Quantcast
Channel: வெங்காயம்
Viewing all 113 articles
Browse latest View live

நீதானே என் பொன்வசந்தம் நம்பிப்பார்க்கலாமா?

$
0
0

பேஸ்புக்கில் அனேகமாக எதிர்மறையான விமர்சனங்களையே படம் சந்தித்திருக்கின்றது.ஒரு சிலரைத்தவிர ஏனையோர்  மொக்கைப்படம் என்னும் லெவலில் கருத்துக்களைப்பகிர்ந்துகொள்கின்றார்கள்.இவற்றை வாசித்துவிட்டதால் ஒருவித பயத்துடனேயே தியேட்டரிற்குள்  நுழைந்தேன்.படம்  மொக்கை என்ற விமர்சனங்களை தாண்டியும் நான் பார்க்கசென்றதற்கு ஒரே ஒரு காரணம் சமந்தா.

சமந்தா ஜீவாவிற்கிடையில் சைல்கூட்டில் இருந்தே பழக்கம் ஆரம்பித்துவிடுகின்றது ஈகோவும் அப்போதே ஆரம்பித்துவிடுகின்றது.பாடசாலைப்பருவத்தில் காதலாகமாறுகின்றது.
காதல்...பாடசாலைப்பருவக்காட்சிகளைப்பார்க்கும்போது அட இது எனக்கு நடந்த சீனாச்சே என்று நீங்கள் நினைக்கக்கூடும்.

முதலில் இந்தப்படத்தைப்பார்ப்பதற்கு நீங்கள் காதலித்திருக்கவேண்டும் அல்லது காதலித்துக்கொண்டிருக்கவேண்டும் குறைந்தபட்சம் வரும்காலத்தில் காதலிக்கவேண்டும் என்ற எண்ணமாவது இருக்கவேண்டும்.

பாடசாலைக்காட்சிகளில்  ஜீவாவுக்கு ஏற்படும்possiveness ஐ அழகாகக்காட்டியிருக்கிறார் கௌதம்மேனன்.காதலிக்கும் பெண் இன்னொருவனுடன் எம்முடன் கதைப்பதைப்போல் சிரித்துப்பேசுவதை விட காதலனுக்கு ஒரு தண்டனை கிடையவே கிடையாது.அங்கிருந்து பிரச்சனை சற்று பெரிதாகின்றது.

சந்தானத்தின் நகைச்சுவை வழக்கமாக இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கின்றது.படத்தின் ஆரம்பத்தில் சந்தானமா ஜீவாவா ஹீரோ என்னுமளவிற்கு சந்தானத்தை ஹாண்ட்சமாக காட்டப்பட்டுள்ளது.வழக்கமான படங்களில் காதலில் புரிந்துணர்வின்மையால்,குழப்பங்களினால் ஆண்கள்தான் படாதபாடுபடுவார்கள் பெண்களுக்கு தெரிந்த ஒரே ஒரு ரியாக்ஸன் அழுதுகொண்டு ஓடுவது.ஆனால் நீதானே என்  பொன் வசந்தத்தில் நிலைமை தலை கீழ் முழுக்க முழுக்க சமந்தாவை சுற்றியே கதை செல்கின்றது.காதலை ஆழமாக அனுபவித்ததால் சமந்தா ஒவ்வொரு பிரிவின்போதும் படும்வேதனை உச்சமாக காட்டப்பட்டுள்ளது.ஆனால் பெண்கள் வழமையாக செய்வதுபோல் முகத்திற்கு முன்னே நோ ரியாக்ஸன் ஆனால் ரூமுக்குள்போய் இருந்துகொண்டு அழுவதை சமந்தாவும் செய்திருக்கின்றார்.இருவரிலிம் பிழைகள் இருந்தாலும் யாரும் அதை ஒத்துக்கொள்ளவோ அல்லது விட்டுக்கொடுக்கவோ முயலவில்லை.அதுதான் படத்தை தாங்கி செல்கின்றது.ஒருவேளை இந்தப்படத்தைப்பார்த்தபின் காதல்பிரிவு தம்மை இந்த அளவிற்கு வருத்துமோ என காதலித்துக்கொண்டிருக்கும் பெண்கள் பயப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜீவா ஒரு சாதாரண பையனைப்போல்தான் நடித்திருக்கின்றார்.படங்களில் காதலை சொல்லும்போது காட்டப்படும் மிகைப்படுத்தப்பட்ட சீன்கள் எல்லாம் இல்லை மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் இல்லை எம்மோடு இருக்கும் நண்பன் ஒருவன் காதலில் எப்படி  ரியாக்ஸன் கொடுப்பானோ அதே ரியாக்ஸன்.காதலில் பிரச்சனை என்றால் சில வேளைகளில் ஓ என்று அழவேண்டும் போல் இருக்கும் ஆனால் அழாமல் எப்படியாவது சமாளித்துக்கொள்வோம்.உணர்ச்சிவசப்படாத அணைத்தல்கள் காதலியின் தலைமுடிவருடல்கள் ஒரே கட்டிலில் படுத்திருந்தும் எல்லை மீறாமல் கிஸ் ஸ்பரிசம்..கொஞ்சல்கள்..அணைத்தல்கள் இவையெல்லாம் ஒவ்வொருகாதலர்களின் கனவுலகங்கள் எனது கனவுலகமும் கூட சோ வெகுவாகப்பிடித்திருந்தது.ரியாலிட்டி லைபில் லவ் யூ என்ற வார்த்தையை நேரடியாக சொன்னால் சிலவேளைகளில் அது செயற்கைகாக தெரியும் அதுவும் நீண்டகாலம் பழகிய ஜோடிகளுக்கு அது வோல்ட்டேஜை அவ்வளவாக ஏற்றாது.காதலை சொன்னவுடன் பதிலுக்கு கிஸ்பண்ணியது பிடித்திருந்தது.

ஜீவாவின் அண்ணன் கல்யாணம் தடைப்பட்டதற்கு ஜீவாவின் தந்தைக்கு ஆறுதல் கூறப்போகும் சீன் தரமாக இருந்தது.என்ன அம்மா அனுப்பிவிட்டாவா?ஐ ஆம் கூ ஐ ஆம்..சூப்பரோ சூப்பர்..எமது வீடுகளில் இப்படியான சந்தர்ப்பங்களில் நடைபெறும் மிகைப்படுத்தப்படாத சீன்களாகவே எனக்குப்பட்டது.
சமந்தாவின் நடிப்பு ஓகே..சில இடங்களில் ஓவர் மேக்கப்  போட்டுவிட்டார்களோ என்று நினைக்கதோன்றியது.

படத்தின் இறுதியரைப்பகுதி எனக்கு இன்னும் வெகுவாகப்பிடித்திருந்தது ஏது சமந்தா தற்கொலைமுயற்சியில் இறங்கிவிடுவாளோ என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.
கிளைமேக்ஸ் சொதப்பல் இல்லை என்றுதான் எனக்குப்படுகின்றது.
ஸ்கூல் யூர்னிபோமில் வரும் சமந்தாவை பார்த்ததும் ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது ஆவ்வ்வ்வ்...

இடையில் விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை கௌதமே இமிட்டேட் செய்திருந்தார் நகைச்சுவையின் உச்சக்கட்டம் அதுதான்.சிம்பு இதைப்பார்த்தால் தற்கொலை முயற்சியில் இறங்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.
சந்தானத்தின் ஒரு டயலக் எப்போதுமே இளைஞர்களின் மனதில் நிற்கக்கூடியது...அது டயலக் என்பதைவிட வலி என்றும் கூறலாம்..

கரண்டைக்கூட இ சொல்லிட்டு கட் பண்றாங்கடா, இந்த பொண்ணுங்க சொல்லாமலே நம்மை கட் பண்ணிடுறாங்க... 

படத்தில் கதையே இல்லைன்னும் ஒரு கொமண்ட் வந்திச்சு உங்க சொந்தலைப்ல நடந்த காதல்கதையை சொல்லசொன்னா அதில கதைஎன்ற ஒன்று பெரும்பாலும் இருக்கப்போவதில்லை அனேகம் பேருக்கு இது பொருந்தும்..வெறும்சம்பவங்களாலேயே காதல் நிறைந்திருக்கும் காரணம் எமது காதல்வாழ்க்கை ஸ்கிரிப்ட் அல்ல யாரும் அதை 10,15 தடவை வெட்டி வெட்டி திருத்தியிருக்கமாட்டார்கள்.


விண்ணைத்தாண்டிவருவாயா காதல் படங்களை இன்னொருதளத்திற்கு எடுத்துசென்றபடம் படம் வந்து நீண்டகாலம் ஆனபிறகும் இளைஞர்கள் மத்தியில் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்பது ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.திரிஷாவின் அபார நடிப்பை அதில்தான் நான் பார்த்தேன்.ஆனால் நீதானே என் பொன்வசந்தத்தை விண்ணைத்தாண்டிவருவாய படரேஞ்சிற்கு என்னால் உயர்த்தமுடியாது.படம் அந்த அளவிற்கு இல்லை என்பது உண்மை.காரணம் படத்தின் மிகப்பெரிய மைனஸ்ஸாக ஒருவிடயம் குறுக்கே நிற்கின்றது இசை.என்ன இழவிற்கு இளையராஜாவை கௌதம் தெரிவு செயதார் என்று தெரியவில்லை படத்தில் உணர்ச்சிவசப்படவேண்டிய ,அழவேண்டிய படத்துடன் ஒன்றவேண்டிய இடங்களிலெல்லாம் நல்ல பாடலை ரசனையுடன் கேட்கும்போதுஅருகில் இருக்கும் கோவில் லவுட்ஸ்பீக்கரை உரத்த சத்தத்தில் போட்டு எரிச்சலூட்டுவார்களே அந்த எரிச்சல்தான் வந்தது.இந்த இசையின்காரணமாக பாடலின் காரணமாக சமந்தா ஜீவா இருவருமே திரையில் இருந்து மறைந்துவிடுகின்றனர்.சில இடங்களில் பின்னணி இசை எதுவும் இல்லை அப்போதும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது ஆனால் சடுதியாக இசை எனக்கு நாறாசமாகத்தான் கேட்டது.என்னைப்பொறுத்தவரை விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை உங்களுக்கு பிடித்திருந்தால் இந்தப்படமும் உங்களுக்கு பிடிக்கும் என்றுதான் நான் நம்புகின்றேன்.

சமந்து சமந்து என்ன ஒரு அழகுதேவதை ஊகும்....போய் பாருங்கள் கடைசி சமந்தாவிற்காகவாவது ஏனையோர் படத்தைப்பார்க்கலாம்.

இசையின் காரணமாக தியேட்டரில் இருந்துவரும்போது தலைவலியுடனேயே வெளியில்வரவேண்டியேற்பட்டது.மியூஸிக்கிற்கு இளையராஜாவை கௌதம் தெரிவுசெய்தது ஏனையோருக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டதாக எனக்குப்படுகின்றது.
//60% படப்பிடிப்பு முடியும் வரை படத்திற்கு யார் இசையமைக்கிறார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. அதற்கு பிறகு இளையராஜா இசையமைக்கிறார் என்று அறிவித்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைத் தொடர்ந்து முதல் முறையாக இளையாராஜாவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார் கெளதம் மேனன்.// இந்த செய்தி விகடனில் இருந்து கிடைக்கப்பெற்றது.இதுதான் சொதப்பலுக்கு இன்னும் ஊக்கியாக தொழிற்பட்டிருக்கின்றதுபோலும்.

பேஸ்புக்கில் காலாய்த்தவை...




நீதானே என் ‘புண்’ வசந்தம்?-சாரு

$
0
0

Win TV-நிகழ்ச்சிக்காக வாரம் ஒரு படம் பார்க்க வேண்டியுள்ளது.  உலக சினிமா பற்றிப் பேசலாம் என்றால் எல்லோரும் தமிழ்ப் படம் பற்றிப் பேசுங்கள் என்கிறார்கள்.  என்னத்தைப் பேசுவது?  குடிகாரன் எடுத்த வாந்தியை நக்கினால் எப்படி இருக்கும், அப்படி எடுக்கிறார்கள் தமிழில்.  நல்லவேளையாக நீதானே என் பொன் வசந்தம் என்ற கசமாலத்தில் மாட்டவில்லை.  என் கனவுக் கன்னி சமந்தாவுக்காகப் போயிருப்பேன்.  நல்லவேளை,  கும்கிக்குத்தான் டிக்கட் கிடைத்தது.  கும்கியும் கூட அந்தக் கால மைக் மோகன் படம் மாதிரிதான் இருந்தது.  இருந்தாலும் புண் வசந்தம் போல் கழுத்தறுப்பு இல்லை.  அந்தக் கழுத்தறுப்புக்குப் போய் வந்த அராத்துவின் விமர்சனம் இது.  படித்து இன்புறுங்கள்.  இன்னொரு விஷயம்.  நடுநிசி நாய்களிலேயே கௌதம் வாசுதேவ் மேனனின் சாயம் வெளுத்து விட்டது.  இனிமேல் அவரால் எந்தக் காலத்திலும் நல்ல படம் எடுக்க முடியாது.  இனி வருவது அராத்து…

நீதான் என் பொன் வசந்தம் என அப்ப நினைச்சிட்டு இருந்தேன் – என ஹீரோயின், படத்துக்கு தலைப்பு வைத்து விட்டதால் டி.ராஜேந்தர் படம் போல வசனம் பேசுகிறாள்.
ஜீவா பத்தாவது படிக்கிறார்.மன்சூர் அலிகானை 11 வது வகுப்பு மாணவனாக காட்ட போகிறார்கள் என பயந்தேன் . அப்படி நடக்கவில்லை.சமந்தாவும் 10 வது படிக்கிறார் . சமந்தாவிற்காவது மார்பகமும் புட்டமும் சின்னதாக இருந்து , ஒத்துழைப்பு நல்குவதால் 10வது மாணவி என ஒத்துக்கொண்டு தொலையலாம் . பருவ மங்கை ஆனதும் கடமையே கண்ணாயிரமாக பேட் வைத்து க்ளோஸ் அப்பில் காட்டுகிறார்கள்.இதுதான் படத்தின் டைரக்டர் டச்.
பேட் வைக்க எடுத்துக் கொண்ட கவனத்தில் 10 சதவீதமாவது கதைக்கு எடுத்துக்கொள்ளலாம் அல்லவா ?
இந்த படத்தில் நடக்கும் சம்பவங்கள் எல்லோர் வாழ்விலும் ஒன்றாவது நடந்திருக்கும் என கௌதம் தான் பித்துக்குளி போல சொல்றாருன்னா , சில ரசிகர்களும் அதே போல இணையத்தில் பினாத்துவது எரிச்சலாக உள்ளது.
இந்த மாதிரி பித்துக்குளித்தனமான சம்பவங்கள் யார் வாழ்கையிலும் நடந்திருக்க வாய்ப்பில்லை . அடுத்த வீட்டு பெண் போல தோற்றம் என சொல்வது போல , இதை சொல்வது ஒரு ஸ்டைல் ஆகி விட்டது .இனி டாய்லெட் போவது , குளிப்பது , வாந்தி எடுப்பது போன்ற சீன்களை வைத்து , எல்லோர் வாழ்விலும் நடந்த சம்பவங்களின் கூட்டு தொகுப்பு என விளம்பரம் செய்யலாம்.
சமந்தா படத்தில் காமம் கொழுந்து விட்டு எரியும் டீன் ஏஜ் பெண் போல தன் கதாபாத்திரத்தை பிரதிபலித்திருக்கிறார். ஜீவா விடம் காதல் மருந்துக்கு கூட இல்லை , மலையாள பட திலகனும் , நெடுமுடி வேணுவும் கட்டிப்பிடித்து உருள்வது போல உருளுகிறார்.
பத்தாவது படிக்கையில் ஸ்கூல் யூனிஃபார்மோடு கிஸ் அடித்துக்கொள்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் 4 வது படிக்கும் நர்ஸரி குழந்தைகள் லிப் கிஸ் அடிக்கும் காட்சியை திரையில் காணலாம் . நடப்பதுதானே என்றெல்லாம் கேட்கக்கூடாது. நடப்பதை எல்லாம் அபப்டியே காட்டுபவனா கலைஞன் ?
வழக்கம் போல ஹீரோ கதாநாயகியை தேடி ரயில் , கார் , பஸ் , சைக்கிள் , நடை மூலம் மணப்பாடு செல்கிறார் . எவனாவது காரில் போய் , திரும்ப பின் மினி பஸ்ஸில் செல்வானா ?
இதைப்போல கௌதமும் கதையை தேடி சென்றால் நல்லது.
இளமையான இயக்குநர்கள் எல்லாம் ரத்தம் , துரோகம் , கொலை , தீவிரவாதம் ,பழிக்குப்பழி என கொலைவெறியோடு அலைந்து கொண்டிருப்பதால் ,
கிழ இயக்குநர்கள் எல்லாம் ,காதலைப்பற்றி தெரியாமல் , காதல் படம் எடுத்து நம்மை சாகடிக்கிறார்கள்.
வாசகர்களே நல்ல ஒரு எதிர்மறையான விமர்சனம்...முடியல....சாரு ஒன்லைனில் வெளியிடப்பட்டது இது.
http://charuonline.com

2012 இல் அதிகமானோரை ஈர்த்த 10 வீடியோக்கள்-யூடியூப்

$
0
0
2012 இல் அதிகமானோரால் பேசப்பட்ட பார்க்கப்பட்ட பகிரப்பட்ட டாப் 10 வீடியோக்களை யூ டியூப் வெளியிட்டுள்ளது.முதலிடத்தை பெற்றுள்ளது கங்ணம்ஸ்ரைல் .


  • PSY was 2012's Internet breakout star as Gangnam Style approached 1 billion views and became YouTube's most-watched video of all time in just 6 months
  • The biggest cover video of 2012 belonged to Canadian band Walk off the Earth, whose unconventional take on Gotye's single became an international hit
  • For a week in March, the most-shared video in the world was a 30-minute doc from a nonprofit group driving unprecedented discussion and interest
  • Justin Bieber, Selena Gomez and more kicked off the Call Me Maybe lip sync trend that helped make it 2012's song of the summer
  • In 2012, ERB's Season 2 drew over 250 million views and this political battle was one of the many, many videos we watched during the election season
  • TNT's launch in Belgium was accompanied by this epic stunt, becoming one of the most popular "ads" of the year
  • Emmanuel Hudson teamed up with Spoken Reasons, producing 2012's most entertaining commute
  • Lindsey Stirling's unexpectedly awesome combination of dubstep and violin helped make her channel a huge hit in 2012
  • Early in the year, this extreme look into father-daughter relationships in the age of social media sparked a storm of controversy and discussion
  • Felix Baumgartner's jump from space was one of the most viewed live events ever with millions of viewers tuning in or watching these highlights
  • Watch the year's defining moments in this interactive timeline. Use the arrows to switch months and click on the thumbnails to watch th
  • ஒருவேளை உலகம் அழிந்தால் எப்படி தப்பிக்கலாம்?

    $
    0
    0
    உலகம் அழியப்போகின்றது...அழியப்போகின்றது...ரீஸன்?..மாயன்கள் கூறிவிட்டார்கள்..கொடுமை என்னன்னா நம்ம பயலுங்க கதைக்கும் கதையைப்பார்த்தா மாயன்கள்  சொன்னதற்காகத்தான் உலகமே அழியப்போகின்றது என்பதுபோல் கதைக்கின்றார்கள்..பாவம் மாயன்கள் இப்போது தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருந்துவருகின்றார்கள்.21 திகதிவரைதான் இந்தப்பருப்புகள் எல்லாம் வேகும்.22 திகதியில் இருந்து கூகிளில் இருந்து மாயன் மறைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

    2012 படத்தில் உலக அழிவை முன்பே மாயன்கள் கணித்ததாக கூறப்பட்டது..
    ஆனால் மாயன் ஆராய்ச்சியாளர்கள் மாயன்கள் உலகம் அழியும் என்று கூறியதற்கான ஆதாரம் இல்லையென்கிறார்கள்..மாயன்களின் நாட்காட்டி முடிவடைகின்றதென்பது ஓகே..ஆனால் அதுமுடிவடையும்போது உலகம் அழியும் என்று கூறியதற்கான ஆதாரம் இல்லையென்கிறார்கள்..
    Professional Mayanist scholars state that predictions of impending doom are not found in any of the extant classic Maya accounts, and that the idea that the Long Count calendar "ends" in 2012 misrepresents Maya history and culture,[3][10][11] while astronomers have rejected the various proposed doomsday scenarios as pseudoscience,[12][13] stating that they conflict with simple astronomical observations.[14]

    சரி இவ்வளவு தூரம் மக்களை மாயன்கள் பற்றி தன் 2012 படத்தின் மூலம் பேசவைத்த 2012 பட இயக்குனர் Roland Emmerich இடம் இதைப்பற்றி கேட்கும்போது அவர் என்ன சொன்னார்? ஏரியா 51 (ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெறும் பொதுமக்களுக்கு மறைக்கப்பட்ட இடம்) ஐ மக்கள் நம்புவதைப்போல் இதையும் நம்புவார்கள் யாரும் இவற்றை உண்மை என நிரூபிக்க வில்லை ஆனால் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள்.
    Q:  Did you tie the Mayan calendar into 2012 and why?

    Roland Emmerich:   Yeah. We tied it in. We tied it in a little bit the same way that Area 51 was tied into Independence Day.  Also, at that time, a lot of people believed in Area 51. No one could really prove it but a lot of people believed in it, and the same way, we thought it’s good to tie it into 2012 in our movie.  At one point actually, Harald called me up in Los Angeles, I was just in two or three meetings, and he said,  “I know now what we should call our film:  2012. What do you think?” and I hated it. I totally hated it, because I said that will date our movie, but then more and more I realized it’s good to do that.  It’s good to tie it into something real that people believe.

    Q:  I was going to ask if you heard about the Mayan 2012 stuff and thought I could do that, but it sounds like that came later.

    Roland Emmerich:   No, that came later. That’s not how movies or ideas work.  Most of the time, you’re interested in some sort of aspect and out of this aspect comes a story, and then, from the story, come characters. Then you do research and then sometimes something like this happens that you find.  It’s the same thing that happened with Independence Day. We found out how many people believe in Area 51 and we tied it into our story to make it more real.

    இதைவாசியுங்கள்..

    Q:  When you were doing your research, how did you separate the 2012 Mayan theory from other peoples’ theories that may or may not be true?

    Roland Emmerich: Well, there are so many, you can create your own. ( நீங்களே இப்படியான தியரிகளை உருவாக்கமுடியும்) (laughs)  The most amazing thing for me was how many books there are. When you go on Amazon, it’s like hundreds of books, all with 2012. (laughs)  It’s incredible. I ordered the first six or seven pages (laughs) and I had all these books.  Everyone tells a different story. We only used the fact that the Mayan calendar ends. That gave us the year.  It’s also mainly because it’s the cycle of the way the sun’s destructive force is going to destroy earth.  We used that a little bit and that’s all what we used.

    சோ மாயன்கள் பற்றியவிடயங்களையும் தன் கற்பனையையும் கடாசி 2012 படத்தை எடுத்திருக்கின்றார் இயக்குனர்.


    Q:  How do you think the world is actually going to end?
    Roland Emmerich:   Poof.  (laughter)  I’m only kidding.  I don’t know, I don’t know, I’m not a prophet. I hope we are not ruining our planet.  I really believe that if we keep going and doing what we are doing, we will not be leaving the planet how it should be for our kids and that’s been going on for several generations.  Also, we still have these wars going on, and all this energy could go into environment or in other peaceful activities. It’s just very sad to read the news everyday and see what are these people fighting over?  It’s like don’t they understand the clock is ticking? 

    இயக்குனரின் முழுமையான பேட்டியைப்படிப்பதற்கு இங்கே கிளிக்


    அதெல்லாம் ஓகே நாஸா 2012 சயன்ஸ்பிக்ஸன் படத்தைப்பற்றி என்ன கூறியது?
    இது ஒரு கேலிக்கூத்துப்படம் என்று கூறியிருக்கின்றது நாஸா..

    NASA silliest film award goes to 2012

    In the film, Ejiofor is the first physicist to realise that neutrino particles carried to Earth on solar flares are baking the planet's core, causing earthquakes, tsunamis and rapid continental drift.
    The film, which also stars Amanda Peet, shows growing chaos in London which causes the cancellation of the Olympics. The world's capitals are destroyed and then a tidal wave submerges Mount Everest.
    Only one question remains: can a handful of lucky people - including the Queen and her corgis, and Newton as the daughter of a black American president - survive to start a new world order?
    NASA points out that while solar flares have disrupted radio stations, neutrinos are neutral particles that do not interact with physical substances.
    Furthermore, as with the exaggerated speed of climate change in The Day After Tomorrow, the speed of heating at the Earth's core in 2012 is grotesquely accelerated. "It's absurd," said Yeomans.


    மளிகைக்கடை அண்ணாச்சி...

    ஏப்பா தம்பி உலகம் அழியப்போதாமே?
    ஆமாண்ணை
    உனக்கு வேற என்ன தம்பி வேணும்?
    வேற என்னண்ணை ஒரு 50 000 ரூபா கடனும் கடைசிவரை உங்க அன்பும் இருந்தா அதுவே போதும்.

    இதுவரை உலக அழிவுதொடர்பாக வெங்காயத்தில் வெளியிடப்பட்டபதிவுகள்..

    உலகம் அழிந்தபின் உலகம் எப்படி இருக்கும்? 2012 திரைப்படம் - குறியீடுகள்.


    உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?

    உலகம் அழியும்போது எப்படித்தப்பிப்பது என்பது தொடர்பாக கீழே ஒரு infographic தரப்பட்டுள்ளது.

    உலகம் அழியுமோ என்றபயத்தில் பலர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.உணவுகளை சேமிக்கின்றார்கள்.பாதுகாப்பு வேலி அமைக்கின்றார்கள்.உலகம் அழிந்து தப்பினால் பணம் பெரியவிடயமாக இருக்காது உணவிற்கே அதிக கேள்வியிருக்கும் உணவிற்காக மோதிக்கொள்வார்கள் என்பது அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

    உலக அழிவின்போது எப்படித்தப்பித்துக்கொள்வது என்பதுதொடர்பாக பல வீடியோக்கள் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளன.உலக அழிவில் இருந்து பொருட்கள் உங்களை பாதுகாக்குமென கூறி சில பொருட்களை விற்கின்றார்கள் வியாபாரம் நல்ல சூடாக நடைபெறுகிறதாம் மக்கள் விழுந்தடித்து அவற்றை வாங்குகின்றார்கள்.
    மாக்கள் எப்படி முட்டாள் ஆனால் என்ன லாபம் முக்கியம் அமைச்சரே உண்மை என்னவென்று மடையர்களுக்கு தெரியவா போகின்றது?

    tem condition:New other (see details)
    Ended:Sep 24, 2012 19:30:11 PDT
    Winning bid:US $23.50
    [ 17 bids ]
    Shipping:$2.50 Standard Shipping
    Item location:Bristol, Connecticut, United States

     Apocalypse Survival Kits on Sale Now in Mexico and Russia
    roughly $28.
    Sale Price: $99.99

    நஷனல் ஜியோக்கிரபி சனல் உலக அழிவில் இருந்து தமதுகுடும்பத்தை பாதுகாப்பதற்கு சில முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் மனிதர்களைப்பற்றியும் அவர்களது ஏற்பாடுகளைப்பற்றியும் ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளது.
    அனைவரும் தமக்குதேவையானவற்றை சேகரித்து வைத்துள்ளார்கள் சிலர்அடுத்த 3 வருடத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை சேகரித்துவைத்துள்ளார்கள்.சிலர் கற்கால வாழ்க்கையை வாழப்பழகுகின்றார்கள்.சிலர் தேவையானவற்றை சேகரிப்பதோடு தம்மை பாதுகாக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்..யாரிடமிருந்து? தப்பும் ஏனைய மனிதர்களிடமிருந்து.உலகம் அழிந்து மனிதர்கள் தப்பித்துக்கொண்டால் மனிதர்களிடையே பணம் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கப்போவதில்லை உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவிற்கு போட்டிஏற்படும் அதற்காக கொலைகூட செய்வார்கள்.அதாவது எமது கடந்தகால் கற்கால வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்..தக்கன பிழைத்தல் விதிக்கு  நேரடியாக கட்டுப்பட்டுவிடுவோம் எனவே அவ்வாறு உணவிற்காகதம்முடன் போராட வரும் மனிதர்களிடமிருந்து தம்மை பாதுகாப்பதற்கு ஆயுதப்பயிற்சிகள் பொக்ஸிங்க் போன்றவற்றைப்பழகுகின்றார்கள்.தமது குழந்தைகளுக்கும் இவற்றைப்பழக்குகின்றார்கள்.
    இவற்றை நம்பும்பலர் தமது வீடுகள் உடமைகளை விற்கப்போவதாக விளம்பரம் செய்துள்ளார்கள்.




    How Will You Survive the End of the World?

    சரி நீங்க என்ன பண்ணப்போறீங்க?...

    உலக அழிவுக்கு காரணம் Psy Gangnam Style கூறியவர் நொஸ்ரடாமஸ்

    $
    0
    0



    நொஸ்ரடாமஸ்  வரலாற்றில் நடந்த சில பல விடயங்களை சரியாக எதிர்வு கூறியிருக்கின்றார். நொஸ்ரடாமஸ்ஸின் சில எதிர்வுகூறல்களை ஏற்கனவே சில பதிவுகளாக நாம் பார்த்திருக்கின்றோம்.

    நொஸ்ரடாமஸ்ஸின் தீர்க்கதரிசனங்கள்-03

    நொஸ்ரடாமஸ்ஸின் தீர்க்கதரிசனங்கள்-02



     நொஸ்ரடாமஸ் தனது சென்ரூரிஸ்ஸில் பின்வரும் எதிர்வுகூறல் ஒன்றை கூறியுள்ளார்.

    In 1503, Nostradamus wrote:

    “From the calm morning, the end will come
    When of the dancing horse
    the number of circles will be 9.”


    dancing horse ஸைக்கோ கங்ணம் ஸ்ரைலில் குதிரை ஓடுவது போன்ற ஸ்ரைலில் ஆடுவார்.பாடல் உலக பிரபலம்.யூ டியூப்பில் தற்போது 1பில்லியனை தொடுவதற்குத்தயாராக இருக்கின்றது.ஆனால் பிரச்சனையே இப்போது அதில்தான். நொஸ்ரடாமஸ்ஸின் கூற்றுப்படி  dancing horse the number of circles will be 9..அதாவது ஒரு பில்லியன் ஆகும்போது 9 சீரோக்கள் ஆகிவிடும். டான்ஸிங்க் கோர்ஸ் அதோடு 9 சீரோக்கள்..எனவே நொஸ்ரடாமஸ் கூறிய அழிவுக்கான அறிகுறியே  கங்ணம் ஸ்ரைல்தான் என்று கருத்து தெரிவிக்கின்றது கூகிள்...கீழே ஒரு வீடியோ இதைத்தான் கூறுகின்றது.

    என்னான்னு தெரியல புதுசு புதுசா பீதியக்கிளப்புறாங்க.. நொஸ்ரடாமஸ்ஸின் எதிர்வுகூறல்களில் உள்ள முக்கிய பிரச்சனை அவர் பிரஞ்ச் மொழியில்தான் தனது எதிர்வுகூறல்களை வெளியிட்டார் .மொழிபெயர்ப்பாளர்கள் தமக்கு விளங்கியதற்கு ஏற்றாற்போல் அவற்றை மொழிபெயர்த்துவருகின்றார்க்ள்.உண்மையில் அவர் தான் கூறவந்தவிடயங்களை நேரடியாக கூறவில்லை.மறைபொருளாகத்தான் கூறியுள்ளார் சோ உண்மையில் அவர் எதை கூறினார் என்று  யாருக்குமே அவ்வளவு தெளிவில்லை.என்னைப்பொறுத்தவரை இது இரு கோ இன்ஸிடன்ஸாக இருக்குமோ என்றுதான் நான் சந்தேகப்படுகின்றேன்.சகலவற்றிற்கும் இன்னும் 2 நாட்களில் பதில் தெரிந்துவிடும்.

    இப்படி பீதியை கிளப்பிவிடுபவர்கள் இன்னும் 2 நாட்களுள் கிளப்பவேண்டிய பீதிகள் முழுவதையும் கிளப்பிவிடவேண்டும்.ஏனெனில் பின்னர் பருப்புவேகாது.


    உலக அழிவு தினமான 21 இல் பேஸ்புக்கில் என்ன நடக்கும்?

    $
    0
    0
    உலகம் அழியப்போகின்றது 21இல் அதாவது நாளை நாம்  உயிரோடு இருக்கப்போவதில்லை .இதற்கு பிளானட் அலைமண்ட்  மாயன் கலண்டர் அது இதுன்னு பல பதிவுகளை போதும் போதும் என்னும் அளவிற்கு  வாசித்திருப்பீர்கள்.உலகம் அழியுதோ இல்லையோ 21 இல் இருந்து பேஸ்புக்கில் உலக அழிவு என்பது  மிக மோசமாக கலாய்க்கப்படப்போகின்றது.பேஸ்புக்கில் கலாய்ப்பதற்கு  வசதியாகத்தான் கீழே ஒரு  கலாய்த்தல்  தொகுப்பு தரப்பட்டுள்ளது.உங்கள் கலாய்த்தல்களுடன் இவற்றையும் பயன்படுத்துங்கள் நண்பர்களே.மாயன்களை கலாய்ப்பதற்கு  நியாயமான கேள்வி ஒன்று கேட்கலாம் உலகம் அழியப்போகின்றது என எதிர்வுகூறிய அவர்களால் ஸ்பானியர்கள் வந்து தம்மை அழிக்கப்போகின்றார்கள் என்றவிடயம்  எவ்வாறு தெரியாமல் போனது. உலக அழிவு என்பது கிரகங்கள் அவற்றின் இயக்கங்களை வைத்துக்கணிப்பது ஆனால் இனத்தின் அழிவை அப்படிக்கணிக்கமுடியாதே என நீங்கள் கேட்கலாம் ஆனால் மாயன் அஸ்ரோலொஜி என்றும் ஒரு விடயம் இருக்கின்றது.. மகர ராசி அன்பர்களே துலா ராசி அன்பர்களே நீங்கள் தவிர்க்கவேண்டிய திசை வடக்கு ,கிழக்கு,தெற்கு மற்றும் மேற்கு என்ற வகையில் சாத்திரங்கள் பலவற்றை கூறியிருக்கின்றார்கள்.சோ அவைகூட அவர்களுக்கு உதவி செய்யவில்லை.இணையத்தில் மாயன் சாத்திரம் என்று பல தளங்கள் உள்ளன சென்று பாருங்கள்.கீழே இருப்பவை   உங்கள் கலாய்த்தல் திறமைகளுக்காக எமது சிறு உதவிகள்.




















































    ##############################################################################
    அண்மையில் வாசித்த உருக்கமான கடிதம்..

    அமெரிக்காவில் தொடக்கபள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகும் முன்பு 6 வயது சிறுவன் தனது தாய்க்கு கடிதம் எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    அமெரிக்காவில் கனெக்டிகட் நகரில் உள்ள சாண்டிஹுக் பள்ளியில், ஆடம் லான்சா என்பவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 20 குழந்தைகள் பலியாயினர்.

    இந்த துப்பாக்கிசூட்டில் பலியான 6 வயது சிறுவன் பிரையன் சாகும் முன்பு, தனது தாய்க்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    "ஐ லவ் யூ அம்மா. நான் சந்தோஷமாகவும், நலமாகவும் உள்ளேன். நல்ல மகனாக இல்லாததற்காக மன்னிக்கவும். நான் சொர்க்கத்தில் இருந்து உங்களை நேசிப்பேன் "


    உலகம் அழியும்போது நம்ம நடிகர்கள் என்ன செய்வார்கள்-நகைச்சுவை

    $
    0
    0
    எவ்வளவுகாலந்தான்  நம்ம மண்டையை இதையே சொல்லி காயவைப்பாங்க?அதுதான் சிறிது நகைச்சுவையாக இருக்கட்டுமே என்பதற்காக இப்பதிவு.

    உலகம் அழியும்போது நம்ம நடிகர்கள் என்ன செய்வார்கள்?  அண்ணன் சீனிப்பிரபுவின் நகைச்சுவைக்கலாட்டா...கீழே வீடியோவாக இருக்கின்றது பார்த்து சிரியுங்கள்

    மன்மோகன்-என்னப்பா சொல்லுறீங்கோ எந்த உலோகம் அழியப்போது?
    மம்முட்டி-இரும்பு அழியப்போகுது..உலோகம் இல்லை சார் உலகம்
    மன்மோகன்-உலகம் அழியப்போகுதா அப்ப இந்தியாவும் அழிஞ்சிடுமா?

    முடிவில ஒரு ருவிஸ்ட் இருக்கு நீங்களே பாருங்க..

    அது சரி சின்னதா ஒரு மொக்கை

    உலகம் அழியப்போகிறதாம் சாரே...என்ன செய்யப்போறீங்க எப்படி தப்பப்போகின்றோம்?

    ரஜனி-என்னாது அழியப்போகுதா ஹா ஹா ஹா கண்ணா....17,000 கோடி அடிச்சப்பவே அழியாத உலகம் இப்பவா அழியப்போது. அட போங்கப்பா


    கவுண்டமணி-ஆமா உலக விசயம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டாராம்

    கமல்-உலகம் அழிவது என்பதில் இரு மாற்றுக்கருத்துக்கள் உண்டு மக்கள் அழிவது உலகம் அழிவது இதில் இரண்டும் நடக்கலாம் ஒன்றும் நடக்கலாம் ஆனால் ஒன்றை ஒன்று நிச்சயம் சார்ந்திருக்கும்..

    கவுண்டமணி-நாம ஒன்னு கேட்ட நம்மள அசரவைக்கிறமாதிரி ஒரு பதில் சொல்லுவாரு பாரு அது நமக்கு இங்க விளங்காது வீட்ட போனாத்தான் புரியும் பல பேர் பதில் தெரியாமலே ஓடியிருக்காங்க..

    விஜய்-ணா எனக்கு பயம்னா என்னான்னே தெரியாதுன்னா?
    பிரபு-அப்ப ஏன்யா பாண்டு நனைஞ்சிருக்கு?

    அஜித்-அத்திப்பட்டி அத்திப்பட்டி.....
    விஜயகாந்த்-ஏய் உலகமே அழியப்போகுதெங்கிறன் வத்திப்பெட்டியதேடிக்கிட்டிருக்காய்.....



    உலகம் ஏன் அழியவில்லை?-ஒரு வில்லேஜ் விஞ்ஞானியின் விளக்கம்

    $
    0
    0
    உலகம் அழியப்போகின்றது என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணிய பலரும் உலக அழிவுக்கு 2 நாட்கள் முன்னதாகவே ஒன்றும் நடைபெறாததைக்கண்டு தமது முடிவுகளை மெதுவாக மாற்றிக்கொண்டார்கள்.ஒட்டு மொத்தமாக மாயன்கள் மீதும் பழியைப்போட்டு தப்பித்துக்கொண்டார்கள்.ஆனால் சிலரோ இல்லை இல்லை நாஸா மறைக்கின்றது(உலகத்தில்  விஞ்ஞானிகள் உள்ள  ஒரே ஒரு இடம் நாஸா மட்டும்தானாம் ரஷ்யா,சீனா,இந்தியாவில் எல்லாம் விஞ்ஞானிகள் இல்லையாம்) நாஸா வெளியே சொல்லவில்லை அது இதுவென்று ஆயிரம் காரணங்களைக்கூறினார்கள்.இப்படி பம்மாத்துவிட்டு  பொய்ப்பிரச்சாரம் செய்ததில் சீனாவில் பலபேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பது வேறுகதை.பேஸ்புக்கில் போலியான புகைப்படங்களை  பகிர்ந்து உலகம் அழிந்துக்கொண்டிருக்கின்றது என்றும் பகிர்ந்துகொண்டார்கள் நம்ம விஞ்ஞானிகள்.3,4 வருடங்களுக்கு முன்னர் நடந்த நில நடுக்கங்கள் தோன்றிய விண்வெளி  மாற்றங்களை எல்லாம் இன்று தோன்றியதாகவும் அவை செய்திகளில் ஒளிபரப்பட்டுவருவதாகவும் செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அழியும் என்று கூறிய 99% ஆனவர்கள் அழியும் என்று கூறிய இன்னாளில் தாம்  நம்பியது முட்டாள்தனம்தான் என்று பின்வாங்கிவிட்ட நிலையில் ஒரு சிலர் இலைங்கை,இந்திய நேரம் 4.42 pm  இல்தான் உலகம் அழியும் அதுவரை நான் நம்பிக்கையுடன் காத்திருப்பேன்(ஏதோ காதலிக்கு வெயிட்பண்ணுவதுமாதிரி) என்று காத்திருந்துவிட்டு நேரம் சென்றபின்னும் கூட அதை ஒத்துகொள்ளவில்லை.மாயன்கள் கூறியவிடயங்கள் திரிபடைந்துவிட்டனவாம்.மாயன்கள் பற்றி 30 வருடங்களாக ஆராய்ச்சி செய்தவர்கள் கூட ஆராய்ந்து கண்டுபிடிக்காத விடயங்கள் இவை.

    அதோடு உலகம் அழியப்போகின்றது என நம்பிய ஒரு விவசாயி செய்த விசித்திரமான வேலையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    //தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 55 வயதான கரும்பு வியாபாரி குழந்தைதம்பி, 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது என்றும், அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதுடன் நின்றுவிடவில்லை, நேற்று வங்கியில் இருந்து ரூ1 லட்சம் பணத்தை எடுத்து வந்து, அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.


    பணத்தை கொடுத்தபோது அவர், “வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்” என்று கூறியபடி பணத்தைக் கொடுத்தார்.

    இரந்தும் ஒரு பேக்-அப் பிளானாக, “ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்” என கூறியுள்ளார்.

    இந்த தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் அவரை பார்க்க சென்றனர். ஆனால் ஆட்கள் தேடி வருவது தெரிந்தவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.//


    அப்படி  உலகம் அழியும் என  இலவு காத்த கிளியாக காத்திருந்த ஒரு சகபாடி உலகம் அழியவில்லை என்றதும் கூறிய விஞ்ஞான விளக்கம் இது.ஹார்ட் பேஸண்ட் யாராவது இருந்தால் வாசிக்கவேண்டாம்.


    "இப்போது நேரம் 4.42 pm.....இதுவரையிலும் உலகம் அழிந்தது போன்று எனக்குத் தோன்றாததால் என் மீது கொலை வெறியுடன் இருக்கும் நண்பர்களுக்காக இந்த ஸ்டேடஸ்..... முதலில் மாயன்கள் விவகாரம் எக்கச்சக்கமாக திரிபடைந்து விட்டதால் அது குறித்தும் எனது நிலைப்பாடு குறித்தும்....
    மாயன்கள் கூறியதன்படி 5125 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் தனது ஒரு முழுச்சுற்றைப் பூர்த்தி செய்கின்றது... அதாவது அவர்களின் கலண்டர் கி.மு 3114-08-11 ஆம் திகதி 0,0,0,0,0 இல் ஆரம்பித்து இன்று 13,0,0,0,0 ஐ எட்டி மீண்டும் 0,0,0,0,0 இற்குச் சென்றுள்ளது.... அவ்வாறு பூர்த்தி செய்யும் ஒவ்வொரு ஐந்தாவது தடவையும் (25625 வருடங்கள்) அது பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கின்றது... அந்த இடத்தில் ஒரு Dark Rift உண்டு, அதன் விளைவாக பூமி அழியும் அல்லது பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது தான் கருதுகோள்... இதற்கிடையில் சுமேரியர்களின் கூற்றுப்படியான நிபுரு பூமியைத் தாக்கும் என்ற நம்பிக்கை கடந்த ஒரு மாதத்துக்கு முன்புவரை எனக்கு இதனுடன் சேர்ந்து இருந்திருந்தாலும், அது பூமியை நோக்கி வருவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை நாஸா மறைக்க நினைத்தாலும் கூட, சுயாதீன விண்வெளி ஆய்வாளர்களின் கண்ணில் ஒரு மாதத்துக்கு முன்பே தட்டுப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஒரு வாரத்தில் எமது வெற்றுக்கண்ணுக்கே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் ஒரு வாரத்துக்கு முன்னரே அந்த நம்பிக்கையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்து விட்டது.... ஆகவே இன்றுவரை நான் நம்பியது Dark Rift ஐத் தான்... ஆனால் இன்னமும் உலகம் அழியவில்லை... இந்த 25625 வருடங்களுக்கு ஒருமுறை சூரியன் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கும் நிகழ்வு மாயன்களின் புராதன பந்து விளையாட்டுடனும், அவர்களது மரணத்தின்கடவுள் வாழும் இடமான 'ஷிபால்பா' வில் நிகழ்ந்த பந்து விளையாட்டுடனும் தொடர்புபடுத்தப்படுகின்றது... அக் கதையின்படி, “ஒவ்வொரு 25625 வருடங்களும் பந்து விளையாட பால்வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன்வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான்.”
    ஆகவே இப்போது சூரியன் வென்று விட்டதாகக் கொள்ளலாம்...
    ஒவ்வொரு 25625 வருடங்களுக்கு ஒருமுறையும் சூரியன் பால்வெளி மண்டலத்தின் மத்திய ரேகையைச் சந்திக்கும் போது அழிவை நெருங்குகின்றது... அதற்காக ஒவ்வொரு முறையும் அழிந்து கொண்டா இருக்கின்றது...?
    இன்று அழியலாம் என்று நம்பினேன்... அழியவில்லை... ஜஸ்ட் அவ்வளவு தான் மேட்டர்.... இதைப் புரியாதவர்கள் நீங்கள் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள்/ ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அலறியடித்துக் கொண்டு சுனாமி எச்சரிக்கை விடுவதையும் பின்னர் சுனாமி வரவில்லை என்று தெரிந்தபின் எச்சரிக்கையை வாபஸ் பெறுவதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்...
    ஆனாலும் பூமியை இன்னும் ஒரு 25625 வருடங்களுக்கு சும்மாவிட்டு வைக்க விரும்பாத காரணத்தால்.... நாஸ்டராமஸ் ஐ உதவிக்கு இழுக்கிறேன்....
    நாஸ்டராமஸ் 2012 ஐ மைல்கல்லாக வைத்து பல ஆரூடங்களைக் கூறியுள்ளார்...
    நாஸ்டராமஸ் கூறியதன்படி, “எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது....” இதனை நாம் மாயன்களின் காலண்டர் முடிவுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்... மாயன் காலண்டர் 2012 இல் முடிவடைந்த போதிலும் எமக்கு அழிவு கிடைக்கவில்லை....
    மேலும் கங்ணம் ஸ்ரைல் பாடல் ஒரு பில்லியனைத் தொடும்போது உலக அழிவு நிகழும் என்று நாஸ்டராமஸ் சொன்னதாக சில நாட்களுக்கு முன்பு இன்னொரு மேட்டரையும் மாயன்களோடு இணைத்தார்கள்... அது ஒருவேளை அவ்வாறு ஒரு பில்லியனைத் தொடும் போது உலகம் அழிவது சம்பந்தமாக உலக மக்கள் எல்லோரும் பரபரப்பாகப் பேசுவார்கள் என்று தான் அவர் ஆரூடம் சொன்னார் என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்... :) இப்போது அது 998,088,796 views.. இதை விளக்கமுடியாதவர்கள் வழக்கம் போல கோயின்சிடன்ஸ் என்று சொல்லிக் கொண்டு திரிய வேண்டியது தான்...

    மேலும் நாஸ்டராமஸ் 2012-2025 கால கட்டம் இந்த உலகத்துக்கு மிகவும் கடினமான கால கட்டமாக இருக்கும் என்றும் வறட்சி, பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்றும், 2014 இற்கிடையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மூளும் போர் மூன்றாம் உலக யுத்தமாகப் பரிணமிக்கும் எனவும் கூறியுள்ளார்.... அதிலும் குறிப்பாக ராகு-சனி சேர்க்கை நிகழும் போது இவை நிகழும் என்றும் கூறியுள்ளார்... இப்போது, வாக்கிய பஞ்சாங்கப்படி கடந்த 02-12-2012 உம் திருக்கணித பஞ்சாங்கப்படி நாளை 22-12-2012 ம் ராகு–சனி சேர்க்கை நிகழ்ந்து அடுத்த ஒன்றரை வருடத்துக்கு நீடிக்குமாதலால் அதகளத்துக்கு ரெடியாக இருக்கவும்... மேலும் நாஸ்டராமஸ் கூறியதன்படி 3797 இல் மனித இனம் முழுமையாக அழியும்..., 4007 இல் இப் பூமியிலுள்ள சகல உயிரினங்களும் அழியும் என்பதால்... என்ச்சாய்..


    இவரை விட்டுவிடலாம்.ஆனால் சீரியஸ்ஸாக கவனிக்கப்படவேண்டிய ஒருவிடயம் இருக்கின்றது.உலக அழிவு  என்று ஒரு பேஸ்புக் எக்கவுண்டை ஓபின் செய்து.அதில் உலகம் இருண்டு கொண்டிருக்கின்றது.வானில் வால்வெள்ளி தோன்றியது. நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று  வதந்திகளை பரப்பிவருகின்றார்கள் இவர்களை என்ன செய்யலாம்?

    இப்படி செய்திகளைப்பரப்பும் பேஸ்புக் எக்கவுண்ட்கள் கீழே..
    இங்கே கிளிக் 1
    கிளிக் 2



    டுபாய் இருட்டில் முழ்கியது .
    டுபாய் மாலை 3 மணிக்கே இருட்டியது நாம் கூறியது போல, இது அங்கே தற்போது எடுத்த புகைபடம், உங்கள் நண்பர்கள் அங்கிருதால் வினவி பாருங்கள் நாம் சொல்வது உண்மையா அல்லவா என்று நாம் நடப்பதை தான் சொல்வோம்

    பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக 


    ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் பார்த்த அதிசயம் !
    ஸ்ரேல், ஜோடான் மற்றும் துருக்கி நாடுகளில் உள்ள மக்கள் வானத்தில் தோன்றிய அதிசயப் பிளம்பை பார்த்துள்ளனர். சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை நேரில் பார்த்ததால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. நேற்றைய தினம் மாலை 8.45 மணிக்கு வாணில் பெரும் வட்ட தீப்பிளம்புடன் கூடிய ஒளிவட்டம் ஒன்று தெரிந்துள்ளது. இதன் மையப்பகுதியில் இருந்து ஒரு ஒளிக்கீற்று ஒன்று பூமையை நோக்கி வந்துகொண்டுள்ளது .

    எச்சரிக்கை ரிப்போட் உலக அழிவின் முந்தய செயலாக உலகு இன்று 3 மணி நேரங்களுக்கு முன் இருட்டில் மூழ்கும் .அதாவது பிற்பகல் 3 மணிக்கே நாடுகள் இருட்டிடும்.



    புவி தனது ஒரு சுழற்சியை பூர்தி செய்து கொள்ளும் நேரம் தான் புவியின் சாய்வு அதிகரித்து புவி தகடு வெடிக்கும் என நாசா விஞ்ஞான யோன் டைமன் தெரிவித்துள்ளார், இது அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு நிகழும் என நாசா கணக்கிட்டுள்ளது, உலக மக்கள் வன்முறைகளில் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என வலியுறுதபட்டுள்ளது, உலக நாடிகளிடையே அவசரகால நிலை தற்போது பிரகடனபடுதப்பட்டுள்ளது என தெருவிக்கபட்டுள்ளது


    தற்போதைய செய்தி ... இலங்கை , இந்தோனேசியா,மியான்மார், யப்பான் ஆகியன முதலில் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க பூகோள மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

    பூமி நேற்று தனது பாதையை விட்டு விலகியிருந்தது, தற் சமயம் மேலும் விலகி சாய்வாக அந்தரத்தில் சுழல்வதாக றொயிற்ரர் செய்திக்கு நாசா விஞ்ஞானி யோன் டைமன் தற்சமயம் தெரிவித்துள்ளார், இதனால் தான் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டிருபதாகவும் இனி உலகெங்கும் தொடராக ஏற்படும் எனவும் தெரிவித்தார், தனக்கு உலக அழிவு பயம் தற்போது தான் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார், இச் செய்தியாலும் தொடர் பாரிய நில நடுக்கதாலும் மக்கள் பீதியின் உச்சியில் இருபதாக றொயிட்ரர் மேலும் தெரிவித்துள்ளது.

    மக்களே இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்?இவற்றைப்பார்த்து ஒருவன் தவறான முடிவை எடுத்துவிட்டால் என்ன செய்வது?முதலில் இவ்வாறானவர்களை உள்ளே தள்ளவேண்டும்.



    கணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்

    $
    0
    0
    கணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் !!..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே...

    உலகை பெரும் வியப்பில் ஆழ்த்திய ஒப்பற்ற பெரும் கணிதமேதை இவர் . 1914 முதல் 1918 வரை உள்ள சில வருடங்களில் 3000 இற்கும் அதிகமான புதிய கணிதத் தேற்றங்களைக் கண்டு பிடித்தவர் இங்கிலாந்தின் F.R.S { Fellow of Royal Society }விருதையும் இங்கிலாந்து Trinity கல்லூரியின் Fellow of Trinity College விருதையும் ஒருங்கே பெற்ற முதல் இந்தியன் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு தமிழரான இவரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? இவரது வாழ்க்கை வரலாற்றை அலசுவதே இத் தொடர் 

      

       ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 டிசம்பர் 22 இல் தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார் .வளர்ந்ததும் படித்ததும் கும்பகோணத்தில் தந்தையார் பெயர் கும்பகோணம் ஸ்ரீனிவாசயங்க்கார் , தாயார் ஈரோடு கோமளத்தம்மாள் . மிகவும் வறுமையான பிராமணக் குடும்பம் .
       இவரது அபாரக் கணிதத்திறன் சிறு வயதிலேயே வெளிப்பட்டது . சிறுவயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார் . 7 வது வயதில் உதவி நிதி பெற்று கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் ராமனுஜன் .
       10 வது வயதில் அவருக்கு S.L.Loney ஆல் எழுதப்பட்ட advanced trigonometry நூல் வழங்கப்பட்டது . அவற்றைத் தானே சுயமாகக் கற்றுத் தேர்ச்சி அடைந்தார் . 12 ம் வயதில் Sum and Products of Infinity Sequences பற்றிய விளக்கத்தை அறிந்தார் இது அவரது பிற்காலக் கண்டுபிடிப்புகளுக்கு பெரிதும் பயன்பட்டது . அத்துடன் அப்போதே பல தேற்றங்களையும் கண்டுபிடிக்கத் தொடங்கினார் . இதில் Euler identity தொடர்பான மறு கண்டுபிடிப்பு முக்கியமானது . இதன் மூலம் தனது அசாதாரண கணித ஆற்றலை பாடசாலையில் நிரூபித்து பல விருதுகளும் வென்றார் .
        தனது 15 வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித வல்லுநர் G.S.Carr தொகுத்த " Synopsis of Elementary Results in Pure Mathematics " என்னும் நூலை இரவல் வாங்கி சுமார் 6000 கணித தேற்றங்களை ஆழ்ந்து கற்றுக் கொண்டார் இங்கு குறிப்பிடப்பட்ட S.L.Loney ஆல் எழுதப்பட்ட , மற்றும் G.S.Carr இனால் தொகுக்கப்பட்ட இரண்டு நூல்களும் தான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டவை .
        இதன் பின் 1903 இல் தனது 16 ம் வயதில் பெற்றுக்கொண்ட புலமைப்பரிசில் மூலம் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் பின் 17 வது வயதில் Bernoulli numbers மற்றும் Euler-Mascheroni constant தொடர்பாக தனது சொந்த கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் . ஆனாலும் அவர் மனது கணிதத்திலேயே மூழ்கிவிட்டதால் எஞ்சிய பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை . விளைவு ; கல்லூரித் தேர்வில் கோட்டை விட்டார் . பின் நான்கு வருடம் கழித்து சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் தேர்வில் தோல்வியடைந்தார் !
    பின் 1909 இல் திருமணம் செய்து கொண்ட ராமானுஜன் வறுமையின் கோரப்பிடியினால் தன் கணிதப் பித்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு சென்னையில் வேலை தேடத் தொடங்கினார் . கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தரான ஆர். ராமச்சந்திரராவ் ; கணித வல்லுநர் பலரது சிபார்சினால் 1910 இல் ராமானுஜனுக்கு கணிதத் துறையில் பணிபுரிய ,ஓரளவு தொகையை உபசாரச் சம்பளமாக மாதாமாதம் அளிக்க முன்வந்தார் . 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுமத்தின் வெளியீட்டில் [ Journal of tha Indian Mathematical Society ] வெளிவந்தன . மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி சென்னைத் துறைமுக நிறுவனத்தில் 1912 இல் ராமானுஜம் 'கிளார்க்' வேலையில் சேர்ந்த்தார் அதன் பின் தான் அவர் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது .




        ஆம்; ராமானுஜன் 'கிளார்க்' வேலையில் இருந்தபோதும் அவரது கணித ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருந்தன . இதன் விளைவாக; துறைமுக அலுவலகத்தில் ஒரு 'கிளார்க்' கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக்கூடங்களில் பேசப்படத் தொடங்கியிருந்தது . இதன் தொடர்ச்சியாக இந்திய கணிதக் கழகத்தின் நிறுவுனரான பேராசிரியர் வி. ராமஸ்வாமி ஐயரும் , அவரால் ராமானுஜனுக்கு அறிமுகமான பேராசிரியர் சேஷு ஐயரும் , சென்னைத் துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் அவர்களும் ராமானுஜனின் கணித ஆற்றலைப் பாராட்டி அவரது கணிதப் படைப்புக்களை இங்கிலாந்தில் இருந்த மூன்று முக்கிய பிரிட்டிஷ் கணித வல்லுனர்களுக்கு அனுப்பித் தொடர்புகொள்ள ஊக்கம் அளித்தார்கள் . அவர்களில் இருவர் பதில் போடவில்லை . ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார் அவர் தான் அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கணித நிபுணர் ; G.H.ஹார்டி !!  { மற்றைய இருவர் E.W.Hobson , H.F.Baker }

                                                                கணித நிபுணர்  G.H. ஹார்டி

        ராமானுஜனின் கத்தையான கடிதக்கட்டு ஹார்டியின் கையில் கிடைத்தது 1913 ஜனவரி 16 ம் திகதி ! முதலில் மேலோட்டமாகப் பார்வையிட்டு விட்டு ஏதோவொரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக்கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. ஏனெனில் ராமானுஜன் அனுப்பிய தேற்றங்கள் எவைக்கும் நிறுவல்கள் அனுப்பப்படவில்லை ! இரவு உணவின் பின்னர் அவரும் , அவரது நெருங்கிய கணித ஞானியான ஜான் லிட்டில்வுட்டும் இணைந்து புதிர்களைப்போல் இருந்த ராமானுஜனின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும் கணித தேற்றங்களையும் மெதுவாகப் புரட்டிப் பார்த்து பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள் . 
                                          
                                                           ராமானுஜனின் note book இன் ஒரு பகுதி  


           அதில் பல தேற்றங்கள் அவர்களுக்குப் புதிராகவே இருந்தன . ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன புதிதாக இருந்தவற்றுக்கு நிறுவல்கள் கொடுக்கப்படாமல் இருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப்பார்த்தார்கள் . சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது . சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது . ஆனால் பல தேற்றங்களை அவர்களால் அணுகவே முடியவில்லை ! ஆனாலும் அதற்காக அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை . உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப்படுபவர்களான அவர்களாலேயே அத் தேற்றங்களின் உண்மையைப்பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில் ; பிரமித்துப்போன இரு வல்லுனர்களும் ஒரு முடிவிற்கு வந்தனர் . தாம் காண்பது ஒரு மகா மேதையின் உன்னத கணிதப்படைப்புகள் !;அவை ஒரு பைத்தியக்காரனின் கிறுக்கல்கள் அல்ல என்று !! இருவரும் அன்றே தீர்மானித்து விட்டனர் ; ராமானுஜனை கேம்பிரிட்ஜுக்குக் கொண்டுவர வேண்டும் என்று !அத் தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம் !!
          ஹார்டி உடனே ராமானுஜனைக் கேம்பிரிட்ஜுக்கு வரும்படி கடிதம் எழுதிய போதும் ;சென்னைப் பல்கலைக்கழகமும் [ University of Madras ] இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் , Trinity கல்லூரியும் அவருக்கு உதவி நிதி வழங்க முன்வந்த போதும் ; ராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடுபோக முடியவில்லை !! 



        ராமானுஜன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முன்பே கூறியிருந்தேன், அதுதான் அவருக்குத் தடையாக இருந்தது. அக் காலத்திலே, பிராமணர்கள் கடலைத் தாண்டிச் செல்வதென்பது மாபெரும் பாவமாகக் கருதப்பட்டது. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது தாயார், அவரது பயணத்தைக் கடுமையாக எதிர்த்தார். சுமார் ஒரு வருடமாக இங்கிலாந்துக்குச் செல்வதா, வேண்டாமா என்று பெரும் மனப் போராட்டம் நடத்தினார் ராமானுஜன். தனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை அவரால் இலகுவாக உதறித்தள்ளிவிட முடியவில்லை. 

          இறுதியாக 1914ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி தன் தாயின் பலத்த எதிர்ப்பைப்புறந்தள்ளி இங்கிலாந்து செல்லக் கப்பலேறினார் ராமானுஜன். ஆனாலும் தன் தாயிடம் 'எக்காரணம் கொண்டும் மாமிசம் புசிக்க மாட்டேன்' என்ற உத்தரவாதத்தையும் வழங்கிவிட்டே கப்பலேறினார். அவர் ஏப்ரல் 14ந் தேதி லண்டனை அடைந்தார். அங்கே E.H.Neville தன் காருடன் காத்திருந்தார். நான்கு நாட்களின் பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள E.H.Neville யின் வீட்டை அடைந்த ராமானுஜன் உடனடியாகவே ஹார்டியுடன் இணைந்து தன் பணியைத் தொடங்கினார். 6 வாரங்களின் பின்னர் Neville யின் வீட்டிலிருந்து வெளியேறிஹார்டியின் room இற்கு அருகிலேயே room எடுத்து தங்கினார் ராமானுஜன்.
                                                                  ஹார்டி-ராமானுஜன்

       அவர் கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் பணியாற்றிய அடுத்த நான்கு ஆண்டுகளும் (1914-1918) கணித உலகுக்குப் பொன்னான ஆண்டுகள்தான். ஹார்டியின் சீரிய பொறிநுணுக்கமும் ராமானுஜனின் நூதன கணித ஞானமும் இரண்டறக்கலந்து சுமார் 3000 இற்கும் மேற்பட்ட கணிதத் தேற்றங்கள் உருவாகின. இருவரும் Arithmatic Functions பலவற்றை ஆங்கில, ஐரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். [ 27 ஆய்வுக் கட்டுரைகள் ராமானுஜனால் வெளியிடப்பட்டன, அவற்றில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை ] அவர்கள் வெளியிட்டவற்றில் Riemann Series, Elliptical Integrals, HyperGeometric Series, Fuctional Equations of Zeta Functions மற்றும் ராமானுஜன் தனியாக ஆக்கியDivergent Series ஆகியவை கணிதத்துறையில் குறிப்பிடத்தக்கவை.
    ராமானுஜனைப் பொறுத்தவரை எண்கள்தான் அவர் உலகம். எண்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதே அவரது பொழுதுபோக்கு. ஒரு சந்தர்ப்பத்தில் ஹார்டியும் ராமானுஜனும் உரையாடும் போது, ஹார்டி; தான் வந்த taxi இலக்கமான 1729 என்பது சுவாரஸ்யமற்ற/சாதகமற்ற இலக்கம் என்றும் 
    அந்த டாக்ஸியில் தான் அலைக்கழிந்ததாகவும் கூறினார். உடனே குறுக்கிட்ட ராமானுஜன், இல்லை அவ்வெண் சுவாரஸ்யமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார் !! ஒரு இலக்கத்தைக் கூறியவுடனேயே அந்த இலக்கத்தைப் பற்றி விலாவாரியாக விளக்குமளவுக்கு ராமானுஜனுக்கு எண்களிடம்  பரிச்சயம் இருந்தது. இவர்களது நினைவாக 1729 என்ற இலக்கமே Hardy–Ramanujan number என்றே இன்று அழைக்கப்படுகின்றது.
         எண்களின் பண்புகளைப் பற்றிய number theory இலும் complex number இலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல்துறை முதல் கணனித் துறையின் உயர்மட்டம் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    {

    உண்மையில் ராமானுஜனின் படைப்பாற்றல் அபரிமிதமான வேகத்தைக் கொண்டிருந்தது. இது பற்றி பின்னாட்களில் ராமானுஜனின் திடீர் மறைவுக்குப் பின்னர் ஹார்டி குறிப்பிடும் போது; 'இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னென்ன புத்தகங்களைப் படித்திருந்தாரா,இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒரு வேளை சொல்லியிருப்பாரோ,என்னமோ. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் அவருக்குக் காலை வணக்கம் சொல்லும் போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களைக் காட்ட ஆயத்தமாயிருந்ததால், எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அத்துடன் ராமானுஜனைப் பார்த்து அதைப் படித்திருக்கிறாயா,இதைப் படித்திருக்கிறாயா? என்று கேட்பதும் பொருத்தமில்லாததாக இருந்தது.' என்கிறார்.
    ஹார்டி கூறியது உண்மை தான்.... எந்தக் கணித வல்லுனருடன் ஒப்பிட்டாலும் ராமானுஜனைப் 'படிக்காதவர்' என்று தான் கூற வேண்டும். தன்னால்; தனக்குத்தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். அவரது கணித அறிவுமுறைசாராததாக இருந்தது. 18 ,19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு,அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே/அவற்றைக் கற்காமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணிதவியலாளர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது.
    20 ம் நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்று புகழ் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு.
    பின்னாட்களில் ஒருமுறை ராமானுஜனின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறுகையில்; ராமானுஜனின் திறனுக்கு மதிப்பு 100 அளித்தால்,அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை David Hilber இற்கு 80லிட்டில்வுட்டுக்கு 30,தனக்கு 25 மட்டுமே.

    ராமானுஜனின் கணித தேற்றங்கள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைக்கின்றார்.
    ராமானுஜனுக்கு Cauchy தேற்றம், Doubly Periodic Functions போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை!! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார் ஹார்டி! ஆனாலும் அவற்றில் சிலவற்றை தன்னால் முடிந்தவரை ஹார்டி கற்றுக் கொடுத்தார்.
    இது பற்றி ஹார்டி குறிப்பிடும் போது “நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கற்றுக் கொடுத்தது சரி தானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக் கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதைத் தடை செய்திருக்கவும் கூடுமல்லவா? ஒருவேளை நான் அவருக்குச் சொல்லிக் கொடுத்தது தான் சரி என்று வைத்துக் கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதைவிட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்” என்கிறார்.

    1918 ம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S விருதையும் டிரினிட்டி கல்லூரியின் Fellowof Trinity College விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும் பெரும் இவ் இரு கௌரவப் பட்டங்களையும் முதன்முதல் முப்பது வயதில் வாங்கிய முதல் இந்தியர் ராமானுஜன் தான்!
    அவரது சீரும் சிறப்பும் உன்னதம் அடைந்து மேல்நோக்கிப் போகையில் அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தனமான இங்கிலாந்துக் காலநிலை உடற்கேட்டைத் தந்தது. முதலாம் உலக யுத்தத்தின் நடுவே இங்கிலாந்து கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்த சூழலில் காய்கறிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வந்த பின்னணியில் காய்கறி உணவை மட்டுமே நம்பி அதையும் கட்டுப்பாட்டோடு உண்டு வந்ததால் அதுவும் அவரது உடல்ப் பலவீனத்தை அதிகமாக்கியது.
    ராமானுஜனைப் பயங்கரக் காச நோய் பீடித்து வீரியத்தோடு தாக்கியது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காச நோயிற்குப் போதிய மருந்தில்லை. இங்கிலாந்துக்குச் சென்ற சிறிது காலத்திலிருந்தே அவர் இப் பிரச்சனையால் துன்பப்பட்டு வந்தார். அவரது பெரும்பாலான நாட்கள் மருத்துவ விடுதியிலேயே கழிந்தன. ஆனாலும் அவருடைய மனதில் ஓடிக் கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. அவரது கணிதப் படைப்புகள் பெருகிக் கொண்டேதான் இருந்தன.
    1919 இல் போர் நின்று அமைதி நிலவிய போது நோய் முற்றி; இங்கிலாந்தில் வாழ முடியாதென முடிவுசெய்து இந்தியாவுக்குத் திரும்பினார். நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளளவும் குறைக்கவில்லை. உண்மையில் அவர் தனது நோயின் வலி நீக்கியாகவே கணிதத்தைப் பயன்படுத்தி வந்தார். அவர் கணித உலகில் சஞ்சரிக்கையில் அவரது வலிகள் யாவும் மறைந்து போவதாக ராமானுஜன் குறிப்பிடுகின்றார்.
    இறுதியாக 1920 ஏப்ரல் 26ம் திகதி தனது 32 ம் வயதில்; கணிதமேதை ராமானுஜன் அவர்கள் இவ்வுலகை விட்டு விண்ணுலகு ஏகினார்!!
    உயிர் நழுவிச் செல்லும் கடைசிவேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை அவரது குறிப்பு நூல்கள் காட்டுகின்றன. நோய் முற்றியிருந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 600 புதிய தேற்றங்களைக் கண்டுபிடித்துள்ளார் ராமானுஜன்.
    தற்காலத்தில் இவரது குறிப்பு நூல்களின் நகல்கள் சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கணித இதழ்களில் இவரது 32 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவின் Illiniois பல்கலைக்கழகத்தின் கணித வல்லுநர் Bruce.C.Berndt இனால் ராமானுஜனின் குறிப்பு நூல்கள் தொகுக்கப்பட்டு விரிவான விளக்கங்களுடன் 1985இலிருந்து 2005 வரையில் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் 3542தேற்றங்கள் இருக்கின்றனவென்றும் ஏறக்குறைய 2000 இற்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்துக்கு முன்னால் கணித உலகுக்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் கூறுகின்றார் Bruce.C.Berndt.
    நிச்சயமாக ராமானுஜன் கற்றது கடுகளவு, கணித்தது உலகளவு என்று சொன்னால் அது அவருக்குச் சற்றும் மிகையாகாது!!!

    கணித மேதை இராமானுஜரின் பிறந்தநாளையொட்டி கூகுல் இணணயதளம் அதன் முகப்பு பக்கத்தில் அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளது
    (தேன் மதுரன்)

    கிறிஸ்மஸ் - ஜேசு பிறந்த நாள்தானா?

    $
    0
    0


    கிரிஸ்மஸ் என்பது ஒரு உலகளாவிய பண்டிகை என நம்பப்பட்டு வருகிறது. மத எல்லைகளைத் தாண்டி இது பெரும்பாலும் உலகத்தின் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. உண்மையாகவே இது அத்தனை மத சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. ஆனால் அதற்காக நாம் கொண்டாடுவதால் பாதகமில்லை என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அப்படி இருந்தால்கூடப் பரவாயில்லை. இது உண்மையில் காலநிலை சம்பந்தப்பட்ட பண்டிகை. டிசம்பர் மாதம் என்பது மேற்குலக நாடுகளின் அதி பனிப்பொழிவுக் காலம். சீசன். அந்த நேரத்திலே உருப்படியாக எதுவுமே செய்ய முடியாது என்பதால், மகிழ்ச்சிகரமாக ஏதாவது செய்வோம் என முடிவெடுத்துக் கொண்டாடுவதுதான் கிரிஸ்மஸ். உண்மையில் இது ஒற்றை நாள் தேவதூதன் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. அந்தக் காலப்பகுதி முழுவதற்குமான மொத்தப் பண்டிகை. உண்மையில், இயேசு பிறந்தது டிசம்பரில் இல்லை, ஒக்டோபரில்தான் என ஒரு கதை காற்றிலே உலாவுகிறது. (அதுபற்றி பெரிதாக ஆதாரம் சிக்காததால் நான் மூக்கைக் கொடுத்து புண்ணாக்கிக்கொள்ள விரும்பவில்லை. J )

    ஆங்கிலேயர்களால், அல்லது மொத்தமாக மேற்குலகத்தவர்களால், அவர்கள் நம்மை ஆண்டபோது கடத்தப்பட்ட கலாசாரம்தான் இந்தப் பண்டிகை. போதாததற்கு கிறிஸ்தவர்களின் போப்பான கிரகேரியால் தயாரிக்கப்பட்ட கிரகேரியன் கலண்டரைவேறு நாங்கள் பின்பற்றுவதால், அதன் வருடப்பிறப்புவேறு அந்தக் காலகட்டத்திலேயே வந்து தொலைவதால், அதேவேளை நமக்கு பனிப்பொழிவுதான் இல்லாவிட்டாலும் எதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக மழையாவது பெய்து தள்ளுவதால் அது நமக்கும் சீசனாக இருப்பதால், யேசுவேறு அந்தத் திகதியில் பிறந்தவர்தான் என நம்பப்படுவதால், எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கிலேயக் கலாசாரத்தின் மேலுள்ள விருப்பத்தால் நாங்கள் இந்தப் பண்டிகையை விமரிசையாகத்தான் கொண்டாடுகிறோம்.  தங்களை நாத்திகர்களாக சொல்லிக்கொள்பவர்களும், அந்தக் காரணத்தால் இந்துப் பண்டிகைகளை புறக்ணிப்பவர்க்களும்கூட கிரிஸ்மஸ்சை கொண்டாடுகிறார்கள். அல்லது கருணாநிதி போன்ற சோரம் போபவர்கள் வியாபாரத்துக்காகவும்  இதனை கொண்டாடுகிறார்கள். நாத்திகனாக என்னை நம்பிக்கொள்பவன் என்கிற அடிப்படையில் எனக்கு கிரிஸ்மஸ்ஸில் ஈடுபாடு இல்லை. இந்துவாகப் பிறந்தவன் நாத்திகனாக மாறினால் அவன் இந்துசமயத்தை மட்டும்தான் கழுவி ஊற்றவேண்டும், மற்ற மதங்களை மதிக்கவேண்டும் என்று இல்லை. ஆனால், ஒரு தத்துவவாதியாக நான் இயேசு கிறிஸ்துவை (இயேசு கிறிஸ்து என்பது அந்த மனிதரின் பெயரே இல்லை. யேஷுவா.) மதிக்கிறேன், அப்படி ஒரு மனிதர் பிறந்து வாழ்ந்ததை நம்புகிறேன். அந்த மனிதரின் பிறப்பாக எண்ணப்பட்டு கொண்டாடப்படுவதால், அது என்ன இழவாக இருந்தாலும், அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் நாங்களும்  கொண்டாடித் தள்ளுவதை பொறுத்துத் தொலைந்தாலும், உண்மையாகவே அதனை கொண்டாடும் யோக்கியதை உள்ள பனிபொழியும் நாட்டுக்காரர்களின், தங்கள் தாய்மொழியிலேயே தங்களின் பெயரை வைத்துக்கொள்ளும் மனிதர்களின் வழக்கங்களை ஆராய்வோம்.

    எதற்கும் இருக்கட்டும், அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். (தைப்பொங்கலை விட கிரிஸ்மஸ் முக்கியமான பண்டிகையாக இருக்கும் ஒரு சமூகத்தில் வாழ்வதற்காக வெட்கப்படாத யாருமே share if you are proud to be a Tamilanசெய்யாதீர்கள். கிறிஸ்தவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். அடிப்படையிலே இரண்டுமே சீசனுக்கான பண்டிகைகள்தான். ஒன்று மதக் கலப்பில்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுடையது, மற்றையது தமிழர்கள் அல்லாதவர்களுடையது.)



    கிரிஸ்மசின் சில பாரம்பரியங்கள் புவியியல் கடந்து, வரலாறு கடந்து உலகளவில் பொதுவானவை. கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, பரிசுகள்... எல்லாமே வந்த பின்னணியை ஆராய்ந்தோமானால் கிறிஸ்மஸ் என்பது ஒரு தனிப்பட்ட பண்டிகை அல்ல, வெவ்வேறு காலகட்டத்தின் வெவ்வேறு பண்டிகைகளின் தொகுப்பு, சேர்ந்து காலப்போக்கில் உருவான ஒரு புதுப் பண்டிகையேயன்றி வேறில்லை என்பது தெளிவாகும்.


    ஆரம்பகாலத்திலே தேவாலயங்களில் கொண்டாடப்பட்ட வருடாந்த விருந்தே கிறிஸ்மசாக இருந்தது. அந்த விழாவை கி பி 200 காலப்பகுதியில் கிறிஸ்துவின் பிறந்தநாளில் கொண்டாடலாமே என யோசித்தார்கள். அந்தக்காலத்தில் அறிவின் மையமாக இருந்த அலெக்சாண்டிரியாவின் சிந்தனையாளர்கள் அந்தப் பிறந்தநாள் மே 20 இல் வருவதாக கணித்தார்கள். அதிலிருந்து நூற்றெண்பது வருடங்களில் ரோமில், ஜூலியஸ் I தலைமையில்  உலகளாவிய பல பிரதேசங்களின் காலப்பகுதியுடன் பொருந்துவதால் அதனை December 25 க்கு மாற்றினார்கள். உண்மையில், அந்த நாளானது ரோமர்களின் முக்கிய கடவுளான சூரியனின் பிறந்தநாளாகும். எனவே, சூரியன் பிறந்த நாளில்தான் ஜேசுவும் பிறந்திருக்க வேண்டும் என்கிற மொக்கையான லோஜிக்கின் அடிப்படையில்தான் அந்த நாளில் ஜேசு பிறந்ததாக நம்பப்படுகிறது என ஒரு கதை இருக்கிறது.

    கிறிஸ்தவ மதத்தின் புனித நூலான பைபிளை ஜெர்மன் மொழியில் பெயர்த்தபோது மார்ட்டின் லூதர் கிங் (சீனியர். இவர், ‘அவர்அல்ல.) அதிலுள்ள மொக்கையான, நம்பமுடியாத, பிற்போக்கான தகவல்களை தவிர்த்தார். அதனால், அந்தப் புத்தகத்தை பின்பற்றுபவர்கள் கத்தோலிக்கர்களிருந்து வேறுபட்டார்கள். பழமையை எதிர்ப்பவர்கள் என்கிற அடிப்படையில் அவர்கள் ப்ரோட்டஸ்தாந்துகள் எனப்பட்டார்கள். அந்த மாட்டினே கிரிஸ்மசுக்கான கிறிஸ்மஸ் மரத்தை அறிமுகப்படுத்தியவர் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால், பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே மரங்களை அலங்கரித்து வீட்டில் வைக்கும் வழக்கம் இருந்தது. இதற்காக கூம்பு வடிவமுள்ள ஃபிர் அல்லது பைன் மரத்தை பயன்படுத்துவார்கள்.  (ஒரு பிர் மரம் சராசரியாக ஆளுயரத்துக்கு வளர பதினைந்து ஆண்டுகள் எடுக்கும்.  பதினைந்து கிறிஸ்மஸ்.களை தாண்டிய ஒரு மரத்துக்கு அடுத்த கிறிஸ்மஸ் இல்லை.) அந்த வழக்கத்தை பின்பற்ற நினைத்து நாங்கள் சவுக்கு மரங்களை இம்சை படுத்துகிறோம்.

    X Masஎன்று கிரிஸ்மசை குறிப்பிடும் வழக்கம் ஜெர்மனியர்களுடையது. இது ஜேசுவின் பெயரை எக்ஸ் என அழைப்பதாகும் என பலர் தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். உண்மையில் X என்பது இயேசுவின் பெயரை கிரீக்கில் எழுதும்போது வரும் முதலாவது எழுத்தாகும். (X – Chi… (Χριστός) )

    துருக்கியின் பட்டாரா கிராமத்தில்  கி பி 270 களில் வாழ்ந்த செயின்ட் நிக்கலஸ் என்கிற ஒரு பாதிரியார் மணமகனுக்கு கொடுப்பதற்கு பொருளில்லாததால் விபசாரத்தில் ஈடுபட முடிவெடுத்த சகோதரிகளான  மூன்று பெண்களின் திருமணத்துக்காக அவர்களுக்குஉதவுவதற்காக அவர்களதுவீட்டுக்குள் இறங்கி கொஞ்சப் பொருட்களை வைத்துவிட்டுப் போனார்,  அவற்றை வைத்து பெண்கள் திருமணத்தை முடித்தார்கள் என்கிற கதையினை அடிப்படையாக கொண்டு, அந்தப் பாதிரியார் கிறிஸ்மஸ் இரவுகளில் வீடுகளின் புகைக்கூடு வழியாக இறங்கி, சிறுவர்களின் காலுறைகளில் பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுப் போவார் என்கிற நம்பிக்கை பரவியது. செயின்ட் நிக்கலஸ் காலப்போக்கில் சண்டா கிளாஸ் ஆகி, வட துருவத்தில் அவருக்கு பெரிய மாளிகையே இருக்கிறது, தமக்கு வேண்டியவற்றை சிறுவர்கள் எழுதி அங்கெ அனுப்பினால்,  பிளிட்சர், கொமெட்,குபிட் உள்ளிட்ட ரெயின்டியர் மான்கள் இழுக்கும் ஸ்லெட்ஜ் வண்டியில் பறந்து வந்து அவர்  தருவார் என்கிற அளவில் போய்விட்டது. செயின்ட் நிக்கலஸ் தான் (சண்டா கிளாஸ் ) பைபிளில் வராத மிகப் பிரபலமான புனிதர். அதிகளவில் வரையப்பட்ட புனிதரும் இவர்தான். வங்கி, அடைவு, கடலோடல் போன்றவற்றுடன், திருட்டு, அறிவுத் திருட்டு மற்றும் விலங்குகளை உண்ணுவதற்கும் புனிதத் தெய்வமாக இவர் வழிபடப்படுகிறார்.


    கிறிஸ்மஸ் : சில லோளுலாயிகள்..
    ·         பேஸ்புக் போஸ்டுகளை ஆராய்ந்ததில், கிறிஸ்மசுக்கு சரியாக பதினான்கு நாட்களுக்கு முன்னால்தான் பெருமளவான காதல்கள் பிரிகின்றதாம்.
    ·         கிறிஸ்மஸ் காலப்பகுதியில் தற்கொலைகள் ஏனைய நாட்களை விட குறைவுதான். எப்போது அதிகம் தெரியுமா? கிறிஸ்மஸ் பன்னிரண்டு நாள் கொண்டாட்டங்களின் கடைசி நாள், ஜனவரி ஆறு.
    ·         கிறிஸ்மஸ் ஈவ் எனப்படும் கிறிஸ்மஸ் இரவில், மனம் தூய்மையானவர்களுக்கு, மிருகங்கள் பேசுவது கேட்கும் என்பது ஜெர்மனில் உள்ள கதை.
    ·         உலகத்தில் ஏறத்தாழ 2106 மில்லியன் சிறுவர்கள் இருக்கிறார்கள். ஒரு வீட்டுக்கு 2.5 சிறுவர்கள் என்று சராசரியாக வைத்தாலும்,ஒரு கிறிஸ்மஸ் இரவில் அனைத்து சிறுவர்களின் விருப்பத்தையுன் நிறைவேற்ற,சண்டா 842 புகைக்கூண்டுக்குள் இறங்கவேண்டும். அதுவும் 221 மில்லியன் மைல் ஓடி. ஒவ்வொரு வீட்டுக்கிடைப்பட்ட தூரத்தையும் அவர் 0.0002 செக்கனுக்குள் கடக்கவேண்டும்.


    கிறிஸ்மஸ் சரியா, பிழையா, கொண்டாடலாமா கொண்டாடப்புடாதா... எதுவும் தேவையில்லை. இயேசுவை பின்பற்றும் மதத்தை விடுங்கள், இயேசுவின் ஏதாவது ஒரு நல்ல கருத்தை பின்பற்றினால், நீங்கள் அவரது பிறப்பை கொண்டாடத் தகுதியானவரே. இல்லை என்றால், நீங்கள் கிறிஸ்துவின் மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும், வெறும் கேளிக்கைக்காக கொண்டாடுபவரே. 

    வெள்ளைமாளிகையின் கறுப்பு அடிமைகள்- ஒரு முழுத்தொகுப்பு

    $
    0
    0

    இன்று உலகின் அரசனாகவும் தேவைப்படுகையில் அரக்கனாகவும் திகழும் அமெரிக்காவின் அட்டகாசங்கள் சொல்லில் அடங்காது. தன் வளர்ச்சிக்காக ஏனைய நாடுகளை ஓட்ட உறிஞ்சிக் கொள்ளும் வழக்கத்தைதான் அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து தன்னை தனி நாடக பிரகனடப்படுத்திக்கொண்டிருந்த நாட்களில் இருந்து கொண்டிருக்கிறது. அன்று முதல் ஒவ்வொரு அடியையையும் தூர நோக்குடன் முன்னெடுத்து வைத்து அதில் வெற்றியும் கண்டுகொண்டு இன்று வல்லரசாக உயர்ந்து நிற்கிறது.
                     ஆனால் உலக அரங்கில் இது கொண்டிருக்கும் இந்த நாட்டாமை நாற்காலி தனிய அமெரிக்கர்களின் உழைப்பினால் மட்டும் விளைந்தது அல்ல. அக்காலங்களில் செவ்விந்தியர்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்ட விளை நிலங்களில் ஆபிரிக்க அடிமைகளின் இரத்தத்தை விதைத்ததன் மூலம் ஏராளமான வருமானத்தை விவசாயத்தில் பெற்றுக்கொண்டது அமேரிக்கா. ஆனால் அமெரிக்கா தன்னை உயர்த்திக்கொள்வதற்காக செவ்விந்தியர்களை கொன்று ஆபிரிக்கர்களின் இரத்தத்தை அடியொட்ட உறிஞ்சிக்கொண்டது. அந்த வகையில் அமெரிக்காவில் கறுப்பு அடிமைகளுக்கு  நடைபெற்ற துன்பங்களையும் கொடுமைகளையும் அதிலிருந்து எப்படி அவர்கள் விடுபட்டார்கள் என்பதையும் வெங்காயத்தில் ஒரு தொடர் கட்டுரையாக வரைதிருந்தோம். அதன்படி அத்தொடர் முடிவடைந்த நிலையில்  அப்பதிவுகளின் ஒருங்கமைந்த தொகுப்பு பதிவாக இப்பதிவு அமைகிறது.

    வெள்ளைமாளிகையின் கறுப்பு அடிமைகள்-01
    அமெரிக்காவிற்கான கருப்பு அடிமைகள் எவ்வாறு அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டார்கள் என்றும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட விலைகள் எத்தகையது என்றும் அடிமைகளுக்கான சட்ட முறைகள் பற்றியும் இப்பதிவு கூறியிருந்தேன்.
       
              "..................உண்மை அமெரிக்கர்களான செவ்விந்தியர்களிடமிருந்து பறித்துக்கொண்ட வளமிக்க நிலங்கள் ஏராளம் இருந்த போதும் அதை உரிய பராமரிப்பின் மூலம் பயன்படுத்த போதிய உழைபாளிகள் இல்லாதிருந்தது. வட அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஏராளம் பருத்தி விளையும் நிலங்கள் பயனற்று போவதை பிரபுக்கள் யாரும் விரும்பியிருக்கவில்லை. மேலும் தங்களுக்கு ஏற்படும் இலாபத்தில் உழைபாளிகளுக்கு சம்பளம் கொடுப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் சம்பளம் இல்லாத நல்ல உழைபாளிகள்தான். இதற்க்கு அவர்கள் எடுத்த முடிவுதான் ஆபிரிக்க நாடுகளில் வறுமையில் வாடும் கறுப்பின உழைப்பாளிகளை அடிமைகளாக ஒரே கூலியில் விலை கொடுத்து வாங்குவது..........."
                       


    வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-02

    அடிமைகளுக்கு விதிக்கப்பட்ட வேலைகளும் அதனால் அவர்கள் எவ்வாறு பாகுபடுத்தப்பட்டனர் என்பது பற்றியும் அவர்களின் வேலைநேரம் குறித்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்தும் இப்பதிவில் கூறியிருந்தேன்.
      
                "...........வீட்டு வேலை பார்ப்பவர்களை பொருத்தவரை எஜமானர்களின் கட்டளைக்கு கீழ் படிந்து தரும் வேலைகளை செய்ய வேண்டியதுடன் பண்ணை வீடு முழுவதையும் ஒருநாளில் எட்டுமுறை கூட்டியள்ளுவதுதான் இவர்களின் மிகப்பெரும் வேலையாக அமைந்தது. ஒரு பண்ணை வீடு சாதாரண சுற்றுப்பரப்புகளை கொண்டதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்களுக்கு பொறியும், கொள்ளும் தான் நாளுக்கு இருமுறை இருபிடி உணவாகத்தரப்படும்.........."
                           


    வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-03

    இன்று மனிதநேயனாக வெளிப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா அன்று கருப்பு அடிமைகளுக்கு இளைத்த கொடிய துன்பங்கள் எத்தகையது எவ்வளவு கொடூரமானது என்பது பற்றி இப்பதிவில் கூறியிருந்தேன்.

                  “...............இது என்ன பிரமாதம் பிரசவவலி எடுத்த ஒரு பெண் அடிமை வலியில் துடித்துக்கொண்டிருந்த சமயம் அவளை படுக்கைக்கு இழுத்து பலாத்காரப்படுத்தி புனர்ந்ததின் மூலம் அவ்வடிமையையும் குழந்தையையும் ஒரே சமயத்தில் கொன்று ஆற்றில் வீசியெறிந்த பண்ணையார் ஒருவர் கூட அங்கு பெருமையுடன் தான் தொடர்ந்து வசித்து வந்திருக்கிறார். இதெல்லாவற்றையும் விட தமக்கு வேறேதாவது கோபம் எண்டால் அடிமைகளை வரிசையில் நிக்க வைத்து குருவியை சுடுவது போல் சுட்டு புதைத்த தனவான்கள் வசித்த அமேரிக்கா அது. இரவில் குழந்தையை பார்க்க நியமிக்கப்பட்டிருந்த 14 வயது அடிமைப்பெண் ஒருத்தி வேலைமிகுதியால் அசந்து தூங்கி விட்டால் என்பதற்காக சவளால் அவள் மண்டையை பிளந்து மூளையை பார்த்த தாய்குலம் கூட அப்போதைய அமெரிக்காவில் இருந்திருக்கின்றனர்........”
          

    வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-04

    தொடர்ந்து அடிமை முறையை பொறுக்கமுடியாது எவ்வாறு அடிமைகள் துவண்டு எழுந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பிய காரிஸன் பற்றியும் அபாலிஷனிஸ்ட் {ABOLITIONISTS} பற்றியும் பிரடரிக் டக்ளஸ் பற்றியும் அடிமைகளுக்கு ஆதரவான குரல்கள் பற்றியும் இப்பதிவில் கூறியிருந்தேன்.
                      “..............இதனால் தான் கிபி 1820 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்துக்காரரான பத்திரிகை ஆசிரியர் வில்லியம் லாயிட் காரிஸன் அடிமை முறையை ஒழிப்போம்என குரல் கொடுத்த போது அவரின் பின்னால் ஒரு மக்கள் கூட்டம் அணிதிரண்டது. அடிமை முறையை எதிர்த்து தெளிவான எதிர்க்குரலை கிளப்பிய முதல் மனிதர் காரிஸன் தான். ஆனால் இதை விரும்பாத அடிமை விரும்பிகள் காரிஸனுக்கும் அவர் பின்னால் அணிதிரண்ட மக்களுக்கும் அபாலிஷனிஸ்ட் {ABOLITIONISTS} எனும் பட்டத்தை கட்டி விட்டார்கள் என்பதுடன் இவர்களுக்கு எதிராக கிளம்பிய குரல்களும் அடக்குமுறைகளும் ஏராளம்..............”
                             


    போராட்டமில்லாமல் விடுதலை இல்லை

    தமக்குஆதரவான குரல்கள் கிளம்பியதும் அடிமைகளின் கோபம் எவ்வாறு வெளிப்பட்டது என்பது பற்றியும் அதற்காக அவர்கள் செய்த போராட்டங்கள் பற்றியும் இப்பதிவில் கூறியிருந்தேன்.
        
                      “...........எங்கள் வலியை நீங்கள் அனுதாபத்துடன் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சொந்தமாக அனுபவிக்காத உணர்வுகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்...........என்பதே தப்பி வந்த அடிமைகளின் வாதமாக இருந்தது. ஆம் எந்த ஒரு இனத்தினதும் கொடுமைகளையும் வேதனைகளையும் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாதவர்களே அவ்வினத்தாரின் போராட்டங்களுக்கும் விடுதலைக்கும் எதிராக இருக்கின்றனர். ஆம் போராட்டமில்லாமல் விடுதலை இல்லைதான்...........”. 
       
                                        [மேலதிக விபரங்களுக்கு இங்கே]  

    அமெரிக்க உள்நாட்டு யுத்தமும் அடிமைகள் பிரச்சனையும்


    அமெரிக்க அடிமைகளின் பிரச்சனையால் அமெரிக்காவில் விளைந்த உள்நாட்டு யுத்தம் பற்றியும் அதில் அடிமைகளின் பிரச்சனை செலுத்திய செல்வாக்கையும், எவ்வாறு யுத்தம் முடிவுக்கு வந்தது என்பது பற்றியும் அடிமைகள் பிரச்சனை முடிவுற்றது எவ்வாறு என்பது பற்றியும் இப்பதிவில் கூறியிருந்தேன்.

                         “........வேறுவழியே இல்லை தேசத்தை ஒன்றாக்க வேண்டுமென்றால் தமக்கு எதிராக தாமே போரிட்டுத்தான் ஆகவேண்டும். பிளவுபட்ட ஐக்கிய அமெரிக்காவை மீளக்கட்டமைக்க வேண்டுமென்றால் போர் அவசியம் என எல்லோருக்குமே பரவலாக விளங்கியிருந்தது. ஆனால் இந்த உள்நாட்டுப்போரில் பிற நாடுகள் தலையிட்டு விட்டால் அமெரிக்கா இரண்டாகிவிடும் என்பதும் வெளிப்படை உண்மையாக இருந்தது. நல்ல விதமாக தென்னமெரிக்கா பிற நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்திருந்த போதும் வட அமெரிக்காவின் நியாயத்தன்மை கருதி பிற நாடுகள் இங்கு தம் தலையீட்டை தவிர்த்துக்கொண்டன. அன்று மட்டும் பிற நாடுகள் இப்போரில் தலையிட்டு இருந்தால் இன்று ஐக்கிய அமெரிக்கா எனும் தேசமே எம்முன் இருந்திருக்காது..................”

                           

                                                     [மேலதிக விபரங்களுக்கு இங்கே]  

    2012-ல் தமிழகத்தைத் தடதடக்க வைத்த டாப் 50 சம்பவங்கள்

    $
    0
    0


    ங்கக் கடலில் உருவான 'தானே’ புயல், ஓர் அதிகாலை தமிழகக் கரையைக் கடந்தபோது, அது ஒரு பேரழிவின் துவக்கப் புள்ளி என்பதை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'தானே’ தாண்டவத்தால் கடலூர், புதுச்சேரி பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டன. தலைமுறை... தலைமுறையாக நட்டு வளர்த்த பலாவையும் முந்திரியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்தது 'தானே’. வீடுகள், வெறும் கற்குவியல்களாகின. சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் சூறையாடப்பட்டது. போக்குவரத்து தடைபட்டு, மின்சாரம் முற்றிலும் இல்லாமல் போன நிலையில், அன்றாட உணவுக்கே வழியின்றி நரக வேதனையில் தவித்தனர் கடலூர் பகுதி மக்கள். வாசகர்களின் அருளும் பொருளும் கொண்டு 'தானே துயர் துடைப்பு அணி’ உருவாக்கி, கடலூர் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது விகடன். 
     
    முல்லைப் பெரியாறு அணைத் தண்ணீரில் தமிழகத்துக்கு உள்ள உரிமை என்பது சட்டப்பூர்வமானது. அதையும் தாண்டி 'அணை வலுவிழந்துவிட்டது... உடையப்போகிறது’ என்று கேரளா கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துவந்த விஷமப் பிரசாரம் இந்த ஆண்டு உச்சத்துக்குப் போனது. விளைவு... தமிழக-கேரள எல்லையோரம் பதற்றப் பிரதேசமானது. பறிபோகும் தங்களின் தண்ணீர் உரிமையை நிலைநாட்ட ஆர்த்தெழுந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள், ஒவ்வொரு நாளும் தன்னெழுச்சியாகத் திரண்டு கம்பம், குமுளி வழியே கேரள எல்லையை நோக்கிப் படையெடுத்தனர். மூன்று அப்பாவித் தமிழர்கள் முல்லைப் பெரியாறுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தனர். நீதிபதி ஆனந்த் கமிட்டி தலைமையிலான ஐவர் குழுவும், அவர்கள் நியமித்த நிபுணர் குழுவும்... அணையின் உறுதியை உத்தரவாதம் செய்தும், கேரள அரசின் அழிச்சாட்டியம் தொடர்கிறது.
    தூத்துக்குடியில் மருத்துவர் சேதுராமலட்சுமியின்  தனியார் மருத்துவமனையில் தன் மனைவியைப் பிரசவத்துக்காகச் சேர்த்தார் மகேஷ். கடைசி நேரத்தில் 'சிக்கலான கேஸ்’ என்று சொல்லி மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் சேதுராமலட்சுமி. ஆனால், செல்லும் வழியிலேயே மகேஷின் மனைவியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட, மருத்துவ மனையில் வைத்தே சேதுராமலட்சுமியை வெட்டிக் கொலை செய்தார் மகேஷ். மகேஷ் உள்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டாலும், 'தங்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் இல்லை’ என்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் நோயின் வேதனையுடன் பரிதவித்தனர்.
    200ஆண்டுகள் பழமையான சென்னை எழிலகம் கட்டடம் தீ விபத்தில் களை இழந்தது. பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கி வந்த கட்டடத்தில், நள்ளிரவு ஏற்பட்ட தீ, தீயணைப்புப் படையினர் வருவதற்குள் மளமளவெனப் பரவியது. சென்னை தீயணைப்புக் கோட்ட அதிகாரி ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் ஆறு பேர் கொண்ட மீட்புக் குழுவினர் எரியும் கட்டடத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் மீது மேற்கூரை இடிந்து விழ, முன்னணித் தீயணைப்பாளர் அன்பழகன் இடிபாடுகளில் சிக்கி இறந்துபோனார். ப்ரியா ரவிச்சந்திரன் உடையில் பற்றிய தீ, முடியைப் பொசுக்கி, முக சருமத்தையும் பாதித்தது. பாரம்பரியப் பெருமைகொண்ட கட்டடங் களைப் பரமாரிப்பதன் அவசியத்தை உணர்த்திய விபத்து இது.
    கிட்டத்தட்ட தேர்தல் என்பதே ஒரு 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ போல மாறிவிட்ட நிலையில், இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகிவிட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 94,977 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றதும், தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும்கூட ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஆனால், அடுத்து வந்த புதுக்கோட்டை  இடைத்தேர்தலை தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்தது மெகா ஆச்சர்யம். 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் கார்த்திக் தொண்டைமான் வெற்றிபெற, தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர் உசேன் டெபாசிட்டைத் தக்கவைத்து 'வரலாறு’ படைத்தார்.
    ஃபெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில் வெடித்த பிரச்னைதான் இந்த வருடத் தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் காட்சி. தங்களின் புதிய சம்பள விகிதத்தைத் தாங்களே நிர்ணயித்தார்கள் ஃபெப்சி தொழிலாளர்கள். 'மூன்று மடங்கு, நான்கு மடங்கு அதிகம். அந்த அளவு தர முடியாது’ எனத் தயாரிப்பாளர் தரப்பு மறுக்க... படப்பிடிப்புகள் ரத்தாயின. இயக்குநர் அமீர் தொழிலாளர்களுக்கும், சேரன் தயாரிப்பாளர்களுக்கும் ஆதரவு அளித்தனர். ஒரு தீர்மானமான முடிவை எட்டாமலேயே அடங்கியது பிரச்னை!
    சென்னை, பெருங்குடி வங்கியில் நடந்த பட்டப்பகல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லி, வேளச்சேரி சந்து வீடு ஒன்றில் வசித்த ஐந்து வட மாநில இளைஞர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது போலீஸ். அந்த ஐந்து இளைஞர்களையும் உயிருடன் பிடிக்கக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் ஏன் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் திணறினார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு, வட மாநிலத்தவர்கள் அனைவரையுமே திருடர்கள் போலச் சித்திரித்து, ''அனைவரும் காவல் நிலையத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும்'' என்றது போலீஸ். சொற்பக் கூலிக்காகப் பிழைக்க வந்தவர்களை சந்தேகக் கண்கள் மொய்த்தன; மொய்க்கின்றன.
    2006சட்டமன்றத் தேர்தலின்போது திண்டிவனத்தில் அ.தி.மு.க-வின் சி.வி.சண்முகம் வீட்டில் மர்மக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் முருகானந்தம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, ராமதாஸின் தம்பி சீனுவாசக் கவுண்டர் உள்ளிட்ட 21 பேர் மீது சி.வி.சண்முகம் புகார் கொடுத்தார். சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கில், ராமதாஸின் தம்பி சீனுவாசக் கவுண்டர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டபோது, எந்த நேரமும் தைலாபுரம் தோட்டத்துக்குள்ளும் சி.பி.ஐ. நுழையலாம் என்று பா.ம.க பதறியது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வேகம் பிடித்த விசாரணை ஏனோ மீண்டும் முடங்கிவிட்டது.
    சிகலா, வேதா இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட, அ.தி.மு.க-வில் மடமடவெனக் காட்சிகள் மாறின. ஒரு நிலமோசடி வழக்கில் ராவணன் கைதுசெய்யப்பட, கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சியவரின் ஆதிக்கம் நிறைவடைந்தது. தொடர்ந்து அரங்கேறியது சசிகலாவின் தம்பி திவாகரன் கைது. ம.நடராசனின் கைதுதான் ஜெயலலிதாவின் மாஸ்டர் செக். சசிகலா மீண்டும் ஜெ-வுடன் இணைய, தொடர்ந்து சில மாதங்களிலேயே கைதானவர்கள் ஜாமீனில் வெளிவந்தாலும் தோட்டத்துக்குள் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இப்போது சசி மட்டுமே ஜெ-வுக்கு ஒரே துணை.
    வைர விழாக் கொண்டாட்ட சமயம், இத்தனை ஆண்டுகளில் அரங்கேறாத பல சம்பவங்களை தமிழக சட்டமன்றம் சந்தித்தது. அ.தி.மு.க.   எம்.எல்.ஏ-க்களை நோக்கி நாக்கைத் துருத்தியபடி ஆவேசம் காட்டியதால் விஜயகாந்த் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மறுபுறம், தடாலடி மந்திரிசபை மாற்றங்களுக்கு இடையே தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகரையே மாற்றிய பெருமையைத் தேடிக்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. 
    ணல் கடத்தல் மாஃபியாக்கள் ஓர் இளைஞனை லாரி ஏற்றிக் கொலை செய்த கொடூரத்தை தமிழகம் இந்த ஆண்டு சந்தித்தது. திசையன்விளை அருகே உள்ள நம்பியாற்றில் அதிகாலை 3 மணிக்கு ஒரு லாரியில் மணல் அள்ளப்படுவதைப் பார்த்த மிட்டாதார்குளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர், சத்தம் போட்டு ஊரைக் கூட்டினார். ஆனால், மணல் திருடர்கள் திடீரென்று லாரியைக் கிளப்பி சதீஷ் மீது ஏற்றினார்கள். உடல் நசுங்கி ரத்தம் பீறிட்டு அங்கேயே இறந்துபோனான் அந்த 21 வயது இளைஞன். அ.தி.மு.க-வின் நாங்குனேரி ஒன்றிய கவுன்சிலர் டென்சிங் என்பவருக்குச் சொந்தமான அந்த லாரியை ஓட்டியது அவரது தம்பி கிங்ஸ்டன். மறுகால்குறிச்சி கிராமத்தில் மணல் கடத்தலைத் தட்டிக்கேட்ட வானுமாமலை என்ற இளைஞரைச் சுட்டுக் கொலை செய்தார் ஒரு இன்ஸ்பெக்டர்.
    'இக்கட்டான சூழலில் ஒரு ராஜதந்திரி எப்படிச் செயல்பட வேண்டும்?’ என்ற கேள்விக்குப் பொருத்தமான பதில், 'ஆ.ராசா’! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய அனைவரும் ஜாமீனில் வெளியே வர... மனு மேல் மனுவாகப் போட்டுக்கொண்டே இருக்க... அப்போதெல்லாம் மௌனகுருவாக அமைதிகாத்தார் ராசா. கடைசி ஆளாக, நீதிமன்றக் கதவைத் தட்டி ஒரே மனுவில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ராசாவின் விடுதலையைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் தி.மு.க.வினர்.
    திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த நான்கு இருளர் பெண்களைக் காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கிளம்பிய விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்திடம் ஏகத்துக்கும் குட்டு வாங்கியது தமிழக அரசு. 'அந்தப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படவில்லை!’ என்று அரசுத் தரப்பு வாதிட, 'பின் ஏன் அரசு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியது?’ என்று கேள்வி எழுப்பி கிடுக்கிப்பிடி போட்டது உயர் நீதிமன்றம்! 
    சென்னையைச் சேர்ந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை 9-ம் வகுப்பு மாணவன் முஹம்மது இஸ்மாயில் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரத்தையும் தமிழகம் எதிர்கொண்டது. இஸ்மாயிலின் ரிப்போர்ட் கார்டில், 'சரியாகப் படிக்கவில்லை’ என்று உமா மூன்று முறை ரிப்போர்ட் எழுத, ஆத்திரம் அடைந்த இஸ்மாயில் 20 ரூபாய்க்குக் கத்தி வாங்கி, உமா மகேஸ்வரியை வகுப்பறையிலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்தான். உமா மகேஸ்வரியின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய அவரது மகள் சங்கீதா, ''அம்மா, எங்களைவிட இந்தப் பள்ளியின் மாணவர்களைத்தான் அதிகம் நேசித்தார். நீங்களும் உங்கள் ஆசிரியர்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று உணர்ச்சிவசப்படாமல் பொறுப்புடன் பேசியபோது, கூடியிருந்தவர்களின் கண்கள் கசிந்தன.
    ஞ்சி-நித்தி வீடியோ, ஆர்த்திராவ் அதிரடிகள் எனத் தாறுமாறான பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்த நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக்கி அதிரடி செய்தார் அருணகிரிநாதர். நித்தியானந்தா ஆதீனத்தில் உள்ள பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டுத் தன் ஆட்களை உலவவிட்டார். 'நித்தியானந்தா ஆதீனத்தின் வாரிசாகும் தகுதி இல்லாதவர்’ என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்ல, ஆதீனம் தன் கைவிட்டுப் போய்விடக்கூடிய சூழலில் சுதாரித்த அருணகிரி, நித்தியை மடத்தைவிட்டு வெளியேற்றிவர், இப்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் ஸ்ரீமத் திருச்சிற்றம்பலத்துக்குத் தம்பிரான் பட்டம் சூட்டியிருக்கிறார்.
    டைசி நிமிடம் வரை பரபரப்பாக நடந்து முடிந்த 'டெசோ’ மாநாட்டால் யாருக்கு லாபம் என்று இந்த நிமிடம் வரை தெரியவில்லை. ''மாநாட்டில், தனித் தமிழீழம் கோரிக்கைக்காக இலங்கையில் வாக்கெடுப்பு கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம்'' என்றார் கருணாநிதி. ப.சிதம்பரத்துடனான சந்திப்புக்குப் பிறகு, ''தமிழீழத் தீர்மானம் எல்லாம் கிடையாது. ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடுதான்'' என்றார். கடைசி நாளில் தமிழக அரசு மாநாட்டுக்கு அனுமதி மறுக்க, தி.மு.க-வின் நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தினார்கள். அத்தனை பில்ட்-அப் கிளப்பிய மாநாட்டின் மேடையில் முக்கிய தமிழறிஞர்கள் யாரையும் காணவில்லை. இந்த சர்ச்சைகள், டெசோ மாநாட்டுத் தீர்மான நகலை ஐ.நா. சென்று ஸ்டாலின் வழங்கியது வரை தொடர்ந்தது.
    தி.மு.க-வின் பெருந்தலைகள் அத்தனை பேரையும் நில அபகரிப்பு வழக்குகளில், அரசு உள்ளே தூக்கிப்போட, தமிழகம் முழுக்கச் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தார் கருணாநிதி. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பை எதிர்பார்க்காத தமிழக அரசு, கைது செய்த அனைவரையும் சில மணி நேரத்திலேயே விடுவித்தது. தி.மு.க-வின் தளகர்த்தர்களில் முக்கியமானவரான வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் குன்றி இறந்துபோனதற்கு, அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் கைது நடவடிக்கைகள்தான் காரணம் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டும் அளவுக்கு வீரியமாக அரங்கேறின கைது சம்பவங்கள்.
    மிழ்நாட்டின் இன்னொரு 'வாக்கிங் கொலை’க்கு இரையானார் ராமஜெயம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியில் செல்வாக்கு மிகுந்தவருமான ராமஜெயத்தை  மர்மக் கும்பல் ஒன்று கடத்தி சயனைடு கொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தது. தெளிவாகத் திட்டமிடப்பட்ட இந்தப் படுகொலையில் பிசினஸ், முன்பகை எனப் பல வகைகளில் விசாரித்தபோதிலும் இன்னமும் போலீஸ் குற்றவாளியை நெருங்கவில்லை. 'உண்மையிலேயே கண்டுபிடிக்க முடியவில்லையா? கண்டுபிடிக்க விரும்பவில்லையா?’ என்பதே இப்போது மிஞ்சியுள்ள சந்தேகம்.
    மிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் 'சித்திரை 1-ம் தேதிக்கே மாற்றினார் ஜெயலலிதா. முன்னர் கருணாநிதி மாற்றியதற்குச் சொன்ன காரணம், ''மறைமலை அடிகளார் தை முதல் தேதிதான் தமிழர்களின் புத்தாண்டு என்று அறிவித்ததன் அடிப்படையில் நான் மாற்றம் செய்தேன்'' என்பது. ஆனால் சிம்பிளாக, ''தமிழர்களின் பாரம்பரியப் பழக்கம்'' என்று மட்டும் காரணம் சொல்லி, மீண்டும் மாற்றினார் ஜெ. ஜனவரி 1-ம் தேதியையே  புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப் பழக்கப்பட்டுவிட்ட தமிழர்களை, இந்தச் சர்ச்சைகள் அதிகம் பாதிக்கவில்லை.
    சென்னை சீயோன் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து அடிபட்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்தது. தொடர்ந்து, வெவ்வேறு விபத்துகளில் இறந்த மாணவிகள் ஜெயலட்சுமி, சுஜிதா, தீபிகா ஆகியோரின் மரணங்கள் மக்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கின. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து கேள்விகளை எழுப்பி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, புதிய சட்டங்களை உருவாக்கி, அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பள்ளிப் பேருந்துகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அரசு வகுக்க, அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு, வேலைநிறுத்தம் என்று செயல்பட்டது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு.
    சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் புத்தகங்களில், அம்பேத்கர் தொடர்பான கார்ட்டூன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான கிண்டல், நாடார் சமூகத்தைப் பற்றிய தவறான வரலாறு, 'அசைவ உணவு சாப்பிடுபவர்கள் குற்றச் செயல்புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்’ என்ற விஷமக் கருத்து என பல பாடப் பகுதிகள் சர்ச்சை கிளப்பி நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தன!
    ந்த ஆண்டு தமிழகத்தை இருள் இன்னும் கடுமையாகச் சூழ்ந்தது. சென்னை நீங்கலாக தமிழகம் முழுக்க சராசரியாக 16 மணி நேரம் மின்வெட்டில் தவித்தது. 60 ஆண்டு கால வளர்ச்சியைக் கண்ணெதிரே பறிகொடுத்தது தமிழகச் சிறுதொழில் துறை. இவற்றுக்குக் காரணம், பெரு நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் கட்டுப்பாடற்ற மின் விநியோகம்தான் என்று எல்லோரும் குற்றம்சாட்ட, தமிழக அரசோ,  மேலும் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் ஏழு பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.
    சிரியர்களுக்கான தகுதியை நிரூபிக்கும் தேர்வு ஜூலையில் நடந்தபோது, 6.7 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே (0.36%) தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுதேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர், அதாவது, சுமார் 3 சதவிகிதத்தினரே தேர்ச்சி அடைந்து பெற்றோர்களையும் மாணவர்களையும் அதிரவைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் பழனி என்கிற பழனிச்சாமி துப்பாக்கியால் சுடப்பட்டும் தலை தனியாக வெட்டி எடுக்கப்பட்டும் கொல்லப்பட்ட வழக்கில், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் தளி தொகுதி எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார். ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, தா.பாண்டியன் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது!
    கோடு போட்டு, கொடி நட்டு, எல்லை பிரிக்காத கடலில் மீன் இருக்கும் இடம் எல்லாம் தேடிப் பிடிப்பான் மீனவன். வனங்களில் வேட்டையாடும் காட்டுப் பழங்குடி போல, மீனவன் கடல் பழங்குடி. ஆனால், 'எல்லை தாண்டியதாக’ச் சொல்லி, குறைந்தது மாதம் இரு முறையேனும் மீனவத் தமிழன், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகிறான். படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்து வீசுவது, பிடித்த மீன்களைத் திருடிச் செல்வது என்று ராணுவச் சீருடையில் ரௌடித்தனம் செய்கிறது இலங்கைக் கடற்படை. பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படையோ 'நமக்கென்ன?’ என்று ஒதுங்கி நிற்கிறது!
    மரசம் அற்ற சமகால மக்கள் போராட்டத்தின் முன்மாதிரியை இந்தியாவுக்கு உணர்த்தியது கூடங்குளம். அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இந்த ஆண்டு அடுத்தடுத்த கட்டங்களை எட்டியது. 144 தடை உத்தரவை அணு உலையைச் சுற்றி பல கி.மீ. தூரத்துக்கு நீட்டித்தது போலீஸ். அணு உலை முற்றுகை என அறிவித்து, இடிந்தகரை மக்கள் கடற்கரை வழியே பேரணியாக வர... போலீஸ் வெறிப் பாய்ச்சலுடன் மக்களை அடித்து நொறுக்கியது. மணப்பாட்டில் மீனவர் அந்தோணி ஜான் காவல் துறைத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். தாழப் பறந்த விமானத்தின் கொடூர சத்தம் சகாயம் பிரான்சிஸின் உயிரைப் பறித்தது.  போராடியவர்கள் மீது குண்டர் சட்டம் முதல், தேசத் துரோக வழக்கு வரை பாய்ந்தன. எதையும் கண்டுகொள்ளாமல், ''இன்னும் ஒரு வருடத்துக்குள் கூடங்குளம் செயல்படத் துவங்கும்'' என்றது அணு உலை நிர்வாகம். கனன்றுகொண்டு இருக்கிறார்கள் இடிந்தகரை மக்கள்.
    ர்நாடக அரசியல்வாதிகள் காவிரி நீரை தமிழகத்துக்குத் தரவிடாமல் முடக்கி 'அரசியல்’ செய்ததன் விளைவு, இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிட்டன. குறுவையும் இல்லை, சம்பாவும் இல்லை. கூரத்தங்குடி ராஜாங்கம் வாடிய பயிர் கண்டு வாடி, பூச்சி மருந்து குடித்து உயிரைவிட்டார். உச்ச நீதிமன்றக் கண்டிப்புக்குப் பிறகு, ஒரே ஒரு நாள் மட்டும் 10,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட்டு, மீண்டும் ஷட்டரை சாத்திக்கொண்டார் கர்நாடக முதல்வர் ஷட்டர். பாசன நீர் போய் இப்போது குடிநீர் பஞ்சத்தை எதிர்நோக்கி நிற்கிறது டெல்டா!
    துரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தொழில் துறை முதன்மைச் செயலாளருக்கு மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயம் அனுப்பிய கடிதம்தான், தமிழகத்தின் பிரமாண்டக் கொள்ளை மீது வெளிச்சம் பாய்ச்சியது. ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், தானியங்கி பறக்கும் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனைகளில் பி.ஆர்.பி. குவாரி உண்மையிலேயே 'ஊரை அடித்து உலையில் போட்டு’ குளிர் காய்ந்த கதை வெளிவந்தது. பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட, தலைமறைவான துரை தயாநிதி பிறகு, ஜாமீன் பெற்று சரணடந்தார்.
    மோசடி வரலாற்றில் இந்த ஆண்டு தமிழக மக்களைக் 'கொத்தியது’ ஈமு கோழி! 'ஈமுவின் ஒரு முட்டையே ஆயிரம் ரூபாய்!’ என்றெல்லாம் சொல்லி, ஆசை வார்த்தை காட்டியவர்கள் அப்பாவிகளிடம் சுருட்டியது சுமார் 500 கோடிக்கும் மேல். இந்த மோசடித் தொழிலில் முன்னணி வகித்தது சுசி ஈமு கோழிப் பண்ணை. அந்தக் கோழிப் பண்ணை அதிபர் குருசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஈமு கோழி வளர்ப்பு விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. இதனிடையே பண்ணையாளர்கள் போலீஸுக்குப் பயந்து ஓட, பராமரிக்க ஆள் இல்லாமல் கோழிகள் செத்து விழுந்ததும் அவற்றுக்குத் தீனி அளிக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியதும் தனித் துயரங்கள்!
    சிவகாசி மீண்டும் ஒரு பெருந்துயரைச் சந்தித்தது. ஓம்சக்தி பட்டாசு ஆலையில் நடந்த பயங்கர வெடி விபத்து 39 உயிர்களைப் பறித்தது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய விபத்தான இது, ஏகப்பட்ட விதிமீறல்களையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது. வழக்கம்போல அரசாங்க சால்ஜாப்புகள், சில நாட்களுக்குப் பரபர ரெய்டுகள், வெளிவந்த அதிகாரிகளின் ஊழல் பின்னணிகள் எனப் படபடத்தன காட்சிகள். இந்த அதிர்வேட்டுகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகாசியில் மட்டும் 1,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகின. 
    தாம்பரம் இந்திய விமானப் படை முகாமில் பயிற்சி பெற வந்தார்கள் சிங்களப் படையினர்.  அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, பிரதமருக்குக் கண்டனக் கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா. திருப்பி அனுப்பப்பட்டார்கள் அவர்கள். இதே பாணியில் சில மாதங்களுக்குப் பிறகு, தமிழகம் வந்த இலங்கை கால்பந்து வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்!
    20ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, வாச்சாத்தி மலை வாழ் மக்களின் போராட்டத்துக்கு நீதி கிடைத்தது. போலீஸாரைத் தாக்கியதாகவும், வனத் துறை அதிகாரிகளைத் தாக்கிக் கொல்ல முயன்றதாகவும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 98 பெண்கள் உட்பட 105 பேர் மீது பதியப்பட்டு இருந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி, 'வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்று 105 பேர் மீதான குற்றச்சாட்டையும் ரத்துசெய்து உத்தரவிட்டார். வாச்சாத்தி மக்களுக்கு அது சுதந்திர சுவாசம்.
    மிழக அரசு மருத்துவமனைகள் ஏழை 'எலி’யவர்களுக்கான மருத்துவமனையாகப் பல்லிளித்தன. சென்னை கஸ்தூரிபாய்  அரசு மகப்பேறு மருத்துவமனையில், மலர் என்ற பெண்மணிக்குப் பிறந்த பெண் குழந்தை இறக்க, மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலத்தைப் பெருச்சாளி கடித்துக் குதறியதைக் கண்டு, உறவினர்கள் அடைந்த அதிர்ச்சியும் ஆவேசமும் தமிழகமெங்கும் பரவியது. மருத்துவமனையில் நடத்தப்பட்ட எலி வேட்டையில் 16 நாய்கள், நான்கைந்து பூனைகளும் சிக்க... தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகள் பரபரத்தன!
    ரு சினிமா டிரெய்லர் மூலமே உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களைக் கொதிப்படையவைத்தது அமெரிக்கா. அங்கு தயாரான 'தி இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படம் முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது என்று உலக முஸ்லிம்கள் கனல் கக்கியது, சென்னையிலும் பலமாகத் தகித்தது. சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட முஸ்லிம்கள் ஊர்வலமாகச் சென்றபோது நடந்த போராட்டத்தில், கல்வீச்சு நடந்தது. போலீஸ் பூத்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 1,000 பேர் வரை கைது செய்யப்பட்டார்கள். தூதரகத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை, பல வாரங்களுக்குத் தொடர்ந்த போக்குவரத்து மாற்றம், பல மாதங்களுக்குத் தொடரும் போலீஸ் பாதுகாப்பு என பரபரத்துக்கிடக்கிறது சென்னை அண்ணா சாலை.
    'நடுக் கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியுமா?’ பாடலைக் கேப்டனுக்கு டெடிகேட் பண்ணவைத்தது ஜெயலலிதாவின் மாஸ்டர் செக். தே.மு.தி.க.எம்.எல்.ஏ-க்கள் சுந்தர்ராஜன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய தே.மு.தி.கழக எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, தங்கள் 'தொகுதிப் பிரச்னைகள்’ தொடர்பாக மனு கொடுக்க, திண்டாடித் தவித்துப்போனார் கேப்டன். அந்தப் பதற்றப் பரபரப்பு சமயம், இதுதொடர்பாக விமான நிலையத்தில் கேள்வி கேட்ட நிருபரை நாக்கைக் கடித்து, முஷ்டி முறுக்கி, விரல் சொடுக்கி விஜயகாந்த் திட்டியது அனல் கனல் ஹைலைட் ஆனது.
    கொள்ளை நோயாக உருவெடுத்தது டெங்கு. திருமணம் முடித்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சலுக்குத் தன் கணவனைப் பறிகொடுத்த துயரம் தாங்க முடியாமல், தன்னைத் தீயிட்டுக்கொண்ட மஞ்சுளாவின் வாழ்க்கை டெங்கு தாக்குதலுக்கு ஒரு சோறு பதம். நிலைமையின் தீவிரம் உறைக்க, டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு ஒதுக்கியது, கிராமங்களில் விழிப்பு உணர்வு முகாம் நடத்தியது என கடைசி நேரத்தில் சுதாரித்தது தமிழக அரசு!
    தேவர் குரு பூஜை சமயம் பரமக்குடி பதற்றப் பிரதேசம் ஆவதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. அஞ்சலி செலுத்த வந்தவர்களிடையே எழுந்த வம்புதும்புப் பேச்சு பதற்றப் பொறி பற்றவைக்க, கல்வீச்சுத் தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு என ரணகளமானது ஏரியா. வன்முறைச் சம்பவங்களால் உயிர்ப் பலிகள் ஏற்பட, பல வாரங்களாகக் கொதிகலனாகக் கொதித்துக்கொண்டே இருந்தது தென் தமிழகம். அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கல்வீச்சில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்து பேருந்து களை இயக்கும் அளவுக்குக் கலவரமானது நிலவரம்.
    ந்த ஆண்டும் வெள்ளத்துரை மீது படிந்தது என்கவுன்டர் ரத்தக் கறை. திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கத்தியால் சாரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாகச் சிலர் கைதுசெய்யப்பட, மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரன்டெண்டாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டது, சில அறிகுறிகளை உணர்த்தியது. எதிர்பார்த்தது போலவே அரங்கேறியது என்கவுன்டர் வதம். எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலையில் சம்பந்தப்பட்ட பாரதி, பிரபு ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் தப்பிச் சென்று, 'எதேச்சையான’ வாகனச் சோதனையில் பிடிபட்டு, போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச... வேறு வழியின்றி அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதாகச் சொல்லியது போலீஸ்.
    சென்னை பெருங்குடியில் காலை நேர அவசரத்தில் பேருந்துப் படிக்கட்டில் பயணித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் விஜயன், சேகர், பாலமுருகன், மனோஜ்குமார் நால்வரும் லாரி மோதிப் பலியாகினர். தமிழகத்தில் ஓடும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் கதவுகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட, படியில் தொங்கிச் சென்ற மாணவர்களைக் குற்றம்சாட்டியது அரசுத் தரப்பு. பேருந்து வசதிகளை அதிகப்படுத்தாமல், 'படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் கல்வி நிலையங்களில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்’ என்ற கடும் உத்தரவைப் பிறப்பித்தது அரசு.
    திருப்பூரில் 'பாசி போரெக்ஸ்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்திய கதிரவன், 48 ஆயிரம் பேரின் சுமார் 1,600 கோடி ரூபாய் முதலீட்டைச் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆனார். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் ஐ.ஜி. பிரமோத்குமார் சொல்லியபடி  பாசி நிதி நிறுவன நிர்வாகிகளைக் கடத்தி வைத்துகொண்டு 3 கோடி ரூபாய் பேரம் பேசியது தெரியவர... தமிழக போலீஸ் தலை குனிந்தது. பிரமோத்குமார் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக அண்ணா வளைவை இடிக்கும் பணி பெரும் அரசியலில் சிக்கியது. வளைவின் உறுதி காரணமாக அதை இடிக்க முடியாமல் இயந்திரங்கள் சுணங்க, வழக்கம்போல், தி.மு.க - அ.தி.மு.க. லாவணி தொடங்க, 'வளைவை இடிப்பதில் அரசுக்கு விருப்பம் இல்லை!’ என்று தெரிவித்த ஜெ, அதைச் சீரமைக்கவும் உத்தரவிட்டார்! 
    '' 'விஸ்வரூபம்’ படத்தைத் தியேட்டரில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்னர் டி.டி.ஹெச்-ல் நேரடியாக ஒளிபரப்பப்போகிறேன்'' என்று கமல் அறிவிக்க, அரண்டு மிரண்டு கமலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள் தியேட்டர் அதிபர்களும் கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர்களும். ''பொருளின் விற்பனையை நிர்ணயிக்கும் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே உண்டு'' என்று கமல் மல்லுக்கட்ட, ''திருட்டு டி.வி.டி-யை ஒழித்து, பெரும்பகுதி வருமானம் அளிக்கும் முயற்சி'' என்று தயாரிப்பாளர்கள் தரப்பும் ஆதரவு தெரிவிக்க, ''கமல் 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் காண்பித்தால், நாங்கள் அதை தெருத் தெருவாக அகன்ற திரையில் காண்பிப்போம்'' என்று முஷ்டி முறுக்குகிறார்கள் கேபிள் டி.வி. சங்கத்தினர். அந்த நாளுக்காக நகம் கடித்துக் காத்திருக்கிறது தமிழ்நாடு.
    சும்மாவே அதிரும் ரஜினி பிறந்த நாள், கடந்த 12.12.12 அன்று இந்திய சென்சேஷன் ஆனது. சேனல்களில் ரஜினி சிறப்புத் திரைப்படங்கள், பட்டிதொட்டிஎங்கும் ஃப்ளெக்ஸ்கள், எஃப்.எம்-களில் ரஜினி பாடல்கள் என்று மொத்தத் தமிழ்நாடுமே கொண்டாடித் தீர்த்துவிட்டது. ஆச்சர்யமாக ரசிகர்கள், மீடியா மக்களைச் சந்தித்தார் ரஜினி. அதைவிட ஆச்சர்யமாக மாலை ஒய்.எம்.சி.ஏ-வில் நடந்த பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு, ''சிகரெட் பிடிக்காதீங்க. சந்தோஷமான குடும்பம் சொர்க்கத்துக்குச் சமம். ஏழையா ஆனாலும் கோழையா இருக்க மாட்டேன்!'' என்றெல்லாம் அறிவித்துவிட்டு இறுதியில், ''அரசியலுக்கு வர்றேன்னு பொய் சொல்லப் பிடிக்கலை. நான் எப்பவும் அரசியல்ல இருந்ததே இல்லை. எனக்கு அரசியல் வேணாம்!'' என்று பல வருட 'ரேப்பர் ஸ்டோரி’களுக்கு 'கதம் கதம்’ சொன்னார்.
    மிழகத்தைத் தாக்கிய 'நீலம்’ புயலால் சென்னையில், தரை தட்டி நின்ற பிரதீபா காவேரி கப்பலின் ஊழியர்கள் 6 பேர் கடலில் இருந்து தப்ப முயன்றபோது பரிதாபமாக இறந்துவிட்டனர். விசாரணையில், அந்தக் கப்பலின் பதிவே காலாவதி ஆகிவிட்டது, ஊழியர்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை. உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக்கூடக் கப்பல் நிறுவனம் பூர்த்திசெய்யவில்லை என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் தெரியவந்தன. இது ஒருபுறம் இருக்க, மெரினா பீச்சையே இடமாற்றம் செய்துவிட்டதுபோல குபீர் டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது கப்பல் தரை தட்டிய பட்டினப்பாக்கம் ஏரியா. 12 நாட்கள் போராட்டத்துக்குப் பின் கப்பல் கரையில் இருந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட, பிரதீபா காவேரியை ரொம்பவே மிஸ் செய்தார்கள் சென்னைவாசிகள்.
    ம்.ஜி.ஆர். சமாதியில் றெக்கை கட்டிப் பறந்தது இரட்டை இலைக் குதிரை. அரசாங்கச் செலவில் புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சமாதியின் நுழைவாயிலில் ஒரு குதிரையை நிறுத்தியது தமிழக அரசு. அதன் முதுகில் பட்டொளி வீசிப் பறந்தது அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலை. தி.மு.க. நீதிமன்றத்தை நாட, 'அது இரட்டை இலை அல்ல. பறக்கும் குதிரையின் சிறகுகள்!’ என்று அரசுத் தரப்பு வக்கீல்கள் பகீர் விளக்கம் கொடுக்க, 'உங்களுக்கு பயாலஜி தெரியுமா?’ என  உஷ்ணமானார் நீதிபதி.
    'சாதி எல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று கேட்பவர்கள் முகத்தில் அறையாக விழுந்தது தர்மபுரிக் கலவரம். தர்மபுரி அருகே உள்ள நாய்க்கன்கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லங்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவைக் காதலித்தார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனும் குடும்ப எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொண்டனர். ஊர்க்காரர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில், மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் திவ்யாவின் தந்தை நாகராஜன். இதன் தொடர்ச்சியாக நவம்பர் மாத இரவொன்றில் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தலித் பகுதிகளிலும் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழகத்தையே அதிரவைத்த இந்தச் சம்பவம் தொடர்பாக 500-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. 142 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம். 'தர்மபுரி சம்பவத்துக்கு பா.ம.க-தான் காரணம்!’ என்று தொல்.திருமாவளவன் நேரடியாகவே குற்றம்சாட்ட, பா.ம.க - சிறுத்தைகள் உறவில் விரிசல் விழுந்தது.
    ந்த ஆண்டு வைகோவின் சேம்ஸைடு கோல்... நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க-வின் பிரசாரப் பீரங்கி இப்போது போயஸ் தோட்ட ஊதுகுழல். பல மாதங்களாகவே சம்பத்துக்கும் வைகோவுக்கும் இடையிலான பனிப் போரால், ம.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்குத் தாவுவார் சம்பத் என்று ஹேஷ்யங்கள் வட்டமடித்தன. ஆனால், யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் அடித்த சம்பத், ஜெயலலிதாவைச் சந்தித்து அ.தி.மு.க-வின் துணை கொ.ப.செ-வாகி இன்னோவா கார் வென்றார். இந்தப் பக்கம் ஊமைக் காய வலியை வெளிக்காட்டிக்கொள்ளாத வைகோ, 'நெக்ஸ்ட் இலக்கு... பூரண மதுவிலக்கு!’ என்று நடைப் பயணம் கிளம்பிவிட்டார்.
    ஜெயலலிதா சகலர் மீதும் வழக்குத் தொடுக்க, அவரது அமைச்சர்கள் மீது வருட இறுதியில் குவிந்தன வழக்குகள். பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் உறவினர் தனது தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்களை அழித்துவிட்டதாக காத்தசாமிப்பாளையம் பால்சாமி புகார் அளிக்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரைச் சேர்ந்த கோகுல் என்பவரைக் கடத்தி, அவரது நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின. முத்தாய்ப்பாக, நிதி அமைச்சரும் அமைச்சரவையின் நம்பர் டூ-வுமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, தலித் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் வலைவீசித் தேடப்பட்டார்!
    சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நிறைவேற்றிவிட, தமிழக முதல்வரின் எதிர்ப்பையும் மீறி,  கமுக்கமாக வந்தேவிட்டது வால்மார்ட். வணிகர் சங்கங்களின் தலைவர்கள் வெள்ளையன், விக்கிரமராஜா என அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தங்களது எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்தனர். இந்து மக்கள் கட்சியியோ, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தடை செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனாலும், அசராத வால்மார்ட் பிரதிநிதிகள், '32 சதவிகிதம் விலை குறைவாகத் தருகிறோம், டோர் டெலிவரி, இலவச உறுப்பினர் வசதி’ என ஆசைகாட்டி சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சில்லறை வணிகர்களைத் தனது வலையில் வீழ்த்திவிட்டனர்.
    21.12.12-ல் உலகம் அழிந்துவிடும் என்ற 'மாயன் காலண்டர்’ பரபரப்புக்குத் தமிழகமும் தப்பவில்லை. பரபர கவுன்ட்-டவுன் வைத்து டிசம்பர் 21-ஐ எதிர்பார்த்தான் தமிழன். 'ஃபேஸ்புக், ட்விட்டர்களில், 'அழியும்னு நான் சொல்லலை... அழிஞ்சா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்’, 'அங்கிள்... அன்னைக்கு எனக்கு சோஷியல் சயின்ஸ் எக்ஸாம். உலகம் அழிஞ்சா நல்லதுதானே’ என்று காமெடி களை கட்டியது. டிசம்பர் 20-ம் தேதி இரவு டாஸ்மாக் வழக்கத்தைவிடக் களை கட்ட, 'உயிர் தமிழுக்கு... உடல் மாயண்ணனுக்கு’ என்று சலம்பித் தள்ளினான் தமிழன். ஆனால், டிசம்பர் 21-வழக்கம்போல விடிய, 'அதான் மிந்தியே சொன்னோம்ல... அதெல்லாம் உட்டாலக்கடி!’ என்று வழிந்தான் தங்கத் தமிழன்!

    நன்றி-விகடன்

    (http://www.vikatan.com/anandavikatan/Welcome-2013-Special/27975-Top-50-important-events-of-tamilnadu-in-2012.html#cmt241)

    கற்பழிக்கும்போது பெண்கள் ஒத்துழைக்கவேண்டும்

    $
    0
    0
    டெல்லியில் ஓடும் பஸ்ஸில் இரவில் தனது நண்பனுடன் பேருந்தில் பிரயாணம் செய்த 23 வயதுப்பெண் 6 நபர்களால்  மாறி மாறி கற்பழிக்கப்பட்டாள்.அவருடன் வந்த ஆண் நண்பரும் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டார்.கற்பழித்ததோடு நிற்காமல் அந்தப்பெண்ணின் குடலை இரும்புத்தடியால் சிதைத்துள்ளார்கள் கற்பழித்த மிருகங்கள்.குடல் சிதைந்ததன் காரணமாக குடலின் பெரும்பகுதி அறுவைச்சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.6 தடவை சத்திரசிகிச்சை செய்துள்ளார்கள்.தீவிரசிகிச்சைக்குப்பின் அந்தப் பெண் மருத்துவமனையில் இடையிடையே கண் விழித்து  நினைவுவரும்போதெல்லாம் குற்றவாளிகள்ளை கண்டுபிடித்துவிட்டீர்களா?அவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று எழுதிக்காட்டியுள்ளார்.

    கற்பழிப்புக்கு எதிர்ப்புத்தெரிவித்து 18 ஆம் திகதி டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.போராட்டம் நடத்தியவர்கள் கலைந்துசெல்லாததால் போலீஸ் கண்ணீர்புக்கைக்குண்டு மூலம் கூட்டத்தைக்கலைத்திருக்கின்றார்கள்.கற்பழித்த ஆறுபேரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்கள்.கற்பழித்ததற்கு அவர்கள் கூறிய காரணம் எம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள் அவளுக்கு பாடம்புகட்டவே நாம் கற்பழித்தோம்.அவர்களுள் ஒரு குற்றவாளியான வினய் ஷர்மா தன்னைத்தூக்கிலிடுமாறு கதறியுள்ளாராம்.

    இன் நிலையில் இக்கற்பழிப்பு தொடர்பாக லயன்ஸ்கிளப் ecretaryயான Shukla ஒரு புரட்சிகரமான கருத்தை முன்வைத்துள்ளார்.இரவு 10 மணிக்குப்பின் ஏன் அவள் வெளியே போனாள்?அவள் தன் போய் பிறண்டுடன் வெளியே சென்றதுதான் கற்பழிப்புக்குக்காரணம்.The victim should have surrendered when surrounded by six men, at least it could have saved her intestines'. 6 நபர்கள் அவளை சூழ கற்பழிக்கமுனையும்போது அதை அனுமத்தித்து அடங்கியிருந்தால் குடலாவது தப்பித்திருக்கும். என்று கூறியிருக்கின்றார் Shukla.இனிவரும் காலத்தில் யாராவது பெண்ணை கற்பழிக்கமுயன்றால் அப்பெண் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்  அப்படித்தானே? பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு போலியான இரங்கலை வெளியிட்டால்கூட மன்னிக்கலாம் அதற்காக  ஏன் இப்படி அவமானப்படுத்தவேண்டும் என்று புரியவில்லை. நல்லவேளை இவர் நேரில் சென்று அந்தப்பெண்ணை பார்க்கவில்லை பார்த்திருந்தால் அப்பெண்ணிடமே இதைக்கூறி அவரை குற்றவாளி ஆக்கியிருப்பார்.
    இது தொடர்பான செய்தி..

    Continuing with her blames she said, ‘Women instigate men to commit such crimes'. She also raised that why was the victim out of her house after 10 pm and added that if a girl will wander late at night with her boyfriend; such situations are bound to happen. 
    In a strange reaction to such comments, most of the senior officials remained silent. Shukla asserted that police cannot give extreme protection to every citizen at all times. She commented, ‘The victim should have surrendered when surrounded by six men, at least it could have saved her intestines'.

    இச்சம்பவம் தொடர்பாக ஞாநி உருக்கமாக-விளக்கமாக ஒரு பதிவிட்டிருந்தார்.

    உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற பெண்களிடம்  காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது. அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான் என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக் கூடாது என்றெல்லாம்  உனக்கு -  உங்களுக்கு கட்டளைகள் போட்டு வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று மிரட்டி வந்திருக்கிறோம்.
    நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும் எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.
    பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள்.  இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின் பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.
    குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

    அதை முழுமையாகப்படிப்பதற்கு  லிங்க்


    பேஸ்புக்கிலும்,வலைப்பூக்களிலிலும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.இதுதொடர்பாக ஸ்ரேட்டஸ்கள்,பதிவுகள் பல வெளிவந்தன.அவற்றில் ஒரு ஒற்றுமையினை என்னால் அவதானிக்கமுடிந்தது.
    பெரும்பாலானவற்றில் ஒற்றுமையாக இருந்தவை
    1)இரவில் அந்தப்பெண் வெளியே சென்றிருக்கக்கூடாது
    2)அப்பெண் கற்பழிப்பைத்தூண்டும் வகையில் உடைகளை அணிந்திருந்தாளா?
    3)கூடச்சென்ற  போய் பிறண்ட் உண்மையில் யார்?
    4)பெண்கள் இல்லாத பஸ்ஸில் 6 ஆண்கள் மட்டுமே இருந்த பஸ்ஸில் ஏன் ஏறினாள்?
    5)கற்பழித்தவனை விட கற்பழிக்கத்தூண்டியவளுக்கு அதிக தண்டனை கொடுக்கவேண்டும்
    இப்படியெல்லாம் விவாதங்கள் ஒரு புறம் இருக்க.இச்சம்பவத்தைப்பயன்படுத்து ஒரு சிலர் வழக்கம்போல் இதனூடாக தமது அன்றாட கருமமான மதம் பரப்பும் பிரச்சார வேலையையும் செய்துகொண்டார்கள்.யாரை சொல்கின்றேன் என்று உங்களுக்கே தெரியும்.

    மேலே விவாதிக்கப்பட்ட கேள்விகள்மூலம் என்ன கூறவருகின்றார்கள்.

    //1)இரவில் அந்தப்பெண் வெளியே சென்றிருக்கக்கூடாது
    2)அப்பெண் கற்பழிப்பைத்தூண்டும் வகையில் உடைகளை அணிந்திருந்தாளா?
    3)கூடச்சென்ற  போய் பிறண்ட் உண்மையில் யார்?
    4)பெண்கள் இல்லாத பஸ்ஸில் 6 ஆண்கள் மட்டுமே இருந்த பஸ்ஸில் ஏன் ஏறினாள்?//

    ஒரு பெண் இரவில் தனியாக சென்றால் அவளைக்கற்பழிப்பதற்கான அனுமதி உரிமை அனைத்து ஆண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.ஒரு பெண் செக்ஸியாக கற்பழிப்பைத்தூண்டும் வகையில் ஆடை அணிந்தால் யாரும் அவளைக்கற்பழிக்கலாம்.கற்பழிக்கப்பட்ட பெண் கற்பழிக்கப்பட்டபின்  உயிர்தப்பினால் அவளுக்கு அதிக தண்டனை கொடுக்கவேண்டும்.கற்பழித்தவனுக்கு ஆயுள் தண்டை என்றால் கற்பழிக்கப்பட்டவளுக்கு தூக்குத்தண்டனை.

    மேலே கேட்கப்பட்ட கேள்விகள் மறைமுகமாக என்ன கூறவருகின்றன என எனக்குவிளங்கியவை இவைகள்தான்.
    அந்தக்கேள்விகளுக்கு என்னிடமும் கேள்விகளே உள்ளன

    அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பீச்களில் பெரும்பாலான பெண்கள் பிகினியுடன் அரையும் குறையுமாக(சில இடங்களில் நிர்வாணமாக) கடலில் குளித்துக்கொண்டோ கரையில் உலாவிக்கொண்டோ இருப்பார்கள்.அங்கே கேள்விகேட்ட தனவான்கள் சென்றால் உடனே காய்ந்த மாடு காம்பில் பாய்வது போல் பாய்ந்துவிழுந்து அங்கிருக்கும் பெண்களை கற்பழித்துவிடுவீர்களா?உங்களால் முடியாது.அங்கு உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு/பொத்திக்கொண்டு நிற்கவேண்டியதுதான்.
    சாதாரணமாக எமது ஆசிய சமய,கலாச்சார ஆடைகளையே தொடர்ந்து பார்த்துவந்த எமக்கு சற்று செக்ஸியான(பிகினி அல்லாத) ஆடைகளுடன் ஒரு பெண்ணைப்பார்த்ததும் அவளை கற்பழிக்க முயல்கின்றோம் என்றால் ஏன் எங்களால் அமெரிக்காவில் அந்த செயலை செய்யமுடியவில்லை.
    போலீஸ் பிடித்து நொங்கெடுத்துவிடும் என்ற பயம்தான் காரணம் என்றால் இங்கு ஏன் அந்தப்பயம் வேலை செய்யவில்லை.
    கலாச்சாரக்காவலர்கள்  பாதுகாப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையா?

    டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதி தொடர்பாக யாராவது பேஸ்புக்கில் ஸ்ரேட்டஸ் பகிர்ந்துகொண்டால் உடனேயே பின்னால் கேள்விகள் எழுகின்றன.டெல்லியில் பெண் கற்பழிக்கப்பட்டதால் போராடுகின்றார்கள் தமிழ் நாட்டில் பெண்கள் கற்பழிக்கப்பட்டபோது எங்கே இருந்தீர்கள்,ஈழத்தில் பெண்கள் கற்பழிக்கப்படும்போது எங்கேயெடா போய் இருந்தீர்கள்.

    இங்கே ஒரு பெண் கற்பழிக்கப்பட்டாள் என்ற விடய்த்தைத்தவிர ஏனைய அனைத்துவிடயங்களும்தான் முக்கியம் என கூவுகின்றார்கள்.ஈழம்,டெல்லி மாத்திரமல்ல உலகெங்கிலும் பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்காவில் மட்டும் ஒரு மணித்தியாலத்திற்கு 78 பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள்.

    இந்தியா கேட் அருகே பெண்கள் உரிமை அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒரு இளம் பெண் ஏந்தி இருந்த தட்டியில் இடம் பெற்ற வாசகங்கள் இது :

    " IF I AM A WOMEN AND IF I WALK NUDE ON THE ROAD , THEN ALSO U DON'T HAVE ANY RIGHT TO RAPE ME ! "
    உடனே ஆரம்பித்தார்கள் பேஸ்புக் கலாச்சாரக்காவலரக்ள்.இதைக்கூற பெண்ணுக்கு எந்த உரிமையும் இல்லை.கலாச்சாரத்தை மீறும் செயல் என்று.
    பேஸ்புக்கின் இன்றைய நிலை இதுவேதான்.சொல்லவந்த விடயம் என்ன என்பது தொடர்பாக யாரும் அலட்டுக்கொள்வதாக தெரியவில்லை. நிர்வாணமாக சென்றால்கூட என்னைத்தொடுவதற்கு அனுமதி இல்லை என்ற கூற்றை ஆதரிப்பதன் பொருள் ஒரு பெண்ணை நிர்வாணமாக வீதியில் செல்ல நான் ஆதரவளிக்கின்றேன் என்பதல்ல.

    ஒட்டு மொத்தமாக கலாச்சாரம்,சமயம் என்ற போர்வையில் வெளிப்படும் ஆணாதிக்க சிந்தனைகளின் தோற்றப்பாடுகளாகவே பேஸ்புக்,சில பல வலைப்பூக்களின் பதிவுகள் தெரிகின்றன.சுய கட்டுப்பாடு என்ற வார்த்தையை ஒட்டுமொத்தமாக பெண்களுக்கே தாரைவார்த்துக்கொடுத்துவிட்டோம்.

    செக்ஸியாக உடைஅணிந்து வெளியே செல்லும் பெண்கள்தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றார்களா?

    வீட்டில் சொந்த இரத்த உறவுகளாலேயே பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் இருக்கிறார்களே?தந்தையே மகளைக்கற்பழித்த கதைகளை நாம் செய்திகளாக கேள்விப்பட்டதில்லையா?இவற்றிற்கெல்லாம் செக்ஸியாக அணியும் உடைதான் காரணம் என்று கூறமுடியுமா?


    பாலியல் தொடர்பான விழிப்புணர்வு எட்டப்படாதவரை இவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.இதற்கு ஒட்டுமொத்தமாக பெண்களைக்குற்றம்சாட்டி எந்த பயனும் இல்லை.குடும்ப,சமூகக்காரணிகள் இவ்வாறான ரேப்பிஸ்டுகளை ஆழ்மனதில்  உருவாக்கிக்கொண்டிருக்கின்றது.சந்தர்ப்பம் கிடைக்கும்போது அந்த ரேப்பிஸ்ட் முகமூடியை கிழித்துக்கொண்டு வெளியே வருகின்றான்.முக்கியமான எமது வாழ்வில் மிகவும் ஒன்றித்துவிட்ட சினிமாவையும் இங்கு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தமுடியும்.சிலவருடங்கள் முன்பு வரை சினிமா ஒருவன் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டால் அவளை கற்பழித்தாலே போதும் என்று படிப்பித்துவந்தது.உடனே ஒரு பஞ்சாயத்து அதில் அப்பெண்ணை அவனே திருமணம் செய்யவேண்டும் என்று  தீர்ப்புக்கூறியது சினிமா.இன்னொன்றையும் கூறியது கற்பழிக்கப்பட்ட பெண் வாழ்வதை விட தற்கொலை செய்துகொள்வதுதான் சரியான முடிவு.ஹீரோ ஹீறோயினுக்கு செய்யும் ஹீரோயிஸமே பொறுக்கித்தனமாக இருந்தால் அதைப்பார்த்து எனக்கு விரும்பிய பெண்ணிடம் ஹீரோயிஸம் என்ற நினைப்பில் அவற்றை செய்யவைக்கின்றது சினிமா.

    //பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.

    ஞானி//


    பெண்களின் உடைதொடர்பாக ஒரு விடயத்தை கூறமுடியும் எனக்குத்தெரிந்த ஒரு பழமொழி 
    "கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டுபவன் முட்டாள்" இதைப்புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

    கற்பழிப்புக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.ஈரான் போன்ற நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகள்.





    மரணதண்டனை சரியாதவறா என்பது விவாதத்திற்குரிய தனி சப்ரர்.கமல் கூறியதுபோல் ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு இன்னொரு காட்டுமிராண்டித்தனம் சரியாகாது.கற்பழிக்கப்பட்டவள் எனது சகோதரி கற்பழிக்கப்பட்டவன் எனது சகோதரன்.அந்த பஸ் என்னுடையது என்றும் கூறாமுடியும்.ஆனால் உண்மையில் எனக்கு அவ்வளவு சகிப்புத்தன்மை இல்லை.

    காஸாப்பின் தொக்குத்தண்டனை தொடர்பாக ஒரு நண்பர் பகிர்ந்துகொண்ட செய்தி


    நோர்வே வரலாற்றிலேயே மோசமான கொலையாளியான ப்ரெய்விக் பிடிபட்ட பின்பு 'இன்னும் அதிகமானோரைக் கொல்ல முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்' என்றார். நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்தபோது மரண தண்டனைக்கு எதிராக நோர்வேக்காரர்கள் சொன்ன நியாயம் இதுதான்: ப்ரெய்விக் பைத்தியக்காரனாக இருக்கலாம்; ஒட்டுமொத்த நோர்வேயும் அப்படி இருக்க முடியாது! 

    -Ilamaran Mathivanan
    ஞானி  இன்னொன்றையும் கூறினார் "ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்."
    (இதை ஞானி ஆண்களை ரேப்பிஸ்ட் என்று கூறிவிட்டார் என்று பேஸ்புக்கில் ஆரம்பித்துவிட்டார்கள்) ஞானி கூறியதை வைத்துப்பார்த்தால் my name is khan and i'm not a terrorist என்பதுபோல் i am a male and i am not a rapist என்று ஒவ்வொரு ஆணும் கூறுக்கொண்டு திரியவேண்டிய காலம் வந்துவிடுமோ?

    ஞானியின் இச்சம்பவம் பற்றி எழுதிய பதிவில் Ganpat  என்பவரால் இடப்பட்ட கொமண்ட்


    எங்கள் இஷ்டத்திற்கு ஒட்டு போட்டு(அல்லது ஓட்டே போடாமல்),திறமை,நேர்மையற்ற கயவர்களை ஆட்சிபொறுப்பில் அமர்த்துவோம்.

    பிரசித்தி பெற்ற IAS,IPS அதிகாரிகள்,
    அமைச்சர்கள்,வழக்கறிஞர்கள்,
    மருத்துவர்கள் ,chartered accountants நிகழ்த்தும் ஊழல்கள்,கயவாளித்தனங்கள்,
    பாலியல் குற்றங்கள் இவற்றை அசட்டை செய்து மறைமுகமாக ஊக்ககுவிப்போம்.

    திரைப்படங்களில் வரும், பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளை,காவல் நிலையத்தில் நடைபெறும் கற்பழிப்பு காட்சிகளை, ரசித்துப்பார்ப்போம்.

    தொலைக்காட்சி “ச்சீ”ரியல்களில் வரும் “கணவன் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்தல்”,”ஒரு பெண், ஹிட்லரை விட மோசமான குணநலங்களுடன் தன் புகுந்த வீட்டில் அனைவரையும் பழிவாங்கி கொலை செய்தல்” ஆகிய காட்சிகளை வருடக்கணக்கில்,குழந்தை குட்டிகளுடன் வரவேற்பறையில் அமர்ந்து ரசித்துப்பார்ப்போம்.

    இதே சானல்களில், செய்திகள் என்ற போர்வையில் ஒரு போலி சாமியாரும் ஒரு நடிகையும் நிகழ்த்தும் லீலைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டால் சிரித்து மகிழ்வோம்.

    16 வயது மகள்,40 வயது மனைவி சகிதம் ஒரு அநாகரீக குத்துப்பாட்டிற்கு திருமண நிகழ்வுகள்,சானல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் ஆடி மகிழ்வோம்.

    ஆனால்,ஆனால்…

    இரவு,ஒரு யுவதி ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி, அங்கு ஊர் பேர் தெரியாத ரவுடிகளால் தாக்கப்பட்டால் மட்டும் பொங்கி எழுவோம்.

    டெல்லியில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மரணமடைந்தார்

    $
    0
    0
    டெல்லியில் ஓடும் பஸ்ஸில்  வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு  தீவிரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 23 வயதை உடைய பெண் சனிக்கிழமை காலை 4:45  இற்குமரணமடைந்தார்.Mount Elizabeth Hospital இன் சீஃப் Dr. Kelvin Loh இதை உறுதிப்படுத்தினார்.
    அவர் மேலும்கூறியதாவது
    மிக கவலைக்குரிய நிலையில் வியாழனன்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வெள்ளியன்று நிலமை மேலும் மோசமடைந்தது.அவரது உடலின் உறுப்புக்கள் பல சேதமடைந்திருந்தன மூளையும் பாதிப்படைந்திருந்தது.அவர் பழைய நிலைக்கு மீளுவதற்கு மிகவும் போராடினார் ஆனால் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

    இறந்த பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.இவருக்காக போராடியவர்கள் இவருக்கு"Damini" என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.டாமினி என்றால் lightning என்று அர்த்தம்.

    Prime Minister Manmohan Singh தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.
    I am deeply saddened to learn that the unfortunate victim of the brutal assault that took place on December 16 in New Delhi has succumbed to the grievous injuries she suffered following that attack. I join the nation in conveying to her family and friends my deepest condolences at this terrible loss.

    I want to tell them and the nation that while she may have lost her battle for life, it is up to us all to ensure that her death will not have been in vain. We have already seen the emotions and energies this incident has generated. These are perfectly understandable reactions from a young India and an India that genuinely desires change. It would be a true homage to her memory if we are able to channelize these emotions and energies into a constructive course of action.

    The need of the hour is a dispassionate debate and inquiry into the critical changes that are required in societal attitudes. Government is examining, on priority basis, the penal provisions that exist for such crimes and measures to enhance the safety and security of women. I hope that the entire political class and civil society will set aside narrow sectional interests and agenda to help us all reach the end that we all desire – making India a demonstrably better and safer place for women to live in.

    I pray for the peace of the departed soul and hope that her family will have the strength to bear this grievous loss.

    அமிதப்பச்சன் ருவிட்டரில் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.

    Amanat', 'Damini' just a name now .. her body has passed away, but her soul shall shall forever stir our hearts !!!
    இந்திய அரசாங்கம் குற்றவாளிகளின் பெயர் போட்டோ விலாசங்களை தனது உத்தியோகபூர்வ தளங்களில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.




    கற்பழிக்கும்போது பெண்கள் ஒத்துழைக்கவேண்டும்

    டெல்லி கற்பழிப்பு-உண்மையில் பெண் என்ன செய்தார்?

    $
    0
    0
    வன்புணர்வில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ராம்சிங்க்..இரும்புத்தடியால் அப்பெண்ணின் பிறப்புறுப்பை தாக்கினாந்என்றுதான் இதுவரை செய்திகள் வெளிவந்தன.ஆனால் அவர் அதை தன் கையாலேயே செய்திருக்கின்றார்.அப்பெண்ணை இருதடவைகள் வன்புணர்வுக்கு ஈடுபடுத்தியபின் கையால்கர்ப்பப்பையை வெளியே இழுத்து பிடுங்கி பஸ்ஸிற்கு வெளியே வீசியுள்ளான்.பின்னர் பெண்ணை வீசியுள்ளான்.அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டபின் அந்த நபர்களை அடித்துள்ளார் இந்தக்கோபத்திங்காரணமாகத்தான் இதை செய்துள்ளார்கள்.
    சம்பவம் நடைபெற்றதற்கு அடுத்த தினம் போலீஸ் கர்ப்பப்பையை கைப்பற்றியுள்ளது.




    டாப் 12 போஸ்ட் 2012-வெங்காயம்

    $
    0
    0
    உண்மையைக்கூறினால் பதிவுலகத்தில் நுழைந்து முழுதாக ஒருவருடம் கூட ஆகவில்லை.எமக்கு பதிவுலகமே ஆரம்பத்தில் புதிராகத்தான் இருந்தது.இப்பொழுது ஓரளவு தெளிந்துவிட்டோம் என நம்பிகின்றோம்.வெங்காயத்தில் 2012 இன் டாப் 10 பதிவுகள் கீழே அதிக பேஜ் கிட்களைவைத்து இவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.கஸ்ரப்பட்டு தகவல்களை சேகரித்து போஸ்ட்டாகப்போடும் பதிவுகள் சிலவை 200 பேஜ் கிட்டுடன் படுத்துக்கொள்வதும்.அன்றைக்கு அவசரமாகப்போடப்படும் பதிவுகள் 2000 பேஜ் கிட்டைதாண்டுவதும் அனைத்து  பிளாக்கர்களுக்கும் பொதுவானதுதானா?  அரசியல்ல இது சகஜம்...

    லிஸ்ட் இதோ..


    உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?


    இன்றைய தினத்தில் ஒரு கெட்டவார்த்தையாக ஆகிவிட்டது உலக அழிவு யாராவது இதைப்பற்றிக்கதைத்தாலோ அல்லது கேட்டாலோ  மக்களுக்கு கோபம்/எரிச்சல் வந்துவிடும்.காரணம் சகலருமே உலக அழிவுதொடர்பாக  அனைத்து விடயங்களையும் பி.எஎஹ்.டி முடிக்காத குறையாக அறிந்துவிட்டார்கள்.எல்லாவற்றிற்கும் காரணம் மரணபயம்தான்.பதிவர்கள் ஒவ்வொருவரும் நாஸ்கா லைன் தொடக்கம் ஹரிசன் போர்ட்டின் இண்டியானா ஜோன்ஸ் வரை அனைத்தையும் இழித்து பயப்படுத்திவிட்டதால் அட நாஸா  உண்மையில் என்ன கூறியது என்று அறிய முற்பட்டார்கள்.

    தொடர்பான லிங்க் கிளிக்

    face bookஇல் அதிக லைக்குகள் வாங்கிய புகைப்படங்கள்


    பேஸ்புக் பான்பேஜ்களில் இதர குரூப்களில் பகிர்ந்துகொள்ளப்படும் போட்டோக்கலக்ஸன்
     face bookஇல் அதிகமாக பேசப்பட்ட விமர்சனத்திற்கு உள்ளன புகைப்படங்கள்தான் இவை ...face book அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக அரசியலில் நடைபெறும் கூத்துக்கள் ,சினிமா விமர்சனங்கள் ,நடிகர்கள் நடிகைகளை பற்றிய கிசு கிசுக்கள் ,சாமியார்களின் விடயங்கள் என சகல விடயங்களுக்கும் பத்திரிகைதான் கேலி சித்திரங்கள் வரைந்து அவற்றை பற்றி கடுமையான விமர்சனம் செய்வார்கள் அதன் பின்புதான் நமக்கு உண்மை புலப்படும் ..ஆனால் தற்பொழுது உலக அளவில் பயங்கர ஆயுதமான மீடிய துறையாகவும் பரிணமித்திருக்கிறது facebook இதனால் எதாவது குளறுபடிகள் நடந்தால் முதலில் சாட்டையடி விழும் இடமாக facebook காணப்படுகின்றது 

    லிங்க் இங்கே கிளிக்

    இப்பதிவு கோபிநாத்தைப்பற்றியது என்னான்னு தெரியல நான் பதிவுலகத்துக்கு வந்தபோது கோபியைக்கழுவிக் கழுவி ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.உடனே அண்ணன் கோபிக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கி போடப்பட்ட போஸ்ட்தான் இது.(பின்னாளில் பல்ப்புவாங்கியது வேறுகதை)

    கோபிநாத் மீதான கோபமும் ஒருவகையில் காரணம்...விடயத்திற்கு நேரடியாக வருகிறேன் அந்த முன்னணி நடிகர் விஜய் ...ஒரு நீயா நானாவில் ஒரு பெண் ஒரு நடிகரின் இப்பொழுது வரும் படங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கின்றன மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தனது கருத்தை தெரிவித்தார்
    இங்கு விஜய் பற்றிய கருத்துதான் கூறப்பட்டதே தவிர விஜயை பற்றி தனிப்பட்ட ரீதியிலோ அல்லது நடிகர் விஜய் அயல் கிரகத்தில் இருக்கவேண்டிய ஜந்து என்றோ கூறவில்லை அப்படி கூறினால் ரசிகர்கள் கோப படுவதில்  அர்த்தம் இருக்கின்றது( காரணம் ஒரு ரசிகனின் மிக முக்கிய பணிகளில் அதுவும் ஒன்று ) ஆனால் அப்பெண் கூறியது ஒரு கருத்து மட்டுமே.... அதையும் நாகரீகமான முறையில் வெளிப்படுத்தி உள்ளார்.... நீயா நானா நிகழ்ச்சி ஒரு சுதந்திரமான விவாதக்களம் ...யாரும் தமது கருத்தை சுதந்திரமாக வெளியிட முடியும்..

    பதிவுக்கு இங்கே கிளிக்

    அடுத்தபோஸ்ட்டுக்கும் கோபிக்கும் நிறையவே சம்பந்தம் இருக்கு.அடுத்த போஸ்ட் தலைவர் பவர்ஸ்ரார் பற்றியது.நீயா நானாவில் பவர் பங்குபற்றி ஒரே நாளில்   முதலமைச்சர் நாற்காலியைப்பிடித்தார் பவரு... பவரு பேஸ்புக் ரசிகர்களால் தலிவா தலிவா என அன்போடு அழைக்கப்பட்டார்


    பிரபலமான பன்ச் டயலொக் "குல குலையா முந்திரிக்கா இந்த பவர் ஸ்டார் அடிச்சா நீ கத்தரிக்கா "

    இங்கே கிளிக்

    நித்திக்கு அடுத்ததாக கிளம்புகிறது சாய்பாபாவின் சர்ச்சைகள்


    சாய்பாபா தொடர்பில் சாட்டப்பட்ட கொலைக்குற்றங்கள் அமெரிக்கன் எம்பஸி சாய்பாபா தொடர்பாக தமது மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை..இளம் ஆண்பக்தர்களிடம் மோசமான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபலமான கடவுள் மனிதன் என்று சாய்பாபாவைக்குறிப்பிட்டமை தொடர்பான பதிவு இது.


    இங்கே கிளிக்

    உலகம் அழிந்தபின் உலகம் எப்படி இருக்கும்? 2012 திரைப்படம் - குறியீடுகள்.


    2012 உலக அழிவு தொடர்பான திரைப்படத்தில் மறைமுகமா இயக்குனர் என்ன சொல்லியிருக்கின்றார் என்பது தொடர்பான பதிவு இது.இயக்குனரிடம் மாயங்கள் கூறியவை உண்மையா என கேட்க சிரித்துக்கொண்டு  என் பிட்டுக்களையும் சேர்த்து இணைத்திருந்ததாக கூறினார்.மேலும் மக்கள் சிலவற்றை நம்பவிரும்புகின்றார்கள் என்றும் கூறினார்.ஏதோ சயன்ஸ் பிக்ஸன் படம் எடுப்பதாக கூறி 2012 ஐ வெளியிட நாஸா இவரது படத்தைக்கழுவிக் கழுவி ஊற்றியது தனிக்கதை.

    மதங்களின் வீழ்ச்சி..
    இங்கே கிளிக்


    உலக அழிவு திரைப்படங்கள்




    உலக அழிவு தொடர்பாக நான் ரசித்த ஹொலிவூட் திரைப்படங்களின் சிறிய தொகுப்பு
    சாதாரணமாக சாஸ்திரங்களை நொஸ்ரடாமஸ்ஸின் எதிர்வுகூறல்களை  நம்பாதவர்களைக்கூட விஞ்ஞான ரீதியான அழிவு பற்றிய அனுகூலங்களை அறியும்போது கலங்கிவிடுவார்கள்.பொதுவாக உலக அழிவுபற்றிய திரைப்படங்கள் ஏலியன்கள் வந்து உலகத்தை அழித்துவிடுவார்கள் சில படங்களில் அழிக்கவரும் அவ் ஏலியன்தான் பூமியில் உயிர்கள் உருவாக அனுமதித்தவர்களாக சித்திகரிக்கப்படுவார்கள் ,விண்கற்கள் மோதுவதால் உலகம் அழிதல் போன்றவையும் காட்டப்படும்.இவைகூட உலகம் அழிந்துவிடுமோ என்கின்ற பயத்தை,எண்ணத்தை அடிக்கடி மக்களுக்கு நினைவுபடுத்துகின்றன/பயத்தை ஏற்படுத்துகின்றன

    இங்கேகிளிக்


    சோழர்களும் அவர்களின் வரலாறும்

    சோழர்கள் தொடர்பில் இடப்பட்ட தொடர்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளன.
    சோழர்களின் தோற்றம் என்பது எவ்வாறு  ஏற்பட்டது என்பதில் பல குழப்பங்கள் இருந்தாலும் மூவேந்தர்களில் மூத்தகுடி பாண்டியர்கள் என்பதில் ஐயுறவு இல்லை. தமிழனினதும் தமிழினதும் பிறப்பிடமான குமரிக்கண்டம் பாண்டிநாடு என்னும்  பெயர் கொண்டும் அழைக்கப்பட்டது [  குமரிக்கண்டம் குறித்து சில எதிர்   வாதங்களும் உள்ளன ஆனால் தமிழ் சங்ககால நூல்கள்  குமரிக்கண்டம் இருந்ததாயும் பாண்டியர் ஆண்டதாயும் குறிப்பிடுகின்றன எது எப்படியோ முதலில் தோற்றம் பெற்ற தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் என்பது தெளிவு]. 


    இங்கே கிளிக்

    மொஸாட்: உளவாளிகளின் சொர்க்கம்


    இஸ்ரேலிய உளவுத்துறைதொடர்பான விறுவிறுப்பான தொடர்.
    1948 யூன் மாதத்தில் அன்றைய இஸ்ரேல் பிரதமர் பென்-குரியோன்{David Ben-Gurion }  ஒரு வலுவான உளவு நிறுவனத்தை அமைக்க உத்தரவிட்டார். அந்த நிறுவனம் மூன்று பகுதிகளைத் தன்னுள் அடக்கியிருந்தது. முதல் பகுதிக்கு Bureauof Military Intelligence என்று பெயர். இரண்டாவது பகுதி Political Department of Foreign Affairsஎன்றழைக்கப்பட்டது. இது வெளிநாட்டு உளவுச் செய்திகளை அறிந்து கொள்வதற்கான பகுதியாகும். மூன்றாவது பகுதி Department of Security என்பதாகும்.
    இங்கே கிளிக்

    கவுண்டமணி - இதெல்லாம் என் வரலாற்றுல வரும்...

    கவுண்டமணி திருமணம்.

    கவுண்டமணியின் வரலாறு மற்றும் கவுண்டமணியின் சினிமா வாழ்க்கை தொடர்பான பதிவு.

    விகடன்: 16 வயதினிலே உங்க முதல் படம். அதில் கண்ணெல்லாம் சுருங்கி போயி கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு. அதாவது வறுமை?

    கவுண்டர்: (சட்டென்று இடைமறித்து) அதெல்லாம் சும்மா சார். வறுமையாவது ஒண்ணாவது. சினிமாவுக்கு முன்னாடி நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே. வேளா வேளைக்கு சோறு. அதிகம் இல்லாட்டியும் பொழுதை தள்றதுக்கு காசு கிடைச்சிட்டு தான் இருந்துச்சி. வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு '
    ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்..துண்டு பீடிதான் புடிச்சேன்ன்னு சொல்றது இப்ப ஒரு பேஷன் ஆகிப்போச்சி. அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.

    இங்கே கிளிக்

    நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு- நல்லா காட்டுறாங்க


    பேஸ்புக்கில் ஒரு பிரபலமான கலாச்சாரம் பரவிவிட்டது. தமிழன் பெருமைகள் என்று கூறி அல்லது இந்துசமய  பெருமைகள் என்று கூறி ஏதாவது போஸ்ட்போட்டு பிரைட் டி பி ஏ தமிழன் இதை செயார் செய்யுங்கள் என்று கூறுவார்கள்.அதில் கூறப்பட்ட விடயம் உண்மையா இல்லையா என்பது தொடர்பாக எள்ளளவும் சிந்திக்காது நம்மவர்கள் விழுந்தடித்து பகிர்ந்துகொள்வார்கள் அண்மையில் ஒரு ஸ்ரேட்டஸ் பார்த்தேன் சூரியனுக்கு சென்று ஆராய்ச்சி செய்த தமிழர்கள் என்று ஒருவர் ஸ்ரேட்டஸ் பகிர்ந்திருந்தார்.ஆர்வக்கோளாறை என்னவென்று சொல்வதென்று புரியவில்லை..

    இதே போல் பகிர்ந்துகொள்ளப்பட்டவிடயம்தான் திரு நள்ளாறு கோவிலுக்குமேல் செயற்கைக்கோள்கள் எல்லாம் செயலிழக்கின்றன. நாஸா  விஞ்ஞானிகளே ஒத்துக்கொண்டுள்ளார்கள்.அங்கு வந்து இறைவனின் மகிமையைப்போற்றி புராணங்கள் பாடினார்கள் என்று கூறினார்கள்.அதோடு 9 கிரகங்கள் அவற்றின் நிறங்களை நாம் முன்பே அறிந்திருந்தோம் என்றும் கூறினார்கள்.
    இவை உண்மையா இல்லையா என்பதை ஆராயும் பதிவுதான் இது.



    இங்கேகிளிக்

    WWE ரெஸ்லிங்க் உண்மையா ?பொய்யா? இறுதிப்பகுதி


    ரெஸ்லிங்க் உண்மையா ?இல்லை டூப்பா? என்பது தொடர்பில் ரெஸ்லிங்கிற்கு 7,8வருடங்களாக ரெஸ்லிங்கிற்கு தீவிர ரசிகனாக இருந்தவன் என்ற அடிப்படையில் உள்குத்துக்கள் உண்மைகள் ஸ்ரார்கள் படும்பாடுகள்.மரணங்கள் அண்டர் ரேக்கர் பற்றி தெரியாத புதிய தகவல்கள் என்பவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட போஸ்ட்.

    The Undertaker சிறிய வயதில்



    இங்கே கிளிக்


    டெல்லி பெண்ணின் நண்பனின் பேட்டி- நடந்தது என்ன?

    $
    0
    0

    'நாங்கள் மீள்வோம் என்று தெரியும், அவர்கள் என்னை சாலையில் ‌வீசும் போது வலியையும் மீறி நான் கூறிய வார்த்தைகள், 'உ‌ன்னை தனியாக து‌ன்புறவிடமாட்டேன் என்பது தான். சாலையில் தூக்கி வீசப்பட்ட போது தோழியின் அலறல் என்னை கொன்றே விட்டது'' டெல்லி‌யி‌ல் ஓடு‌ம் பேரு‌ந்‌தி‌ல் மாணவி கற்பழிக்கப்பட்ட போது உடன் இருந்த ந‌ண்ப‌ர் இ‌வ்வாறு உரு‌க்கமாக கூ‌றியு‌ள்ளா‌ர்.

    வார இதழ் ஒன்றுக்கு மாண‌வி‌யி‌ன் ந‌ண்ப‌ர் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். இதோ:- நான் அந்த நிகழ்வின் மு‌க்‌கிய சாட்சி. அந்த அசாதாரண சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ந‌ண்பனாக அந்த இடத்தில் சமூகத்தை நினைத்து தலைகுனிய வைத்தது அந்த மோசமான இரவு. நான் இப்போது அந்த சம்பவத்தை மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை. எனினும் தொடர்பான சாட்சியத்தை என் மனசாட்சிக்கு உட்பட்டு காவல்துறையிடம் அளித்துவிட்டேன்.

    அசம்பாவிதத்தில் கடுமையாக தாக்கப்பட்ட நான் தற்போது உடல் தே‌றியு‌ள்ளே‌ன். காயங்கள் பலம் என்பதால் அதிலிருந்து விடுபட சில நாட்கள் ஆகும். ஆனால் என் தோழிக்கு ஏற்பட்ட பாதிப்புகள், கோரங்கள் என்றும் மாறாது, அழியாது.

    என் தோழி குறித்து என்னால் எதுவும் பேசவோ கருத்து தெரிவிக்கவோ முடியவே இல்லை. அதை நினைத்தாலே அதிர்ச்சியாகவும், நம்பவே முடியாத அளவிலும் உள்ளது.

    மருத்துவமனையில் என் தோழியை பார்க்க இரண்டு முறை சென்றேன். முதல் முறை அவர் சோர்ந்து இருந்தார். இர‌ண்டாவது முறை சென்றபோது, கண் விழித்து என்னை பார்த்தார். அவர் பேசியது, '' காம வெறியர்களை பிடித்துவிட்டார்களா'' நான் தலை அசைத்ததும், இதிலிருந்து மீள போராட போகிறேன் என்றார்.

    அவர் போராடுவேன் என்று கூறியது குற்றவாளிகளை தண்டித்து வெற்றியடைவேன் என்பது தான். தலைமறைவா௦ன முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை கேட்டு அவர் மிகவும் பலமுடன் காணப்பட்டார்.

    ஆனால் அந்த ஆறு பேரில் ஒருவர் ஒரு மைனர் என்பதால் அவருக்கு முழுமையான தண்டனை கிடைக்காதோ என்று பயந்துவிட்டதாக கூறினார். ஆனால் மைனர் என்றாலும் குற்றத்திற்கான தண்டனை கிடைத்தே தீர வேண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

    மேலும் அவரிடம், நீங்கள் மட்டும் ஆறு பேருடன் சண்டையிட்டு பின்னர் தாக்கி வெளியே வீசப்பட்டு சாலையில் ம‌ற்றவ‌ர் உதவியை நாடியிருந்த வேளையில், உங்கள் மனதில் என்ன இருந்தது? என்று கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில்,

    நாங்கள் மீள்வோம் என்று தெரியும், அவர்கள் என்னை சாலையில் ‌வீசும் போது வலியையும் மீறி நான் கூறிய வார்த்தைகள், 'உ‌ன்னை தனியாக து‌ன்புறவிடமாட்டேன் என்பது தான். சாலையில் தூக்கி வீசப்பட்ட போது தோழியின் அலறல் என்னை கொன்றே விட்டது.

    ஆனால் சாலையில் விழுந்தபோது யாரும் உதவ மு‌ன்வரவில்லை. அங்கு யாரும் முதலில் இல்லை, நிர்‌க்கதியில் இருந்தோம். அது தான் உண்மை.

    சமுதாயத்திற்கு ஒன்று கூற வேண்டும், எல்லோரும் இந்த விஷயத்தில் நிலைமையை எதிர்நோக்கும் போது மக்கள் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். நாம் போராட வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் எந்த நேரத்திலும் அமைதியுடன் போராட முடியாது. அமைதியுடன் போராடுவது இயலாது. இது போன்ற விஷயங்களை மக்கள் எதிர் நோக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எ‌ன்று அ‌ந்த மாண‌‌வி‌யி‌ன் ந‌ண்ப‌ர் உரு‌‌க்கமாக கூ‌றியு‌ள்ளா‌ர்.

     நன்றி-tamil.webdunia.com







    பாதிப்புக்குள்ளாகி இறந்தபெண்ணின் பெயரைக்கூட வெளியில் விடமாட்டோம் என்று கூறியதால்தான் டாமினி என்ற புனைபெயரை மக்கள் அப்பெண்ணிற்கு சூட்டினார்கள். நிலமை இப்படி இருக்க பேஸ்புக்கில் அவரது போட்டோ என போலி போட்டோக்கள் உலாவுகின்றன.
     இது போலி என்பதற்கான ஆதாரம்

    Posted On Wednesday, September 7, 2011 By Doctor.


    http://education.intoday.in/story/noida-cops-face-flak-for-revealing-identity-of-rape-victim/1/175657.html

    அதோடு 2012 feb இல் வேறு ரேப் கேஸில் கைதான கைதிகளை இந்த கேஸில் கைதான கைதிகள் எனக்கூறி இப்போது அதுவும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது
     போலி என்பதற்கு ஆதாரமான லிங்க்
    http://education.intoday.in/story/noida-cops-face-flak-for-revealing-identity-of-rape-victim/1/175657.html

    லைக் வாங்குவதற்கு இதையுமா பயன்படுத்தவேண்டும்..



    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - சனிப்பெயர்ச்சி என்ன செய்கிறது?

    $
    0
    0



    பிறக்கும் ஆங்கில புதுவருடத்துக்கு வெட்கமே இல்லாமல் ராசிபலன் எழுதத் தொடங்கியிருப்பார்கள் நமது சோதிடர்கள். அதை வாங்க முன்பதிவு செய்திருப்பார்கள் நமது மக்கள். ‘ஆங்கில புதுவருட சனிப்பெயர்ச்சி...கேட்கவே கேவலமாக இல்லை? சனிபகவான் என்ன, மக்களை வதைப்பதற்கான கோர்ஸை ஈஸ்வரனிடம் இங்கிலிஷ் மீடியத்திலா படித்தார்? இது ஒரு கூட்டம், அடுத்தது தமிழ் புதுவருடத்தை தான் கொண்டாடுவோம், இதெல்லாம் இங்கிலிஸ்.. என்று. ஜனவரி, பெப்ரவரி என்பதை தை, மாசி என எழுதும் கூட்டம். எந்தக் கூட்டமும் எக்கேடும் கெடட்டும், உலகத்துக்கே, அல்லது பெரும்பான்மை உலகத்துக்கு பொதுவான கிரகேரியன் புதுவருடத்தை, அதன் உண்மையான அர்த்தம் தெரிந்துவிட்டு கொண்டாடுவோம், வாருங்கள்.

    தற்போது பயன்படுத்தப்படும் கிரகரியன் கலன்டருக்கு முதல் உலகத்தில் ஜூலியன் கலண்டர் பயன்பட்டது. (அதுவரை பயன்பட்ட ரோமன் கலண்டர் சூரிய சுழற்சியிலிருந்து நான்கு மாதங்கள் பின்னால் இருந்ததால் கி மு 49இல் ஜூலியஸ் சீசர், வானியலாளர் சொசிஜீனஸ் ஐ, புதிய கலண்டரை உருவாக்குமாறு பணித்தார். அவ்வாறு உருவாக்கப்பட்டதே ஜூலியன் கலண்டர். ) ஆனால் அது உண்மையான புவிவியல் ஒரு வருடத்துடன் பொருந்தாததால், நூறாண்டு காலங்களில் இடைவெளி ஏற்பட்டது. உண்மையில் ஒரு வருடம் என்பது 365.2524 நாட்கள் (365நாட்கள், 5மணித்தியாலங்கள், 48நிமிடங்கள், 45.51செக்கன்கள்.). எனவே, அதனை அனுசரித்து, 1582 இல் பதின்மூன்றாம் போப் கிரகரியால் இன்றளவும் பயன்படுத்தப்படும் கலண்டர் அமைக்கப்பட்டது. அது, 365 நாட்கள் நீண்டது. இதனால் புறக்கணிக்கப்படும் கால் நாளை மீண்டும் சேர்க்கவே நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாள் கூட்டப்படுகிறது. (மறுபடி,அதனால் மீண்டும் அதிகாரிக்கும் வருடத்துக்கு 0.0024 நாள் என்ற அதிகரிப்பை சமாளிக்க மறுபடி 100 வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடத்தை கணக்கில் எடுக்காமல் விட்டு,அதனால் இழப்பாகும் இரு நாளை மீட்க மறுபடி 400 வருடத்துக்கு ஒருமுறை லீப் வருடத்தை கொண்டாடி சமாளிக்கிறார்கள்.) எப்படியும், எங்களது இந்தக் கலண்டரும் சீரானது இல்லை. இபோதும்வருடத்துக்கு  26செக்கன்கள் பின்னால்தான் உள்ளோம். ஆகவே,  3323 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாள் பின்னால் இருப்போம். அதை சமாளிக்க, 4000 வருடங்களுக்கு ஒருமுறை, மறுபடி அந்தலீப் வருடத்தை கொண்டாடாமல் விடவேண்டும். இப்போது கூர் கூடியவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும், 3323க்கு பதிலாக  4000எடுத்தால், மறுபடி குளறுபடி வரும் அல்லவா? ஆனால் அது லட்சக்கணக்கான வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதை விடுவோம்.
    போப் கிரகரி

    ரோமானியர்கள் பயனபடுத்திய ஜூலியன் கலண்டரில் 10 மாதங்களே இருந்தன. ஜூலை மட்டும் ஓகஸ்ட் மாதங்கள் ஜூலியஸ் மற்றும் ஒகஸ்டஸ் சீசர்களின் ஞாபகமாக பின்னர் இணைக்கப்பட்டது.

    மாதம்
    லத்தின் பெயர்
    காரணம்
    ஜனவரி
    Januarius
    ஜனஸ் என்ற கடவுளின் பெயரால்
    பெப்ரவரி
    Februaris
    பெப்ருவா என்கிற பண்டிகையின் பெயரால்.
    மார்ச்
    Martius
    மார்ஸ் கடவுளின் பெயரால்
    ஏப்ரல்
    Aprilis
    அப்ரோடிட் கடவுளின் பெயரால்
    மே
    Maius
    மையா கடவுளின் பெயரால்
    ஜூன்
    Junius
    ஜூனோ கடவுளின் பெயரால்
    ஜூலை
    Julius
    ஜூலியஸ் சீசரின் பெயரால். (பொ ச மு. 44 லிருந்து.) அதற்கு முதல் ஐந்தாவது மாதமாக குவிண்டஸ் என அழைக்கப்பட்டது.
    ஓகஸ்ட்
    Augustus
    அகஸ்டசின் பெயரால். (பொ ச மு. 8 லிருந்து.) அதற்கு முதல் ஆறாவது மாதமாக செக்ஸ்ட்டஸ் என அழைக்கப்பட்டது.
    செப்டெம்பர்
    September
    ஏழாம்,எட்டாம்,ஒன்பதாம்,பத்தாம் மாதங்கள் என,செப்டம்,ஒக்டம்,நவம்,டிசம் என அழைக்கப்பட்டது. (முந்தைய கலண்டரில் பத்து மாதங்களே இருந்தன.)
    ஒக்டோபர்
    October
    நவம்பர்
    November
    டிசம்பர்
    December



    ஜனஸ் என்கிற கடவுள்,கதவுகளின் தெய்வமாகும். புதிதாக திறப்பது,தொடங்குவது என்பவற்றின் தெய்வம், அது. அதனால்தான் வருடத்தை தொடங்கும் மாதத்தின் பெயராக அதை வைத்தார்கள். போப்பரசரால் அறிமுகப்படுத்தப்பட்ட கலண்டரிலும் ஜூலியன் கலண்டரின் வழக்கங்களே பயன்பட்டன. அதன்படி வருடத்தின் முதல் நாளாக ஜனவரி முதல் திகதி எடுக்கப்பட்டது. அது ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பின்பற்றப்பட்டு, பின்னர் உலகளவில் பொதுவாகி இன்று அந்தக் கலண்டரை பயன்படுத்தாதவர்களும் கொண்டாடப்படும் புதுவருடமாக ஆகி இருக்கிறது.

    புதுவருடம் : சில உபயோகமற்ற தகவல்கள்...
    ·         ஏனைய கொண்டாட்டங்களை விடவும், புதுவருடக் கொண்டாட்டங்களின் போதே அதிகளவில் திருட்டுக்கள் நடக்கின்றன.
    ·         புதுவருடம் என்பதே உலகத்தின் மிகப் பழமையான விடுமுறைக் கொண்டாட்டமாகும். நான்காயிரம் வருடங்களுக்கு முதல் பாபிலோனில் இது கொண்டாடப்பட்டதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. (கி மு 1750  காலப்பகுதியில் இவர்கள் தயாரித்த கலண்டரானது ஏறத்தாள இப்போதைய கலண்டரை ஒத்தது. 12மாதங்கள்,  29நாட்கள், 30நாட்கள் கொண்டதாக அடுத்தடுத்து வரும் மாதங்கள் என அது இருந்தது.)
    ·         ஜனவரி முதல் திகதி என்பது எழுமாற்றாக தேர்வான நாள்தான். கி மு நூற்றைம்பதில் இருந்தே இந்தத் திகதிதான் புதுவருடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.
    ·         தென்னமரிக்காவின் சில நாடுகளில் புதுவருடக் கொண்டாட்டங்களின் பொது மஞ்சள் உள்ளாடை அணிவது பாரம்பரியமாக உள்ளது. அதுவும் சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மஞ்சளுக்கு மாறினால் அது பேரதிர்ஷ்டத்தை தருமாம். இன்னும் கொடுமை என்னவென்றால், மெக்சிகோ பெண்கள் அந்த வேளையில் மஞ்சள் உள்ளாடை அணிந்த ஆண்களை கண்டால், தங்கள் எதிர்காலம் அதிர்ஷ்டவசமாக அமைவதற்காக அவர்களை திருமணம் செய்ய தேர்ந்தெடுப்பார்களாம்.
    ·         சிலியில் புதுவருடம் பிறக்கும்போது இறந்த உறவினர்களின் சமாதிகளை வணங்குவது வழக்கம். அப்போது அவர்களின் ஆவி நன்மை செய்யும் என்பது ஐதீகம். ஆவி எப்போது வரும் என்பது தெரியாது என்பதால், முதல்நாளே கதிரை போட்டுவிட்டு இடுகாடுகளில் காத்திருப்பது அங்கே வழமை.
    ·         இன்றுமுதல் பல்லு விளக்குவேன், இனி ஒழுங்காக மூச்சா போவேன் என அவரவர் தகுதிக்கேற்ப புதுவருடத்துக்கு சபதம் எடுப்பதும், வருடம் தொடங்கி பத்தே நாட்களில் அதை கைவிடுவதும் வழமை. இந்தப் பழக்கம் நாலாயிரம் வருடங்களுக்கு முன்னர் பபிலோனிலேயே ஏற்பட்டுவிட்டது.
    ·         பெல்ஜியத்தில், புதுவருடம் பிறக்கும் நள்ளிரவில், மிருகங்களை எழுப்பி புதுவருட வாழ்த்து சொல்லுவது வழமை.

    ஆங்கில புதுவருடம் என்று அழைத்துவிட்டு, அதற்கு இந்துசமயத்தின் ராசிபலன் எழுதுவது இந்துக்களின் வழமை.


    கிறிஸ்மஸ் போலவே, ஆங்கில புதுவருடமும் உலகம் முழுவதும் கொண்டாடுவதால் கொண்டாடுவோம் எனக் கொண்டாடுவதில்லை. என்னதான் நமக்கென்று தமிழ் வருடக் கணக்கு இருந்தாலும், அது உண்மையிலேயே பாரம்பரியமானது இல்லை. (தமிழ்வருடப்பிறப்பு, அதன் கூத்து, குத்து பற்றி அறிய இங்கே மவுசை வைத்து ஒரு நசிநசிக்கவும்.) அத்தோடு, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள்ளேயே அனைத்து நிர்வாக முறைகளும் நமக்கு பழக்கமானதால், நாம் ஆங்கிலக் கலண்டர் என்கிற பெயரில் கிரகேரியன் கலண்டரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்பதுடன் தவிர்க்கத் தேவையில்லாதது. உலகத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் கிரகேரியன் கலண்டரின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப் படும்போது நாம் மட்டும் கிருஷ்ணரும் நாரதரும் புணர்ந்ததை வைத்து காலத்தை ஓட்ட முடியாது.

    ஆனால், இங்கிலிசுக்கு ஆறு, தமிழுக்கு முப்பத்தொண்டு என்று நம்மூர் கிழவிகள் சலம்புவதை தவிர்க்க முடியாது. தமிழ் தமிழ் என்று பினாத்தி, ஊரோடு ஒத்து வாழ் என்கிற தமிழர் பாரம்பரியத்தை மறக்கிறோம்.

    புதுவருடம் என்பது மதம், மொழி கடந்தது.      அது ஒரு பழக்க வழக்கத்தால் வந்த கொண்டாட்டம் அல்ல. நாங்கள் பின்பற்றும் ஒரு வழமை சம்பந்தப்பட்டது. இதிலே வேறு எதற்கும் இடமில்லை.

    புதுவருட வாழ்த்துக்கள்.


    லண்டன் புதுவருடம்-அழகான வாணவேடிக்கைகள்

    $
    0
    0
    2013 ஆம் ஆண்டை லண்டன் மிக மகிழ்ச்சியுடனும் வாணவேடிக்கைகளுடனும் வரவேற்றுள்ளது.2013 ஆம் ஆண்டு ஆரம்பித்த கணத்தில் இருந்து தொடர்ந்து 11 நிமிடங்கள்  தொடர்ச்சியாக இந்த வாணவேடிக்கைகள் லண்டன் நகரத்தை ஒளியில் ஆழ்த்தின.இவற்றைப்பார்ப்பதற்கு 250,000 மக்கள்  தேம்ஸ் நதியினருகில் குழுமினர்,வாணவேடிக்கைகளுக்கு ஒட்டுமொத்தமாக 250 000£ பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.

    வீடியோ  கீழே



















    குப்பைகள்....




    படம் பார்க்கும் திரையரங்கில் பாலூத்தும் பரதேசிகளே- 05

    $
    0
    0

    இதுவரை தமிழ் சினிமாவின் மாயைத்தனங்களையும், அதற்கு அடிமையான வெறியர்கள் வெறித்தனமாக நடந்து கொள்வதையும் பார்த்தோம். ஆனால் போனபதிப்பை வாசித்து விட்டு சிலர் என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியெல்லாமா எழுதுவீர்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் என்ன செய்வது சில விடயங்களை சமூகத்தின் பார்வையிலிருந்து எழுதினால்தான் இப்படி வெறித்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு தங்களின் நிலை சமூகத்தில் என்ன என்று சிறிதாவது விளங்கும். எடுத்துக்காட்டாக எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்த இரு நண்பர்கள் முகப்புத்தகத்தில் தங்களின் பெயருக்கு பின்னால் கதாநாயகனின் பெயரை நீக்கிவிட்டு தங்களின் தந்தையின் பெயரை சேர்த்திருந்ததுடன் இப்பதிவை பகிர்ந்துவேறு இருந்தார்கள். இன்னொரு நண்பர் தன்  முகப்புத்தகத்தின் பெயர்மாற்றம் செய்யும் சந்தர்பங்கள் முடிந்துவிட்டன என்று வெளிப்படையாக கவலை தெரிவித்திருந்தார். இவ்வாறு இப்பதிவுகளை வாசித்து விட்டு ஓரிருவர் திருந்தினாலுமே அது எமக்கு வெற்றிதான்.  சர்ச்சைக்குள்ளான இதன் முன்னைய பதிவை படிக்காதவர்கள் இங்கேகிளிக்கி படித்துவிட்டு தொடரவும்.

         
                       இப்படி இவர்கள் பாலை குடம் குடமாக  ஊத்துவார்கள் , பறவைக்காவடி முதல் கொண்டு சிலுவைக்காவடி வரை சகலத்தையும் எடுப்பார்கள், கையையும் காலையும் அறுத்து இரத்தத்தை ரத்தகாவு வாங்கும் காட்டேரிகளுக்கு ஊற்றுவதுபோல் ஊற்றுவார்கள், தேங்காய் உடைப்பார்கள், கற்பூரம் ஏற்றுவார்கள், பட்டாசு வெடிப்பார்கள், பறையை முழக்குவார்கள், பைலா போடுவார்கள், இடையிடையே யாரெல்லாம் உண்மையை உணர்த்துகிறார்களோ அவர்களை எல்லாம் கூட்டமாக சென்று நையப்புடைத்து பெருமைபேசுவார்கள். இதையெல்லாம் செய்து முடித்து உலகையே காத்த கடமை வீரர்கள் போல நிற்கும் இவர்களிடம் இவர்களது நண்பர்களோ இல்லை பெற்றோரோ இல்லை இவர்கள் சம்பந்தப்பட்ட யாராவதோ “ஏனடா இப்படிஎல்லாம் வெட்டி பந்தா செய்கிறீர்கள்.... உங்களுக்கு இதனால் வரப்போவது ஒன்றுமில்லையே பிறகு ஏன் இப்பிடி.......??”என்று கேட்டால் அதற்கு கூறுவார்கள் பாருங்கள் பதில் அது நமக்கு அங்கை புரியாது வீட்டுக்கு போய் உட்கார்ந்து யோசித்தாத்தான் புரியும்.


    “மாதம் முழுதும் வேலைப்பளு, குடும்ப பிரச்சனைகள், இவற்றின் மத்தியில் சிக்கித்தவிக்கும் நாங்கள் இந்த திரைப்படங்களை பார்த்துத்தான் மன அமைதியடைகிறோம். மனம் மகிழ்கிறோம் ஆகவே என்னை மகிழ்விக்கும் சந்தோசப்படுத்தும் என் கதாநாயகனை பாலூற்றிக் கௌவுரவிப்பதில் என்ன தவறு இருக்கிறது...?? பாலூற்றுவது மட்டுமல்ல சந்தர்பம் கிடைத்தால் எதையுமே செய்யத்தயாராய் இருக்கிறோம்.....”


    இப்படி பாலூத்துபவர்களின் முதல் வாதமாக இருப்பது இதுதான். இவர்களை பொறுத்தவரை இது கேள்விகேட்பவர்களுக்கு கூறுவதற்காக தயாரிக்கப்பட்ட பதில்தானே தவிர உண்மையில் இவர்கள் தங்கள் வாதத்தின் பொருளை எல்லாம் அறிந்திருப்பதில்லை. அப்படி அறிந்திருப்பார்களானால் தாங்கள் கூறும் இப்பதிலே இவர்களின் பாலூத்தும் கொள்கையை கேவலப்படுத்துவதையும் அறிந்திருப்பார்கள்.


                  பாலூத்தும் இந்த வெறியர் வர்க்கத்திற்கு பெரும்பாலும் 20-35 வயதுக்குள் தான் இருக்கும். இவர்களது இந்த பதில் மூலம் இவர்கள் சொல்வது என்னவெனில் இவர்களது 25,35 வருட இலட்சக்கணக்கானமணித்தியால வாழ்கையில் எங்களை கேவலம்இரண்டுமணித்தியாலங்கள் சந்தோஷமாக வைத்திருக்கும் கதாநாயகனுக்கே இவ்வளவு செய்கிறோம் என்றால் எங்கள் வாழ்கையில் எங்களை மகிழ்வித்தவர்களுக்காக எவ்வளவு செய்வோம்....?? என்பதுதான். அதாவது தங்களை மகிழ்விப்பவர்களை கடவுள் நிலையிலே வைத்து பார்ப்பார்களாம் அவ்வளவு நல்லவர்களாம் இவர்கள்.


           ஆனால் நிலைமையோ தலைகீழ் வாழ்நாள் முழுதும் இவர்களுக்காக பாடுபட்டு எந்த நேரமும் இவர்கள் நலத்தையே கருதும் இவர்கள் பெற்றோரின் காலைக்கூட தண்ணீரால் கழுவியிருக்கமாட்டார்கள் அது என்ன கையால் கூட தொட்டுவிருக்கமாட்டார்கள். அவ்வளவு ஏன் கூட்டமாய் தங்கள் நண்பர்களுடன் நின்று கதைக்கும் போதே தங்கள் தந்தையை“அவன், இவன், அப்பன் , அறுவான், விழுவான்”என்று தான் நன்றிதொனிக்க கதைப்பார்கள். ஆனால் தங்கள் நாயகனை தலைவன் என்றும் அண்ணன் என்றும் அநியாயத்துக்கு மரியாதையாக கதைப்பார்கள். இவர்கள் தங்களை மகிழ்வித்தவர்களுக்காக பாலூத்துகிறார்களாம். அப்படியானால் உங்களிடம் ஒரே கேள்விதான் வாழ்நாளில் நீங்கள் வெறும் படம் பார்க்கும் அந்த இரண்டு மணித்தியாலங்கள் தான் சந்தோசமாக இருகின்றீர்களா.....??? அப்படியானால் நீங்கள் நிச்சயமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் சந்தேகமே இல்லை. இரண்டு மணித்தியாலம் உங்களை மகிழ்விக்கும் நாயகனுக்கு இவ்வளவு செய்யும் நீங்கள் உங்கள் பெற்றோருக்காக என்ன செய்திருக்கிறீர்கள்...??ஏன் உழைப்பேயில்லாத உங்களுக்கு படம் பார்க்க காசுதருவது அவர்கள் தானே....அவர்களை மதிப்பில்லாமல் நடத்தியதையும் அவர்களை ஏசியதையும் தவிர நீங்கள் எதுவுமே செய்ததில்லை என்பதுதான் உண்மை....அவ்வளவு ஏன் உங்களுடன் கூடச்சுற்றும் உங்கள் காதல் தோல்விகளில் ஆதரவு கூறும் உங்களுக்கு ஒன்றென்றால் துடித்துப்போகும் நண்பன் இல்லை அவனுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்..???
           
                 உங்கள் பெற்றோர் முதல் கொண்டு நண்பன்வரை ஒரு சமூகமே உங்களை தங்கள் வாழ்வின் அங்கமாக கருதிக்கொண்டிருக்கையில் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கேவலம் உங்களிடம் பணத்தைபுடிங்கி உங்களை மகிழ்வித்த நாயகனுக்கு பாலூத்துகிறீர்கள் என்றால்....என்ன சொல்வது           வாழ்க தமிழ்.....!! வளர்க தமிழ்........!!


    “.....நான் உழைக்கிறேன்..... என் காசில் நான் பால் ஊற்றுகிறேன்....... நீங்கள் யார் கேட்பதற்கு......நான் ஊத்தினால் உங்களுக்கென்ன வந்தது..........”

    பாலூற்றும் வெறியர்கள் அடுத்து தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக முன்வைக்கும் வாதம் இதுதான். இவர்கள் ஏன் பொதுவாக நானுற்பட பலரது கொள்கை இதுதான் நான் உழைக்கிறேன் என்காசு என்பது.....அதனால் தான் இவர்கள் இந்த பதிலை கூறியதும் இவர்கள் சொல்வதும் நியாயம் போல் தோன்றும்.
      
                 ஆனால் நானாகட்டும் நீங்களாகட்டும் யாராகட்டும் ஒருவர் கூட சமூகத்தின் ஒத்துழைப்பில்லாமல் தனிய என்காசு ,என்நலம் என்று இருந்து விடமுடியாது. எங்கள் சொந்த காசில் நாங்கள் செய்யும் செலவு பிறரை சிறிதளவிலும் பாதிக்காதவரைதான் என் காசு, என்னிஷ்டம் எனும் வாதமெல்லாம் செல்லும். நாங்கள் செய்யும் செலவு பிறரை மனதளவில் கூட பாதிக்க கூடாது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. என்காசுதான் என் பணம் தான் ஆனால் சமூகத்தையும் சிறிது சிந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு என்காசு ,என்பணம் என்று மட்டும் சிந்திப்பவர்கள் எந்தொரு உதவியையும் சமூகத்திடம் எதிர்பார்க்ககூடாது. உதாரணமாக நாளை ஒரு விபத்தில் மாட்டி நடு ரோட்டில் விழுந்து கிடக்கும் போது சமூகத்தின் உதவியை துளியும் எதிர் பார்க்க கூடாது. நானுழைக்கிறேன் என்னக்கென்ன சமூகத்தின் மீது அக்கறை என்று கேட்பது எப்படி இருக்கின்றது என்றால் காட்டிலே மிருகங்கள் தாங்கள் பெற்ற குட்டியையே தங்கள் பசிக்கு சாப்பிட்டுவிட்டு நான்பெற்ற குட்டி நான் தின்கின்றேன் என்பது போலத்தான். ஏதோ ஒருவகையில் தன்குட்டியை தின்றதன் மூலம் தன் வருங்கால சந்ததியை அது சிதைத்துவிட்டது அல்லவா......அந்த குட்டியின் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை அது கெடுத்துவிட்டது அல்லவா.....???

            சமூகத்தில் வாழும் ஒவ்வொருவனுமே என்பணம் என்னிஷ்டம் என நினைத்திருந்தால் இங்கு எமக்கு கிடைத்த சுதந்திரம் முதல் கொண்டு இலவசக் கல்விவரை எதையுமே சமூகத்திடம் இருந்து பெற்று கொள்ள முடியாது. அதே போலத்தான் எவருமே சமூகத்தின்  மீது துளியும் அக்கறை இல்லை என்று கூறிவிடமுடியாது.முக்கியமாக யார் கதைத்தாலும் இந்த பாலூத்தும் பரமாத்மாக்கள் இந்த வாதத்தை துளியும் முன்வைக்கமுடியாது. ஏனென்று கேட்கிறீர்களா இவர்கள் எல்லாம் சமூகத்தின் கெட்ட உதாரணங்களாக இருக்கும் பட்சத்தில் எவ்வாறு என்பணம் என்காசு என்று கதைத்துவிடமுடியும். எங்களுக்கு மட்டும் சமூகத்தின் உதவி வேண்டும். ஆனால் நாங்கள் நாளைய சமூகத்தை கெடுக்கும் ஒரு கெட்ட வேலையை செய்து கொண்டிருக்கும் போது எமக்கு ஏதோ வழியில் உதவும் அந்த சமூகத்தில் ஒருவன் ஏனிவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் என் பணம் என்னிஷ்டம் என்று கதைப்போமாம். நன்றாய் இருக்கிறது இவர்கள் நியாயம்......

          இவர்கள் கூறும் நியாயங்கள் இத்துடன் முடிந்து விடுமா என்ன....தொடர்ந்து பார்க்கலாம் வரும் பதிப்புக்களில்...
          
                                   ...................தொடரும்..................     

    Viewing all 113 articles
    Browse latest View live