்கலாம் என்று தோன்றியது.
Wrestlemania 28 John Cena Vs. The Rock சென்றவருடம் நடைபெற்ற மச்




இன்று நடைபெற்ற மச்
சென்றவருடத்தை விட தேவல....




தயவு செய்து இந்த மச்சைப்பாருங்கள்...மீண்டும் இப்படி ஒரு மச்சை WWE காணப்போவதில்லை....இதேவேகத்தில் இதே ரொக்கை மீண்டும் நாங்கள் பார்க்கப்போவதில்லை ஜி.ஐ.ஜோவில் மட்டும்தான் பார்க்கலாம்போலும்


Undertaker Vs Cm Punk


வழமையாக ஒவ்வொரு ரெஸ்ரீல் மேனியாவுக்கும் ஏதாவது வித்தியாசமான பயப்படுத்தும் கெட்டப்பில் தோன்றுவார் ரேக்கர் இந்தமுறையும் என்ரி வித்தியாசமாகத்தான் இருந்தது.ஆனால் கேன்,ஹோஜன்,ஷோன்மைக்கல்,ரிபிளேஜ் என்று பெரிய பெரிய ஜாம்பவாங்களோடு நடைபெற்ற ரெஸ்ரீல் மேனியாவை பொடிப்பயல் சி.எம் பங்குடன் நடத்தி ரெஸ்ரீல் மேனியாவையும் ரேக்கரையும் கேவலப்படுத்திவிட்டார்கள் என்றுதான் நான் கூறுவேன்...முடியல....பட் வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்



WWE  ஸ்கிரிப்ட் WWE  பொய்யா உண்மையா என்று முன்னர் சில பதிவுகள் எழுதியிருந்தேன்...அது ஸ்கிரிப்ட்தான் என்று காட்டியது இந்த மச்சின் முடிவு(மச் அல்ல)




WWE செயார்மன் மக்மானுக்கு கேட்டுக்கொள்வது இதுதான் WWE ஐ விட்டு சென்றுவிட்ட பழைய லெஜன்ட்களை goldberg,shawn michals,rvd,batista,nash,kurt angle மீண்டும் அழைத்துவந்தால் WWE பிழைக்கும் இல்லையெனில் இனி WWE மெல்ல சாகும்(இப்ப உயிரோட இருக்குதாக்கும்)

all time favorite matches  









project I.G.I பி.சி கேம் இப்போதும் முன்னணியில்

$
0
0
நீங்கள் ஒரு கேம்  வெறியராக இருக்கலாம் இப்பொழுது நீங்கள் crysis,assassin's creed,far cry ,call of duty black ops ,battlefield என்று சகலவற்றையும் பிரித்துமேய்ந்துவிட்டு அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்கில் இருப்பவராகக்கூட இருக்கலாம் ஆனால் நிச்சயமாக ஒன்றைக்கூறமுடியும் நீங்கள் இந்தவெறித்தனத்தை  ஒரு கேமில்தான் ஆரம்பித்திருப்பீர்கள் அல்லது அந்தக்கேம்தான் இதை ஆரம்பித்திருக்கும். ஐ.ஜி.ஐ project I.G.I. இது December 15, 2000 இல் வெளிவந்த கேம் ஆனால் இன்றும் கேம் பிரியர்களிடத்தில் இதற்கு தனிமரியாதை உண்டு.முதன் முதலில் (வெளிவந்த காலத்தில்) ரியலான தோற்றங்களையுடைய துப்பாக்கிகள்,ஆயுதங்கள்,மப் என்பவற்றுடன் வெளிவந்த கேம் என்றால் அதுஇதுதான்.ஆனால் இதில் மல்ரிப்பிளேயர் மட்டும் இல்லை. மல்ரிப்பிளேயர் இல்லாமல் இப்போதைய கேம்கள் வெளிவருவதில்லை.
இந்தக்கேமில் உள்ள ஸ்பெஸல் எதுவெனில் இக்கேமின் கடினத்தன்மை ஒருவேளை I.G.I  ஐ 2,3 நாட்களில்(சிலர் ஒரே நாளில்) முடித்துவிட்டீர்கள் என்றால் அடுத்தடுத்த நாட்களில் உங்கள் நண்பர்களின் முன்னால் அல்லது  உங்கள் வீட்டிற்கு வரும் அப்போதுதான் கேமிற்கு தத்துக்குட்டிகளாக இருக்கும் வாண்டுகளுக்கு முன்னால் ஏதோ சில்வஸ்ரர் ரம்போ கணக்காக ஒவ்வொரு லெவலையும் பாய்ந்து பாய்ந்து சினப்பர்ஷொட்,கிரினேட் லோஞ்சர்கள் என போட்டுவாங்கி அவர்களை பிரமிப்பில் ஆழ்த்தலாம் ஆனால் இதை விளையாடாமல் 1 வாரம் விட்டபின்னர் மீண்டும் இதே ரம்போ லெவலில் இறங்கினால் உடனே விண்டோஸில் கேம் ஓவர் என்றுவரும்.இதுதான் இக்கேமின் ஸ்பெஸாலிட்டி.
முதலில்  ஒரு சிறிய அறிமுகம்...
சகல 3டி First-person shooter கேம்களிலும் சில பொதுவான ஒற்றுமையானவிடயங்கள் இருக்கும். உங்கள் காரக்ரருக்கு  ஹெல்த்/லைப் தரப்பட்டிருக்கும்.இது முடிவடைந்துவிட்டால் கேம் ஓவராகிவிடும்.
ஐ.ஜி.ஐயில் அந்த ஹெல்த்பாக்/லைப் இதுதான்.இது முடிவடைந்துவிட்டால் கேம் ஓவர்.
ஆனால் சில லெவல்களில் குறைவடைந்த ஹெல்த்தை அதிகரிப்பதற்காக மெடிக்கல் சிறிஞ் எங்கேயாவது தரப்பட்டிருக்கும்.


அடுத்த ஒற்றுமை அமோ.சூட்டிங்க் கேம்களாக இருந்தால் துப்பாக்கிகளின் பெயர்களுடன் துப்பாக்கிகளின் உள்ளேயுள்ள குண்டுகளின் அளவுகளையும் குறிப்பிட்டிருப்பார்கள் தமிழ்ப்படங்களில் வருவதுபோல்  இன்பினிட்டி புல்லட்ஸ் தரப்படமாட்டாது.

பாருங்கள் இத்துப்பாக்கியின் பெயர் மினிமி 97 குண்டுகள் மிச்சமாக உள்ளன.சுடும்போது இவை குறைந்துகொண்டே இருக்கும்.இக்கேமை நானும் எனது நண்பர்களும் 2002,03 இல் விளையாட ஆரம்பித்தோம் அப்போது ஆர்மிக்காம்ப் வழியாக செல்லும்போது அடே அந்த மினிமி சரியில்லையடா  Jackhammer தாண்டா சரியான துவக்கு அது இதுவென்று கதைத்துக்கொண்டுபோனால் ஆர்மிக்காரன் ஒருமாதிரித்தானே பார்ப்பான்.ஒரு தடவை அவன் ஆச்சரியமாக எட்டிப்பார்க்க நிலமை புரிந்து பகீர் என்றது.போ நாயே என்றுவிட்டுவிட்டான்.



இந்த 2 விடயங்களும் பொதுவாக சகல கேம்களிலும் இருக்கும்.அதோடு மப் தரப்பட்டிருக்கும்.

கேம் ஸ்கீரின் இப்படித்தான் இருக்கும்.வலதுபக்க கீழ் மூலையில் அமோ இடதுபக்க கீழ் மூலையில் ஹெல்த்/லைப்ஃப்
 I.G.I கேமில் வரும் சகல துப்பாக்கிகள் அவற்றின் விபரம் இங்கே கிளிக்

கேமில் உள்ள Characters

David Llewellyn Jones - Jones is an agent for I.G.I. (Institute for Geotactical Intelligence) and former British SAS operator. Players control him as the main character.

Rebecca Anya - Anya is the contact at headquarters who directs Jones via's radio. She appears in the final mission to defuse the bomb.

Jach Priboi - Soviet Arms Dealer

Josef Priboi - Jach's Nephew

Ekk - a Russian woman who intends to destroy Europe by nuclear warfare.

Captain Harrison - commander of allied troops, which aid Jones in some missions, and an ex-Green Beret.
அத்துடன் கேம் ஒரு கதையினூடாகவே நகர்கின்றது.

David Jones is sent off to find Josef Priboi, a Russian arms dealer who is believed to have information on a stolen nuclear warhead. As he helps Captain Harrison, apprehend Josef, he discovers that the brains of the operation is Josef's uncle Jach, whom Jones then attempts to apprehend instead. He discovers his location by planting a virus in Jach's communications center.
While Jach Priboi is taken away in helicopter by Jones, the copter is shot down by Ekk. The Russians take Priboi, as well as Jones' equipment. Jones then has to clear the border and find his equipment. He then hijacks the train carrying Priboi and takes him in for interrogation. Learning about the involvement of Ekk, he sets off to catch her and find the nuclear weapon.
Ekk escapes on her first meeting with Jones, but Jones kills her after finding her second hideout as well as the nuclear warhead.

இந்தக்கேமை கிரைஸிஸ் போன்ற கேம்களை விளையாடிவர்கள் மீண்டும் விளையாடிப்பார்க்கும்போது அல்லது கிரைஸிஸ் விளையாடியபின்னர் முதல்முதலில் ஐ.ஜி.ஐயை விளையாடும்போது இக்கேமில் உள்ள குறைபாடுகளை அவதானிக்கமுடியும்.ஆனால் இது வெளிவந்தகாலத்தில்  நாம் இப்போது காண்பவை எல்லாம் குறைபாடுகளல்ல அந்த ஆண்டுக்கு இது பேர்பெக்ட்டான கேம்தான்.கடினத்தன்மை இன்ரெஸ்ட் காரணமாக இன்றும் தொடர்கின்றது என்பது பெரியவிடயம்.

முதலாவது கிராபிக்ஸ் ரெஸலூஸன் குறைவு.ஒரு மரத்திற்கு மிக அருகாமையில் சென்றால் எல்லாம் சிறிய சிறிய பொக்ஸ்களாக தெரியும்(உற்று அவதானித்தால்).அதைவிட எனிமீஸ் கேமில் வரும் பாத்திரங்கள் எல்லாமே பேப்பர் கட்டிங்கில் செய்த  அனிமேஸன் கதாப்பாத்திரங்களாக தெரியும்.துப்பாக்கியால் சுட முடியுமேதவிர துப்பாக்கியால் தாக்கும்வசதி இல்லை.இப்போதையகேம்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் சென்று நின்றுகொண்டு காம்பைப்பார்த்தோமானால் எமது எதிரிகளின் உருவங்கள் கண்ணிற்குத்தெரியாமல் போய்விடும் அதற்குப்பதில் அவர்கள் நிற்குமிடங்கள் கறுப்பு நிறத்தினால் ஆன நிழல்களாக தெரியும் அது அசைந்தால் அவர்கள் அசைகின்றார்கள் எனக்கொள்ளவேண்டியதுதான்.


ஐ.ஜி.ஐ கேமின் மப் கொம்பியூட்டர் இதுதான்..இதன் மூலம் நீங்கள் முடிக்கவேண்டியமிஸினின் காம்பின் வரைபடம் எதிர்களின் அசைவுகள் முதலில் எங்கு செல்லவேண்டும் என்பதையெல்லாம் அவதானிக்கமுடியும்.
எந்தக்கேமையும்  விளையாட ஆரம்பிப்பதற்கு முன்னர் அதன் செற்றிங்கில் சென்று கொன்ரோல் கீக்களை அவதானித்தால் நன்றாக இருக்கும். ஐஜிஐ யில் சிஃப்ட் கீ கதவுகளைத்திறத்தல்,கொம்பியூட்டர் யூஸிங்க்,கேபிள்களில் வழுக்கி செல்லல் போன்றவற்றிற்கு உபயோகப்படுகின்றது.தரையில் விழுந்துகிடக்கும் அல்லது வேறு எங்காவது இருக்கும் ஆயுதத்தை எடுக்கவிரும்பினால் அதன் மீது ஏறி நிற்பதுபோல் சென்றால் அதை எடுத்துக்கொள்ளலாம் ஆனால் ஐ.ஜி.ஐ 2 வில் இவ்வாறு செய்யமுடியாது 2 வில் நீங்கள் கொண்டு செல்லும் ஆயுதங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை ஒன்றை கீழே போட்டுவிட்டுத்தான் மற்றையதை எடுத்துக்கொள்ளமுடியும்.

கேமில் அடிக்கடி நமக்கு கட்டளைகளைப்பிறப்பித்துக்கொண்டிருக்கும் ஆயா Rebecca Anya இவர்தான்
அதோடு  Binoculars  தரப்பட்டிருக்கும்.இந்த  Binoculars   இல் உள்ள ஸ்பெஸல் என்னவென்றால் எமது எதிரிகளை சிவப்புக்கட்டமிட்டுக்காட்டும் சோ அலைந்துதேடிப்பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை.


இனி project I.G.I இல் உள்ள கடினமான லெவல்களையும் அவற்றை எப்படி வெற்றிகரமாக முடிப்பது என்பதையும்பார்ப்போம்...

கேமை இலவசமாக டவுன்லோட்செய்ய இங்கே கிளிக்..

கேமை இன்ஸ்டோல் செய்ததும் செற்றிங்கிற்கு சென்று படத்தில் காட்டியவாறு இன்வேர்ட் மவுஸ் ஒப்ஸனை நோ என்று கொடுத்து ஓகேயைக்கொடுத்துவிடுங்கள் இல்லையெனில் நீங்கள் வலதுபக்கம் மவுஸை திருப்பினால் கேம் காரக்ரர் இடதுபக்கம் திரும்பும் தலை குழம்பிவிடும்.



முதலில் மிகக்கடினமான லெவலாகதெரிவது IGI1 லெவல் 6 Get Priboi
இதை எவ்வாறு முடிப்பது.


இது முதல்வழி அப்படியேமலைக்கு பின்புறமாக நேரே சென்று முன் கதவுவழியாக உள்ளே செல்லல்,உள்ளே சென்றதும் உள்ளே இருக்கும் கதவைத்திறக்காமல் கதவில் இரண்டுதடவைகள் சுட்டுவிட்டுக்காத்திருந்தால் உள்ளே இருப்பவர் தானாக ஓடிவந்து கதவைத்திறப்பார் உடனே சுடமுடியும்.


இது 2 ஆவது வழி பின்புறமாகத்தாக்குவது.சிவப்புக்கோடால் காட்டப்பட்டிருக்கும் பாதையில் சென்றால் அங்கே 4 புறமும் அடைக்கப்பட்ட ஒரு தொகுதி இருக்கும் காட்டப்பட்டுள்ள வளைவுபோன்ற பகுதிதான் அது அதன் பின்புறம் பரல்கள் உள்ளன அதன் உதவியால் உள்ளே குதிக்கமுடியும் பின்னர் உள்ளே பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும் அதன் உதவியால் கூடையின் மீது ஏறி கேபிளில் ஏறி அம்புக்குறி முடியுமிடத்தை அடைய முடியும் அப்படியே உள்ளே செல்லாமல் ஓடலாம் ஆனால் உள்ளே லோஞ்சர் இருக்கின்றது அது இல்லாமல் டாங்கியை சமாளிக்கமுடியாது சோ உள்ளே சென்று எடுக்கவேண்டியது அவசியம்.














எப்படியும் டாங்கியை சுட்டதும் அலார்ம் அடித்திருக்கும் சோ அலார்ம் பட்டினைகிளிக் செய்து அதை நிறுத்திவிடலாம்.
சிவப்பு நிறத்தில் புள்ளடியிடப்பட்ட பகுதியில் நின்றுகொண்டு டாங்கியை சுட்டுவீழ்த்தமுடியும் அபாய ஒலி ஒலித்திருந்தால் டாங்கி வெளியேவந்திருக்கும் இல்லையெனில் அதன் இருப்பிடத்தில் வைத்தே அழிக்கமுடியும்.சிவப்பு புள்ளிகளில் காட்டப்பட்டிருப்பது எதிரிகளின் நிலைகள். 1 எனக்க்காட்டப்பட்ட பகுதியினுள்ளே கதவைத்திறந்ததும் உள்ளே ஒரு எதிரி நிற்பான்.அதைவிட அடுத்த கதவைத்திறந்து 2  இரும்பு கொள்கலன்களுக்கிடையில் நின்றுகொண்டு கையெறிகுண்டை அவர்கள் மீது வீசினாலே போதுமானது அதோடு உள்ளே இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் எடுக்கவேண்டிய்ம்.முக்கியமாக சி4 ஐ எடுக்கவேண்டும் அதைத்தவறவிட்டால் கேம் முடிவடையாது.


உள்ளே இருக்கும் ஒரு ரக்கில் உள்ள இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்



முதன் முதலில் ஐ.ஜி.ஐ விளையாடிய நாட்களில் இதைக்கவனிக்காமல் சென்று ஏன் கேம் நகரவில்லை என குழம்பியதுண்டு.

பின்னர் கீழே காட்டியது போன்று சென்று பவரை ஓஃப் செய்யவும்.பவர் பில்டிங்கிற்கருகில் செக்கியூரிட்டி கமரா உள்ளது சினைப்பரின் உதவியால் அதை அழிக்கவும்.கையோடு நீங்கள் இருக்கும் காம்பிற்கு வெளியே ஒரு ரவரில் ஒரு எதிரி இருப்பான் அவனையும் சினைப்பரின் உதவியால் முடித்துவிடுங்கள்.
2 எனக்காட்டப்படும் பில்டிங்கின் அருகில் சிவப்புபுள்ளியிடப்பட்ட இடத்தில் அலார்ம் சுவிட்ச் உள்ளது ஏற்கனவே அலார்ம் அடித்தால் அதன் உதவியால் நிறுத்தவும் ஏனெனில் எழ்ப்பொழுதும் 4 எதிரிகள் ஓடிவந்துகொண்டே இருப்பார்கள். நிறுத்திவிட்டு அவர்களை சுட்டுவிட்டால் எல்லாம் அடங்கிவிடும்

இதன் பின்னர் நீங்கள் செய்யவேண்டியது முன்னால் இருக்கும் ரவரில் ஏறி அடுத்த ரவருக்கு கேபிள் வழியாக வழிக்கி செல்லவேண்டியதுதான் ஆனால் அதை சர்வ சாதாரணமாக செய்தீர்களானால் கேம் ஓவர்.காரணம் 1)அவ்வழியால் ஒரு ஹெலிவரும் அதன் மூலம் சினைப்பர் தாக்குதல் நடத்தப்படும் கீழே எதிரிகள் வந்து மேலே இருக்கும் உங்களை சுட்டுவீழ்த்திவிடுவார்கள்  சோ என்ன செய்வது?
முதலில்  அந்தரவர் மீது ஏற தொடங்குங்கள் ஹெலியின் சத்தம் கேட்டதும் கீழே இறங்கி ஓடிவந்து பில்டிங்க2 விற்குள் பதுங்கிக்கொள்ளுங்கள் ஹெலி சென்று மறையும் வரை.எட்டிப்பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டு தலையை ஹெலிக்கு காட்டினால் தலைக்குள்ளால் குண்டு சென்றுவிடும் ஜாக்கிரதை. பின்னர் வெளியே இருக்கும் எதிரிகளை சுட்டுவீழ்த்திவிட்டு வெளியே ஓடிவிடமுடியும்.எதிரிகள் வெளியே வந்து தாமாக கேட்டைத்திறந்துவிட்டு நின்றால்தான் இது சாத்தியம் சப்போஸ் அவர்கள் கேற்றைத்திறக்கவில்லை சகலரும் இறன்துவிட்டார்கள் என்றால் நீங்கள் ரவரில் ஏறித்தான் செல்லவேண்டும்.ஆனால் உடனே ரவரில் ஏறினீர்கள் என்றால் அரைவாசி உயரத்திற்கு சென்றதும் சுட்டுவிடுவார்கள் சோ என்ன செய்யவேண்டும்?



எதிரிகள் வெளியேவரும் அந்தக்கூடாரத்திற்கருகில் சென்றுProximity_Mine ஐ கதவின் அருகில் பொருத்திவிட்டீர்கள் என்றால் ஓகே அவர்கள் வெளியேவந்தால் வெடித்துவிடும் பொருத்துவிட்டு நீங்கள் அவ்விடத்தில் நின்றாலும் வெடித்துவிடும்.சோ வைத்தவுடன் நகர்ந்துவிடவும்.பின்னர் ரவரில் அரைவாசித்தூரம் ஏறியதும் ஹெலியின் சத்தம் கேட்க சிபிட் கீயைக்கொடுத்து கீழே இறங்கி மறைந்துகொள்ளவும்.அவர்களே வந்து கேட்டைத்திறப்பார்கள்.ஹெலி சென்றதும் அவர்களை சுட்டுவிட்டு வெளியெ ஓடிவிடவும்.அடுத்த ரவர் தென்படும் அந்த ரவரில் நிற்கும் எதிரியைத்தான் ஏற்கனவே சுட்டுவிட்டீர்கள் சோ கீழே இறங்கி அடுத்த காம்பிற்கு செல்லுங்கள் இடையில் இருக்கும் ரவரை கவனிக்கவேண்டாம் அதன் அருகிலும் செல்ல வேண்டாம்.அடுத்த காம்பின் வாசலில் இருக்கும் எதிரிகளை சினைப்பரின் உதவியால் சுடவும் பின்னர் பில்டிங்கின் பின்புறமூடாக செல்லவேண்டும்.


சி4 பொருத்தல்
சிவப்புப்புள்ளியால் காட்டப்பட்ட இடத்தில் சி4 ஐப்பொருத்திவிட்டு உடனடியாக வேலியால் ஏறிப்பாய்ந்து இயலுமான தூரத்திற்கு ஓடிவிடவேண்டும்.சி4 வெடித்ததும் கார் தப்பியோடிவிடும்.அதை அதன்போக்கில் விட்டுவிட்டு படத்தில் காட்டியவாறு முடிவிடத்தில் உள்ள கதவை அணுகவேண்டும்.கதவைத்திறந்ததும் ஒரு எதிரி நிற்பான் அவனை சுட்டுவிட்டால் மீதம் இரண்டுபேர் கீழே உள்ளதுபோல் நிற்பார்கள்.ஒழிந்துகொண்டு அவர்களையும் சுட்டால் சரி சுட்டுவிட்டு மேல் தளத்திற்கு ஏறவேண்டும்.




உள்ளே படத்தில் காட்டப்பட்ட கபேர்ட்டில் இருந்து பைல்களை எடுக்கவேண்டும் அருகே சென்று சிப்டைக்கொடுங்கள் 3 கபேர்ட்டிலும் உள்ளவற்றை எடுத்துவிட்டு கீழே வந்து அடுத்த கதவைத்திறவுங்கள்.



மேலே புள்ளடியிடப்பட்ட இடத்தில் எதிரிகள் நிற்பார்கள் சுட்டுவிடுங்கள்.


புள்ளடியிடப்பட்ட இக்கதவைத்திறந்ததும் உள்ளே ஒரு எனிமி நிற்பான் அவனை சுட்டுவிடுங்கள் இவ் அறைக்குள்ளேயும் சில கபேர்ட்கள் இருக்கின்றன அதற்குள் இருக்கும் பைல்களை நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும்போது கேம் நெக்ஸ்ட் லெவலுக்கு சென்றுவிடும்.
மீண்டும் ஐ.ஜி.ஐயின் அடுத்த லெவல்களை எப்படி சுலபமாக முடிப்பது என்றபதிவில் சந்திப்போம்....




x men கதாப்பாத்திரங்கள் உண்மையில் இருக்கின்றார்களா?-02

$
0
0

"xmenபெரும்பாலானவர்கள்இத்திரைப்படத்தைப்பார்த்திருப்பீர்கள்.இப்படத்தில்  இயற்கையில் இருக்கும் சக்திகளைக்கட்டுப்படுத்தும் அபூர்வமான மனிதர்களை  மனிதப் பரிணாமத்தின் அடுத்த   நிலைகளாக காட்டியிருப்பார்கள்.இவர்களை அத்திரைப்படம்  மியூட்டன்கள் என அழைத்தது.படத்தில் மின்னலைக்கட்டுப்படுத்தும் காதாப்பாத்திரம்.உலோகங்களைக்கட்டுப்படுத்தும் கதாப்பாத்திரம் இவர்தான் படத்தின் வில்லன் "மக்னிட்டோ".வேறு ஒருவரின் மனதில் இருப்பவற்றை அறிவதுடன் மனிதர்களது மனதை ஊடுருவி செல்லும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரமான சேவியர்.ஹீரோ லோகன்.இன்னும் பல சக்திகளைக்கொண்ட பல சூப்பர் ஹியூமன்ஸ்களை எக்ஸ்மான் திரைப்படத்தில் நாம் பார்த்திருக்கின்றோம்." இவ்வாறான சூப்பர் ஹியூமன்கள் நிஜவாழ்க்கையிலும் இருக்கின்றார்களா என்றால் பதில் ஆம். சாதாரணமனிதர்கள் செய்யமுடியாத அசாதாரணவிடயங்களை போகிறபோக்கில் செய்துவிடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.ஆனால் எமது பிரதேசங்களில் அல்லது எம்மை அண்டியபிரதேசங்களில் இருக்கும் இவ்வாறான அசாதாரண சக்திகொண்டமனிதர்களைப்பற்றியதகவல்களே பெரும்பாலும் எம்மைவந்தடையும் ஆனால் உலகத்தின் கோடிகளில் இவ்வாறானவர்கள் இருக்கின்றார்கள் இவ்வாறானவர்களை கண்டுபிடித்து வெளி உலகிற்கு இவ்வாறான அசாதாரணமனிதர்களையும் அவர்களது திறமைகளையும் வெளிக்கொண்டுவரும்வேலையை செய்கின்றார் ஸ்ரான்லி பிரபல  கொமிக்ஸ்ஸான மார்வெல் கொமிக்ஸின் முன்னாள்  chairman,இந்த பொறுப்பான வேலையை ஒரு சூப்பர் ஹியூமனிடம்தான் ஒப்படைத்திருக்கின்றார். Daniel Browning Smith என்ற ஒரு சூப்பர் ஹியூமனிடம்தான் ஒப்படைத்திருக்கிறார் ஸ்ரான்லீ. இவர் உலகின் the most flexible man in the world என்ற பெயர்வாங்கியவர்.
 x man கதாப்பாத்திரமெல்லாம் கடவுள்களை இமிட்டேட் செய்வதற்காக உருவாக்கப்பட்டவை ...கடவுள்களுக்கு இருப்பதாக நாம் நம்பும் சக்திகளை சாதாரணமான மனிதர்களின் எவலூஸனின் அடுத்தகட்ட மனிதர்களாக எக்ஸ்மானை உருவாக்கியிருப்பார்கள் கடவுளும் சரி எக்ஸ்மானும் சரி மிகைப்படுத்தல்தான்.சூப்பர்மான் ஹல்க் போன்ற கதாப்பாத்திர உருவாக்கங்களை இப்படியும் கொள்(ல்)லலாம்.

சென்றபதிவில் சில எலக்ரோ சூப்பர் ஹியூமன்களை பார்த்தோம் இப்போது தேடல் தொடர்கின்றது...
சென்றபதிவுக்கு இங்கே கிளிக்..

சூப்பர் ஹியூமன்ஸ் அசாதாரணவிடயங்களை  தோமே என்று செய்துமுடிப்பவர்கள் ஆனால் அவர்கள் அவ் அசாதாரணங்களை பிஸிக்கலாகத்தான் செய்யவேண்டுமா? இல்லை என்கிறார் Ron White swears.

Ron White swears இவர் ஒரு சூப்பர் ஹியூமன். எந்த ஒரு சாதாரண மனிதரைவிடவும் அதிகமான ஞாபகசக்தியைக்கொண்டவர்Ron White.USA Memory Championship இல் பங்குபற்றி இருதடவைகள் சாம்பியன் பட்டத்தைவென்றவர்.2009 இல் இவர் செய்த சாதனை  இதுதான், எழுந்தமானமாக அடுக்கியிருக்கும் கார்ட்ஸ்களை நினைவுபடுத்தவேண்டும்.இக்கார்ட்ஸ்களை நினைவுபடுத்த ரொன் வைட் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 80 செக்கண்ட்கள்.
ஒருவரது போன் நம்பரை நாம் முதல்முதலில் கேட்டாலே அதை  நினைவுபடுத்தல்கடினம்.ஆனால் ரொன் வைட்டின் அடுத்த சாதனை 167-digit numberகளை நினைவுபடுத்தியுள்ளார்.இந்த நம்பரில் 55 comma(,)கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதை மீண்டும் நினைவுபடுத்த அவருக்கு எடுத்த நேரம் வெறும் 5  நிமிடங்கள்.

எனவே இவர் ஒரு சூப்பர் ஹியூமன்தானா என்பதைப்பரிசோதிக்க டானியல் ரொன் வைட்டிடம் சென்றார்.ரொன் வைட்டைப்பரிசோதிக்கும் முதலாவது பரிசோதனை.ரெக்ஸஸில் 3 மைல் தூரத்தை கடக்கும் சைக்கிள் ரேஸ்போட்டி இவருக்காகவென்றே ஒழுங்குபடுத்தப்பட்டது.போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 100க்கு மேற்பட்ட போட்டியாளர்களை ரொன்வைட் சந்தித்து அவர்களது பெயரை கேட்டு தெரிந்துகொண்டார்.பின்னர் போட்டி முடிவடையும் இடத்தை அடைந்தார்.அங்கு போட்டியாளர்களை வரவேற்பதற்காகக்காத்திருந்தார்.இப்போது ரொன்வைட் போட்டியாளர்களின் பெயர்களை சரியாகக்கூறவேண்டும்.

இதில் உள்ள பிரச்சனை என்னவெனில் ஆரம்பத்தில் நின்ற ஒழுங்கிலே போட்டியாளர்கள் முடிவிடத்தை நெருங்கமாட்டார்கள்.அதோடு இறுதியாக எஞ்சும் 50 போட்டியாளர்கள்தான் இறுதியிடத்தைவந்தடைந்தார்கள். எனவே பெயர்களை நினைவுபடுத்தல் மிகக்கடினமான ஒன்று.ஆனால் அவர்கள் முடிவிடத்தை அடைந்தபோது அனைவரதுபெயரையும் கூறிவிட்டார் ரொன் வைற்.எப்படி  இதை செய்கின்றீர்கள் எனக்கேட்டபோது.ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் இருக்கும் வித்தியாசமான அடையாளங்கள் பெரியமூக்கு,அடர்ந்தபுருவம் போன்றவற்றை அவதானிக்கின்றேன் அவை எனக்கு அதிக தகவல்களைத்தருகின்றன எனக்கூறினார்.

உடனடியாக ரொன் வைற்றை University of Texas இற்கு கொண்டுசென்றார் டானியல் அங்கு ரொன்வைட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.பரிசோதனை முடிவுகள் ஆச்சரியத்தைக்கொடுத்தன.சாதாரண மனிதன் பயன்படுத்தும் மூளையின் பகுதிகளைவிட 35% அதிக மூளையின் பகுதிகளை ரொன்வைற் பயன்படுத்துகின்றார் என்பதுதான் அது.அதோடு அங்கு டொக்ரர் டேவிட்டால் மேற்கொள்ளப்பட்ட பரீட்சையில் 100 புள்ளிகளைப்பெற்றார் வைற்.இதுவரை அவரது பரீட்சைக்கு 100 புள்ளிகளைப்பெற்ற ஒரே ஒரு நபர் வைற்தான்.

இறுதியாக வைற்றை ஒரு Home Depot விற்கு அழைத்து சென்றார் டானியல்.அங்கு 60 பொருட்களை வாங்கினார்.வைற்றிடம் கேட்டுக்கொண்டது இதுதான் 60 பொருட்களின் விலைகளையும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.ஒரு பொருளின் விலை 42.69 டாலர் என்பதுபோல்தான் அங்கு பொருட்களின் விலைகள் இருந்தன.வாசலில் இருக்கும் computer  இல் பொருட்களின் விலை கணிக்கப்பட்டது.வைற்றும் கல்குலேட்டரின் உதவியுடன் கணித்தார் computer  3 தடவைகள் தவறாக விலைகளைக்காட்டியது ஆனால் வைற் சரியாகத்தான் விலைகளைக்கூறினார்.வைற்  பாடசாலைகள்,யூனிகள்,கொலிஜ் போன்றவற்றிற்கு சமூகமளித்து  மாணவர்களுக்கு நினைவுபடுத்தல் தொடர்பான விரிவுரைகளை  மேற்கொண்டுவருகின்றார்.



Salim Haini Jaws Of Steels


சலீம் அல்ஜீரியாவைச்சேர்ந்தவர்.25 வயதான இவரது செல்லப்பெயர்"Man Who Eats Anything." எல்லாவற்றையும் சாப்பிடுபவர்.இவருக்கு நீங்கள் எதைக்கொடுத்தாலும் சாப்பிட்டுவிடுவார் பல்ப்புகள் பிஸாஸ்ரிக்,இரும்புத்துகள்கள்,பேப்பர்கள் எதைக்கொடுத்தாலும் அவரிடமிருந்து ஏப்பமே பதிலாக மிஞ்சுகின்றது.தனக்கு இப்படி ஒரு அசாதாரண திறமை இருப்பதை சலீம் சிறியவயதில் கண்டுகொண்டார். நோன்பு முடிந்ததும்  பசியில் இவைகளை உண்ண ஆரம்பித்தார் அப்போதுதான் இதை இவரால் அறியமுடிந்தது.இவற்றை உண்ணுதல் ஒரு பெரியவிடயமில்லாது இருக்கலாம் ஆனால் ஸ்பெஸல் என்னவெனில் இவர் எதை உண்டாலும் அது ஜீரணம் ஆகிவிடுகின்றது.





The Human Calculator

13456*2345 விடை என்ன என்று கேட்டு 15 செக்கண்ட்களுக்குள் ஒருவர் விடைசொல்லிவிடுகின்றார் ஆனால் அவரது கையில் கல்குலேட்டர்,போன் எதுவுமே இல்லை உங்கள் ரியாக்ஸன் எப்படி இருக்கும்? மேலும் 4 கேள்விகளைக்கேட்பீர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள பதில் அதேவேகத்தில் வரும்.அமெரிக்காவை சேர்ந்த Scott Flansburg  என்பவர்தான் இந்த ஹியூமன் கல்குலேட்டர்.இதில் இவர் கின்னஸ்சாதனையும் படைத்துள்ளார்.Scott தனது 9 ஆவது வயதில் தனக்கு இப்படி இரு மென்ரல்பவர் இருப்பதைக்கண்டறிந்தார் பின்னர் படிப்படியாக இதைவளர்த்துவிட்டார்.World Maths Day இற்கு கெஸ்ராக அழைக்கப்பட்டிருக்கின்றார் இவர்(World Maths Day  is an online international mathematics competition).அதோடு 13 மாதங்களைக்கொண்ட கலண்டர் ஒன்றையும் இவரே கண்டுபிடித்திருக்கின்றார்.டானியலும் இவரது ஆற்றலை பரிசோதனை செய்தார் மனிஷன் அசராமல் பதில் கூறத்தொடங்கிவிட்டார் அடுத்த ஸ்ரெப் எவ்வாறு இதை செய்கின்றார்.உடனே ஹியூமன் கல்குலேட்டர் பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.அங்கே நியூரோலஜிஸ்ட் கேட்டகேள்வி இதுதான் நீங்கள் இதை உங்கொன்ஸியஸ்ஸில் செய்கின்றீர்களா அல்லது பிறீகொன்ஸியஸ்ஸில் செய்கின்றீர்களா என்பதுதான்.ஸ்கொட்டிற்கு கேள்விகளைக்கேட்கும்போது எம்.ஆர்.ஐ ஸ்கான் செய்தால் மூளையின் எப்பகுதி அதிகமாக தொழிற்படுகின்றது என்பதை கண்டறியமுடியும் ஆனால் அதற்கு ஒரு கட்டுப்பாட்டு பரிசோதனையாளர் தேவை சோ டானியலுக்கும் அதே பரிசோதனை செய்யப்பட்டது.டானியலின் மூளையை விட ஸ்கொட்டின் மூளை குறைவாகவே செயற்பட்டிருந்தது ஆனால் டானியல் தனது கணிப்புக்கு பயன்படுத்திய மூளையின் பகுதியைவிட வேறு ஒரு பகுதியையே ஸ்கொட் பயன்படுத்தியிருந்தார்.சோ இதை அவர் பழக்கப்படுத்தியிருக்கிறார் இதனால் ஸ்கொட்டுக்கு இவைகள் அசாதாரணமாக சாத்தியமாக்கியிருக்கின்றன.




 Lightning Fast Trigger Fingers


லக்கிலூக் கொமிக்ஸ் கதாப்பாத்திரத்தை உங்களுக்கு நினைவிருக்கலாம் குதிரை,லக்கிலூக்  இருவரும் சேர்ந்து அசத்துவார்கள்.அதில் லக்கிலூக்கின் ஸ்பெஸல் நிழலைவிட வேகமாக சுடுவது.லக்கிலூக் சுடும்போது கீழே போட்டிருப்பார்கள்"ஆசிரியர்-லக்கிலூக்கின் நிழலைக்கவனிக்க" என்று.தம் நிழலைவிட வேகமாக ஓடவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு சிறியவயதில் தோன்றியிருக்கலாம். ஆனால் நிழலைவிடவேகம் என்றால் அதன் அர்த்தம்  ஒளியைவிட வேகம் எனவே அது இந்த பிரபஞ்சத்தொகுதிக்கு அசாத்தியமான விடயம்.லக்கிலூக்போல் அனிமேஸன் கார்ட்டூன்களில் பிளாஸ் என்ற ஒரு காரக்ரர் வரும்.சூப்பர் மான்,பாட் மான்,டார்க் ஸைட் போல் அதுவும் பிரபலமான கரக்ரர்.பிளாஸின் ஸ்பெஸல் ஸ்பீட் மக்ஸிமஸ் ஸ்பீட் லைட் ஸ்பீட்தான்.இவைகள் கார்ட்டூன்கள்,அனிமேஸன் கதாப்பாத்திரங்கள்.ஆனால் ஒரு மனிதர் இதே போன்ற சக்திகளைக்கொண்டிருக்கின்றார்.லைட் ஸ்பீட் லெவலில் அல்ல ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அசாதாரணமான அளவில்.இவர் துப்பாக்கி சுடுவதில் சூப்பர் ஹியூமன் ஆகியிருக்கின்றார்.இவர் 10 செக்கண்ட் களுக்கு மிகக்குறைவான நேரத்தில் துப்பாக்கியால் சுடவல்லவர் எனவே இவர் துப்பாக்கியால் சுடும்போது வெடி சத்தத்தைக்கேட்கமுடியுமே தவிர இவர் துப்பாக்கியால் சுடுவதை எம்மால் அவதானிக்கமுடியாது.இவ் சூப்பர் ஹியூமனுடைய பெயர் bob morden . சாதாரண மனிதர்கள் துப்பாக்கியால் சுடுவதென்றால் குறிவைத்தே சுடுவார்கள் ஆனால் bob morden  சுடும்போது குறிவைப்பதில்லை கைத்துப்பாக்கியை அதன் உறையில் இருந்து சில மில்லிமீட்டர் தூரம் மட்டுமே மேலே எடுத்து சுட்டுவிடுகின்றார் ஆனால் துப்பாக்கிக்குறியை உள்ளுணர்வால் பெற்றுக்கொள்கின்றார்.துப்பாக்கியை உறையில் இருந்து எடுத்து சுட்டுவிட்டு உள்ளேவைத்துவிடுவார் ஆனால் எம்மால் அதை அவதானிக்கமுடியாது. டானியல் 2 பலூன்களை 6 அடி இடைவெளியில் நிறுத்தி சுடுமாறு கூறினார் பொப் சுட்டார் ஆனால் கேட்டது ஒரே ஒரு வெடிசத்தம்......உடைந்தது 2 பலூன்கள்....



தொடரும்.....

உலகப்புகழ் பெற்ற 'ஒப்பன் கங்க்னம் ஸ்டைல்' PSY இன் புதிய வெளியீடு 'Gentilman'..!!

சரி சரி ஒபாமா எங்கே அழைத்துவாருங்கள் இதே மாதிரி ஆடிவிட்டால் போகிறது

விசித்திரமான திருமணங்கள்(தன் மகளை திருமணம் செய்தவர்...)

$
0
0
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன...அப்படியென்றால் சீதணங்கள்? சரி விடுங்கள்....சகலருடை வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணங்களில் முக்கியமானதாக அவர்களது  திருமண நாள் இருக்கும். இதனால் சிலர் திருமணங்களை பிளைட்டில் நடத்துகின்றார்கள்,சிலர் கப்பலில்,சிலர் ஆழ்கடலில்,சிலர் பரசூட்டில் குதித்துக்கொண்டே திருமணம் செய்கின்றார்கள்(திருமணம் வானில் இருந்து குதிப்பதற்கு நிகரானது என்ற சிம்பாலிக்).
பிற நாடுகளில் ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் சட்ட அங்கீகாரத்துடனேயெ திருமணம் செய்துவாழ்கின்றார்கள்.அவர்களை எல்லாம் கீழே தள்ளிவிடும் விதத்தில்  நம்மவர்கள் சிலர் நாய்களுடனும்,கழுதைகளுடன் திருமணம் செய்து சளைத்தவர்கள் அல்லர் என நிரூபித்திருக்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் விட நாம் எதிர்பார்க்காத திருமணங்கள் கூட நடைபெற்றிருக்கின்றன...

Eiffel Tower ஐ திருமணம் செய்தபெண்

திருமணம் செய்த பெண்ணின் பெயர் Erika  Eiffel.பெயரின் தொடர்ச்சியில் ஈர்பிள் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள் ஈர்பிள் ரவரை திருமணம் செய்துகொண்டதுதடன் தனது பெயரைத்தொடர்ந்து ஈர்பிள் ரவரை சட்டரீதியாக இணைத்துக்கொண்டுள்ளார் Erika  Eiffel.
இவர் தன்னைப்போன்று பொருட்களைக்காதலிக்கும் பிற மனிதர்களுக்காக  OS Internationale என்ற அமைப்பொன்றையும் உருவாக்கியுள்ளார்.இவர் முதன் முதலில் காதலித்தது இவரது அம்பை இவர் ஒரு  archer .அடுத்ததாக இவர் காதலித்தது பேர்லின் சுவரை.அச்சுவரின் துண்டு ஒன்றை படுக்கையறையில் வைத்திருந்து அதனுடன் பிஸிக்கல் ரிலேஸன்ஸிப்பையும் வைத்திருந்தார்.இறுதியாக ஈர்பிள் ரவரைக்காதலித்து திருமணமும் செய்துகொண்டார். எப்படி ரவரைத்திருமணம் செய்துகொண்டீர்கள்?ஈர்பிள் ரவருக்கு நீங்கள் புரொப்போஸ் செய்தீர்களா என்று கேட்டதற்கு நான் புரப்போஸ் செய்யவில்லை ரவர்தான் எனக்கு புரப்போஸ் செய்தது என்று தனது பேட்டியைத்தொடர்கிறார் எரிக்கா.



தன்னைத்தானே திருமணம் செய்தவர்

சீனாவைச்செர்ந்த 39 வயதான Liu Ye என்பவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டுள்ளார்.அதுவும் அவரது திருமணத்துக்கு 100க்குமேற்பட்ட உறவினர்களை அழைத்து அவர்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.தன் உருவத்தை ரெஜிபோர்ம் துண்டொன்றில் பிறிண்ட் செய்து அதற்கு சிவப்புக்கலரில் ரெஸ்ஸையும் கொடுத்து அதையே திருமணமும் செய்துகொண்டார் Liu Ye.(ஏப்பா ரெஜிபோம் உடைஞ்சிடாது ஆவ்வ்) இத்திருமணத்தைப்பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது Liu Ye இன் பதில் "There are many reasons for marrying myself, but mainly to express my dissatisfaction with reality," Lui said. "This marriage makes me whole again. My definition of marriage is different from others." 


தன் மகளை திருமணம் செய்தவர்..

இவ்வாறு இடையிடையே நடப்பதுண்டு.முதலாவது கேஸில் ஒரு தந்தை தனது சொந்த மகளையே திருமணம் செய்தார்Mr Adesanya,  என்ற 54 வயது தந்தை இதைசெய்துள்ளார்.போலியான திருமணம்தான் British  பாஸ்போர்ட் கிடைக்கவேண்டும் என்பதற்காக  ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள தன் மகளின் பெயரை மாற்றி பிறந்த நாளையும் மாற்றி தங்களை காதலர்களாகக்காட்டி போலி திருமணபோட்டோவை உருவாக்கி பாஸ்போர்ட்டுக்கு அப்பிளே செய்திருக்கின்றார்கள்.பாஸ்போர்ட் கிடைத்துவிட்டது.பின்னர் இருவரும் டைவேர்ஸுக்கு அப்பிளே செய்திருக்கின்றார்கள்.டைவேர்ஸ் கிடைத்தபின்னர் மகள் தன் உண்மையான கணவரையே மறுபடி திருமணம் செய்தால் சகலதும் வழமைக்கு திரும்பிவிடும் என்பதுதான் திட்டம் ஆனால் அதற்குள் போலீஸ் இந்த ஏமாற்றுவேலையை மேப்பம்பிடித்துவிட்டது அகப்பட்டுக்கொண்டார்கள்.

முதல் கேஸ் அப்படி செல்ல அடுத்த கேஸ் வருகின்றது.இது உண்மையான திருமணம் தந்தையே தன் மகளை திருமணம் செய்தார் அவர்களுக்கு ஒரு குழந்தைவேறு உருவாகியிருக்கின்றது.

(((Penny Lawrence claims to bein love with her dad and she is proud she is. The pair were pictured smiling and hugging each other under the headline “I’m pregnant with my dad’s baby and we are so in love.”For the record, it tells how a Dublin man, Garry Ryan, was 18 when his girlfriend fell
 pregnant.

Her family wouldn't let them marry, so he went off to 
the States and neversaw the daughter. The girl, Penny Lawrence, grew up and after her mother's death she set out to find her missing father. When they eventually met, reports The Sun's Dulcie Pearce, they "both felt an immediate sexual attraction."

She continues: "Within days they began an incestuous - and illegal - affair, though they each claim to be suffering from the psychologicalcondition Genetic Sexual Attraction or GSA." Penny is 28 and Garry is 46, and they live as a couple. She is quoted as saying: "I'm in love with Garry and desperately want his baby. But we have agreed that if my three-month scan shows a birth defect, we will terminate the pregnancy.")))


பேர்லின் சுவரை திருமணம் செய்தபெண் 30 வருடங்கள் பூர்த்தி

Eija-Riitta Berliner-Mauer என்ற ஜேமனியைச்சேர்ந்த 54 வயதான பெண்ணே பேர்லின் சுவரை கணவராக்கி 30 வருடங்கள் பூர்த்தியைக்கொண்டாடியவர்.இவ்வாறு பொருட்களை திருமணம் செய்தல் உறவுவைத்துக்கொள்ளலை Objectum-Sexuality என்று அழைப்பார்கள்.முன்பே ஈர்பிள் ரவரை திருமணம் செய்தவரைப்பற்றிப்பார்த்தோம்.Eija-Riitta Berliner-Mauer இடம் இதுபற்றிக்கேட்டபோது.சிறியவதில் இருந்தே அவன் மீது(பேர்லின் சுவர்) தனக்கு ஈர்ப்பு இருந்தது.ஒரு முறை டி.வியில் அவனைப்பார்த்ததும் அவன் தொடர்பான விபரங்கள் புகைப்படங்களை சேகரிக்க ஆரம்பித்தேன் பின்னர் என் 6 ஆவது பிரயாணத்தின்போது சுவருக்கு ஒரு கயிறை அணிவித்து திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியுள்ளார்.

வீடியோக்கேமில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்தவர்

ஜப்பானை சேர்ந்த Sal9000  என்ற நபர் Love Plus என்ற கேமில் வரும் ஒரு பெண்கதாப்பாத்திரத்தை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இது ஒருடேட்டிங்க் கேம் அதனாலோ என்னவோ கேமில் வரும் பெண்ணையே திருமணம் செய்துகொண்டார்.ஜப்பானில் பொருட்களை திருமணம் செய்துக்கொள்வது சட்டரீதியில் அனுமதிக்கப்பட்டாலும் கற்பனையானவைகளுடன் திருமணம் செய்தல் வித்தியாசமாக நோக்கப்பட்டது.இவர் தன் திருமணத்திற்கு உறவினர்களை அழைத்துNintendo DSi LL/XL என்ற கேம்போயில் அப்பெண்கரக்ரரின் படங்களை சிலைடராகக்காட்டியபின் அதற்கு முத்தமிட்டு திருமணம் செய்துகொண்டார்.



fairground ride ஐ திருமணம் செய்த பெண்


இதுவும் அதே வகைதான்Objectum-Sexuality.நியூயோர்க் நகரைச்சேர்ந்த Amy Wolfe  என்ற 32 வயதுப்பெண்ணே ராட்டினத்தை திருமணம் செய்தவர்.இந்த ராட்டினத்தைவிட வேறுபல பொருட்களையும் காதலித்தார்(models of spaceships, the Twin Towers, a church organ and a banister, ) ஆனால் தனது மெயின் லவ்வராக தெரிவு செய்தது ராட்டினத்தைத்தான்.கடந்த 10 வருடங்களில்  அந்தராட்டினத்தில் 3000 தடவைகள்  ஓடி மகிழ்ந்திருக்கின்றார்.இதற்காக 160 மைல்கள் பிரயாணமும் செய்திருக்கின்றார்.ஒரு தடவை செல்வதற்கு 160 மைல்கள் பிரயாணிக்கவேண்டும் வருடத்திற்கு குறைந்தது 10 தடவைகள் தன் கணவரை சந்திக்க சென்றுவருவாராம்.


தலையணையை திருமணம் செய்தவர்...

காதலித்துப்பார்  நீ தலையணையை நனைப்பாய்.....என்று கவிதைவேறு இருக்கின்றது.பெரும்பாலான காதலர்கள் தங்கள் காதலை காதலிகளிடம் சொல்வதற்குமுன்னர் அவர்கள் அதிகம் பேசுவது தங்கள் தலையணைகளுடன்தான் முத்தத்தால் தலையணை நனைந்துவிடும்.இது நோர்மல் ஆனால் அப்னோர்மலான விடயம்தான் இனி வருவது.


கொரியாவைச்சேர்ந்த 28 வயதான Lee Jin-gyu என்ற மனிதர்தான் தன் தலையணையைத்திருமணம் செய்தவர்.இவர் காதலித்தது ஒரு அனிமேஸன் கதாப்பாத்திரத்தை "Fate Testarossa" என்பதுதான் இக்கதாப்பாத்திரத்தின் பெயர்.இதை தன் தலையணையில் வரைந்துவிட்டு பாதரை அழைத்து தன் உறவினர்களையும் அழைத்து தலையணைக்கு திருமண ஆடையை அணிவித்து அதையே திருமணமும் செய்துகொண்டார்  Lee Jin-gyu.

கார்களுடன் உடலுறவு,திருமணம்

Edward Smith, என்ற நபர் தனது 15ஆவது வயதில் இருந்து கார்களுடன் உடலுறவில் ஈடுபட்டுவருகின்றார்.தற்போது அவருக்கு வயது 54.white Volkswagen Beetle   Vanilla என்ற காருடன் 5 வருடங்களாக உறவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.இவருக்கு ஹெலிஹொப்ரர்கள் கார்கள் மீதுதான் ஈடுபாடு,ஆண்,பெண்கள் மீதல்ல.இதுவரை 1000 க்கு மேற்பட்ட கார்களுடன் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாம்பை திருமணம் செய்தபெண்

ஒரிஸாவைச்சேர்ந்த Bimbala Das என்ற  பெண்ணே பாம்பை திருமணம் செய்துள்ளார்.மணமகள் கோலத்தில்(இவர் இந்து) இப்பெண் 2000  நபர்கள் சூழ திருமணம் செய்துள்ளார்.இதைப்பற்றி அவர் கூறியது ""Though snakes cannot speak nor understand, we communicate in a peculiar way. Whenever I put milk near the ant hill where the Cobra lives, it (the snake) always comes out to drink." பாம்பை திருமணம் செய்யும் தனது ஐடியாவைக்கூறியதும் ஒரிஸாவில் அக்குறிப்பிட்ட ஊரைச்சேர்ந்த மக்கள் உடனே ஆதரவு தெரிவித்தார்களாம் ஏனென்றால் பாம்பை திருமணம் செய்தல் ஊருக்கு நன்மை விளைவிக்கும் என அவர்கள் நம்பிகின்றார்கள்.(கலாம் சேர் இந்தியா வல்லரசாகும்னு கனவுகாணச்சொன்னார் என்பது நினைவுக்கு வருகின்றது)
டொல்பினை திருமணம் செய்த பெண்

பெண்ணின் பெயர் Sharon Tendler Israel இல் திருமணம் நடைபெற்றது.டொல்பினின் பெயர் Cindy.இதைப்பற்ரி செரோன் கூறியது.
"It's not a perverted thing. I do love this dolphin. He's the love of my life," she said Saturday, upon her return to London.

When asked in the past if she had a boyfriend, she would always reply, "No. I'm going to end up with Cindy." On Wednesday, she made it official, sort of. While she acknowledged the "wedding" had no legal bearing she did say it reflected her deep feelings toward the bottlenosed, 35-year-old object of her affection.

"It's not a bad thing. It just something that we did because I love him, but not in the way that you love a man. It's just a pure love that I have for this animal," she said.

நாயை திருமணம் செய்த பெண்

ஆபிரிக்காவை சேர்ந்த Emily Mabou என்ற பெண்ணே நாயை திருமணம் செய்தவர்.


பூனையை திருமணம் செய்தவர்

ஜேர்மனியைச்சேர்ந்த போஸ்ட்மன் ஒருவர் தன் செல்லப்பிராணியாகிய பூனையை திருமணம் செய்துள்ளார்.


இறந்த தன் காதலனை திருமணம் செய்தபெண்

Magali Jaskiewicz , Jonathan George  ஆகிய இருவரும் காதலர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு முடிவெடுத்தார்கள் ஆனால் திருமணத்திற்கு 2 நாட்கள் முன்பாக ஒரு பைக்விபத்தில் ஜியோர்ஜ் இறந்துவிட்டார்.மனமுடைந்தMagali சட்டரீதியாக இறந்த தன் காதலரையே திருமணம் செய்யவிரும்புவதாக கோரி திருமணமும் செய்துகொண்டார்....


###############################################################

எனது நண்பர் சோபிதன் அவர்கள் போட்டோஷொப் பிரியர் அவர் போட்டோஷொப்பிற்காக psdrasikanஎன்ற லைப்பூவை ஆரம்பித்துள்ளார்.உங்கள் ஆசீர்வாதத்துடன் சோபிதனுக்கு வாழ்த்துக்கள்.பதிவுலகத்திற்கு வரவேற்கின்றேன்/றோம்.





Viewing all 113 articles
Browse latest View live


Latest Images